Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Eengum Geetham...7

  • Thread Author
அத்தியாயம்…7

மருது பாண்டியோ தன் மகள் சொன்ன விசயத்தை கவனிக்கவில்லை.. அவள் தன்னிடம் பேசியது மட்டுமே அவர் மனதில் நிலைத்து நின்று இருந்தது..

மூன்று வருடங்கள் முன்… அவள் செய்த தவறு.. தவறு என்று சொல்வதை விட ஒழுக்ககேடு என்று சொன்னால் சரியாக இருக்கும்..

அவர்கள் இனத்தில் ஆண்களையே அந்த அளவுக்கு படிக்க வைக்க மாட்டார்கள்… காரணம் பெரும் பாலும் அவர்கள் இனத்தில், பையன்களின் அப்பா ஏதாவது ஒரு கடையை வைத்து இருப்பர்..

மற்றவர்களிடம் கை கட்டி வேலை பார்ப்பதை விட.. சொந்த தொழில் அதை பெரிது படுத்துவது இப்படி தான் அவர்களின் யோசனை ஒடும்.. பேருக்கு ஒரு டிகிரி வாங்கி விடுவர்.. அவ்வளவு தான்..

அதனால் இந்த பள்ளி என்று பார்த்து பார்த்து எல்லாம் சேர்க்க மாட்டார்கள்.. ஆண்பிள்ளைக்கே அப்படி என்றால் பெண் பிள்ளைகளுக்கு… ஆனால் மருது பாண்டி… பெண் இரண்டரை வயது ஆகும் போதே… எந்த பள்ளியில் தன் மகள் படித்தால், படிப்பு மட்டும் அல்லாது மற்ற திறமையும் கற்றுக் கொள்ள முடியும் என்று பார்த்து பார்த்து சேர்த்தார்..

பதினெட்டு வருடங்கள் முன்பே.. மதுரையில் புகழ் வாய்ந்த பள்ளியில் தான் சேர்த்தார்.. படிப்புமே செந்தாழினிக்கு நன்றாக வந்து விட… அவளை வீட்டிலேயே பார்க்க முடியாது.. ஏதாவது ஒரு க்ளாஸ்.. பாட்டு நடனம் வீணை… என்று தினம் இரண்டு மணி நேரம் பள்ளியில் இருந்து வந்த உடனே சென்று விடுவாள்..

இதனால் மருது பாண்டி மகளுக்கு என்று தனி கார்.. ஓட்டுனர் என்று வைத்து விட்டார்…

உறவுகள் அனைவருக்கும் செந்தாழினி என்றால் அத்தனை விருப்பம்..

“ இத்தனை செல்லம் கூடாது கல்யாணம் செய்து போகும் இடத்தில் அப்புறம் இதுல ஒன்னு குறஞ்சா கூட கஷ்டமாகிடும்.” என்று மருதுவின் மனைவி வளர்மதி சொல்லும் போது எல்லாம் அந்த இடத்தில் மருது பாண்டியனின் இரு தங்கைகளில் ஒருத்தி இருந்து விட்டால் போதும்..

“ என்ன அண்ணி என்னை பார்த்தால் கொடுமை படுத்துவது போல தெரியுதா.? நான் எல்லாம் என் மருமகள்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன்..” என்று சொல்லி செந்தாழினிக்கு திருஷ்ட்டி சுற்றி போடுவார்கள் மருதுவின் இரண்டு தங்கைகளான சங்கரியும், வித்யாவும்…

மருது பாண்டி தன் இரு தங்கைகளிடமும்.. அப்போதே சொல்லுவான் தான்..” சின்ன பிள்ளைகளின் எதிரில் இது போல எல்லாம் பேசாதே என்று..”

உடனே இரு தங்கைகளுமே கண்களை கசக்க ஆரம்பித்து விடுவர்.. முன் எல்லாம் இரு தங்கைகளும் அவர்களுக்குள் சண்டை இட்டுக் கொள்வர்…

செந்தாழினி என் வீட்டிற்க்கு தான் மருமகளா கொண்டு போவேன் என்று சொல்லி..

பின் மருது பாண்டியனின் தம்பி சரவண பாண்டியே.. “ சொந்தத்தில் கொடுக்குறது தான் எனக்குமே சரியா படுத்து ண்ணா.. நம்ம கண் முன் வளர்ந்த பசங்க.. பிரச்சனை இருக்காது.. நம்ம பொண்ணுமே நம் கண் முன் இருக்கும்…” இரு ஆண்மகன்களை பெற்ற சரவண பாண்டியும் கூட செந்தாழினியை தன் அண்ணன் மகளாக பார்க்காது தன் மகளாக பார்த்தவருக்குமே பெண்ணை வெளியில் கொடுப்பதி விருப்பம் இல்லை…

அப்போது கூட மருது பாண்டி வாக்கு எல்லாம் கொடுக்கவில்லை… “ பார்க்கலாம்..” என்று பிடி கொடுக்காது தான் சொன்னது…

காரணம் பெண் வளர்ந்து அவளின் விருப்பம் வேறாக இருந்தால், என்ன செய்வது…? அவருக்கு பெண் தன் முன் இருப்பதை விட பெண் சந்தோஷமாக இருக்க வேண்டும்.. அது தான் முக்கியம்..

அவளின் மஞ்சள் நீராட்டும் விழாவே அவ்வளவு பெரியதாக இந்த மதுரையே வியக்கும் அளவுக்கு செய்தவருக்கு. திருமணத்தை எப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று அவர் கனவு கண்டு இருப்பார்..

அதுவும் பெண்ணுக்கு படிப்பும் அப்படி வரும்.. மகள் படிக்க விரும்பும் படிப்பும் மிக பெரிய பட்டிப்பே…மூன்று வயதில் ஏதோ ஒரு படத்தை பார்த்து..

“நானுமே இது போல தான் ஆகுவேன்..” என்று தன் மழலை குரலில் சொன்ன போது மருது பாண்டி தான் பக்கத்தில் இருந்தது.

“அடி என் தாயூ நீ கலெக்ட்டருக்கு ஆகனுமாடி ராசாத்தி.” என்று அப்போதே பெண் கலெக்ட்டருக்கு ஆனது போல தான் அகம் மகிழ்ந்து போய் விட்டார்.

ஆனால் இது அனைத்துமே ஒரு நாள் முற்றிலுமாக மாறி போயின… செந்தாழினி அப்போது தான் கல்லூரி முதலாம் ஆண்டு முடியும் சமயம் அது..

பதினெட்டு வயது முடிவடைந்த சமயமும் அது தான் .. அன்றும் எப்போதும் போல தான் கல்லூரிக்கு அவளுக்கு என்று ஏற்பாடு செய்திருந்த காரில் தான் சென்றாள்..

சென்றவள் மாலை வீடு வரவில்லை… ஓட்டுனர் மட்டுமே தான் வந்தார். நேரம் கடந்து.. ஒட்டுனர் முகத்தில் அப்படி ஒரு பதட்டம்..

“என்ன டா செந்தாழினி எங்கே…?” என்று ஒரு அதட்டலுடன் தான் மருது பாண்டி கேட்டது…

“ஐய்யா சின்னம்மா தான் போனில் மெசஜ் செய்து இந்த கடையில் இது வாங்கிட்டு வா என்று சொன்னாங்க…” என்று தன் பேசிக்கு வந்த மெசஜை மருது பாண்டியனிடம் காட்டினார் அந்த ஒட்டுனர்..

ஆமாம் அவன் சொன்னது சரியே என்பது போல் தான் செந்தாழினி பேசியின் எண்ணில் இருந்து தான் ஒட்டுனருக்கு வந்து இருந்தது..

அதுவும் சரியாக கல்லூரி முடியும் ஐந்து நிமிடத்திற்க்கு முன் வந்து இருந்தது.. செந்தாழினி இந்த கடையில் வாங்கி வா என்று சொன்ன தின்பண்டங்கள் பக்கத்தில் கடையில் கூட கிடைக்க கூடியது தான்..

ஆனால் செந்தாழினி சொன்ன கடையில் பெயரோ… ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி கடை…

ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி கடை இப்போது போல பல பிரிவுகள் இல்லாது அப்போது தான் வளர்ந்து வந்து கொண்டு இருந்த சமயம் அது..

அதனால் கல்லூரியில் இருந்து ஒரு மணி நேரம் சென்றால் தான் அந்த கடை வரும் போக வர என்று இரண்டு மணி நேரம் கடந்து தான் ஒட்டுனர் கல்லூரிக்கு செந்தாழினி மெசஜ்ஜில் சொன்ன பொருட்களோடு வந்த போது அனைவரும் சென்று இருந்தனர்..

ஒட்டுனர் செந்தாழினி பேசிக்கு அழைத்து பார்க்க.. அதுவோ ஸ்விச் ஆப் என்று வர… அரை மணி நேரம் பதட்டத்தில் தேடிய ஒட்டுனர் பயந்து போய் மருது பாண்டியனுக்கு சொல்லி விட்டான்..

பின் என்ன முதலில் பெண் பிள்ளை என்று யாருக்கும் தெரியாது தான் பாண்டியன் வீட்டவர்கள் தேடினர்.. ஒரு நாள் இரவு கடந்த பின் உறவு முறையில் இருக்கும் காவல் துறையிடம் தனிப்பட்டு சொல்லி தேட.. அதற்க்குள் உறவுக்குள் மட்டும் அல்லாது ஊருக்கே விசயம் தெரிந்து விட்டது…

அந்த காவலர் தேடியதில் கிடைத்த ஒரே விசயம்… செந்தாழினியின் போன் ஸ்வீச் ஆப் செய்து கல்லூரியிலேயே இவள் அமரும் இருக்கைக்கு கீழே இருந்தது என்ற தகவல் மட்டும் தான்..

செந்தாழினி காணாமல் போனது வெள்ளிக்கிழமை.. அதனால் சனி ஞாயிறு கல்லூரி விடுமுறை என்பதால் யாரும் எடுக்காது அப்படியே இருந்தது என்று அந்த பேசியை அந்த காவலர் மருது பாண்டியனிடம் தந்த அன்று தான்..

இரண்டு நாட்கள் கழித்து அவரின் பெண் அவளே வீடு வந்தாள்.. என்ன தான் அனைவரும் மாறி மாறி கேட்டாலுமே முன் என்னை கண்ணை கட்டி கூட்டிட்டு போனாங்க… தெரியாது.. அதே போல கண்ணை கட்டி என் காலேஜில் இறக்கி விட்டுட்டாங்க.. எததனை பேர் என்று தெரியாது.. என்று இதையே தான் திரும்பி திரும்பி சொன்னது.

ஒரு சில விசயங்களை மகளிடம் கேட்க கூட அஞ்சினர்… ஆனால் அதற்க்குள் மீண்டுமே காவல் அதிகாரியிடம் மருது பாண்டியனுக்கு ஒரு அழைப்பு வந்தது..

அங்கு சொல்லப்பட்ட செய்தி கேட்டு மருது பாண்டி மட்டும் அல்லாது சரவண பாண்டியன்.. இரு தங்கை கணவன் மார்கள் அனைவருமே காவல் நிலையத்திற்க்கு சென்றனர்..

செந்தாழினியை கடத்தி கொண்டு சென்றவர்கள் மொத்தம் ஐந்து பேரையும் அரெஸ்ட் செய்து விட்டோம்.. கடத்திய பையன்களில் நான்கு பேர் செந்தாழினி கல்லூரியில் படிப்பவர்கள் தான்.. செந்தாழினிக்கு சீனியர்.. ஒருவன் மட்டும் அந்த நான்கு பேரில் ஒருவனின் அண்ணன் என்று சொல்ல.

மருது பாண்டி மட்டும் அல்லாது சரவண பாண்டியனுமே… அவனுங்களை அடிக்க ஆரம்பித்து விட… அந்த காவல் நிலையத்தில் இருந்த நான்கு காவலர்கள் சேர்ந்து மருது பாண்டி சரவண பாண்டியை பிடித்து இழுத்துமே முடியாது போக.

மருது பாண்டியனின் உறவாக இருக்கும் அந்த காவல் அதிகாரி..

“சித்தப்பா முதல்ல செந்தாழினி கிட்ட விசாரிங்க. அப்புறம் இவனை என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்..” என்று சத்தமாகவும் கொஞ்சம் கோபமாகவும் தான் சொன்னது..

அந்த காவல் அதிகாரியின் இந்த பேச்சில் மருது பாண்டி மட்டுமே அவர்களை அடிப்பதை நிறுத்தி விட்டு.

“நீ என்ன லே சொல்ற. என் மவ இங்கு வரனுமோ…” என்று தன் சொந்தம் தந்த உரிமையில் பேச.

“சித்தப்பூ புரிஞ்சிக்கோங்க. செந்தாழினியை இங்க வா என்று கூட சொல்ல வேண்டாம் சித்தப்பூ… இவங்களை பிடிச்சாச்சி என்று மட்டும் சொல்லுங்க..” என்ற இந்த பேச்சில் அடித்து கொண்டு இருந்த சரவண பாண்டியன் கூட..

தன் உறவு முறையிலான அந்த காவல் அதிகாரியிடம்.. “ என்னலே.. சொல்ற..?” என்று கேட்டவரிடமும் அதே சொல்ல.

மருது பாண்டியனுமே மகளுக்கு அவள் பேசியில் அழைத்தாள்.. ( இப்போது அவளின் பேசியை அவளிடம் கொடுத்து விட்டார் மருது பாண்டி…)

உறவு முறையிலான அந்த காவல் அதிகாரி சொன்னது போல தான்… செந்தாழினி விசயம் தெரிந்த உடன். காவல் நிலையத்திற்க்கு ஒடி வந்து விட்டாள்..

வந்தவள் சொன்னது இது தான்.. “ என்னை யாரும் கடத்தல.. நானே தான் போனேன் என்றது தான்..” அனைவரின் முன்பும் தான் இதை செந்தாழினி சொன்னது..

அந்த காவல் நிலையத்தில் இருந்த ஒரு மேல் அதிகாரி… “ அப்போ உன் வைர நகைகள் எல்லாமே நீயா தான் இவங்களுக்கு கொடுத்தியா…?” என்று கேட்ட போது தான் மருதுவும் சரவணனும் செந்தாழினியின் அணிகலன்களையே பார்த்தது…

பள்ளி செல்லும் வரை தங்கத்தில் அணிந்து சென்ற செந்தாழினி கல்லூரிக்கு செல்லும் முதல் நாளே. வைரத்தில் தான் அணிந்து சென்றது.. கம்பல். ஜெயினில் மாட்டி இருந்த அந்த டாலர் மோதிரம் ப்ரேஸ்லேட். என்று அனைத்துமே வைரத்தில் தான் அணிந்து கொண்டு தான் சென்றாள்..

இன்று அது இல்லாது பழைய கம்பல் மட்டுமே போட்டு இருந்த தன் வீட்டு பெண்ணை அப்பனும் சித்தப்பனும் அதிர்ந்து போய் தான் பார்த்தனர்.. என்ன நடக்கிறது என்று புரியாது..

அந்த உயர் அதிகாரிக்கு இவர்களை பார்த்து பாவமாகி விட்டதோ என்னவோ தனியே அழைத்து சென்று..

“சார் இவங்களை சென்னையில் உங்க மகள் வைர நகைகளை வித்த ஒரு நகை கடையின் மூலமா தான் பிடித்தோம்.. நகையை மூன்று நாள் முன்னவே வித்துட்டாங்க… அதாவது உங்க மகள் வீடு வந்த அன்றே…

அதோடு வீடு வந்த பின்.. உங்க மகள் அக்கவுண்டில் இருந்து ஐந்து லட்சம் அந்த ஐந்து பேரின் ஒருவனின் பேங்க அக்கவுண்டுக்கு போய் இருக்கு.. அதுவும் கல்லூரியில் கிடைத்த போன் என்று உங்களிடம் கொடுத்தோமே.. அதில் இருந்தே தான் அனுப்பி இருக்காங்க….” என்று சொன்ன அந்த அதிகாரி..

பின் தயங்கி தயங்கி தான்.. “ பெண்ணை கடத்தல சார்.. அது தான் உங்க மகளே சொல்லிட்டாங்கலே சார்… விருப்பப்பட்டு தான்..” என்ற பேச்சில் அன்று இடிந்து போய் தான் அமர்ந்து விட்டார் ஒரு தந்தையாக மருது பாண்டி…

அதோடு வீடு வந்த பின் அவள் கை பேசி மூலமாக பணத்தையும் அனுப்பி உள்ளாள் என்ற விசயம் தெரிந்ததில், பிடித்த அந்த ஐந்து இளஞர்களை விடுவிக்க சொல்லி விட்டார் மருது பாண்டியன்..

பின் வீடு வந்ததும் … “ என்ன ஆச்சு….?எதுக்கு நம்ம பெண்ணை கடத்தினாங்கலாம்…? பணமா…? ஆனால் நம்ம கிட்ட கேட்கலையே…?” என்று இரண்டு நாத்தனார் வீடு வந்து பேசிய பேச்சில் வளர்மதிக்கு தன் பெண்ணின் எதிர்காலம் நினைத்து அத்தனை பயம்..அதில் வீடு வந்த ஆண்களிடம் கதற…

யார் மீது கோபம் இருந்தாலுமே ஒரு சில ஆண்களுக்கு வீட்டு பெண்களின் மீது காட்டுவது தானே இயல்பு.. அதுவும் மனைவி என்றால் சொல்லவே தேவையில்லை..

மனைவியை அடிப்பதற்க்கு உரிமை பட்டவராக அனைவரின் முன்னும் அரைந்த மருது பாண்டி..

“பெண்ணையா டி பெத்து வெச்சி வளர்த்து இருக்க… விபாச்சாரிக்கு கூட அவன் தான்டி பணம் கொடுத்து படுத்துட்டு போவான்.. ஆனால் உன் மவ அவனுங்க கிட்ட பணம் கொடுத்துட்டு படுத்துட்டு வந்து இருக்காடி.. அதுவும் ஒருத்தன் பத்தலையாம் உன் மவளுக்கு…”

வரும் வழி முழுவதுமே. மனதில் குடைந்த கேள்வி… காவல் நிலையத்தில் அந்த காவல் அதிகாரி என்ன தான் தன்னிடம் நல்ல முறையில் பேசினாலும். கடைசியாக அவர் தன்னை பார்த்த அந்த பார்வையை கூட தாங்கி கொள்வார்.

ஆனால் தன் மகளை தன் கண் எதிரிலேயே கழுத்துக்கு கீழாக பார்த்த அந்த பார்வையின் அர்த்தம் ஒரு ஆண் மகனாக அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.

இதே வேறு ஒரு சமயம் என்றால், இவன் என்ன பதவியில் இருந்தாலுமே என் மகளை தப்பாக பார்த்த அந்த பார்வைக்கு வெட்டி கூட போட்டு இருந்து இருப்பார்.. ஆனால் இப்போது.. நான் விருப்ப பட்டு தான் ஐந்து ஆண்களோடு ஒரு வீட்டில் இருந்தேன் என்று சொன்ன பெண்ணை எப்படி பார்ப்பார்கள் நினைப்பார்கள்..

இனி என்ன இந்த ஊரில் தான் எப்படி இருந்து கொண்டு இருக்கிறேன் இனி எப்படி இருப்பேன்… அந்த ஆத்திரத்தில் பேச கூடாத வார்த்தைகளை எல்லாம் பேசி விட.

அங்கு இருந்த அவரின் இரண்டு தங்கைகளுமே வாயில் அடித்து கொண்டு..

“அய்யோ அய்யோ இது என்ன டி அநியாயமா இருக்கு.” என்று சொல்லி மால.

செந்தாழினி அனைவரின் முகத்தையும் ஒரு பார்வை பார்த்தாள்.. பின் அமைதியாக தன் அறைக்கு சென்று விட்டாள்..

இன்றுமே அந்த வீட்டில் அவளின் அமைதி தொடர்கிறது.. ஆனால் மருது பாண்டி ஒரு மாதம் சென்ற நிலையில் தன் மகளிடம் பேச வந்தார்.. ஆனால் பெண் தன் தந்தையின் முகம் பார்த்து பேசவில்லை…

அதோடு அந்த வீட்டின் அனைத்து ஆடம்பரத்தையுமே ஒதுக்கி கொண்டு விட்டாள்.. ஏன் என்றால் அவளின் அப்பா அம்மாவிடம் தன்னை பேசிய பேச்சில் இதுவுமே அடக்கம்.

“பணத்தை கொடுத்தா அது இருக்க தொட்டு தானே நகை வைரமா தானே போட்டேன்.. அது கொடுத்த மிதப்பில் அதை கழட்டி கொடுத்துட்டு அவனுங்க கூட இருக்க தோனுதோ… இன்னுமே போட்டு அனுப்பு.. அடுத்த தடவை ஐந்து பேர் இல்லை பத்து பேரு கிட்ட போவா…” என்ற பேச்சிலும் அனைத்து ஆடம்பரத்தையும் மறந்தவள் தன் படிப்பை மட்டும் விடவில்லை.

அதற்க்கு அவள் வீட்டில் வாங்காத பேச்சு கிடையாது.. வாங்காத அடியும் கிடையாது.. ஆனால் ஸ்திரமாக நின்று விட்டாள்..

“என்னை படிக்க வைக்கவில்லை என்றால், நான் வீட்டை விட்டு போய் விடுவேன் ..” என்று..

பின் தங்கைகள் தன் மகனுக்கு கட்டிக்கிறேன் என்று முன்பு அத்தனை போட்டி போட்டவர்கள் இப்போது இவரே கேட்ட போது..

“கெட்டு சீரழிந்து போன பெண்ணை என் தலையில் கட்ட பார்க்கிறிங்கலா அண்ணா..” இரண்டு தங்கைகளுமே ஒன்று போல சொல்லி விட்டனர்..

இதோ மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் தன் மகள் தன் முன் வந்து பேசுகிறாள்… மகள் மீது அத்தனை பாசம் வைத்து இருந்தவர்… மகள் செய்த செயல்.. அதுவும் ஒருத்தனை விரும்பி ஒடி போய் இருந்து இருந்தால் கூட மகள் செய்ததை ஏற்றுக் கொண்டு இருப்பார்..

ஆனால் இது எதில் சேர்த்தி… படிப்பை தொடர விட்டாள்.. இதோ முடித்தும் விட்டாள் மேல கலெக்டருக்கு கோச்சிங் சென்டர் போக வேண்டும் எனும் போது தான் சின்ன மருமகளின் தந்தை இந்த யோசனை சொன்னது..

கெளசல்யா மகனை செந்தாழினிக்கு கேட்கலாம் என்று.. நல்ல பையன் தெரியும்.. அதே சமயம் அவர்களுக்கு இருக்கும் பணப்பிரச்சனையும் தெரியும்..

இதோ பண்டை மாற்று முறையாக அவர்கள் வீட்டு பெண்களுக்கு செய்ய வேண்டியதை செய்து விட்டு தன் மகளை அங்கு மருமகளாக அனுப்பி வைக்கிறார்..

நகை.. வேண்டாம் என்று நிற்க.

“அது எப்படி.. அந்த நகை எல்லாம் அந்த பொண்ணுங்களுக்கு… உனக்கு நாங்க செய்து வைத்ததே ஐநூறு பவுனுக்கு இருக்கும் வைரம்..” என்று எத்தனை என்று தன் மனைவியை பார்க்க.

வளர்மதி சொல்ல வாய் திறக்கும் முன் மகள் சொல்லி விட்டாள்..

“எனக்கு வேண்டாம்..” என்று..

கூடவே. “நீங்க வாங்கினாலும் எடுத்து கொண்டு போக மாட்டேன்.. கல்யாணத்திற்க்கு கவரிங்க நகை தான் போடுவேன்… அந்த வீட்டிலும் நான் இப்போது எப்படி இருக்கோன்னோ அதே போல தான் அங்கேயும் இருப்பேன்... அப்படி இல்லை என்று நீங்கள் நினைத்தால் எனக்கு இந்த..” என்று மேல சொல்லாது நிறுத்தி விட்டு தன் அறைக்கு சென்று விட்டாள் செந்தாழினி..

ஆனால் செந்தாழினியை அமைதியாக இருக்க விட மாட்டோம் என்பது போல அந்த வீட்டின் இரண்டு மருமகள்களும்.. செந்தாழினி பின்னே அவள் அறைக்கு வந்தவர்கள்..

“இந்த நகை கூட மாமாவுடையது தான். அதோட உன்னை அவங்க கல்யாணம் பண்ணிக்கினதே… நகை பணம் சொத்துக்காக தான்.. இப்படி வேண்டாம் என்று சொல்றவ.. அந்த காம்பளக்ஸ்.. அந்த அப்பார்ட்மெண்ட் இதையுமே வேண்டாம் என்று தான் சொல்லனும்..” என்று அவளை வம்புக்கு இழுத்தார்கள்..

அந்த சொத்து விசயம் செந்தாழினிக்கே என்ன என்ற முழு விவரமும் தெரியவில்லை. ஆனால் நகை தெரியும்.. அந்த வீட்டின் பெண்கள் விசயமும் செந்தாழினிக்கு தெரியும்.. பெண்கள் வீட்டு விசயம் மட்டும் அல்லாது மகிபாலன் வீட்டு விசயம் அனைத்துமே பெண்ணவளுக்கு தெரியும் .

ஆனால் இந்த சொத்து.. கொடுக்கிறாங்க தெரியும்.. மகிபாலன் கேட்டானா.. இல்லை அவன் அம்மா கேட்ட விசயம் மகிபாலனுக்கு தெரியுமா..? என்று தெரியாத நிலையிலும் செந்தாழினி மகிபாலனை விட்டு கொடுத்தாள் இல்லை.

சொன்னாள்… “நகை அப்பா கடையில் எடுத்தது தான்.. ஆனால் அந்த கடையே என்னுடையது எனும் போது.. யார் என்ன சொல்வது கேட்பது.?” என்று கேட்டு விட்டாள்..

நகை கடை செந்தாழினி சொந்தம் என்று சொன்னது தான் தாமதம் இரண்டு மருமகள்களும்..

“அது எப்படி..? அது எப்படி..? உனக்கு சொந்தமா ஆகும்.,.?.” என்று ஆவேசத்துடன் கேட்டவர்களுக்கு செந்தாழினி அளித்த பதில் அவர்களை வாய் அடைக்க வைத்து விட்டது.






 
Active member
Joined
Jul 13, 2024
Messages
165
Super epi ma. Intha marumagal aen endru kekka aal illaiya? Wrong understanding of maruthu paandi, but she is going to get an understanding husband and become collector as well.
 
Last edited:
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
மருது பாண்டியன் அவசரப்பட்டு பேசக் கூடாத வார்த்தை எல்லாம் பேசிட்டிங்க 😨😨😨😨😨

செந்தா நீயும் முதல்ல கடத்திட்டு போனாங்க என்று வீட்டில் கதை சொன்ன 😣😣😣😣அப்பவே ப்ரண்ட் கூட வெளியே போனேன் என்று சொல்லி இருந்தால் பிரச்சினை இவ்வளவு பெருசு ஆகி இருக்காது 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺

யாருமே என்ன நடந்தது என்று விசாரிக்காமல் பேசிட்டாங்க இதில் செந்தா இவ மாத்தி மாத்தி பேசிட்டா 😤😤😤😤😤😤

மகி பாலன் மட்டும் தான் இவ தப்பு செஞ்சிருக்க மாட்டா என்று நம்புறான் 🤗🤗🤗🤗🤗


மருமகளுங்க ஆட்டம் ஓவரா இருக்கு 😡😡😡😡😡😡😡நகை கடை இவ பேர்ல தான் இருக்குதா 🤔🤔🤔🤔🤔🤔
 
Last edited:
Active member
Joined
May 12, 2024
Messages
199
Senthazhini edho maraikkira… ava thappu pannirukka matta… may be ava antha boys ku udhavi senjirukkanum
 
Top