அத்தியாயம்…8
செந்தாழினி அந்த நகை கடையே தன்னுடையது தான் என்ற பேச்சில், அந்த வீட்டின் இரு மருமகள்களும் மற்றது ஆன அந்த அடுக்குமாடி குடியிருப்பு காம்பளக்ஸ் அதை மறந்து விட்டனர்..
“எப்படி..? எப்படி..? அது எப்படி..?” என்று இருவரும் ஒரு சேர கேட்க..
ஆனால் நம் செந்தாழினியோ சாவகாசமாக தன் அறையில் இருந்த தண்ணீரை குடித்தவள்.. ஃபேனையும் ஒட விட்டு பின் தன் அறையில் இருந்த ஏசியையும் ஆன் செய்தவள்… தன் படுக்கையிலும் அமர்ந்து கொண்டாள்..
இவளை அடக்க மட்டும் முடியவில்லையே.. இத்தனை செய்துமே வீட்டை விட்டு அனுப்பாது இருக்காங்கலே.. என்று மனதில் புலம்பினாலுமே பல்லை கடித்து கொண்டவர்களாக..
மீண்டுமே… “ வீட்டின் ஆண் வாரிசாக இந்த வீட்டில் நான்கு பேரு இருக்க… உனக்கு மட்டும் எப்படி சொந்தம் ஆகும்..?” என்று எனக்கு தெரிந்தே ஆக வேண்டும் என்பது போல மூத்த மருமகள் செண்பகம் கேட்டாள்…
“சொத்து எல்லாம் ஆண் வாரிசுக்கு மட்டும் தானா. பெண் வாரிசுக்கு கொடுக்க கூடாதா.? அப்படியா…? அப்போ பெண் மட்டுமே வாரிசு இருக்கும் வீட்டில் சொத்தை அநாம் முத்துக்கா எழுதி வைத்து விடுவாங்க.?” என்று செந்தாழினி தன் இரு அண்ணிகளையும் பார்த்து ஏகத்தாலமாக தான் கேட்டாள்..
அதற்க்கு செளமியா.. “ஆண் வாரிசு இல்லாதவங்க அவங்க சொத்து என்ன செய்வாங்கலோ… அது எல்லாம் எங்களுக்கு தேவையில்லாதது.. ஆண் பிள்ளைகள் இருக்க உனக்கு எப்படி வரும்.. நம்ம வீட்டு பிரச்சனை இது தான் இதுக்கு வா.. பதில் சொல்..” என்றவள் தன் ஒரவத்தியிடம்..
“இவள் பொய் சொல்றா க்கா.. ஒன்னும் இல்லாத இடத்துக்கு கட்டிட்டு போறாளே… நம்ம வசதியை பார்த்து பொறாமை அவளுக்கு.” என்று சொல்ல.
செண்பகமோ தங்களை மிதப்பாக ஒரு பார்வை பார்த்து விட்டு தன் பேசியில் தன் பார்வையை பதித்த செந்தாழினி குனிந்த வாக்கிலேயே…
“போகும் போது கதவை சாத்திட்டு போங்க…” என்ற இந்த பேச்சில் மீண்டும் செளமியா ஏதோ கோபமாக பேச ஆரம்பித்தாள்..
ஆனால் செண்பகா தான் சைகையில் அமைதியாக இருக்கும் படி சொன்னவள் மெல்ல செந்தாழினியின் பக்கம் வந்து அமர்ந்து கொண்டவளாக..
“எப்படி சொல்ற… உனக்கு நகை கடை என்று…?” கேட்டவள் பின் அவளே..
“முன்ன மாமா சொத்தில் சம உரிமை என்று சொன்னாங்கலே அதை வெச்சி சொல்றியா என்ன..? ஆனா அது தான் நீ பண்ண அந்த வேலைக்கு மாமா மறந்து போயிட்டாரே…”
“நேத்து கூட என் வீட்டுக்காரர் கிட்ட மாமா இது தான் சொன்னாரு.. கல்யாணத்தப்ப கொடுக்கும் சொத்தோட உன் கணக்கு முடிஞ்சிடுச்சி என்று…”
அவளின் அப்பா மருது பாண்டி அவளின் மூத்த அண்ணன் வேலவ பாண்டியனிடம் எதையும் சொல்லவில்லை… செண்பகம் செந்தாழினியிடம் சும்மா தான் இதை சொன்னாள்..
“ஓ அப்படியா..? “ அவ்வளவு தான் செந்தாழினி அதோடு நிறுத்திக் கொண்டாள்..
செண்பகமுக்கு விட்டால் ஏதாவது எடுத்து செந்தாழினியின் தலையில் போட்டு விடலாம் என்று கூட நினைத்தாள்..
ஆனாலுமே இவளிடம் யாரும் பேசாத போதே.. தப்பு இவளே செய்து விட்டு மத்தவங்க செய்தது போல யாரிடமும் பேசாது இருக்கும் போதே மாமனார் சாப்பாட்டு தட்டில் கை வைக்கும் முன் கேட்கும் கேள்வியே.
“சாப்பிட்டாச்சா…?” இந்த சாப்பிட்டாச்சா என்ற கேள்வி அவர் மனைவிக்கு ஆனது கிடையாது என்று வளர்மதிக்கே நன்கு தெரியும்..
அதனால்.. “ம் ரூமுக்கு கொடுத்து விட்டுட்டேன்..” என்று அவருமே யாரை கேட்கிறார் என்று புரிந்து கொண்டவராக பதில் அளிப்பார்.. இன்னுமே இந்த அம்மணியின் ராஜாங்கம் தான் நடக்குது..
என்ன ஒன்னு முன் எல்லாம் எந்த ஒரு நல்ல விசயமா இருந்தாலுமே, இந்த அம்மணி தான் திறந்து வைப்பாங்க. இப்போ அது தான் மாறி இருக்கு..
இப்போ கூட மாமனாருக்கு எங்களை கண்ணுக்கு தெரியல. அவரு மனைவியை வைத்து தான் ஆரம்பிக்கிறது…
சரி இனி நகை கடை மகளுக்கு கொடுக்க மாட்டாங்க என்று நினைத்தா இவள் என்ன புதுக்கதையா சொல்றா…? அது தெரிந்து கொள்ளவில்லை என்றால் இன்றைய இரவு தூக்கம் வராது என்ற நிலையில் தான் அந்த வீட்டின் பெண்கள் இருவருமே இருந்தனர்..
ஆனால் செந்தாழினிக்கு என்ன என்றால், அன்று மகிபாலன் வீட்டவர்கள் தன்னை பெண் பார்க்க வந்த அன்று.. சொத்து கொடுத்ததை சொன்னது.. அதுவும் முழுவதுமாக சொல்லாது தன்னை பதற செய்ததில், தான் கொஞ்சம் விளையாடி பார்க்க நினைத்து விட்டாள் போல.
பின் தான் செந்தாழினி… மதுரையில் இவர்களின் நகை கடையான தங்கம் கடல் நகை கடையை சொல்ல.
“ஆமாம் ஆமாம் அது தான் முதன் முதல்ல தொடங்கினது என்று என் புருஷன் சொன்னாரு.. எங்க கடையிலேயே அந்த கடையில் தானே எல்லாம் கடையை விட லாபம் அதிகம் என்று சொல்லுவாரு… அது மார்க்கெட்டில் முக்கியமான இடத்தில் இல்ல இருக்கு..” என்று கட கட என்று இப்போது செளமியா சொல்லி கொண்டு போக
செண்பகம் தான் ..” இப்போ அந்த கடையை பத்தி ஏன் இப்போ நீ பேச்சை எடுத்த..?” என்று கேட்டாள்.. செந்தாழினியை சந்தேகமாக பார்த்து கொண்டு..
“ஏன் இத்தனை சொன்ன உங்க வீட்டுக்காரருங்க. இதை சொல்லலையா../” என்று இன்னுமே விசயத்திற்க்கு வராது தான் பேசியது செந்தாழினி..
செண்பமும் சரி… செளமியாவும் சரி இப்போது இல்லை எப்போதுமே அதாவது செந்தாழினிக்கு அந்த நிகழ்வு நடப்பதற்க்கு முன்னவே.. இவர்களின் பேச்சில் மருது பாண்டியனையும் சரவண பாண்டியனையும் தங்கள் மாமனார் என்று தான் செந்தாழினியிடம் பேசும் போது சொல்லுவார்கள்..
அதே போல் தான் இவளின் அம்மா அண்ணன்மார்கள் ஏன் சித்தப்பா சித்திய்யை கூட இப்படி தான் தன்னை இந்த குடும்பத்திற்க்கும் எனக்குமே சம்மந்தமே இல்லாது போல் தான் பேச்சுக்கள் இருக்கும்..
சின்ன வயதில் புரியவில்லை.. ஆனால் இப்போது தனித்து இருந்த சமயங்களில் யோசிக்கும் போது அனைத்துமே அவளுக்கு தெளிவாகவே புரிகிறது தான்.
இருந்துமே செந்தாழினி நீ என்ன என்னை இந்த வீட்டை விட்டு விலக்கி வைப்பது நான் விலகி கொள்கிறேன் என்பது போல் தான் அவள் இருப்பாள்..
ஆனால் இன்று அவளாள் அப்படி இருக்க முடியவில்லை.. காரணம் தான் எடுத்த விலை குறைந்த கல்யாண புடவை நகை.. இதை வைத்து தன் காதில் விழ வேண்டும் என்றே வேண்டும் என்று பேசிய பேச்சில்,.
அதாவது மகிபாலனின் பணப்பிரச்சனை பற்றியே பேசியதில் இன்று அப்படி விட்டு விட முடியவில்லை அவளாள்..
அதில் என்ன தான் நீங்கள் என்னை விலக்கினாலும்.. நானே விலகி நின்றாலுமே ஒரு சிலது.. என்னை தொடர்புகள் தொடர தான் செய்யும்..
அது நான் மருதுவின் மகள்.. இந்த வீட்டு பெண்.. பின் இத்தனை நேரம் லாபம் வரும் என்று சொன்ன நகைகடை தன் பெயரில் எப்போதோ.. அதாவது செந்தாழினியின் பாட்டி…
மணிகேகலை இருக்கும் போது அந்த கடை பேத்திக்கு தான் என்று செந்தாழினிக்கு எழுதி வைத்து விட்டதை மருது பாண்டியினால் கூட மாற்ற முடியாது தானே…
அதை தான் இப்போது செந்தாழினி தன் இரு அண்ணிகளிடம் தெளிவு படுத்தினால்..
“ பாட்டி இருக்கும் போதே என் பெயரில் அந்த கடையை மட்டும் எழுதி வைத்து விட்டாங்க.” என்றது தான் இருவருமே..
“அது எப்படி எழுதலாம்..? எப்படி எழுதி வைக்க முடியும்.. அது குடும்ப சொத்து தானே உனக்கு மட்டும் எப்படி எழுத முடியும்.?” என்று கேட்க..
செந்தாழினி.. “ அந்த கடை பாட்டிக்கு சீதனமா அவங்க அம்மா வீட்டில் கொடுத்தது.. அதாவது பாட்டி பெயரில் தான் இருந்தது… என் பெயருக்கு எழுதி கார்டியன் நீங்க இவ்வளவு நேரம் சொல்லிட்டு இருந்திங்கலே என் மாமனார் மாமனாரு என்று அவர் இருந்தார்..
இருந்தார்.. ஆனால் பாருங்க என் இருபத்தி ஒன்றாம் வயசுல எனக்கு அந்த கடை வந்து சேர்ந்து விடனும்.. எனக்கு இருபத்தி ஒன்று முடிந்து ஆறு மாதம் ஆகிடுச்சி..”
“நீங்க என்ன செய்யிறிங்க. உங்க மாமனாரு கிட்ட கொஞ்சம் இதை பத்தி சொல்றிங்கலா.. அதோட இந்த ஆறு மாதத்தின் கடை லாபம் அதையுமே என் கிட்ட சேர்த்துட சொல்லுங்க…” என்றவளின் பேச்சில் செண்பகமும் செளமியாவும் அதிர்ச்சியில் வாய் அடைந்து நின்று விட்டனர்..
செந்தாழினி தான்.. “ எனக்கு ரொம்ப டையடா இருக்கு நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும்.. போகும் போது கதவை லாக் பண்ணிட்டு போங்க ஏசி வெளியில் போகுது..” என்று சொன்னவளின் பேச்சில் இருவரும் சென்றனர்..
செந்தாழினி சொன்னது போல கதவையும் அடைக்கும் வேளையில் “ அந்த கடையின் தொடக்கம் தான் மற்ற கடை எல்லாம் வந்தது.. அதோடு அதில் வந்த லாபத்தையும் வைத்து தான் சொத்துமே எல்லாம் வாங்கி போட்டு இருக்குறது…
என்னை நீங்க சீண்டாத வரை தான்.. என்னை என்றால் என் மாமியார் வீட்டை பத்தி நீங்க இழுக்காத வரை தான்.. இந்த சொத்து எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லாது உங்க சொத்தா உங்க கிட்ட இருக்கும்.. சும்மா சும்மா.. நீங்க பெரிய இடம் … அவங்க சின்ன இடம் என்பது போல பேசிட்டு இருந்திங்க. ஒரு சின்ன லீகல் நோட்டிஸ் போதும்… புரியும் என்று நினைக்கிறேன்..” என்று விட்டாள்..
இங்கு செந்தாழினி தன் மாமியார் வீட்டின் நிலை தெரிந்து அவர்களை தன் வீட்டில் விட்டு கொடுக்காது பேச.
இங்கு மகிளாவோ தன் திருமணத்திற்க்கு முதலில் தன் திருமணப்பட்டாக ஐம்பது ஆயிரத்தில் இருக்கும் மேல் வேண்டும் ம்மா… என்று அடம் பிடித்து கொண்டு இருந்தாள் கெளசல்யாவிடம்…