Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Eengum Geetham...8.2

  • Thread Author
அத்தியாயம்…8…2

“என்ன டி சொல்ற.. ஐம்பது ஆயிரமா…?” என்று அதிர்ந்து தான் போய் விட்டார் கெளசல்யா மகள் சொன்ன புடவையின் விலையை கேட்டு..

பின்.. “முதல்ல புடவை மாப்பிள்ளை வீட்டவங்க தானே எடுத்து கொடுக்கனும்.. அவங்க எடுத்தால் கூட இத்தனை விலை எல்லாம் ரொம்ப அதிகம் டி..’ என்று அங்கலாய்த்து தான் கூறியது கெளசல்யா.. அதற்க்கு காரணமும் உண்டு…

மாப்பிள்ளை வீடு பெண்ணுக்கு எடுத்து கொடுக்கும் விலையில் பாதி அளவிலாவது இவர்கள் மாப்பிள்ளைக்கு திருமணம் உடை எடுக்க கொடுக்க வேண்டும்..

இதோ செந்தாழினிக்கு இவர்கள் பட்டுப்புடவை எடுத்து கொடுத்த உடனே ஓட்டலில் சாப்பிடும் போது மருது பாண்டியன் மகிபாலன் கையில் ஒரு லட்சம் பணத்தை கொடுத்தவர்..

“உங்களுக்கு உடை எடுக்கனுமே மாப்பிள்ளை எடுத்துக்கோங்க..” என்று கூறியவரிடமே மகிபாலன் திருப்பி கொடுத்து விட்டான்..

பின் வர்புறுத்தியதில் பத்தாயிரம் மட்டுமே தான் மகிபாலன் வாங்கி கொண்டது.. வீட்டிற்க்கு வரும் வழியில் கெளசல்யா கூட.

“வாங்கி இருக்கலாமே பாலா. கல்யாண செலவுக்கு கை கடிக்காம இருக்கும் லே..” என்று இவர் சொன்னதற்க்கு மகி பாலன்..

“பெண்ணுக்கே மூன்று பட்டுப்புடவை சேர்த்து முப்பத்தி ஐந்து ஆயிரம் தான் ஆச்சி.. ஆம்பிள்ளை எனக்கு ஒரு லட்சமா அநியாயம் ம்மா… அதோடு கல்யாணம் செய்யும் முன்னவே நூறு பவுன் வாங்கியாச்சி. இனி ஒன்னு கூட அந்த வீட்டில் இருந்து வர கூடாது.” என்ற மகனின் பேச்சில் கெளசல்யாவுக்கு உதைப்பு தட்டியது.

என்ன டா இது.. தான் சொத்து வாங்கும் விசயம் தெரிந்தால் என்ன ஆவது என்று ஏற்கனவே கெளசல்யா கவலைப்பட்டு கொண்டு இருக்க.

இப்போது மகளின் புது கவலையாக என்ன இது இத்தனை ஆயிரத்திற்க்கு புடவை எதற்க்கு என்று கேட்டவர்..

அதோடு விடாது.. “பெரிய இடத்து பெண் அவளே கம்மி விலையில் தான் வாங்கி இருக்கா.? உனக்கு என்ன டி வந்தது.?” என்று கேட்டது தான்..

செந்தாழினியை சொல்லாது வீட்டின் நிலை மட்டும் சொல்லி இருந்து இருந்தால் மகிளா ஒத்து கொண்டு இருந்து இருப்பாளோ என்னவோ… செந்தாழினியை கம்பெர் செய்ததில்..

“ஆ இப்படி மாப்பிள்ளை வீட்டவங்க கிட்ட காட்டி தான் இதோ இது போல நல்ல பெயர் எடுத்து ஆகனும்.. அது தான் நடத்தையில் ஏற்கனவே சந்தி சிரிச்சி விட்டுச்சே…” என்று மகள் சொன்னதுமே கெளசல்யா பயந்து போய் விட்டார்..

மகிளாவின் பேச்சில் கெளசல்யா பயந்ததோடு மட்டும் அல்லாது வீட்டின் வாசல் படியையுமே பார்த்தார்.. ஏன் என்றால் மகன் வேலையை விட்டு வரும் நேரம் இது.. வேண்டாம் என்று சொன்னவனை இவர் தான் வம்படியாக அந்த பெண்ணை கட்டி வைப்பது.

மகள் சொன்னது போல இப்போது மகனுக்கு செந்தாழினியை திருமணம் செய்து கொள்வதில் பிரச்சனை இல்லை போல தான் தெரிகிறது.. இப்போது நாமே அந்த பெண்ணை தப்பாக பேசினால், அதோடு என்ன தான் இருந்தாலுமே இந்த வீட்டிற்க்கு மருமகளாக வரப்போகிறவள்..

அவருக்குமே ‘இந்த பெண் ஒழுக்கமாக இருந்து இருக்க கூடாதா..’? என்று தான் செந்தாழினியை திருமணம் செய்ய சம்மதம் சொன்ன நாள் முதலாக மனதில் நினைத்து கொண்டு இருக்கிறார்.

பின் இதையுமே அவர் தான் நினைத்து கொள்வார்.. அதாவது அப்படி அந்த பெண் இருந்து இருந்தால், அவர்கள் வசதிக்கு நம் வீட்டில் சம்மந்தம் வைத்து கொண்டு இருந்து இருப்பார்களா என்று.. ஆனால் ஒன்று மட்டும் மனதில் ஒரு உறுதி.. பெண் முன் எப்படியோ.. ஆனால் இந்த வீட்டிற்க்கு வந்த பின் வெளியில் தனியாக எல்லாம் அனுப்ப கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தார்.. பார்க்கலாம் அது நடக்குமா என்று..?

ஆனால் அதற்க்கு முன் இந்த பெண்ணால் வீட்டில் பூகம்பம் வெடித்து விடும் போல. அது போல தான் மகிளாவின் அடுத்த அடுத்த பேச்சுக்கள் இருந்தது.

அதாவது… “ மாப்பிள்ளை வீட்டவங்க எத்தனை ஆயிரத்தில் எடுத்து கொடுக்கனும் என்று நான் நரேன் கிட்ட சொல்லிட்டேன்.. எனக்கு நீங்க எடுத்து கொடுக்கும் புடவை ஐம்பது ஆயிரத்துக்கு கம்மி இல்லாது இருக்கனும்.. உங்க வரப்போகும் மருமகள் எத்தனை ஆயிரம் எடுத்தா அது பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை.”

அவளின் இந்த பேச்சு பிறந்த வீட்டை பற்றியும் கவலை இல்லை என்பது போல தான் இருந்தது.

அதோடு. “மாப்பிள்ளைக்கு என்று இருபத்தி ஐந்து ஆயிரம் கொடுக்கனும்.. ஐந்து பவுனில் தங்கம் எடுத்து கொடுக்கனும்..” என்று மகளின் இந்த பேச்சில் கெளசல்யா மார்பில் கை வைத்து கொண்டு இருக்கையில் அமர்ந்து விட்டார்.

“என்ன டி சொல்ற..? வீட்டின் நிலை புரிந்து தான் நீ பேசுறியா. ? இத்தனைக்கும் பணத்துக்கு என்ன டி செய்யிறது…?” என்று ஆதங்கத்துடன் கேட்டவரிடம்..

மகிளா மிக சாதாரணமாக… “ அது தான் உங்க மருமகள் இத்தனை மிச்சம் படுத்தி இருக்கா என்று பெருமை பட்டிக்கிட்டிங்கலே…ஆறு லட்சம் தானே அண்ணா புடவை கடைக்கு எடுத்துட்டு வந்தது.. அதுல இரண்டரை லட்சம் தான் செலவு ஆகி இருக்கும்.. மிச்சம் இருக்கும் லே.” என்று சொன்னவளையே கெளசல்யா அதிர்ந்து பார்த்தவர்.

“அது உன் அண்ணன் வட்டிக்கு கடன் வாங்கிட்டு வந்தது டி.. அதோட அவன் கல்யாணத்திற்க்கு செலவு இருக்கு,.. அடுத்து பத்து நாளிலேயே உன் கல்யாணம்.. இருக்கு.. அதுக்கு எல்லாம் பணம் வேண்டாமா..? இதுக்கே இன்னும் வெளியில் கடன் வாங்கனுமா என்று பயந்துட்டு இருக்கான் டி உன் அண்ணன்.” என்று கெளசல்யா இருக்கும் நிலையை மகளிடம் சொன்னார்.

மகிளா என்ன வெளியில் இருக்கும் பெண்ணா.? வீட்டின் நிலை தெரியாதா என்ன..? ஒரு சில பெண்கள் இது போல தான் இருக்கிறார்கள்…

பிறந்த வீட்டின் கஷ்டம் என்பது புரிந்தாலுமே, நமக்கு என்ன வந்தது என்பது போல. . அதுவும் திருமணம் என்று முடிவு செய்தால் புடுங்கும் வரை புடுங்கி கொண்டு போகும் எண்ணத்தில் எத்தனை லட்சம் கடன் வாங்கினால் என்ன.?

அதன் பின் நாம் இந்தா வீட்டிலா இருக்க போகிறோம்…? அதோடு ஒரு சில பெண்களுக்கு தாய் வீட்டின் கடமை என்பது தெரியாமல் போய் விடுகிறது.. கடன் இருந்தால் மகன் கட்ட வேண்டும்.. பெண்கள் அந்த கடனில் தாங்களுமே இந்த வீட்டின் பெண்கள் தானே… எங்களுக்கும் அந்த கடனை அடைப்பதில் உரிமை இருக்கிறது என்று எந்த ஒரு பெண்ணாவது தாய் வீட்டில் வந்து அந்த உரிமையை கேட்டு இருந்து இருப்பாளா.?

இதே சொத்து இருந்தால் மட்டும் எனக்கும் உரிமை இருக்கிறது என்று நிற்கிறார்கள்.. அந்த மனம் உடைய மகிளா… வந்த வரை லாபம் என்று தான் புடுங்க நினைக்கிறாள்..

இதில் தன் திருமணம் என்று சொன்னதில் மகிளாவுக்கு இன்னுமே கோபம்..

“ஆமாம் ஆமாம் பெரிய திருமண செலவு.. நரேன் வீடு அந்த பெரிய திருமண சத்திரத்தில் செய்யலாம் என்று சொன்னாங்க. அதே போல கச்சேரி கேட்டேரிங்க என்று எல்லாத்திலேயும் பெஸ்ட்டா இருக்கிறவங்களை தான் சொன்னது.”

“ஆனா இந்த ண்ணா. இது எல்லாம் என் வசதிக்கு தோது படாது… பெண் சைடில் இருந்து நாங்க கல்யாணத்துக்கு இரண்டு லட்சம் தான் கொடுக்க முடியும் என்று சொல்லிட்டாரு…”

“இந்த பணத்தை வைத்து மாப்பிள்ளை வீட்டவங்க என்ன செய்ய முடியும்.. சின்ன சத்திரம் அதே போல எல்லாமே ரொம்ப ரொம்ப சாதாரணமா தான் இருக்கு.” என்று ஒரு மாதிரி இதை பெரிய குறையாக கூறினாள்..

ஆம் அது அவளுக்கு பெரிய குறை தான்… நரேன் வீட்டில் சொன்னதை போல செய்தால் பதினைந்து லட்சத்துக்கு மேல் செலவு ஆகும்.. இவர்கள் சமூகத்தில் திருமண செலவை பெண் வீடும் மாப்பிள்ளை வீடும் சரி பாதியாக தான் பிரித்து கொள்வர்..

மகிபாலம் என் வசதி இது தான் என்று நரேன் வீட்டில் சொல்லி விட்டான்.. நகை அவர்கள் பிடியில் நின்று வாங்கி கொண்டது போல இதில் அவர்களால் நிற்க முடியவில்லை..

முன் மாப்பிள்ளை வீட்டவர்களின் கண்ணுக்கு மகி பாலம் மகிளாவின் அண்ணனாக மட்டும் தான் தெரிந்தான்.. ஆனால் இப்போது மருது பாண்டியனின் வீட்டிற்க்கு மருமகனாக போகிறான்.. அந்த பார்வையில் தான் இப்போது இவர்களின் பார்வை இருந்தது.

அதோடு இனி என்ன.? தன் மருமகளின் அண்ணன் வசதியாக ஆனால் தங்கைக்கும் செய்வான் தானே.. இப்போதே பேசி கெடுத்து கொள்ள வேண்டாம் என்று நரேன் வீட்டில் நினைத்து கொண்டு விட்டனர் போல..

அதனால் மகிபாலன் கொடுத்த பணத்தை வாங்கி அதிலேயே முடித்து கொள்ள பார்த்தனர்…

ஆனால் . நரேன் எப்போதும் போல மகிளாவிடம் “என்ன மகி உன் அண்ணன் இப்படி சொல்றாரு… என் வீட்டவங்களை சமாளிக்க முடியல.” என்று குறை சொல்ல.

மகிளாவும் எப்போதும் போல தன் அண்ணன் முன் வந்து நின்று விட்டாள்..

“ண்ணா என்ன ண்ணா இந்த காலத்தில் இரண்டு லட்சத்தை வெச்சிட்டு எப்படிண்ணா கல்யாண செலவை செய்யிறது.?” என்று ஒரு மாதிரியாக அழுகும் குரலில் கேட்க.

இந்த முறை மகிபாலன் தங்கையின் பேச்சுக்கு செவி சாய்க்க வில்லை.. திட்டவட்டமாக சொல்லி விட்டான்..

“நானுமே என் பங்கா என் கல்யாண செலவுக்கு பெண் வீட்டில் இரண்டு லட்சம் தான் கொடுக்க இருக்கிறேன்… அதுக்கு ஏற்றது போல செய்யுங்க என்று சொல்லிட்டேன். அவங்களுமே ஒத்து கொண்டு விட்டாங்க..”

மகிபாலன் அதோடு விட்டு இருந்து இருந்தால் கூட மகிளா இந்த அளவுக்கு கோபம் பட்டு இருந்து இருக்க மாட்டாளோ என்னவோ.

“மதுரையில் பெயர் சொல்லும் குடும்பம் அவங்களுடையது.. அவங்களே சின்ன சத்திரத்தில் சிம்புலா செய்யும் போது நரேன் வீட்டிற்க்கு என்ன…?” என்று கேட்டு விட்டான்..

இதே கேள்வியை தன் அன்னை கேட்டு இருந்து இருந்தால், மகிளாவின் பதிலே வேறாக இருந்து இருக்கும்…

‘செந்தாழினி கெட்டு போனது ஊரு மொத்தத்துக்கும் தெரியும்.. விமர்சையா எங்கு நடத்த முடியும்.. அது தான் சிம்பிளா நடத்துறாங்க. நான் அப்படியா என்று…?’

ஆனால் தன் விசயம் தெரிந்த தன் அண்ணனிடம் மகிளாவினால் என்ன சொல்ல முடியும்.. அதனால் அண்ணனிடம் அமைதி காத்தாள்..

அதனால் தான் புடவை மாப்பிள்ளைக்கு இத்தனை சவரன் வேண்டும் என்று அந்த கல்யாண செலவை இதில் ஈடு கட்ட நினைத்து அன்னையிடம் கேட்டு கொண்டு இருக்க.

அன்னையுமே இப்படி சொன்னதில் மகிளா பொங்கி விட்டாள்…

“ ஆமா ஆமா பெரிய கல்யாண செலவு…” என்று.

இப்போது கெளசல்யா.. “ நீ எது என்றாலுமே உன் அண்ணன் கிட்ட கேட்டுக்கோ மகி..” என்று சொல்லி விட்டு சமையல் அறைக்கு செல்ல பார்த்தவரின் காதில் மகிளா சொன்ன.

“ஆமா ஆமா இனி அண்ணன் கிட்ட தான் போய் எல்லாத்துக்கும் நிற்கனும்.. நீங்க தான் நம்ம கிட்ட இருந்த எல்லாத்தையுமே போக வெச்சிட்டிங்கலே…” என்று இந்த வார்த்தை சொன்னால் அன்னையின் மனது வேதனை அடையும் என்று தெரிந்தே சொன்னாள் மகிளா.. தான் கேட்டதை செய்யாத ஆத்திரம் அவளுக்கு…

சமையல் கூடத்திற்க்கு செல்ல பார்த்தவரின் கால்கள் வேர் ஊன்றி நின்று விட்டது.. அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது..

இங்கு செந்தாழினியின் வீட்டில் இவள் சொன்ன கடை என் சொந்தம்.. என்று செந்தாழினி சொன்ன நொடியில் இருந்து அந்த வீட்டின் இரு மருமகள்களுக்கு அப்படி இருந்தது.

அதுவும் லாபத்தை கொட்டும் அந்த கடை அவளுக்கு தான் என்றதில் இன்னுமே தாங்க முடியவில்லை..

அது எப்படி அது எப்படி… என்று மனது ஆத்து ஆத்து போனது.. இருவரும் நேரம் கிடைக்கும் போது எல்லாம்..

“என்ன டி அந்த ரெண்டு சொத்தோட பீடையை ஒழிச்சி கட்டிடலாம் என்று பார்த்தா இப்படி முதலுக்கே தலை மேல் உட்கார்ந்து கொண்டு இருப்பது போல உட்கார்ந்து இருக்கா…” என்று அந்த வீட்டின் பெரிய மருமகள் செண்பகம் சொல்ல.

செளமியாவும்.. “ ஆமாம் க்கா நானுமே இதை எதிர் பார்க்கவில்லை..” என்று தன் சொன்னவள் பின்..

“ஒரு சமயம் அதனால் தான் நம்ம மாமனாருங்க செந்தாழினி அத்தனை பெரிய தப்பு செய்துட்டு வந்தும் வீட்டை விட்டு அனுப்பாம இருக்காங்களோ…?” என்று தன் சந்தேகத்தையும் சேர்த்து கூறினாள்..

ஆனால் செண்பகம் செளமியாவின் இந்த கருத்தை ஒத்து கொள்ளவில்லை.

“எனக்கு அடுத்து ஏழு வருஷம் கழிச்சி தானே நீ இந்த வீட்டுக்கு வந்த.. யம்மா நான் இந்த வீட்டிற்க்கு கல்யாணம் ஆன வந்த நாள் முதலா யப்பா யப்பா… செந்தாழினி செந்தாழினி செந்தாழினி தான்..

ஏன் எங்க முதல் ராத்திரியில் என் புருஷன் கூட என் தங்கை செந்தாழினி அவள் மனசு நோக எதுவுமே நீ செய்ய கூடாது.. இதையே தான் வேறு வேறு தினுசா சொல்லிட்டு இருந்தாரு.. அவர் பேசிய பேச்சில் நான் தூங்கியே தூங்கிட்டேன்னா பாரு…”

“சரி பெண் குழந்தைக்கு தான் இந்த குடும்பம் இத்தனை ஆசைப்படுதே.. சரி நாம ஒரு பொம்பளை பிள்ளையை பெத்து இந்த குடும்பத்துக்கு கொடுத்துட்டா இந்த வீட்டில் செந்தாழினி சுப்ரபாதம் கேட்காது என்று நினச்சி நானுமே ஒன்றுக்கு மூன்றே வரிசையா பெத்துக்கிட்டேன்.. எங்கே எல்லாம் ஆம்பிள்ளை பிள்ளையா போய். என் உடம்பு போனது தான் இங்கு மிச்சம்..” என்று ஒரு பெரும் மூச்சுடன் சொல்லி முடித்த செண்பகம்..

“நீ சொன்னது எல்லாம் இல்ல டி.. இந்த வீட்டு ஆண்களுக்கு செந்தாழினி என்றால் இஷ்டம் தான்..” என்று ஒரே போடாக போட்டு விட்டாள்..

இப்போது செளமியா. “ அப்போ இதுக்கு தீர்வு தான் என்ன க்கா. இந்த கிழவன் கிழவிக்கு பயந்துக்கிட்டு இருந்தா இவங்க காலத்துக்கு அப்புறம் இந்த உரிமை எல்லாமே நம்ம பிள்ளைக்கு வந்து சேரும் பரவாயில்லை இன்னும் கொஞ்சம் காலம் தானே என்று இருந்தா…

முதலுக்கே மோசம் என்பது போல இது என்னக்கா இவள் புதுசா ஒன்னை சொல்றா.. இப்போ என்னக்கா செய்யிறது..?” என்று ஆதங்கத்துடன் செளமியா கேட்க..

செண்பகா.. “ அதுக்கு தான் நான் ஒரு வழி யோசித்து வைத்து இருக்கேன்..” என்று சொன்னவள் செளமியா காதில் ரகசியம் பேச…

செண்பகா பேச பேச செளமியாவின் கண்கள் மகிழ்ச்சியில் விரிந்து கொண்டே சென்றது….








 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
அடியே மகிளா மாடே அவ ஒழுக்கம் கெட்டவளா இருந்தால் அவளை வேண்டாம் என்று சொல்லிட்டு ஏழை பொண்ணா இருந்தாலும் ஒழுக்கமான பொண்ணை அண்ணனுக்கு கட்டி வைக்க வேண்டிய தான 😡 😡 😡 😡 😡 😡 😡 😡

அவ அம்மா செஞ்சதையே கேவலமா சொல்லி காட்டுறா 😕 😕 😕

அடேய் பொறம்போக்கு கிஷோர் காதலிச்ச பொண்ணை வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்ய துப்பு இல்லை 😡 😡 😡 நீ அவ அண்ணனை பத்தி பேசுறீயா 🥶🥶🥶🥶🥶

இந்த இரண்டு கேடுகெட்ட ஜென்மங்களும் ஏதோ திட்டம் போடுறாங்களே 😨😨😨

யார் என்ன செஞ்சாலும் செந்தாழினி சமாளிப்பா 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
Last edited:
Active member
Joined
May 24, 2024
Messages
194
Thooo ithayellam visam vachi konnurukanum
Ava olukM ketavala neeya
Unmai ah intha mahi Avan aatha kita solanum apram trium
Ellaraum vachi seiyanum sentha
Mothala un annigala etho plan podrazhuga
 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
மகிளா தைரியமான ஆளா இருந்தா இதே பேச்சை உன் அண்ணன்கிட்ட பேசேன் முடியாது இல்ல உன் குட்டு வெளிய வந்துடும்.... 🥶🥶🥶🥶🥶🥶
எவ்வளவு பேராசை முடிஞ்ச வரைக்கும் பணம் பிடிங்க பார்க்குறா... 😤😤😤😤
அவ தப்பானவளா இருந்தா எதுக்கு கல்யாணத்துக்கு ஒதுக்கிடீங்க அவ பணத்துல தான் உங்க வாழ்க்கையைவே ஆரம்பிக்குறீங்க 🤬🤬🤬🤬🤬

அண்ணிங்க ரெண்டும் என்ன திட்டம் போடுதுங்க 😬😬😬😬
 
Active member
Joined
May 11, 2024
Messages
123
செந்தா வீடிட்ல அவள் அண்ணிகள் என்ன திட்டம் போடுறாங்களோ சொத்துக்காக இங்க மகி அவள் அன்னையை வேதனைபடும்படி வார்த்தைகள் பேசுகிறாள் இவர்கள் நடுவில் இனி திருமண பந்ததில் என்ன நடக்குகமோ 🤔🤔🤔🌺🌺🌺
 
Top