Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Eengum Geetham...9.1

  • Thread Author
அத்தியாயம்…9..1

செந்தாழினி காவல் நிலையத்தில் “என் விருப்பத்துன் பேரில் தான் நான் அவர்களுடன் சென்றது.. அவர்கள் என்னை கடத்தி கொண்டு எல்லாம் செல்லவில்லை…” என்று சொன்னதில், மருது பாண்டியனின் சகோதரி இருவருமான சங்கரியும், வித்யாவும், முதலில் நம்பவே முடியவில்லை.. ஆனால் நம்பி தானே ஆக வேண்டும்.. அதுவும் அண்ணன் பெண்ணே சொன்ன போது நம்பாது தான் இருக்க முடியுமா..?

இந்த பிரச்சனையில் செந்தாழினியின் குடும்பம் மட்டும் அல்லாது அக்கா தங்கை இருவருமே தான் ஒரு வகையில் பாதிக்கப்பட்டனர் எனலாம்..

முதல் பாதிப்பு அவர்கள் புகுந்த வீட்டில் அத்தனை பேச்சுக்கள் கேட்கும் படியாகி விட்டது.

அதுவும் வித்யாவின் புகுந்த வீட்டினரோ ஒரு படி மேல சென்று.. அந்த வீட்டு பெண்களின் போஷியே அது தானோ.. நாம தான் தீர விசாரிக்காம பெண் எடுத்து விட்டோமோ..” என்று இருபத்தி ஐந்து வருடம் முன் நடந்த திருமணத்தையே கேள்வி குறியாக்க பார்த்து விட்டனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்..

இதில் இந்த சம்பவம் நடந்த மூன்று மாதத்திலேயே மருது பாண்டி தன் இரு தங்கையின் வீட்டிற்க்கு சென்று பெண் கொடுக்க கேட்க. அவ்வளவு தான் இரு வீட்டிலும் அக்கா தங்கை அத்தனை பேச்சுக்கள் கேட்க வேண்டி இருந்தது..

இதில் வித்யா சங்கரி இருவருமே.. மருது அண்ணாவிடம்..

“நாங்களே கேட்ட போது எல்லாம் பிடி கொடுக்காது இப்போ வந்து கொடுக்குறேன் என்று சொல்றிங்க.., பாஞ்சாலிக்கே ஐந்து பேரு தான்… ஆனால் நீங்க ஆறாவதா இன்னொன்னு தேடி கொடுக்க நினைக்கிறிங்க.” என்று பெரியவள் சின்னவளை விட எப்போதுமே மனதில் பட்டதை பட் பட் என்று பேசிவிடுவாள்..

இதில் “இவர் மகள் செய்த அசிங்கத்தில் நாங்களுமே இல்ல எங்க புகுந்த வீட்டில் அசிங்கப்பட வேண்டி இருக்கு..” என்று கோபத்தில் வார்த்தைகளை கொட்டி விட்டாள்..

இதில் தன் அண்ணன் மகளை பெண் எடுத்து தன் புகுந்த வீட்டில் எல்லா வற்றிலுமே தன் நிலையை உயர்த்தி கொள்ள பார்த்தனர்.. இதில் எல்லாவற்றிர்க்கும் சேர்த்து குழி தோண்டி புதைத்தில் பேசி விட்டாள்…

அவ்வளவு தான் மருது பாண்டி. வீடு வந்து சேர்ந்து விட்டார்.. ஆனால் முன் போல உடன் பிறப்பு வரவில்லை என்றாலுமே, தாய் வீட்டு சீராக அனைத்துமே மருது பாண்டி நிறைவாக தான் இன்று வரை செய்து கொண்டு வந்து இருக்கிறார். சென்னையில் தான் இரு தங்கைகளையும் கட்டி கொடுத்தனர்..

முன் எல்லாம் அனைத்து விடுமுறைக்குமே தாய் வீட்டிற்க்கு தங்கைகள் வந்து விடுவர்…அதுவும் குடும்பம் சகிதமாக தான் வீட்டில் தங்குவது… செந்தாழினியின் அந்த பிரச்சனைக்கு பின் இங்கு வருவதை முற்றிலும் தவிர்த்து விட்டனர்.

இதில் போன வருடம் தான் இரண்டு தங்கைகளின் மகன்களுக்கும் திருமணம் என்று திருமணம் பத்திரிக்கை கொடுக்க வந்தனர்..

தாய் மாமன் என்று தங்கள் இருவரையுமே எதிலுமே கலந்து ஆலோசிக்கவில்லை.. பத்திரிக்கையை பார்த்து தான் தங்கைகள் ஒரே வீட்டில் பெண் எடுக்கும் விசயமே மருது பாண்டிக்கு தெரிய வந்தது…

மகன்களையுமே அழைத்து தான் வந்து இருந்தார்கள் . மாப்பிள்ளை வரவில்லை..

சரவண பாண்டி தான்.. கொஞ்சம் குதித்தது.. ஆனால் மருது பாண்டியன் தன் தம்பியை அடக்கி நிறுத்தி விட்டார். வந்த தங்கை மகன்கள் செந்தாழினியிடம் என்ன பேசினார்களோ…

செந்தாழினி “ ஆமாம் டா.. நீங்க அதுக்கு கூட லாயிக்கு இல்லாதவனுங்க தான்..” என்று கோபமாக சத்தம் போட்டது மட்டும் மருது பாண்டியனின் காதில் விழுந்தது..

அதனால் போகும் முன் தங்கை மகன்களிடம். “ உங்களுக்கு திருமணம் ..உன் கவனம் அதுல மட்டும் இருக்கட்டும்..” என்று தட்டி கொடுத்து தான் அனுப்பி வைத்தார்..

தங்கை மகன்களின் திருமணத்திற்க்கு போக வேண்டுமா..? என்று சரவண பாண்டியன் முரண்ட..

பெண்கள் இல்லாது அண்ணன் தம்பி மட்டும் சென்று சபை நிறைக்க அனைத்தையுமே செய்து விட்டு வந்தனர்.. அதை மட்டும் மறுக்கவில்லை… காரணம் அந்த அளவுக்கு சபையே நிறையும் அளவுக்கு செய்து விட்டு வந்து விட்டனர்.

இப்போது வீட்டில் சங்கரி வித்யாவுக்கு திருமணம் பத்திரிக்கையை நான் மட்டும் கொண்டு வைக்கிறேன் என்று மருது சொன்னது போது..

இப்போது இரு மருமகள்களுமே… “வீட்டு பெண்ணை விட்டு நல்லது செய்யிறது அந்த அளவுக்கு நல்லது கிடையாது மாமா. பெரியவங்க உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை…” என்று தன் முன் வந்து பேச.

“நான் வைக்க மாட்டேன் என்று சொல்லலையே… வைக்கனும்..” என்று இழுத்து நிறுத்த ..

“இல்ல மாமா வீட்டு பெண்ணுக்கு முறையா வைக்கனும்.. ஆம்பிள்ளைங்க மட்டும் போனா நல்லாவா இருக்கும்.. அவங்களுக்கும் அங்கு மாமியார் வீட்டில் பதில் சொல்லனும் லே மாமா..” என்று பெரிய மருமகளாக இன்று தான் அந்த வீட்டில் நான் மூத்த மருமகள் என்று பொறுப்புடன் பேசினாள்..

ஆனால் பெண்கள் புத்தி பின் புத்தி என்பது போல.. வளர்மதி மூத்த மருமகளின் இந்த பேச்சை யோசனையுடன் தான் பார்த்தார்.. இதை வைத்து இவள் என்ன கலகம் செய்ய நினைக்கிறார் என்று நினைத்து..

அதுவும் மருது பாண்டியனும் “ சரி நானும் உங்க அத்தையுமே முறையா பத்திரிக்கை கொடுத்து விட்டு வருகிறோம்..” என்றதில் பதறிய செண்பகம்..

“என்ன மாமா.. அத்தையை அவங்க முறையா கூப்பிடல…” என்று சொல்ல மருது பாண்டி .

“இப்போ நீ என்ன தான்மா சொல்ல வர.” என்று கேட்ட மருதுவின் குரலில் இப்போது எரிச்சல் இருந்தது.

பின் என்ன திருமணத்திற்க்கு இன்னும் பத்து நாட்கள் தான் உள்ளது.. திருமணம் எளிமையாக இருந்தாலுமே, வேலை இருக்க தானே செய்யும்..

இதில் இடை இடையே மருதுவுக்கு தன் பெண்ணின் மஞ்சள் நீராட்டு விழா வேறு அவரின் நியாபகத்தில் வந்து விடும்..

ஒரு மஞ்சள் நீராட்டு விழாவே இந்த மதுரையே திரும்பி பார்க்கும் அளவுக்கு அத்தனை ஆர்ப்பட்டமாக செய்தவர் அவர்..

இதில் வந்த உறவுகள் ஒன்று போல.. புட்டு சுத்தும் நிகழ்ச்சியே இப்படின்னா. அப்போ இந்த பெண்ணுக்கு கல்யாணம் எப்படி செய்வாங்க..” வந்தவர்களின் பேச்சு இதுவாக தான் இருந்தது.

ஆனால் நடந்தது.. அதையும் இதையும் நினைத்து மனது வேறு சோர்ந்து தான் போய் விடுகிறது.. அதனால் மருமகளிடம் எரிந்து விழ..

“இல்ல மாமா.. அத்தை பெரியவங்க… அவங்களை மதிக்கல. அப்படி இவங்க போனா எப்படி மாமா… நம்ம அத்தைக்குமே தன் மானம் இருக்கும் தானே மாமா.. அதே நானும் உங்க புள்ளையும் என்றால். வித்யா சித்தி சங்கரி சித்தியோட சின்னவங்க.. அது பெருசா தெரியாது..”

செண்பகம் சென்னைக்கு போக திட்டம் போட.. மருது பாண்டி சிறிது யோசித்தவர்.

பின்.. “நீ சொல்றதும் வாஸ்தவம் தான்.. நீயும் வேலவனும் போய் செய்ய வேண்டிய சீர் செய்துட்டு வைச்சிட்டு வந்துடுங்க.” என்று சொல்லும் போதே..

வளர்மதி.. “ஒன்னு நீங்களும் உங்க தம்பியுமா போய் வெச்சிட்டு வாங்க.. இல்ல நான் வரேன்.. இவங்களை அனுப்பாதிங்க..” ஏதோ திட்டத்தோடு தான் இதை செய்கிறாள் என்பது வளர்மதிக்கு புரிந்து விட்டது… அதனால் எப்போதும் சபையில் பேசாத வளர்மதி அன்று பேசி விட்டார்…

அதுவும் இப்படி செய்யலாமா..? அப்படி செய்யலாமா..? என்று எல்லாம் யோசனை கேட்காது.. இப்படி தான் செய்ய வேண்டும் என்பது போல மனைவியின் பேச்சில் ஒரு ஆண் மகனாக மருது பாண்டியனுக்கு அது அவமானமாக போய் விட்டது போல.. பெரும் பால் ஆண்கள் இப்படி தான் செய்கிறார்கள்.. மனைவி என்ன காரணத்திற்க்காக இப்படி சொல்கிறாள் என்று எல்லாம் யோசிப்பது இல்லை..

நீ பெண்.. நான் ஆண்.. நீ எனக்கு இது செய் என்று சொல்லுவீயோ என்ற நினைப்பு.. அதே நினைப்பு தான் இப்போது மருது பாண்டியனுக்கும்..

அதில்.. “நீ எனக்கு இது செய் என்று சொல்லுவீயோ… “ என்று மனைவியை அத்தனை பேர் முன்னாடி கடிந்தார்.. ( இது எல்லாம் மனைவிக்கு அவமானம் கிடையாதாம்…)

செண்பகாவிடம்… “நீயும் வேலுவும் போய் வெச்சிட்டு வந்துடுங்கம்மா…” என்று சொன்னதோடு தன் பேச்சை முடித்து கொண்டார்.

மனைவியின்.. “என்னங்க நான் என்ன சொல்ல வந்தேன்னா…..” என்ற வார்த்தைகள் எல்லாம் அவர் காதில் விழவில்லை…

செண்பகாவும் தன் திட்டம் பலித்ததில் மனது குதுகளிக்க தான் செய்தது.. ஆனால் அதை வெளியில் காட்டாது பாவம் போல முகத்தை வைத்து கொண்டு சமையல் கூடத்திற்க்குள் சென்றவள் தன் ஒரவத்தி செளந்தர்யாவிடம் தன் கட்டை விரலை காட்டி வெற்றி என்பது போல சைகை செய்து காண்பித்தவள் மறு நாளே சங்கரி வித்யாவிற்க்கு திருமண பத்திரிக்கை வைக்க சென்னைக்கு கிளம்பி விட்டனர்.

சென்னையிலோ… வித்யா குடும்பத்தினரும் அன்று சங்கரி வீட்டிற்க்கு தான் குடும்பமாக சென்று இருந்தனர்..

யாரின் முகத்திலுமே சுரத்து இல்லை… அனைவரின் முகமும் ஒன்று போல் தான் சோகமாக இருந்தது.. பின் இருக்காதா சென்ற வருடம் தான் இதே மாதத்தில் ஒரே வீட்டு பெண்ணை தங்கள் குடும்பத்திற்க்கு மருமகளாக கொண்டு வந்தனர்…

சென்னையில் முக்கிய இடத்தில் பெரிய வீடு.. இரண்டு பெண்கள்.. முதலில் வித்யா தன் மகனுக்கு தான் அந்த வீட்டின் மூத்த பெண்ணை பார்க்க சென்றது.

தாய் வீட்டு உறவாக மருது பாண்டியனின் உறவை முறிந்த பின் தங்கை சங்கரியிடம் இன்னுமே நெருங்கி விட்டார் வித்யா.. காரணம் தாய் வீட்டு பிடிப்பு இருக்க வேண்டும் என்றோ தெரியவில்லை…

அதனால் சங்கரி மட்டும் அல்லாது கணவன் அவள் மாமியாருமே வித்யாவின் மகன் வித்தார்த்துக்கு பெண் பார்க்க கூட சென்றது.

அந்த வீட்டை பார்த்த உடனே சங்கரியின் மாமியார் தன் மகன் காதில்.. “ம் பரவாயில்லை உன் பொண்டாட்டி அக்கா விவரம் தான்.. பெரிய இடமா தான் பார்த்து இருக்கா…” என்று சொல்லி கொண்டே தான் சென்றது.

அங்கு பெண்ணுக்கு மாப்பிள்ளையையும் மாப்பிள்ளைக்கு பெண்ணையும் பிடித்து விட்டது.. அவர்கள் திருமணம் முடிவு எடுத்த உடன் தான் சின்ன மகள் வந்தது.. சங்கரியின் மாமியாருக்கு அந்த பெண்ணை பார்த்ததுமே.. ஒரு திட்டம்.

அதை பெண்ணின் அம்மா அப்பாவிடமும் சொன்னார்..

“ஓரே குடும்பத்தில் உங்க பெண்ணுங்களை கொடுத்தா பையன் இல்லாத உங்களுக்கும் நாளை பின்னே இரண்டு மாப்பிள்ளை ஒற்றுமையா செய்யவாங்க.” என்று தன் ஆலோசனையாக கூறியவரின் பேச்சை அவர்களுமே உடனே ஏற்றுக் கொண்டனர்.

“பெரியவங்க சொன்னா சரியா தான் இருக்கும்.” என்று சொல்லி பின் ஒரு திருமணத்தை பேச சென்றவர்கள் இரண்டு திருமணமாக முடித்து விட்டு தான் வீடு வந்தது..

இது வரை எல்லாமே சரியாக தான் சென்றது.. ஆனால் திருமணத்திலேயே பிரச்சனை ஆரம்பம் ஆகி விட்டது..

அத்தனை பெரிய வீடு இருக்கே வசதி போல என்று நினைக்க.. ஆனால் திருமணமோ மிக மிக எளிமையாக தான் நடத்தி கொடுத்தனர். நகையும் அத்தனை போடவில்லை… இவர்கள் செயாவர்கள் என்று கேட்கல.

இதில் தாய் மாமன் சீராக வந்த சீரை வைக்க கூட மேடை பத்தவில்லை.. அதவ்வளவு சின்ன கல்யாண மண்டபம்.. சாப்பாடுமே மிக எளிமையே.

இதுவே என்ன டா.? இது என்று யோசித்தாலுமே.. சரி அவ்வளவு பெரிய வீடு… அதுவும் முக்கியமான இடம்.. விலையே இருபது கோடிக்கு மேல போகுமே என்று விட்டனர்.

ஆனால் மூன்றாம் மாதமே ஒரு பெரும் இடியாக அந்த வீட்டின் மீது அத்தனை கடன் என்று அந்த வீடு ஏலத்திற்க்கு வந்து விட்டது. இவர்கள் கேள்வி பட்டு சென்ற போது வீடு கை மாறி விட்டது..

அன்றில் இருந்து ஆரம்பித்தது பிரச்சனை.. முதலில் பெண்கள் எது செய்தாலுமே சின்ன பெண்கள் என்று இருந்தவர்கள் வீடு போனதில் இருந்து அதன் தாக்கம் மருமகளிடம் எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது.

இதில் இரண்டாம் பெண்ணுக்கு ஒரு காதல். அதுவும் வெளிநாட்டில் படித்து கொண்டு இருந்த போது ஒரு நீக்ரோவை விரும்பி இருக்கிறாள்..

அதுவும் தெரிய வர.. அவ்வளவு தான். பொறுத்து பொறுத்து போன இரண்டு பெண்களுமே பொங்கி விட்டனர்…

“நாங்களா கட்டிக்கோ என்று வந்தோம்.. நீங்க தானே வந்திங்கா நாக்கை தொங்க போட்டு கொண்டு..” என்று பேசி விட்டனர்..

இதில் இரண்டாம் பெண்ணுக்கு காதலனிடம் இருந்து ஒரு மெசஜ்.. “நான் இன்னுமே உன்னை மறக்கல. மறக்க முடியவில்லை என்று..”

இங்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து இருந்தால் இந்த முடிவு எடுத்து இருப்பாளோ என்னவோ… மெசஜை பார்த்த உடன் தன் காதலனோடு வாழ வெளி நாட்டிற்க்கு சென்று விட்டாள்..

அதில் இங்கு மூத்தவளின் நிலை இன்னுமே மோசமாகி விட்டது… உனக்கும் உன் தங்கை போல காதல் இருக்கா இருக்கா என்று கேட்டு.. அதில்..

எனக்கு இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று தன் தாய் வீடு சென்றவள் விவாகரத்து நோட்டிஸ் அனுப்பி விட்டாள்..

அதை பற்றி பேச தான் இரு குடும்பமும் ஒன்றாக இருந்த சமயம் அண்ணன் மகன் வேலவ பாண்டியனின் பேசியில் அழைப்பு வித்யாவின் பேசிக்கு தான் வந்தது.

இங்கு செண்பகம் தான் மூத்த பெண் வித்யா சித்திக்கு தான் முதலில் வைக்க வேண்டும் என்று கணவனிடம் சொல்லி மதுரையில் இருந்து காரில் வந்தவர்கள் வித்யா வீட்டிற்க்கு தான் வந்தது..

வீடு பூட்டி இருக்கவும் வேலனோடு செண்பகத்திற்க்கு தான் என்ன டா இது என்று ஆனது..

கணவனிடம் சொன்னது போல மூத்த பெண் என்ற காரணத்திற்க்கு எல்லாம் வித்யா வீட்டிற்க்கு வரவில்லை..

வித்யா ஒன்று செய்தால் அதை பின் பற்றி செய்யும் ஆட்டு மந்தை புத்தி உடையவள் தான் சங்கரி..

செண்பகம் நினைத்தது உண்மை தான் என்பதற்க்கு சான்றே இதோ வித்யா தன் மகனுக்கு பெண் எடுக்கும் வீட்டிலேயே சங்கரியும் பெண் எடுத்து கழுநீர் பானையில் விழவில்லை.. அது வரை செண்பகம் சரியாக தான் யூகித்து இருக்கிறாள்..

வித்யாவிடம் தான் பேச வேண்டியதை சொன்னால் சரியாக இருக்கும் என்று தான் இங்கு வந்தது... வீடு பூட்டி இருக்கவும்..

“என்னங்க இது வீடு பூட்டி இருக்கு.. இதுக்கு தான் வரும் போது போன் செய்துட்டு வரலாம் என்று சொன்னது எங்கு கேட்டிங்க…?” என்று பட பட என்று பொறிந்த மனைவியையே சந்தேகத்துடன் பார்த்த வேலவ பாண்டியன்..

“என் அம்மா சொன்னது போல நீ ஏதாவது ப்ளான் செய்யிறியா என்ன…?” என்ற கணவனின் இந்த கேள்வியில் மனைவி சுதாகரித்து விட்டாள்..

“என்னங்க இப்படி சொல்றிங்க. நான் என்ன ப்ளான் செய்ய போறேன்..?” என்று என்னை போய் சந்தேகப்படுவீங்கலா..? என்பது போல பேசிய செண்பகம்..

பின்.. “ வீட்டில் கல்யாணம் வேலை அத்தனை இருக்கு. இரண்டு வீட்டுக்கும் வைத்து விட்டால் இந்த வேலை முடிந்து விடும்.. வீட்டில் அத்தைக்கு உதவியா இருக்கலாம் என்று தான்.. இனி நான் வாய் திறக்கல சாமீ… நீங்க ஆச்சு உங்க அத்தைங்க ஆச்சு…” என்று சொன்னதோடு தன் வாயை மூடிக் கொண்டு விட்டாள் தான்.. ஆனால் காதை இன்னுமே தீட்டிக் கொண்டவளாக பேசியில் தன் அத்தையிடம் கணவன் பேசுவதை கவனித்தாள்..

கணவன் “செந்தாழினிக்கு திருமணம் முடிவு ஆகி இருக்கு வீட்டிற்க்கு வந்தா வீடு பூட்டி இருக்கு.” என்ற பேச்சும் அதற்க்கு வித்யா என்ன சொன்னார்களோ…

இங்கு வேலவ பாண்டியன்.. “ம் ம்..” என்று மட்டும் ஒரு ம் கொட்டி கொண்டு தன் பேச்சை முடித்தவன்..

தன் மனைவியிடம்.. “ அவங்க சங்கரி அத்த வீட்டில் தான் இருக்காங்கலாம். இங்கேயே வந்துடு எனக்கும் இங்கேயே வெச்சிடு என்று சொல்லிட்டாங்க…” என்று தகவல் போல சொன்னவன் ஒட்டுனரிடம்.

தன் சின்ன அத்தையின் வீட்டின் முகவரியை சொன்னதோடு செண்பகாவிடம்..

“தோ பார்… அங்கு போனதும் பத்திரிக்கை வைக்கனுமா வந்துட்டே இருக்கனும்.. புரியுதா. என் அம்மா சொன்னது போல உன்னால ஏதாவது வீட்டில் பிரச்சனை வந்து என் தங்கை கல்யாணத்தில் ஏதாவது குழப்பம் வந்தது… அடுத்த வருஷம் என் கல்யாணத்திற்க்கு எல்லோருக்கும் பத்திரிக்கை வைக்க வேண்டி வந்துடும் பார்த்துக்கோ…” என்று தெள்ளி தெளிவாக சொல்லி தான் அங்கு அழைத்து சென்றது.. ஆனால் இவன் மனைவி அதை கேட்க வேண்டுமே.




 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
அக்கா தங்கை இரண்டு பேரும் ஒரே குடும்பத்தில் பொண்ணு எடுத்து பிரச்சினையில் மாட்டிக்கிட்டாங்களா 😨😨😨😨😨

செண்பகம் 🥶 🥶 🥶 நீ செந்தாவுக்கு எதிரா செய்றது எல்லாம் உனக்கே வினையா வரும் 😣 😣 😣 😣 😣

சொத்து பிரச்சினைய கிளப்பி விட வந்துட்டாளா 😠😠😠😠😠
 
Last edited:
Active member
Joined
May 24, 2024
Messages
194
Senthathuku palana vithya sunthari anubavikuranga senthava pesunathuku avunga pasangalum
Ava athaikla thoodivitu sotha adika plan ah ha ha

Sentha muzhusa solla
Intha loosunga randum avasarapattu mothamum pogumnu nendikurn

Dei un pondati keka masta nee ponnu paaka arambi
 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
செண்பகம் வம்பை விலைக்கு வாங்குறா.... சொத்து பிரச்சனையை கிளப்பி விட்டா பாதிப்பு இவளுக்கு தானே தவிர செந்தாவுக்கு இல்லை..... அவளுக்கு சொத்து தேவையும் இல்லை...

ஆனா கல்யாணத்துல அத்தைங்க எதுவும் பிரச்சனை பண்ணாம இருக்கணும் அவங்க பிள்ளைங்க வேற இப்போ வாழவெட்டியா இருக்கானுங்க...😒
 
Active member
Joined
May 11, 2024
Messages
123
திருமணதிற்கு முன் என்ன என்ன பிரச்சனை வர போகுதோ செந்தா என்ன செய்ய போறாள் 🤔🤔🤔🌺🌺🌺
 
Active member
Joined
Aug 16, 2024
Messages
267
வளர்மதி சொன்னதை மருதுபாண்டி கொஞ்சம் கேட்டிருக்கலாம்.
 
Top