Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Eengum Geetham...9.2

  • Thread Author
அத்தியாயம்…9.2

ஒரு வித யோசனையுடன் தன் பேசியை வைத்த வித்யாவையே பார்த்து கொண்டு இருந்த சங்கரி..

“என்னக்கா.. வேலவன் பேசுறான் என்று தெரியுது.. என்ன விசயமா.. இத்தனை நாள் இல்லாம இப்போ எதுக்கு திடிர் என்று போன் செய்து இருக்கான்..?” என்று கேட்ட சங்கரி பின் எதோ நியாபகத்தில் வந்தவளாக..

“க்கா இங்கு நம்ம பிரச்சனை தெரிந்து விட்டதா… ? அதை பத்தி தான் கேட்க போன் போட்டு இருக்கானா…?” என்று சங்கரி முதல் இதுவா என்று யூகித்து கேட்டவள் பின் இது தான் என்று அவளே முடிவு செய்தவளாக.

“கண்டிப்பா அது தான்.. நாம அவன் தங்கச்சி போஷி தெரிந்து பெண் எடுக்காது வெளியில் எடுத்துத்தோம்லே… அது இப்படி ஆனதில் பார்த்தியா என்று தான் போன் செய்து இருப்பான்..” என்று அவளே கட கட என்று பேசிய தங்கையை அதட்டிய வித்யா..

“சும்மா இருக்க மாட்டியா சங்கரி.. என்ன என்று கேளு .. நீயே சும்மா பேசிட்டு இருக்காதே..” என்று தங்கையை கண்டித்தாள்..

“இல்லக்கா நீ ஏதோ யோசிச்சியா.. அதுவா தான் இருக்கும்..” என்று சொன்னவளுக்கு பதில் சொல்லாத வித்யா பின் அதே யோசனை பாவனையுடனே. தன் புகுந்த வீட்டவர் தங்கையின் புகுந்த வீட்டவரிடம் பொதுவாக கூறுவது போல..

“செந்தாழினிக்கு கல்யாணம் முடிவு ஆகி இருக்காம்.. அது தான் பத்திரிக்கை வைக்க அங்கு என் வீட்டிற்க்கு வந்து இருக்கான்.. வீடு பூட்டி இருக்கவும் எனக்கு போன் போட்டு இருக்கான்..” என்றதுமே.

வித்யாவின் மாமியாரும் சங்கரியின் மாமியாருமே.. “அது யாருடி ஏமாந்த சோனகிரி…” என்று ஒரு மாதிரியாக கேட்டவர். பின்..

“அவள் மட்டும் ஒழுங்கா இருந்து இருந்தா நமக்கு இந்த நிலமை வந்து இருக்குமா..? உங்க அம்மா வீட்டு போஷியால இப்போ இப்படி ஆச்சி.?” என்று இதற்க்குமே செந்தாழினி தான் காரணம் என்பது போல சொன்னவர்..

எத்தனை வயது ஆனாலும்.. திருமணம் முடிந்து எத்தனை நாள் எத்தனை ஆண்டுகள் கடந்தாலுமே, மருமகள்களின் தாய் வீட்டை குத்தம் சொல்ல மட்டும் இந்த மாமியார்கள் தயங்குவதே கிடையாது..

ஆனால் எப்போதுமே அதை ஒரு பிரச்சனையாக்கும் வித்யா இன்று எதுவும் பேசவில்லை. .மீண்டுமே யோசனையாகவே அமர்ந்து விட்டாள்..

மீண்டும் சங்கரி தான்.. “என்னக்கா என்ன யோசனை… உன் மருமகளுக்கு விவாகரத்து கொடுக்குறது பத்தி யோசிச்சிட்டு இருக்கியா…? அதை பத்தி யோசிக்கிறியா..?” என்று தங்கை கேட்டதுமே.

“அவள் என்ன என் மகனுக்கு டைவஸ் கொடுக்குறது. நான் கொடுக்குறேன் அவளுக்கு டைவஸ்..” என்று கோபமாக பேசியவளின் பேச்சில் இடையிட்டு அவளின் மகன்..வித்தார்த்…

“ம்மா நான் தான்மா டைவஸ் கொடுக்கனும்..” என்று சொன்ன மகனையுமே வித்யா விட்டு விடவில்லை

“இப்போ வாய் கிழிய பேசு..கல்யாணத்துக்கு முன்ன அவள் கிட்ட பேசுன தானே.. இரண்டு மூன்று முறை கூட வெளியில் கூட்டிட்டு போனியே. அப்போ என்ன தான்டா அவள் கிட்ட பேசுன… ஒன்னும் இல்லாது பம்பரா தான் இருந்து இருக்காங்க.. வீட்டை பார்த்து நாங்க தான் ஏமாந்து போனோம் . நீ அவள் கிட்ட பேசின தானே…” என்று தன் மொத்த கோபத்தையும் இப்போது தன் மகன் மீது காட்டினாள் வித்யா..

வித்தார்த் என்ன என்று சொல்லுவான். அவன் அவளிடம் பேசிய பேச்சுக்கள் எல்லாம் ஒரு தாயிடம் சொல்ல கூடியதா..? அதனால் அமைதி காக்க..

சங்கரியின் மாமியார் தான்.. “சரி விடு வித்யா.. இங்கு கூட என்ன வாழுந்துச்சி.. உன் மவனாவது பணத்தில் மட்டும் தான் ஏமாந்தான்.. ஆனால் என் பேரன்.. “ என்றவரின் பேச்சில் வித்யா அமைதியாக.

மீண்டுமே சங்கரி ..” வேலவன் மட்டும் வரானா இல்ல அண்ணன் அண்ணியும் வராங்கலா…?” என்று கேட்ட தங்கையிடமும் அதே எரிச்சலுடன்..

“கொஞ்சம் அமைதியாவே இருக்க மாட்டியாடி நீ… இவள் ஒருத்தி தொன தொன என்று.. எனக்கு மட்டும் என்ன தெரியும்.. நானுமே உன்னை போல தானே உன் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கேன்.. வேலவன் போன் செய்தான். வரட்டும் யாரு யாரு வராங்க என்று பார்க்கலாம். ஆனா யாரு வந்தாலுமே நம்ம வீட்டு விசயத்தை சொல்ல கூடாது.” தன் குடும்பம் மட்டும் அல்லாது தங்கையின் குடும்பத்தையுமே கட்டுப்படுத்தியவரின் முகத்தில் மீண்டுமே யோசனை தத்து எடுத்து கொண்டது.

பின் சிறிது யோசனைக்கு பின் வித்யாவின் பேச்சு தங்கையிடம் இருந்தாலுமே அங்கு இருப்பவர்கள் கேட்பது போல் தான்..

“நாம அவசரப்பட்டுட்டோம் என்று நினைக்கிறேன் சங்கரி… தப்பு செய்தவ இப்படியா தானே சொல்லுவா. அப்படி தப்பு செய்யனும் என்று இருந்தால், யாருக்குமே தெரியாம தானே செய்வாங்க.” என்று செந்தாழினியின் பற்றி சொன்ன வித்யாவையே தான் அனைவரும் பார்த்து கொண்டு இருந்தனர்..

மேலும் அதை பற்றி பேசுவதற்க்குள் வேலவ பாண்டியன் தன் மனைவியுடன் அங்கு வந்தான். வித்யா சொன்னது போல தான் சும்மா தான் இங்கு வந்து இருப்பது போல. வித்யா..

“சங்கரி வீட்டிற்க்கு வந்து ரொம்ப நாள் ஆகுது.. அது தான் வந்தேன்.. நீ இன்னைக்கு வரேன்னு சொல்லி இருந்தா நான் இங்கு வந்து இருக்க மாட்டேன்..” என்ற வித்யாவின் பேச்சுக்கு வேலவ பாண்டியனிடம் இருந்து.

பரவாயில்லை என்பது போல ஒரு வார்த்தை இல்லை அமைதியாகவே தன் மனைவியிடம் கண் காட்ட. இரண்டு பெரிய வெள்ளி தட்டு அந்த இரண்டு தட்டிலுமே நிறைய நிறைய பழங்கள் இனிப்பு வகைகள் அதன் மேல் ஆளுக்கு ஒரு லட்சம் போல பணத்தை வைத்து முதலில் வித்யாவின் மாமியார் இடம் ஒரு தட்டை மனைவியுடன் கொடுத்த வேலவ பாண்டியன். பின் சங்கரியின் மாமியார் மையில் இன்னொரு தட்டை கொடுத்த பின்.. தன் கடமை முடிந்தது என்று..

“அப்போ நாங்க கிளம்புறோம்..” என்று சொல்லி தன் இருக்கையில் இருந்து எழுந்து கூட விட்டான்.

இத்தனை நேரமும் இரண்டு குடும்பமும் அந்த வெள்ளி தட்டையும்.. அதில் இருந்த பழங்கள் பணத்தையே பார்த்து கொண்டு இருந்தவர்கள் வேலவ பாண்டியன் கிளம்புகிறேன் என்று சொன்னதுமே..

சங்கரியின் மாமியார்.. “என்னப்பா இது பத்திரிக்கை வெச்சிட்டு சும்மா போவாங்கலா சாப்பிட்டு தான் போகனும்.. எல்லாம் முறையா செய்தவனுக்கு… நாங்களுமே முறையா தானே செய்யனும்..” என்று சொன்னவர்..

துணைக்கு தன் மருமகள்.. மருமகளின் அவளின் அக்காவையும் துணைக்கு அழைத்து கொண்டவராக.

“உங்க அம்மா வீட்டில் இருந்து வந்தவங்களை கவனிக்க மாட்டிங்கலா. அது கூட நான் தான் சொல்லனுமா. பார் சின்ன பையன் என்னம்மா முறையா செய்யிறான்..” என்று வேலவ பாண்டியனை ஏத்தி சொல்ல.

இப்போது ஏற்றுவது பின்னால் இறக்குவதற்க்கு தான் என்று சரியாக புரிந்து வைத்து இருந்த வேலவ பாண்டியனோ..

“நான் இதுல ஒன்னுமே வாங்கல .. என் அப்பா தான் வாங்கி காரில் வைத்தார் ..நான் உங்க கிட்ட கொடுத்துட்டேன் .. அவ்வளவு தான்..” என்று சொன்னவள் கிளம்புவதிலேயே தான் குறியாக இருந்தான்.

ஆனால் சங்கரியின் மாமியார் விடாது.. “ உன் சின்ன அத்தை தோசை சுட போயிட்டா. தோசையாவது சாப்பிட்டு தான் போகனும்..” என்றதும்.. வேலவ பாண்டியன் மறுக்க முடியாது ஒரு வித சங்கடத்துடன் தான் அமர்ந்தான்.

செண்பகத்திற்க்கோ இப்போது தான் அப்பாடா என்று ஆனது.. இத்தனை கஷ்டப்பட்டு இங்கு வந்ததிற்க்கு பலன் இல்லாது போய் விடுமோ என்று நினைத்தாலுமே, கணவனிடம் கொஞ்சம் நேரம் இருந்து விட்டு செல்லலாம் என்று கூட வாய் திறந்து சொல்ல முடியவில்லை..

அது தான் அங்கு ஏதாவது பேசினா எனக்கு பெண் பார்த்து கொள்ளுவேன் என்று விட்டாரே… செய்யும் மனுஷன் தான்.. என்று மனதில் இடித்தும் கொண்டவளுக்கு என்ன செய்வது என்று யோசித்தவளின் மனதில் பாலை வார்த்து விட்டார் சங்கரியின் மாமியார்.

தங்கைக்கு துணையாக வித்யாவுமே பொதுவாக என்ன செய்யிறா என்று பார்த்துட்டு வரேன் என்று சொன்னவள் சமையல் அறைக்கு செல்லும் முன் செண்பகாவையே ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றாள்..செண்பகாவுமே அந்த பார்வையை கவனித்து விட்டாள்..

பாம்பின் கால் பாம்பு தான் அறியும் என்று சொல்லுவார்கள்.. அது போல தான் வித்யாவுக்கு செண்பகா ஏதோ தங்களிடம் பேச முயல்கிறது என்பது அவளின் நடவடிக்கையை வைத்து தெரிந்து கொண்டு விட்டாள்.

அதோடு முன் எல்லாம் முன் என்றால் செந்தாழினி பிரச்சனை வரும் முன்.. வித்யாவின் இரு அண்ணிகளையும் பற்றிய அனைத்து விசயங்களுமே செண்பகாவின் மூலம் தான் இவர்களுக்கு தெரியவரும். அவர்களுக்கு என்று அவர்கள் நகை கடையில் பிரத்தியோகமாக டிசைன் செய்த நகைகளில் இருந்து பட்டு புடவை வரை.. சென்ற முறைக்கும் இந்த முறை தாங்கள் வந்த இந்த இடைப்பட்ட நாட்களில் எத்தனை என்ன என்ன வாங்கியது என்று சொல்லி விடுவாள்..

பின் ஒரு சில பேச்சுக்களான செண்பகா மாமியார் பற்றி குறை சொல்வது வித்யா சங்கரி அண்ணிகளாக இவர்களுக்கு இருக்கும் உரிமை வீட்டு பெண்களான எங்களுக்கும் இருக்கு தானே… அந்த நகை இரண்டுக்கு பதிலா நாளா தான் செய்தா என்னவாம் என்று சொல்ல..

இதற்க்கு ஒரு முறை செண்பகா. “ ஆமாம் ஆமா செந்தாழினியை அத்தனை தாங்குறாங்க.. விட்டா சொத்து முழுவதுமே அவளுக்கு கொடுத்து விடுவாங்க போல..” என்று இந்த பேச்சுக்கு மட்டும் அப்போது வித்யாவிடம் இருந்து செண்பகாவுக்கு கண்டன பார்வையோடு பேச்சும் கிடைத்தது..

“தோ பாருடியம்மா.. என் மருமகள் செந்தாழினிக்கு அடுத்து தான் எல்லாம்… இது மட்டும் என் இரண்டு அண்ணனுங்க காதில் விழுந்தது அவ்வளவு தான். கொஞ்சம் பார்த்து பேசுங்க.. என்ன புரியுதா..?”

செந்தாழினியை தங்கள் வீட்டிற்க்கு மருமகளாக எடுத்து கொள்வதாக தான் நினைத்து கொண்டு இருந்த காலம் அது..

அதில் இருந்து செந்தாழினியை பற்றி செண்பகா பேசியது கிடையாது.

அதனால் அங்கு என்னவோ நடந்து இருக்கு.. அதை சொல்ல தான் நினைக்கிறாள் என்று வித்யா செண்பகாவை பற்றி சரியாக யூகித்து கொண்டவளாக கண்ணை காட்டி விட்டு சென்றார்..

அதை சரியாக புரிந்து கொண்ட செண்பகாவ தான் இந்த அம்மா வயசு பையனுங்க பெண்ணுக்கு கண்ணை காட்டுவது போல காட்டிட்டு போயிடுச்சி.. நான் என் புருஷன் கிட்ட என்ன என்று சொல்லிட்டு அந்த அம்மா பின்னாடி போவதாம்..

என்ன சொல்லி விட்டு செல்வது என்று செண்பகா யோசித்து கொண்டு இருந்த போது தான் சமையல் கூடத்தில் இருந்து வித்யா..

“செண்பா இங்கே வாம்மா..” என்று அழைக்கும் குரல் கேட்டது.. இது தான் சமயம் இதை விட்டால், வித்யா சங்கரியுடன் தனித்து பேச முடியாது என்ற முடிவில் கணவனை திரும்பி பார்த்தால், எங்கு போகாது தடை செய்து விடுவானோ என்று அவனை திரும்பி கூட பாராது..

“தோ சித்தி ..” என்று குரல் கொடுத்து கொண்டே சமையல் அறைக்குள் புகுந்து கொண்டு விட்டாள்..

இந்த வீட்டின் சமையல் கட்டு.. கடைசியில் தான் உள்ளது.. அதாவது கூடத்திற்க்கும் சமையல் கட்டிற்க்கும் கொஞ்சம் தூரமாக..

பக்கம் பக்கம் இருந்தாலுமே, பெண்கள் ரகசியம் பேச வேண்டும் என்று நினைத்து விட்டால், காதுக்குள் வாய் வைத்தாவது சொல்ல வேண்டியதை சொல்லி விடுவார்கள் எனும் போது.. இங்கோ கடைசியில் உள்ளது..

சென்று மறைந்த மனைவியின் முதுகை வேலவ பாண்டியனால் முறைக்க மட்டும் தான் முடிந்தது..

அந்த முறைப்பை கூட முழுவதும் கொடுக்க முடியாது சங்கரியின் மாமியாரும் வித்யாவின் மாமியாரும்..

“அப்புறம் தம்பி மாப்பிள்ளை என்ன செய்யிறார்..” என்ற பேச்சை இங்கு ஆரம்பித்து வைக்க.

சமையல் கட்டிலோ… வித்யா.. “ என்ன சங்கதி செண்பகா… வந்ததில் இருந்து ஆடு திருடன் கள்ளன் போல திரு திருன்னு முழிச்சிட்டு உட்கார்ந்துட்டு இருந்த..” என்ற இந்த பேச்சில் சங்கரியும் சிரித்து விட…

செண்பகாவோ.. இந்த கிழவிகளுக்கு குசும்பை பாரேன்.. இரண்டு மருமகளுங்களுமே வாழாது ஒடி போய் விட்டும் இதுங்க கொழுப்பு குறையல பாரேன்.. என்று மனதில் இரண்டு பேரையும் திட்டிக் கொண்டு இருந்தாலுமே, வெளியில் வெள்ளந்தியாக ஒரு சிரிப்பை கொடுத்த செண்பகா..

பின் பாவமான ஒரு முக பாவனை காட்டியவள்… “ இல்ல சித்தி.. நான் ஒரு விசயம் தப்பா கேள்வி பட்டுட்டேன் போல… அது தான் திரு திரு என்று என் முழி மாறிடுச்சி..” என்று பாவம் போல முகத்தை வைத்து கொண்டு செண்பகா சொன்னாள்..

இப்போது சங்கரியும் வித்யாவும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டனர்.. சங்கரி தான் பதட்டத்துடன்..

“என்ன கேள்வி பட்ட.? என்ன கேள்வி பட்ட..?” என்று கேட்டாள்.. ஆனால் வித்யாவோ எதுவும் கேட்காது செண்பகாவையே ஆராய்ச்சி பார்வை பார்த்து கொண்டு இருந்தாள்..

செண்பகாவுமே.. “ அது எல்லாம் ஒன்னும் இல்ல சித்திம்மா. நான் கேள்வி பட்டது பொய்யா தான் இருக்கும்.., உண்மையா இருந்து இருந்தால் நீங்கள் இப்படி சாதாரணமா இருக்க முடியுமா என்ன…?” என்று விசயம் என்ன என்று சொல்லாமலேயே இருவரையும் பதட்டப்படுத்திக் கொண்டு இருந்த செண்பகா.

“ஊருக்கு போனதும் என் சித்திக்கு இருக்கு சங்கதி… அவங்க பொண்ணு சொன்னது என்று சொன்ன விசயத்தை சொல்லி ஏன் இப்படி வதந்தியை பரப்பி விடுறிங்க என்று கேட்கிறேன்.. அவன் புருஷன் லாயரா இருந்தா.. ஒரே பேர் இருந்து டைவஸ் நோட்டிஸ்அனுப்பினா… அது எங்க வீட்டு மருமகள் தான் எப்படி சொல்லுவாங்க. இதை நான் சும்மா விட போவது இல்ல.” என்று ஆவேசம் போல பேசியவளின் பேச்சை..

நீ நிறுத்து என்பது போல வித்யா செய்த சைகையில் தான் செண்பகா தன் பேச்சை நிறுத்தியது..

“விசயம் உனக்கு தெரியும் போல. நீ கேள்வி பட்டது எல்லாம் சரி தான். இப்போ நீ என்ன விசயத்துக்கு இங்கு வந்த அதை முதல்ல சொல்லு.” என்ற பேச்சில் செண்பகா சிரித்து விட்டாள்..

இருவரின் பேச்சு முறையும் உன்னை பத்தி எனக்கு தெரியும்.. என்னை பத்தி உனக்கு தெரியும்.. என்பது போல தான் இருந்தது.. ஆனால் அடுத்து ஒரு டையலாக் வரும்.. நம்மை பத்தி இந்த ஊருக்கே தெரியும் என்று.. ஊருக்கு இல்லை என்றாலும் குறைந்த பட்சம் இவங்க குடும்பத்திற்க்கு மட்டுமாவது தெரியப்பபோவது உறுதி தான்..

செண்பகாவும் நேரம் இல்லை சொல்ல வேண்டியதை சொல்ல ஆரம்பித்து விட்டாள்..

“செந்தாழினிக்கு கல்யாணம்..” என்றதுமே.

அதுக்கு தானேடி பத்திரிக்கை வைக்க வந்து இருக்க. என்று சங்கரி இடையில் சொல்ல.. இப்போது இருவருமே அவளை முறைத்து பார்த்தனர்..

செண்பகா தொடர்ந்து.. “செந்தாழினிக்கு அந்த மாப்பிள்ளையை ரொம்ப பிடித்து இருக்குன்னு தான் எனக்கு தோனுது..” என்று சொன்னவள் பின் மகிபாலன் பற்றிய அனைத்து விவரங்களை கூறியதோடு மட்டும் அல்லாது அவனுக்கு செலவு வைக்காது குறைந்த விலையில் எடுத்த பட்டு புடவை முதல் கொண்டு சொன்னவள் பின் அவளுக்கு எழுதி கொடுக்க வேண்டிய சொத்தை கூறிய உடனே சங்கரி வித்யாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டு போக.. கடைசியாக செண்பகா சொல்லி முடித்த. எழுதி வைத்து விட்ட சொத்தான தங்க நகை கடையையும் சேர்த்து சொன்னதில் இருவரும் ஒரு சேர என்னது..” என்று வாய் மீது கை வைத்து கொள்ளவும் அந்த இடத்திற்க்கு வேலவ பாண்டியன் வரவும் சரியாக இருந்தது.


 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
செண்பகம் உன் சகுனி வேலை செஞ்சு முடிச்சிட்டியா 🥶🥶🥶🥶

பாட்டி அவங்க சொத்தை அவங்க விருப்பத்தின் பேரில் பேத்தி மேல் எழுதி வச்சிருக்காங்க இதுல உங்களுக்கு என்ன வந்தது 😡😡😡😡😡😡😡😡😨

விதார்த் அம்மா சொல்றதுக்கு எல்லாம் மண்டைய ஆட்டாமல் பொண்டாட்டிய சமாதான படுத்த வழியை பாரு 🤧 🤧 🤧 🤧 🤧
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
செண்பகம் சரியா பத்த வச்சுட்டா எப்படி வெடிக்க போகுதோ தெரியல 😟😟😟

வித்யா செந்தா தப்பு பண்ணிருப்பாளா ன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க... சொத்துக்காக திரும்பவும் அவளை மருமகளாக்கா யோசிக்கலாம்...
 
Active member
Joined
May 11, 2024
Messages
123
அவள் வந்த வேலையை சிறப்பாக செய்துட்டா சொத்து பத்தி கொளுத்தி போட்டுட்டா அது எப்படி பத்திக்க போகுதோ இல்ல நீர்த்து போகுதோ 🤔🤔🤔🤔🌺🌺🌺
 
Top