Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kambathu Ponnu....1

  • Thread Author
அத்தியாயம்…1 ( part 2)

உதயேந்திரன் தன் அக்கா மக்கள் சொன்ன முகவரியில் இறக்கி ட்ரைவருக்கு கூட பணம் தராது தனக்கு சொந்தமான அந்த கெஸ்ட் அவுசில் முதன் முதலாய் சென்றான்.

அவன் கண்ணுக்கு அந்த பங்களாவின் அழகோ...அதை சுற்றி செயற்கையாய் அமைத்திருந்த அழகோ கண்ணுக்கு தெரியவில்லை.

ஏனோ காரை விட்டு இறங்கியதும், உதயனின் இதயம் தன்னால் அளவுக்கு அதிகமாய் அடித்துக் கொண்டது. இது வரை இது போல் அவன் உணர்ந்தது இல்லை. இது நல்லதற்க்கா…? இல்லை கெட்டதற்க்கா…? அவனாலேயே அதை உணர முடியவில்லை.

ஆனால் கார் நின்றதும் காசை கூட கொடுக்காது சீக்கிரம் போக வேண்டும். அது மட்டுமே அவன் மனது அடித்து சொன்னது. அவன் மனது அவனுக்கு பொய் உரைக்கவில்லை என்பதை அங்கு தன்னவளை பார்த்த உடன் உணர்ந்துக் கொண்டான்.

ஆம் கிருஷ்ணவேணி தன்னவள் தான். அதை இப்போது பகிரங்கமாய் ஒப்புக் கொள்வான். இது வரை காய் மறைவாய் என்ன இந்த உணர்வு என்று அவனுக்குள்ளேயே ஆடிய கண்ணா மூச்சி ஆட்டத்திக்கு, இன்று இப்போது அந்த கயவர்கள் சூழ கிருஷ்ணாவை பார்த்ததும் உணந்துக் கொண்டான். இவள் தன்னவள் தனக்கானவள் மட்டுமே...என்பதை.

அதுவும் அவள் இருந்த நிலை. அவள் சுடி கொஞ்சம் மேல் தூக்கி அவளின் இடுப்பு பகுதி கொஞ்சம் கொஞ்சமே தான் தெரிந்தது. இடுப்பு என்ன…? பெண்களி அனைத்து பகுதியும் பார்த்தவன் தான் அவன்.

ஆனால் தன்னவளின் ஒரு சிறு பகுதி கூட மற்றவன் பார்க்கும் படி அவள் இருந்த கோலத்தை பார்த்து கதவை விரித்து ஓடி வந்தவன் அடுத்த அடி எடுத்து வைக்காது ஆணி அடித்தது போல் அப்படியே நின்று விட்டான்.

படுத்திருந்த வேணிக்கோ காலடி ஓசையில் யாரோ புதியதாக வந்திருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது. ஆம் இப்போதும் அவளால் உணர மட்டும் தான் முடிந்தது. தெளிவாக பார்க்க முடியவில்லை.

புதியதாய் வந்தவர்களின் உணர முடிந்தவளுக்கோ..யார்…? அவர்கள் ஆளா…? இருக்கும் நிலையில் இவர்களிடம் இருந்து தப்பிப்பதே முடியாத காரியம் புதியதாய் ஒருவன் என்றால்… அதற்க்கு அடுத்து அவளால் யோசிக்க கூட முடியவில்லை.

அவளின் பயத்தை போக்கும் வகையாய்… “ யார் டா நீ…?” அந்த கள்வனின் குரல் கேட்டு வேணிக்கு கொஞ்சம் ஆசுவாசம் கிட்டியது. வந்தவன் இவர்கள் ஆள் கிடையாது.

கூடவே கொஞ்சம் பர பரப்பும். பவித்ரனா…? என்று. அவளுக்கு தன்னோடு பவித்ரனையும் கட்த்தி இருப்பார்கள் என்று தெரியாது அல்லவா..? அதனால் தன்னை காப்பாற்ற தன் நண்பன் வந்து விட்டான் என்று மகிழ்ந்தாலும் கூடவே இத்தனை பேரை பவித்ரன் சமாளித்து விடுவானா…? யோசிக்கும் வேளயில்

“அவனை வெளியில் தள்ளுடா…” என்ற கயவனின் குரலுக்கு பதில் இல்லாது அடுத்து அடுத்து அந்த அறையில் பல பேரின் காலடி சத்தம் வேணிக்கு கேட்டதும் மகிழ்ந்து தான் போனாள்.

“ ஏய் யாருடா நீங்க யார்…?” அந்த ஓசை மட்டும் தான் கடைசியாக வேணியின் காதுக்கு எட்டியது.

வேணி முந்திய தினம் மதியம் உண்ணது. **** அந்த மாலில் இருக்கும் பிக்பஸார், லைப்ஸ்டைலில் ஆபர் போட்டு இருக்காங்க என்று பவித்ரனின் நண்பன் சொன்னதும், வேணியிடம்…

“ உனக்கு ட்ரஸ் ஏதாவது வாங்கலாம் வா. போட்டதையே மாத்தி மாத்தி போட்டுட்டு இருக்க.” என்று சொல்லி பவித்ரன் தான் வேணியை வம்படியாய் அந்த மாலுக்கு அழைத்து சென்றது.

அந்த மாலுக்கு சென்ற உடனே… “ பவி ஏதாவது சாப்பிடலாம்.” தன் வயிற்றை தடவி சொன்னதும். அவள் தலையில் தட்டிய பவித்ரன்…

“ சென்னை வந்து கொஞ்சம் உடம்பு ஏறிட்டே கொஞ்சம் குறை.” என்று சொல்லி சாப்பிடும் இடத்துக்கு அழைத்து செல்ல..

“ எனக்கு ஒன்னும் வேண்டாம் போ…” கோபித்துக் கொண்டவளின் கோபம் எத்தனை நிமிடம் என்று தான் அவனுக்கு தெரியுமே..

அதனால் சிரித்துக் கொண்டே… “ வேண்டாம்மா. அப்போ சரி தான்.” என்று பவித்ரன் சொன்னது.

‘ பக்கி கோச்சிக்கினா சமாதானப்படுத்தனும் என்று தெரியுதா பாரு.’ வேணி பவித்ரனை மனதில் திட்டிக் கொண்டு இருக்கும் வேளயில் தான்…

பவித்ரனின் நண்பன் கை பேசியில் அவனுக்கு அழைப்பு விடுத்தான். வேணி பக்கம் இருந்தால் எப்போதும் பவித்ரன் தன் பேசியை ஸ்பீக்கரில் தான் போடுவான்.

அந்த வழக்கத்தில் அன்றும் பவித்ரன் பேசியை ஸ்பீக்கரில் போட்டு அந்த பக்கம் நண்பன் சொன்ன…. “ நீ **** மாலுக்கு போறேன் சொன்னியே போக போறியா…?” என்று கேட்டதற்க்கு…

வேணியை பார்த்துக் கொண்டே… “ நாங்க அங்கு தான் இருக்கேன்.” என்ற பவித்ரனின் பதிலில்..

பவித்ரன் சொன்ன பன்மை சொல்லான நாங்க என்ற வார்த்தையை பிடித்துக் கொண்டு…. “ நாங்கன்னா யார் கூட போய் இருக்க …?” என்ற நண்பனின் கேள்விக்கு பதில் அளிக்காது அமைதி காத்தான்.

பவித்ரனுக்கு நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ளும் படி ஒரு சிலர் மட்டுமே...அவர்களிடம் கூட வேணியை பற்றி அதிகம் பேச மாட்டான் என்பதை விட, பேசவே மாட்டான் என்பது தான் உண்மை.

அதனால் பதில் அளிக்காது இருக்க… “ சரி. சரி. யார் கூட போய் இருக்கேன்னு எனக்கு தெரிய வேண்டாம். அந்த மாலில் இருக்கும் தியேட்டரில் நானும் என் பிரண்டும் கைதி படம் பார்க்க நேத்து ஆன்லைனில் புக் பண்ணேன். இன்னிக்கி பார்த்து என் அம்மா ஊரில் இருந்து கிளம்பிட்டதா போன் போடுறாங்க.

அது தான் உன் போனுக்கு அதை பார்வேட் செய்யிறேன் நீயாவது பார்ப்பேன்.” என்று அந்த நண்பன் சொல்லி முடிக்கவில்லை.

இந்த பக்கத்தில் இருந்து இந்த உரையாடலை கேட்டுக் கொண்டு இருந்த வேணி.. “ கைதியா …? பவி பவி போகலாம்டா…” என்று சொல்ல..

பேசியில் தொடர்பில் இருந்த அந்த நண்பன்… “ சரிடா மச்சான் புக்கிங்கை உன் போனுக்கு பார்வேட் செய்யிறேன் தங்கச்சி கூட என்ஜாய் பண்ணு.” என்று சொல்லி அந்த நண்பன் போனை அணைத்து விட்டான்.

பேசியில் இதை கேட்டுக் கொண்டு இருந்த பவித்ரனுக்கோ அவன் சொன்ன மச்சான் தங்கச்சி என்ஜாய் என்ற வார்த்தையை கேட்டு கோபம் கண்ணா பிண்ணா என்று எகிறியது.

“ ஏய் லூசு பேசிட்டு இருக்கும் போது இப்படி தான் பேசுவியா…? அவன் பார் தப்பு தப்பா பேசுறான்.”

பவித்ரனுக்கும், வேணிக்கு தான் திருமணம் செய்வதாய் வீட்டில் பேச்சு வார்த்தை நடக்கிறது. அது அவனுக்கும் தெரியும். வேணிக்கும் தெரியும். இருவரும் அதை ஆதாரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை.

வேணி என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறாளோ...ஆனால் வேணியை திருமணம் செய்வதில் பவித்ரனுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை.

ஆனால் இது போல் பேச்சு. அதாவது தன்னையும், வேணியையும் இணைத்து பேசும் போது என்னவோ போல் ஆகிவிடுகிறது. அந்த என்னவோ என்ன…? என்பது தான் பவித்ரனுக்கு தெரியவில்லை.

ஆனால் இந்த பேச்சு பிடித்தம் இல்லை என்பதை மட்டும் அவனால் உணரமுடிகிறது. இருந்தும் நான் வேணியை தான் திருமணம் செய்துக் கொள்வேன். நான் தான். என்னால் மட்டும் தான் அவளை நன்றாஅக பார்த்துக் கொள்ள முடியும்.

அவள் இல்லாமல் நான் கூட இருந்து விடுவேன். ஆனால் நான் இல்லாமல் அவளாள் இருக்க முடியாது. அனைத்துக்கும் அவளுக்கு நான் தேவையாக இருக்கும் போது...அந்த அனைத்திலும் திருமண வாழ்க்கையும் அடங்கட்டுமே… இப்போது எல்லாம் பவித்ரனின் எண்ணம் இதுவாக தான் இருந்தது.

அப்படி இருந்தும் இந்த பேச்சு அவன் மனதில் ஏதோ ஒரு ஒவ்வாமையை கொடுக்க தான் செய்தது. அந்த எரிச்சலில் வேணியை கத்தி விட்டான்.

ஏற்கனவே கோபத்தில் இருந்த வேணிக்கு பவித்ரனின் இந்த பேச்சு மேலும் கோபத்தை கூட்ட...

“ சரி வா பசிக்குதுன்னு சொன்னியே சாப்பிட்டு படத்துக்கு போக சரியா இருக்கும்.” என்று பவித்ரன் சாப்பிட அழைத்தும்… “ எனக்கு வேண்டாம் போ.” என்று வேணி முறுக்கிக் கொண்டாள்.

“அப்போ படமும் வேண்டாமா…?” என்று கேட்டதற்க்கு…

“ நான் சாப்பிட தான் வேண்டாம் என்றேன். படத்துக்கு இல்ல. அதுவும் இல்லாம படத்துக்கு நீயா காசு செலவு பண்ற…? உன் பிரண்டடோ காசு தானே…”

“ அப்போ ட்ரஸ்…?”

“ அதுவும் வேண்டாம்.” என்று முறுக்கி கொண்டதில் சரி தியேட்டரில் அவளை உட்கார வைத்து விட்டு நாம் ஸ்நாக்ஸ் ஏதாவது வாங்கிக் கொள்ளலாம் என்று யோசனையில் எதுவும் சாப்பிட வைக்காமல் அழைத்து சென்று விட்டான்.

இவர்கள் போய் அவர்கள் இருக்கையை பார்த்து அமரவும் படம் ஆரம்பிக்கவும் சரியாக இருந்ததால், சாப்பிட வாங்கி வர நேரம் இல்லாது பவித்ரன் அப்படியே அமர்ந்து விட்டான்.

இடைவேளையில் பவித்ரன் எழும் போது பக்கத்து இருக்கையில் இருப்பவரின் பார்வை பார்த்து… “ வேண்டாம்.” என்று வேணி சொன்ன விதத்திலும், பார்த்த பார்வையிலும், பவித்ரன் அப்படியே அமர்ந்து விட்டான்.

பின் படம் பார்த்து ஏதாவது நல்ல ஓட்டல் கிடைக்கிறதா…? என்று பார்த்த சமயத்தில் தான் இந்த கடத்தல் சம்பவம் நடந்து முடிந்தது.

சாப்பிடாததில், பின் அவர்கள் மயக்கம் அடைய வைத்ததில், மனம் பயத்தில், இவை மூன்றும் சேர்ந்து அவளை மயக்க நிலைக்கு தள்ளியது.

வேணி கடைசியாக தலையை மேல் நோக்கி பார்க்கும் போது தான், தன்னால் தலை கீழ் நோக்கி தள்ள அப்படியே மீண்டும் சரிந்தாள்.

அந்த அறையில் வந்ததில் இருந்து உதயேந்திரனின் பார்வை அந்த கயவர்கள் மீது இருந்ததை விட, வேணியின் மீதே இருந்ததால் அவள் மயக்க நிலைக்கு தள்ளப்படுவதை பார்த்து…

“ கிருஷ்ணா…” என்று கத்திக் கொண்டு அவள் அருகில் செல்லும் போது அந்த கயவன் உதயனை வேணியின் அருகில் செல்வதை தடுக்க பார்த்தான்.

இவ்வளவு நேரமும் வேணி எங்கு இருக்கிறாள்…? எந்த நிலையில் இருக்கிறாள்…? என்ற பயத்திலேயே இருந்த உதயன், இப்போது அவளை பார்த்து விட்டதில் அவன் மனதில் ஒரு தெளிவு வந்ததிலும், பார்த்த நிலையை பார்த்து பழைய உதயனாய் திடமாய் அந்த கயவனை ஒரே தள்ளாய் தள்ளி விட்டான்.

அதை பார்த்த மற்றொருவன் உதயனை அடிக்க வர, அந்த கயவனையாவது உதயன் தன் பலம் கொண்டு தள்ளினான். இவனை தன் காலிலேயே அவன் உயிர் நாடியை குறி பார்த்து அடித்ததில்,அப்படியே அந்த இடத்தை பிடித்துக் கொண்டு துடி துடித்து விட்டான்.

பின் கடத்தியவர்களில் மீதம் இருவரை, உதய் காருக்கு காசு கொடுத்து விட்டு வராததால் அவன் பின் தொடர்ந்து வந்த ட்ரைவர் பார்த்துக் கொண்டான்.

கீர்த்தியும், க்ரீஷும், பக்கத்து அறையில் மயக்க நிலையில் இருந்த பவித்ரனை தெளிய வைத்துக் கொண்டு இருக்கும் வேளயில் இங்கு உதய் வேணியின் அருகில் சென்று..

அவள் கன்னத்தை பிடித்து …” கிருஷ்ணா... கிருஷ்ணா…” என்று தட்டியதில் ஏதோ ஒரு மாய லோகத்தில் இருந்து கண் விழிப்பது போல் கண் விழித்த வேணி, தன் முகத்துக்கு மிக அருகில் முகம் இருப்பதை பார்த்து…

அம்முகத்தை தொட தன் கை தூக்க பார்த்தாள். ஆனால் அது முடியாது போக தன் வெண்பற்களை காட்டி…” எ..னக்கு தெரியு..ம் நீ வ.ந்துடு..வேன் என்று.” சொன்னவள்.

பின் “ கொ..ஞ்சம் கிட்..ட வா…யேன்.” என்று திணறி சொல்ல...ஏன் எதற்க்கு என்று கேளாது உதய் அவள் முகத்துக்கு அருகில் இன்னும் நெருக்கத்தில் தன் முகத்தை கொண்டு போய் இருந்தான்.

“ உன் நெ..த்திய என் வா..ய் கிட்ட எ..டுத்துட்டு வா.” இப்போது உதயனுக்கு ஏதோ புரிவது போல் இருக்க, முகத்தில் வெளிச்சம் பரவ அவள் சொன்னதை உதயன் செய்தான்.

தன் உதட்டுக்கு மிக நெருக்கத்தில் உதயனின் நெற்றி நோக்கி தன் உதட்டை பதிக்க தன் தலை தூக்க முயன்றவளுக்கு முடியாது போக…

உதய் தன் கையை வேணியின் கழுத்துக்கு பின் பக்கம் கொண்டு சென்று...தன் நெற்றி நோக்கி தூக்க..

வேணி அவன் நெற்றியில் தன் முத்தத்தை வைத்து விட்டு… “ ரொம்ப மயந்துட்டேன்டா…” அரை மயக்க நிலையில் அவள் பேச…

உதயனோ பேசாது அவள் செய்த நெற்றி முத்தத்தை அவளுக்கே திருப்பி கொடுத்தவன் தன் கன்னத்தை அவள் உதட்டின் அருகில் கொண்டு சென்று நிறுத்தினான்.












 
Top