அத்தியாயம்….10
பெரியவர்களுக்கு தெரியாத நாசுக்கு சிறியவர்களுக்கு தெரிந்திருந்தது. தன் மாமனை இப்படி பேசவும், கீர்த்தி தன் தம்பி கைய் பற்றி முதல் தளத்தில் இருக்கும் தங்கள் அறைக்கு அழைத்து சென்று விட்டாள்.
எதோ ஒரு கோபத்தில் ஜெய்சக்தி பேசி விட்டாள். பேசிய பின் தான் பேசிய வார்த்தையின் அர்த்தத்தின் வீரியத்தில் பயந்து போய், தன் தந்தையை பார்த்தாள். அங்கு அடக்கப்பட்ட கோபத்தின் எதிரொலியாய் பரமேஸ்வரர் கண் சிவந்து இருந்தது என்றால், உதயேந்திரனின் முகமோ தாடை நரம்பு புடைத்தெழ இருப்பதிலேயே, உதய் பல்லை கடித்துக் கொண்டு தன்னை அடக்கிக் கொண்டு இருக்கிறான் என்பது ஜெய்சக்திக்கு விளங்கியது.
இனி தனக்கு இவன் தானே...இவனையே பகைத்துக் கொண்டால், மனதில் பயம் வந்து சூழ… “ உதய….” ஏதோ பேச வந்த ஜெய்சக்தியை தடுத்து நிறுத்தியவன், தன் சகோதரியை நேர்க் கொண்டு பார்த்த வாறு…
“ என் கூட இருந்தவங்க யாரும் அடுத்தவங்களுக்கு கமிட் மெண்ட் ஆகாதவங்க. நான் ஒன்னா இருந்தேன். கொஞ்ச நாள்ள பிடிக்கல. பேசினேன். அவளுக்கும் அதே தாட் தான், கை குலுக்கு பிரிஞ்சிட்டோம்.
அதே தான் மத்த பெண்களிடமும்...புதுசா ஒன்னு பிக்கப் செய்தேன்னு சொன்னியே...லவ் சொன்னா எனக்கு அதெல்லாம் செட்டாகாது. லிவிங் டூ கெதர்ன்னா ஒகேன்னு சொன்னேன். அதுக்கு அவளும் அக்செப்ட் பண்ணிட்டா…
அதுக்குள்ள மாமா இறந்துட்டாங்கன்னு இதோ இங்கு வந்துட்டேன். இங்கு வராம இருந்து இருந்தா, அவ கூட ஒரே வீட்டில் இருந்து இருக்கலாம், இல்லேன்னா நீ சொன்னியே ப்ரேக்கப் கூட ஆகி இருக்கலாம்.” எந்த வித தயக்கமும் இல்லாது இவை அனைத்தையும் பேச வைத்தது, உதயனின் ஜெர்மனியின் நாகரிகம்.
உதய் அத்தோடு விடாது… “ இதை நான் யார் எதிரிலும் சொல்லுவேன். எனக்கு எந்த பயமும் கிடையாது.” என்று சொல்லிக் கொண்டே கன்றி சிவத்திருந்த தன் தந்தையைய் பார்த்து பேசினான். அவன் பேச்சும் பார்வையும்,இவை அனைத்தையும் தந்தையின் எதிரிலேயே பேசுகிறேனே இதோடு உனக்கு என்ன வேண்டும்…? என்பது போல் இருந்தது.
“ உன்னால் இது போல் பேச முடியுமா…?” தந்தையிடம் இருந்து பார்வை திருப்பிக் கொண்டு தன் சகோதரியை பார்த்து உதய் கேட்டான்.
“ உதய்…” என்று கோபத்துடன் பரமேஸ்வரர் கத்தினார் என்றால்,
உதய்…” அழும் குரலில் ஜெய்சக்தி தம்பியின் பெயரை அழைத்தார்.
“ நான் இப்போ உங்களுக்கு சப்போட்டா இருக்கேன்னா...அதுக்கு காரணம் நம்ம S.P க்ரூப்பின் பெயர் எந்த சூழ்நிலையிலும் கெட்டு விட கூடாது என்றதாலும், தப்பே செய்யாத அந்த பிள்ளைகள் இதனால் பாதிக்கப்பட கூடாது என்பதாலும் தான்.” தன் மனதில் உள்ளதை யார் மனம் நோகுமோ என்று கூட பாராது கத்தி விட்டு தன் அறைக்கு சென்று விட்டான்.
உதயேந்திரன் சென்றதும்… “ அப்பா என்னப்பா அவன் இப்படி பேசிட்டு போறான். நீங்க அவன ஒன்னும் சொல்ல மாட்டிங்கலா…?” ஆதாங்கத்துடன் ஜெய்சக்தி கேட்டாள்.
“ என்ன பண்ண சொல்ற…? நீயே சொல்லு, இப்போ என்னை என்ன செய்ய சொல்ற…? பெரியவன் அந்த அளவுக்கு திறமை இல்லேன்னு தான் எல்லா பொறுப்பையும் உன் புருஷன் கிட்ட கொடுத்தேன்.
அவர் அதுக்கு கைய் மாறா, இதோ இது எல்லாம் செஞ்சிட்டு போயிட்டார். இப்போ என் நம்பிக்கையே உதய் தான். இப்போ உன்னால அவனையும் பகைச்சிட்டு என்னை என்ன செய்ய சொல்ற…?
எனக்கு என்ன வருசம் ஏற...ஏற வயசு ஏறுதுன்னு நினச்சியா…? இல்ல இறங்குதுன்னு நினச்சியா…? அதுவும் உன் புருஷன் செஞ்ச காரியத்தால, நம்ம குழுமத்துக்கு ஏகப்பட்ட பிரச்சனை வந்து இருக்கு. எல்லாம் அவன் தான் தீர்த்து வைக்கனும். இப்போ இந்த நேரத்துல அவனை பத்தி இந்த மாதிரி பேச்சி எல்லாம் தேவையா…?
இனி இந்த மாதிரி ஒருவருக்குள்ள ஒருவர் பேச்சி நம்ம குடும்பத்துக்குள்ள வரக்கூடாது. உன் புருஷன் செஞ்சி வைச்சதை தீர்த்து வைக்கவே இனி நமக்கு நேரம் சரியா இருக்க போகுது. எனக்கே இனி வேறு ஏதாவது புது பிரச்சனை வந்து விடுமோன்னு பயந்திட்டு இருக்கேன்.”
ஜெய்சக்தியை திட்டி விட்டு பரமேஸ்வரர் தன் அறைக்குள் சென்று விட, இவர்களின் சத்தத்துக்கு வெளியே வந்த கஜெந்திரனும் வாணியும்…
“ உன் புருஷன் செஞ்சதுக்கு காரியத்துல நீ வாய திறக்க கூடாது.” என்று கஜெந்திரன் சொல்ல...அதற்க்கு ஒத்து ஊதுவது போல் வாணியும்… “ உங்க தங்கையிடம் இப்போ பேசுன இந்த பேச்சை உங்க அப்பா இருபது வருஷம் முன்ன பேசி இருந்தா இந்த பிரச்சனையே வந்து இருக்காது.”
அண்ணியும், அண்ணனும் தன்னை திட்டி விட்டு திரும்பவும் தங்கள் அறைக்குள் நுழைந்ததை பார்த்த்தும் ஜெய்சக்திக்கு என்ன அடக்கியும் முடியாது கண்ணில் கண்ணீர் வர தன் கணவர் புகைப்படத்தின் அருகில் போய் நின்றவள்…
“ ஏங்க ஏங்க இப்படி செஞ்சிங்க….? நம்ம கல்யாணமே தப்பு என்பது போல் எல்லோரும் சொல்றாங்க. அது தாங்க என்னால தாங்க முடியலேங்க. நீங்க என்னை உண்மையா தானே லவ் பண்ணிங்க. பின்ன ஏன் இப்படி செஞ்சிட்டு போனிங்க…?”
சந்திரசேகர் உயிரோடு இருந்து இருந்தால், என்ன செய்து இருப்பாளோ...புகைப்படத்தின் முன் அவரை ஒன்றும் செய்ய முடியாது தன் ஆதாங்கத்தை கொட்ட தான் ஜெய்சக்தியால் முடிந்தது.
திரும்பவும் S.P குழுமத்தின் மீட்டிங் அன்று நடைப்பெற்றுக் கொண்டு இருந்தது. அந்த குழுமத்தில் முக்கிய லாபம் ஈட்டும் தொழில் என்றால் அது தலை முடியை வைத்து அழகுற செய்யும் டோப்பா ஆகும்.
மயி... கேவலமாக சொல்லும் அதை வைத்து தான் அந்த குழுமம் அதிகம் பணம் பார்ப்பது. உள்நாட்டில் மட்டும் அல்லாது வெளிநாட்டுக்கும் அதை ஏற்றுமதி செய்கிறார்கள்.
இன்று அந்த மீட்டிங்கில் எல்லா பங்குதாரர்களும் இடைபெறாது, முக்கியமான பெரிய தலைகள் மட்டும் கொண்ட மீட்டிங் நடைப்பெற்றது. அதில் கிருஷ்ண வேணி, பவித்ரனும் அடக்கம்.
அந்த குழுமத்தின் இது வரை வளர்ச்சி குறித்தும், இனி வளர என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும், ஆலோசனை நடத்திக் கொண்டு இருந்தனர்.
வயது முதிர்ந்தவர்கள் அந்த குழுமத்தில் இன்னும் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது வெள்ளை முடிக் கொண்டு செய்யும் தலை முடி டோப்பா அந்த அளவுக்கு விற்பனை ஆவது இல்லை.
கருப்பு முடிக் கொண்டு தயாரிக்கப்படும் தலை டோப்பாவே விற்பனை ஆகிறது. அதனால் வெள்ளை முடி டோப்பவின் தயாரிப்பை நிறுத்தி விடலாம்.
இனி வெள்ளை முடி வாங்க தேவையில்லை என்று ஒருமனதாய் முடிவு செய்த வேளயில்… வேணி எழுந்து நின்று… “ வெள்ளை முடி வாங்குவதை மொத்தமாக நிறுத்திட வேண்டாம். இப்போது வாங்குவதில் கால் பங்கு வாங்கலாம்.” என்று தன் கருத்தினை தெரியப்படுத்தினாள்.
அவள் கருத்து அங்கு இருந்த அனைவருக்கும் ஒரு வித அதிருப்தியே ஏற்படுத்தியது எனலாம். இவளுக்கு என்ன தெரியும்…? சின்ன பெண். நேத்து அடிச்ச காத்துல இங்கு வந்து உட்கார்ந்துட்டு இருக்கா.
மிஸ்டர் சந்திரசேகர் மட்டும் ஷேரை இந்த பொண்ணு மேல எழுதி வைக்கலேன்னா….இந்நேரம் ஒன்றாம் இரண்டாம் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு இருப்பா.
அந்த மீட்டிங் நடைப்பெற்று முடிந்த இந்த பதினைந்து நாளில், கிருஷ்ணவேணியை பற்றி அனைவரும் அறிந்துக் கொண்டனர். தெரிந்த விசயமான...அவள் ஊர். அவள் படிப்பு. இப்போது அவள் பார்த்த வேலை. இவைகளைக் கொண்டு தான் வேணியை பற்றிய இந்த கணிப்பு.
தங்களோடு அவளிடம் பங்கு நிறைய உள்ளது. அவளை எதிர்த்துக் கொள்ள முடியாது என்பதால் தான் அவள் வந்ததும் “வணக்கம்.” வைத்தனர்.
அந்த வணக்கம் வைத்த விதம் கொண்டே வேணிக்கும், பவித்ரனுக்கும், அவர்களின் மனநிலை தெரிந்து விட்டது. அவர்கள் எண்ணத்தை மாற்ற பேசினால் சரியாகது. செயலில் தான் காட்ட வேண்டும். அதன் முதல் படியாக தன் கருத்தை வேணி அனைவரின் முன்னும் தெரிவித்தாள்.
அவள் கருத்தை எதிர்ப்பு தெரிவிக்க நினைத்தாலும், யாரும் வாய் திறக்கவில்லை. சந்திரசேகர் இறந்து பின்னும் அவருக்கு என்று அந்த குழமத்தில் ஒரு பெயர் இருந்தது. என்ன தான் இருந்தாலும் அவர் மகள் என்று அமைதி காத்தனர்.
எப்போதும் அனைத்தையும் சந்திரசேகரின் தலையில் கட்டி விட்டு வீட்டில் இருக்கும் பரமேஸ்வரர் குடும்பத்தினர் முந்தைய மீட்டிங் போல் இன்று அனைவரும் ஆஜர் ஆகி இருந்தனர்.
ஜெய்சக்தி தன் தம்பி அந்த பெண் பேசியதற்க்கு ஏதாவது எதிர்ப்பு தெரிவிப்பான் என்று நினைத்து உதய் முகம் பார்த்தாள். அவனோ அவள் கருத்தை கேட்கும் வகையாக அவள் பக்கம் திரும்பி அவள் முகத்தை பார்த்திருந்ததை பார்த்து விட்டு…
இப்பொழுது நாம் ஏதாவது சொன்னால், திரும்பவும் நமக்கு தான் பிரச்சனை ஆகும். தன் குழுமத்தில் அப்பெண் உரிமையுடன் பேசுவதை கேட்டும், ஒன்றும் செய்யாத முடியாத சூழ்நிலையில் அமைதி காத்தாள்.
ஆனால் அந்த பயம் எல்லாம் வாணிக்கு இல்லை போல்… “ உன்னிடம் எந்த கருத்தையும் கேட்கவில்லை. கேட்டால் பேசு.” வாயால் மட்டும் அல்லாது செய்கையின் மூலமும் தான் சொன்னதை சைகை காண்பித்தாள் வாணி.
அதற்க்கு பவித்ரன் எழுந்து ஏதோ பேசும் முன் அவனை தடுத்து நிறுத்திய வேணி… வாணியை பார்த்து… “ முதல்ல நீங்க யாரு…?” என்று கேட்டவள்.
அனைவரையும் பொதுவாக பார்த்து…” இந்த மீட்டிங்கிக்கு முக்கியமானவங்களுக்கு மட்டும் தானே அழைப்பு.” என்று கேட்டதும், அந்த மீட்டிங்கிள் பங்கு பெற வந்த ஒரு மூத்தவர், அவள் எதை நினைத்து கேட்கிறாள் என்று தெரிந்துக் கொண்டவராய்…
“ ஆமாம் மிஸ் கிருஷ்ணவேணி.” எழுந்து நின்று பதில் அளித்தார்.
எந்த ஒரு இடத்திலும், நமக்கு வேண்டியவர்கள் மட்டுமே இருக்க மாட்டார்கள். வேண்டாதவர்களும் இருப்பார்கள். அந்த பெரியவர் பரமேஸ்வரருக்கு வேண்டாதவர் ஆவார்.
வேணிக்கும், பரமேஸ்வரர் குடும்பத்துக்கும், நடக்கும் சதுரங்க ஆட்டத்தில், வேணியின் பக்கம் நிற்க முதல் படியாக ஒரு காயை வேணிக்கு ஆதாரவாய் எடுத்து வைத்தார்.
“ அப்போ இவங்களுக்கு இங்கு என்ன வேலை….?” வாணியின் பக்கம் கை காட்டி வேணி கேட்டாள்.
“ ஒன்ட வந்த பிசாசு ஊரு பிசாச விரட்டிச்சாம். அது போல் இருக்கு பொண்ணு உன்னுடைய பேச்சு.” என்று சொன்னார் பரமேஸ்வரர்.
இந்த மீட்டிங் ஆராம்பித்ததில் இருந்து, வேணியின் செயல். பேச்சு அனைத்தையும் பார்த்து பரமேஸ்வரருக்கு கோபம் வந்தாலும், அதை அடக்கியவராய் அமைதி காத்து இருந்தார். அதுவும் வெணி பேச்சுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காது தன் மகன் அவள் பேச்சை கேட்கும் பாவனையை பார்த்ததும், அவர் கோபம் எல்லையை கடந்தாலும்,
தான் ஒரு வார்த்தை விட்டாலும், அது அந்த பெண்ணுக்கு ஆதாரவாய் தான் போகும். அவருக்கு தெரியும் இங்கு தனக்கு வேண்டாதவர்களும் இருக்கிறார்கள் என்று. எதிரிக்கி எதிரி நண்பன் என்ற முறையில் அவர்கள் ஒன்று கூடினால், அவருக்கு தான் ஆபத்து. இதை நினைத்து தன் அனுபவ அறிவுக் கொண்டு தான் இந்த பெண்னை ஓரக்கட்ட வேண்டும் என்று நினைத்திருந்தார்.
ஆனால் தன் மருகளை, அதுவும் தான் கேட்காது, சிறிதும் யோசிக்காது தங்களுடைய அத்தனை மதிப்பு மிக்க ஷேரை தூக்கி தன் மச்சினன் பெயரில் கொடுத்தது, மருமகள் சார்பாய் அவரை பேச வைத்தது.
“ உங்க மருமக பிசசா என்று உங்களுக்கு தான் தெரியும். ஆனா என்னை இத்தனை பேரு எதிரில் இப்படி தரம் குறைவா பேசுவது என்னால அனுமதிக்க முடியாது மிஸ்டர் பரமேஸ்வரர்.”
இது வரை அமைதியாக மற்றவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்த உதயேந்திரன்… “ மிஸ் கிருஷ்ணவேணி பிஸ்னசுக்கு ஏதோ ஐடியா கொடுப்பிங்கன்னு தான் உங்கல பேச விட்டேன். ஆனா நீங்க அதை பத்தி பேசாம, தேவையில்லாததை பேசி மத்தவங்க நேரத்தை வீண் ஆக்குறிங்க.”
தந்தை மகனுக்கு இடையே ஆயிரம் இருக்கும். ஆனால் அனைவரின் முன்நிலையிலும், தன் தந்தையின் பெயரை, அது மிஸ்டரே போட்டு சொன்னாலும், ஒரு சிறு பெண் பெயர் சொல்லி அழைப்பது உதயனுக்கு பிடிக்க வில்லை. அதன் தொட்டே அவள் பேச்சை இடைமறித்து நிறுத்தியது.
“ மிஸ்டர் உதயேந்திரன் என்னை எங்கே என் கருத்தை சொல்ல விட்டாங்க…? ஷேர் இல்லாதவங்க இந்த மீட்டிங்கை அட்டன் செய்வதே தப்பு. குடும்பமா கிளம்பியதால பிக்னிக்குன்னு நினச்சிட்டு இங்கு வந்து இருந்தாலும், சூழ்நிலை பார்த்து அமைதியா இருந்து இருக்கனும்.
அதை விட்டுட்டு பங்குதாரர்களுக்குள், அவங்க லாபம் நஷ்டத்தை பத்தி பேசிட்டு இருக்கும் போது, தேவையில்லாதவங்க பேசினா நேரம் தான் விரையம் ஆகும் மிஸ்டர் உதயேந்திரன்.”
இத்தனை வருடம் பாதியப்பட்ட வாணியை, ஒரே நொடியில் இந்த குழுமத்துக்கும் அவளுக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் பேசிய வேணியின் பேச்சில் அனைவரும் விக்கித்து தான் நின்று விட்டனர்.
அதுவும் வாணிக்கு தாள முடியவில்லை. எங்கயோ மூளையில் இருந்த கம்பத்து பொண்ணு தங்கள் குழுமத்தில் நடுநாயகமாய் அமர்ந்தது மட்டும் இல்லாமல், தன்னை யாரோ போல் நிறுத்தி விட்டாளே என்று கோபத்துடன் நினைத்தவள், இதற்க்கு எல்லாம் காரணமான ஜெய்சக்தியை வேண்டிய மட்டும் முறைத்து விட்டு வேணியை ஒன்றும் செய்ய முடியாது அமர்ந்து விட்டாள்.
உதயனுக்கோ தன்னை மிஸ்டர் உதயேந்திரன் என்று பெயரை சொல்லி அழைத்தது, இவளுக்கு பெயரை குறிப்பிடாது பேச தெரியாதா…? என்று மனதில் நினைத்தவன். “இப்போது தான் எல்லோரும் அமைதியா இருக்காங்கலே, தொழில் வளர்ச்சிக்கு உங்க கிட்ட கருத்து இருந்தா சொல்லுங்க.” உதயன் அந்த இருந்தாவில் போதிய மட்டும் அழுத்தம் கொடுத்து சொன்னான்.
இப்போது கிருஷ்ணவேணியும் தொழில் பேச்சாய்... “ நாம் டோப்பாவை வெறும் வெள்ளை முடிக் கொண்டு மட்டும் அல்லாது, கால் பாகம் வெள்ளை முடியும், முக்கால் பாகம் கருப்பு முடியும் கொண்ட கலவையாக, செய்தால் நன்கு விற்பனை ஆகும்.
என்ன தான் வயது ஆனாலும், வெறும் வெள்ளை முடிக் கொண்ட டோப்பாவை உபயோக்கிக்க மாட்டாங்க. முழுவதும் கருப்பு நிறம் கொண்ட டோப்பாவை அவர்கள் அணிய தயங்குவாங்க. ஏன்னா அந்த வயதில் முழு கருப்பு இருக்காது. அது டோப்பா என்பது வெளிச்சத்துக்கு வந்து விடும் என்று அதை வாங்க மாட்டாங்க. நம் வெள்ளை டோப்பா விற்பனையின் வீழ்வுக்கு இது தான் காரணம். “
எந்த வித தயக்கமும் இல்லாது தன் மனதில் இருந்த கருத்தை அனைவருக்கும் புரியும் படி தெள்ள தெளிவாக விளக்கி கூறினாள் வேணி.
அவள் பேசி முடித்த்தும் அங்கு எந்த வித சத்தமும் இல்லாது போக, ஏதோ தோற்ற போன உணர்வில் வேணி அமர்ந்ததும், அமைதிக்கு எதிர் பதமாய் அனைவரும் அவள் கருத்தை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் தன் கை தட்டல் மூலம் வேணிக்கு தெரியப்படுத்தினர்.
பின் ஒரு மனதாய் வேணியின் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டு அதை நடை முறைப்படுத்துவதற்க்காக பேப்பரை அந்த குழுமத்தில் வக்கீல் என்ற வகையில் ராஜசேகர் தயார் செய்து அனைவரிடமும் கையெழுத்து வாங்கும் போது தன் பெண்ணே சாதித்து விட்ட பெருமை அவருக்கு.
இது போல் பேப்பரை தயார் செய்வது. கைய்யெழுத்து வாங்குவது எல்லாம் , அவர் ஜூனியர் தான் செய்வர். இவர் ஒரு பார்வை மட்டுமே பார்த்து வைப்பார். ஆனால் வேணியின் விசயத்தில் அப்படி முடியாது தானே அனைத்தையும் முன் நின்று செய்து முடித்தார்.
அனைத்தும் முடித்து விட்டு விடைப்பெறும் வகையாக கைக் குலுக்கல் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கும் போது , வேணியிடம் சென்று உதய் கைய் தன் கைய் நீட்டி இருந்தவனின் கைய் பற்றியது நம் பவித்ரன்.
சிறித்துக் கொண்டே தன் முகபாவனையை மாற்றது அவன் கைய் பற்றி உதய ...அதே புன்சிரிப்புடன் விடுவித்து விட்டு வேணியின் மீது ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையை வீசி விட்டு சென்றான்.