அத்தியாயம்….10
காயத்ரியின் கேள்வியில்...ராஜசேகர் இப்படி தான் நினைத்தார். ‘உதயேந்திரன் வேணி கஷ்டப்படுவதை பார்த்து மகிழ தானே செய்வான். நம்ம பொண்ணு என்ன இப்படி கேட்டு வைக்குது. நம்ம பொண்ணு கொஞ்சம் சோம்பேறின்னு தெரியும். எப்போத்திலிருந்து லூசா மாறுனா…’ என்று ராஜசேகர் நினைத்துக் கொண்டு இருக்கும் வேளயில்…
ராஜசேகரின் எண்ண ஓட்டத்திற்க்கு எதிர் பதமாய்… “இது வரை அவள் கஷ்ட்ட படுவதை என்னால் தடுக்க முடியவில்லை. இன்னும் சொல்ல போனால் அவள் கஷ்ட்டப்படுவதற்க்கு காரணமே என் குடும்பம் தான்.” என்று சொல்லி நிறுத்தியவன்.
பின் தொண்டையை கணைத்துக் கொண்டே… “அவ கஷ்டப்பட நானும் காரணமாகவும் இருந்துட்டேன்.” எதையோ நினைத்து வருந்தியவனாய் பேசியவன்…
பின் … “ஆனால் இனி அவள் கஷ்டப்பட நான் காரணமா இருக்க மாட்டேன். என் குடும்பத்தில் உள்ளவங்களால கஷ்டம் வராம பார்த்துப்பேன். அதுக்கு தான் உங்க அப்பாவ தேடிட்டு வந்தேன்.” என்று உதயேந்திரன் தன்
மனதில் இருப்பதை காயத்ரியிடம் சொல்லி முடித்தான்.
சத்தியமாக ராஜசேகர், உதயேந்திரனிடம் இருந்து இப்படி பட்ட வார்த்தைகளை எதிர் பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். வார்த்தைகள் என்பதை விட இந்த பணிவு.
உதயேந்திரன் பரமேஸ்வரரின் ரத்தம் என்பதாலோ..என்னவோ...உதயேந்திரன் தன்னை விட கீழ் உள்ளவர்களை எப்போதும் ஒரு மிதப்பான பார்வையை தான் பார்த்து வைப்பான்.
அதற்க்கு என்று அவர்களை அவமதிப்பான் என்று சொல்லி விட முடியாது. ஆனால் அவன் பேச்சில் நீ எனக்கு இணையா என்று வார்த்தையாய் இல்லாது அவன் செயளால் நமக்கு உணர்த்தி விடுவான்.
உதாரணத்திற்க்கு… நாம் அவனிடம் பக்கம் பக்கமாய் பேசினால், அவனிடம் இருந்து நறுக்கு தெரிந்தார் போல் நாளே வார்த்தையில் நாம் பேசினதற்க்கு உண்டான பதிலை நம்மிடம் சொல்லி விடுவான்.
நாம் புரியவில்லை என்று சொன்னால்… “உன்னை போல் பேசி நேரத்தை வீணடிக்க என்னிடம் நேரம் இல்லை. உனக்கு இது ஒன்று தான் தொழில். ஆனால் எனக்கு அது போல்…” அதற்க்கும் மேல் தன் வார்த்தையை முடிக்காது எழுந்து விடுவான். இவ்வளவு தான் உனக்கு உண்டான நேரம் என்பது போல்.
இன்னும் கேட்டால் எதிரில் பேசியவர்வர்கள் இவனிடம் வேலை செய்பவர்கள் கிடையாது. இவனை போல் இவனிடம் தொழில் முறையில் இருப்பவர்கள் தான்.
அவர்களுக்கே அப்படி என்றால், தன்னை. என்ன தான் நான் பெரிய லாயராக இருந்தாலும், நீ எங்களிடம் சம்பளம் வாங்குபவன் தானே…
அப்படி தான் பரமேஸ்வரரின் பார்வை இருக்கும். அதே பார்வையை தான் உதயேந்திரனிடமும் ராஜசேகர் கண்டு இருக்கிறார்.
இப்போது தன் மகளின் ஒரு கேள்விக்கு இது போல் நீண்ட விளக்கம். அதுவும் தன் தவறு உணர்ந்து பேசும் இந்த பேச்சு, ராஜசேகருக்கு புதியது.
இந்த மாற்றம் ராஜசேகருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய அதே சமயத்தில் அவரின் லாயர் மூளை இதில் ஏதாவது உள்குத்து இருக்குமோ… என்று யோசிக்கவும் வைத்தது.
உதயேந்திரனுக்கு இணையாக சொத்து வைத்திருப்பது வேணி. லீகலாய் ஒன்றும் செய்ய முடியாது என்ற பட்சத்தில், இப்படி சென்டி மென்டலாய் லாக் செய்ய நினைக்கிறார்களோ… ஒரு வேளை இது பரமேஸ்வரரின் திட்டமாக கூட இருக்கலாம்.
அந்த சந்தேகம் வந்த நொடி ராஜசேகர் உதயேந்திரனை பார்க்கும் பார்வை மாறி போனது. உதயேந்திரனும் காயத்ரியிடம் பேசிக் கொண்டு இருந்தாலும், அவனின் பாவை மொத்தமும் ராஜசேகரிடம் மட்டுமே நிலைத்து நின்றது.
ராஜசேகர் பார்வையில் முதலில் தோன்றிய அதிர்ச்சி. பின் ஒரு ஆராய்சி இறுதியில் ராஜசேகர் முகத்தில் சந்தேகத்தின் சாயல் தெரியவும், காயத்ரியிடம் பேசுவதை கை விட்டவனாய்… ராஜசேகரிடம் நேரிடையாவே பேச்சு வார்த்தையில் இறங்கினான்.
சுற்றி வளைத்து பேசாது. அதே சமயம் திமிராகவும் இல்லாது, தன் பாணியையும் கை விடாது, உதயேந்திரனின் பேச்சு இருந்தது.
“அங்கிள் இதோ முதல்ல இந்த அங்கிள் என்று நான் கூப்பிடும் போது இந்த முகத்துல நான் குழப்பத்தை பார்த்தேன்.
பின்ன உங்க பொண்ணு என் முதுகுல தட்டி பேசினதை பார்த்து அந்த முகத்துல அதிர்ச்சிய பார்த்தேன்.” என்று பேசிக் கொண்டு இருந்தவன்..
தன் பேச்சுக்கு கொஞ்சம் இடைவேளை விட்டவனாய் ஏதோ நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டாலும் அவன் முகத்தில் இதழ் ஓரத்தில் தெரிந்த அந்த விரிப்பு அவன் சிரிக்கிறான் என்று எதிரில் அமர்ந்து இருந்தவர்களுக்கு தெரிந்தே இருந்தது.
பின் தன் கை கொண்டு கழுத்தை தேய்த்த வாறே… “ உங்களின் அந்த அதிர்ச்சியே…என்னை பற்றி ரொம்ப நல்லா… தெளிவா… டீடைய்லா… தெரிஞ்சி இருக்குன்னு.” என்று சொன்ன உதயேந்திரன்.
இப்போது மனத்திற்க்குள் சிரித்துக் கொள்ளாது வெளிப்படையாகவே தன் ஈறு பற்கள் தெரியும் அளவுக்கு சிரித்தவன் …
“என்னை பற்றி தெரிஞ்சவருக்கு இந்த அதிர்ச்சி, பயம், குழப்பம் இருக்க தான் செய்யும். ஆனா நான் அது போல் இல்ல என்று இப்போ நான் உங்க கிட்ட சொல்ல போறது கிடையாது.
நீங்க கேள்வி பட்ட்து உண்மை தான். நான் மூன்று பெண்களிடம் லிவிங் டூ கெதரில் இருந்தேன் தான்.” என்று உதயேந்திரன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே காயத்ரி தொண்டை பகுதியில் இருக்கும் சதை ஏறி இறங்கியதால் விக்கல் வந்ததா…? இல்லை விக்கல் வந்ததால் தொண்டை பகுதியில் இருக்கும் சதை பற்று ஏறி இறங்கியதா என்று பிரிந்தரிந்து சொல்ல முடியவில்லை.
ஆனால் உதயேந்திரனின் வார்த்தையில் தொண்டையில் ஏதோ சிக்குவது போல் இருக்க தான் காயத்ரிக்கு விக்கல் வந்தது. காயத்ரி எல்லாம் பையனை பார்த்து சைட் அடிப்பதே பெரிய வாழ் நாள் சாதனை போல் நினைத்துக் கொண்டு இருப்பவள்.
கூட தோழிகள் ஏதாவது உசுப்பு ஏற்றி விட்டால், அழகான பையனை காண்பித்து …. “ நான் அவனிடம் பேசி காண்பிக்கிறேன் பார்.” என்று மார் தட்டிக் கொண்டு ஏதோ முகவரி கேட்பது போல் கேட்டு தோழிகளிடன் சீனை ஓட்டி… தன் வெற்றியை கொண்டாட லன்சோ...டின்னரோ...ப்ரேக் பாஸ்ட்டோ...அவர்களின் தயவில் முடித்துக் கொள்வாள்.
அப்படி பட்டவளிடம் லிவிங் டூ கெதர் வாழ்க்கையை ஏதோ நான் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தேன் என்பதை போல் பெருமையாக அதுவும் வயதில் பெரியவர் தன் தந்தையிடம் பேசுவதை பார்த்து அவளுக்கு மூச்சு நிக்காது, விக்கல் எடுத்ததே அது வரை சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியது தான்.
தன் தந்தை தன் கையில் வாட்டார் பாட்டிலை திணித்துக் கூட அதை வாயில் ஊற்றாது அப்படியே உதயேந்திரனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
உதயேந்திரன் தன் சிரிப்பை விடாது அவள் கையில் இருக்கும் வாட்டர் பாட்டிலை பிடிங்கி அவள் வாயில் ஊற்றிய போது தான் தன் சுயநினைவுக்கு வந்தாள். பின் அவன் வேலையை தனதாக்கிக் கொண்டான்.(அது தாங்க தண்ணீர் குடிப்பது.)
காயத்ரியின் விக்கல் அடங்கியதும்… “ஏன் இப்படி அதிர்ச்சியா ஆயிட்ட நான் என்ன உன்னையா…” என்று பேசிக் கொண்டு இருந்தவன் தான் பேசும் வார்த்தையின் போக்கு புரிந்து, தன் பேச்சை சட்டென்று நிறுத்திக் கொண்டான். காயத்ரிக்கு தான் அவன் பேச்சில் விக்கல் திரும்பவும் வரும் போல் ஆகிவிட்டது.
ராஜசேகருக்கும் உதயேந்திரன் என்ன சொல்ல வந்தான் என்று புரிந்தாலும், புரியாதது போல்…
“உதய் இப்போ எதுக்கு என்னை தேடி வந்திங்கன்னு சொல்லலாம் தானே…” உதயேந்திரன் போல் பெரிய மனிதரிடம்…
“என் பெண்ணிடம் எப்படி இது போல் பேசலாம்.” என்று அதட்டி அவனை பகைத்துக் கொள்ள முடியாது.
அதே போல் ஒரு தந்தையாய் இது போல் பேச்சு வார்த்தை தன் பெண்ணிடம் அவன் பேசுவது பிடிக்காது அவன் வந்த விசயத்துக்கு திசை திருப்பி விட்டார். இன்னும் ஒன்றும் அவருக்கு தெரிய வேண்டி இருந்தது. இவன் பேச்சு கிருஷ்ண வேணி மேல் அக்கறை உள்ளது போல் இருக்கே…
இந்த அக்கறை உண்மையான அக்கறையாக இருந்தால், ஒரு வகையில் இது நாரயணன் குடும்பத்திற்க்கு நல்லது தானே…
சந்திரசேகரின் அப்பா முதல் போல் தன்னிடம் அன்பாக பேசவில்லை என்றாலும், ஏதாவது விசயம் இருந்தால் பேசுகிறாரே… அது போல் போன முறை கிருஷ்ணவேணியிடம் கைய்யெழுத்து வாங்க அவர் வீட்டுக்கு சென்ற போது அவர் தன்னிடம் சொன்ன…
தான் வேணியிடம் கைய்யெழுத்து வாங்கிய கோப்பையை கை காட்டி…. “இந்த பிரச்சனை எல்லாம் இல்லாது இருந்தால், இந்நேரத்துக்கு என் பேரன் பேத்தியின் கல்யாணத்தை கண் குளிர பார்த்து இருப்பேன்.” என்று தன்னிடம் சொல்லி ஆதாங்கப்பட்டு பேசியது இப்போது ராஜசேகரின் நினைவடுக்கில் வந்து போனது.
சந்திரசேகரின் அப்பாவின் பயமே பரமேஸ்வரர் குடும்பத்தால் தன் பேத்திக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று தான். இப்போது இந்த உதய் வேணிக்கு ஆதாரவாய் இருந்தால், இவனை தான்டி பரமேஸ்வரரால் வேணியை என்ன செய்து விட முடியும்…? அக்குடும்பத்தின் மாஸ்டர் மூளை என்பது பரமேஸ்வரர்.
அந்த பரமேஸ்வரருக்கு வயதானதால் தன் பிடிப்பாய் உதயேந்திரனை தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார். பெரிய மகன் அந்த அளவுக்கு சமார்த்தியம் பத்தாது.
இப்படி ராஜசேகர் தனக்குள் ஒரு கணக்கு போட்டவராய்… ‘இவன் மூலம் வேணிக்கு ஏதாவது நன்மை கிடைத்தால் அது நமக்கு லாபம் தானே… ஒரு குடும்பத்தை அழித்த பாவத்திற்க்கு இந்த புன்னியமாவது செய்வோம் என்று நினைத்தும், ராஜசேகர் உதயேந்திரனிடம் தன் பேச்சை தொடர்ந்தார்.
அதுவும் இல்லாது ஏன் என்று தெரியவில்லை இப்போது எல்லாம் தன் மகள் பவித்ரனை பற்றி விசாரித்துக் கொண்டு இருக்கிறாள். தன் மகளிடம் எதுக்கு அவனை பற்றி கேட்குற…? என்று கேட்க அந்த தகப்பனுக்கு கொஞ்சம் பயமாக கூட இருந்தது.
தன் மகள் இந்த நீக்கு போக்கு எல்லாம் பார்க்க மாட்டாள் என்று தான் அவருக்கு தெரியுமே… “நான் அவனை காதலிக்கிறேன்.” என்று தன்னிடம் சொல்லி விட்டால், அவர் என்ன செய்வார்.
தன் மகள் வேறு யாரையாவது விரும்பி இருந்தால் அவன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில், திருமணம் செய்து கொடுத்து விடுவார். ராஜசேகர் காதலுக்கு எதிரி கிடையாது.
அவர் தான் வரை முறை தான்டிய காதலையே ஆதாரித்தவர் ஆயிற்றே... தன் மகளின் முறையான காதலுக்கு அவர் என்ன தடையா விதித்து விடுவார்.
தன் மகள் விரும்புவது பவித்ரானாக இருக்கும் பட்சத்தில், அவரால் ஒன்றும் செய்ய இயலாது தானே...பவித்ரன் தங்கமான பையன் தான். அதில் எந்த வித சந்தேகமும் அவருக்கு இல்லை.
ஆனால் நான்…? அதையும் தான்டி தன்னால் அந்த குடும்பத்திற்க்கு தீங்கு விளைந்தது போதும், அந்த குடும்பத்திற்க்கு தன் மகளாள் இன்னும் ஒரு தீங்கும் வேண்டாம்.
பவித்ரன் வேணியின் பால் எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறான் என்று அவர் தான் கண் கூடாய் பார்த்திருக்கிறாரே...அதனால் தன் மகள் காதல் ஒரு தலை காதலாய் தான் இருக்கும். பவித்ரன் தன் மகள் காதலை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டான். இதுவும் அவருக்கு நிச்சயமே…
தன் சந்தேகம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதவாது தன் மகள் பவித்ரனை காதலித்தால் , கண்டிப்பாக ஏதாவது ஒரு லூசு தனம் செய்து விடுவாளோ என்ற பயம் தான் ராஜசேகருக்கு.
ஏற்கனவே தன்னால் அக்குடும்பம் வேதனை பட்டது போதும். வேணிக்கு தந்தையின் பாசம் தான் தன்னால் கிடைக்காது போய் விட்டது. அவளுக்கு அன்பான கணவன் கிடைப்பதற்க்கு எந்த இடையூறும் அதுவும் தன் மகளால் வரவே கூடாது.
வேணிக்கு பரமேஸ்வரர் குடும்பத்தால் பிரச்சனை இல்லை என்று தெரிந்தால் விரைவில் பவித்ரன் வேணி திருமணத்தை நாரயணன் முடித்து விடுவார்.
நம் மகளின் மனது அலை பாய்வதும் நின்று விடும் என்று கருதி…. உதயேந்திரன் தான் வந்த காரணம். அதாவது ஜெய்சக்தி எதற்க்கு சந்திரசேகரை திருமணம் செய்துக் கொண்டாள். என்ற உதயேந்திரன் கேள்விக்கு ராஜசேகர் பதிலளிக்கும் அதே வேளயில்…
பவித்ரன் வேணியிடம்… “நீ உதயேந்திரனை விரும்புகிறயா…?” என்ற கேள்வியை கேட்டுக் கொண்டு இருந்தான்.