Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kambathu Ponnu....12

  • Thread Author
அத்தியாயம்….12

“ அவன் உன்னை காப்பத்தினான் தான். ஆக்சுவலா அதுக்கு அவனுக்கு நான் நன்றி தான் சொல்லனும். ஆனா என்னவோ ஒன்னு அவன் கிட்ட எனக்கு சரியா தெரியல . காப்பத்த” வேணியின் இடைப்பகுதியை காட்டி…

“ அந்த இடத்தில கைய் வெச்சி தான் இழுக்கனும் என்பது இல்ல. எதுக்கும் நீ அவன் கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு வேணி.” தன் அத்தை மகளை உதயேந்திரனிடம் இருந்து காப்பாற்ற அவளை எச்சரித்தான் பவித்ரன்.

வேணியோ அவன் ஏதோ கதை சொல்வது போல் கேட்டாளே ஒழியே, அதை முக்கியமாய் எடுத்துக் கொள்ளவில்லை என்பது போல் அவள் அடுத்து சொன்ன வார்த்தையில் இருந்து தெரிந்தது.

“ அத விடு பவி. எப்போ நாம இந்த ஒட்டல விட்டு போவோம். இந்த ஒட்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு எல்லாம் செத்து போய் இருக்குடா…” என்று பவித்ரனை பார்த்து வேணி கேட்டாள்.

‘நாம எவ்வளவு சீரியசா பேசிட்டு இருக்கோம் இவள் என்னன்னா...சாப்பாட்டை பத்தி பேசுறா…’ கோபம் வந்தாலும் அதை அடக்கியவாய்… “வேணி நான் சொல்றதா அலட்சியமா நினைக்காதே. அவன் கொஞ்சம் டேஞ்சரான ஆளு மாதிரி தான் எனக்கு தெரியுது.”

பவித்ரனுக்கு கோபம் வந்தாலும், பொறுமையுடன் ஒரு குழந்தைக்கு சொல்வது போல் சொல்லியும். “ சரி. சரி.” என்பது போல் தலையாட்டியவள்..

திரும்பவும் “ இன்னிக்கி நைட்டவது சாப்பாடு இங்கு ஆர்டர் கொடுக்காம, கொஞ்சம் நல்ல மெஸ்சா பார்த்தாவது போய் சாப்பிடலாமா…?”

ஊரில் அத்தை, அம்மா கைய் மணத்தில் கார சாரமாய் சாப்பிட்ட நாக்கு கிருஷ்ணவேணியுடைய நாக்கு . அவளை போய் ஒரு நாள் இரு நாள் இல்லை. நாட்கணக்கில் ஓட்டலில் சாப்பிட வைத்தால். அதான் வீட்டு சாப்பாட்டுக்கு அவள் நாக்கு நச்சரிக்க. அதனால் அவள் பவித்ரனை நச்சரிக்க ஆராம்பித்தாள்.

இதை எல்லாம் துணியை மடித்துக் கொண்டே கேட்டுக் கொண்டு இருந்த பவித்ரனின் அம்மா சுகுனா... “ ஏன்டா குழந்தை தான் கேட்குறாளே கொஞ்சம் கூட்டிட்டு தான் போறது.” என்று சொன்னவர்.

பின் “ சீக்கிரம் அந்த வீட்டுக்கு போக வழி பாருடா.என்னால கூட இங்கு இருக்க முடியல. அங்கு வர அண்ணி ஒத்துக்கலேன்னா வேறு வீடாவது பார். எனக்கும் நாக்கு செத்து தான் போய் கிடக்கு.”

கிராமத்து மனிதர்கள். நாசுக்கு எல்லாம் பாராது நன்றாக காரம், உரைப்பும், போட்டு சாப்பிட்டு பழக்கம். அது போல் வேலை செய்யவும் தயங்க மாட்டார்கள். அப்படி இருந்தவரை இப்படி ஒரே அறையில் இருக்க சொன்னால், ஏதோ அடைத்து வைத்தது போல் இருந்தது சுகுனாவுக்கு.

‘நாம் எவ்வளவு முக்கியாமனதை பத்தி பேசுகிறோம். அத்தையும், மருமகளும், என்னன்னா சாப்பாடு தான் முக்கியம் என்பது போல் பேசுறாங்க.’ என்று நினைத்த பவித்ரன்.

“ அம்மா …” என்று பல்லை கடித்து ஏதோ பேச ஆராம்பித்தவனை தடுத்து நிறுத்திய வேணி.

“ இப்போ என்ன அவன் என்னை ஒரு மார்க்கமா பாக்குறான். அவன் கேரைக்ட் சரியில்ல. அவனால எனக்கு ஏதாவது பிரச்சனை ஆயிடுமோ..அது தானே உன் கவலை.”

பவித்ரன் எதை நினைத்து வேணியிடம் இந்த பேச்சை ஆராம்பித்தானோ. அதையே வேணி பிட்டு பிட்டு வைக்க. இவன் “ ஆமாம்.” என்பது போல் தலையை மட்டுமே தான் ஆட்ட முடிந்தது.

“ நீ எப்போ அவனை கவனிச்சேன்னு தெரியல. ஆனா நான் அவனை பார்த்த முதல் நாளே கவனிச்சிட்டேன். அவன் என்னை பாக்குறான்னு.” என்று வேணி சொல்லி முடிக்கவில்லை.

“ பார்த்தும்மா நீ சும்மா இருந்த…? அவன் கிட்ட நீ செருப்பை காட்டி இருக்க வேண்டாம்.”

வேணி இதை இவ்வளவு சாதரணமாக சொன்னதை கேட்டு, அவ்வளவு ஆத்திரம் கோபம் வந்தது பவித்ரனுக்கு.

சுகுனாவும்… “ என்ன வேணி இது. அவன் தப்பா பாக்குறான்னு இப்படி சொல்ற…?” அவரும் ஆதாங்கத்துடன் தான் கேட்டார்.

“ அத்த அத்த..அவன் டெக்னிக்கலே வேறு அத்த.அவன் என்னை பிடிச்சி பாக்கல.” இவ்வாறு வேணி சொன்னதும்.

“ எனக்கும் தெரியும் அவன் உன்னை பிடிச்சி பாக்கலேன்னு. அவன் கண்ணோட்டமே வேறு.” ஆண்மகனான பவித்ரனுக்கு, உதயேந்திரனின் பார்வையை அவன் முன் நடந்த நடத்தையை வைத்து இப்படி தான் நினைக்க வைத்தது.

“ அய்யோ பவி அவன் என்னை வேறு மாதிரியும் பாக்கல.” வேணியின் பேச்சில் அம்மா, மகன் இருவரையும் குழம்பி தான் போயினர்.

“ எங்களுக்கு எதுவும் புரிய கூடாதுன்னே கங்கனம் கட்டி பேசிட்டு இருக்கியா…?” என்று பவித்ரன் கேட்டான்.

“ அப்படி எல்லாம் இல்ல பவி . இது ரொம்ப சிம்பிளான விசயம். என்ன கவுக்குறாராம். அழகா இருக்கான் லே...அதுல மயங்கிடுவேன்னு நினச்சிட்டான். அந்த வளந்து கெட்டவன்.” என்று சாதரணமா சொன்ன வேணி.

பின் ஏதோ நினைத்தவளாய்… “ பிடிக்க அழகு தேவையில்லை. இவனை நம்பிபான நம்மை கடைசி வரை கைய் விட மாட்டான். நம்மிடம் உண்மையா இருப்பான். நமக்கு கனவிலும் அவன் கெடுதல் நினைக்க மாட்டான்.ஒரு பாதுகாப்பு, அந்த நம்பிக்கை தான்டா வாழ்க்கை.” என்று சொல்லிக் கொண்டே வந்தவள்.

பின் கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டவளாய்…..” அழகு…” என்று சொல்லிக் கொண்டே வந்தவள் அதற்க்கு மேல் பேச முடியாதவளாய் அவள் கண்கள் இரண்டும் கலஞ்கி இருந்தது.

அவள் பக்கத்தில் வந்து நின்ற பவித்ரன்… “ வேணிம்மா என்ன இது. சின்ன புள்ள மாதிரி இப்படி பொசுக்கு பொசுக்குன்னு கண் கலங்கிட்டு இருக்க.” என்று சொல்லிக் கொண்டே அவள் கண்ணை துடைத்து விட்டவன்.

“ நிஜமா சொல்றேன் வேணி வர வர நீ என்னோட அறிவாளியா ஆகிட்டு போற . நானே அவன் பார்வைக்கு அர்த்தம் கண்டு பிடிக்க முடியல. நீ எப்படி …? க்ரேட் டா.”

ஒரு நண்பனாய் அவள் கண்ணீரை துடைத்த பவித்ரன் அவள் தன்னம்பிக்கை குறையாது பேசியவன். “ சரி வா நீ சொன்னா மாதிரி கொட்டிக்க போகலாம்.”

சொன்னவன் ஓட்டலுக்கோ, மெஸ்ஸுக்கோ அழைத்து செல்லாது, தன் நண்பன் வீட்டுக்கு அழைத்து சென்றான் தன் அன்னையுடன். அங்கு நண்பனின் அம்மாவின் கைய் மனத்தில் வீட்டு சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தாள்.

அவள் ரசித்து சாப்பிடும் விதத்தை பார்த்து, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த வீட்டுக்கு போய் விட வேண்டும்.

இன்னும் நான்கு நாட்களுக்கு இவளுக்கு ஓட்டல் சாப்பாட்டு வாங்கி கொடுத்தால் என் மண்டை உடைவது நிச்சயம். அதனால் அந்த வாரமே பவித்ரன் கம்பத்துக்கு சென்றான்.

கிருஷ்ணவேணியின் கணிப்பு சரி என்பது போல் பரமேஸ்வரர், தன் பெரிய மகனிடம்… “ நீ மட்டும் என்னை போல் இருந்தா எனக்கு இப்போ இந்த குடச்சல் எல்லாம் வந்து இருக்காது.” எப்போதும் போல் தன் பெரிய மகனை கத்தினார்.

ஆனால் எப்போதும் அமைதியாக இருக்கும் வாணி இன்று… “ உங்க மாப்பிள்ளை செஞ்சதுக்கு நீங்க ஏன் மாமா அவரை கறிச்சி கொட்டுறிங்க.” என்று தன் கணவருக்கு ஆதாரவாய் பேசினாள்.

சந்திரசேகர் செய்த செயலால் வாணியும் தானே பாதிக்கப்பட்டாள். அந்த சந்திரசேகர் மட்டும் ஷேரை அந்த பெண் பெயருக்கு வாங்காது இருந்து இருந்தால், தங்களுடையதை உதயேந்திரனுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இருந்து இருக்காது.

இன்று அனைவரின் முன்நிலையிலும் அந்த சின்ன பெண்… “ இந்த நிறுவனத்தில் நீங்க யார்…?” என்பது போலான அந்த பேச்சை வாங்கி இருக்க தேவையில்லையே…

இவர் கண் மூடித்தனமாய் மாப்பிள்ளையை நம்பி விட்டு. இப்போ என் புருஷனை திட்டுவதா…? அந்த கோபத்தில் எப்போதும் மரியாதையோடு எட்டி நின்று பேசும் வாணி இன்று எதிர்த்து பேசி விட்டாள்.

பரமேஸ்வரருக்கு இப்போது இருக்கும் தன் இயலாத தன்மை மீதே அவருக்கு கோபம் கோபமாய் வந்தது. வாணி பெரிய இடத்து பெண் தான். ஆனால் இவர் பெண் கேட்டு போகவில்லை. பரமேஸ்வரரின் தொழில் பெருமையை பார்த்து வலிய வந்து பெண் கொடுத்தார் வாணியின் தந்தை.

வாணியும், வாணியின் தந்தையும், தன்னிடம் இன்று வரை மிக மரியாதையாக தான் நடந்துக் கொள்வார்கள். இன்று அந்த மரியாதை கெட்டதில் அவர் மீதே அவருக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.

அதன் பிரதிப்பலிப்பாய் “ ஆமா ஆமா நான் அவனை நம்பி கெட்டேன். அவனை எதுக்கு நம்பினேன்…? எதுக்கு நம்பினேன்…?” அவர் கத்திய கத்தலில் இரண்டாம் தளத்தில் அமைந்து இருக்கும் உடற்பயிற்சி அறையில், உடல் பயிற்ச்சி செய்துக் கொண்டு இருந்த உதயேந்திரன், தன் உடல் மீது துளிர்த்து இருந்த வியற்வையை கூட துடைக்காது, அங்கு இருந்த ஒரு துண்டை தன் தோளில் போர்த்திக் கொண்டு மின் தூக்கியை கூட உபயோகிக்காமல் விரைந்து படி இறங்கி வந்தான்.

அப்போது “ ஷேரோடு என் மகனும் நம் கைய் விட்டு போயிடுவானோன்னு எனக்கு இருக்கு.” அந்த வார்த்தை காதில் விழ…

“ கொஞ்ச நாளா டென்ஷனா இருந்ததுக்கு இது தான் காரணமா…? இது தான் பிரச்சனைன்னு என் கிட்ட கேட்டா நான் சொல்லி இருக்க போறேன்.” என்று கேட்டான் உதயேந்திரன்.

“ என்னடா கேட்க சொல்ற... கைய் புண்ணுக்கு கண்ணாடி தேவையா…? உன் பார்வையே தான் சொல்லுதே. அதுவும் ஒரு மகன் கிட்ட கேட்கும் கேள்வியா இது…? என்று பரமேஸ்வரர் சொல்ல.

“ இல்ல இந்த பார்வை என்ன பார்வைன்னு நீங்க கேட்டு இருக்கலாம்.” என்று சொன்ன உதயேந்திரனிடம் ஏதோ சொல்ல வந்த தந்தையின் பேச்சை தடுத்து நிறுத்தியவன்.

“ அவ அப்பா நம்பல நம்ப வெச்சி செய்தது போல. அவள நம்ப வெச்சி நான் செய்யலாமுன்னு தான் நான் அவள அந்த பார்வை பார்த்தேன். இப்போ புரியுதுங்கலா என் பார்வையின் அர்த்தம்.” உதயேந்திரன் தன் பார்வையின் அர்த்தம் விளக்கிய பின்னும் அனுபவம் வாய்ந்த பரமேஸ்வரருக்கு ஏனோ சரியாக தோன்றவில்லை.

காலை குளித்து முடித்த உதயேந்திரன் தன் முன் இருந்த ஆளுயர கண்ணாடி முன் நின்று உடற்பயிற்ச்சியால் முறுக்கேறி இருந்த மார்பகத்தை, தன் இரு கையை இன்னும் முறுக்கி முன் கள் போல் இருக்கும் பகுதியை பார்த்த வாறே ஒரு நிமிடம் நின்றவன்.

பின்… “ இத பார்த்து கூடவா அவ மயங்க மாட்டா…?” என்று கண்ணாடியிடம் கேட்டவன். அது ஏதோ பதில் சொன்னது போல்…

“ அந்த பய கூட சாக்லெட் பாய் மாதிரி நல்லா தான் இருக்கான்.” பவித்ரனை நினைத்து சொன்னவன்.

“ ஆனா அவங்களுக்குள்ள அந்த பையர் இல்ல. அத நான் உனக்கு பத்த வைக்கிறேன் கம்பத்து பொண்ணே…” அவனுக்கு அவனே கேள்வியும், பதிலுமாய் பேசிக் கொண்டு இருக்கும் போது தான்…

“ அப்பா வேண்டாம்பா. அங்கு போகாதிங்க.” ஜெய்சக்தியின் குரல் கேட்க.

‘ அக்கா யாரை எங்கே போகாதேன்னு சொல்றா…?’ என்று நினைத்தவனாய் தன் உடையை மாட்டிக் கொண்டு கீழே வந்தான்.

“ யாரு சொத்த யார் உரிமை கொண்டாடுவது…? நான் மட்டும் அங்கே போகல நீயும் வா… அந்த விடியா மூஞ்சும் வந்து இருக்காம். அன்னிக்கு கேட்டது இல்ல. இன்னிக்கும் கேக்குறேன் பார் நாக்கை பிடுங்குறா மாதிரி.” வேணியின் அம்மா புனிதாவை தான், அந்த பெரிய மனிதர் விடியா மூஞ்சி என்று சொன்னது.

தடுத்து நிறுத்திய ஜெய்சக்தியையும் “ நீயும் வா…” என்று பரமேஸ்வரர் அழைத்தார்.

ஜெய்சக்திக்கு அந்த நாள் நியாபகம் வந்து போனது. அப்பா சொன்னது போல் நடந்தால். என்று நினைத்தவள். இப்போது அது போல நடக்குமா…? என்ற சந்தேகமும் அவளுக்குள்.

அங்கு வந்து நின்ற உதயேந்திரனுக்கு குழப்பமாக இருந்தது. ‘எங்கு போக அக்கா வேண்டாம் என்றாங்க. அப்பா அக்காவையும் அழைக்கிறார்.” என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே ஜெய்சக்தி.

“ உதயா நீயும் வர்றியா…?” எங்கு என்று சொல்லாது ஜெய்சக்தி அழைத்தார்.

“ எங்கே…?” என்று உதயேந்திரன் கேட்டதுக்கு, “ உங்க மாமா எனக்குன்னு கட்டுனதா நான் நினச்சேன்னே அந்த வசந்த மாளிகைக்கு.” இப்போது அனைத்தும் புரிந்தது உதயேந்திரனுக்கு,

ஒரு நிமிடம் யோசித்த உதயேந்திரன்.. “ சரிக்கா…” ஜெய்சக்தியே உதய் உடனே ஒத்துக் கொள்வான் என்று நினைக்கவில்லை. அவன் சரி என்று சொன்னதும் ஜெய்சக்தி மகிழ்ந்தே தான் போனாள்.

“ உதய் வேண்டாம். நாம் மட்டும் போகலாம்.” உதய் வருவதை உடனே மறுத்தார் பரமேஸ்வரர்.

“ அப்பா நான் நேத்து அவ்வளவு சொல்லியுமா…?” அவனின் குரலில் கோபம் இருந்ததா…?இல்லை ஆதாங்கம் இருந்ததா…? என்று பரமேஸ்வரரால் பிரித்தறிய முடியவில்லை. இருந்தும்..

“ அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல உதய். உனக்கே நிறைய வேலை இருக்கு.” உதய் அங்கு வருவதை கூடிய மட்டும் தடுத்து நிறுத்த பார்த்தார் பரமேஸ்வரர்.

என்ன முயன்றும் அவரால் முடியாது உதயேந்திரன் சந்திரசேகர் கட்டிய அந்த மாளிகைக்கு பரமேஸ்வரர், ஜெய்சக்தியோடு சென்றான்.


















 
Active member
Joined
May 11, 2024
Messages
172
Veni semma briliant 👌👌👌 udhai... Azhagu yenna periya azhagu 😏😏😏nee thaan kambathu ponnu kitta vizhanum 😎😎😎nice interesting ud sis ❤️
 
Top