Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kambathu Ponnu...13

  • Thread Author
அத்தியாயம்….13

தன் மகள் அந்த இடத்தை விட்டு அகன்றதும், ராஜசேகர் எந்த வித மேல் பூச்சும் இல்லாது இருபது வருட முன் கதையை சொல்ல ஆராம்பித்தார்.

“நானும் உங்க மாமாவும் ஒரே ஊர் மட்டும் இல்ல.ஒரே தெருவும் தான். நான் என் வீட்டில் இருந்ததை விட அவன் வீட்டில் தான் அதிகம் இருப்பேன்.

ஒரே தெருவில் ஆராம்பித்து, ஒரு பள்ளி, ஒரே காலேஜ். எப்போவும் நாங்க ஒன்னா தான் இருப்போம். உங்க மாமாவுக்கு, தான் ரொம்ப அழகா என்பதில் அவ்வளவு பெருமை. அப்போ ரோஜா படம் வந்த புதுசு. பல பெண்கள் இவனை பார்த்து அந்த படத்து நாயகன் போல இருக்கேன்னு சொல்வாங்க. காலேஜில சந்திராவை பார்க்காத பொண்ணுங்கலே இல்லேன்னு சொல்லலாம்.

ஆனா இவன் எந்த பொண்ணு கிட்டேயும் தப்பா நடந்துக்குனது இல்ல. நானே பலமுறை சொல்லி இருக்கேன். பரவாயில்ல சந்திரா தப்பு செய்ய சான்ஸ் கிடச்சும் நீ நல்லவனா இருக்கேன்னு.

அதுக்கு அவன் எனக்கு ஆசை இல்லையா…? நிறைய இருக்கு ராஜா… என் ஆசை மொத்தத்தையும் என் மனைவி மீது காமிப்பேன். இது போல் அவன் பல தடவை, பல விதத்தில் என் கிட்ட சொல்லி இருக்கான். படிப்பு முடிஞ்சி நான் லா ப்ராக்டீஸ் செஞ்சுட்டு இருந்தேன்.

சந்திரா அவன் படிப்புக்கு சம்மந்தம் இல்லாது உங்க அப்பா கிட்ட வேலைக்கு சேர்ந்தான். நான் கூட அவன் கிட்ட என்னடான்னு…? கேட்டதுக்கு. நல்ல சம்பளம். முதலாளியோட பெரிய பையனுக்கு அந்த அளவுக்கு விவரம் பத்தாது. அடுத்தது பெண் காலேஜ் படிக்கிறாங்க. கடைசி பையன் சின்ன பையன்.

அவனும் இந்தியாவில் இல்ல. ஜெர்மனியில் இருக்கான். எல்லா பொறுப்பும் என் கிட்ட தான் கொடுத்து இருக்கார். இங்கு எனக்கு அச்சுவ் பண்ண நல்ல சான்ஸ் கிடைக்குமுன்னு சொன்னான்.

அவன் சொன்னதற்க்கு ஏற்ப தான் சந்திரா அடுத்து அடுத்து அவன் வேலையில் முன்னேறி போயிட்டு இருந்தான். நானும் சென்னையில் இருந்ததால அவனும் நானும் ஒன்னா தான் ரூம் எடுத்து தங்கி இருந்தோம்.

எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்தது. ஒரு நாளைக்கு சந்திரா அம்மாவுக்கு உடம்புக்கு ரொம்ப முடியலேன்னு அவன் அப்பா கிட்ட இருந்து அழைப்பு வர வரைக்கும்.

நானும் அவனும் பதறி அடிச்சிட்டு ஊருக்கு போனோம். அவன் அம்மா நிலை கொஞ்சம் மோசமா தான் இருந்தது. சந்திராவுக்கு அவன் அப்பாவோட அம்மாவை தான் ரொம்ப பிடிக்கும்.

அம்மாவை அப்படி பார்த்ததும் பாவம் சந்திரா தான் ரொம்ப உடஞ்சிட்டான். அப்போ அவங்க கடைசி ஆசை நீ புனிதாவை கட்டிக்கன்னு சொன்னதும்…

பக்கத்துல இருந்து கேட்ட எனக்கு அவனோட ரொம்ப அதிர்ச்சியா ஆயிடுச்சி. புனிதா தங்கமான பொண்ணு தான். என்னை அண்ணான்னு ரொம்ப பாசமா தான் கூப்பிடுவா…

ஆனா என் நண்பன் பக்கத்துல புனிதாவை நிக்க வெச்சி என் கற்பனையில கூட பாக்க முடியல. சந்திராவும் அவன் அம்மா கிட்ட இப்போ என்ன இதுக்கு அவசரம். நீங்க நல்லா ஆயிட்டு வாங்க. இதை பத்தி அப்புறம் பேசலாமுன்னு சொல்லி தட்டி கழிக்க தான் பார்த்தான்.

ஆனா அவன் அம்மா இவன் பேசியதை கேட்டு பயந்து போய் எனக்கு என் மகன், மகள் திருமணம் ஒன்னா நடக்கனும். நீ தாலி கட்டினா தான் ஆச்சின்னு முடிச்சிட்டாங்க. அப்புறம் கொஞ்ச நாள்ல அவன் அம்மாவும் இறந்துட்டாங்க.

சந்திரா முதல்ல எல்லாம் வேலையில் கொஞ்சம் ஓய்வு கிடச்சா கூட ஊருக்கு போயிட்டு இருந்தவன். அவன் கல்யாணத்துக்கு பிறகு எப்போவாவது தான் போவான். அதுவும் அவன் அப்பா திட்டி கூப்பிட்ட பிறகு.

இதுக்கு நடுவுல எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சி. நான் அவன் கூட இல்லாம தனியா வீடு எடுத்து தங்கினேன்.

அவனையும் புனிதாவை சென்னைக்கு அழச்சிக்கடான்னு சொன்னப்ப அவன் ஏன் சென்னையிலும் என் மானம் போகவான்னு கேட்டான்.

என்ன தான் உயிர் நண்பன் ஆனாலும் அவன் திருமண வாழ்வு பத்தி இதுக்கு மேல பேசல. அப்போ சந்திரா தங்கச்சி உண்டாகி இருக்க. இங்கு எனக்கும் காயத்ரி பிறக்க போகும் நல்ல செய்தி. இவன் வாழ்வு மட்டும் அந்தரங்கத்தில் தொங்குவதா…? நான் யோசிச்சிட்டு இருக்கும் போது தான் புனிதாவும் உண்டாகி இருக்கான்னு தெரிஞ்சதும், பரவாயில்ல சந்திராவின் வாழ்க்கை சரியாயிடும் என்று சந்தோஷத்தோட அவன் கிட்ட…

“இப்போவாவது புனிதாவை உன் கூட அழச்சிக்கடா.” என்று சொன்ன அன்று தான் அவன் மனம் திறந்து அவன் திருமண வாழ்வை பத்தி என் கிட்ட பேசினான்.”

இது வரை தான் படித்த கதையை சொல்வது போல் எந்த வித தங்கு தடையும் இன்றி உதயேந்திடனிடம் சொல்லிக் கொண்டு வந்த ராஜசேகர்.

இப்போது கொஞ்சம் தயக்கத்துடன்… “இத எப்படி சொல்வதுன்னு எனக்கு தெரியல உதய். இப்போ உன் மாமா வயது. மத்திய வயது. அவர் இறந்துட்டார். அதை எல்லாம் விடுத்து அப்போ வாலிப வயசுல இருக்கும் என் நண்பன்.

பெண்கள் பின்னாடி அவன் போனது இல்ல. பெண்கள் தான் இவன் பின்னாடி வருவாங்க. அப்போ கூட தன் மனதை சிதற விடாம தன் கல்யாண வாழ்வு. அதில் ஆயிரம் கற்பனை செஞ்சி வெச்சிட்டு இருந்த ஒரு வாலிபன்.

அப்படி பட்டவன் அன்னைக்கு என் கிட்ட என்னால முடில ராஜா. நானும் புனிதா தான் என் மனைவி. இது தான் என் வாழ்க்கை. அவளோட நான் வாழ்ந்து தான் ஆகனும். அதுவும் இப்போ என் குழந்தைய அவள் சுமந்துட்டு இருக்கா...இப்படி என்னையே நான் ஆயிரம் சமாதானப்படுத்திக் கொண்டு தான் ஊருக்கு போறேன்.

ஆனா என்னுடைய சமாதானம் எல்லாம் புனிதாவை நேரில் பார்க்கும் வரை தான். அந்த தெத்து பல். குச்சி போல உடம்பு. கருத்த நிறத்தை பார்த்து…

“இந்த வாழ்வுக்கா நான் இத்தனை வருடம் பிரம்மசரியத்தை கடை பிடிச்சேன்னு தான் எனக்கு எண்ண தோனுது ராஜா.

இதை ஒரு நண்பனா இருந்தாலும் சொல்ல கூடாது. ஆனா என் மனது பாராத்தை சொல்லாம விட்டா நான் நெஞ்சி வெடிச்சே செத்துடுவேன் ராஜா.” அன்று தன் நண்பன் பட்ட துயரத்தில்…

“சந்திரா என்னடா இப்படி சொல்ற. நீ நல்லா இருப்ப சந்திரா. என் கிட்ட என்ன தயக்கம் நாம பேசாத பேச்சா. உன் மனசு பாராத்தை என் கிட்ட சொன்னா உனக்கு கொஞ்சம் ரிலீப் கிடைக்குமுன்னா என் கிட்ட சொல்லுடா” என்று அன்று நான் தான் உன் மாமனிடம் அவன் மனபாரத்தை என் கிட்ட சொல்ல சொன்னேன்.

ஆனால் அன்று அவன் சொன்ன விசயத்தை கேட்ட பின் நான் ஏன் அவனை சொல்ல வற்புறுத்தினேன் என்று ஆயிடுச்சி.” என்று சொன்ன ராஜசேகார் மீண்டும் தன் பேச்சை தொடர தயங்கி நின்றார்.

இப்போது உதயேந்திரனுக்கு கொஞ்சம் கோபம் எட்டி பார்த்தது… “அங்கிள் உங்க பெண் முன்னாடி பேசுற விசயம் இல்ல. அது உங்க பேச்சு. உங்க முகபாவனையில் இருந்து எனக்கு தெரிஞ்சிடுச்சி. அதனால உங்க பெண்ணை இங்க இருந்து அனுப்பிட்டேன். அப்புறம் என் கிட்ட பேச நீங்க தயங்க வேண்டாம். என்னை பத்தி நீங்க ஒரளவுக்கு,” என்று சொன்னவன் பின்…

“ஒரளவுக்கு என்ன…உங்க பெண் என் கிட்ட பேசனப்ப நீங்க பட்ட டென்ஷனிலேயே என்னை பத்தி முழுசா தெரிஞ்சி வெச்சி இருக்கிங்கன்னு தெரியுது. அதனால எந்த தயக்கமும் இல்லாம வேணியின் அப்பா என்ன சொன்னார் என்று சொல்லுங்க.” என்று உதயேந்திரன் சொல்லி விட்டு ராஜசேகரை பார்த்தான்.

ராஜசேகர் இவனை எந்த கணக்குல சேர்த்துக் கொள்வது என்று புரியாது ஒரு வித குழப்பித்திலேயே தன் பேச்சை தொடர்ந்தார்…

“அன்னிக்கு சந்திரா பாக்க தான் முடியல விளக்கு அணச்சிட்டா என்ன தெரிய போகுதுன்னு நானும்…” என்று சொன்ன சந்திரசேகர் தொடர்ந்து…

“அப்போ கூட முடியல ராஜா. ஆசையா ஒரு முத்தம் கொடுக்க முடியல. பல்லு குத்துது...இறுக்கி கட்டி அணைக்க முடியல எலும்பு குத்துது...என்னை என்னடா செய்ய சொல்ற… ?இதுக்கா இது வரை ஒரு பொண்ணையும் பாக்கம இருந்தேன்.” அவன் அப்படி என்னை பார்த்து கேட்டதும்,

எனக்கே அவனை என்ன சொல்லி தேத்துவதுன்னு தெரியல. அப்புறம் நான் தான் அதுக்குன்னு பொண்ணுங்க இருக்கே.. போறியான்னு கேட்டேன்.” இப்படி சொன்ன ராஜசேகர் கொஞ்சம் தயங்கிய வாறு உதயேந்திரனை பார்த்தார்.

அவனோ… “நீங்க மேல சொல்.” என்பது போல் சைகை செய்ய…

சரி அனைத்தும் சொல்லி விடலாம். இவனிடம் சொன்னாலாவது தன் செய்த பாவம் குறைய வழி கிடைக்குமான்னு பார்க்கலாம் என்று நினைத்து…

“ அதுவும் ட்ரைப் பண்ணிடேன் ராஜா என்னால முடியல…” என்று சொன்ன சந்திரசேகர்…

கொஞ்சம் தயங்கி கொண்டே… “ஒரு நாள் பரமேஸ்வரர் சார் என் கிட்ட ஒரு ஓட்டலின் பெயர் சொல்லி என் பெண் அங்கு இருப்பா…அவள் பணம் கொண்டு போகல என்று சொல்லி என் கிட்ட பணம் கொடுத்து கொடுக்க சொன்னார்.(அப்போ எல்லாம் இந்த க்ரிடிட் கார்ட், மணி ட்ரான்ஸ்செக்க்ஷன் எல்லாம் இல்லாத காலம்.)

நான் கூட அப்போ நான் இந்த கம்பெனி மேனஜரா…? இல்ல ப்யூனா…? என் கிட்ட இந்த வேல எல்லாம் கொடுக்கிறார் என்று அவரை திட்டி கொண்டு தான் ராஜா அங்கே போனேன். ஆனா அவர் பொண்ண பார்த்த பின் நான் இந்த கம்பெனியில தானே வேலை பார்த்துட்டு இருந்தேன்.

இவளை என் கல்யாணத்துக்கு முன்னவே பார்த்து இருக்க கூடாதா… அப்படி என்னால நினைக்காம இருக்க முடியல ராஜா. புனிதா மட்டும் என் வாழ்க்கையில் வராம இருந்து இருந்தா…” என்று சொல்லி விட்டு ஒரு பெரும் மூச்சு விட்டு எல்லாம் தன் விதி என்பது போல் தலை குனிந்து கொண்டார்.

ராஜாசேகர் கேட்ட… “ அந்த பொண்ணுக்கும் உன்னை பிடிச்சி இருக்கா…?” என்ற கேள்வியில் தலை நிமிர்ந்து பார்த்த சந்திரசேகர்.

“ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்கு.” என்று சொன்ன நண்பனின் கை பற்றிய ராஜசேகர்..

“அந்த பெண்…” என்று ஆராம்பித்த ராஜசேகர் பின்…

“அந்த பெண். அந்த பெண் என்றே சொல்லிட்டு இருக்கியே… அந்த பெண் பெயர் என்ன…?” என்ற கேள்விக்கு…

“ஜெய்சக்தி.” ஜெய்சக்தி என்று அவள் பெயர் சொல்லும் போதே அந்த பெயருக்கும் நோகுமோ என்பது போல் அவ்வளவு மென்மையா சந்திரசேகர் சொன்னான்.

சந்திரசேகர் பேச்சிலேயே அவனுக்கு அந்த பெண்ணை எந்த அளவுக்கு பிடித்து இருக்கு என்பதை அறிந்துக் கொண்ட ராஜசேகர் திரும்பவும் உறுதி படுத்தும் வகையில் …

“அந்த பெண்ணுக்கு உன்னை பிடிச்சி இருக்குன்னு அவளே சொன்னாளா…?” என்று கேட்டதற்க்கு,

“இல்லை.” என்று சந்திரசேகர் சொன்னதும் ராஜசேகருக்கு சப் என்று ஆகியது.

“ அப்போ ஏன்டா அந்த பொண்ணுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். உன்னை மட்டும் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்பது போல சொன்ன…?” என்று கேட்டதற்க்கு,

“இல்ல அவ என் கிட்ட அவ காதல சொல்ல தான் வந்தாள். ஆனா நான் அதை சொல்ல விடாம வேறு விசயம் பேசி ஒரு விதமா சமாளிச்சிட்டேன். என்று சொன்னவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட ராஜசேகர்.

“ஏன்டா அப்படி பண்ண…? நல்ல சான்சை மிஸ் பண்ணிடியேடா…”என்று சொன்னதும் அவன் என்னை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே…

“ஜெய் என் கிட்ட அவள் விருப்பத்தை சொன்னா என் கிட்ட பதில் இல்லையடா…” என்று வருத்தமான குரலில் சந்திரசேகர் சொல்ல…

“ஏன் உனக்கும் தானே அவளை பிடிச்சி இருக்குன்னு சொன்ன...அவள் காதலை சொன்ன உடனே நீயும் உன் விருப்பத்தை சொல்ல வேண்டியது தானேடா முட்டாள்.” என்று நண்பனை ராஜசேகர் திட்டினார்.

அப்போதும் சந்திரசேகர் ராஜசேகர் மீது செலுத்திய அந்த பார்வையை மாற்றது…

“எனக்கு கல்யாணம் ஆகி இப்போ நான் ஒரு குழந்தைக்கு தந்தையும் ஆக போறேன்டா...நான் ஒன்னும் பேச்சுலர் கிடையாது. அவள் காதல் சொன்னதும் அதை ஏத்துக்க…” என்று அன்று தனக்கும் சந்திரசேகருக்கும் நடந்த உரையாடலை சொல்லி முடித்த ராஜசேகர்.

“நிஜமா உதய், சந்திரா புனிதாவை நியாபகம் படுத்தாத வரை எனக்கு அவன் திருமணம் ஆனவன் என்ற யோசனையே எனக்கு வரல. அதுக்கு காரணம் சென்னையில் யாருக்கும் அவனுக்கு திருமணம் ஆனது தெரியாது.

அதனால நாங்க பேசும் போது சந்திராவின் மனைவி பத்தி பேச்சே எழாது. அவனும் தன் மனைவி ஊரில் இருக்கா என்று மூச்சே விட்டது கிடையாது.

அப்போ தான் நான் யோசித்தேன். யார் யாரோ என்ன என்னவோ செய்யிறாங்க. என் நண்பன் இரண்டாம் கல்யாணம் செய்துக் கொண்டால் என்ன…?

அதுவும் அவன் சொன்ன என்னால முடியல. மனசு நிறஞ்சி திருமண வாழ்வு வாழும் நான் என் நண்பனுக்கு மட்டும் அந்த வாழ்க்கை மறுக்கபடுவானேன் என்று நான் அவன் கிட்ட என்னை உங்க ஆபிசுல லீகல் லாயரா சேர்த்து விட்டுடு...மத்ததை நான் பார்த்துக்குறேன்.

அன்னிக்கு உங்க அக்கா மாமா கல்யாணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது நான் தான்.” என்று சொல்லி முடித்து விட்டு ராஜசேகர் உதய் முகத்தை பார்த்தார்.

இது வரை ராஜசேகர் சொல்வதை அவர் முகத்தை பாராது தன் பிணைந்து இருந்த கையை மட்டுமே பார்த்துக் கொண்டு, அவர் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்த உதயேந்திரன், ராஜசேகர் பேச்சு முடிந்ததும், தன் இரு கை விரல்களில் நெட்டு எடுப்பது போல் முறித்துக் கொண்டு, பின் அந்த கையை தன் பின் கழுத்தில் மெல்ல தடவிய வாறே…

“எங்க அக்கா மாமா உறவுக்கு நீங்க உதவி செய்ததுக்கு காரணம் உங்க நண்பருக்கு குடும்ப வாழ்வு திருப்தி இல்லை. அது தானே…” என்று கேட்ட உதயேந்திரன்..

பின்…”அது மட்டும் தானா…?” என்று அது மட்டும் தானா…? என்று உதயேந்திரன் ராஜசேகரை பார்த்து கேட்டுகும் போது உதய் பேச்சில் நக்கல் கொஞ்சம் தூக்கலாகவே தெரிந்தது.

உதயேந்திரன் பேச்சையும், அவனின் பார்வையும் தாங்க முடியாதவராய் தலை குனிந்து நின்ற ராஜசேகர் பின்… தயங்கி தயங்கி…

“நான் என்ன தான் லாயர் ப்ராக்டீஸ் செய்துட்டு இருந்தாலும், நான் சந்திரா மாதிரி அவ்வளவு வாழ்க்கையில முன்னேறல...அவனுக்கு திருமண வாழ்வு அடிவாங்கியது என்றால், எனக்கு என்னுடைய அச்சூவ் மென்ட்...வாழ்க்கையில நான் உயர்ந்து வரனும் என்ற என் நினைப்பு அடி வாங்கி நின்றது.

உங்க குழுமம் அது சென்னையில் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருக்கு. அதில் உங்க மாமாவோட இடம். இது எல்லாம் தெரிஞ்சி உங்க குழுமத்தில் நான் லாயரா வந்தா...கண்டிப்பா நான் நினச்சதை சாதிக்கலாம்.

அதே போல் சந்திரா ஆசை பட்ட பெண் அவனுக்கு கிடைக்கும். சந்திரா பேச்சில் இருந்து உங்க அக்காவுக்கும் ஆசை இருக்குன்னு தெரிஞ்சி கிட்டேன்.” என்று அவர் சொன்னதும்…

அவர் பேச்சில் கை தட்டிய உதயேந்திரன்… “வாவ்...வாட்ய ப்ளான். நீங்க கிரிமினல் லாயர் என்பதை எதில் நிருபிச்சிங்கலோ… இல்லையோ…. இதில் நிருபிச்சிட்டிங்க.

உங்க கணக்கு எல்லாம் சரி தான். ஆனால் ஒரு கணக்கு மெயின் கணக்கு பலமா இடிக்கல. புனிதா. சந்திரசேகரோட மனைவி புனிதா. அவர் மகள் கிருஷ்ணவேணி. அவங்க இரண்டு பேரையும் உங்க நியாபகத்துலேயே வரலையா…? இல்லை வந்தும் உங்க ஊருல கூட சொல்லுவாங்கலே…என்ன அது…?ம்… ஒரு உரை காப்பதனும் என்றால் ஒரு குடும்பத்தை பலி கொடுக்கலாம். ஒரு குடும்பத்தை காப்பத்த அந்த குடும்பத்துல இருக்குற ஒருத்தரை பலி கொடுக்கலாம் என்று.

அது போல் உங்க இரண்டு பேரோட சுய லாபத்துக்காக பலியானது புனிதா அவங்க வேணியும். சரி தானே…?

உதயேந்திரனின் எந்த பேச்சுக்கும் ராஜசேகரிடம் பதில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவன் சொல்வது ஒரு வகையில் உண்மையும் தான் என்று இப்போது காயத்ரியின் தந்தையாய் அவருக்கு எண்ண தோன்றியது. அவர் நினைத்ததிற்க்கு ஏற்ப தான் அடுத்த பேச்சான உதய் பேச்சு இருந்தது.

“உங்க பொண்ணு பாக்க நல்லா தான் இருக்கா…” என்று உதயேந்திரன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அதிர்ந்து போய் ராஜசேகர் உதய் முகத்தை பார்க்க… உதய் முகத்திலோ அவ்வளவு எள்ளல் சிரிப்பு.

“நான் ஒழுங்கானவன் கிடையாது. ஆனா யாரையும் நம்ப வெச்சி கழுத்தறுத்தவனும் கிடையாது. என்ன புரியலிங்கலா…? நான் யாருக்கும் கமிட்மென்ட் கிடையாது. எந்த பொண்ணையும் நான் கம்பல் பண்ணல. நான் வாழ்ந்த நாட்டில் இது போல் வாழ்க்கை என்பது சர்வசாதரணம்.

ஆனால் ஒருவருடன் உறவில் இருக்கும் வரை அவங்களுக்கு உண்மையா தான் இருப்போம். ஏதாவது ஒரு வகையில் எங்களுக்குள் சலிப்பு தட்டினா உண்மை சொல்லி பிரிஞ்சுடுவோம்.

ஆனா நீங்க செய்தது நம்பிக்கை துரோகம். நீங்க புனிதா அவங்களுக்கு மட்டும் இல்ல. அவங்க குடும்பத்துகே துரோகம் செய்து இருக்கிங்க. நீங்க உங்க பெண் அழகுன்னா என்னை அதிர்ந்து பாக்குறிங்க… உங்க கண்ணுக்கு நான் கெட்டவன்.

கவலை படாதிங்க உங்க பொண்ண நான் எப்போவும் தப்பா நினைக்கவே மாட்டேன். உண்மைய சொல்லுட்டுங்கலா...உங்க பெண் அழகு மட்டும் இல்ல. ரொம்ப வெகுளியான பெண்ணும் தான். எப்படி உங்களுக்கு இப்படி பட்ட பெண்…?” என்று யோசிப்பது போல் விரலை உதட்டும் மேல் வைத்து சிந்திப்பது போல் செய்த உதயேந்திரன் பின்… “ஒரு வேள காயூ அவங்க அம்மா போலவோ…” என்று கேட்டு விட்டு…

“இன்னும் நீங்க முழுசா சொல்லி முடிக்கல அங்கிள். அக்கா மாமாவை பார்த்து விரும்பி இருக்காங்க. அது வரை சரி தான். ஆனா கல்யாணம் ஆனவன் என்று தெரிந்தும் அவங்களையே கல்யாணம் செய்து இருக்காங்கன்னா …. ஏதோ இடிக்குதே…” திரும்பவும் யோசிப்பது போல் கண்ணை முடிய உதயேந்திரன் தன் ஒற்றை கண்ணை திறந்து…

“இதில் உங்க பங்கு ஏதாவது இருக்கா…? இருக்கனுமே…” என்று சொல்லி உதயேந்திரன் தன் பேச்சை நிறுத்தினான்.


























 
Active member
Joined
May 11, 2024
Messages
182
Ada paavi....idhuku ellam Karanam Rajasekhar ah👿👿👿 Avan life muneranum nu ivangala Jodi serthutana👿👿👿 nice interesting ud sis
 
Top