Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kambathu Ponnu...14

  • Thread Author
அத்தியாயம்….14

“ வெட்க படனுமா...? யாரு நானா…?” என்று உதயேந்திரனை பார்த்து கேட்ட கிருஷ்ணவேணி.

“ என்ன மிஸ்டர் பரமேஸ்வரர் உங்க மகன் இதுக்கே வெட்கமா இல்லையான்னு கேட்குறாங்க. இதுக்கே இப்படின்னா….?” வேணி உதயேந்திரனிடம் இருந்து தன் பேச்சை பரமேஸ்வரர் பக்கம் திருப்பினாள்.

பரமேஸ்வரர் வேணி விபச்சாரி வழக்கு என்று ஆரம்பிக்கும் போதே அவள் பேச்சு அடுத்து எதை நோக்கி செல்லும் என்று அறிந்தவராய் தடுத்து ஏதோ பேசுவதற்க்குள்,

தன் மகன் அந்த வார்த்தையில் முகத்தை அஷ்ட கோணலாக்கி வேணியை பார்த்து பேசியதில் அந்த, பெரிய மனிதருக்கு உண்மையின் தன் மகனின் குணம் தெரியாது தான் போயிற்று.

நாயகன் பட ஸ்டைலில் நம் மகன் நல்லவனா…? கெட்டவனா…? என்பது போல் மனதில் ஒரு புறம் ஆராய்ச்சி நடந்தாலும், இதில் தன் மகனை பற்றி ஒரு முடிவு வரும் முன், இப்பெண் வாய் திறக்க விட கூடாது என்று முடிவு செய்தவராய்..

“ ஏ பெண்ணே….?” என்று அவள் பேச்சை தடுத்து பேச வந்தார்.

ஆனால் அவர் பேச்சை வேணி தடுத்து நிறுத்தும் முன், உதயேந்திரன் தன் தந்தையிடம்… “ இந்த பெண்ணை அது மாதிரி மிரட்டினிங்கலா…?” தன் தந்தையை நேர்க் கொண்டு பார்த்து கேட்டான்.

அவன் குரலில் என்ன இருந்தது என்று மற்றவர்களால் அறிய முடியாதது போல் ஓங்கி ஒலித்தது.

வேணி விபச்சார வழக்கு என்று சம்மந்தமே இல்லாது பேசியது. பின் தான் அதை பற்றி வெட்கம் இல்லையா…? என்று கேட்டதற்க்கு, தன்னிடம் பதில் அளிக்காது, தன் தந்தையிடம் பேசியது. ‘எப்போது இது மாதிரி இவளிடம் பேசி இருப்பார். அதுவும் இந்த வயதில் பேசும் பேச்சா…?’

தன் தந்தை வேணியிடம் இப்படி பேசி இருக்க கூடும் என்பதை நினைத்தாலே ஏனோ உடல் நடுங்கியது. அதன் தாக்கத்தில் தான் அவன் குரல் நடுங்க தன் தந்தையிடம் கத்தினான்.

அதற்க்கு பதில் சொல்ல பரமேஸ்வரர் தயங்க. அவரின் இந்த அமைதி தன் சந்தேகம் உண்மை தான் போல் என்று அவன் திரும்பவும் அதை பற்றி பேச ஆராம்பிக்கும் வேளை…

“சீ..சீ என்ன மிஸ்டர் உதயேந்திரன் உங்க அப்பா கிட்ட நீங்கலே இப்படி கேட்கலாமா…? அவர் கேட்காததை கேட்டிங்கலான்னு கேட்டா அவர் மனசு எப்படி துடி துடிக்கும். பாருங்க நீங்க கேட்ட கேள்வியால் அவர் முகம் எப்படி வாடி விட்டது .” இது தான் என்று பிரித்தறிய முடியாத பாவனையில் பேசினாள் கிருஷ்ணவேணி.

இதனை கேட்ட உதயேந்திரன் பரமேஸ்வரரையும், வேணியையும் நம்ப முடியாத பார்வை பார்த்தான். அதனை பார்த்த வேணி…

“ நிஜம் மிஸ்டர் உதயேந்திரனின். உங்க அப்பா என் கிட்ட அப்படி எல்லாம் பேசலே…?” என்று உதயேந்திரனிடம் சொன்னவள்.

பரமேஸ்வரரை பார்த்து… “ என்ன மிஸ்டர் பரமேஸ்வரர் உங்க மகன் உங்களிடமே கேள்வி எல்லாம் கேட்குறார். அதுவும் நீங்க சொன்னதை நம்பாது போல பேசுறார். உங்கல பத்தி உங்க மகனுக்கு அதிகம் தெரியாதோ…” என்று தன் பேச்சை இழுத்து நிறுத்தியவள்.

“ ஓ... மேக்கிங் இந்தியா… ஸ்டேயிங் ஜெர்மனியா. அப்போ தெரியாது தான். தெரியலேன்னா என்ன...நான் சொல்றேன்.”

பரமேஸ்வரர் பதட்டமாக தன் பேச்சை தடுத்து நிறுத்த பார்த்ததிலேலே, பரமேஸ்வரரின் நாடியை கிருஷ்ணவேணி பிடித்து விட்டாள்.

“ என் மகன் கிட்ட உனக்கு என்ன பேச்சு…?”

“எங்க அம்மா கிட்ட நீங்க பேச்சு வார்த்தை நடத்தலாம். நான் உங்க மகன் கிட்ட பேச்சு வார்த்தை நடத்த கூடாதா…? இது எந்த ஊரு நியாயம் மிஸ்டர் பரமேஸ்வரர்.” வேணியின் இந்த பேச்சில் உதயேந்திரனுக்கு மெல்ல மெல்ல விசயம் புரிய ஆராம்பித்தது. புரிந்ததில் இது வரை தன் கண் செல்லா பகுதிக்கு சென்றது.

ஆம் இது வரை உதயேந்திரனின் பார்வை பவித்ரன், வேணி நாரயணன் சிவனேசன் பக்கம் தான் இருந்ததே ஒழிய.

கீழ்பார்வையிலேயே மத்திய வயதுடைய, அதுவும் தான் வரும் போது வேணியின் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த பெண்மணியை பார்க்கவே கூடாது என்று கங்கணம் கட்டியது போல் அவன் பார்வை புனிதா பக்கம் செல்லவில்லை.

தான் வந்த போது இருந்த மனநிலைக்கு மாறாக இப்போது புனிதா யார் என்பது போல் பவித்ரன் அம்மா வேணியின் அம்மா பக்கம் கொஞ்சம் தயங்கி அவர்களை பார்த்தான்.

பார்த்ததில் புனிதாவை தெரிந்துக் கொண்டான். மாமா இறந்தவுடன் புனிதாவின் அழகு அவர்கள் வீட்டில் விவாதிக்கப்பட்டது. அதை அவன் ஊன்றி கவனிக்கவில்லை என்றாலும் காற்று வாக்கில் அவன் காதில் விழுந்ததில் தெரிந்துக் கொண்டது புனிதா அழகு இல்லை என்பது.

சாரசரியோடு கொஞ்சம் நிறம் கம்மியாக கன்னம் ஒட்டி பல் கொஞ்சம் தூக்கலாய் புனிதாவை பார்த்ததும், பெரியவர்கள் எப்படி சந்திரசேகருக்கு இவர்களை ஜோடி சேர்த்தனர் என்பதே,

இவர்களை பிடிக்கவில்லை என்றால், கல்யாணம் செய்து இருக்க தேவையில்லையே. ஏன் இவர்களை திருமணம் செய்துக் கொண்டு, பின் தன் அக்காவையும் திருமணம் செய்துக் கொண்டு இரு பெண்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டும்.

புனிதாவை பார்வையால் அளந்துக் கொண்டு இருந்தவனின் காதில்…

“அத்த அம்மாவா உள்ளே கூட்டிட்டு போங்க.” என்ற வேணியின் பேச்சில், “ ஏன்…?” என்பது போல் அவளை பார்த்தான். புனிதா உள்ளே சென்றதை பார்த்து விட்டு, பின் உதயனை பார்த்த வேணி…

“ என்ன மிஸ்டர் உதயேந்திரன் உங்களுக்கும் எங்க அம்மாவை பார்த்தா பே...றவன் கூட எழுந்துக்க மாட்டான் என்பது போல் தான் தெரியிறாங்கலா…?”

குழப்பமான முகத்தோற்றத்தோடு… “பர்டன்…” சத்தியமாக உதயேந்திரனுக்கு வேணி சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரியவில்லை. தமிழ் பேசுவான் தான். ஆனால் இது போல் லோக்கலாக பேச தெரியாது.

திட்ட பயன் படுத்தும் ஒரு சில தமிழ் வார்த்தைகள் கூட உதயேந்திரனுக்கு புரியாது. அப்படி இருக்கும் போது இது போல் வார்த்தைகள் எல்லாம் பேசவே தயங்கும் , கூச்சம் வரும் வார்த்தைகள் அவனுக்கு எப்படி தெரியும்.”

“ஓ நீங்க ஜெர்மனி என்பது எனக்கு அப்போ அப்போ மறந்து போயிடுறது. பேல்….ரவன் வந்தா கூட எழுந்துக்க மாட்டான்னா…

நாம பார்த்தா அருவெருக்கப்படுவது மலம். அதை மத்தவங்க எதிர்க்க யாரும் செய்ய மாட்டாங்க. அந்த காலத்துல எல்லாம் வீட்டுக்கு வீடு கழிவறை எல்லாம் இருக்காது.

அப்போ இது எல்லாம் பொதுவெளியில் தான் செய்வாய்வாங்க. அப்படி தன் கழிவை வெளியே தள்ளும் போது அந்த பக்கம் யாராவது வந்தா குறிப்பா பெண்கள் வந்தா ஆண்கள் கூச்சப்பட்டு எழுந்து மறைவில் போயிடுவாங்க.

அது அவங்களும் கூச்சப்படுவாங்க, அந்த வழியா கடக்கும் அந்த பெண்களும் கூச்சத்தை தடுக்க செய்யும் அடிப்படை நாகரிகம்.” வேணி விளக்கம் சொல்லும் போதே உதயேந்திரனுக்கு அதற்க்கு உண்டான அர்த்தம் தெரிந்து தந்தையை அதிர்ச்சியுடன் பார்த்தான்.

பரமேஸ்வரருக்கோ தலைக்கு மேல் சென்ற பின் ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன என்ற நிலைக்கு தள்ளப்பட்டு அமைதியாக இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு எதுவும் பேசாது இருந்தார்.

“ என்ன மிஸ்டர் உதயேந்திரன் இதுக்கே ஷாக் ஆனா எப்படி…? இன்னும் இருக்கு இந்த பெரிய மனுஷர் சொன்னது. விபச்சார வழக்குல தள்ள நினச்சா , அதுக்கு கூட நீ லட்சணத்துல இல்ல. உன்னை பார்த்தா பே…வன் கூட எழுந்துக்க மாட்டாங்கன்னு சொல்லி இருக்கார் உங்க அப்பா.

அதுவும் எங்க தாத்தா, மாமா, அத்தை எல்லோர் கூட ,அந்த வக்கீலும் இருக்க. இதோ இப்போ இந்த பங்களா இது எனக்கு…” அடுத்து அவள் சொந்தம் இல்ல தான் என்ற வார்த்தையை கூட முடிக்க விடாது.

“ அப்போ ஏன் இங்கு வந்திங்க. என் மாப்பிள்ளை ஏதோ புத்தி கெட்டு தனமா சொத்தை உன் பேருக்கு எழுதினா, அப்படியே நாக்க தொங்க போட்டுட்டு குடும்பத்தோடு வந்துடுவிங்கலா…?” பரமேஸ்வரர் குடும்பத்தோடு, என்ற அந்த கடைசி வார்த்தை சொல்லும் போது அவரின் பார்வை நாரயணன் பக்கம் சென்றது.

“ அது தானே..ஏதோ புத்தி கெட்டு தனமா அவர் சொத்தை எழுதி வெச்சா இங்கேயே வந்து உர்கார்ந்துடுறதா…? ஒரு நியாயம் வேண்டாம்…” இப்படி பேசியது சாட்சாத் நம் கிருஷ்ணவேணியே தான்.

இந்த பேச்சு வார்த்தை நடக்கும் போது அனைவரும் எதுவும் பேசாது நாங்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டும் என்ற ரீதியில் தான் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அதுவும் உதயேந்திரன் வேணி சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிந்த பின் அடுத்து என்ன பேசுவது புரியாது...என்ன பேச என்று தெரியாது முழித்திருந்தான்.

வேணியின் பேச்சு காதில் விழுந்தாலும், ஒவ்வொரு வார்த்தைகளும் உள்வாங்கிக் கொள்ளவே அவனுக்கு நேரம் பிடித்தது என்றால், அதன் அர்த்தம் புரிய அவனுக்கு அதிக நேரம் பிடிக்க தானே செய்யும்.

பரமேஸ்வரரோ தான் பேசியது சரி தான் என்பது போல் பேசிய வேணியை நம்ப முடியாது பார்த்தார். அதற்க்கு தகுந்தார் போல் தான் அவள் பேசிய அடுத்த பேச்சு இருந்தது.

“ நீங்க அப்போ இந்த நியாயம் அநியாயம் எல்லாம் பார்த்து இருந்தா..இப்போ நான் இங்கு வந்து இருக்கவே மாட்டேன்.” பரமேஸ்வரரின் குழப்பமான முகத்தை பார்த்து..

“ என்ன புரியலைங்கல பெரியவரே… இது உங்க சொத்து உங்க சொத்துன்னு சொல்றிங்கலே...உங்க பொண்ணு எங்க அப்பாவை கை காட்டும் போது அவர் யார் சொத்தா இருந்தார்.”

பரமேஸ்வரரிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது உங்க பெண் என்ற போது வேணியின் பார்வை ஜெய்சக்தியின் முகத்திலேயே நிலைத்து நின்று விட்டது. அப்பார்வையில் தான் என்ன உக்கிரமம்.

“ சீ அவரை சொத்துக்கு இணையா சொல்றியே உனக்கு அசிங்கமா இல்ல…?” யார் எதை பற்றி பேசுவது என்று தெரியாது, எது அசிங்கம் என்பதின் சார்பாய் வாதிட ஜெய்சக்தி முன் வந்து பேச்சினாள்.

“ ஆமா ஆமா நீங்க சொல்வது ஒரு வகையில் சரி தான். சொத்து யாருக்கு வேணா கொடுக்கலாம். ஆனா கட்டின புருஷனை யாரும் மத்தவங்களுக்கு தாரை வார்த்து கொடுக்க மாட்டாங்க.” என்று ஜெய்சக்தியை வேணி எதிர்த்து பேசியதும், எங்கேயிருந்தோ வந்தவள் தன் பெண்ணை எதிர்த்து பேசுவதா என்ற கோபத்தில் இன்னும் வார்த்தைகளை அள்ளி வீசினார் பரமேஸ்வரர்.

“ என் மாப்பிள்ளை அழகுக்கு போயும் போயும் உங்க அம்மாவை உன் தாத்தா கட்டி வெச்சி அவர் வாழ்கைய பாழாக்கி விட்டார். இவ்வளவு நியாயம் பேசுறியே…. நீயே சொல். என் மாப்பிள்ளை அழகுக்கு உன் அம்மா இணையாவாளா…? அப்படியே அவர் பிரம்மச்சாரியாவே இருந்திடுனுமா…?”

இவ்வளவு நேரம் அவர் என்ன தான் பேசுகிறார் என்று பார்ப்போம் என்று தன் கோபத்தை அடக்கி பரமேஸ்வர்ர் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்த வேணி.. அவர் சொன்ன பிரம்மாச்சாரி என்ற வார்த்தையில்..

“ என்னது பிரம்மச்சாரியா…?” என்று நக்கலாய் ஒரு கேள்வி கேட்டவள் பவித்ரனை பார்த்து கண் ஜாடை செய்ய…

பவித்ரன் அப்பாவை பார்த்து…” தாத்தாவ கூட்டிட்டு ரூமுக்கு போங்கப்பா அவர் ரொம்ப ஓஞ்சி போய் தெரியிறார் பாருங்க.” அங்கிருந்து அவர்கள் செல்லும் வரை பொறுத்திருந்த வேணி…

“ திரும்பவும் சொல்லுங்க எங்க அப்பா பிரம்மாசாரியா இருந்தார். அதை நீங்க பார்த்திங்க…? அப்போ நான் என்ன வானத்துல இருந்தா குதிச்சேன்.”

அதற்க்கும் அந்த பெரிய மனுசர் வாய் கூசாது… “ அந்த வயசுல ஏதோ பக்கத்துல இருந்த உன் அம்மாவை தொட்டு இருப்பார். என் பொண்ணை தான் அவர் காதலிசார். அப்போ உன் அம்மாவை தொட்டது எதுவா இருக்குமுன்னு நீயே யோசி.”

வயதுக்கு தகுந்த நடத்தை தான் இல்லை என்றால், பேச்சு கூட, அதுவும் தன் பெண், மகன் பக்கத்தில் இருக்கும் போது பேச கூட கூசும் வார்த்தையை பேசி விட்டார்.

“அப்பா…” அந்த பங்களாவே அதிரும் படி கத்தி விட்டான் உதயேந்திரன். பவித்ரன் தன் வயதுக்கு மீறிய பக்குவம் உடையவன் தான். ஆனால் இது மாதிரியான பேச்சு.

அதுவும் தன் அத்தை பற்றிய அந்தரங்கம். இது போல் பொதுவில் விவாதிக்கப்படுவது. அதுவும் அவரின் தோற்றத்தை தாழ்த்தி...இதற்க்கு என்ன செய்வது என்று தெரியாது யோசித்தவன், பின் ஏதோ நினைவில் வந்தவனாய் அதிர்ந்து கிருஷ்ணவேணியை பார்த்தான்.

அவன் நினைத்தது போல் கண் இரண்டும் ஒரு நிலையில் நிலைத்து நிற்க. கண் அசையாது அதிர்ந்து போய் நின்று இருந்தாள் வேணி.

வேணியோ நானும் பேசினேன் தான். வயதுக்கு மீறி பேசினேன் தான். ஆனால் பதிலுக்கு இப்படி அதுவும் இந்த வயதிலும் இப்படி பேசுகிறார் என்றால், அந்த வயதில் என் அன்னையை எப்படி பேசி இருப்பார்.

தன் அன்னையை பேசியது நினைவில் வந்ததும், தன் அன்னையை அப்படி பேசி வாய் அடைத்தார். இன்று என்னை இப்படி பேசி வாய் அடைக்க பார்க்கிறாரோ… நான் புனிதா இல்லை. இந்த பேச்சுக்கு கூச்சப்பட்டு ஒதுங்கி போக நான் கிருஷ்ணவேணி.

“ இப்போ நான் காதலுக்கு பிறந்தேனா…? காமத்துக்கு பிறந்தேனான்னு தெரிஞ்சிக்க தான் இங்கு வந்திங்கலா…?”

பரமேஸ்வரர் தன் மகன் கத்திய கத்தலிலேயே ஆடி போய் விட்டார். சரி நாம் தான் இந்த பேச்சு பேசி விட்டோம். இனி இவள் வாய் அடைத்து தானே ஆக வேண்டும் என்று நினைத்திருக்க, அதற்க்கு நேர் மாறாய்...வேணி இப்படி பேசியதும்,

‘என்ன இந்த பெண் நான் இப்படி பேசியும் அழாது. இப்படி தன்னையே கேள்வி கேட்கிறாள்…? மற்ற பெண் என்றால், நான் பேசியதுக்கு இந்நேரம் அழுது கொண்டு இருப்பர். என்ன செய்யது இந்த பெண்ணை விரட்டுவது…?’ என்று அவர் சிந்திக்க.

“அப்பா இனி நீங்க ஒரு வார்த்தை பேச கூடாது. அப்படி பேசினா…” என்று சொல்லி விட்டு தன் தந்தையை உற்று பார்த்தவன்.

பின் “ நானே அந்த பொண்ணுக்கு சப்போட் செய்யும் சூழ்நிலையை உருவாக்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன்.”

உதயேந்திரன் இப்படி சொன்ன பிறகும் பரமேஸ்வரர் வாய் திறப்பாரா என்ன….? வேணியை வாய் அடைக்க வைக்கிறேன் என்று வந்த பரமேஸ்வரரே வாய் அடைத்து சென்றார்.

உதயேந்திரன் மட்டும் போகும் போது வேணியை ஒரு நிமிடம் பார்த்தவன், பின் தன் வேக நடையிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான். உதயனின் அந்த பார்வை முதலில் பார்த்த அந்த பார்வை கிடையாது.

வேணியின் இந்த பார்வையின் வேற்றுமையில் குழம்பி தான் நின்று போனாள்.

அன்று இரவு முழுவதும் உதயேந்திரனுக்கு சொட்டு தூக்கம் இல்லை. எந்த நிலையில் நான் இந்தியா வந்தோம். இன்று எந்த நிலையில் இருக்கிறேன்.

அதுவும் இந்தியாவில் தான் தங்க வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படும் போது, தன் மனநிலை அன்று எப்படி இருந்தது. இன்று என் மனநிலை…? இப்படி தன் மனநிலை ஆராய்சியிலேயே இரவை கழித்தவன்.

மறுநாள் விடிந்ததும் சென்ற இடம் ராஜசேகர் ஆபிஸ். அங்கு அவர் இல்லாது அவர் மகளான காயத்திரியை தான் உதயேந்திரன் பார்க்க முடிந்தது.










































 
New member
Joined
Aug 2, 2024
Messages
6
Parameshwar nee yellam … chi 😡😡😡 ..
veni super reply👏🏻👏🏻👏🏻
Mam big ud thanga pls
 
Top