Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kambathu Ponnu....15

  • Thread Author
அத்தியாயம்….15

“ வாங்க மிஸ்டர் உதயேந்திரன்.” என்று தன் பெயரை சொல்லி அழைத்த அப்பெண், அங்கு இருக்கும் இருக்கையை காட்டி… “ உட்காருங் சார்.” என்று உபசரித்தவளை உதயேந்திரன் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டே அப்பெண் காட்டிய இருக்கையில் அமர்ந்தான்.

“ சார் காபி… ?” எதிர் இருக்கையில், அமர்ந்துக் கொண்டே தன்னை உபசரித்தவளை பார்த்து உதயேந்திரன்…. “ அதெல்லாம் வேண்டாம். உங்க சார பாக்கனும்.” என்று நேரிடையாக விசயத்துக்கு வந்தான் உதயேந்திரன் .

“ பார்க்கலாம் மிஸ்டர் உதயேந்திரன். அப்பா கொஞ்ச நேரத்துல வந்துடுவார். இப்போ நான் காபி குடிக்கும் நேரம் தான். வித்..” தன் அனுமதி கேட்பது போல் கேட்ட அப்பெண், எதிரில் இருப்பவர்களின் பதிலை எதிர் பாராது…

தன் முன் இருக்கும் பேசியில் “ இரண்டு காபி.” நான் அனுமதி வழங்காமல் தனக்கும் சேர்த்து காபி ஆர்டர் செய்த அப்பெண் மீது உதயேந்திரனுக்கு ஏனோ கோபம் வரவில்லை.

சிரித்துக் கொண்டே… “ எனக்கு காபி பிடிக்காதுன்னா….?” தன்னை கேட்காது எப்படி நீ எனக்கும் சேர்த்து காபி ஆர்டர் செய்வாய் என்ற அர்த்தத்தில் தான் உதயேந்திரன் கேட்டது.

ஆனால் அந்த கேட்டதில், துளி அளவும் கோபம் கூட அவனுக்கு இல்லை. அதற்க்கு என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்டான் என்றும் சொல்லி விட முடியாது. ஆனால் உதயனின் பேச்சில் இலகு தன்மை இருந்தது.

அப்பெண்ணோ முகம் முழுவதும் பல் தெரிவது போல் தன் முப்பத்திரெண்டு பல்லையும் காட்டி… “ உங்களுக்கு டீ தான் பிடிக்காது. காபியில டிக்கேஷன் கொஞ்சம் தூக்கலாய். சக்கரை கம்மியா, பால் திட்டமா போட்டு கொடுத்தா நீங்க ரசிச்சி குடிப்பிங்க.” தன் டேஸ்ட்டை பிட்டு பிட்டு வைத்த அப்பென்னை இப்போது உதயேந்திரன் கொஞ்சம் சந்தேகத்துடன் பார்த்தான்.

இந்தியாவில் தான் பார்க்காது காதல். பார்த்த உடன் காதல். பழக பழக காதல்ன்னு, வித விதமா பேரு வெச்சி ஒன் சைட் லவ் செஞ்சாலும் ஏதோ அமர காதல் ரேஞ்சுக்கு பீல் செய்வாங்கலே...அதில் இந்த பெண் எந்த ரகம் என்பதாய் தான் அவன் எண்ணம் சென்றது.

அவன் எண்ண ஓட்டத்தை தடை செய்வது போல், “சார்…சார் நிறுத்துங்க. நிறுத்துங்க உங்க கற்பனையை கொஞ்சம் நிறுத்துங்க. உங்கல பத்தி அப்பா சொல்லி இருக்கார்.” என்று சொன்ன அப்பெண்.

பின் தன் நாக்கை கடித்துக் கொண்டவளாய்… “ நான் ஒரு முட்டாள். முதல்ல என்னை நான் அறிமுகம் செஞ்சுக்கவே இல்லையே…” என்று தன் தலையில் குட்டிக் கொண்டவள், உதயேந்திரன் முன் தன் கையை நீட்டி…

“ உங்க கம்பெனி லாயர் மிஸ்டர் ராஜசேகரோட ஒரே பெண் மிஸ் காயத்ரி.” என்று தன்னை அறிமுகம் செய்துக் கொண்டாள்.

நீட்டிய கையை பட்டும் படாமலும் கை குலுக்கிய உதயேந்திரன்…. “ நீங்களும் லாயரா…?” என்று உதயேந்திரன் கேட்டதுக்கு பதில் அளிக்காது, சுற்றியும் முற்றியும் பார்த்தவள், பின் ஏதோ கண்டு கொண்டவளாய் கண்கள் மின்ன எழுந்து ஒரு சேரில் இருந்த கருப்பு அங்கியை போட்டுக் கொண்டே..

“ மிஸ் காயத்ரி பி.ஏ. பி.எல்.” திரும்பவும் அவன் முன் கைய் நீட்டியவளை பார்த்து உதயேந்திரனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“சார் சிரிக்காதிங்க சார். சிரிக்காதிங்க.” என்ன தான் காயத்ரி கெத்து காட்டி பேசினாலும், அவள் குரல் குழந்தை பேசுவது போல் மழலை கலந்து தான் இருந்தது. முகமும் இப்போது தான் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்திருக்கும் டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் தோற்றம் தான்.

அதனால் தான் உதயேந்திரன் அப்பெண் பேசும் போது கோபப்படாது , தன் இயல்புக்கு மாறாக இலகு தன்மையில் பேசியது.

“ சாரி சாரி சிரிக்கல.” என்று சொல்லி தன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு அவளை பார்த்தான்.

காயத்ரியோ தன் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு இவனை பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்போது அனுமதி பெற்றுக் கொண்டு வந்த ஒரு பெண், அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த டேபிள் மீது தான் கொண்டு வந்த காபி ட்ரேயரை வைத்து விட்டு செல்ல பார்க்க,

காயத்ரி மிதப்பாய் அப்பெண்ணை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே… “ இது என்ன எடுத்துட்டு போல்” அந்த காபி ட்ரையரின் மூளையில் ஏதோ பேப்பர் சுத்தி இருந்ததை சுட்டி காட்டி சொன்னாள்.

அப்பெண் …”பேபி..” அன்று ஆராம்பித்தவள், காயத்ரி “உஷ்..உஷ்.” என்ற பாம்பு போல் சத்தமிட்டதில், “ மேடம் நீங்க எப்போவும் காபியில தொட்டு சாப்பிடுற புரை தான் மேடம் அது.”

பாம்பு சத்ததில் பேபியை மேடம் ஆக்கி அப்பெண் பேசினாலும், பேசிய பேச்சு காயத்ரியை புல் டேமேஜ் ஆக்கி விட்டது என்பது தான் அந்தோ பரிதாபம்.

“ யூ..யூ கெடாவுட். நீ சாப்பிடுறது எல்லாம் எடுத்துட்டு போ.” கம்பீரமாய் பேசுகிறேன் என்ற முயற்ச்சியில் காயத்ரி கத்தியதில், குரல் என்னவோ கீச் கீச் என்று தான் எதிரொலித்தது.

அப்பெண் சென்றதும்… “ வேலை செய்றவங்கல இப்படி மிரட்டலேன்னா நம்ம தல மேல ஏறி உட்கார்ந்துக்குவாங்க மிஸ்டர் உதயேந்திரன்.” ஏதோ பேசி மழுப்பி விட்டோம் என்று அந்த சந்தோஷத்தோடு…

“ காபி ஆறிட போகுது, எடுத்துக்குங்க மிஸ்டர் உதயேந்திரன்.” என்று சொன்னவள் பின் அவளே…

“ மிஸ்டர் உதயேந்திரன் இப்படி கூப்பிடுறது ரொம்ப நீட்டமா இல்ல. ஷாட்டா உதய்ன்னு கூப்பிடட்டுமா…?” என்று அவன் பெயரை சுருக்கி கூப்பிடுவதற்க்கு அனுமதி கேட்டவள்.

“ நீங்களும் என்னை மிஸ் காயத்ரி என்று நீட்ட எல்லாம் வேண்டாம். காயூன்னே கூப்பிடுங்க.” என்று தன் பெயரை சுருக்கி அழைக்கவும் அனுமதி தந்தாள்.

“சரி.” என்பது போல் தலையாட்டிக் கொண்டே அவள் கொடுத்த காபியை பருகினான். அந்த நேரத்துக்கு அந்த காபி அவன் டேஸ்ட்டுக்கு ஏற்ப இருந்ததில், காபியை துளி துளியாய் ரசித்து தான் குடித்துக் கொண்டு இருந்தான் லேசான புன்னகையோடு.

குடித்து முடித்தவன் தன் கை கடிகாரத்தை பார்த்துக் கொண்டே…. “ மிஸ்டர் ராஜசேகர் எப்போ வருவாங்க மிஸ்…” அவள் பெயரை முழுவதுமாய் சொல்ல விடாது.

“நோ நோ மிஸ். ஒன்லி காயூ.”

“ஒகே. ஒகே. காயூ மிஸ்டர் ராஜசேகர் எப்போ வருவார்.” என்று கேட்டதற்க்கு பதில் அளிக்காது.

“ நீங்க அப்பாவையும் அங்கிள்னே கூப்பிடலாமே…” என்று காயத்ரி கேட்டதுக்கு,

“ முடியாது. அவரை எல்லாம் பெயருக்கு முன் மிஸ்டர் போட்டு அழைப்பதே பெரிய விசயம்.” என்பது போல் உதயேந்திரன் சொன்னதும்,

“ ஆமா சார். எனக்கும் இப்போ அது போல் தான் சில சமயம் தோனுது.” அவனுக்கே ஆதரவாய் பேசியவளை சந்தேகத்துடன் பார்த்தான்.

அவன் பார்வையை பார்த்த காயத்ரி… “ நிஜம் சார். இப்போ எல்லாம் அவர் அனக்கு அப்பாவா இல்ல அந்த கிருஷ்ணவேணிக்கு அப்பாவா…? என்று சந்தேகமா இருக்கு.”

ஏதோ பேசுகிறாள் என்று கேட்டுக் கொண்டு இருந்த உதய், வேணியின் பெயர் வரவும்… “ ஏன் அப்படி சொல்றிங்க.” காயத்ரியின் முறைப்பில்,

“ ஏன் அப்படி சொல்ற காயூ.” என்று உதய் தன் அழைப்பை திருத்தி அழைக்கவும் தான் தொடர்ந்து…

“ பின் என்ன உதய். அவங்க வீட்டுல ஸ்வுமிங்.” என்று ஆராம்பித்தவள் பின் ஏதோ நினைவு வந்தவளாய்.

“ அவ உங்க மாமா பொண்ணு தானே…?” என்று வேணியை தன் சொந்தமாக்கியதும், உதயேந்திரன் குழம்பி தான் போனான்.

சந்திரசேகரை மாமா என்று தான் உதயேந்திரன் அழைப்பான். கீர்த்தி, க்ரீஷ் என்ற பெயர் மனதில் தோன்றினாலே அக்காவின் பிள்ளைகள் என்று தான் எண்ண தோன்றும்.

அவன் வளர்ந்த நாட்டில் பெயருக்கு முன் மிஸ்டர் போட்டு அழைப்பது தான் கலாச்சாரம். நெருக்கமானவர்களை அங்கிள், ஆன்டி, இந்த இரு அழைப்பிலேயே ஒட்டு மொத்த உறவுகளையும் அடக்கி விடலாம்.

புதியதாய் காயத்ரி உறவு முறை சொல்லி கேட்கவும் குழம்பியவன் பின் தெளிந்தனவாய். “ இல்லை.” என்று அவன் மறுக்கும் முன் காயத்ரியே…

“ ஓ சாரி சாரி. அந்த பொண்ணோட அம்மா வேறு இல்ல.” என்று தன் பிழையை திருத்திக் கொண்டாள்.

‘அதுக்கு நீ முதலிலேயே உறவு முறை சொல்லாமல் இருந்து இருக்கலாம்.” அப்படி தான் எண்ண தோன்றியது உதயேந்திரனுக்கு,

“ அந்தம்மா பொண்ணு வீட்ல ஸ்வுமிங் புல்லே ஒரு பெரிய மீன் இருக்காம். அதை கேட்டதும் காலையிலேயே அங்கு ஓடி போயிட்டார்.” காயத்ரி சொன்னதில் இப்போது தான் உதயேந்திரனுக்கு ராஜசேகர் வேணி வீட்டுக்கு அதவாது அந்த பங்களாவுக்கு சென்று உள்ளார் என்ற விவரம் தெரிந்தது.

“ அப்போ இப்ப வந்துடுவார் தானே….”

“அது தான் உதய் நான் சொல்ல வர்றேன். போனவர் வந்துடுவாருன்னு நான் இருக்க. நீங்க வர கொஞ்ச நேரத்துக்கு முன் தான் போன் செய்து பின் பக்கம் குடில் பக்கத்துல எதோ பாம்பு புத்து போல் ஆழாம இருக்கா அதை எல்லாம் சீர் செய்யனுமாம், அதனால அவர் வர கொஞ்சம் நேரம் ஆகுமுன்னு சொல்றார்.

நான் தெரியாம தான் கேட்குறேன் அந்த பொண்ணுக்கு என் அப்பாவை பார்த்தா எப்படி தெரியுது…? எங்க அப்பா எவ்வளவு பெரிய லாயர்.” இன்னும் என்ன அடுக்கி கொண்டு சென்று இருப்பாளோ…

“ ஹாலோ வாங்க வாங்க மிஸ்டர் உதயேந்திரன். வாங்க.” ராஜசேகர் உதயேந்திரனை உபசரித்துக் கொண்டு தன் இருக்கையில் அமர்ந்தவர். பின் தயங்கிய வாறு உதயேந்திரனை பார்த்தார். உதய் ஏதோ பிரச்சனை செய்ய வந்து இருப்பாரோ என்ற எண்ணம் ராஜசேகருக்கு,

அவர் கவலையில் அவர் இருக்க காயத்ரியோ… “ என்னப்பா தோட்ட வேலை எல்லாம் முடிச்சிட்டிங்கலா….ப்ளம்மிங் வேல இருந்தாலும் ஒரே முட்டா முடிச்சி கொடுத்துட்டு வந்து இருக்கலாமே…” என்று காயத்ரி கேட்டதும்,

சங்கடத்துடன் உதயேந்திரனை பார்த்துக் கொண்டே …” வாய மூடு. எந்த நேரத்துல என்ன பேசுறதுன்னு விவஸ்த்தை கிடையாது.” தன் மகளை எரிந்து விழுந்தார்.

ஏற்கனவே வேணியின் குடும்பம் சென்னை வந்தது பிடிக்காது, அவர்களை ஊரை விட்டு விரட்டிய பின் தான் நான் ஜெர்மனி போவேன் என்பது போல் இங்கு இருக்கிறான். அவன் எதிரில் இப்படி பேசி வைக்கிறாளே இப்பெண் என்று தன் மகளை மனதில் அர்ச்சணை செய்து முடிக்கும் வேளயில்…

“ பாம்பு ஏதும் இல்லையே…?” உதயேந்திரனின் கேள்வில் குழம்பி போய் அவனை பார்த்தார் ராஜசேகர்.

“ காயூ குடில் பக்கத்துல துளை இருக்குறதா சொன்னாங்க. அது தான் அது பாம்பு புத்து இல்லையே…?” என்று கேட்டவனை ஒரு மாதிரி பார்வை பார்த்துக் கொண்டே…

“இல்லை.” என்பது போல் தலையாட்டிய ராஜசேகர் தன் மகளை முறைக்கவும் தவற வில்லை.

இந்த பெண் நான் வருவதற்க்குள் என்ன என்ன பேசி வைச்சி இருக்கோன்னு தெரியலையே...ஒரு மாதமாக வீட்டில் இதே பஞ்சாயத்து தான். உங்களுக்கு நான் பொண்ணா…? அந்த பெண் பொண்ணான்னு…? அதை மனதில் வைத்து தன் மகள் உதயேந்திரனிடம் வேணியை பற்றி இன்னும் என்ன …என்ன ….பேசி வெச்சி இருக்கோன்னு தெரியலையே… அந்த பயம் தான் ராஜசேகருக்கு.

அதற்க்கு அவசியமே இல்லாது போல்… உதயேந்திரன்… “ மாமாவும் நீங்களும் சின்ன வயதுல இருந்தே பிரண்டா…?” உதயின் குரலில் ஆத்திரமோ கோபமோ இல்லை. ஏதோ தெரிந்துக் கொள்ளும் வகையாக தான் அவன் பேச்சி இருந்ததில்,

“ஆமாம். சின்ன வயசுல இருந்து பிரண்ட்.” என்று அவர் ஏதோ இன்னும் சொல்ல வர அதற்க்குள் காயத்ரி….

“ அது தான் உதய் அது தான். அந்த பொண்ணு உட்கார்ந்தா சந்துரு மாதிரியே இருக்கா.. எழுந்தா சந்துரு மாதிரியே இருக்கா...ஏன் இதோ இப்படி நாம தலையில சொறிவோமே அது கூட அப்படியே இருக்கா…

தலையில பேன் கடிச்சாலோ...பொடுகு இருந்தாலும் சொறிய போறோம். இதுல என்ன அப்படியே சந்துரு மாதிரி இருக்குன்னு எனக்கு தெரியல உதய்.” தன் ஆதாங்கத்தை கொட்ட ஆள் கிடைத்து விட்டது என்ற சந்தோஷத்தில் மடை திறந்த வெள்ளம் போல் சொல்ல ஆராம்பித்து விட்டாள்.

வீட்டில் வேணியை இந்த ஊரை விட்டு அனுப்ப உதய் முயன்றுக் கொண்டு இருக்கிறான் என்று தந்தை தன் தாயிடம் பேசி கேட்டு இருக்கிறாள். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் உதயேந்திரனிடம் கை கோர்க்க நினைத்தாள்.

ராஜசேகருக்கோ தன் மகள் உதயேந்திரனிடம் இப்படி பேசுவது கோபம் என்றால், அவனை பேர் சொல்லி அதுவும் சுருக்கமாக அழைத்து பேசியதில் தலை சுற்றி போனார்.

அடுத்து உதயேந்திரன் பேசிய… “ காயூ உங்க அப்பா கிட்ட நான் முக்கியமான விசயம் பேசனும். நாம அப்புறம் வெளியில் எங்காவது பேசலாமா…” ஏதோ காலம் காலமாய் வந்த நட்பு போல் உதயேந்திரன் பேசி வைத்ததில் ராஜசேகர் மயக்கம் வந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

அதுவும் தன் மகள் உதய் என்று அழைப்பதும், உதயேந்திரன் காயூ என்று அழைப்பதும்.இவர் முதலில் வந்த போதே தன் மகளை செல்ல சுருக்கமாய் உதயேந்திரன் அழைத்ததை ராஜசேகர் கவனிக்காது இப்போது அழைத்ததில், இது எங்கு போய் முடியுமோ…? கொஞ்சம் பயந்து கூட போனார் எனலாம்.

தந்தை சொல் பேச்சு கேட்காத காயத்ரி, உதய் சொன்னதும் சரி என்பது போல் தலையாட்டி விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றதும்…

மீண்டும்… “ மாமாவை உங்களுக்கு எப்போ இருந்து தெரியும்…?”என்று முதலில் கேட்ட கேள்வியையே திரும்வும் வேறு மாதிரி கேட்டான்.

“ எப்போ இருந்துன்னா சின்ன வயசுல இருந்தே. வயது எல்லாம் சரியா தெரியல. அதாவது வயசு என்னன்னு புரியாத வயசுல இருந்தே நானும் அவனும் பிரன்ஸ்.

ஒரே தெரு, ஒரே பள்ளி ஒரே காலேஜிம். காலேஜிக்கு சந்துருவை சென்னை அனுப்ப மாமாவுக்கு விருப்பமே இல்ல.” என்று ராஜசேகர் சொல்லிக் கொண்டே போக…

“மாமா…?” யார் என்பது போல் இடை மறித்து கேட்ட உதயேந்திரனுக்கு ஒரு புன்னகையுடன் “ சந்துரு அப்பாவை நான் மாமான்னு தான் கூப்பிடுவேன்.” என்று சொன்னவர்.

பின் ஒரு கசந்த புன்னகையுடன்… “ புனிதா என்னை அண்ணான்னு தான் கூப்பிடுவா…” என்று ராஜசேகர் ஏதோ நினைவில் சொன்னார்.

“அவங்களையும் சின்ன வயசுல இருந்து தெரியுமா…?”

“ம் சந்துருவுக்கு அத்தை மகள் தான் புனிதா. புனிதா அண்ணாவை தான் சுகுனாவுக்கு கல்யாணம் செஞ்சாங்க.”

“சுகுனாவா...யார் அவங்க…?”

தன் அக்காவை திருமணம் செய்து கொடுத்த குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர் கூட தெரியாது. இதோ இப்போது தான் ஒவ்வொரு பெயராய் கேட்டு தெளிவு படுத்திக் கொண்டு இருக்கிறான். அதுவும் மாமா இறந்த பின்.

“ சுகுனா பவித்ரனின் அம்மா. அதாவது பெண் கொடுத்து பெண் எடுத்தது. புனிதா அப்பா சின்ன வயசுலேயே இறந்து விட்டதால் , இருவரும் மாமா வீட்டில் தான் வளர்ந்தார்கள்.” என்று தன் பேச்சை நிறுத்தியவர். வேறு ஏதாவது தெரியனுமா என்பது போல் உதயேந்திரனை பார்த்தார் ராஜசேகர்.

“ இப்படி ஒன்னுக்குள்ள ஒன்னா பழகிட்டு, எப்படி என் அக்காவை உங்க பிரன்ட்டு கல்யாணம் செய்யும் போது அவங்களுக்கு தெரியப்படுத்தல…?”

இது வரை தங்கு தடை இன்றி பேசிக் கொண்டு வந்த ராஜசேகர் உதயனின் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது திணறிய பின்..

“மிடில் க்ளாஸ்ல இருந்து வந்த, அதுவும் கிராமத்துல இருந்து சென்னை வந்த இளைஞன் கனவு எல்லாம்.வாழ்க்கையில் நாம் உயர்ந்த இடத்துக்கு வரனும். எல்லோரும் நம்மை அன்னாந்து பாக்கனும். எல்லோரு நம்மல மதிக்கனும் என்பது தான். சந்துருவும் நானும் அதே கனவோடு தான் சென்னையில ஒன்னா தங்கி இருந்தோம்.” இந்த வார்த்தை ஏதோ ஒரு வகையில் உதயேந்திரனை பாதித்தது எனலாம்.

“ அப்போ மாமா பணத்துக்காக தான் என் அக்காவை கல்யாணம் செய்தாங்கலா…?” என்ற உதயின் கேள்விக்கு ராஜசேகரி பதில் என்னவாய் இருக்கும்.






















 
Top