Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kambathu Ponnu...18

  • Thread Author
அத்தியாயம்….18

ஒரு கையில் அலைபேசியும் மறுகையில் நாரயணனின் மருத்துவகோப்பையும் வைத்துக் கொண்டு இருந்த பவித்ரன்

“ சீக்கிரம் வேணி இன்னும் என்ன அங்க செஞ்சிட்டு இருக்க…” வீட்டுக்கு உள் குரல் கொடுத்தவன், பேசியின் அந்த பக்கம் இருந்த ராஜசேகரிடம்…

“ என்ன மிஸ்டர் ராஜசேகர் காலையிலேயே எங்க நியாபகம்”

இப்போது எல்லாம் பவித்ரன் தன் கோபத்தை ராஜசேகரிடம் இப்படி நைய்யாண்டியாக பேசி தான் தீர்த்துக் கொள்கிறான்.

அவன் நக்கலை காதில் வாங்கத ராஜசேகர் …

“இன்று மாமாவுக்கு செக்கப்புக்கு ஜெய் ஆஸ்பிட்டலுக்கா கூட்டுட்டு போற…?” நேரிடையா இப்படி கேட்ட ராஜசேகரை என்ன செய்தால் தகும் என்பது போல் இந்த பக்கம் பேசிக் கொண்டு இருந்த பவித்ரனுக்கு தோன்றியது.

“ என்ன சார். என்ன உங்க பிரச்சனை நாங்க எங்கே போறோம். எங்கே வரோம், என்று விசாரிச்சி சொன்னா ஏதாவது பெரிதா கவனிக்கிறேன்னு அந்த பக்கம் சொன்னாங்கலா…?” ஆத்திரம் உள் அடங்கிய குரலில் பவித்ரன் கேட்டான்.

“ இல்ல தம்பி.” என்று அவர் ஏதோ பேச முற்படும் போது அதை இடைமறித்த பவித்ரன்… “ உங்க கிட்ட முதலிலேயே சொல்லி இருக்கேன் மிஸ்டர் ராஜசேகர். இது போல் தம்பி எல்லாம் அழைக்க கூடாதுன்னு. கால் மீ மிஸ்டர் பவித்ரன். ஓகே.” நீங்க இப்படி தான் அழைக்க வேண்டும். அழைத்தாக வேண்டும் என்ற கட்டளை இருந்தது பவித்ரனின் பேச்சில்.

“ சரி த.” தம்பி என்று ஆராம்பித்தவர், அதை திருத்தியவராய்..

“ மிஸ்டர் பவித்ரன் நீங்க உங்க தாத்தாவை ஜெய் ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போறதா கேள்வி பட்டேன்.”

முதல் போல் வேவு பாக்குறிங்கலா…? என்று கேட்காது… “ ஆமாம் மிஸ்டர் ராஜசேகர். அதை கேட்கவா காலையிலே அழச்சிங்க. இந்த டாக்டர் கிட்ட அப்பாயிண்ட் மென்ட் வாங்க அலஞ்சி அது இன்னிக்கு தான் கிடச்சி இருக்கு. அவர் அப்பாயிண்ட் மென்ட் நேரம் முடிவதற்க்குள் கொஞ்சம் போனை வைத்தால் நான் கிளம்ப வசதியா இருக்கும்.” என்று பணிவாக பேசுவது போல் பேசி, ராஜசேகரை அவமதிப்பாய் பேசினான் பவித்ரன்.

இப்போது எல்லாம் பவித்ரன் பேச்சு ராஜசேகருக்கு பழகி விட்ட போல் அதை எல்லாம் கண்டுக் கொள்ளாது.. “ அது தான் மிஸ்டர் பவித்ரன் நீங்க அப்பாயிண்ட் மென்ட் வாங்குன டாக்டரோட, கார்ட்லாஜிக்கு ரொம்ப பேமஸ் ஆன டாக்டர் கிட்ட உங்க தாத்தாவுக்காக நான் முன் பதிவு வாங்கி இருக்கேன். இன்னும் அரை மணி நேரத்தில் நீங்க அவரை போய் பார்க்க வேண்டும்.” என்று சொன்ன ராஜசேகர் தான் முன் பதிவு செய்த மருத்துவைன் பெயரையும் சொன்னார். ராஜசேகர் சொன்னது போல் மிகவும் புகழ் வாய்ந்த மருத்துவர் தான். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. பவித்ரனுக்கு சந்தேகம் எல்லாம் ராஜசேகர் மீது தான்.

ஜெய் மருத்துவமனையில் தான் வாங்கி இருக்கும் அதே நேரத்துக்கு இவர் வேறு ஒரு மருத்துவரிடம் முன் பதிவு வாங்கி இருக்கிறார் என்றால்..

இது தன் தாத்தாவின் மீது அவருக்கு இருக்கும் அக்கறை என்று நினைக்க பவித்ரன் ஒன்றும் முட்டாள் இல்லையே…

“ நான் போகும் ஹாஸ்பிட்டலில் யார் வரப்போறாங்க மிஸ்டர் ராஜசேகர் …?” என்று கேட்டவன் பின் அதையே மாற்றி…

“ இல்ல வந்துட்டாங்கலா …?” இந்த குறுகிய காலத்தில் பவித்ரன் ராஜசேகரை பற்றி அறிந்ததோடு, சிறு வயது முதல் தன் குடும்பத்தோடு அவர் நெருங்கி பழகியது.

பின் தன் சுயநலத்துக்காக தன் குடும்பத்துக்கு செய்த மிக பெரிய துரோகம். இதை எல்லாம் தன் அப்பா அம்மாவிடம் இவன் தூங்கி விட்டான் என்று கருதி இவனை நடுவில் போட்டுக் கொண்டு கணவனும், மனைவியும் பேசிய போது தெரிந்துக் கொண்ட விசயங்கள்.

அப்படி சிறு வயது முதலே ராஜசேகரை பற்றி நன்கு தெரிந்த பவித்ரன் இப்போது அக்கறையாக மிகப்பெரிய மருத்துவரிடம் முன் பதிவு வாங்கி இருக்கேன் என்று சொன்னா, மயங்கிட நான் என் அப்பா மாதிரி இல்லேடா… உன் அப்பனுக்கு அப்பன் என்பது போல் தான் பவித்ரனின் பேச்சு இருந்தது.

“ நீங்க போக இருக்கும் ஹாஸ்பிட்டல் S.K க்ரூப்புக்கும் ஷேர் இருக்கு.” என்று ராஜசேகர் உண்மையை போட்டு உடைத்ததும்,

“ இதை முதல்லயே சொல்ல கூடாதா மிஸ்டர் ராஜசேகர்.” என்ற பவித்ரனின் பேச்சு ராஜசேகருக்கு கொஞ்சம் நிம்மதியை ஏற்படுத்தியது.

நாம் பவித்ரனை பற்றி கணித்தது சரி தான். பைய்யன் தான் ரோஷக்காரன் ஆயிற்றே...இந்த சொத்தை வேணியிடம் கொடுக்கவே நாம் எவ்வளவு கஷ்டப்பட்டோம். அது அவர்கள் மருத்துவமனை என்று சொன்னால் அந்த பக்கம் தலை கூட வைக்க மாட்டான் என்று நாம் நினைத்தது சரி தான் என்று ராஜசேகர் ஆசுவாசம் அடையும் வேளயில்..

“ அந்த டாக்டர் கிட்ட முன்பதிவு வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா மிஸ்டர் ராஜசேகர். அந்த க்ரூப்பின் ஷேரை இவ்வளவு வைத்து இருக்கும் நாங்க ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்.

சரி தகவல் சொன்னதுக்கு ரொம்ப தேங்ஸ். டாக்டர் அப்பாயிண்ட் மென்டுக்கு நேரம் ஆயிடுச்சி.” பவிதரன் தன் பேசியை அணைத்ததும், இந்த பக்கத்தில் இருந்த ராஜசேகருக்கு இவன் எப்படி பட்டவன்டா… அந்த உதயேந்திரனை கூட ஒரு கணிப்பு கணித்திடலாம் இவனை அய்யோ என்றானது ராஜசேகருக்கு.

லா புக்கை படிக்கிறேன் என்று தந்தையின் முகமாற்றத்தை படித்துக் கொண்டு இருந்த காயத்ரி… “ சேதாரம் பலமோ.” என்று கேட்டதோடு, கிண்டலாய் ஒரு நமுட்டு சிரிப்பும் சிரித்து வைத்தாள்.

“ என் கிட்ட ப்ராக்டீஸ்சுக்கு வந்த வெளி பசங்க எல்லாம், நல்லா கத்துக்கிட்டு தனியா ப்ராக்டீஸ் செய்யிறாங்க. ஆனா நீ எந்த எந்த குற்றத்துக்கு எந்த செக்க்ஷன்னு கேட்டா, இன்னும் புக்க பார்த்து தான் சொல்ற. கையில் இருக்க புக்கை ஒழுங்கா படி.” பவித்ரனிடம் காட்ட முடியாத தன் கோபத்தை தன் மகளிடம் காட்டினார் அந்த தந்தை.

“ என்னங்க…” தன் கணவருக்கு டையினிங் டேபுளில் காலை உணவை எடுத்து வைத்துக் கொண்டு இருந்த ராஜசேகரின் மனைவி வைதேகி தன் கணவர் மகளை திட்டியதும் தன் ஆசை மகளின் முகம் வாடுவதை பார்த்து அதிட்டினார் என்பதோடு ஆதாங்க பட்டார் என்று சொல்லலாம்.

ராஜசேகரும் அப்போது தான் தன் மகளின் முக வாட்டத்தை பார்த்து வருந்தியவராய் மகளின் அருகில் சென்றவர் மகளின் தலை கோதியவராய்…

“ கண்ணம்மா அப்பா ஏதோ டென்ஷன்ல அப்படி சொல்லிட்டேன். மனசுல வெச்சிக்காதே செல்ல குட்டி.” என்று மகளை சமாதானம் செய்தார்.

“ அதான்பா அதான் ஏன் இப்போ எல்லாம் இப்படி எப்போவும் டென்ஷனிலேயே இருக்கிங்க. யாருப்பா அவங்க….? நமக்கு யாரு...?

சந்திரசேகர் அங்கிள் உங்க பிரண்ட். அம்மா ஏதோ சொன்னாங்க. அந்த பொண்ணு சந்திரசேகர் அங்கிளோட பொண்ணு. அங்கிள் எழுதி வெச்ச உயில அந்த க்ரூப்பின் லாயரா அந்த பொண்ணுக்கு கொடுக்கிறிங்க. அது வரை எல்லாம் சரி தான் .

ஆனா அந்த பொண்னோட ஒரு சின்ன கைய்யெழுத்துக்கு கூட அந்த பேப்பர தூக்கிட்டு நீங்கலே அந்த பொண்ணு இருக்கும் இடத்துக்கு போவிங்கலா…?

அந்த பொண்ணு கையெழுத்து வேணுமுன்னா அந்த பொண்ண உங்க இடத்துக்கு வர வழைங்க. இல்ல உங்க ஜூனியர் கிட்ட கொடுத்து விடனும். நீங்க சென்னையில எவ்வளவு பெரிய லாயர். நீங்க இப்படி போறது எனக்கு சுத்தமா பிடிக்கலேப்பா…”

கிருஷ்ணவேணி சென்னை வந்ததில் இருந்து, தன் தந்தையின் மாற்றத்தை பார்த்து மனதில் மட்டுமே புழுங்கி கொண்டு இருந்த காயத்ரி தன் ஆதாங்கத்தை அனைத்தும் தன் தந்தையிடம் கொட்டி விட்டாள்.

“ நான் வேணியே ஒரு கிளையண்டா மட்டும் பார்க்கலடா. என் பொண்ணா பாக்குறேன்.” இப்படி சொன்ன ராஜசேகர் . தன் மகள் இதை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று தெரியவில்லையே.. என்று நினைக்கு போதே…

“ஓ அப்படியா…?” என்று ராகம் போட்ட காயத்ரி.

“ அப்போ அவங்கல நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரலாமே… எனக்கு ஒன்டியா ரொம்ப போர் அடிக்குது. வேணி என்னோட சின்னவளா இருந்தா பேர் சொல்லி கூப்பிடுறேன். பெரியவளா இருந்தா அக்கான்னு கூப்பிடுறேன்.

ஒரு நாள் அவங்க வீட்ல இருக்குறவங்கல எல்லோரையும் கூப்பிடுங்கப்பா. அவங்களுக்கு ஒரு விருந்து வெச்சிடலாம். என்னம்மா சொல்றிங்க. விருந்த ஜாமிச்சிட மாட்டிங்க…” காயத்ரி தன் தந்தையிடம் ஆராம்பித்த பேச்சை தன் தாயிடம் முடித்து வைத்தாள்.

இதற்க்கு ராஜசேகர் என்ன சொல்வார். அவர்கள் என்னை ஒரு மனிதனாய் கூட மதிக்க வில்லை. நான் கூப்பிட்டால் வர மாட்டார்கள். அதுவும் என் வீட்டு வாசப்படியில் கூட அவர்கள் கால் படாது என்றா…

ஏதோ சொல்ல ஆராம்பித்த தன் தந்தையை… “ எனக்கு தெரியும்பா..அவங்க உங்கல ஒரு மனுஷனா கூட மதிக்கிறது இல்லேன்னு. என் அப்பா மத்தவங்க முன்னாடி இப்படி இறங்கி போறது எனக்கு சுத்தமா பிடிக்கலப்பா…?” தன் கையில் உள்ள புத்தகத்தை தான் அமர்ந்து இருந்த இருக்கை மீது தூக்கி போட்ட காயத்ரி தன் அறை நோக்கி சென்று விட்டாள்.

*********************************************************

“ என்ன பவி என்ன சொல்றாரு…” தாத்தாவின் கை பிடித்து கார் வரை நடந்து வந்துக் கொண்டு இருந்த வேணி பவித்ரனிடம் கேட்க.

“நாம போற ஆஸ்பிட்டலிலும் S.P க்ரூப்பின் ஷேர் இருக்காம்.” பவித்ரன் சொன்னதை கேட்டதும், நாரயணன் கைய் பற்றி நடந்து வந்துக் கொண்டு இருந்த வேணியின் நடையில் கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது.

பின் என்ன நினைத்தாளோ தன் தோளை குலுக்கிக் கொண்டவளாய் காரில் தன் தாத்தாவை அமர வைத்து விட்டு தானம் அமர்ந்தவள் அதற்க்கு பின் ஒரு வார்த்தை கூட பவித்ரனிடம் பேசவில்லை.

ஜெய் மருத்துவமனையில் க்ரீஷ்க்கு இனி உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்றானதும், வி.ஐ.பி அறைக்கு மாற்றப்பட்டதும்.

உதயேந்திரன் …. “ நீங்க வீட்டுக்கு போங்கப்பா . நான் பார்த்துக்குறேன்.” உதய் முதலிலேயே ஜெய்சக்தி, கீர்த்தி, கஜெந்திரன், வாணி அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி விட்டான்.

தன் தந்தையையும்.. “ நீங்க வீட்டுக்கு போங்க இங்கே நான் பார்த்துக்குறேன்.” என்று சொல்லியும்,

“ என் பேரனை அறைக்கு மாத்தினதை பார்த்துட்டு தான் போவேன்.” என்று அடம் பிடிப்பவரை இதற்க்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று இருந்து விட்டான்.

இப்போது க்ரீஷை அறைக்கு மாற்றியதும்… “ என்னப்பா வீட்டுக்கு போறிங்கலா…?”

“ம். போறேன். இரண்டு நாளா நீ ஆஸ்பிட்டலே தான் கெதியா இருக்க. வீட்டுக்கு போய் நான் அக்காவை அனுப்புறேன். நீ கொஞ்சம் வீட்ல வந்து ரெஸ்ட் எடு. ” என்று இருவரும் பேசிக் கொண்டே மின் தூக்கியின் அருகில் வந்து நின்றனர்.

அப்போது தான் பரமேஸ்வரர் அந்த தளத்தில் மக்கள் வந்து போவதை பார்த்து… “ என்ன இது…” என்று அவர் பேச்சை ஆராம்பிக்கும் போதே…

உதயேந்திரன்…

“ நான் தான் சொன்னேன். எப்போவும் போல இந்த தளம் செயல் படட்டும் என்று. இந்த தளமே வி.ஐ.பிங்களுக்கு மட்டும் பார்ப்பது தான். அவங்களுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்து இப்போ பார்க்க முடியாதுன்னு சொன்னா..

அதற்க்கு தான் ஏன் …? எதற்க்கு …? என்று நிர்வாகம் பதில் சொல்ல வேண்டி வரும். அப்போ தான் தேவையில்லாம நம்ம பைய்யன் பேரு வெளியில் வரும்.” என்று உதயன் தன் தந்தைக்கு விளக்கி சொன்னதும்..

“ இந்த டீன் என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்.” அப்போது கூட பரமேஸ்வரர் தன் கெத்தை விடாது தான் பேசினார்.

கீழ் தளத்தில் இருந்து மின்தூக்கி வந்ததும், அதை திறக்க உதயன் மின்தூக்கியில் கை வைக்கும் வேளயில்… மின்தூக்கியின் உள் இருந்தவர்கள் வெளியில் வந்தனர்.

அது யார் என்று கூட பாராது உதய் மின் தூக்கியில் உள் நுழைய பார்த்தான். ஆனால் பரமேஸ்வரர் மகன் பின் வராது…

“ எங்கேயும் எங்களை நிம்மதியா விட மாட்டிங்கலா…? உங்கல ஒழிச்சி கட்டுனா தான் எனக்கு நிம்மதி.” என்ற தந்தையின் வார்த்தையில் உதய் மின் தூக்கியில் செல்லாது யார் என்று நிமிர்ந்து பார்த்தான்.

*******************************************************

ராஜசேகரோ மகள் கோபித்து சென்றும் அவளை சமாதானப்படுத்தாது …. “ வைதேகி நான் கிளம்புறேன்.” அவசர அவசராய் தன் கார் சாவியை தேடினார்.

கார் சாவியை தன் கணவரின் கையில் கொடுத்த வைதேகி… “ ஏங்க…” என்று ஏதோ பேச ஆராம்பித்தவரை பேச விடாது..

“ காயூவை வந்து சமாதானம் செய்துக்கிறேன்.” என்று சொன்னவரிடம்…

“ நீங்களாச்சி உங்க மகளாச்சி. இப்போ சாப்பிட்டு கிளம்புங்க.” என்று சொன்ன தன் மனைவியின் கன்னம் தட்டி…

“ ராசாத்தி அங்கே என்ன ஆச்சோன்னு எனக்கு மனம் அடிச்சிட்டு இருக்கு. இப்போ எனக்கு ஒரு வாய் பருக்கு கூட உள்ளே போகாது. வந்து பார்த்துக்குறேன்மா…” என்று சொல்லி விட்டு அவ்வளவு அவசரமாய் ராஜசேகர் ஜெய் மருத்துவமனைக்கு விரைந்துக் கூட நிலமை அவரின் கைய் மீறி போய் இருந்தது.




















 
Top