அத்தியாயம்….18
“முக்கியமான வேலை ஏதாவது இருக்கா பவி…?” தன்னிடம் காபியை நீட்டிய வாறே தயங்கி தயங்கி கேட்ட அத்தையிடம் இருந்து காபியை வாங்கியவன்…
“ஆமாம் அத்தை நான் வேலை பார்த்த கம்பெனியில் கூப்பிட்டாங்க.” என்று பதில் சொன்ன பவித்ரன், அத்தையின் முகத்தை மறந்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை.
“சரிப்பா…” அவன் கொடுத்த டம்ளரை வாங்கி கொண்டு செல்லும் புனிதாவின் முதுகையே பார்த்திருந்த பவித்ரனுக்கு, இன்னும் இவங்க என்ன என்ன பட வேண்டி இருக்கோ...என்று நினைத்துக் கொண்டான்.
இதோ இது அவர்கள் வீடு.சந்திரசேகரை இந்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வெறுத்து இருந்தாலும், நாரயணன் அவர்களுக்கு மகனில்லை என்று ஆகிவிடாது.
அதே போல் தான் புனிதாவுக்கு சந்திரசேகர் தான் கணவன். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த வீடு சந்திரசேகர் தன் மகளுக்கு கொடுத்த வீடு.
இதில் தங்களோடு அவர்களுக்கு தான் உரிமை அதிகம் இருக்கிறது. இருந்தும் இதோ இப்போது தயங்கி தயங்கி கேட்டார்கலே...அதே போல் தான் புனிதா அத்தையின் பேச்சுக்கள் இருக்கும்.
இது தன்னிடம் மட்டும் அல்ல. எல்லோரிடமும் எல்லா விசயத்திலுமே அப்படி தான். அது அவர்கள் முதலில் இருந்தே ஒரு பாதுகாப்பற்ற தன்மையில் இருந்ததால் இருக்கலாம். தாய் தகப்பன் இறந்து தாய் மாமன் தயவில் முதலில் வளர்ந்தார்கள் என்றால்…
பின் திருமணம் முடிந்தும் கணவன் விட்டு சென்றதும், தன் அண்ணன் தயவில் வாழுந்துக் கொண்டு இருப்பதாலும் இருக்கலாம். நாளை இதே நிலை தான் இவர்களுக்கு தொடருமா…? பெண்ணை திருமணம் செய்து கொடுத்து அந்த வீட்டுக்கு இவர்கள் போக முடியுமா…? கண்டிப்பாக முடியாது.
ஆனாலும் பவித்ரனுக்கு வேறு வழி தெரியவில்லை. இருவரில் ஒருவரை தான் பார்க்க வேண்டும் என்றால், அவன் கண்ணை மூடிக் கொண்டு வேணியின் பக்கம் தான் கை காட்டுவான்.
இந்த உலகிலேயே அவனுக்கு முக்கியமானவள் வேணி தான். அது தன் தாய், தந்தையோடு என்று கூட சொல்லலாம்.
வேணி உதயை தவிர வேறு ஒருவனை திருமணம் செய்ய மனம் ஒத்து சம்மதிக்க மாட்டாள்.
பெரியவர்கள் விருப்பம் என்று தன்னை திருமணம் செய்துக் கொண்டாலும், அந்த வாழ்க்கையில் கண்டிப்பாக அவளுக்கு உயிர்ப்பு இருக்காது.
அவள் தாய் தான் வாழ்க்கை வாழாது இருந்து விட்டார். இவளாவது நல்லபடியாக வாழ வேண்டும். உதய் அவனை நினைத்தால் மட்டுமே இவனுக்கு சில சமயம் குழப்பமாக இருக்கிறது.
இந்த தலமை பதவி வேணிக்காக தான் அவன் விட்டு கொடுத்தான். அதில் அவனுக்கு சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த விட்டு கொடுப்பதே நாடகமாய் இருந்து விட்டால்…
அவனுக்கு யோசிக்க வேண்டும். நிறைய யோசிக்க வேண்டும். இதில் இந்த லூசு காயத்ரி வேற…? போற இடத்துக்கு எல்லாம் என் முன்னாடி அது நிக்குது.நான் எங்கு போறேன்னு யார் இவளுக்கு தகவல் சொல்றாங்க. அதையும் கண்டு பிடிக்கனும். மனதில் இதை எல்லாம் நினைத்துக் கொண்டே வெளியே போக கிளம்பி ஹாலுக்கு வந்தான்.
அங்கு அவனுக்கு முன்பே கிளம்பி சாப்பிட்டுக் கொண்டு இருந்த வேணியின் பக்கத்தில் அமர்ந்த பவித்ரன் சமையல் அறை நோக்கி…
“அத்தை…” என்று குரல் எழுப்ப…
“தோப்பா…” கைய்யோடு சுட சுட பூரிக்கிழங்கை பவித்ரன் தட்டில் வைத்த புனிதா…
“பத்துறமா போயிப்பலேம்மா…” வேணியின் அறைக்கே சென்று … “பார்த்து, பத்திரம், ஜாக்கிரதை,” இப்படி ஒரே அர்த்தம் கொள்ளும் படி வார்த்தைகளை பல விதத்தில் பலவிதமாய் காலையில் இருந்து வேணிக்கு அவள் அன்னை சொல்லிக் கொண்டு இருந்தார்.
கடைசியாக தன் பொறுமையை கை விட்டவளாய்… “அம்மா நான் சின்ன குழந்தை இல்ல. நான் என்னை பார்த்துப்பேன்.”என்று கத்தினாள்.
வேணியின் இந்த கோபம் தன் அன்னை மீதா…? இல்லை பவித்ரன் நேற்று தன்னிடம் சொன்ன… “இனி நீ தான் உன் வேலைய பார்த்துக்கனும் வேணி.” என்று சொன்னதும்..
“அப்போ நீ என்ன செய்ய போற…?” எப்போதும் பேசுவது போல் தான் வேணி பவித்ரனிடம் யாதர்த்தமாய் பேசியது.
ஆனால் அதற்க்கு பவித்ரன் பதில் சொன்ன விதம்… “ஏன் எப்போதும் உன் பின்னாடி தான் நான் இருக்கனுமா…? எனக்குன்னு தனியா வேலை இருக்காதா…?இருக்க கூடாதா…?”
பவித்ரனி அந்த பதிலில்… “இல்ல பவி.” ஏதோ சொல்ல வந்த வேணியை சொல்ல விடாது…
“இது உங்க அப்பா உனக்கு கொடுத்தது. அதில் நான் உரிமை கொண்டாட முடியாது.” என்ற பவித்ரனின் பேச்சில்…
“ஏன் முடியாது…? ஏன் முடியாது…? எல்லாம் முடியும். நான் சென்னை வந்ததே நீ சொல்லி தான். இது எல்லாம் எனக்கு வேண்டாம் என்று தான் சொன்னேன். நீ தான் அம்மா அப்படி இப்படி ஏதேதோ பேசி இங்கு என்னை அழச்சிட்டு வந்தது.
நீயே அழச்சிட்டு வந்துட்டு நீயே விட்டு போக பார்க்குறியே…அதெல்லாம் முடியாது. நீ வர்றது இருந்தால் நானும் அங்கு போறேன், இல்லேன்னா போகல.” என்று தன் பேச்சு முடிந்தது என்பது போல் கை கட்டி நின்றுக் கொண்டாள்.
“நான் சொல்லி தான் இங்கு வந்தே..அது உண்மைதான். இப்போ வேண்டாம் இந்த சென்னையே வேண்டாம் போகலாம் என்று கூப்பிட்டா வருவியா…?” என்று கேட்ட பவித்ரன் வேணி நிற்பது போல் கை கட்டிக் கொண்டு அவள் எதிரில் நின்றான்.
“பவி…” இதற்க்கு என்ன பதில் சொல்வது என்று வேணி தடுமாறி நின்று விட்டாள்.
“ஒரு சிலதை நாம ஏத்துக்க தான் வேண்டும் வேணி. இது வரை நாம இரண்டு பேரும் ஒரே ட்ராக்ல போயிட்டு இருந்தோம். ஆனா இப்போ…”என்று சொல்லிக் கொண்டு இருந்த பவித்ரன் வேணியின் கை பற்றிக் கொண்டு…
“ஒன்னு உன் காதலை மறந்து நம் குடும்பத்தை பாக்கனும். நம் குடும்பம் என்றால் என்னை திருமணம் செய்வதும் அடக்கம்.”
என்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற அந்த வார்த்தையை பவித்ரன் சொல்லும் போதே வேணி அவன் கை பிடியில் இருந்த தன் கையை விடுவித்துக் கொண்டாள்.
தன் வெற்று கையை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்ட வாறே… “இப்போது என் நிலையும் இது தான் வேணி. தன் கையில் ஒன்னும் இல்ல. உன் கையில் தான் எல்லாம் இருக்கு. நாளை காலையில் என் அறைக்கு வந்து நீ காபி கொடுத்தா… எப்போதும் இருப்பது போல் இருக்கலாம். இல்லேன்னா…”
தன் தோளை ஏற்றி இருக்கியவாறு எல்லாம் உன்னிடம் தான் இருக்கு என்று சொல்லியவனிடம்…
“நீ என்னை விரும்புறியா பவி.” என்று கேட்டு விட்டு வேணி பவித்ரன் முகத்தை பார்த்தாள்.
“இல்ல வேணி. இதை பத்தி முதல்லேயே நாம் பேசி இருக்கோம். அப்போவும் சரி இப்போவும் சரி. பெரியவங்க ஏற்பாடு தான் நம் கல்யாணம். அப்போ நீயும் இதுக்கு ஒத்துக்கிட்ட தான்.
ஏன்னா அப்போ உன் மனசுல எதுவும் இல்ல. இப்போ இருக்கு. ஆனா அப்போவும் இப்போவும் என் மனசுல ஒன்னும் இல்ல.அப்போ இதுக்கு உண்டான பதில நீ தானே சொல்லனும்.
உன் வாழ்க்கையில் வேறு ஒருத்தர் வரும் போது நமக்குள் இடைவெளி விழும் வேணி. இதோ இப்போ போல நான் உன் கம்பெனி இப்படி இருக்க முடியாது. நாளைக்கு எனக்குன்னு வர பொண்ணு இதை ஏத்துக்க மாட்டா…
நட்பு அது நம்மிடையே எப்போவும் இருக்கும். அதுல எந்த மாற்றமும் இல்ல. ஆனா வேலை இப்போ எனக்குன்னு ஒன்னு வேணும் வேணி. இது தான் வாழ்க்கையின் எதார்த்தம். புரிஞ்சிப்பேன்னு நினைக்கிறேன்.”
பவித்ரன் சொல்வது அனைத்தும் உண்மையே அது வேணிக்கு புரியவே செய்தது. அறிவை கொண்டு புரிந்த அவனின் பேச்சு, நடைமுறைபடுத்தும் போது வேணிக்கு பாரமாய் தான் இருந்தது.
வேணிக்கு ஒன்று மட்டும் நிச்சயம். இனி பவித்ரனை அவளாள் திருமணாம் செய்துக் கொள்ள முடியாது. தன் காதல் கை கூடுமா...கூடாதா…?அது வேறு விசயம்.
ஆனால் இனி பவியை நட்பை தான்டி அவளாள் நினைத்து பார்க்க முடியாது. அப்போ அவனுக்கு என்று ஒரு வாழ்க்கை வேண்டும் அல்லவா..அதற்க்கு தான் இன்று என்ன இனி தனியாக தான் சென்றாக வேண்டும்.
இரவு முழுவதும் யோசித்து அவளே மனதை கடினப்பட்டு சாப்பிட அமர்ந்தால், இந்த அம்மா என்ன என்றால்… திரும்ப திரும்ப பத்திரம் என்று சொன்னதில் வேணிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. அந்த கோபத்தில் தன் அன்னையை கடிந்தாள்.
இது போல் அன்னைக்கும் மகளுக்கும் சண்டை வந்தால் பவித்ரன் தன் அத்தைக்கு தான் சப்போட் செய்வான். இன்று எதுவும் சொல்லாது சாப்பிட்டு கொண்டு இருந்தவனை பவித்ரனின் அன்னை …
“என்னடா ரொம்ப புது பழக்கத்தை எல்லாம் பழகிட்டு வந்து இருக்க… காலைலே வந்து இனி வேணி தனியா போய்க்குவா நான் என் பழைய வேலைக்கே போறேன்னு சொல்ற.
அதுக்கு என்ன என்னவோ காரணம் வேறு. எனக்கு ஒரு மண்ணும் புரியல. இப்போ என்ன என்றால் உன் பக்கத்துல இரண்டு பேரு சண்டை போட்டுட்டு இருக்காங்க நீன்னா யாரோ என்பது போல் சாப்பிட்டு இருக்க…” என்று தன் அன்னை கத்திக் கொண்டு இருப்பதை காதில் வாங்காது, தன் கைய் அலம்பியவன் தன் அன்னையின் முந்தியில் துடைத்துக் கொண்டே…
“இனி அப்படி தான்.” என்பது போல் தன் அன்னையை பார்த்து கண் சிமிட்டு விட்டு வாசல் படியை தான்டியவன், பின் என நினைத்தானோ திரும்பவும் வேணியின் அருகில் வந்து…
“பார்த்து போயிப்பல…”
“ம்.” என்று சிரித்துக் கொண்டே தலையாட்டினாள்.
இதே வார்த்தையை தான் அவள் அன்னையும் சொன்னார். அப்போது வெறுப்பு ஏற்றுவது போல் இருந்தது. ஆனால் பவித்ரன் சொன்ன பத்திரம் என் நண்பனுக்கு எப்போதும் என் மீது அக்கறை இருக்கிறது. இருக்கும். அது போதும்டா எனக்கு என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
***************************************************
என்ன தான் வேணி தைரியமாக பரமேஸ்வரரின் குழுமத்தின் தலமை அலுவலகத்திற்க்கு வந்து விட்டாலும், மனது ஏனோ திக் திக் என்று அடித்துக் கொண்டது.
உடம்பில் வியர்வை ஏனோ இன்று அளவுக்கு அதிகமாகவே ஊற்றெடுப்பது போல் இருக்க...அதனால் கையில் பிசு பிசு என்று ஏதோ ஒரு அசுவுகரியம் போல் இருந்தது.
அங்கு அனைத்தும் பார்த்துக் கொள்ளும் மேனஜர்… “மேடம் ஏதாவது வேண்டுமா…? நான் இந்த கம்பெனியின் மேனஜர். என் பெயர் சங்கரன்.” என்று தன்னை முறையாக அறிமுகப்படுத்திக் கொண்டார். மிக பணிவாக தான் அவர் கேட்டார்.
வயது அதிகம் இல்லை. வயது தன் வயதை ஒற்று தான் இருப்பார். இந்த வயதில் இந்த உயர்ந்த பதவியா…? மனதில் நினைத்துக் கொண்டவளுக்கு கூடவே நீ மட்டும் என்ன...வயசா ஆகி போச்சி. நீ இந்த பதவியில் இல்ல. மனது கேட்ட கேள்விக்கு தானே பதிலும் அளித்துக் கொண்டாள்.
“நேத்து ராஜசேகர் சார் தான் இங்கு வரச் சொன்னார். அவர் போன்.” அப்போது தான் தன்னிடம் அவர் கைய்பேசியின் எண் இல்லை என்பதே நினைவுக்கு வந்தது.
“ஓ சாரோட நம்பர் இல்லிங்கலா. பரவாயில்ல என் கிட்ட இருக்கு.” என்று சொன்ன சங்கர் அங்கு டேபுளில் வைத்திருந்த வேணியின் போனை எடுக்க பார்க்க…
அதை கைய் பற்றிய வேணி… “என்ன செய்யிறிங்க மிஸ்டர் சங்கரன். போன் நம்பர் கேட்டா கொடுக்குறது தான் உன் வேல. என் போனை எடுக்க சொல்லலே.”
“சாரி மேடம். நானே பதிவு செய்து கொடுத்துடலாமுன்னு.”
அவன் மேலே பேசாது கை காட்டி தடுத்த வேணி… “எனக்கு தெரியும்.” என்று அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே அந்த இடத்துக்கு உதயேந்திரன் வந்து சேர்ந்தான்.
உதயேந்திரன் சங்கரனை சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டே வேணி அமர்ந்து இருந்த இருக்கையின் எதிர் இருக்கையில் அமர்ந்தவன்.
“இவன் யாரு வேணி…?” என்னவோ காலம் காலமாய் அவர்கள் இருவரும் பேசி பழகியது போல் இருந்தது உதயேந்திரனின் பேச்சு.
உதய் கேட்டது சாதரணமான கேள்வி தான். ஆனால் வேணியால் தான் உடனே அவன் கேள்விக்கு பதில் கொடுக்க முடியவில்லை.
அவள் மனதில் இப்படி இவனிடம் நான் வீழ்ந்தேன். அழகாக தான் இருக்கிறான். ஆனால் என் பவி இவனோடு அழகு தானே… என் மேல் அக்கறை உள்ளவனிடம், என் மீது அளவுகடந்த அன்பு வைத்திருப்பவனிடம் வராத காதல் இவனிடம் ஏன் வந்து தொலைத்தது.
தன் மனது பவித்ரனை ஏற்று இருந்தால், எந்த வித பிரச்சனையும் இல்லையே...தன் காதல் தன் குடும்பத்தில் இருக்கும் கொஞ்சம் நிம்மதியும் குலைத்து விடுமோ...அந்த அச்சம் தான் மனதில் உதயேந்திரன் மீது கொள்ளை கொள்ளையாய் ஆசை இருந்தாலும், அவனிடம் பேச தயக்கமாய் இருந்தது.
“நான் ஒன்னும் உன் கிட்ட அவ்வளவு கஷ்டமான கேள்வி கேட்கலேன்னு நினைக்கிறேன்.” அவன் பேச்சில் ஒருமை அழைப்பு தன்னால் வந்து ஒட்டிக் கொண்ட்து.
அவன் எப்படி தன்னிடம் சாதரணமாக பேசுகிறான். இன்னும் கேட்டால் சும்மா இருந்தவளை முத்தம் கொடுத்து முத்தம் கொடுத்தே என்னை மயக்கினதே அவன் தான்.
அவனே இப்படி பேசும் போது தான் அவன் முன் தடுமாறுவதை அவனுக்கு தெரியக்கூடாது என்று…
“உங்க கம்பெனி ஸ்டாப் பத்தி என் கிட்ட கேட்குறிங்க...நானே முதல் நாள் இன்னைக்கு தான் வந்து இருக்கேன்.” என்று வேணி சொன்னதும்..
உதய் இது வரை சாதரணமாக பேசுவது போல் இருந்தாலும், அவளிடம் பேசுவது அவனுக்கு ஏதோ வானத்தில் பறக்கும் உணர்வை கொடுத்தது.இன்னும் கேட்டால் அவன் காதல் வசனம் பேசவில்லை. இந்த சாதரண உரையாடலே அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது.
இன்னும் அவளிடம் அந்தரங்கமாய் பேச ஆராம்பித்தால் இப்படி அவன் மனதில் நினைத்துக் கொண்டு தான் வேணியின் பதிலுக்கு எதிர் பார்த்தது.
ஆனால் அவள் சொன்ன “உங்க ஸ்டாப்.” என்ற அந்த வார்த்தையில் தான் வந்தும் அந்த இடத்தை விட்டு அகலாது நின்றுக் கொண்டு இருந்தவனின் மீது சடால் என்று தன் பார்வையை திருப்பினான்.
அவ்வளவு நேரமும் அவன் தங்களை தான் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தான் என்பதை தான் பார்த்ததும் சட்டென்று அவன் தலை அசைத்ததில் இருந்து தெரிந்துக் கொண்டவனுக்கு, மெல்லிய காதல் இசையில் எங்கோ ஸ்ருதி தப்புவது போல் தெரிந்தது.