Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kambathu Ponnu...19

  • Thread Author
அத்தியாயம்….19

தன் தந்தை போட்ட சத்தததில் மின்தூக்கிக்குள் நுழையாது தேங்கி விட்ட உதயேந்திரன் யார் என்று நிமிர்ந்து பார்த்தான்.

நடுவில் நாரயணன் நின்று இருக்க, தன் இரு பக்கமும் நின்றுக் கொண்டு இருந்த பேரன், பேத்தியின் தோளை பற்றிய வாறு அந்த முன்தூக்கியில் இருந்து வெளியேறிய பெரியர் அந்த இடத்தில் பரமேஸ்வரர் கத்திய கத்தலில் மூஞ்சை சுழித்தவராய் நின்று இருந்தார்.

வயதில் மனதில் இருந்த வலியை தாங்கிக் கொண்டு இருந்த பெரியவர் வயது ஆக ஆக…வயதின் தள்ளாமையோடு, உடல்நிலையிலும் கொஞ்சம் பிரச்சனை கொடுக்க போகும் காலத்திலாவது எனக்கும் நிம்மதியை கொடு நாரயணா...

பிடித்த கடவுளின் பெயரையே வைத்திருந்த அந்த பெரியவர், இப்போது எல்லாம் மனம் உகந்து அந்த தன் திரு நாமத்தையே தினம் தினம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

இப்போது அவருக்கு நிம்மதி கொடுக்கும் விசயம் உண்டு என்றால் அது தன் பேரன் பேத்தியின் திருமணம் தான். ஆனால் அது நடக்குமா…? தெரியவில்லை.

முதலில் செய்த தப்பை இப்போது செய்ய அவர் விரும்பவில்லை. தங்கை பெண்ணுக்கு நல்லது செய்கிறேன் என்று அந்த பெண்ணின் வாழ்க்கையை மூளையில் கிடத்தியது போதும்.

தன் அன்பு பேரனுக்கும், ஆசை பேத்திக்கும் அந்த நிலை வரக்கூடாது. அதனால் தான் மனதில் ஆசை இருந்தாலும் அதை வெளியில் சொல்லாது தன் மகள் சுகுனா அதை பற்றிய பேச்சை ஆராம்பித்தாலும்…

“ அவர்களுக்கு விருப்பம் இருந்தால் செய்யலாம்.” என்று வெளியில் சொன்னாலும், மனதில் அனு தினமும் அந்த என் பெருமாளிடம் …

‘கடவுளே என் பேரன் பேத்திக்கு திருமணத்தை நான் இருக்கும் காலத்துக்குள் முடித்து விடுப்பா…’ என்று வேண்டாத நாள் கிடையாது.

வந்தாரை வாழ வைத்த சென்னை அவரை பொறுத்த வரை தாழ வைத்தது என்று தான் சொல்ல வேண்டும். மகன் செய்த தவறு ஊரில் அவரை நிமிர்ந்து பார்க்க அஞ்சியவர்கள் கூட…

“ அந்த புள்ளைக்கு கேட்க ஆள் இல்லேன்னு நீ இப்படி செய்து இருக்க கூடாதுப்பா…” ஒருவர் இப்படி நாரயணனிடம் கேட்டார் என்றால் மற்றொருவரோ…

“ ஏன் கேட்க ஆள் இல்லை. அவர் மகளை யாருக்கு கொடுத்து இருக்கும். மருமகளோட அண்ணாவுக்கு தானே...என் தங்கையை உன் அண்ணன் வைத்து வாழல. நான் உன் கூட வாழனுமா…? வெட்டி விட்டுட்டா…” என்று மனதில் நெருப்பை அள்ளி கொட்டினர்.

அந்த வயதில் அதை எல்லாம் தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால் இந்த முதுமையில் பேரன் பேத்தியை சேர்த்து வைத்து பார்க்க மனது ஏங்கினாலும், அதை வெளியில் காட்டது தன் ஆசையை கடவுளிடம் மட்டும் காட்டிக் கொண்டவருக்கு இப்போது எல்லாம் அந்த ஆசை நிறைவேறுமா என்ற சந்தேகம் கொஞ்ச நாளாய் அவர் மனதை அரிக்க ஆரம்பித்திருந்தது.

தன் மனதில் இந்த பயம் எழ காரனம் இதோ தன் எதிரில் நிற்கிறானே உதயேந்திரன் இவன் தான். ‘ஏன் இவனை பார்த்தால் என் ஆசைக்கு அணைப்போட வந்தவன் என்று நினைய தோன்றுகிறது…?

யாராவது இப்படி கேட்டால் கண்டிப்பாக அவருக்கு பதில் தெரியாது. அவருக்கே அவரே கேட்ட கேள்வி தான் இது. ஆனால் அதற்க்கு பதில் அந்த பெரியவருக்கே தெரியாத போது எப்படி சொல்வார். ஆனால் ஏனோ பயம் . இதே பயம் தான் தன் மகன் சந்துருவை பார்க்க சென்னையில் மகன் வேலை செய்யும் இடத்துக்கு சென்ற போது…

சிறிது தூரத்தில் தன் மகன் யாரோ ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து ஏனோ மனம் கொஞ்சம் பகிர் என்று தான் அடித்துக் கொண்டது.

அப்படி அடித்துக் கொள்ள அவர்கள் மிகவும் நெருக்கமாய் நின்றுக் கூட பேசிக் கொண்ரு இருக்க வில்லை. அவர்களுக்குள் கொஞ்சம் என்ன பெரிய இடைவெளி தூரம் நின்று தான் பேசிக் கொண்டு இருந்தனர்.

ஆனால் அப்போதே நாரயணனுக்கு ஏதோ இடித்தது என்று தான் கூறவேண்டும். பின் தன்னை பார்த்து தன் மகன் சிரித்துக் கொண்டே அருகில் வந்ததும்..

பின் தன் சுகபோகத்தை விசாரித்து விட்டு, பின் ஏதோ நினைத்தவாய் தான் பேசிக் கொண்டு இருந்த பெண்ணை திரும்பி பார்த்த சந்துரசேகர் தாங்கள் பேசிக் கொண்டு இருந்த இடத்திலேயே நின்று விட்ட பெண்னை பார்த்து..

“ மிஸ் ஜெய்சக்தி வாங்க.” என்று அழைத்ததும் மெதுவாக வந்த அப்பெண் அப்போதும் சந்திரசேகர் அருகில் நில்லாது அவனுக்கு எதிர் பதமாய் வந்து தான் நின்றாள்.

பின் தன் மகன் அப்பெண்ணை காட்டி… “ இவங்க முதலாளியோட பெண் மிஸ் ஜெய்சக்தி. இனி இவங்க தான் இந்த கம்பெனி எடுத்து நடத்தா போறாங்க. அது தான் முதலாளி இவங்களுக்கு கொஞ்சம் பயிற்ச்சி அளிக்க சொன்னார்.”

மகன் சொன்ன அனைத்தும் சரியே. பெரிய இடத்து பெண் வாரிசு . ஆணோ பெண்ணோ எடுத்து நடத்த தானே வேண்டும். அதற்க்கு தன் மகன் உதவி செய்கிறான்.’ மனதில் இப்படி எண்ணினாலும் ஏதோ மனது அப்போதே அவருக்கு அடித்துக் கொண்டது என்னவோ நிஜம்.

அதே ஏதோ ஒரு நிலை தடுமாற்றம் இப்போது நாரயணன் மனதில். அதன் வெளிப்பாடு உடலில் மாற்றம் செய்ய, இதோ இந்த மருத்துவமனை வரும் சூழ்நிலை இப்போது.

இங்கேயும் இவர்களை பார்த்ததும் நாரயணன் என்ன மாதிரி உணர்ந்தார் என்று அவருக்கே தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் அவருக்கு நிச்சயம். தன் மகன் இருக்கும் போதும் தன் நிம்மதியை கெடுத்தான். இறந்தும் கெடுத்து விட்டே சென்று விட்டான் என்று.

அதுவும் பரமஸ்வரர் தங்களை பார்க்கும் போது எல்லாம் ஏதோ அவருக்கு தாங்கள் துரோகம் இழைத்து விட்டோம் என்பது போல் பேசுவதை கேட்க கேட்க…மனதில் ஆத்திரம் உதித்தாலும் வயது அதை தடை செய்ய அமைதி காத்தார்.

அமைதி என்பதுக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா..இன்று பரமேஸ்வரர் தாங்கள் அவர் இருக்கும் இடத்தை தேடி வந்து தொல்லை செய்வது போல் பேசியதை கேட்டு…

“ மத்தவங்க வழியில குறுக்க நின்னு எங்களுக்கு எப்போதும் பழக்கம் இல்ல. அதனால இனி அனாவசியமான பேச்சு வேண்டாம்.”

நாரயணனுக்கு என்ன தான் வயது ஆனாலும் பேச்சு தெளிவாகவே அதுவும் கணீர் என்றே இருந்தது.

“ ஓ யாரு வழிக்கும் வர மாட்டிங்கலோ...உங்க பேத்தி என் பேரன் பேத்தி வாழ்க்கையில் இடையில் வந்ததால் தான் இதோ இப்போ இங்கே வந்து படுத்துட்டு இருக்கான்.”

கிருஷ்ணவேணி சென்னை வராது இருந்து இருந்தால், பேரனுக்கு எதுவும் தெரிந்து இருக்காது. எப்போதும் போல் அவன் பட்டாம் பூச்சி போல் வாழ்ந்துக் கொண்டு இருப்பான்.

கீர்த்தியின் முகம் கூட இப்போது எல்லாம் சோர்ந்து போய் தான் தெரிகிறது. தந்தை இறந்த துக்கத்தோடு இந்த வேணி பிரச்சனை தான் அவர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை என்று நினைத்தவராய்…

தன் பேரன் பேத்திக்கு வந்த எமன் தான் இந்த வேணி என்ற முடிவோடு அவருக்கு மட்டும் வேணியை கொல்லும் சக்தி இருந்தால் அப்போதே கொன்று இருப்பார் போல் கண்ணில் அவ்வளவு வன்மம் வெறுப்பை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தார்.

பரமேஸ்வரர் சொன்ன என் பேரன் என்ற பேச்சு நாரயணனை… “ ஏன் என்ன ஆச்சி…?” தனக்கும் அவன் பேரன் தான் என்ற உந்துதலோ...இல்லை சிறு பையன் பெரியவர்கள் செய்த தப்புக்கு அந்த சின்ன பையன் என்ன செயவான் என்ற மனிதாபி மானமோ...கொஞ்சம் பதட்டம் நிறைந்த குரலில் தான் நாரயணன் கேட்டார்.

“ ம் ஆச்சி.” பரமேஸ்வரர் முகத்தில் வெறுப்பை காட்டினாரே ஒழிய என்ன என்று சொல்ல வில்லை.

ஆனால் உதயேந்திரன்… “ சூசைட் அட்டம்ட்” என்று சுருக்கமாக சொன்னான்.

முதலில் என்ன என்று புரியாத நாரயணன் பின் புரிந்து… “ ஏன் என்ன ஆச்சி. வீட்ல ஏதாவது சொன்னாங்கலா…?” அவர் குரலில் உண்மையான பதட்டம், அக்கறை , தான் எதிரொலித்தது.

ஆனால் தன்னை போல் தான் மற்றவர்கள் என்று கோட்பாட்டில்… “ நடிக்காதிங்க. நிஜமா சொல்லுங்க இப்போ உங்களுக்கு சந்தோஷமா தானே இருக்கும்.” என்றூ சொன்ன பரமேஸ்வரர்..

பின்…“ இருக்கும். கஷ்டம் இருக்கும். இருக்க தான் செய்யும். அதான் பிள்ளை பிழச்சிட்டானே…” அவர் எண்ணத்தின் சாயத்தை பேச்சால் எதிரில் இருபவர்கள் மீது தெளித்தார்.

இவ்வளவு நேரமும் ஏதோ பெரியவர்கள் பேசுகிறார்கள் என்று அமைதியாக இருந்த வேணி பவித்ரன்… “ நீங்க பேசுற அளவுக்கு அவர் பெரிய மனுஷன் இல்ல தாத்தா.” வேணி இப்படி சொன்னாள் என்றால்…

பவித்ரன்… “ வீணா பேச்சு எதற்க்கு…” என்று சொல்லி கைய் பிடித்து அழைத்து செல்ல பார்க்க..

அப்போது… “ ஓசியில பாக்க ஓடி வந்துட்டிங்கலா..இது போல் ஆஸ்பிட்டல் இதுக்கு முன்ன பார்த்து இருக்கிங்கலா…” பரமேஸ்வரரின் குரலில் அவ்வளவு நைய்யாண்டி தெரிந்தது.

கை பிடித்து இருந்த தாத்தாவின் கையை விட்ட வேணி, பரமேஸ்வரரின் எதிரில் நின்று… “ நீங்க சொன்னது உண்மை தான். இது போல் ஆஸ்பிட்டல் இதுக்கு முன்ன நாங்க பார்த்தது இல்லை.” என்று சொன்ன வேணி..

தன் பேச்சில் கொஞ்சம் இடைவெளி விட்டு… “ இந்த ஆஸ்பிட்டல் இல்ல. வேறு எந்த ஆஸ்பிட்டலுக்கும் எங்க தாத்தா போனது இல்ல. வளர்ந்த பையன முழுசா ஒரு பெரிய மனுஷனுக்கு தார வார்த்துட்டு…

தன் மகன் செய்ய வேண்டிய கடமைக்காக இந்த வயதிலும் வயலுக்கு ஓடுறவருக்கு எதுக்கு ஆஸ்பிட்டலுக்கு ஓடனும்.

அது எல்லாம் எவன் ஊருல இருந்து வருவான். அவனுக்கு கல்யாணம் ஆச்சா..? இல்லையான்னு கூட பாக்காது தன் பொண்ணையும் கொடுத்துட்டு, கம்பெனியையும் அவர் கையில கொடுத்துட்டு, வேல செய்யாம சும்மா வீட்ல சாப்பிட்டுட்டு இருந்தா உடம்புல கொழுப்பு அங்கே அங்கே தேங்கி தோ இது போல ஆஸ்பிட்டலுக்கு ஓடி வரனும்ங்க. எங்க தாத்தா எதுக்கு வரனும்.”

வேணி பரமேஸ்வரருக்கு நல்ல பதிலடி கொடுத்து கொண்டு இருக்கும் போது… “ என்ன வேணி பேச்சு இது. பெரியங்க ஏதோ பேசுறாங்க இடையில நீ என்ன இப்படி பேசுற… அவர் வயதுக்கு கொஞ்சம் மரியாதை கொடுத்து பழகு.” இப்படி வேணியை திட்டம் செய்தது, சாட்சாத் நம் உதயேந்திரனே….

உதயேந்திரனின் இந்த பேச்சால் பாவம் வேணி சொன்ன என் தாத்தா ஏன் ஆஸ்பிட்டலுக்கு போக வேண்டும் என்ற பேச்சு பொய்த்து ஆஸ்பிட்டலிலேயே படுத்துக் கொள்வாரோ என்று பயந்தவராய் உதயேந்திரனை கொஞ்சம் திகிலோடு தான் பார்த்தார் நாரயணன்.

இந்த பேச்சை வளர விடக்கூடாது. அதுவும் என்ன ஒரு உரிமை அவனின் பேச்சில் அந்த பெரியவர் உதயேந்திரனை பார்த்து ஏதோ சொல்ல ஆராம்பிக்க..

அதற்க்கு அவசியம் இல்லாது பரமேஸ்வரர்… “ உதய் நம்ம தகுதிக்கு ஏற்ப தான் பேசனும். இது போல் தாழ்ந்து பேசுனா, இதோ இது போல் தான் பேசுவாங்க. என் தப்பு தான் உதயா போனவங்கல வலிய போய் பேசினது. வா போகலாம். அப்புறம் நீ வேணின்னு பேர் சொல்லி பேசுனதை வெச்சி ஏதாவடு மனசுல ஆசைய வளர்த்துக்க போகுது.”

தன் மகன் மனது தடுமாறினாலும், இப்பேச்சால் வேணி தன் மகன் பக்கம் திரும்பியும் பார்க்க மாட்டாள் என்று கணக்கு போட்டு பேசினார் அந்த பெரிய மனிதர்.

அவர் எதிர் பார்ப்புக்கு ஏத்தது போல் தான் புனிதன்.. “ போயும் போயும்.” ஜெர்மனியில் அவன் வாழ்ந்த வாழ்க்கை நினைத்து தான் அப்படி பேசியது.

ஆனால் அப்பேச்சு உதயேந்திரனை பலாமக தாக்கியது… “ என்ன .? என்ன…? போயும் போயும் நான். எனக்கு என்ன…?” என்று கேட்ட உதயேந்திரன் தொடர்ந்து…

“ இவள் அப்பாவோடு நான் எவ்வளவோ மேல். எனக்கு என்று ஒருத்தி வந்த பின் மற்ற பெண்ணை திரும்பியும் பார்க்க மாட்டேன்.”

சந்திரசேகரை மாமா என்று உறவு முறை சொல்லி பேசிய உதயன். பின் மெல்ல மெல்ல உறவு முறை அழைக்காது அவரை பற்றி பேசினான். இப்போது முடிவாய் உதயனே தன்னால் சந்திரசேகரை வேணியின் அப்பா என்ற உரிமையை அவளுக்கு கொடுத்து பேச..

அந்த பேச்சு பரமேஸ்வரருக்கு இன்னும் கோபத்தை ஏற்றியது என்று தான் சொல்ல வேண்டும். சந்திரசேகர் என் மாப்பிள்ளை. அது என்னவோ முதலில் இருந்தே சந்திரசேகர் மீது ஒரு உரிமை உணர்வு என்று சொல்வதை விட…

ஒரு கை பொருள் பறி போய் விடுமோ என்று பயந்து கெட்டியாக பிடித்து கொள்வார்களே..அதே போல் தான் பரமேஸ்வரர் சந்திரசேகரை பிடித்து வைத்துக் கொண்டது.

சந்திரசேகர் திறமை மீது தன் கம்பெனியின் மொத்த பொறுப்பை கொடுத்தார் என்றாலும், லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதிப்பது போல் மருமகனுக்கு வேறு நினைப்பு, அதாவது அக்குடும்பத்தை பற்றிய நினைவு வராது தடுக்க… அனைத்து உரிமையும் கொடுத்தார்.

அது என்னவோ சந்திரசேகரை முதல் பார்வையிலேயே பரமேஸ்வரருக்கு பிடித்து விட்டது. அதவாது மகள் சந்திரசேகரை விரும்புவதற்க்கு முன்னவே…மகள் மனதில் ஆசை விதை முளைக்க ஒரு காரணம் இந்த பரமேஸ்வரர் என்று கூட சொல்லலாம்.

“ இவனுக்கு மட்டும் திருமணம் ஆகாமல் இருந்து இருந்தால், என் பொண்ணை கொடுத்து, விட்டோடு மாப்பிள்ளையா ஆக்கி இருப்பேன்.” இந்த பேச்சு வார்த்தை எல்லாம் தன் மகள் எதிரில் மகனிடம் பேசியது.

அப்படி உரிமை கொண்டாடிய மருமகனை ஒரே நிமிஷத்தில் வேணிக்கு தாரை வார்த்து கொடுத்தால், பரமேஸ்வரர் ஒத்துக் கொள்வாரா…

“ என்ன பேச்சு உதய் இது எல்லாம். நீ இப்படி பேசுவதை உன் அக்கா கேட்டா வருத்த பட மாட்டா...உன் அக்கா என்ன புருஷன் எப்படி போனாலும் பரவாயில்லேன்னு இருக்குறவளா… புருஷன் மேல உயிரா இருந்தவ.

மத்தவங்க மாதிரியா என் பொண்ணு. அதே மாதிரி தான் என் பேரன் பேத்தியும். அப்பான்னா உயிர். அப்படி உயிர வெச்ச தொட்டு தான் எங்கிருந்தோ வந்து அப்பான்னு சொல்லி ஒரு பொண்ணு வந்ததை தாங்க முடியாது தோ படுத்துட்டான். ஆனா இது…”

அப்பா இல்லாது அதை பற்றி கவலையும் இல்லாது வளர்ந்து இருக்கிறாளே..என்பது போல் வேணியை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே பேசி முடிக்கவும் ராஜசேகர் வரவும் சரியாக இருந்தது.


















 
Top