Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kambathu Ponnu....19

  • Thread Author
அத்தியாயம்…19

“உன் பெயர் என்ன…?” என்று உதயேந்திரன் அந்த மேனஜரை பார்த்து கேட்பதை பார்த்து வேணிக்கு குழப்பமாக இருந்தது. நான் இங்கு முதன் முதலில் வருகிறேன். அதனால் இவரை எனக்கு தெரியாது.

ஆனால் இவன்...இவனும் முதன் முதலில் இப்போது தான் வருகிறானா…? இந்த வரவு கூட தனக்கானது தானோ…ஆசை பட்ட அவள் மனம் அப்படி தான் நினைக்க தோன்றியது.

வேணி இரண்டாவதாக நினைத்தது தான் சரி. அவள் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து இருந்தவர்கள் அவனை அழைத்து …

“சார் மேடம் தனியா இங்கே உங்க தலமை அலுவலகத்திற்க்கு வந்து இருக்காங்க.” என்று சொன்னதும் நம்ப முடியாது…

“நல்லா பாருங்க மிஸ்டர் பவித்ரன் கண்டிப்பாக இருப்பார்.” என்ற உதயேந்திரனின் அனுமானம் தவறாகி விட்டது.

“இல்ல சார் அவர் வரல. மேடம் மட்டும் தான் வந்து இருக்காங்க.” என்று அந்த பாதுகாவலர் சொன்னதும், காலை உணவை கூட முழுவதுமாய் உண்ணாது அவசர கதியில் கிளம்பிக் கொண்டு இருந்தவனை…

கீர்த்தி… “என்ன மாமா அவசரம். ஒழுங்கா சாப்பிட்டு போங்க.” இப்போது எல்லாம் கீர்த்தி ஒரு அன்னையாய் அவனை பார்த்துக் கொள்கிறாள்.

குழந்தைகள் இருக்கும் இடமும், சூழ்நிலையும் பொறுத்து தான் அவர்களின் மனமும் எண்ணமும் என்பது எவ்வளவு உண்மை.

இதோ இப்பெண் சில மாதம் முன் வரை, பட்டாம்பூச்சியாய் பறந்துக் கொண்டு இருந்தவள்.எதற்க்கு எடுத்தாலும் அடம், பிடிவாதம். இது வேண்டும் என்றால் உடனே அது அவள் கையில் கிடைக்க வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம்.

பேச்சு கூட எப்போதும் கூர்மையுடன் தான் அவளிடம் இருந்து வரும். ஆனால் இப்போது வீட்டு பணியாளர்களிடம் கூட அவள் வேலை வாங்கும் பாங்கு…

வயதுக்கு ஏற்றார் போல… “அக்கா அதை கொஞ்சம் நல்லா துடைங்கலேன்.” இப்படியாக தான் இருக்கிறது. காலம் தான் மனிதனை எவ்வளவு மாற்றி விடுகிறது. ஏன் தானும் தான்...அவன் நினைவை கீர்த்தி…

அவன் கையில் கொடுத்த காபி தடுத்து நிறுத்தியது. “இதாவது குடிங்க மாமா.” தன் கை கடிகாரத்தை பார்த்த வாறே கீர்த்தி மனது நோக கூடாது என்று அதையும் அவசர கதியில் தான் குடித்து முடித்தான்.

என்னவோ காலையில் இருந்து வேணிக்கு கூடுதல் பாதுகாப்பு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டுமோ... தன் தலமை பொறுப்பை வேணிக்கு கொடுத்து வாரம் ஒன்றாகிறது.

தன் தந்தை அமைதியாக இருக்கிறார் என்றால் பெரியதாக ஏதாவது திட்டம் தீட்டுகிறாரோ...என்று பயந்துக் கொண்டு இருக்கும் வேளயில் தான் வேணிக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் பவித்ரன் வராது வேணி மட்டும் தனித்து வருகிறாள் என்றது…

‘இவனுக்கு இவள் கூட இல்லாது அப்படி என்ன வேல வேண்டி கிடக்கு…?’ என்று உதயேந்திரன் மனதில் பவித்ரனை திட்டி தீர்த்தான்.

இதே உதயேந்திரன் தான் வேணியோடு பவித்ரனை பார்க்கும் போது எல்லாம், அது என்ன எப்போதும் கொடுக்கும் போல அவள் கூடவே இருப்பது என்றும் திட்டி இருக்கிறான். தன் அப்பா எதுவும் செய்யாமல் இருக்கிறாரே இதுவே அவன் மனது முழுவதும் நிறைந்து இருந்ததால்…

வேணி வேறு தனியாக இருக்கிறாள். அவனே இந்தியா வந்து மாதக்கணக்கில் தான் ஆகிறது. வேணி சென்ற இடம் உதயேந்திரன் வாரத்துக்கு ஒரு நாள் என்ற விகிதத்தில் சென்ற இடம் தான்.

ஆனால் இங்கு யார் நம்பிகை ஆனவர்கள் என்று அவனுக்கு சரியாக தெரியவில்லை. தந்தை தந்தை அடுத்து மாமா தான் அனைத்தும் பார்த்து இருக்கிறார்கள். மாமா இப்போது இல்லை. தந்தை தந்தையால் தான் பிரச்சனை என்ற போது யார் உதவியை அவன் நாடுவான்.

அதுவும் அங்கு பணிபுரிபவர்களில் பாதி பேர் பரமேஸ்வரர் நியமித்தவர்கள். அதை நினைத்து பயந்து தான் உதய் அவசர அவசரமாய் இங்கு வந்தது.

அவன் இந்த அறைக்குள் கதவை தட்டாது..அதாவது அனுமதி கேட்டு வரும் வரை அவனுக்கு பொறுமை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த அறைக்குள் நுழையும் போது அவன் காதில் விழுந்த வார்த்தை… “என் போனை என் கிட்ட கேட்காம எடுப்பியா…”

‘ஓ இவன் இவளுக்கு தெரிந்தவனா...’ என்று மனதில் இதை நினைத்து தான் வேணியிடம்… “யார்…?” என்று கேட்டது…

ஆனால் அதற்க்கு… “நான் இங்கு மேனஜர்.” என்றதுமே அவனுக்கு ஏதோ பொறி தட்டியது. மாமா சென்ற பின் நான் தான் அனைத்தும் பார்த்துக் கொள்வது.

எனக்கு அடுத்து அப்பா...அதுவும் முக்கியமான முடிவு என்ற பட்சத்தில் தான். இந்த பதவிக்கு இப்படி அவசர கதியில்..அதுவும் இவ்வளவு சின்ன பையன் என்று நினைத்தாலும் அதை முகத்தில் காட்டாது…

“ஓ.” என்ற ஒரே சொல்லோடு முடித்தவன்.பின் உதய் சொன்ன… “பர்சனலா பேசனும்.” தன் கையை வாயில் பக்கம் காட்டிய வாறே சொன்னான்.

அப்போதும் அந்த சங்கரன் தயங்கி தயங்கி தான், அந்த இடத்தை விட்டு செல்வது போல் இருந்தது.அதுவும் குறிப்பாய் அவன் பார்வை டேபுள் மீது இருந்த வேணியில் கைய் பேசியின் மீது அதிகம் இருந்ததோ என்று உதயேந்திரன் சந்தேகம் கொள்ளும் படி சங்கரனின் பார்வை டேபுல் மீது சென்று சென்று மீண்டு தான் அந்த அறையை விட்டு அவன் சென்றான்.

சங்கரன் சென்றதும்… “நான் வரும் போது அவன் கிட்ட என்ன பேசிட்டு இருந்த…?” முதன் முதலில் யாரின் குறுக்கீடும் இல்லாது அவர்கள் பேசும் பேச்சு இது தான்.

உதயேந்திரன் வேணியிடம் தனித்து பேச வேண்டும் என்று அவன் மனதில் ஆசைகள் இருந்தது.அதனால் தான் பவித்ரனை வேணியோடு பார்க்கும் போது எல்லாம் அப்படி அவனுக்கு எரியும்.

இப்போது அந்த தனிமை, சூழ்நிலை கிடைத்தும் அவன் தன் ஆசையை நிறைவேற்றி கொள்ளாது வேணிக்கு என்ன பிரச்சனை இதால் வருமோ என்று பயந்து போய் தான் வேணியிடம் கேட்டது.

ஆனால் வேணியோ நான் தான் இவன் பார்வையில் காதலை பார்த்தேன் என்று தவறாய் புரிந்துக் கொண்டேனோ...என்ன இவன் தான் ஆசை பட்ட பெண்ணிடம் பேசுவது போலவா பேசுகிறான்.

ஒரு போலீஸ்காரன் குற்றவாளியிடம் விசாரிப்பது போல் இப்படி அதட்டி பேசுகிறானே...

வேணியின் மனதிலும் தாங்கள் முதன் முதலாய் தனித்து பேசும் போது அவன் என்ன பேசுவான்…? பேசுவானா..இல்லை அந்த நினைவே அவள் வெட்கம் கொள்ள போதுமானதாய் இருக்கும்.

அப்படி ஆசை ஆசையாக எதிர் பார்த்து காத்திருந்தவளுக்கு, உதயேந்திரனின் இந்த பேச்சில் கோபம் கொண்டவளாய்…

“அது எல்லாம் உங்களுக்கு எதற்க்கு…அவர் ஏதோ பேசினார்.”

வேணியின் வாய் தான் உதயேந்திரனிடம் கடுமையாக பேசியது. அவள் கண்களோ உதயை பார்த்த பார்வையில் இப்படி தான் என்னிடம் பேசுவாயா…? என்பது போல் அவனை குற்றம் சாட்ட…

“கிருஷ்ணா… தான் அமர்ந்து இருந்த இடத்தை விட்டு எழுந்தவன், அவளின் அருகில் போக...அதற்க்குள் அவள் அமர்ந்து இருந்த இடத்தை விட்டு எழுந்து ஜன்னல் பக்கம் வந்து நின்றவள்..

அவன் தன் அருகில் வருவதை பார்த்து… “வேண்டாம். நீங்க என் கிட்ட வர வேண்டாம். எல்லாம் தப்பு தப்பா தான் நடக்குது. எதுவும் சரியா நடக்கல. இனியும் சரியா ஆகுமான்னு தெரியல. இந்த நம்ம இதால இன்னும் என்ன என்ன பிரச்சனை வருமோ...அதுவும் எங்க அம்மா.”

வேணி அம்மா என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே தன்னால் குரல் உடைய அதற்க்கு மேல் பேச முடியாது அவள் கண்ணில் இருந்த கண்ணீர் வழிந்தோட, அவள் அழுகையை கட்டுப்படுத்த நினைத்தும் முடியாது கேவலில் வந்து முடிந்தது.

“கிருஷ்ணா கிருஷ்ணா...என்ன என்ன இது …?” வேணியின் முகத்தை தன் மார்பில் புதைத்துக் கொண்டவன்..

“போதும் கிருஷ்ணா அழாதே. நீ எதை நினச்சும் கவலை படாதே. நான் பார்த்துக்குறேன் எல்லாம் நான் பார்த்துக்குறேன்.”

இருவரும் காதலை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துக் கொள்ளவில்லை. தங்கள் காதல் ஜெயிப்பதற்க்கு நிறைய பிரச்சனைகள் எதிர் கொள்ள நேரும். அது இருவருக்கும் தெரிந்து தான் இருந்தது.

இருந்தும்… அதையே தான் வேணி தன் வார்த்தைகளாய் உதயனிடம் வெடித்தாள்.

“என்ன பார்த்துப்ப…? நீ என்ன பார்த்துப்ப…?” வேணி உதயனிடம் பேசும் போது மரியாதை என்பது இல்லாது தான் ஒருமையில் பேசினாள். இந்த அழைப்புக்கு காரணம் அவன் மீது இருக்கும் கோபத்தாலா…?உரிமையாலா…? அது அவளுக்கே வெளிச்சம்.

அவன் மார்பில் சாய்ந்து இருந்தவள் நிமிர்ந்து அவன் காலரை பற்றிய வாறே… “சொல் என்ன பார்த்துப்ப…? ஒன்னும் முடியாது. என் அம்மா மனசு உடையுரத யாராலும் தடுக்க முடியாது.

எதுக்கு…? எப்படி…? எப்போ…? எனக்கு உங்க மேல இந்த எண்ணம் வந்தது தெரியல. ஆனா வந்து இருக்க கூடாது. வந்தே இருக்க கூடாது.” முதலில் அழுகையில் கேட்டவள்.

பின்… “நீ என் பவியோடு எதிர் உயர்த்தி. இந்த எண்ணம் தான் மூணு நாளா என் மண்டையில் ஓடிட்டு இருக்கு. அழகுலேயும் சரி. என் மீது அன்பு அக்கறையிலும் சரி. ஆ முக்கியமானது அவன் இது வரை ஒரு பெண்ணையும் நிமிர்ந்து கூட பார்த்தது இல்ல. அப்படி நல்லவன் கிட்ட அந்த எண்ணம் எனக்கு தோனலையே…”

உதயேந்திரனிடம் தன் மனம் சாய்ந்து விட்டது என்று வேணி எப்போது உணர்ந்தாளோ...அன்றில் இருந்து அவள் மனதில் தோன்றிய அனைத்தையும் உதயேந்திரனிடம் ஆதாங்கமாய் கொட்டி தீர்த்து விட்டாள் எனலாம்.

உதயேந்திரனிடம் தன் மனபாரம் அனைத்தையும் சொன்னதாலோ என்னவோ...வேணி ஒரு நிலைக்கு வர…

அவன் சட்டையில் இருந்து தன் கையை எடுத்தவள்… “சாரி.” என்று மன்னிப்பு கேட்டாள்.

“சாரி எல்லாம் எதற்க்கு…? என் சட்டையை பிடித்து கேள்வி கேட்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. உனக்கு மட்டும் தான் இருக்கு.” என்று சொன்னவன் மனதுக்குள் வேணி சொல்வது அனைத்தும் உண்மையே.

உதயேந்திரனுக்கே அது தெரிந்து தான் இருந்தது.இதோ இப்போது கூட தன் தந்தை இவளுக்கு எதிராய் என்ன செய்ய போகிறாரோ அதை நினைத்து தானே பயந்தோடி வந்தேன் என்று அவன் நினைக்கும் போது தான்… சங்கரன் நினைவே அவனுக்கு வந்தது.

“கிருஷ்ணா நீ சொன்னது எல்லாம் சரி தான். ஆனால் திட்டம் போட்டு எல்லாம் ஒருவர் மேல் ஆசை வராது இல்லையா...? நீ கவலை படாதே நான் பார்த்துக்குறேன்.

இப்போ இதை சொல். நான் வரும் போது சங்கரன் கிட்ட என்ன பேசிட்டு இருந்த …?”

“பெரிய விசயம் எல்லாம் இல்ல. என் போனை என்னை கேட்காம எடுத்தார். அதான் கொஞ்சம் சத்தம் போட்டேன்.” என்று சொன்னதும்…

அவன் போகும் போது வேணியின் கைய் பேசியையே பார்த்துக் கொண்டு சென்றது நினைவில் வர…

டேபுள் மீது இருந்த வேணியின் கைய் பேசியை எடுத்து பார்த்த போது அது மெசஜ் பக்கத்தில் இருப்பதை பார்த்து…

“உன் போனை அவன் எதுக்கு எடுத்தான்…?” என்று உதயேந்திரன் கேட்டதற்க்கு,

“ராஜசேகர் பேசியின் எண் என்னிடம் இல்ல. அவர் எண்ணை பதிவு செய்ய தான் என் பேசியை எடுத்தார்.” என்று வேணி சொன்னதும்…

“நல்லா யோசிச்சி சொல். ராஜசேகர் நம்பர் பதிவு செய்யிறேன்னு சொன்னனா... இல்ல உன் போனில் இருந்து அவருக்கு மெசஜ் செய்யிறேன்னு சொன்னனா…?”

தன் கையில் இருந்த வேணியின் கைய் பேசியில் திறந்திருந்த மெசஜர் பகுதியை பார்த்துக் கொண்டே கேட்டான்.

“மெசஜ் வார்த்தை வர...ஏன் இப்படி திரும்ப திரும்ப அதே கேள்வியை கேட்குறிங்க…?” என்ற வேணியின் கேள்விக்கு பதில் அளிக்காது அவள் பேசியை தன்னிடம் வைத்துக் கொண்டு தன் கைய் பேசியை அவனிடம் நீட்டியவன்..

“ஒரு வாரம் இதையே யூஸ் பண்ணு.அடுத்த வாரம் நான் எதுக்கு இந்த கேள்வி கேட்டேன்னு உனக்கு புரியும்.

வேணிக்கு அவன் பேச்சு பாதி புரிந்தும், புரியாமலும் இருந்தாலும், அவன் பேசியை மறுக்காது வாங்கிக் கொண்டாள்.














 
Active member
Joined
May 11, 2024
Messages
123
வேணி போன்வைத்து ஏதோ திட்டம் தீட்டி உள்ளார் உதய் அதை கண்டுகொண்டானோ 🤔🤔🤔🌺🌺🌺
 
Top