Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kambathu Ponnu....2 (part 2)

  • Thread Author
அத்தியாயம் ....26

தன் உதட்டுக்கு மிக நெருக்கத்தில் கன்னத்தை பார்த்ததும் வேணி அந்த மயக்க நிலையிலும் ஏதோ ஒரு யோசனையுடன் தான் தன் உதட்டை அந்த கன்னத்தில் பதித்தாள். பதித்ததும் தான் ஏதோ ஒரு வித்தியாசம் வேணிக்கு தெரிந்தது.

பவித்ரனுக்கு முத்தம் பதிப்பது வேணிக்கு புதியது கிடையாது. சிறு வயது முதலே பவித்ரன் படிப்பில் முதல் வந்தாலோ...விளையாட்டில் முதல் தர வரிசையில் வந்தாலோ..பவித்ரனின் நெற்றியிலும், கன்னத்திலும் தன் இதழ் பதித்து தன் மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறாள்.

பின் வயது ஆக ஆக யாரும் சொல்லாமலேயே மகிழும் சமயத்தில் நெற்றியில் முத்தம் இடுவதும். ஆறுதல் தேடும் சமயத்தில் பவித்ரனின் தோள் சாய்வதும் மட்டுமே அவளுக்கு பழக்கமாய் ஆகி போனது.

ஆனால் கன்னத்தில் முத்தமிடல் என்பது பல வருடம் கடந்து விட்டது. இப்போது அவனே கன்னத்தை காட்டவும் கொஞ்சம் தயங்கினாலும் முத்தம் இட்டு விட்டாள்.

ஆனால் இந்த முத்தம்...ஏதோ வகையாக இருக்கிறதே யோசித்தவளுக்கு அவள் உதடு உணர்ந்த அந்த சொர சொரப்பு நினைவுக்கு வரும் போதே….பவித்ரன் ரோம முடி தன் உதட்டில் படும் போது தன் உடல் முழுவதும் இருக்கும் ரோமம் சிலிர்த்து எழுவது போல்…

சீ என்ன இது பவித்ரனிடம் நான் இப்படி…?ஏதேதோ நினைவுடன் இதற்க்கு மேல் இதை பற்றி யோசிக்க மனது இடம் கொடுக்க வில்லையோ …? இல்லை உடல் நிலை இடம் கொடுக்க வில்லையோ…? யோசித்த வரை போதும் என்று தன் கண்ணை மூடிக் கொண்டாள்.

இங்கு பவித்ரன் படுத்து இருந்த அறைக்கு சென்ற கீர்த்தி, க்ரீஷோ அப்போது தான் மயக்கத்தில் இருந்து விடுப்பட்ட பவித்ரனை பார்த்தனர்.

பவித்ரன் கண் முழிக்கும் போது முதலில் பார்த்தது கீர்த்தி. க்ரீஷை தான். முதலில் யார் இவங்க…? என்று அடையாளம் தெரியாது முழித்தாலும், பின் நினைவு வந்தவனாய்… இவங்க ஏன் இங்கு வந்தாங்க…? என்று பவித்ரனின் சிந்தனை போனதே ஒழிய, இந்த கடத்தலுக்கும், இவர்களுக்கும், சம்மந்தம் இருக்குமா…? என்ற யோசனை என்ன… ஒரு சிறு சந்தேகம் கூட அவனுக்கு வரவில்லை.

முதலில் பவித்ரன் கண் விழிப்பானா…? என்று ஆவளுடன் காத்திருந்த கீர்த்தி பின் அவன் கண் முழித்து தங்களையே பார்ப்பதை பார்த்து … “ நம்மளை சந்தேகப்படுறாங்கலோ…” அந்த எண்ணம் வந்ததும் அவளுக்கு பயம் என்பதை விட, அந்த நிலையில் தானே தாங்கள் இருக்கிறோம் என்ற நினைப்பு தான் கீர்த்தியின் மனதில் கூடுதலாய் மனம் வருந்த செய்தது.

ஒரு வித பட படப்புடன் கீர்த்தி பவித்ரன் முகத்தையே பார்த்திருக்க, சட்டென்று எழுந்து அமர முயன்ற பவித்ரன் நிலை தடுமாறும் போது ஒரு பக்கம் க்ரீஷூம், ஒரு பக்கம் கீர்த்தியும், அவனை பிடித்துக் கொண்டனர்.

அவர்கள் பிடியில் ஒரு நிலைக்கு வந்த பவித்ரன் பேசிய முதல் வார்த்தையே…. “ நீங்க ஏன் இங்கு வந்திங்க….? உங்கல அவங்க பார்த்தா….வயசு பொண்ணு இப்படி தான்.” என்று கீர்த்தியை பார்த்து பேசிக் கொண்டு இருந்தவனுக்கு பொட்டில் அடித்தது போல் அப்போது தான் வேணியின் நியாபகம் வந்தது.

“வேணி…” என்று எழுந்து நின்றவனுக்கோ அப்போது கூட உடல் ஒரு நிலையில் இல்லாது பூமி சுழல்வது போல் இருக்க கால் ஒரு ஆட்டம் போட்டு தான் ஒரு நிலைக்கே வந்தது.

பின் பதட்டத்துடன் அவன் அடுத்த அடி எடுத்து வைக்கும் போது….

“அவங்களுக்கு ஒன்னும் இல்ல.அதுக்குள்ள மாமா வந்துட்டாங்க.” என்று பவித்ரனின் பயம் தெரிந்தவளாய் கீர்த்தி சொன்னாள்.

முதலில் கீர்த்தி சொன்ன… “ அவங்களுக்கு ஒன்னும் இல்ல.” என்ற அந்த வார்த்தையில் மனது அமைதி அடைந்தது என்றால்,அடுத்து அவள் பேசிய “ மாமா வந்துட்டாங்க.” என்ற வார்த்தை கேட்டு கோபம் கண் மண் தெரியாது போய் …

“பின்னால் கடத்த சொல்லிட்டு. முன்னால் நல்லவன் போல வந்துட்டா நாங்க நம்பிடுவோமா…?” என்று கத்திக் கொண்டே பவித்ரன் வேணி இருந்த அறைக்குள் நுழைந்தான்.

அப்போது தான் வேணியிடம் கன்னத்து முத்தத்தை பெற்று இருந்த உதயன், வேணி மருந்தின் மயக்கத்திலும், நினைவின் தாக்கத்திலும் மெல்ல கண் மூடினாள் என்றால், உதயன் வேணி சிந்திய முத்தத்தில் தவறு நெற்றி முத்தத்தையும் சேர்த்து அவள் சிந்திய முத்தங்களில் கண் மூடி நின்றான்.

பவித்ரன் வேகமாக தன் அருகில் வந்ததும் தான் தன் மயக்கத்தில் இருந்து தெளிந்தவனாய் கண் திறந்து பவித்ரனை பார்த்தான்.

“ என் வேணி கிட்ட நீ என்னடா செய்யிற…?” என்று கோபத்துடன் உதயனின் சட்டையை பிடித்துக் கொண்டு கேட்டான். இருவருக்குள்ளும் நேரிடையாக நடந்த முதல் பேச்சு வார்த்தை இது தான்.

தன் சட்டையை பிடித்துக் கொண்டு இருந்த பவித்ரனின் கை விளக்கிய படியே… “ உன் வேணி மயக்கம் தெளிய தான் காத்திருக்கிறேன் பவித்ரன்.”

உதயேந்திரனின் பேச்சில் ஒரு சிறு அளவு கூட கோபம் இல்லை. அதற்க்கு நேர் மாறாய் அவன் முகத்தில் மெல்லிய புன்னகை படர தான் உதயன் பவித்ரனிடம் பேசினான்.

பவித்ரன் கோபமாக அந்த அறை விட்டு சென்றதும், பின்னாலேயே ஓடி வந்த க்ரீஷ், கீர்த்தி உதயனின் புன்னகையை பார்த்து இங்கு என்ன நடக்கிறது என்பது போல் குழப்பத்துடன் நின்று விட்டனர்.

பவித்ரனுக்கோ தான் கோபமாக பேசியும், தன்னிடம் தன்மையாக பேசிய உதயனை பார்த்து கோபம் குறைவதற்க்கு பதில் அதிகரிக்கவே செய்தது.

எதிரில் பகை கொண்டு நிற்பவர்களை கூட நம்பி விடலாம். ஆனால் அன்பு என்ற போர்வையில் பேசி நமக்கே குழி பறிப்பவர்களை நம்ப கூடாது என்று அவன் அனுபவ அறிவு எடுத்துரைக்க…

“ என்னடா சிரிப்பு வேண்டி இருக்கு.”என்று கேட்டுக் கொண்டே திரும்பவும் உதயனின் சட்டை பற்ற போக, அதற்க்கு இடம் கொடுக்காது பவித்ரனின் கை பற்றிய உதய்..

“ தப்பு ப்ரோ. ரொம்ப தப்பு. நான் தன்மையா பேசிட்டு இருக்கும் போது இது போல் செய்வது ரொம்ப தப்பு.” உதயனின் முகத்தில் முதலில் இருந்த சிரிப்பு இல்லை. ஆனால் அவன் குரல் தன்மையாக தான் எதிரொலித்தது.

“ என்னடா தன்மை. செய்யிறது எல்லாம் செஞ்சிட்டு என்னவோ காந்தி மாதிரி பேசுற…” ஒருமையில் மட்டும் அல்லாது உதயனை டா போட்டு வேறு அழைத்தான் பவித்ரன்.

“ உன்னோட நான் ஏழு வயதாவது பெரியவனா இருப்பேன். இப்படி டா போட்டு அழைக்கிற…?” என்று சொன்ன உதயனின் குரலில் முதலில் இருந்த தன்மையும் மறைந்து விட்டது.

“ உனக்கு என்னடா மரியாதை வேண்டி இருக்கு…?” பவித்ரன் எப்போதும் தன்னிலை மறக்க மாட்டான். வேணி ஏதாவது கோபமாக பேசினாலும் தணிந்து தான் போய் விடுவான்.

கோபம் என்பது அவனுக்கு வராது என்பதை விட கோபம் நம் மூளையை மழுங்க செய்யும் என்பதை தெரிந்தவன். அதனால் பவித்ரனுக்கு கோபம் வந்தாலும் தன்னை கட்டு படுத்த தெரிந்தவனாய் இருந்து இருந்தான்.

அவனின் அந்த குணம் வேணியின் கடத்தலில் மறைந்து விட்டது. அதுவும் தங்களை கடத்தியவர்கள் வேணியை ஏதாவது செய்து இருந்தால், அந்த நினைவு எழும் போதே அவசர அவசரமாய் கட்டிலில் படுத்திருந்த வேணியின் பக்கம் கண் சென்றது.

பவித்ரனையே பார்த்திருந்த உதயனுக்கு அவன் எண்ணம் போகும் போக்கு புரிந்ததோ என்னவோ… “அவளுக்கு ஒன்னும் ஆகல. அவளுக்கு ஒன்னும் ஆகவும் நான் விட மாட்டேன்.” பவித்ரனின் மனது அமைதி படவே உதயன் இவ்வாறு சொன்னது.

ஆனால் பவித்ரனுக்கோ அதற்க்கு எதிர் பதமாய் அவன் மனது உதயன் வேணியை சொன்ன விதமான அவள் என்ற பேச்சிலும், நான் ஒன்னும் ஆக விட மாட்டேன் என்ற உரிமை பேச்சிலும், கோபம் ஏகத்துக்கு எகிறியது.

அதன் விளைவாய்… “ நீ என்ன ஒன்னும் ஆக விட மாட்டேன்னு சொல்றது. நான் இருக்கும் வரை அவளை யாராலும் நெருங்க முடியாது.”

சிறு வயது முதலே வேணிக்கு எல்லாமாய் இருந்தவன் பவித்ரன். அந்த உரிமை உணர்வில் எங்க இருவருக்கும் இடையில் இவன் யார்…? என்று நினைத்து இப்படி பேசினான்.

பவித்ரனின் மனநிலையை தெளிவாக புரிந்துக் கொண்ட உதயனோ… “ சரி சரி உங்க நட்புக்கு இடையில் நான் எப்போதும் வர மாட்டேன்.” என்று சொல்லி பவித்ரனிடம் உதய் தழைந்து தான் போனான்.

“என் வேணிக்கு நான் என்னவாகவும் இருப்பேன்.அதுக்கு நீ என்னடா எனக்கு அனுமதி கொடுப்பது.”

அவர்கள் இருவருக்கும் நட்பு என்ற பட்சத்தில் அவன் ஏற்றுக் கொள்வான். ஆனால் பவித்ரன் சொன்ன வேணிக்கு நான் என்னவாகவும் இருப்பேன் என்ற அந்த வார்த்தை உதயனின் மனதை லேசாக நிமின்ட தான் செய்தது.

அதன் பிரதிபலப்பாய் இது வரை இருந்த இலகு தன்மை குரலிலோ, முகத்திலோ காட்டது… “ வேணிக்கு யார் என்னவாக இருக்க போவது என்று காலம் தான் சொல்லும் மிஸ்டர் பவித்ரன்.” என்று உதயேந்திரன் சொன்னான்.

உதயனின் பேச்சில் பவித்ரன் குழம்பி போனவனாய் நெற்றி சுருங்க…. “ நீ என்ன சொல்ற…?”

“ நான் என்ன சொல்றேன்னு நீங்க எனக்கு மரியதை கொடுத்து பேசினா சொல்றேன் மிஸ்டர் பவித்ரன்.”

“ சரி நீங்க சொன்னதற்க்கு என்ன அர்த்தம் மிஸ்டர் உதயேந்திரன்.” உதயன் பேசியது போல பவித்ரனும் மிஸ்டர் என்ற அழைப்பு விடுத்து மரியாதை கொடுத்து கேட்டான்.

பவித்ரனுக்கு உதயன் பேசிய பேச்சின் அர்த்தம் தெரிய வேண்டும். வேணியை இவன் என்னவாக பார்க்கிறான் என்பது தெரிய வேண்டி இருந்ததால், மனதுக்கு பிடிக்கவில்லை என்றாலும் பன்மையில் அழைத்து பேசினான்.

“ ம் இனி இப்படி மரியாதை கொடுத்து பேசி பழகு.” என்று சொன்ன உதயேந்திரன் “ வேணிக்கு யார் யார் என்னவாக இருப்பது என்று நாம முடிவு செய்ய முடியாது. கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுள் முடிவு செய்வார் என்று சொல்லலாம். காலத்தின் மீது நம்பிக்கை இருந்தால் விதி முடிவு செய்யும் என்று கூட சொல்லலாம்.”

உதயேந்திரனின் இந்த பேச்சு பவித்ரனை தெளிவு படுத்துவதற்க்கு பதிலாய், மேலும் தான் குழம்ப வைத்தது. அவன் பேசிய பேச்சில் நம்மிடம் விளையாடுகிறானா…? சந்தேகம் கொண்டு உதயன் முகம் பார்த்தான். அங்கோ தொலைகாட்சியில் செய்தி வாசிப்பது போல் மிக பொறுப்புடன் இருப்பது போல் தான் அவன் முகம் காணப்பட்டது.

“ என்ன மிஸ்டர் பவித்ரன் உங்களுக்கு இன்னும் புரியலையா…?” என்று சொன்னவனை அடுத்த வார்த்தை பேச விடாது.

“ எல்லாம் எனக்கு புரியுது. முதல்ல வேணி என்று என் அத்தை மகள் மாமன் மகளை பெயர் சொல்லி அழைப்பதை நிறுத்து.”

“ பெயர் அழைத்து சொல்ல தானே பெயர் வைப்பது…?” என்று தன் சந்தேகத்தை கேட்டு விட்டு உதய் பவித்ரன் முகத்தை பார்த்தான்.

“ வீண் பேச்சு வேண்டாம். எனக்கு நீ அவளை வேணி என்று கூப்பிட கூடாது.” அவ்வளவு தான் என்பது போல் பவித்ரன் பேச்சு இருந்தது.

“ சரி இனி வேணி என்ற பெயரை கூப்பிட மாட்டேன்.” என்று பவித்ரனிடம் சொன்ன உதய், மனதினுள்…

‘நீ கூப்பிடுற மாதிரி நான் கூப்பிட்ட முடியாது தான். எல்லோருக்கும் அவள் வேணின்னா எனக்கு கிருஷ்ணா டா.” என்று நினைத்துக் கொண்டான்.

பவித்ரனோ இவன் இப்படி தழைந்து போகுபவன் கிடையாதே..இதில் ஏதாவது உள்குத்து இருக்கா என்று யோசனையுடன் பவித்ரன் உதயனை பார்த்தான்.

“ என்ன சார் முத சவாரியே இப்படி அலைய விடுறிங்கலே…” க்ரீஷ், கீர்த்தி பவித்ரன் அறைக்கு சென்ற போது அவர்கள் கூடவே சென்று, இதோ இப்போது இந்த அறைக்கு வரும் போது அவர்கள் பின்னவே வந்த அந்த கார் ட்ரைவர் பேச.

“ நீ இன்னும் போகாம என்ன செய்யிற…?” என்று உதயன் கேட்க…

“சொல்லுவீங்க சார் சொல்லுவீங்க. உங்களுக்கு கார் மட்டுமா ஓட்டிட்டு வந்தேன். இதோ….” ஹாலில் அடித்து போட்டு இருக்கும் கடத்தல் காரர்களை காட்டி…. “ அவர்களை அடித்து அடியாள் வேலையும் செய்து துட்டு வாங்காம போக சொல்றிங்கலா…?” என்று அந்த கார் ட்ரைவர் நியாயம் பேசினான்.

“ஓ பணம் கொடுக்கலலே...சாரி சாரி.” என்று மன்னிப்பு வேண்டிய உதய் எப்போதும் டெபிட் கிரிடிட் கார்ட் மட்டும் உபயோகிப்பதால் உதயனிடம் அதிக பணம் கொடுக்கும் அளவுக்கு பணம் இல்லாததால் தன் கழுத்தில் தொங்கி கொண்டு இருந்த ஜெயினை கழட்டி அவனிடம் நீட்டினான்.

தன் அத்தனை பற்களையும் காட்டி வாங்கி கொண்ட அந்த கார் ட்ரைவரின் மனதிலோ… ‘பாக்க தான் பெரிய வீட்டு பிள்ளை போல் இருக்காரு. பாவம் காருக்கு காசு கொடுக்க கூட துட்டு இல்ல போல.”

உதயனை பற்றி மனதில் பரிதாபம் பட்டுக் கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றார் அந்த கார் ட்ரைவர்.

இந்த சமயத்தில் வேணி தன் மயக்கம் தெளிந்து விழித்து பார்த்தவளுக்கு இப்போது கண் பார்வை தெள்ள தெளிவாக தெரிந்தது. அவள் கண் முழித்து முதலில் தெள்ள தெளிவாக பார்த்ததும் நம் பவித்ரனை தான்.

“ பவி…” வேணியின் ஈன குரலில் எல்லோர் கவனமும் அவளிடம் திரும்பியது. பவித்ரன்… “ வேணி உனக்கு ஒன்னும் இல்லையே...” பவித்ரன் பதறி போய் கேட்டான்.

முகத்தில் சிந்தனை கோடு விழ… “ நீ தானே என் கிட்ட…” அடுத்து பேசாது வேணியின் சந்தேக பார்வை உதயன் மேல் படிந்தது.
















 
Top