Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kambathu Ponnu...22

  • Thread Author
அத்தியாயம்….22

நிமிர்ந்து பார்த்த பவித்ரன் கண்ணுக்கு தெரிந்ததோ ஏதோ ஒரு சின்ன பெண், ஒரு ஆணுடம் பேசிக் கொண்டு இருப்பதே… அவன் கண்ணுக்கு அது மட்டும் தெரிந்து இருந்தால் கூட பரவாயில்லையாக இருந்து இருக்கும்.

கூடவே அப்பெண் தன்னை அவ்வப்போது பார்த்த பயப்பார்வையில்,(அவன் கண்ணுக்கு காதல் பார்வை பய பார்வையாக தெரிகிறது போல்.) நெற்றியில் சுருக்கம் விழ காயத்ரியையே பார்த்திருந்தான். (கூடுதல் தகவல் காயத்ரியை பார்த்தால் பவித்ரனுக்கு சிறு பெண் போல் தெரிகிறது போல்.)

இந்த இடைப்பட்ட நேரத்தில் பவித்ரனின் கவனம் இங்கு இல்லை என்பதை கவனித்து விட்ட வேணி பவித்ரன் பார்வை சென்ற இடத்தை நோக்கி தன் பார்வையை செலுத்தியவள் பின் பவித்ரனை பார்த்து…

“ யாரு அந்த குட்டி பெண் பவி…?”( பாவம் காயூ வேணி கண்ணுக்கும் அவள் குட்டி பெண்ணாய் தான் தெரிகிறாள்.)

“ தெரியல வேணி.”

“தெரியலையா…?அப்போ ஏன் அந்த பெண்ணை அப்படி பாக்குற பவி…? ” வேணி எப்போதும் பவித்ரனிடம் வெளிப்படையாக தான் இருப்பாள். எது என்றாலும் தயங்காது கேட்டும் விடுவாள். அவளின் அந்த தன்மையில் இப்போதும் கேட்டு விட்டாள்.

“ அந்த பொண்ணுக்கு ஏதோ பிரச்சனை போல் வேணி. அந்த ஆளு அந்த பெண்ணை ஏதோ பேசி பயமுறுத்திட்டு இருக்கான்னு நினைக்கிறேன்.”

கிருஷ்ணவேணி, பவித்ரன், இருவரின் பார்வையும் காயத்ரி மீது இருந்ததே ஒழிய, முதுகை காட்டி அமர்ந்து இருந்த உதயேந்திரனை பார்க்காது, அவன் ஏதோ ஒருத்தன் என்பது போல் தான் பேசிக் கொண்டு இருந்தனர்.

வேணி திரும்பவும் காயத்ரியை திரும்பி பார்த்து விட்டு… “ அப்படியா தோனுது….?” வேணியின் கண்ணுக்கு காயத்ரியின் பார்வை பயப்பார்வையாக தோன்றவில்லை.

அதற்க்கு என்று அப்பெண் பவித்ரன் மீது காதல் பார்வை வீசுகிறாள் என்பது போலவும் அவளுக்கு தெரியவில்லை. ஒரு வேளை வேணி காதல் உணர்வை அனுபவித்து இருந்து இருந்தால் தெரிந்து இருக்குமோ காயத்ரியின் பார்வையின் பொருளை.

“ எனக்கு என்னவோ அந்த பெண்ணுக்கு உன்னை தெரிஞ்சி இருக்கு போல...அதான் பார்க்குறா…?” வேணி பாதி உண்மையை சொன்னாள்.

“ சே..சே இந்த பெண்ணை நான் பார்த்தது இல்ல. அந்த பொண்ணு பயந்து போய் நாம ஏதாவது உதவிக்கு வர மாட்டோமா என்று தான் பாக்குது.” என்று சொன்ன பவித்ரன்.

“ வேணி நீ அந்த பெண் பக்கத்தில் இருக்கும் சேரில் போய் உட்கார்ந்து அந்த பெண்ணை எங்கேயோ பார்த்த நினைவு இருக்கிறது என்பது போல் பேச்சு கொடு. நான் கொஞ்ச நேரம் கழிச்சி ஜாயின் செஞ்சுக்கிறேன்.” என்று சொல்லி வேணியை காயத்ரி, உதயேந்திரன் அமர்ந்து இருந்த இருக்கைக்கு அனுப்பி வைத்தான்.( இது தான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது என்பதோ .)

“ என்னமோ சொல்ற… எனக்கு என்னவோ வீண் வம்பை விலைக்கு வாங்க போறோம் என்று தான் தோனுது.” வேணிக்கு என்னவோ பவித்ரன் சொன்னதை செய்ய தோன்றவில்லை.

ஆண் பெண் இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் இடத்தில் நாம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும். பவித்ரன் நினைப்பது போல் இல்லாது அவர்கள் பர்சனலாய் ஏதோ பேசிக் கொண்டு இருந்தால், இடையில் புகுவது அநாகரிகமான செயல் தானே… அதை நினைத்து தான் வேணி தயங்கியது.

“ இப்போ அங்கே போக என்ன தயக்கம் வேணி. பெண்ணாய் இருப்பதால் தானே உன்னை போக சொல்றேன். இல்லேன்னா நான் உன்னை அனுப்பாது நான் போய் இருப்பேன்.” எப்போதும் பவித்ரன் இது போல் வேணியை கடிந்து பேசியது இல்லை.

பவித்ரனுக்கு என்னவோ அப்பெண்ணுக்கு பிரச்சனை. அதை நம்மால் தீர்க்க முடிந்தால் தீர்க்கலாமே. அப்பெண்ணை பார்த்தால் ஏனோ பவித்ரனுக்கு பாவமாய் தோன்றியது. அந்த ஆற்றமையில் பவித்ரன் வேணியை கடிந்து பேசி விட்டான்.

பவித்ரனின் பேச்சில், உள்ளடங்கிய குரலில்… தான் நினைத்தை வேணி சொல்லி விட்டு… “அதான் போக ஒரு மாதிரியா இருக்கு பவி.” என்ற வேணியின் பேச்சில்..

அவள் கை மீது தன் கை வைத்த பவித்ரன்… “ நீ அங்கு போ வேணி. உண்மையில் நான் நினைப்பது போல் அந்த பெண்னுக்கு பிரச்சனையா இருந்தா…? கண்டும் காணமல் நாம் போய் விட்டால், பாவம்ல அந்த பொண்ணு.”

பவித்ரன் இவ்வளவு சொல்லியும் வேணி போகாது இருப்பாளா… “ சரி.” என்று சொல்லி எழுந்த வேணி உதயேந்திரன், காயத்ரி இருக்கையை நோக்கி நடக்க தொடங்கினாள்.

பவித்ரன், வேணி உரையாடல்கள் உதயேந்திரன் காதில் விழ வில்லை என்றாலும், கொஞ்சம் நேரமாய் தங்களை பார்த்து குறிப்பாய் காயத்ரியை பார்த்து பேசிக் கொண்டு இருப்பதை தன் முன் இருந்த கண்ணாடி ஷோ கேசில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த உதயன், வேணி தங்களை நோக்கி வருவதை பார்த்து தன் கைய் பேசியில் முகத்தை புதைத்துக் கொண்டான்.

காயத்ரியோ… “ உதி உதி அந்த பொண்ணு இங்கே தான் வருது. வருது.” என்று உதயேந்திரனை எச்சரிக்கை விடுத்தாள்.

உதயோ… “ உஸ்.உஸ்.” என்று அமைதியாக இரு என்பது போல் சமிஞ்சை செய்து முடிக்கும் வேளயில் காயதிரியை மட்டுமே பார்த்துக் கொண்டு அவள் பக்கதில் அமர்ந்த வேணி…

எதிரில் யார் இருக்கிறார் என்று கூட பாராது…. “ நாம முன்ன பார்த்து இருக்கோம்…?” பவித்ரன் சொன்னது போல் காயத்ரியிடம் பேச்சை ஆராம்பித்துக் கொண்டே எதிரில் பார்த்தாள்.

அங்கே சிரித்த முகமாய் இருவரையும் பார்த்த உதயேந்திரன் சிரித்துக் கொண்டே… “ பார்த்து இருக்கலாம். பார்த்து இருக்கலாம்.” என்று உதயேந்திரன் கேலி புன்னகை இழையோட சொன்னான்.

வேணி சத்தியமாய் அந்த இடத்தில் உதயேந்திரனை எதிர் பார்க்கவில்லை. இப்போது என்ன செய்வது…? இப்போது இங்கு இருந்து போனால் நான் இவனை பார்த்து பயந்து போவது போல் ஆகிவிடுமோ…?

இங்கு இருந்தால் ஏதாவது இவன் பேச்சு கொடுத்தால் என்ன செயவது…? என்று நினைத்து இவள் திரு திரு என்று முழிக்க.

இவர்களையே பார்த்துக் கொண்டு இருந்த பவித்ரனுக்கு வேணியின் திரு திரு முழி. நான் நினைத்தது போல் தான் அந்த பெண்ணுக்கு ஏதோ பிரச்ச்சனை என்று ஊகித்தவனாய் அவசரமாய் அவர்களை நோக்கி சென்றான்.

“ வேண்டாம். வேண்டாம்.” என்பது போல் வேணி தலையாட்டலை கூட பாராது, கட கட என்று அவர்கள் இருக்கும் இருக்கைக்கு வந்த பவித்ரன் உதயேந்திரன் பக்கம் இருந்த இருக்கையில் அமர்ந்தே விட்டான்.(ஷப்பா இவங்கல நான் சேக்க.)

“ என்ன மிஸ்டர் பவித்ரன் உங்களுக்கும் இவங்களை பார்த்த மாதிரி இருக்கா…?” வேணியிடம் எப்படி கேட்டானோ அந்த கிண்டல் அவன் பேச்சில் இம்மியும் குறையாது இருந்தது.

பாவம் பவித்ரனும் அப்போது தான் உதயனை பார்த்து விட்டு...அதற்க்கு அடுத்து என்ன பேசுவது என்று தடுமாறி அமைதி காத்தான்.

அதுவும் உதயன் கேட்ட … “ என்ன உங்களுக்கும் பார்த்த மாதிரி இருக்கா….” என்று ஏன் கேட்டான் என்று பவித்ரனுக்கு தான் தெரியுமே, பேச்சை எப்படி ஆராம்பிப்பது என்று வேணியிடம் சொல்லி அனுப்பியவனே அவன் தானே…

உதயன் கேட்டதுக்கு என்ன சொல்வது என்று பவித்ரன் தயங்கினான் என்றால், தன்னை ஏதாவது கிண்டல் செய்தால் கூட வேணி பொறுத்துக் கொள்வாள்.

பவித்ரனை யாராவது ஏதாவது சொன்னால், அவ்வளவு தான் சொன்னவங்க காலி. இவள் எதுவும் செய்ய மாட்டாள் தன் மாமனிடம் ஒன்றுக்கு இரண்டாய் ஏதாவது சொல்லி, பவித்ரனை சொன்னவர்களை ஏதாவது செய்து வைத்து விடுவாள்.

இப்போது இந்த இடத்தில் தன் மாமன் இல்லாத காரணத்தால் களத்தில் தானே குதித்து விட்டாள்.

“ ஹலோ நான் தான் இந்த பெண்ணை பார்த்த மாதிரி இருக்குன்னு சொன்னேன். பவி நான் இங்கு இருக்க தொட்டு தான் இங்கு வந்தான்.

இந்த பொண்ணுங்கல பார்த்தா எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு….?கடலை போடுற ஆளு என் பவி இல்லை.”

பொதுவாய் ஒரு ஆண் பெண்ணை பார்த்து பேச தோன்றினால்...ஏதாவது பேச்சை ஆராம்பிக்க இது போல் தானே பேசுவார்கள். அதை நினைத்து தான் நம் இப்படி வேணி பேசியது.

பிறப்பில் இந்தியனாய் இருந்தாலும், வளர்ப்பில் ஜெர்மனி ஆன நம் நாயகன் உதயோ… “ பேச தோன்றினால் நேரிடையாக பேச வேண்டியது தானே...பேச சாக்கு எதற்க்கு…?”

உதய் வேணியிடம் தன் சந்தேகத்தை தீர்க்க வேண்டி இப்படி கேட்டானா…? இல்லை வேணி சொன்னது போல் கடலை போட பேசினானோ...அது அவனுக்கே வெளிச்சம்.

“ அது நீங்க பேசுவது…?” என்ன பேசுகிறோம் என்று தெரியாது, தங்கள் பேச்சில் வேணி காயத்ரியை இழுத்து விட்டாள்.

காயத்ரியோ… “ நீங்க இங்கு என்ன செய்ய வந்திங்கம்மா….?” காயத்ரி இப்படி கேட்டதும் வேணி தன் பக்கத்தில் அமர்ந்து இருக்கு காயத்ரியை பார்க்காது….

‘யார்டா இது குழந்தை என்பது போல் தான்.’ காயத்ரி சுவர் ஒரமாய் ஒரு பெரிய கைய் பையை வைத்திருந்தாள். குழந்தை குரல் வந்ததும் காயத்ரியை தான்டி எட்டி பார்க்கும் போது வேளயில் கூட மனதில்…

‘ஒரு சின்ன குழந்தை பெரிய பேச்சை பேசுவது பாரேன்’ என்று நினைத்துக் கொண்டு இருந்தவள் எட்டி பார்த்ததும் அங்கு ஒரு கைய் பைய் மட்டுமே இருப்பதை பார்த்து…

‘யார் பேசியது….?” அப்போது தான் சந்தேகத்துடன் காயத்ரியின் முகத்தை பார்த்தாள். அங்கோ இது வரை வேணி காயத்ரி முகத்தில் பார்த்ததாய் சொன்ன தெரிந்த பார்வை என்ற பாவனையோ...பவித்ரன் சொன்ன பயந்த பார்வை மாதிரியோ தெரியாது. கண்கள் இரண்டும் மொச்சை கொட்டையாய் விரிய தன்னை பார்த்திருந்தவளை பார்த்த வேணிக்கு அப்போது தான் சந்தேகம் வந்தது.

‘இப்போது பேசியது இவளா…..?’ என்று.

தன் சந்தேகத்தை உறுதி செய்து கொள்ள பவித்ரனை நிமிர்ந்து பார்த்ததும் தெரிந்து விட்டது. இப்படி பேசியது தன் பக்கத்தில் அமர்ந்து இருக்கும் இவளே தான் என்று.

வேணியின் சந்தேகத்தை உறுதி செய்வது போல் பவித்ரன்… “ கண்டிப்பா நீ பேசுவது போல் நாங்க பேச வரல.” என்று காயத்ரியின் முகத்தை பார்த்து பேசிய பவித்ரன் வேணியை பார்த்து…

“ நீ சொன்னது சரி தான். நமக்கு எதுக்கு மத்தவங்க வம்பு. நம் வேலை பார்த்து போய் இருக்கனும்.” என்று சொன்னான்.

காயத்ரி வேணியைபார்த்து … “ நீங்க என்ன செய்ய வந்திங்க….?” என்று பேசியதை கேட்டதும், வேணிக்கு தோன்றிய சந்தேகம் பவித்ரனுக்கும் வந்து இருக்கும். ஒரு வேளை பவித்ரன் காயத்ரி முகத்தை பார்க்காது இருந்து இருந்தால்.

அந்த இடத்தில் உதயனை பார்த்ததும், வேணியை இந்த இருக்குகைக்கு அனுப்பியது தவறோ… என்று நினைத்தது எல்லாம் காயத்ரியின் முகம் பார்த்ததும் மறந்து போனது.

வேணியை பாதுகாக்கும் பொருட்டு உதயேந்திரனை பற்றி விசாரித்ததில், அவனின் லிவிங் டூ கெதரை பற்றியும் பவித்ரன் அறிந்து வைத்து இருந்தானே…

இந்த பெண் ரொம்ப சின்ன பொண்ணா இருக்கா... இவன் ஜெர்மனியில் செய்ததை இங்கு தொடர நினைக்கிறானோ...அந்த சந்தேகம் பவித்ரனுக்கு வந்ததும் வேணி உதய் எதிரில் இருப்பதை கூட மறந்தவனாய் காயத்ரி பொருட்டு அமர்ந்து விட்டான். ஆனால் இந்த சின்ன சிட்டு வேணியை பேசியதை பார்த்ததும் அவ்வளவு தான் கோபம் என்று சொல்வதை விட…

ஒருவர் மீது நாம் நம்பிக்கை வைத்திருக்கும் போது அது தகர்ந்தால் வருமே.. கோபம், இயலாமை, ஏமாற்றம் கலந்த ஒரு உணர்வு. அந்த உணர்வு மனதில் சூழ…

“ நீ அப்படி இருக்கலாம்.” என்பது போல் பவித்ரன் பேசி விட்டான்.

ஆம் பவித்ரன் மனதில் காயத்ரியை பார்த்ததும் அவன் மனதில் தோன்றியது சின்ன சிட்டு என்ற பெயர் தான்.

வேணி காயத்ரியை உதயன் பேச்சில் இழுக்க வேண்டும் என்று எல்லாம் பேசவில்லை. ஏதோ பேச்சு வாக்கில் வார்த்தையாய் கொட்டி விட்டாள்.

அதே போல் தான் காயத்ரியும், உதய் சொன்ன ‘பவித்ரன் வேணியை காதலிக்கவில்லை. ஆனால் திருமணம் அவளை தான் செய்துக் கொள்வான்.’ என்ற பேச்சு காயத்ரியின் மனதை பலமாக தாக்கியது.

உதயனின் அந்த அவள் மனதை தாக்கியதற்க்கு காரணம் , தனக்கு அவனை பிடித்து இருப்பதால் மட்டும் இல்லை.

காதல் இல்லாது வேணியை திருமணம் செய்தால் அவன் எப்படி மகிழ்ச்சியை இருப்பான் என்று நினைத்தும்.

ஆனால் வேணியை ஒரு வார்த்தை சொன்னதற்க்கு, தன்னை இப்படி பேசி விட்டானே..என்று அடிப்பட்ட ஒரு பார்வையை காயத்ரி பவித்ரனை பார்த்து வீச.

அந்த பார்வை பார்த்த பவித்ரனின் மனது ஏதோ செய்தது தான். ஆனால் அவன் அறிவோ...இந்த பார்வை இவள் பார்த்து வைத்ததால் தான் நான் ஏமாந்து போய் வேணியை இங்கு அனுப்பினேன். என்று நினைத்து பவித்ரன் காயத்ரி மீது கோப பார்வை வீசினான். ‘பவித்ரன் ஸ்டேடி ஸ்டேடி’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். இவர்களின் பேச்சு வார்த்தைகளை எல்லாம் ஒரு பார்வையாளனை போல் மட்டும் பார்த்துக் கொண்டு இருந்த உதயனுக்கு ஒரு ஆர்வம் மனதில் எழுந்தது.

தன்னை இங்கு பார்த்ததும் வேணியை இழுத்துக் கொண்டு செல்வான் என்று பார்த்தால், இவன் என்ன என்றால் பட்டிமன்றம் போல் இருவரையும் பேச வைத்து பார்த்துக் கொண்டு இருக்கிறான்.(இவனும் அதையே தான் செய்துக் கொண்டு இருக்கிறான் என்பது வேறு விசயம்.)

என்று யோசனையுடன் பார்த்துக் கொண்டு இருந்த உதயனின் மனதில் தோன்றியது எல்லாம் ‘காயூ உனக்கு மட்டும் பார்த்த உடன் பத்திகல. அவனுக்கும் தான்.’ உதய் இது போதும்டா சும்மா புகுந்து.

அவன் திட்டத்தை மேலும் தொடர விடாது ஜெர்மனியில் இருந்து அவன் காரியதரிசியிடம் இருந்து பேசியில் அழைப்பு வந்தது.

“ நாம் அனுப்பிய காரின் ஸ்பாட்ஸ் எல்லாம் திருப்பி அனுப்பி விட்டார்கள். எவி லாஸ். நீங்க வந்தா தான் பாஸ் சரியாகும்.” என்ற செய்தியில் ஜெர்மனிக்கு பறந்து போனான்.

ஆனால் போகும் முன் தன் தந்தையிடம்…

“ நான் வரும் வரை கிருஷ்ணாவை தூக்கிறேன். இறக்குறேன். என்று ஏதாவது செய்து வைத்து பிரச்சனையில் மாட்டிக்காதிங்க. நான் உங்களுக்காக தான் சொல்றேன்.” என்று உதயேந்திரன் தன் தந்தையிடம் சொல்லி விட்டு தான் சென்றான்.

ஆனால் மகன் சொன்ன அந்த ஒற்றை வார்த்தையின் மாற்றத்தில், இவன் இந்தியா வரும் போது அந்த பொண்ணு இங்கு இருக்க கூடாது என்று முடிவு செய்தவராய்..

தங்கள் தொழிலுக்கு பயன் படுத்தும் பணத்துக்காக எது என்றாலும் செய்யும் ஆட்களுக்கு அழைப்பு விடுத்தார் பரமேஸ்வரர்.
































 
Top