அத்தியாயம்….23
ஜெர்மனி விமான நிலையத்துக்கு உதயேந்திரன் வந்து இறங்கியதும் அவனை அழைத்து செல்ல அவனுக்கு முன்பே வந்து காத்துக் கொண்டு இருந்த தன் உதவியாளன் ஸ்டிபனை பார்த்ததும் உதயனின் மனம் கொஞ்சம் இதம் கண்டது.
அவனின் அந்த இதம் நீண்ட நாட்கள் கழித்து ஜெர்மனியின் காற்று முகத்தில் வந்து மோதியதால் கூட இருக்கலாம்.
ஆனால் அதற்க்கு எதிர் பதமாய் இருந்தது ஸ்டிபனின் முகம். தங்கள் கம்பெனிக்கு ஏற்பட்ட இழப்பு கொஞ்சம் நஞ்சம் கிடையாது. தாங்கள் மூன்று முறை அனுப்பிய காரின் உதிறி பாகங்கள் அனைத்தும் போலி என்று திருப்பி அனுப்பியதோடு அல்லாது, வழக்கும் பதிவு செய்து உள்ளனர்.
அது மட்டும் அவர்களுக்கு சாதகமாய் தீர்ப்பு கிடைத்தால், அடைய போகும் நஷ்டம் உதயேந்திரன் இது வரை ஜெர்மனியில் சம்பாதித்ததை மொத்தமாக கொடுத்து விட்டு தான் இந்தியா செல்ல வேண்டியதாக இருக்கும்.
மூன்று முறை போலி வாகனத்தின் உதிரி பாகம் என்பது ஸ்டீபன் இருக்கும் போது, அதாவது உதயேந்திரன் இந்தியா சென்றதில் இருந்து அனுப்பிய உதிரி பாகம் தான் போலி என்று கூறுகின்றனர்.
உதயேந்திரன் இருக்கும் வரை சரியாக நடந்துக் கொண்டு இருந்தது. அவன் இந்தியா சென்ற பின் இப்படி என்றால், சந்தேகம் ஸ்டீபன் மேல் தானே விழும்.
அந்த கம்பெனியில் ஸ்டீபன் என்பவன் உதயேந்திரனுக்கு பி.ஏ மட்டும் இல்லை அனைத்தும் அவனே…
அதனால் தான் உதயேந்திரன் இந்தியா சென்றதும் அவன் இடத்தில் அனைத்தும் ஸ்டீபன் பார்த்துக் கொண்டது.
இப்போது இந்த சம்பவம் உதயன் தன்னை தவறாய் நினைத்து விடுவானோ...தொழில் நஷ்டத்தோடு, இந்த பயமே ஸ்டீபனுக்கு மேலோங்கி இருந்தது.
அதனால் ஸ்டீபனிடம் உதயன் கை நீட்டியதும் அதை பிடித்து குலுக்கிய உதயேந்திரனின் கை அவனின் நடுக்கத்தை உணர்ந்ததும்….
“ ஸ்டீபன் நீ தவறு செய்து இருக்க மாட்ட. அது எனக்கு தெரியும். ஆனா மூன்று முறை எப்படி தவற விட்ட… அது உன் அஜாக்கிரதை தானே…” என்று உதயேந்திரன் கேட்டதும்.
குலுக்கிய கைய் விடாது….” தேங்ஸ் தேங்ஸ்.” ஸ்டீபனிடம் அதற்க்கு அடுத்து வார்த்தைகளே இல்லை.
தன்னை தவறாய் நினைத்து விட்டால், அந்த பயத்தை உதயனின் வார்த்தை போக்கி விட்டதும் அப்படி ஒரு ரிலீப் ஸ்டீபனுக்கு.
ஸ்டீபனும் திறமையானவன் தான். இந்த பிரச்சனையை தெளிவாக ஆராய்ந்தால் அவனே எங்கு தவறு நடந்தது என்று தெரிந்துக் கொண்டு இருப்பான்.
அவனை தெளிவாக யோசிக்க விடாது உதயேந்திரன் தன்னை தவறாய் நினைத்து விடுவானோ என்ற அந்த பயம் தான் தடுத்து நிறுத்தி விட்டது.
இப்போது அந்த பயத்தை உதயேந்திரன் போக்கியதும்… தன்னால் காரில் உதயேந்திரன் வீட்டுக்கு செல்லும் வழியிலேயே…
“ சார் ஸ்பாட்ஸை ஏத்தும் போது நானே முன் இருந்து எல்லாம் பார்த்து தான் லோடு ஏத்தினேன்.” என்று சொன்னவனின் பேச்சை இடைமறித்து நிறுத்திய உதயேந்திரன்…
“ அவங்க சொன்ன கம்பிளையிண்ட் சரியா…?அதாவது அவங்க கிட்ட இறக்கினது போலியா…?” என்ற உதயேந்திரனின் கேள்விக்கு..
“ ஆமாம்.” என்ற வகையாக தலையாட்டிய ஸ்டீபனின் தலை தன்னால் குனிந்தது.
“ ஏத்தும் போது சரியாக இருந்தது. இறக்கும் போது போலியா இருந்து இருக்குன்னா...வழியில தான் மாறி இருக்கு.”
“ஆமாம் சார். நானும் அதை நினச்சி நம்ம வாகனம் போகும் வழி செக் போஸ்ட் அனைத்தையும் சரி பார்த்தேன். எங்கேயும் மாத்தல.” என்று ஸ்டீபன் சொன்னதும் ..
“ம்…” என்று முனகிய உதயேந்திரன் எதையோ யோசித்தவனாய்… “ இந்த புகார் ஏன் நம்ம கிட்ட பனம் கொடுக்காம ஏமாத்துவும், நம்ம கிட்ட இருந்து பணம் கரக்கவும் அவங்கலே பொய்யா புகார் கொடுத்து இருந்தா …?” என்று உதயேந்திரன் தன் சந்தேகத்தை கேட்டான்.
“ அப்படியும் யோசிச்சி சரி பார்த்துட்டேன் சார். கடைசியா நாம ஸ்பாட்ஸ் இறக்கும் போது அந்த குடவுனில் இருக்கும் புட்டேஜை அவங்க போட்டு காட்டினாங்க. அது நம்ம வாகனத்தில் இருந்து இறக்கிய ஸ்பாட்ஸ் தான்.”
“ஒ...” இப்போதும் ஒரு வார்த்தையில் பேச்சை முடித்தவன் தன் வீடு வந்து இறங்கியதும் ஸ்டீபன் காரை விட்டு இறங்காததை பார்த்து விட்டு…
“ வீட்டுக்குள் வரலையா…?” என்று கேட்டதுக்கு ..
“இல்ல சார் நீங்க ப்ரைஷ் ஆயிட்டு வாங்க. நான் அது வரை காரிலேயே வையிட் பண்றேன்.” என்று சொன்னவனிடம்…
“ அப்போ எங்கே தவறு நடந்து இருக்குன்னு எப்படி கண்டு பிடிக்கிறது…?” என்று கேள்வி எழுப்பினான் உதயேந்திரன்.
“ நம்ம ஆபி..சுக்கு.” என்று ஸ்டீபன் பேசிக் கொண்டு இருக்கும் போதே…. உதயேந்திரனின் முகம் மாற்றத்தை பார்த்து விட்டு…
“ என்ன சார் ஏதாவது பிரச்சனையா…?”
“ இல்ல அது எல்லாம் ஒன்னும் இல்ல. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் இந்தியா போய் ஆகனும். உன் கைக்கு கிடச்ச புட்டேஜ் எல்லாத்தையும் வீட்டுக்கே எடுத்துட்டு வர சொல்.”
உதயேந்திரன் செய்த அவசரத்தில் ஸ்டீபன் தன் ஆபிசில் வேலை பார்க்கும் நம்பிக்கையானவனிடம்… அந்த புட்டேஜை எடுத்து வர வழைத்தான்.
அதை ஊன்றி கவனித்த உதயனின் கண்ணுக்கு வாகனத்தில் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிய…தனக்கு சந்தேகம் ஏற்படுத்திய இடத்தை மட்டும் மீண்டும் மீண்டும் பார்த்ததும் தெரிந்து விட்டது தவறு எங்கு என்று.
ஸ்டீபனிடம் ஒரு வார்த்தையில் … “ டிரைவர்.” என்று சொன்னதும்.
“ எதை வைத்து சொல்றீங்க சார்… அவன் ரொம்ப வருசமா நம்ம கிட்ட இருக்கான்?” என்று ஸ்டீபன் சொல்ல.
புட்டேஜில் தெரிந்த வாகனத்தின் நம்பர் ப்ளேட்டை காண்பித்து… “ இதை வைத்து தான்.”
அதை ஊன்றி பார்த்த ஸ்டீபன்… “ இது நாம அனுப்பிய வாகனத்தின் எண் தானே சார்.” என்று சொன்ன ஸ்டீபன் உதயேந்திரன் சொன்னால் தவறாக போகாது என்ற நம்பிக்கையில் மீண்டும் தங்கள் குடவுனில் இருந்து கிளம்பிய வாகனத்தின் எண்ணை சரி பார்த்த ஸ்டீபன் திரும்பவும் தங்கள் உதிரி பாகங்களை இறக்கும் வாகனத்தின் எண்ணை சரி பார்த்தவன்..
உதயேந்திரனிடம்… “ இரண்டும் ஒரே எண் தானே சார்.”
“ஆமா நான் இல்லேன்னு சொல்லலையே...அந்த எண்ணை கொஞ்சம் நல்லா பார் ஸ்டீபன் உனக்கே விசயம் புரிஞ்சுடும்.” என்று உதயேந்திரன் சொன்னதில், ஸ்டீபன் ஊன்றி பார்த்தான்.
பின் அவன் கண்கள் பளிச்சிட… “ சார் நம்ம குடவுனில் இருந்து கிளம்பிய வாகனத்தின் எண் தான். ஆனால் அவர்கள் சரக்கை இறக்கிய வாகனத்தின் அதே எண் புதியதாக, அதாவது அப்போது தான் எழுதி மாட்டியது போல் இருந்தது.
இவர்கள் குடவுனில் இருந்து ஏற்றிய வாகனத்தின் எண் பழையதாக இருந்தது.
வாகனத்தை இவர்களுடையது போலவே அமைத்தவர்கள் அந்த எண்ணை மட்டும் பார்க்காது அப்படியே மாட்டி விட்டு உதயேந்திரனிடம் மாட்டிக் கொண்டனர்.
இங்கு தொழிலின் பிரச்சனையின் அடி நுனியை ஆராய்ந்து அதை உதயேந்திரன் தீர்த்து தன் தொழிலை காப்பாற்றும் வேளயில், தன் ஆழ் மனதில் புதைந்து இருந்த ஆசை, காதல், மோகம், பிடித்தம் என்று அதற்க்கு என்ன பெயர் வைத்தாலும், மொத்தம் பிடித்தம் என்ற வகையில் உதயேந்திரனின் மனதில் பதிந்து இருந்த வேணிக்கு, பிரச்சனை கொடுக்க இந்தியாவில் திட்டம் தீட்டி அதை செயல் படுத்தியும் முடித்து விட்டார் பரமேஸ்வரர்.
ஸ்டீபனிடம்… “ என்ன ஸ்டீபன் இந்தியாவுக்கு ப்ளைட் டிக்கெட் புக் செய்துட்டிங்கலா…?” உதயேந்ந்திரன் தொழில் பிரச்சனை எல்லாம் முடிந்த அன்றே ஸ்டீபனிடம் கேட்டான்.
“ ம் செய்துட்டேன் சார். நையிட் ப்ளைட்டுக்கு சார்.” என்று சொன்னதும் தன் கை கடிகாரத்தின் நேரத்தை பார்த்து இன்னும் மூன்று மணி நேரம் இருக்கிறது.
தன் வேலை அனைத்தையும் முடித்து விட்டு மடிகணினியை மூடி வைத்து சோம்பல் முறித்த உதயேந்திரனிடம்…
“ என்ன சார் முதல் எல்லாம் இந்தியா என்றால் போயிட்டு உடனே இங்கு வந்துடுவிங்க. இப்போ இங்கு வந்துட்டு உடனே இந்தியா போயிடுறிங்க…? உங்க பியான்ஸிய இந்தியாவில் பார்த்துட்டிங்கலா சார்.” தயங்கி தயங்கி என்றாலும், தன் மனதில் உதயேந்திரன் ஜெர்மனி வந்த தினத்தில் இருந்து கேட்க வேண்டும் என்று நினைத்திருந்ததை கேட்டு விட்டான் ஸ்டீபன்.
ஸ்டீபன் இப்படி கேட்டதும் உதயேந்திரன் ஏதோ நினைவின் சுழற்ச்சியில் ஆழ்ந்து விட்டது போல் இருந்தவனை அவன் கைய் பேசி அழைப்பில் அந்த சுழற்ச்சியில் இருந்து விடுப்பட்டவன் போல்...தன் தலை குலுக்கிக் கொண்டு தன் கைய் பேசியில் …
‘யார்…?’ அழைத்தது என்று பார்த்தவனின் முகத்தில் இன்னும் குழப்பம் தான் மிகுந்தது.
தன் கை கெடிகாரத்தில் நேரம் பார்த்தவன், நேரம் ஒன்பது என்று இருக்க. இந்நேரம் இந்தியாவில் நடுயிரவு பன்னிரண்டு மணி கடந்து அரைமணி நேரமும் சென்று விட்ட நிலையில் இவன் ஏன் இப்போது தன்னை அழைக்கிறான் என்று அதே குழப்பத்துடனே க்ரீஷ் அழைப்பை உதயேந்திரன் ஏற்றான்.
“மா...மா…” க்ரீஷ்ன் குரல் ஒரு வித பயத்துடனும், பதட்டத்துடனும், ஒலிப்பதை கேட்டதும், சற்று முன் ஸ்டீபன் கேட்ட கேள்வியில் தன் மனமே தன் மனநிலையை ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுக் கொண்டு இருந்தது.
இப்போது அதே மனம்… க்ரீஷ் நினைத்து யோசிக்க ஆராம்பித்து விட்டது. திரும்பவும் அவன் மனம் ஏதாவது பாதிக்கும் படி பேச்சு கேட்க வேண்டி விட்டதோ.
தான் அவ்வளவு பேசியும் இவனின் மனம் இன்னும் தெளிவு பெற வில்லையா…? வயது பதினைந்து கடந்து விட்டது. இன்னும் மற்றவர்களின் வார்த்தை தன்னை பாதிக்கும் படி விடலாமா…? இது அவன் எதிர் காலத்துக்கு நல்லதா…? என்று நினைத்தவனின் மனமோ ..
மருத்துவ மனையில் இருந்து வந்த அன்று தன் அக்கா மகனிடம்… “ எதுக்கு இப்படி செஞ்ச….?” மருத்துவமனையில் இருக்கும் வரை, ஏன்…? எதற்க்கு…? என்று எதுவும் கேட்காதவன்… வீட்டுக்கு வந்ததும் தனிமை கிடைத்ததும் கேட்டு விட்டான்.
எதுவும் பேசாது தன் விரல் நக்கண்ணை மட்டுமே பார்த்து இருந்த க்ரீஷின் தலை கோதிய உதயேந்திரன்… “ என்னடா ஆச்சி…” என்ற மாமனின் கேள்விக்கு பதில் அளிக்காது தலை நிமிர்ந்து பார்த்தவனின் கண்ணில் தாரை, தாரையாய் கண்ணீர் ஊற்ற…
“அம்மா கெட்டவங்கலா மாமா…?” இந்த கேள்வியை உதயேந்திரன் எதிர் பார்க்கவில்லை.
கீர்த்தி அவன் தற்கொலைக்கு முயன்ற அன்று அவன் அறையில் அவனின் தோழர்கள் பேசிக் கொண்டு இருந்தார்கள் என்று சொன்னதுமே…
தந்தையை பற்றி பேசி இருப்பார்கள். என்ன தான் நாம் மூடி மறைக்க முயன்றாலும் முடியாது. அது வெளி வந்தே ஆகும். அவனின் தந்தையை பற்றி மனது நோக பேசி இருப்பார்கள். அதனால் தான் இந்த முடிவுக்கு அவன் வந்து இருக்கிறான் என்று தான் உதயேந்திரன் நினைத்தது.
ஆனால் இவன் என்ன இப்படி கேட்கிறான் என்று நினைத்தாலும்… “ யார் சொன்னது அம்மா கெட்டவங்க என்று. ஏன் உனக்கு தெரியாத அம்மா எப்படி பட்டவங்க என்று…?” நல்லவங்க . கெட்டவங்க என்று சொல்லாது கேள்விக்கான பதிலை க்ரீஷிடமே கேட்டான் உதயேந்திரன்.
எதுவும் சொல்லாது சிறிது நேரம் யோசித்த க்ரீஷ்…” எப்படி பார்த்தாலும் கல்யாணம் ஆனவரை கல்யாணம் செய்துக்குறது நல்லவங்க செய்யிற காரியம் இல்லேன்னு தெரியுது மாமா.” தன் கேள்விக்கு இப்படி ஒரு நெத்தியடியான பதிலையும் எதிர் பார்க்க வில்லை உதயேந்திரன்.
இதற்க்கு என்ன பதில் இருக்கிறது உதயேந்திரனிடம். இருந்தும் அவன் தலை முடியை கோதுவதை விடாது…
“ இது பெரியவங்க பிரச்சனை செல்லம். வீணா இதை பத்தி எல்லாம் நீ யோசிக்க வேண்டாம். இப்போ உன் கவனம் எல்லாம் படிப்பில் தான் இருக்கனும். இதை எல்லாம் நான் பார்த்துக்குறேன்.” என்றூ அவன் வாக்கு கொடுத்தும், க்ரீஷ் முகம் தெளியாது…
“ ஆனா என் பிரன்ஸ் எல்லாம் உங்க அம்ம சின்ன வீ…” சின்ன வீடு என்ற வார்த்தை கூட சொல்ல கூசி போய் நிறுத்தியவனின் மனநிலையை உதயேந்திரனால் நன்கு புரிந்துக் கொள்ள முடிந்தது.
இது தான் இந்தியாவின் பிரச்சனை. அவங்க அவங்க வீட்டில் ஆயிரத்தெட்டு பிரச்சனை இருக்கும். ஆனா அடுத்த வீட்டில் என்ன நடக்குதுன்னு இவங்களுக்கு தெரிஞ்சி ஆகனும். தெரிஞ்சதோடு மட்டும் அல்லாது அந்த பிரச்சனைக்கு அலங்காரம் செய்து, மத்தவங்க கிட்ட கடை பறப்பனும். யப்பா…
அதை இந்த சின்ன பையனிடம் சொல்லி விளக்கா முடியுமா…? ஏதோ அப்போது அவனின் மனதை தேற்றி விட்டு ஜெர்மனி வந்து விட்டான்.
இப்போது அவனின் குரலின் மாற்றத்தில்… “ க்ரீஷ் திரும்பவும் பிரன்ஸ் ஏதாவது சொன்னாங்கலா…? நான் அன்னிக்கே சொன்னேன்ல. அவங்க எல்லாம் உன் மேல் இருக்கும் பொறாமையில் தான் இப்படி பேசுறாங்க. இதை எல்லாம்ன் காதில் வாங்கதேன்னு.” என்று உதய் சொல்லி முடிக்கவும்.
“ காதில் வாங்காம தான் இருந்து இருப்பேன் மாமா. அது பிரன்ஸ் பேச்சா இருந்து இருந்தால்…” என்று பேசிக் கொண்டு இருந்த க்ரீஷ் பேச்சை நிறுத்தவும்.
“ வேறு யார் உன் கிட்ட பேசுனாங்க…?” வெளியில் சென்றா இட்த்தில் இது போல் பேச்சு கேட்டு இருப்பானோ என்ற சந்தேகத்தில் உதயேந்திரன் கேட்டான்.
“ தா..த்தா…” தாத்தா என்ற வார்த்தை சொல்லும் போதே க்ரீஷ் அந்த வார்த்தையை கடித்து துப்பியது போல் இருந்தது.
“தாத்தாவா… தாத்தா என்ன சொன்னார் உன்னை.” உதயேந்திரனின் குரலில் குழப்பம் மிகுந்து காணப்பட்டது. பேரன் என்றால் அவருக்கு பிடிக்குமே..இவனை என்ன சொல்லி இருப்பார் என்ற குழப்பமே அவனின் குரலில் மிகுந்து காணப்பட்டது.
“ தாத்தா என்னை ஒன்னும் சொல்லலே. இன்னும் சொல்ல போனால் என் கிட்ட சொல்லலே. போனில் தான் யார் கிட்டயோ இந்த ஊரு உலகத்துக்கு, மனைவின்னா அது என் பொண்ணு மட்டும் தான் தெரியனும்.
அதே போல் என் மாப்பிள்ளைக்கு பிள்ளைங்கன்னா அது என் பேரன் பேத்தியா மட்டும் தான் இருக்கனும். அந்த பொண்ண ஒரு ராத்திரி முழுக்கவும் வெச்சி இருந்து அனுப்புங்க. அப்போ தெரியும்...அந்த கம்பத்து ஜனத்துக்குன்னு. அந்த பொண்ணுன்னா அது அவங்க தானே மாமா.”
உதயேந்திரன் அவனுக்கு பதில் அளிக்கும் நேரத்தை கூட எடுத்துக் கொள்ளாது தன் பேசியை அப்படியே போட்டுக் கொண்டவன்..
“ ஸ்டீபன்...இதுக்கு முன் ப்ளைட் இருந்தா டிக்கட் புக் செய். இல்ல கிடைக்காது என்ற வார்த்தையை நான் கேட்க கூடாது. க்யூக் க்யூக்.” என்று அவனை அவசரப்படுத்தியன் அவன் நினைத்தது போலவே.. முன் செல்லும் விமானத்திலேயே உதயேந்திரன் இந்தியா சென்று விட்டான்.
இந்தியாவில் நட்பு என்று உதயேந்திரனுக்கு யாரும் இல்லை. படித்தது, தொழில் செய்தது, அனைத்தும் ஜெர்மனி என்று ஆனதில், இந்தியா என்பது அவனுக்கு வெறும் வந்து போகும் இடம் மட்டுமாய் மட்டும் தான் என்று ஆனதால்,
இப்போது உதவி என்று யாரிடமும் கேட்க முடியாது தன் அண்ணன் கஜெந்திரனை அழைக்க...அவனோ அப்போது பேசும் நிலையில் கூட இல்லாத போதையின் உதவியோடு மயக்க நிலையில் இருந்தான்.
பின் ராஜசேகருக்கு அழைப்பு விடுக்க...அழைப்பை எடுத்ததோ காயத்ரி...அவளின் குரலிலும் பதட்டமே…
இவன் பேசுவதற்க்கு முன்பே …” உதி உதி வேணி பவித்ரன் இரண்டு பேரும் இன்னும் வீட்டுக்கு வரலையாம் உதி. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.” என்று அழுகையோடு பேசியவள்.
பின் தயங்கி கொண்டே… “ அப்பா வந்து… அப்பா வந்து அவங்கல உங்க அப்பா தான் ஏதோ பண்ணி இருப்பாங்கன்னு அம்மா கிட்ட சொன்னாங்க. அப்படியா உதி…?” அவள் சந்தேகத்தை கேட்டவள் பதிலையும் உதயிடமே கேட்டு விட்டாள்.
“ நான் இப்போ தான் இந்தியா வர செக்கிங் செய்துட்டு இருக்கேன்.” என்று உதயேந்திரன் சொன்னதும்..
“ ஓ நீங்க போன வாரம் ஜெர்மனி போனிங்கலே…” நினைவு வந்தவளாய் சொன்ன காயத்ரி, தொடர்ந்து...
“ நீங்க உங்க அப்பா கிட்ட கேளு உதய்.” என்று அவனுக்கு ஆலோசனையும் வழங்க. அதற்க்கு பதில் அளிக்காது பேசியை அணைத்து வைத்தவனின் விமானம் பயணத்தின் போது முழுவதும் வேணியின் நினைவு மட்டுமே…
இப்போதைக்கு அவனுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை பவித்ரனும் வேணியுடன் இருப்பதே… எப்போதும் வேணியின் கூடவே இருக்கும் பவித்ரனை தவிர்க்க முடியாது தான் வேணியோடு பவிதரனையும் தூக்கி இருக்க வேண்டும்.
பவித்ரன் வேணிக்கு ஒரு கெடுதலும் நடக்க விட மாட்டான் என்ற அந்த நம்பிக்கை ஒன்றை வைத்துக் கொண்டே அவனின் விமானம் பயணம் முழுவதும் முடிந்தது.
ஆனால் கடத்தியவர்கள் பவித்ரன், வேணியை இருவரையும் இரு வேறு அறையில் அடைத்து வைத்து வேணியை இரவு மட்டும் வைத்திருந்து மட்டுமே பரமேஸ்வரர் அனுப்ப சொன்னதை வேணியின் அழகு பரமேஸ்வரர் சொன்னதை மட்டும் செய்ய விடாது தடுத்தது.