அத்தியாயம்….24
உதயேந்திரன் சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய போதே காலை எட்டை கடந்து இருந்தது. வந்ததும் அவன் செய்த முதல் வேலை தன் பேசியை ஆன் செய்து காயத்ரியை அழைத்தது தான்… “ என்ன காயூ வேணி வந்துட்டாளா…?” என்று கேட்டது தான்.
ஆனால் காயத்ரியிடம் அவன் எதிர் பார்த்த பதில் கிடைக்காது… “ இன்னும் வர உதீ. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அப்பா வேற ஊருல இருந்த பொண்ண நான் தான் வம்படியா இங்கே வர வழச்சேன். என்னால அந்த குடும்பத்துக்கு பிரச்சனை மேல பிரச்சனை தான் வந்துட்டு இருக்கு. என்று ஒரே புலம்பல் உதி.”
உதயேந்திரனின் நினைவில் காயத்ரி சொன்ன “ இன்னும் வரல.” அதற்க்கு அடுத்து அவள் பேசியது எதுவும் அவன் கவனத்தில் இல்லை.
அப்பா ஒரு இரவு வெச்சி அனுப்பிடுறேன் என்று தானே அன்னிக்கி சொன்னார். இந்நேரம் வந்து இருக்கனுமே….?” என்று நினைத்தவனுக்கே மனதில் பயப்பந்து உருல ஆராம்பித்தது.
“ வரலேன்னு எப்படி சொல்ற…? இந்நேரம் வந்து இருக்கலாம்லே…” மனதில் ஓரம் ஒளிந்து இருந்த சிறு நம்பிக்கையில் கேட்டான்.
“ அப்பா இப்போ தான் அங்கு இருந்து வந்தார். வேணியும், பவித்ரனும் வரல. வந்தா போன் போடுறதா பவித்ரன் அப்பா சொல்லி இருக்கார்.” என்று அவள் மேலும் என்ன சொல்லி இருப்பாரோ…
அடுத்து பேசியில் … “ மிஸ்டர் உதயேந்திரன் வேணியையும் பவித்ரனையும் அனுப்பிடுங்க. நான் நீங்க நினச்ச படி சென்னையை விட்டு அவங்களை அனுப்பிடுறேன்.” என்று கெஞ்சிய குரலில் பேசிய ராஜசேகர்.
பின்… “ வயசு பொண்ணு. பாக்க நல்லா வேற. இது அந்த பொண்ணோட வாழ்க்கை பிரச்சனை மிஸ்டர் உதயேந்திரன்.” ராஜசேகர் கடைசியாக அவர் பேச்சை முடிக்கும் போது அழுது விட்டாரோ… ஏன் என்றால் கை பேசியின் இந்த பக்கம் கேட்டுக் கொண்டு இருந்த உதயேந்திரனுக்கு, ராஜசேகர் குரல் கர கரப்பாக தான் கேட்டது.
உதயேந்திரன் இதற்க்கு என்ன பதில் சொல்வான். அனைத்தும் தன் கை மீறி நடந்து விட்டது என்றா…இல்லை வேணி இப்பொழுது எங்கு இருக்கிறாள் என்று கூட எனக்கு தெரியாது என்றா…
அப்படி சொன்னால் நான் ஏதாவது செய்வேன் என்று ஏதோ ஒரு நம்பிக்கையில் என்னிடம் பேசிக் கொண்டு இருப்பவர்களின் மனம் மொத்தமாய் ஆட்டம் காணாதா…? என்று நினைத்து “ பார்க்கிறேன்.” வேறு ஏதாவது கேட்கும் முன் பேசியை அணைத்து விட்டான்.
பேசியை அணைத்து விட்டவனுக்கோ….இதில் அடுத்து தான் என்ன செய்ய வேண்டும். வாழ்க்கையில் முதல் முறை அடுத்து என்ன செய்வது….? என்று குழம்பி போய் சென்னை விமான நிலையத்திலேயே சிறிது நேரம் அப்படியே நின்று விட்டான்.
இதே விமான நிலையத்தில் இருந்து தான் நான் சில தினம் முன் ஜெர்மனி செல்ல விமானம் ஏறினேன். அப்போது தொழில் நஷ்டம் எத்தனை ஆயிரம் கோடி என்று அவனுக்கு தெரிந்தே, எந்த வித பதட்டமும் இல்லாது தான் இருந்தேன்.
எனக்கு தெரியும் அதை நான் சரி செய்து விடுவேன் என்று. ஏன் என்றால் தொழிலில் அடுத்து என்ன..?ஏது செய்ய வேண்டும்…? அக்கு வேறு ஆணி வேறாய் தெரிந்து வைத்திருந்தேன்.
தொழிலை தெரிந்த அளவுக்கு தனக்கு மனிதர்களை பற்றி தெரியவில்லையோ…? அதுவும் சொந்த தந்தையை பற்றியே தான் தெரிந்து கொள்ளாது போய் விட்டமோ…? கொஞ்சம் காலமாகவே அவன் மனதில் இது போல் கேள்வி எழுவது உண்டு.
அதுவும் வேணியின் அம்மாவை தன் தந்தை பேசிய பேச்சு அறிந்ததில் இருந்து அவனின் அந்த எண்ணம் வலுப்பெற்றது எனலாம்.
அப்போது கூட தன் தந்தை இந்த அளவுக்கு கீழ் இறங்கி போவார் என்று அவன் எண்ணவில்லை. காலம் கடந்து இப்போது தோன்றுகிறது எண்ணி இருக்க வேண்டுமோ...என்று.
இந்தியாவை விட்டு கிளம்பும் போது ஏதோ ஒரு சந்தேகத்தில் தான் வேணியை என்ன செய்வது என்றாலும் நான் இந்தியா வந்ததும் பார்த்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டே விமானம் ஏறினேன்.
தன் தந்தை பாவம் புன்னியத்துக்கு பயப்பட வில்லை என்றாலும், தனக்கு பயப்படுவார் என்று உதயேந்திரன் தன் தந்தையை பற்றி தவறாக கணித்து விட்டான்.
ஆனால் அவரோ நீங்கள் நினைத்து பார்ப்பது என்ன…?நினைத்து கூட பார்க்க முடியாததை செய்பவன் நான் என்று இதோ அவர் செய்த் செயலின் நிருபித்து விட்டார்.
இப்போது நான் என்ன செய்ய போகிறேன்…? குழம்பி போய் நின்றுக் கொண்டு இருந்தவனின் கை ஸ்பரிசத்தில் தன் நிலைக்கு வந்த உதய் யார்…?என்று நிமிர்ந்து பார்த்தான்.
அங்கு க்ரீஷ், கீர்த்தி நின்றுக் கொண்டு இருந்தனர். உதயேந்திரனுக்கோ அவர்களை பார்த்ததும் மகிழ்ச்சி கொள்ளாது, இன்னும் வேறு ஏதாவது சொல்லி குண்டை தூக்கி போட போகிறார்களோ….குறிப்பாய் தன் அக்கா மகனை தான் பார்த்தான்.
ஆனால் அதற்க்கு எதிர் பதமாய் க்ரீஷ்… “ மாமா அவங்களை நம்ம ஈசியார் கெஸ்ட் அவுசுல தான் வெச்சி இருக்காங்க.” என்று சொன்னதும் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் எந்த விதத்தில் அவளை தேடுவது… இனி என்ன செய்வது…? போலீஸ் போவதா..இல்லை வேணியை பற்றி விசாரிக்க அனுகிய டிடெக்டீவ்வையே அனுகுவதா…? என்று யோசித்தவனுக்கோ ஒரு வெளிச்சம் கிடைத்தது போல்… மகிழ்ந்தாலும் கூடவே… ராஜசேகர் சொன்ன வயது பெண். அழகா என்ற வார்த்தை அவனை நெருட தான் செய்தது.
விமான நிலையத்தின் வெளியில் நின்றுக் கொண்டு இருந்த வாடகை காரை ஏறி அமர்ந்தவன் கூடவே தன் அக்கா மகள், மகன் இருவரையும் கூட்டிக் கொண்டே சென்றான்.
உதயேந்திரன் க்ரீஷிடம் … “ ட்ரைவரிடம் அட்ரஸ் சொல் க்ரீஷ்.” என்று சொன்னவன் மனதிலோ தங்களுக்கு எங்கு எங்கு சொத்து இருக்கிறது என்ற விவரம் கூட எனக்கு தெரியவில்லையே என்று அவன் மனதில் தன்னால் ஒரு குற்றவுணர்ச்சியும் எழ தான் செய்தது.
“ உனக்கு எப்படி தெரியும் கிருஷ்ணா இங்கு தான் இருக்கான்னு…?” என்று உதய் க்ரீஷிடன் கேட்டதற்க்கு…
“ நேத்து க்ருஷ் என் கிட்ட அவங்க பொண்ணை நம்ம தாத்தா கிட் நாப் செய்துட்டாருன்னு சொன்னதும் நான் தாத்தா அம்மாவை தான் நோட் செய்தேன் மாமா.” க்ரீஷிடம் கேட்டதற்க்கு பதி கீர்த்தி சொன்னாள்.
அவள் அம்மா என்று சொன்னதும் …” அக்காவுமா…?” இதை கேட்டதும் அவனுக்கு அவ்வளவு வேதனையாக இருந்தது.
சந்திரசேகரின் இறப்பு அவரை பற்றி மட்டும் அல்லாது தன் குடும்பத்தினரின் குணத்தையும் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.
உதயேந்திரன் மனம் இப்படி நினைக்கும் வேளயில் கூடவே சந்திரசேகருக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறது என்று தனக்கு தெரிந்ததும் முதலில் தனக்கு அது அதிர்ச்சி அளித்தாலும், பின் அதை எப்படி சரி செய்வது.
அதாவது அப்பெண்ணை சென்னை வர விடாது எப்படி தடுப்பது என்று நினைத்தவன். அடுத்து அப்பெண் சென்னை வந்ததும், அப்பெண்ணை கம்பத்துக்கு எப்படி விரட்டுவது என்று யோசித்தானே தவிர.
அப்பெண்ணுக்கும், அவள் அன்னைக்கும் நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என்று யோசிக்கவில்லையே இப்போது கூட எனக்கு அவள் பக்கம் நியாயத்தை பற்றி யோசித்தது கூட என்னுடைய ஒரு சுயநலம் தானே…
அப்படி இருக்கும் போது எனக்கு அப்பாவையோ..? அக்காவையோ…? ஏன் இப்படி செய்திங்க…? என்று கேள்வி கேட்க முடியுமா…? என்று தனக்குள் நியாயம் அநியாயத்தை பற்றி யோசித்தவனுக்கு தெரியவில்லை வேணியின் நிலை பார்த்து நியாயம், அநியாயம் என்ற நிலை ஆராயும் நிலையில் கூட இல்லாது தன் அப்பாவையே எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறும்வோம் என்று.
ராஜசேகர் பயந்தது போல் தான் அங்கு வேணியின் நிலை இருந்தது. பரமேஸ்வரர் வேணியை கடத்த வேண்டும் என்று உதய் எப்போது ஜெர்மனிக்கு சென்றானோ அன்றே தங்களுக்கு எப்போதும் வேலை பார்க்கும் அடியாட்களிடம் சொல்லி விட்டான்.
வேணியின் நிழலாய் எப்போது பவித்ரன் இருக்கவும், வேணி தனியாக மாட்ட நேரம் பார்த்து காத்துக் கொண்டு இருந்தனர் அந்த அடியாட்கள்.
அடியாட்கள் காத்திருப்பது போல் நாட்கள் காத்திருக்குமா என்ன…? நாளை உதய் இந்தியா வரும் நாளும் வந்து விட…
பரமேஸ்வரர் தான் ஏற்பாடு செய்திருந்த அடியாட்களை அழைத்து … “ இன்னுமா நான் சொன்ன வேலைய முடிக்கல…?” என்று கத்தவும், அந்த அடியாட்கள்..
“ அந்த பொண்ணு கூட எப்போவும் கொடுக்கு போல ஒரு பையன் சுத்திட்டு இருக்கான் சார்.” என்று அவனுங்க சொன்னதுமே பரமேஸ்வரருக்கு தெரிந்து விட்டது. அந்த கொடுக்கு யார்…? என்று.
“ அவனையும் சேர்த்து தூக்குங்க டா...என்னவோ நான் இருக்கும் போது அவளுக்கு எதுவும் ஆகாது என்பது போலவே பாடிகாட் மாதிரி இருக்கான்லே….இவன் என்ன இவன் தாத்தா இருந்தா கூட அந்த பெண்ணை நம்மால் தூக்க முடியும் என்று அவங்களுக்கு நான் காட்டனும். அவனையும் சேர்த்து தூக்குங்க.” பரமேஸ்வரரின் ஆணை படி தான் பவித்ரன் வேணியை அந்த அடியாட்கள் தூக்கியது.
கண்டு பிடிக்கும் வரை… யோசித்தவனுக்கோ
முக்கியமாய் மனம்…

- அது வரை எல்லாம் சரி தான். ஆனால் பரமேஸ்வரர் ஏற்பாடு செய்திருந்த அடியாட்களில் ஒருவன் ஏற்கனவே கற்பழிப்பு கேசில் மாட்டி வெளியில் வந்தவன் என்றோ...அது தொடர்கதையாய் இன்று வரை தொடர்கிறது என்று அறிந்திருந்தாரா…? இல்லை இந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை.
- நமக்கு காரியம் ஆக வேண்டும் என்று தான் சொன்ன வேலைக்கு எந்த அடியாட்களை அனுப்ப போகிறார்கள் என்ற விவரம் கூட கேட்காது.
- “ காரியம் முடி.” என்று சொல்லி விட்டாரோ… இப்போது நாம் அந்த வியசத்தை விட்டு விட்டு நம் வேணியை கவனிப்போம்.
- பரமேஸ்வரர் சொன்னது போல் வேணியோடு பவித்ரனையும் தூக்கிய அந்த அடியாட்கள் அவர் சொன்னது போல் அவர் கெஸ்ட் அவுசிலேயே அடைத்து வைத்தனர்.
- வேணியை கடத்த வேண்டி அவளை பின் தொடர்ந்த அடியாட்களின் ஒருவன் அதாவது கற்பழிப்பு கேசில் மாட்டியவன் அவள் அழகில் ‘ பொண்ணு என்னம்மா சோக்கா இருக்கு.’ அப்போதே அவன் மனம் கொஞ்சம் ஜெர்க் ஆனது.
- அவன் இந்த மன சஞ்சலத்தோடு தான் வேணியையும், பவித்ரனையும் மயக்க மருந்து கொடுத்து கடத்தியது.அன்று இரவு ஒருவர் மாற்றி ஒருவர் காவலில் இருந்தனர்.
- அந்த கயவன் காவலில் இருக்கும் போது மட்டும் அவனை தனியே விடாது இன்னொருவனும் இருக்க…
- “ என்னப்பா நீ போய் தூங்கு. அது தான் நான் இருக்கேன்ல. அப்பால நீயும் ஏன் ராக்கோழி கணக்கா முழிச்சிட்டு இருக்க…” என்று அந்த கயவன் சொன்னதும்…
- “ பரவாயில்ல எனக்கு தூக்கம் வரல.” என்று இன்னொருவனும் அவன் கூட காவல் இருந்து அவனின் ப்ளானை சொதப்பி விட்டான்.
- ‘சே இது போல் பொண்ணு கூட எல்லாம் நாம கனவுல மட்டும் தான் குஜாலா இருந்து இருக்கோம். இன்னிக்கி நிஜத்துல இருக்கலாமுன்னு பார்த்தா...இப்படி ஆயிடுச்சே.”
- சரி நமக்கு கொடுப்பினை அவ்வளவு தான் என்பது போல் தான் இருந்தான்.
- ஆனால் விடியல் காலை எழுமணியளவில் பவித்ரன் முதலில் மயக்கம் தெளிந்த்தும் சும்மா இல்லாது கத்து கத்து என்று கத்தியதில்,
- திரும்பவும் அவனுக்கு மயக்க மருந்து சிறிது நேரம் மட்டும் மயக்க நிலையில் இருக்கும் படி வைத்து விட்டு வேணியிடம் வந்து எழுப்பினர்.
- அவளோ நான் அசைவேனா என்று நேற்று மயக்க மருந்து கொடுக்கும் போது எந்த நிலையில் இருந்தாளோ, அப்படியே எந்த அசைவும் இல்லாது இருந்தாள்.
- அதனால் அடியாட்களில் ஒருவன் அங்கு இருந்த தண்ணீரை தன் உள்ளங்கையில் ஊற்றி அவள் முகத்தில் தெளித்தான்.
- இது போல் ஒரு தடவை இல்லாது நான்கு தடவை இவ்வாறே செய்ய வேணியின் மயக்கம் கொஞ்சம் கொஞ்சம் தெளியலாயிற்று.
- ஆனால் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த அந்த கயவனின் கண்களில் வேணியின் முகத்தில் விழுந்த நீர், அவளின் உடல் மீதும் அதாவது மேனியின் மேல் பகுதியிலும் ஈரம் பட்டு அவளின் இளமையின் வனப்பு இலை மறை காய் போல் மற்றவர்களின் கண்ணுக்கு விருந்தாகியதில் வேணியின் மயக்கம் அந்த கயவனின் பக்கம் சாய்ந்தது.
- அதாவது இவர்களையும் தன்னோடு கூட்டு சேர்த்து இவளை இன்று அடைந்து விட வேண்டும் என்று. அவன் உடன் படிக்கைக்கு ஒருவன் மட்டும் சம்மதிக்க மற்ற இருவர்…
- “ வேண்டாம்டா இது பெரிய வூட்டு விவகாரம். காச விட்டெறிஞ்சா இதுக்கு என்று தான் இருக்கேடா இடம். நாம அங்கு போயிக்கலாம்.” என்று சொல்ல…
- வேணியின் மேனியிலேயே கண்ணை வைத்திருந்த அந்த கயவன் நாவில் எச்சு ஊற… “ இது போல் வருமா…?” என்று சொல்லிக் கொண்டே வேணியின் முந்தி மீது கை வைத்தான்.
- அவனின் கையை மற்ற இருவர் தடுக்க….இதுவே அரை மணி நேரம் கடந்து விட்ட நிலையில் வேணியின் மயக்கம் கொஞ்சம் கொஞ்ச தெளிந்த நிலையில் இருந்ததால் இவர்களின் பேச்சு தெள்ள தெளிவாக அவள் காதில் விழ தான் செய்தது.
- ஆனாலும் அவள் மூளை தெளிவடைந்தது போல் அவள் உடல் நிலையும், கண்ணில் பார்க்கும் பிம்பமும் தெளிவடையாது அவளுக்கு ஒரு மயக்க பிம்பமே கொடுத்தது.
- இப்போது நாம் எழுந்தால் இவர்களின் வாக்கு வாதம் தடை செய்தது போல் ஆகி இவர்களின் ஒட்டு மொத்த கவனமும் தன் மீது திரும்பும்.
- இது தனக்கும் தன் பெண்மைக்கும் நல்லது இல்லை என்று அசையாது படுத்துக் கொண்டு இருந்தாலும், அவர்களின் முன் தான் இருக்கும் நிலையில் அவள் மேனி கூசி தான் போயின.
- இது போல் எவ்வளவு நேரம் இருப்பது. அந்த மயக்க நிலை போல் இருந்த நிலையிலும், நேற்று இரவு தானும் பவித்ரனும் கைதி சினிமாவுக்கு சென்றது. பின் மாலில் இருந்து வெளி வந்த போது ஏதோ ஒரு வாசம் தன் நாசி உணர்ந்தது. அவ்வளவு தான் அவளுக்கு நினைவு.பின் இதோ இப்போது தானே ஒரு கைதியாய் அடுத்தவன் பிடியில் இருக்கும் நிலையில் தான் அவள் மயக்கம் தெளிந்தது.
- பவித்ரன் எங்கே…? அவனுக்கு ஒன்றும் ஆகி இருக்காதே…? என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தாலும், தப்பி தவறி கூட தன்னை யார் கடத்த சொல்லி இருப்பார்கள் என்ற கேள்வி மட்டும் அவள் மனதில் எழவில்லை. பதில் தெரிந்தளுக்கு எப்படி கேள்வி எழும்பும்.
- எது வரை தாக்கு பிடிக்க முடியும்…? யோசித்தவளுக்கோ ஒரு யோசனை அவர்கள் தன்னை விட்டு எவ்வளவு இடைவெளியில் இருக்கிறார்கள்.
- கதவு திறந்து இருக்கிறதா…? கதவுக்கும் தனக்கு எந்த அளவு இடைவெளி…? பக்கத்தில் எடுத்து வீசும் பொருள் பூச்சாடி இல்லை வேறு ஏதாவது ஆயுதம் இருக்கிறதா….? என்று தெரிந்துக் கொள்ள வேண்டி உடல் அசையாது தன் கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள்.
- பாவம் அவள் கண்ணுக்கு எதுவும் தெளிவு இல்லாது ஏதோ ஒரு மேகம் மூட்டம் போல் தான் காட்சி தெரிந்தது.
- ஆனால் அதற்க்கு எதிர் பதமாய் அவள் மேல் மட்டும் கண்ணை வைத்துக் கொண்டு இருந்த கயவனுக்கு இவள் கண் திறந்து பார்த்தது தெரிந்து விட…
- இன்னும் நேரம் கடத்தினால் கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்காது போய் விடும்… என்று வேணி நினைத்த ஏதாவது தூக்கி எறியும் ஐடியாவை அவன் தனதாக்கி ஒருவன் மீது அங்கு இருந்த ஒரு வெண்கல ஜாடியை ஒருவன் மண்டை மீது குறி பார்த்து வீசி விட்டான்.
- மற்றொருவனோ… “ டேய் டேய்… என்ன செய்யிற…? என்று கத்திக் கொண்டே அவன் அருகில் செல்லும் போது எப்போதும் ஜோடியாய் இருக்கும் அந்த வெண்கல பூச்சாடியின் இன்னொன்றையும் தன் கையில் எடுத்துக் கொண்டு…
- “ கிட்ட வராதே… இத வீசிடுவேன்.” என்று மிரட்டியதும்..
- “ சரி சரி...நான் வரல.” என்று சொன்னதும்…
- “ நீ இங்கு இருந்து போய் கதவ தாப்பால் போட்டுட்டு ஒரு அரை மணி நேரம் கழிச்சிட்டு வா…” என்று சொல்ல.
- “ வேண்டாம்டா இது பெரிய இடத்து சமாச்சாரம். வேண்டாம் வீணா பிரச்சனையில மாட்டிக்காதே…” என்று எச்சரிக்கை செய்தான்.
- ஆனால் பெண் பித்தம் பிடித்தவனுக்கோ அதை கேட்கும் நிலையில் இல்லாது… “ இத எப்படி டீல் செய்யனும் என்று எனக்கு தெரியும். எல்லாம் நான் பாத்துக்குறேன். இப்போ நீ போறியா…?இல்ல இத வீசவா…?” தன் கையில் உள்ள பூச்சாடியை காட்டி சொன்னதும்..
- “ போறேன். போறேன்.” என்று உடன் படிக்கை வந்தவன் எவ்வளவு மெல்ல முடியுமோ அவ்வளவு மெல்ல தன் பாதத்தை கதவை நோக்கி செலுத்தினான்.
- கதவை நோக்கி சென்றவன் மீது ஒரு கண்ணை வைத்துக் கொண்டே முதலில் இருந்து தனக்கு ஆதரவாய் இருந்தவனிடம்… “ நீ என்னடா…?” என்று சொல்லிக் கொண்டே வேணியின் பக்கம் கண்ணை காட்ட…
- “ நான் இங்கயே இருக்கேன் சகல…” அவசர அவசரமாய் அவனை தன் உறவு முறை வைத்து அழைத்தான்.
- “ என்ன நீ இன்னுமா கதவு கிட்ட போகலே….?” என்று அந்த பெண் பித்தன் சொல்லும் வேளயில்…
- ஒதுங்கிய வாறு சாத்தி இருந்த கதவை விரிய திறந்துக் கொண்டு உதயேந்திரன் அங்கு உதயம் ஆகினான்.
கண்டு பிடிக்கும் வரை… யோசித்தவனுக்கோ
முக்கியமாய் மனம்…