Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kambathu Ponnu....24

  • Thread Author
அத்தியாயம்….24

மகனை முறைத்த பரமேஸ்வரர் தன் கையில் உள்ள கைய் பேசியை அனைவருக்கும் காட்டாது… “அது தான் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆயிடுச்சே. அந்த கருமத்தை பார்த்து என்ன பேச. எல்லாம் சாக்கடை.” இது எல்லாமா பார்ப்பது. ஒரு பெரிய மனிதராய் பேசுவது போல் பேசி திசை திருப்ப பார்த்தார்.

எல்லோரும் என்ன இது அவ்வளவு ஆவேசமா அந்த கைய் பேசியை எடுத்தார். இப்போ என்ன என்பது போல் அனைவரும் முழித்து பார்த்தனர் என்றால்…

வாங்கிய பணத்திற்க்கு மேல் கூவுவது போல் சங்கரந்… “நீங்க எல்லோருக்கும் காமிங்க சார். நான் வேண்டாம் வேண்டாம் என்று தான் சொன்னேன். ஆனா அவங்க தான் என்னை இங்கு இருப்பவர்களால் என்ன செய்ய முடியும்…?இது எல்லாம் தப்பு இல்லை என்பது போல் சொல்லிட்டு...இப்போ எல்லோர் எதிரிலும் நான் மட்டும் தவறானவன் போல் காமிப்பது என்ன வகையில் நியாயம் சார்…?” என்று இவனுக்கு என்னவோ பெரிய அநியாயம் நடந்து விட்டது போல் பேசினான்.

பரமேஸ்ர்ரோ பல்லை கடித்துக் கொண்டு சங்கரனுக்கு சமிஞ்சை செய்ய. அது எல்லாம் பார்க்கும் நிலையில் அவன் இல்லை.

உதயேந்திரன்… “அது தான் சார் சொல்றார்லேப்பா...அவனுக்கு நியாயம் செய்யுங்க.” என்று தந்தையிடம் சொல்லிக் கொண்டே அவர் கையில் இருந்த பேசியை வாங்கி…

இங்கு வந்ததும் முதல் ஆளாய் பேச ஆராம்பித்த மூத்த உறுப்பினரிடம் அதை கொடுத்து விட்டு…

“எங்க அப்பா உண்மையிலேயே பெரிய மனுஷர். இது போல் எல்லாம் பார்ப்பது கூட அவர் பாவமாய் நினைப்பவர். அதனால் இதில் என்ன இருக்குன்னு நீங்கலே பார்த்து சொல்லுங்க சார்.” என்று சொல்லிக் கொண்டே அந்த கைய் பேசியை அந்த மூத்த உறுப்பினரிடம் கொடுத்தவன். சங்கரனை முறைக்கவுக் தவறவில்லை.

என்ன தைரியம் இருந்தால் கிருஷ்ணாவை பத்தி அனைவரின் முன்நிலையிலும் இப்படி பேசுவான். இருக்குடா உனக்கு இது எல்லாம் சரியாகட்டும் இருக்கு உனக்கு… எதுக்காக இதை எல்லாம் செய்தியோ அதன் பலம் கிடைக்காது செய்து விடுகிறேன். என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

தன் கையில் உள்ள கைய் பேசியில் வேணி என்று பதிவு செய்து இருந்த எண்ணுக்கு தினம் ஜெசஜ் தினம் பேச்சும் நடந்துக் கொண்டு இருப்பதை பார்த்தவருக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை.

அதில் எந்த வித தப்பான மெசஜூம் இடம் பெற்று இருக்கவில்லை. பின் அவரே இப்படியும் நினைத்துக் கொண்டார். அது தான் பேசுறாங்கலே அப்போ பேசி இருப்பாங்க என்று நினைத்தவர்… அதை அனைவருக்கு சொல்லவும் செய்தார்.

“ஆமா ஆமா நிறைய பேசினோம் தான்.” என்று உதயேந்திரன் சொல்ல பரமேஸ்வரருக்கு திக் என்று ஆனது.

என்ன இது…? இவன் என்ன செய்ய உள்ளான்…? தன் மானம் கெட்டாலும் பரவாயில்லை அவளை காப்பற்ற என்ன வேண்டுமானலும் செய்வானா இவன். அந்த அளவுக்கா மயக்கி வெச்சி இருக்கான்.

பரமேஸ்வரர் இப்போது என்ன செய்வது என்று தெரியாது முழு பிதிங்கி இருக்கும் போது, இவ்வளவு நேரமும் வேணி அசிங்கப்பட்டு போவதை பார்க்கலாம் என்று எதுவும் பேசாது அமைதியாக அமர்ந்து இருந்த ஜெய்சக்தி…

தம்பியும் வேணிக்கு எதிராய் பேசி விட்ட குதுகலத்தில்… “அது தான் தம்பியே சொல்லிட்டானே அப்புறம் என்ன…?”

ஜெய்சக்திக்கு உதய் வேணியை விரும்புவது சுத்தமாக பிடிக்கவில்லை. யார் வீட்டுக்கு யார் மருமகள்...என் வீட்டில் அவள் பெண் வாழ்வாளா…? என்று கொதித்துக் கொண்டு இருந்தவள் வேணியை பற்றி தம்பியே தவறாய் நினைத்து விட்டான். இனி அவள் இங்கு இருக்க மாட்டாள். என்ற மகிழ்ச்சியில் வாய் விட்டாள்.

“ஆமா அக்கா அது தான் அது என்ன நம்பர் பார்த்து பேசி தீர்க்கலாம் என்று சொன்னால், அடுத்து யாரும் ஒரு ஸ்டெப்பும் எடுக்க மாட்டேங்குறாங்க.” என்று உதயேந்திரனின் பேச்சுக்கு…

அந்த மூத்த உறுப்பினர் “என்ன தம்பி அது தான் வேணின்னு பேரு எழுதி இருக்கே…?என்ன சந்தேகம். எல்லாம் இவங்க நம்பர் தான்.” வேணியை கைய் காட்டி சொன்னார்.

ஜெய்சக்தியோ … “உதய் சொன்னது போல் அந்த நம்பரை சரி பார்த்து விடலாம். பின் தவறாய் ஒரு நல்ல பெண்ணைய் தவறு சொன்ன குற்றம் நம்மை வந்து சேர கூடாது பாருங்க.”தம்பி சொன்னதை செய்தால் விட்ட உறவை தொடரலாம் என்ற கணக்கில் ஜெய்சக்தி இப்படி பேசினாள்.

தன் தந்தை மீது ஜெய்சக்திக்கு அவ்வளவு நம்பிக்கை. கூடிய விரைவில் உன் தம்பியே அவளை வேண்டாம் என்று சொல்ல வைக்கிறேன் என்று சொன்ன ஒரு வாரத்தில். இன்று தன் தந்தை தன்னிடம் சொன்ன…

“வா இன்று அந்த கம்பத்து பொண்ணை உன் தம்பியே கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவதை கண் குளிர வந்து பார். அதற்க்குண்டான அனைத்து ஏற்பாட்டையும் செய்து விட்டேன்.” என்று சொன்னதும் மகிழ்ச்சியோடு வந்தாள்.

தந்தை சொன்னதற்க்கு ஏற்ப காரியம் நடப்பதை பார்த்து மனது துள்ள தன் தம்பிக்கு ஆதரவாய் பேசினாள். பாவம் அதிகப்படியான மகிழ்ச்சியில் அவள் தலை கால் புரியாது இருந்து விட்டாள்.

இவ்வளவு நேரமும் ஆகியும் தன் தந்தை ஏன் வாய் திறக்கவில்லை...என்று யோசித்து இருக்கலாம். இல்லை குறைந்த பட்ச்சம் தன் தந்தையின் பக்கம் தன் பார்வையை செலுத்தி ஊன்றி கவனித்து இருந்தால், தெரிந்து இருக்கும்...அவர் முகத்தில் ஏன் இவ்வளவு கலவரம் என்று.

“ஜெய்சக்தி மேடம் சொல்வதும் சரி தான். இது பெண் விசயம் பாருங்க.” என்று சொன்னவர் அதில் இருக்கும் எண்ணை தன் கைய் பேசியில் அழுத்தி அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார்.

தொடர்பு கொண்ட எண் சத்தம் எழுப்ப தான் செய்ததும் அது அங்கு இருப்பவர்களுக்கும் நன்றாவே கேட்டது. ஆனால் மூலையில் இந்த பக்கம் நின்றுக் கொண்டு இருந்த வேணியின் பக்கம் வராது. தாங்கள் அமர்ந்து இருந்த இருக்கையின் பக்கம் இருந்து வருவதை பார்த்து அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொணடனர்.

பின் தான் அந்த மூத்த உறுப்பினர் தன் பேசியின் எண்ணை அழுத்தினாலே அந்த எண் யார் பெயரில் இருக்கிறது என்பது போல் காட்டும் என்று தன் மகள் சொன்னது நினைவு வர…

கண் குரைப்பாட்டால் தன் பேசியில் பதிந்த பெயரை உற்று பார்த்தவர். தான் பார்த்தது சரியா என்பது போல் திரும்பவும் உற்று பார்த்து விட்டு குழம்பி போனவராய் நிமிர்ந்து பார்த்தவர்…

பின் ஏதோ எண்ணியவராய் அங்கு ஒரு ஓரமாய் நின்றுக் கொண்டு இருந்த லிப்ட் ஆபிரேட்டரிடம் வேணியை காண்பித்து …

“இன்னிக்கு காலையில் கூட இவங்க உனக்கு போன் செய்தாங்கன்னு சொன்னிங்கலே…” என்று கேட்டதற்க்கு,

“ஆமாம் சார். ஆமாம். உங்களுக்கு சந்தேகமாய் இருந்தால் நீங்கலே பாருங்க…” என்று சொல்லிக் கொண்டே தன் போனை அந்த மூத்த உறுப்பினரிடம் நீட்டினான்.

அவரும் அவனிடம் கைய் பேசியை வாங்கவே அப்படி கேட்டார்.தான் கேட்காது அவனே தன்னிடம் கைய் பேசியை கொடுத்ததும்…

அந்த கைய் பேசியில் அழைப்பு வந்த எண்னை பார்வை இட்டுக் கொண்டே வந்தவர்…”எத்தனை மணி என்று சொல்ல முடியுமா….?”

லிப்ட் ஆபிரேட்டரின் கைய் பேசியில் வேணியின் பெயரை பதிவு செய்யவில்லை. அதனால் அவர் அவ்வாறு கேட்டார்.

“சரியாக ஒன்பது முப்பது மணிக்கு சார்.” தோரயமாய் சொல்லாது சரியாக சொன்னவனை யோசனயுடன் பார்த்த மூத்த உறுப்பினரிடம்…

“நான் அப்போ தான் சார் மணி பார்த்து ஒன்பது முப்பது ஆயிடுச்சி. டிபன் சாப்பிடலாமுன்னு டிபன் பொட்டலத்தை பிரிச்சேன் சார். அதான் கரைக்ட்டா சொல்லுறேன்.”

“ம்…” என்று சொல்லி விட்டு...ஒன்பது முப்பது மணிக்கு வந்த அழைப்பை எடுத்து… லிப்ட் ஆபிரேட்டரை அருகில் அழைத்து…

“இதுவான்னு சரியா பார்.” என்று கேட்டதும்…

“இது தான் சார்.” குதுகலத்தில் லிப்ட் ஆபிரேட்டரின் குரல் கொஞ்சம் தூக்கலாகவே கேட்டது.

“இதையும் எப்படி அவ்வளவு சரியா சொல்ற…?” என்ற அவரின் கேள்விக்கு ஒன்பது முப்பது மணிக்கு அழைத்த அழைப்பிற்க்கு முன் அழைத்த ஒரு எண்ணை காண்பித்து…

“இது நம்ம சம்சாரத்தோடது சார். அது தான் எனக்கு போன் போட்டு இன்னுமா நீ டிபன் துண்ணலேன்னு ஒரே திட்டு சார்.”

மனைவி என்று சொல்லும் போதே அந்த லிப்ட் ஆபிரேட்டரின் குரலிலும் சரி முகத்திலும் சரி அவ்வளவு வெட்கம். பின் இருக்காதா...ஒரு வாரம் முன் திருமணம் செய்த புத்தம் புது மனைவி போன் செய்து பேசினால் மட்டுமா மகிழ்ச்சி...திட்டினால் கூட தான் மகிழ்ச்சி.

“ஓ…” என்று சொன்னதோடு வேணியிடம் வந்ததாக சொன்ன அழைப்பின் எண்ணை பார்த்தார். இது வேறு எண் போல் இருந்தது. சங்கரன் கைய் பேசியில் வேணி என்று பதிவு செய்த எண் இல்லை இது.

சரி இதையும் தன் பேசியில் அழைத்து பார்க்கலாம் என்று அழைத்தவர். அது அணைத்து விட்டு இருப்பதாய் காட்டியது.( ஆம் உதய் தன் கிருஷ்ணவிடம் குறுந்தகவலாய் பேசியை அணைத்து விட சொன்னான்.)

சரி பேசி அணைத்து விட்டு இருந்தாலும், அந்த எண் யாரின் பெயர் வாங்கி இருக்கிறது என்று ஒரு முறை தான் பார்த்தார். இந்த எண்ணும் முன் தான் பார்த்த பெயரையே காட்ட…

“என்ன சார் என்ன விளையாடுறிங்கலா…?” என்று தன் எதிரில் அமர்ந்து இருந்த பரமேஸ்வரரை பார்த்து கேட்டார் அந்த மூத்த உறுப்பினர்.

பரமேஸ்வரருக்கு ஒர் அளவுக்கு விசயம் புரிந்து விட்டது. இப்போது என்ன செய்வது என்ன சொல்லி சமாளிப்பது என்று அவர் யோசிக்கும் வேளயில்…

“எங்களுக்கும் இந்த பெண் இந்த பதவில் இருப்பது பிடிக்கல. என்ன தான் சந்திரசேகர் மகளாய் இருந்தாலும், எப்படி பட்ட இடத்தில் வந்து நம்மையே அதிகாரம் செய்வதா…? என்று நாங்களும் கொதித்து போய் தான் இருந்தோம்.

இந்த சமயத்தில் தான் நீங்க போன் போட்டு அந்த பெண் நடத்தை சரியில்லை. அத நான் ஆதார பூர்வமாய் விசாரிக்கிறேன். நீங்க செய்ய வேண்டியது எல்லாம் அங்கு வந்து இது போல பேசுங்க போதும். நான் உங்க கிட்ட ஆதாரம் காட்டுறேன்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டு…” என்று சொன்னவர் தன் கைய் பேசியில் பதிவு ஆகி இருந்த எண்ணின் உரிமையாளரின் பெயரை அவரிடம் நீட்டி…

“பாருங்க நல்லா பாருங்க.” என்று கத்த அவர் தான் அந்த எண்ணை பார்த்தே இது யாரின் எண் என்று தெரிந்து விட்டதே… இருந்தும் இப்போது தான் பார்ப்பது போல் பார்த்ததும் அதில் இடம் பெற்ற பெயரை பார்த்ததும்,லேசாக நெஞ்சு வலிப்பது போல் ஆக…

அப்போது தான் உதயேந்திரன் இந்தியா வந்த போது தன் பெயரில் வாங்கிய சிம்மை தான் அவனிடம் கொடுத்தது நினைவுக்கு வந்தது. அந்த எண்ணை மகன் எண் என்று எண்ணினாரே தவிர அது தன் பெயரில் வாங்கியது மறந்து விட்டார்.

“என்ன சார் இது…? உங்க வயசுக்கு இது எல்லாம் தேவையா…?என்பது போல் பரமேஸ்வரரை அந்த மூத்த உறுப்பினர் திட்ட…

மற்ற அனைவரும்… “நாங்களும் இங்க தான் இருக்கோம். அது என்ன என்று எங்களுக்கும் காட்டலாம்.” என்று சொன்னதும் அடுத்த நொடியில் இருந்து அந்த மூத்த உறுப்பினரின் கையில் இருந்த கைய் பேசி அனைவரின் கைக்கும் மாறி கடைசியாக வேணியின் கைக்கு வந்து சேர்ந்தது.

அதில் இடம் பெற்று இருந்த பெயரை பார்த்து அவளே அதிர்ந்தவளாய் உதயேந்திரனை பார்க்க… நான் இதற்க்கு தான் காத்துக் கொண்டு இருக்கிறேன் என்பது போல் தன் கண் சிமிட்டலில் அவன் திரை மறைவில் நடத்தி முடித்தி விட்ட பூரிப்பு இருந்தது.

கடந்த வாரம் வேணி இந்த அலுவலகத்திற்க்கு வந்த அன்று அவளிடம் மனது விட்டு பேச வேண்டும் என்று ஆசையாக தான் உதயேந்திரன் இந்த அலுவலகத்திற்க்கு வந்தான் என்பதை விட ஓடி வந்தான் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

வந்தவனுக்கு வேணியின் கோபக்குரல் கேட்டுக் கொண்டே தான் அவன் வேணியின் அறைக்குள் நுழைந்தது.

பின் எப்போது ஒரு வயதானவருக்கு பதிலாய் சின்ன வயதுடையவனை பார்த்தானோ அப்போதே ஏதோ சரியில்லை என்று அவனுக்கு தோன்றி விட்டது. அதுவும் கிருஷ்ணா சொன்ன அவன் என் போனை எடுத்தான்… என்ற வார்த்தையில் , இவன் தன் தந்தை ஏற்பாடு செய்த ஆளாய் இருப்பானோ…

அவன் செய்யும் செயலுக்கு இந்த கைய் பேசி தான் மூலதனம் என்றால்,ஏதோ யோசித்தவனுக்கு திட்டம் உருவாக உடனே தன் கைய் பேசியை கொடுத்து விட்டான்.

அவன் இந்தியா வந்ததும் “புது சிம் வாங்க வேண்டும்.” என்றதற்க்கு “என்னிடம் நான்கு சிம் இருக்கு...இதை சும்மா ரீ சார்ஜ் மட்டும் தான் போட்டு வைத்துக் கொள்கிறேன்.” என்று சொல்லி இரண்டை தன்னிடம் கொடுத்தது…

ஒன்றை ஒரு பேசியிலும் இன்னொன்றை மற்றொரு கைய் பேசியிலும் வைத்து உபயோகித்து வந்தவனுக்கு தன் பெயரில் ஒரு சிம் வாங்க வேண்டும் என்பதையோ இந்த சிம் அப்பா பெயரில் இருப்பதையோ கூட மறந்து போய் அதையே தொடர்ந்து உபயோகித்து வந்தான்.

கிருஷ்ணா .. “என் போனை அவன் எடுத்தான்.” என்றதும் தான் தன்னிடம் இருப்பது அப்பா பெயரில் வாங்கிய சிம் என்பது நினைவுக்கு வந்து… அதை கிருஷ்ணாவிடம் கொடுத்தது.

இப்போது அனைவரும் பார்க்க அந்த எண் தன் தந்தையின் பெயரில் இருப்பதை பார்த்தே அனைவருக்கும் தெரிந்து இருக்கும் என்று வெற்றி பெற்றவனாகவும், அவளின் மனதை குளிர செய்தவனாகவும் அவன் முகத்தில் புன்னகை மின்ன ஒன்றும் நடவாது போல் கை கட்டி அங்கு நடப்பதை ஒரு பார்வையாளனராய் பார்க்க ஆராம்பித்தான்.

ஆனால் வேணி அப்படி இருக்கவில்லை. அதுவும் இப்போது அந்த மூத்த உறுப்பினர் பேசிய...இந்த பெண் சந்திரசேகரின் மகளாய் இருந்தாலும், எங்கு இருந்து வந்ததோ… அந்த வார்த்தை அவளை பலமாக தாக்கியது.

அவள் அரசாங்க தேர்வு எழுத ஆராம்பித்ததில் இருந்து, எப்போதும் தன் படிப்பின் சான்று, சாதி சான்று, பிறந்த சான்று இவற்றின் பிரதி எப்போதும் அவளின் கைய் பையில் இருக்கும்.

தன் கை பையில் இருக்கும் அனைத்து சான்றிதழ்களையும் அங்கு இருந்த டேபுள் மீது விசிரி அடித்தவள்…

“இதை எல்லோரும் கண் திறந்து உத்து பாருங்க. இது என்ன என்று…? என் பிறப்பு சான்றிதழில் அப்பா பெயர் யார் பெயராய் போட்டு இருக்கு…? என்று அவள் கேள்வி கேட்பதற்க்குள் அதை அனைவரும் பார்த்து இருந்தனர்.

“ம் சொல்லுங்க யார் பெயர் போட்டு இருக்கு…?” என்று வேணி கேட்டதும்… ஒருவர் வாய் திறந்து “சந்திரசேகர்.” என்று சொல்ல…

“சத்தமா சொல்லுங்க.” என்று வேணியின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்தவராய் அந்த மூத்த குடிமகன்… “சந்திரசேகர்.” என்று கொஞ்சம் சத்தமாகவே அவர் சொன்னார்.

“எல்லோருக்கும் கேட்டதா…?” என்று கேட்டவள்…பின் அவரிடமே… “அதில் நான் என்ன வருடத்தில் பிறந்து இருக்கேன் என்று இருக்கு…?” என்ற கேள்விக்கு…

அவர்…. “ 96” என்று சொல்லிக் கொண்டே அந்த பெரியவர் யோசனையுடன் ஜெய்சக்தியை பார்த்தார்.

இந்த குழுமத்தில் மூத்த உறுப்பினர் அவர். அப்போதே இதில் பங்குகளை வாங்கி போட்டவர்...அதன் பொருட்டு ஜெய்சக்தியின் திருமணத்திற்க்கு இவருக்கும் அழைப்பு வந்தது. அவரும் அழைப்பை ஏற்று குடும்ப சமயோதரை சென்று வாழ்த்தி விட்டு வந்தார்.

ஜெய்சக்தியின் திருமணம் நடந்த ஆண்டு… 2000. மாதம் சரியாக நியாபகம் இல்லை. ஆனால் ஆண்டு அவருக்கு நன்றாகவே நியாபகம் இருக்கிறது. ஏன் என்றால் அந்த திருமணத்திற்க்கு தன் மகள் வயிற்றில் குழந்தையோடு தன்னோடு வந்தாள்.

அந்த திருமணத்திற்க்கு சென்று வந்து தன் மருமகனிடம் திட்டு வாங்கியது இன்றும் அவருக்கு நினைவில் இருக்கிறது.

அந்த நினைவோடு … “உனக்கு 2000த்தில் தானே திருமணம் நடந்தது.” என்று கேட்டவர் பின் ஜெய்சக்தியையும் வேணியின் பிறப்பு சான்றிதழையும் மாறு மாறி பார்த்தார்.








































 
Active member
Joined
May 11, 2024
Messages
123
இது தேவைyயா யார் மானம் காற்றில் பறக்கிறது 🤔🤔🤔🌺🌺🌺
 
Active member
Joined
Aug 16, 2024
Messages
247
பரமேஸ்வரனுக்கு தேவைதான்.
 
Top