Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

kambathu ponnu...3

  • Thread Author
அத்தியாயம்….3

வேணி உதயனையே பார்த்திருப்பதை பார்த்த பவித்ரன் “இவன் தானே உன்னை கடத்தியது.” பவித்ரன் கேட்ட விதமே, நீ ஆமாம் என்று சொல். அப்புறம் இருக்கு அவனுக்கு. என்ற விதமாய் இருந்தது.

பவித்ரன் கட்த்திட்து பற்றி கேட்க. வேணியோ முத்தமிட்ட தருணத்தி நினைவு கூர்ந்தாள். வேணிக்கு எதுவும் தெளிவாய் நினைவில்லை. சிறு வயதில் தன் தந்தை தன்னிடம் கொஞ்சி பேசியது. கனவா…? இல்லை நினைவா…? என்று சந்தேகம் வரும். அதே நிலை தான் இப்போதும்.

தனக்கே எதுவும் தெளிவாய் நினைவில் இல்லாத போது, அவள் பவித்ரனிடம் என்ன என்று சொல்லுவாள். கனவு இல்லை உண்மை தான் என்றாலு, உருவம் தெளிவாய் தெரியவில்லை. அப்படி இருக்கும் போது இதை என்ன என்று சொல்வது. இது சொல்ல கூடியதா…? கூடவே இந்த எண்ணம் எழுந்தது.

திரும்பவும் பவித்ரன்… “இவன் தானே உன்னை கடத்தியது.”உதயனை காட்டி பவித்ரன் கேட்டதும், வேணியின் தலை இல்லை என்று தன்னால் மறுத்து கூறியது. அந்த மறுத்தல் எதற்க்கு என்று அவளே அறியாள்.

“என்ன உன் அத்தை மகள் நான் இல்லேன்னு சொல்லிட்டாளே. இப்போவாவது என்னை நம்புறியா…?”

எப்போதும் மிஸ்டர் போட்டு அழைக்கும் உதயன் இப்போது பவித்ரனை ஒருமையில் அழைத்து பேசினான்.

“என் கிட்ட மட்டும் மரியாதை எதிர் பார்க்குறிங்க. ஏன் அதை நீங்க எனக்கு தர மாட்டிங்கலா…?”

“உன்னோட நான் எட்டு வயதாவது பெரியவனா இருப்பேன். அதான் நீ என்ற இந்த அழைப்பு.” தான் ஒருமையில் அழைப்பதற்க்கான காரணத்தை உதயன் சொல்ல.

“ஆச்சரியமா இருக்கு. வெளிநாட்டில் எல்லாம் தன்னோட எவ்வளவு வயது சிறியவங்கலா இருந்தாலும், மரியாதையோட தான் அழைப்பாங்கன்னு நான் கேள்வி பட்டு இருக்கேன்.” ஆச்சரியப் பட்டு கேட்பது போல் பவித்ரன் உதயனை பார்த்து கேட்டான்.

“கண்டிப்பா நீ கேள்வி பட்டது சரி தான்.ஆனா நான் வெளி நாட்டவன் கிடையாது. இந்தியன். அதுவும் உன் சொந்தக்காரன்.” உதயன் சொந்தக்காரன் என்று சொல்லும் போது அவன் பார்வை தன்னால் வேணியை தொட்டு தழுவி, மீண்டும் பவித்ரடனிடம் சென்றது. இதை வேணி, பவித்ரன் இருவரும் கவனித்தனர்.

பவித்ரனுக்கு உதயனிடம் இதற்க்கு மேல் பேச்சு வார்த்தை வளர்க்க விருப்பம் இல்லை. சண்டை இடுபவர்களிடம் சண்டையிடலாம். ஆனால் இவனின் அனுகுமுறை வேறு மாதிரி இருக்கிறது. அதுவும் வேணியை வைத்து.

வேணியை இவன் நல்ல முறையில் பார்க்கிறானா…?கெட்ட விதமாய் பார்ர்க்கிறானா…? என்பது தெரியவில்லை.

ஆனால் உதயன் வேணியை பார்க்க கூடாது. அது நல்ல விதமாய் இருந்தாலும் சரி, கெட்ட விதமாய் இருந்தாலும் சரி. அவனின் எந்த பார்வையும், வேணியின் மீது விழுவதை பவித்ரன் விரும்பவில்லை.

அதற்க்கு அடுத்து பேச்சு வளர்க்காது பவித்ரன் வேணியிடம் “போகலாம்.” அங்கு இருந்து போக பவித்ரன் அவசரம் காட்டினான்.

இப்படி சட்டென்று பேச்சை முடித்து பவித்ரன் கிளம்பிவிடுவான் என்று உதயன் எண்ண வில்லை.

குறைந்தது சண்டையாவது போடுவான். அது வரை வேணியை பார்க்கலாம் என்று அவன் நினைத்ததை தகற்த்து விட்டதோடு, வேணியை பவித்ரன் தன் தோள் சாய்த்து அழைத்து சென்றதை அவன் விரும்பவே இல்லை.

இது வரை எப்படியோ…?ஆனால் இப்போது தான் ஜெர்மனியில் இருக்கும் போது கேளிக்கை விடுதிக்கு போகும் பழக்கமும் அவனுக்கு இருந்தது.

அப்போது மதுவோடு கூட ஆட்டமும் உண்டு. ஆட்டத்தில் தங்களை மறந்து உடல் நெருக்கத்தில் பட்ட அங்கத்தின் ஸ்பரிசத்தை கண் மூடி அவன் அனுபவித்ததும் உண்டு.

ஏனோ அந்த நினைவு இப்போது தேவையில்லாது அவன் நினைவுக்கு வந்து போனது.சே நம்மை போல் இல்லை பவித்ரன். அவன் மனமே அவனுக்கு எதிராகவும், பவித்ரனுக்கு ஆதரவாகவும் பேசியது தான்.இருந்தும்,

அவனின் இப்படி பட்ட நினைவை களைக்கும் விதமாய் கீர்த்தி “மாமா போகலாமா.” கீர்த்தியும் தன்னை முக நெருங்கி நின்று தன் தோள் பற்றி தான் அழைத்தாள்.

ஆனால் உதயனுக்கு கீர்த்தியின் நெருக்கம் மனதில் எந்த வித சஞ்சலமோ, கிளர்ச்சியோ ஏற்படுத்தவில்லை.

அதன் பின் தான் உதயன் ‘நான் இப்படி நினச்சதே ரொம்ப தப்பு. உதய் இது போல் நீ பவித்ரனை நினைக்கவே கூடாது.அது உன் குடும்ப வாழ்க்கைக்கு நல்லது இல்லை.வேணியை நீ திருமணம் செய்த பின் பவித்ரன் வேணியின் நட்பு தொடரும்.

அப்போது இது போல் கை பிடிப்பது. கட்டி பிடிப்பது கூட நடக்கலாம். நீ ஒரு கணம் கூட தவறாய் அவர்களை நினைக்க கூடாது.’என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான்.

“மாமா.”திரும்பவும் கீர்த்தி அழைத்ததும் தான் கீர்த்திக்கு பதில் அளிக்கவில்லை என்பதை நினைவில் வந்தவனாய்.

“ஏதாவது வேலை இருக்கா உங்களுக்கு.” க்ரீஷ், கீர்த்தி இருவரையும் பார்த்து கேட்டான்.

“இல்ல மாமா.” இருவரும் ஒரு சேர கூறினர்.

வேணி தங்கள் கெஸ்ட் அவுசில் தான் இருக்கிறாள் என்று தன் அக்கா குழந்தைகள் சொன்னதும், உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டு நேரத்தை வீண் அடிக்காது இங்கு வந்து விட்டான்.

இப்போது உதயனுக்கு அனைத்தும் தெளிவாக தெரிய வேண்டி இருந்ததால் இருவரையும் பார்த்து,

“உங்களுக்கு தாத்தா வேணியை கடத்தியது எப்படி தெரியும்….?” என்று கேள்வி எழுப்பினான்.

அதற்க்கு கீர்த்தி க்ரீஷ் முகத்தை பார்க்க. க்ரீஷ் “மாமா நேத்து ஸ்கூல் இருந்து வந்ததும், அம்மா என் கிட்ட இனி உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.” என்று சொன்னாங்க.

அம்மா என்ன சொல்றாங்கன்னு யோசிக்கும் போது தான் அவங்க “பிரச்சனை சென்னையை விட்டு திரும்பவும் கம்பத்துக்கு போக போகுதுன்னு.” சொன்னதும் தான் அம்மா அவங்கல பத்தி பேசுறாங்கன்னு நினச்சேன். அம்மா இதை மகிழ்சியா சொன்னாலுமே, அவங்க முகத்தில் கொஞ்சம் பயமும் தெரிந்தது.

“அம்மா நீங்க ஏதாவது தப்பு செய்ய போறிங்கலா…?” நான் கேட்கும் போது அங்கு வந்த தாத்தா “அம்மா கிட்ட என்ன விசாரணை. ஸ்கூல் விட்டு வந்தா ப்ரஷ் ஆயிட்டு ஏதாவது சாப்பிட போ.” என்னை அங்கு இருந்து அனுப்ப தான் தாத்தா அப்படி சொன்னார் என்று தெரிந்ததும்,

நான் அங்கு இருந்து போவது போல் போய் படி மறைவில் நின்னுட்டேன். அப்போ தாத்தா அம்மா கிட்ட “உனக்கு அறிவு இருக்கா…? நீ என் பொண்ணு தானா…? நாம என்ன அவார்டா வாங்குறோம். எல்லோர் கிட்டேயும் சொல்லி பெருமை பட. இது எல்லாம் காதும், காதுமா வெச்சி முடிக்கிற விசயம்.” தாத்தா அம்மாவ திட்டும் போதே தாத்தாவுக்கு அவர் கைய் பேசிக்கு அழைப்பு வந்தது.

அப்போ அந்த பக்கம் யார் பேசினான்னு தெரியல. ஆனா போன அட்டெண் பண்ண தாத்தா “ உன்ன யாரு இந்த நம்பருக்கு போன் செய்ய சொன்னதுன்னு.” திட்டியவர் பின் “என்ன தூக்கிட்டியா…?” என்று கேட்டவர்.

பின் “ஒரே ராத்திரி வெச்சி இருந்து அனுப்பிடுன்னு.” சொல்லி வெச்சிட்டார்.

தாத்தா சொன்ன தூக்கிட்டியா…? ஒரு ராத்திரி வெச்சி இருந்து அனுப்பு என்ற வார்த்தை. அம்மா சொன்ன உனக்கு பிரச்சனையா இருந்தது கம்பத்துக்கு போக போகுதுன்னு வார்த்தையே சேர்த்து பார்த்ததில்,

தாத்தாவும், அம்மாவும் சேர்ந்து அவங்கல கடத்திட்டாங்கன்னு தெரிஞ்சது. அதான் உங்க கிட்ட சொல்லிட்டேன். ஆனா எங்கேன்னு தெரியல. தெரிஞ்சிக்க என்ன செய்யிறதுன்னு யோசிக்க எனக்கு ஒரு ஐடியாவும் வரல.

அதான் எனக்கு தெரிஞ்ச விசயத்தை அக்கா கிட்ட சொன்னேன். அக்கா தான் யோசிச்சி என் கிட்ட உனக்கு ஸ்கூல்ல மிமீக்கி எல்லாம் செய்வியே, நான் தாத்தா ரூமில் இருந்து போனை எடுத்துட்டு வர்றேன்.

நாம அதுல வந்த போனில் இருந்து கடத்தல் காரன் போன் செய்த நேரத்தை பார்த்து நம்பரை எடுத்துட்டு நீ தாத்தா மாதிரி அந்த கடத்தல்காரன் கிட்ட பேசி அவங்கல எங்க வெச்சி இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கலாமுன்னு ஐடியா கொடுத்தாங்க.”

தாங்கள் எப்படி வேணி கட்த்தப்படட்தையும், இடத்தையும் அறிந்துக் கொண்டேம் என்று அக்கா தம்பி இருவரும் விளக்கினர்.

தன் அக்கா பிள்ளைகள் இருவரையும் கட்டி தழுவிக் கொண்ட உதயனுக்கு, என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

ஒன்றை மட்டும் அவன் உணர்ந்தான். தன் அக்கா பிள்ளைகள் சேற்றில் முளைத்த செந்தாமரைகள் என்று.

தன் அக்கா பெண்ணாய் இருந்து, ஒரு பெண் குழந்தையின் தாயாய் இருந்துக் கொண்டு, மற்றொரு பெண் கடத்தலுக்கு எப்படி திட்டம் வகுக்க முடிந்தது.

அவன் எண்ணம் இப்படி சிந்திக்கும் வேளயில், அவன் மனதில் ஒரு திட்டம். பின் கண்கள் பளிச்சிட க்ரீஷ், கீர்த்தியை பார்த்து…

“எனக்கு ஒரு உதவி செய்யிறிங்கலா…?” என்று கேட்டவனை பார்த்து

“என்ன மாமா உதவி என்று எல்லாம் சொல்லிட்டு.என்னன்னு சொல்லுங்க. எங்களால முடிஞ்சா செய்யிறோம்.” அக்கா, தம்பி இருவரும் தன் மாமனுக்கு வாக்கு கொடுத்தனர்.

கொஞ்சம் தயங்கிய உதயன் பின் க்ரீஷிடம் “கீர்த்தி போனில் இருந்து உங்க தாத்தாவிடம் பேச வேண்டும்.”

ஆரம்பம் என்ன முடிவு என்ன என்று முழுவதும் சொல்லாது உதயன் சொன்னாலுமே, க்ரீஷூக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.

“என்ன பேசனும்.?யார் குரலில் பேசனும்.” என்று நேரிடையாக க்ரீஷ் கேட்க.

தன் அக்கா மகனின் சட்டென்று புரிந்துக் கொள்ளும் தன்மை உதயனுக்கு அப்போது தான் தெரிந்தது. எந்த அளவுக்கு விவரமானவன் எப்படி அன்று அப்படி ஒரு முடிவு எடுத்தான்.

தன் அக்கா பிள்ளைகளின் தன்மையை இப்போது தான் புரிந்துக் கொள்ள முயற்ச்சி செய்துக் கொண்டு இருந்தான் உதயன்.

“நான் என்ன பேசனும் மாமா.”க்ரீஷ் திரும்பவும் கேட்டதும் தான்,

“தாத்தா கிட்ட இப்போ பவித்ரன் பேசினார்லே அவர் குரலில் பேசனும். உன்னால பேச முடியுமா? பவித்ரன் குரல் உனக்கு நினைவு இருக்கா.” என்று கேட்டு விட்டு ஒரு வித ஆர்வத்துடன் தன் அக்கா மகன் முகத்தையே உதயன் பார்த்திருந்தான்.

ஒரு நிமிடம் கண் மூடி யோசித்த க்ரீஷ் உதயனிடம்… “நீ தானே என் அத்தை மாமா பெண்ணை கடத்தியது.? வேணி சொல்லு இவனை தூக்கி ஜெயில்ல போட்டுடலாம்.”தன் மாமன் பக்கம் கை காட்டி சொன்ன விதத்தில், இத்தனை நேரம் அங்கு இருந்த இறுக்கமான சூழ்நிலை மறைந்து, அந்த இடத்தில் சிரிப்பு சத்தம் மட்டும் கொஞ்சம் நேரம் கேட்டது.

க்ரீஷ் அப்படியே பவித்ரன் போலவே பேசினான். அதுவும் பவித்ரன் பேச்சில் வேணியின் மீது இருக்கும் உரிமை குரல். வேணி என் அத்தை மகள் மாமன் பெண் என்று சொல்லும் போது ஒரு அழுத்தத்துடன் தான் பவித்ரன் குரல் எப்போதும் எதிரொலிக்கும். அந்த தன்மையை கூட விடாது க்ரீஷ் அப்படியே அச்சு பிசகாது பவித்ரன் போல் பேசியது.

அதுவும் உதயனை காட்டி தூக்கி ஜெயில்ல போட்டுடலாம் என்று க்ரீஷ் சொன்ன விதத்தில் உதயனுக்கு சிரிப்பை அடக்க முடியாது போனது.

தன் அக்கா மகனின் கை பற்றிய உதயன்…” சூப்பர்டா சான்சே இல்ல. அப்படியே பவித்ரன் மாதிரியே பேசுறடா.” என்று சொல்லி க்ரீஷை கட்டி அணைத்து உதயன் பாராட்டினான்.

“இப்போ சொல்லுங்க மாமா நான் தாத்தாவிடம் பவித்ரன் அங்கிள் மாதிரி என்ன பேசனும்.” க்ரீஷ் காரியத்தில் கண்ணாக கேட்டான்.

சிறிது நேரம் யோசித்த உதயன் பின் தன் திட்டத்தை க்ரீஷிடன் சொல்ல ஆராம்பித்தான். உதயன் பேசுவதை கீர்த்தி, க்ரீஷ் இருவரும் கவனத்துடன் கேட்டுக் கொண்டனர்.

“என்ன புரிஞ்சுதா?” உதயன் கீர்த்தி, க்ரீஷை பார்த்து கேட்டதும், இருவரும் கட்டை விரலை காட்டி சிரித்தனர்.

உதயன் வகுத்து கொடுத்த திட்டத்தின் முதல் படியாய் க்ரீஷ் கீர்த்தி போனில் இருந்து தன் தாத்தாவுக்கு அழைப்பு விடுத்தான்.

அந்த பக்கம் அழைப்பை ஏற்ற பரமேஸ்வரர் “என்ன கீர்த்தி காலையிலேயே நீயும் உன் தம்பியும் எங்கே போனிங்க…? உன் அம்மா கிட்ட சொல்லிட்டு போகனும் என்று கூட உனக்கு தெரியாதா…?சரி உன் தம்பி உன் கூடவா இருக்கான்…?”

யார் அழைப்பு விடுத்தார்கள். என்ன அவர்கள் சொல்ல நினைத்தார்கள் என்று கூட கேளாது. எப்போதும் தன் தன்மை படி தான் சொல்ல வேண்டியதை சொல்லி முடித்தார் பரமேஸ்வரர்.

அந்த பக்கத்தில் இருந்து “உங்க பேரன் எங்கு போனான் என்று எனக்கு தெரியாது. ஆனா உங்க பேத்தி என் பக்கத்தில் தான் பத்திரமா இருக்கா.” இந்த பக்கம் க்ரீஷ் பவித்ரன் குரலில் உதயன் சொன்னத்தை, இம்மி அளவு கூட மாற்றது தன் தாத்தாவிடம் பேசி விட்டான்.

ஆனால் அதை கேட்ட பரமேஸ்வரருக்கு தான் ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.தன் பேசியில் அழைத்த எண் என்ன என்று திரும்பவும் சரி பார்த்துக் கொண்டவர், இது தன் பேத்தியின் பேசி எண் தான்.

ஆனால் குரல் ஆணின் குரல் அதுவும் எங்கேயோ கேட்டு இருக்கேன் என்று யோசித்தவருக்கு, மின்னலாய் இது இது அந்த பையன் பவித்ரன் குரல் போல இருக்கே,

இவன் கிட்ட எப்படி என் பேத்தியின் போன் போனது. என்று யோசித்தவருக்கு அப்போது தான் அந்த பக்கம் பேசிய பேச்சின் அர்த்தம் புரிந்தவராய்,

“டேய் உனக்கு எவ்வளவு திமிறு இருந்தா, என் பேத்தியே கடத்தி இருப்ப.நான் உன்னை சும்மா விட மாட்டேன்டா.” என்று இந்த பக்கம் பரமேஸ்வரரின் குரல் கோபத்தில் ஏகாத்துக்கும் எகிற கத்தி விட்டார்.

பரமேஸ்வரர் போட்ட சத்ததில் வீட்டில் இருந்த அனைவரும் அங்கு கூடி விட்டனர்.ஜெய்சக்தி வாணி கஜெந்திரன் அனைவரும் “ என்ன ஆச்சி…” என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் நிலையில் அவர் இல்லாது, அழைப்பின் அந்த பக்கத்தில் இருந்து அடுத்து அடுத்து பவித்ரன் குரலில் க்ரீஷ் பேசிய பேச்சு இருந்தது.

“திமிறா...இந்த வயதில் உங்களுக்கு இருக்கும் போது, என் வயதுக்கு எனக்கு இருக்காதா…?அது இருக்கு ஏகாத்துக்கு.என் அத்தை மகளை நீ தூக்கினா நான் சும்மா இருப்பேன்னு நினச்சிங்கலா…?என் அத்தை பெண்ணை நான் காப்பாத்திட்டேன். உங்க பேத்திய நீங்க எப்படி காப்பாத்துறிங்கன்னு நான் பாக்குறேன்.” என்ற சொல்லோடு க்ரீஷ் அலைபேசியை வைத்து விட்டான்.

ஆனால் இந்த பக்கத்தில் தன் கை பேசியை பிடித்துக் கொண்டு இருந்த பரமேஸ்வரரின் கை தன்னால் நடுங்க, அதை பேசியை அணைக்க கூட தோன்றாது.

தன் பெரிய மகனிடம் “உத..யிக்கு போ.ன போடு.” திக்கி திணறி சொல்லி முடித்தார்.


















 
Top