Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kambathu Ponnu...4

  • Thread Author
அத்தியாயம்…4

அரை மணி நேர காத்திருப்பிற்க்கு பின் அந்த காபி ஷாப்பில் நுழைந்த உதயேந்திரனின் நடையின் வேகத்தை பார்த்த ராஜசேகர், இவனை சமாளித்து விடுவாளா அந்த பெண் என்ற பயம் மனதில் உதித்தது. என்ன நினைத்து தன் நண்பன் அந்த கம்பெனியின் பங்குகளை வேணியின் பெயரில் வாங்கி போட்டானோ...அது ராஜசேகருக்கே தெரியாது.

ஆனால் அப்பெண் இதில் வெற்றி பெற்று ஆகவேண்டும் என்று மனதார நினைத்தார். அவர் நினைப்பை கலைக்கும் விதமாய் எதிரில் வந்து அமர்ந்த உதயேந்திரன்…

“ என்ன அந்த கம்பத்து பொண்ண ஊரு போய் சேர சொல்லியாச்சா….?” உதயேந்திரனின் பேச்சில் துளியும் வயதுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை இல்லாது ஒருமையில் தான் பேசினான். அதை கவனித்தாலும், ராஜசேகர் காட்டிக் கொள்ளவில்லை

நேற்று மாலை பரமேஸ்வரருக்கு போன் செய்து… “இரண்டு நாட்களில் நடக்க இருக்கும் பங்குதாரர் மீட்டிங்கில் கிருஷ்ணவேணியும் கலந்துக்குறாங்க.” என்ற தன் அறிவிப்பில்…

அடுத்த ஒரு மணி நேரத்திலேயே…. ஒரு காபி ஷாப்பின் பெயர் சொல்லி… “ நான் உங்களை பார்க்கனும் .” என்று உதயேந்திரன் சொல்லிய விதத்திலேயே இப்படி பட்ட மரியாதை தான் தனக்கு கிடைக்கும் என்று எண்ணி தான் இங்கு வந்தார்.

காரியம் தான் முக்கியம் என்பது போல் ராஜசேகர்…“ அப்படி எல்லாம் ஈசியா அந்த பெண்ணை கம்பெனி ஷேரில் இருந்து நீக்கி விட முடியாது மிஸ்டர் உதயேந்திரன்.” உதயேந்திரன் கொடுக்காத மரியாதையை ராஜசேகர் அவனுக்கு கொடுத்தார்.

ராஜசேகரின் பேச்சில் ஒரு நிமிடம் யோசித்த உதயேந்திரன்… “ அந்த பொண்ணா விலகிட்டா, அதுக்கு ஈடா வேறு பிராப்பர்டி கொடுப்பேன். நானே விலக வைத்தா …” தன் இரு தோள்களை ஏற்றி இறக்கிய வாறு செய்தவன்…

“ நஷ்டம் அந்த கம்பத்து பொண்ணுக்கு தான்.” என் பேச்சு அவ்வளவு தான் என்பது போல் உதயேந்திரன் தன் பேச்சை முடித்துக் கொண்டான்.

உதயேந்திரனின் இந்த பேச்சால், ராஜசேகருக்கு திரும்பவும் பயம் ஏற்பட்டது. அந்த பெண் பாட்டுக்கு ஊரில் நிம்மதியாக இருந்தது. நான் நல்லது செய்கிறேன் என்று நினைத்து, திரும்பவும் அக்குடும்பத்துக்கு என்னால் தீங்கு நேர்ந்து விடுமோ என்று.

இருந்தும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாது, தன் கையில் உள்ள காகித்த்தை காட்டி…” எல்லாம் சட்டப்படி தான் சேர்மன் பொறுப்பை ஏற்க மிஸ் கிருஷ்ணவேணி வராங்க.” சட்டத்தை தான்டி, உன்னால் என்ன செய்ய முடியும்…? என்பதாக ராஜசேகரின் வாதம் இருந்தது.

உதயேந்திரன் பேச்சு மொத்தமும் ராஜசேகரின் பார்வை பார்த்தே தான் இருந்தது.முதலில் தன் பேச்சால் அவர் முகத்தில் வந்து போன பயம். பின் அதை காட்டாது கெத்தாக பேசுவது போல் பேசிய பேச்சு அனைத்தும் கவனித்தவனாய், எழுந்து நின்றவன்…

“ என்ன செய்யிறேன் என்று நாளை மீட்டிங்கிள் பாருங்க.” வந்த வேகத்தை விட போன வேகம் இன்னும் கூடுதலாக இருந்தது.

பவித்ரன் கிருஷ்ணவேணி தங்கி இருந்த ஓட்டலுக்கு வந்த ராஜசேகர், பவித்ரன் வேணியை பார்க்க அந்த ஒட்டலின் லாபியில் காத்துக் கொண்டு இருந்தார்.

ஒட்டலின் அறையில் இருந்த வேணியோ… “ இன்னும் ஏன் அந்த ஆளு வந்து வந்து போயிட்டு இருக்கார். எனக்கு அவர் மூஞ்ச பாக்கவே பிடிக்கல.”

தன் வீட்டுக்கு ராஜசேகர் வரும் போது, அவரை பற்றி ஒன்றும் தெரியாது ஒரு பார்வையாளராய் மட்டும் அவரை பார்த்திருந்த வேணி. இப்போது பவித்ரனின் மூலம் அவரை பற்றி தெரிந்ததில் இருந்த, அவர் முகத்தை கூட பார்க்க விருப்பம் இல்லாது போய் விட்டது. அந்த வெறுப்பில் வெளிப்பாடே இந்த பேச்சு.

“ வேணி நாளை வரை தான் அவரை பார்க்குறது, பேசுறது எல்லாம். பின் அவர நாம் ஏன் பார்க்க போறோம்…? ரொம்ப நேரமா அவர் வெயிட் பண்ணிட்டு இருக்கார். வா போகலாம்.” அடம் பிடித்தவளை வலுக்கட்டாயமாக அந்த லாபிக்கு அழைத்து சென்றான் பவித்ரன்.

“ என்ன விசயம் மிஸ்டர் ராஜசேகர் இப்போதே பார்க்கனும் என்று சொன்னிங்க.” பவித்ரன் பேச்சு பார்முலாக தான் இருந்தது.

பவித்ரன் போட்ட அந்த மிஸ்டரில், நான் அந்த தவறுக்கு துணை போகாது இருந்து இருந்தால்…’ இவன் என்னை அங்கிள் என்றோ, மாமா என்றோ தானே அழைத்து இருப்பான்.’ என்ற அந்த நினைப்பு வருவதை அவரால் தடுக்க முடியவில்லை.

ஒரு பெரும் மூச்சை இழுத்து விட்ட வாறே… “ இப்போ உதயேந்திரன் கிட்ட தான் பேசிட்டு வர்றேன். அவன் பேச்சு ஏதோ செய்ய போறான்னு தெரியுது. எதுக்கு நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. அத சொல்ல தான் வந்தேன்.”

“ இத நீங்க போன் மூலமாகவே சொல்லி இருந்தால், இந்த வீண் அலச்சல் உங்களுக்கு இருந்து இருக்காது.” இப்படி பேசியது நம் வேணியே தான்.

போனிலேயே சொல்லி இருக்கலாம் தான். ஆனால் ஊரில் இருந்து வந்ததில் இருந்து, வேணி , பவித்ரனின் மீதே அவர் எண்ணமாய் இருந்தது.

அதுவும் தன் நண்பனையே அச்சு அசலாய் உறித்து வைத்தது போல் இருக்கும் வேணியை இன்னும் ஒரு தடவை பார்க்க முடியாதா…? நினைக்கும் வேளயில் தான் பவித்ரனின் அழைப்பு வந்தது.

அதுவும் அவன் சொன்ன… “ நாளை நான் வேணியை அழச்சிட்டு சென்னை வர்றேன். நீங்க பார்க்க வேண்டிய பார்மால்டிஸ பாருங்க.” என்று சொன்னதும்,

“ சென்னையில என் வீட்டிலேயே தங்கிக்குங்க.” என்று ராஜசேகர் அழைப்பி விடுத்தார்.

“ அதெல்லாம் வேண்டாம். அந்த மீட்டிங் எங்கே…? நான் எத்தனை மணிக்கு வேணியை அங்கு அழச்சிட்டு வரனும், என்று சொன்னால் மட்டும் போதும். இந்த தங்குறது, திங்கிறது எல்லாம் நான் பார்த்துக்குறேன்.”

நம் பேச்சு இதோடு தான். இதை தான்டி வராதே என்பது போல் பவித்ரன் பேச்சி இருந்தது. அதற்க்கு மேல் எதுவும் சொல்லாது, பவித்ரன் கேட்டது போல் இடம், நேரத்தை சொல்லி வைத்து விட்டார்.

இதோ இப்போது உதயேந்திரனின் பேச்சு கொஞ்சம் அச்சத்தை கொடுக்க, இப்போது வேணி சொன்னது போல் போனிலேயே சொல்லி இருக்கலாம். நாளையே நேரில் இவர்களை பார்த்தும் இருக்கலாம். ஆனால் இப்போதே பார்த்து விடலாம் என்று மனது நினைத்ததால் தான் ஓடி வந்தார்.

இவரை பார்க்க… ஒரு மாதம் முன் பதிவு வாங்கி தான் பார்க்க முடியும். அந்த அளவுக்கு சென்னையில் புகழ் பெற்ற வக்கீல். இந்த புகழ், பெயர் வர ஆரம்பம் கூட, இவர் முதலில் S.P க்ரூப்புக்கு லாயராய் ஆனதால் தான் கிடைத்தது. அந்த குழுமத்தில் சேர தான் செய்த வேலை, அதை இப்போது நினைக்கும் போது இந்த புகழ், பெயர் அனைத்தும் அவர் முன் குப்பையாய் தெரிந்தது.

தான் செய்த அந்த செயலுக்காக மட்டும் இவர்கள் முன் இப்படி அடங்கி போகவில்லை. சிறுவயது முதல் அக்குடும்பத்தோடு பழகிய அந்த பழக்கம். இவர்கள் அக்குடும்பத்து பிள்ளைகள். அதோடு வேணி என் உயிர் நண்பனின் மகள். மனதில் இழையோடிய அந்த எண்ணமும் தான் இவர்கள் தன்னை இப்படி எடுத்தெறிந்து பேசியும் அமைதி காத்து இருக்கிறார்.

“ இந்த வழியா வர வேலை இருந்த்து அது தான் நேரிலேயே பார்த்துட்டு சொல்லிடலாமேன்னு வந்தேன்.” என்று சொல்லி விட்டு எழுந்தவர் திரும்பவும் “பார்த்து இருந்துக்குங்க.” அவர்களை எச்சரிக்கவும் மறக்கவில்லை.

ராஜசேகர் சென்றதும்… “ உதயேந்திரன் பாரு…?” என்று வேணி கேட்டதுக்கு,

“அந்தம்மாவோட தம்பி.” பதில் சொல்லிய பவித்ரனின் முகம் சிந்தனையில் ஆழ்ந்தது. வேணியும்… “ அந்தம்மா எந்தம்மா…?” என்று கேட்காது ஒரு தலையாட்டல் மட்டுமே பதிலாய் கொடுத்தவள் அந்த லாபியைய் சுற்றி நோட்டம் விட தொடங்கினாள்.

ராஜசேகர் உதயேந்திரனின் பேச்சில் ஏதாவது அடியாட்களை கொண்டு இவர்களை நாளை வராது போல் செய்து விடுவானோ என்று நினைத்து தான் இந்த பயம் பயந்தார்.

ஆனால் அந்த பயத்தை கொடுத்த உதயேந்திரன், ராஜசேகர் பயந்த அதே நேரத்தில் அடியாட்களை கொண்டு அடிக்க நான் என்ன ரவுடியா...? பக்க பிசினஸ்மேனாக்கும் என்பது போல் தன் குடும்பத்தோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருந்தான்.

“ வெளியாட்களிடன் நம் ஷேர் எவ்வளவு பெர்சன்ட் இருக்கு…?” பரமேஸ்வரரை பார்த்து உதயன் கேட்க,

“ முதல்ல நம்ம குடும்பத்தில் அறுபது சதவீதமும், வெளியில் நாற்பது சதவீதமும் இருந்தது.” தங்கள் S.P குழுமத்தின் பங்கை விளக்கி சொன்னார்.

“ இருந்ததுன்னா…? இப்போ…?” தனக்கு தெரிந்த விடைக்கு, கேள்வி கேட்டான்.

“ இருந்ததுன்னா…” கொஞ்சம் தயங்கிய பரமேஸ்வர். நம்ம கிட்ட இருந்த அறுபது சதவீத ஷேரை மூன்று பங்கா பிரிச்சி உனக்கு உன் அண்ணாவுக்கு, ஜெய்சக்தி பாகத்தை மாப்பிள்ளை பேருக்கு பிரிச்சி கொடுத்துட்டேன்.” என்றூ சொன்னவர் அடுத்து பேசாது அமைதி காத்தார்.

“ பிரிச்சி கொடுத்ததோட சரி. அடுத்து அது என்ன ஆச்சி. நம்ம கிட்ட தான் இருக்கா…? இல்லையா…?மிச்ச அந்த நாப்பது சதவீதம் இருக்குறவங்க கிட்டயே தான் இருக்கா…? புதுசா யாராவது அதை வாங்கிட்டாங்கலா...? இல்ல இருக்கறவங்கலே மத்தவங்க கிட்ட இருந்த ஷேரை வாங்கி இருக்காங்கலா…? பாக்கல. அப்படியே விட்டுட்டிங்க.” எவ்வளவு பெரிய அனுபவஸ்தர் இப்படி ஏமாந்து விட்டாரே அந்த ஆதாங்கத்தில் தந்தையை கடிந்தவன்.

அடுத்து தன் அண்ணனை பார்த்து… “ உங்க கிட்ட இருக்க ஷேராவது இருக்கா, இல்ல அதையும் அவருக்கு தார வார்த்து கொடுத்துட்டிங்கலா…?” என்று கோபமாக கேட்க…

“ இருக்கு தம்பி இருக்கு.” என்று பதில் சொன்னவர், கஜெந்திரனின் மனைவி வாணி.

வாணியும் சாதரண வீட்டு பெண் இல்லை. பெரிய அரசியல் பின் பலம் கொண்ட குடும்பம் தான். நல்ல புத்திசாலி பெண்ணும் கூட. திருமணம் முடிந்து முதல் மூன்று வருடம் குழந்தை இல்லாது இருந்தது. முதலில் அதை பெரியதாய் எடுத்துக் கொள்லவில்லை.

பின் அவர்களுக்கே குழந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணம் தோன்ற மருத்துவரை நாடினர். மருத்துவ மொழியில் என்ன என்னவோ வாயில் நுழையாத பெயர் சொன்னனர்.

ஆக மொத்தம் உன் கணவருக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குழந்தை உண்டாகும் அளவுக்கு இல்லை. உங்கள் கருப்பை நன்றாக இருக்கிறது வேண்டுமானல் மற்றவர்களின் விந்துவை உங்களுக்குள் செலுத்தினால் நீங்கள் தாய் ஆக நாங்க உத்திரவாதம்.” என்பதாக அவர்கள் பேச்சு முடிந்தது.

அதை வீட்டில் ஒலிப்பரப்பாக்க... இருப்பக்கமும் வாத பிரதிவாதம் கேட்ட பரமேஸ்வர் தீர்ப்பை வழங்கினார். “ அடுத்தவன் குழந்தை என் வீட்டுக்கு வாரிசா…? அப்படி பட்ட குழந்தையே தேவை இல்லை என்று.”

ஏற்கனவே தன் கணவன் அசமஞ்சம் என்ற கடுப்பில் இருந்த வேணிக்கு, இதுவும் சேர்ந்துக் கொள்ள. ஒரு பொறுப்பு இல்லாது வெளியில் சுத்துவது தான் அவர் வேலையாக இருந்தது.

பரமேஸ்வர்… “ உன் கணவர் கூட தொழிலை பார்க்கலாமே…” என்று கேட்டதுக்கு

“ யாருக்காக…?” ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டு தன் வேலையை பார்க்க சென்று விடுவார்.

தன் தந்தை வீட்டில் இருந்து வரும் சொத்தையே ஆல ஆள் இல்லை. இதில் இதை பார்த்து எனக்கு என்ன ஆக போகுது…? அந்த விட்டேத்தி எண்ணம் தான் வாணிக்கு.

ஆனால் இப்போது தங்கள் அடையாளமானஅந்த S.P க்ரூப்பின் சேர்மேன் பதவியில் தங்கள் குடும்பத்துக்கு சம்மந்தம் இல்லாதவர் அமர்கிறார் என்று கேள்வி பட்டதில் இருந்து, வெளி வட்டாரத்தில் அந்த குழுமத்தின் மருமகள் இவங்க...மற்றவர்கள் தன்னை பார்க்கும் அந்த பார்வை, இனி தனக்கு கிடைக்காது என்ற போது தான் தன்னுடைய முட்டாள் தனம் தெரிந்தது.

சந்திரசேகர் என்ன செய்கிறார் என்றாவது பார்த்து இருக்கலாமோ...தன் தந்தையிடம் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் கூட அவரை கண்காணித்து இருப்பாரே… காலம் தாழ்ந்து வருந்தி என்ன பயன்…?

அண்ணி சொன்ன அந்த “ இருக்கு…” என்பதில் “ அது வரை பரவாயில்லை.” என்று சொன்ன உதயேந்திரன். அடுத்து தன் சகோதரி ஜெய்சக்தியை பார்த்தான்.

ஜெய்சக்திக்கு இது தங்கள் குழுமம் மட்டும் சம்மந்தப்பட்டது இல்லை. அந்த பெண் பதவியில் அமர்ந்தால் அனைவரும் “யார்…? இப்பெண் …?” என்று கண்டிப்பாக கேள்வி எழும்.

உண்மை வெளிபட்டு விட்டால், இது வரை ஊருக்கு தெரியாதது வெட்ட வெளிச்சமாய் ஆகி விடும் . தன் காதல் கணவன் இறந்த சோகத்தோடு உண்மை வெளி வந்தால் சமுகத்தில் தனக்கு ஏற்படும் அவமானம், தன் குழந்தைகளுக்கு கிடைக்கும் பெயர். அதை நினைதாலே அவருக்கு பயமாய் இருந்தது.

தன்னை பார்த்த சகோதரனின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஜெய்சக்தி… “ எப்படியாவது அந்த பெண்ணை ஊருக்கு அனுப்பிச்சிடு உதை. சொத்து எவ்வளவு வேண்டுமாலும் அந்த பெண்ணுக்கு கொடுத்துடலாம்.”

நல்லதோ கெட்டதோ அதை செய்தால், ஊருக்கு முன் சொல்லவோ காட்டவோ தைரியம் இருக்க வேண்டும். இல்லை அதால் ஏதாவது பிரச்சனை வந்தால், அதை எதிர் கொள்ள தைரியம் இருக்க வேண்டும். செய்வது எல்லாம் செய்து விட்டு இப்படி ஒளிந்துக் கொள்வதில் எத சேர்த்தி…? இப்படி நினைத்தது உதயேந்திரன் கிடையாது. அந்த வீட்டின் மருமகள் வாணி.

நம் உதயேந்திரனுக்கு இது மாதிரி எண்ணம் எல்லாம் தோன்றவில்லை. தன் அக்கா இரண்டாவது மனைவி என்று கேள்வி பட்டதில் இருந்து… “ இவளுக்கு என்ன தலை எழுத்து…?” இதாய் தான் இருந்தது.

தன் கைய் பற்றியவளின் கை மீது கை வைத்தவன்… “ உன்னுடைய ஷேரை என் பெயருக்கு மாற்றி கொடு.அந்த பொண்ண கம்பத்தை பாக்க போக செய்கிறேன்.”

(அடுத்த அத்தியாயத்தில் நாயகன் நாயகி சந்திப்பு.)




















 
Top