அத்தியாயம்….5
தன் கையில் கட்டிய கை கெடிகாரத்தை பார்த்த உதயேந்திரனுக்கு, மனதில் கோபம் மலை அளவு இருந்தாலும், அதை வெளியில் காட்டாது கம்பீரமாய் அனைவரையும் பார்த்த படி அமர்ந்து இருந்தான்.
கோபம் வந்தால் சட்டென்று அதை வெளி காட்டி விட முடியாது. காட்டி விட்டால், அதற்க்கு ஆயிரம் அர்த்தம் கற்பித்து, அவர்கள் எண்ணத்திற்க்கு ஏற்ப வர்ணம் பூசி , அதை அனைவரிடமும் பறப்பி விடுவர்.
ஏற்கனவே ஒரு சிலர்…” யார் அது கிருஷ்ணவேணி…? இந்த S.P க்ரூப்புக்கும், அந்த பொண்ணுக்கும் என்ன சம்மந்தம்…?” ஒரு சிலர் நேரிடையாகவும், ஒரு சிலர் மறை முகமாகவும் கேட்டு விட்டனர்.
உதயேந்திரனின் பார்வையில், ஒரு தடவை விசாரித்ததோடு சரி. மறு முறை கேட்காது என்னவோ இருக்கு, என்பதை தெரிந்துக் கொள்ளும் ஆர்த்துடன் காத்திருந்தனர்.
ஷேர் ஓல்டர் கெஜந்திரனிடம் பேசிய பேச்சில், எந்த அளவுக்கு தன் அண்ணன் இவர்களிடம் பேசி, தன் மதிப்புபை இழந்து இருக்கிறான் என்பதை தெரிந்துக் கொண்டவன்.
இன்னொன்றையும் இன்று கவனித்தான். அது சந்திரசேகர் மீது இவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை நான் பெற மிகவும் போராட வேண்டும் . இந்த சமயத்தில் தன் கோப முகத்தை காட்ட கூடாது என்று அமைத்தி காத்தான்.
உதயேந்திரன் அமைதி காத்திருக்கும் அதே வேளயில், நம் நாயகியை பவித்ரன்… “ இதோ பார் வேணி. நேரா நடக்கனும். யாரு உன்னிடம் பேசினாலும், அவங்க கண்ண பார்த்து பேசனும்.” பவித்ரன் இப்படி பேச பேச தான் கிருஷ்ணவேணிக்கு பதட்டம் கூடியது.
அதன் வெளிப்பாடு அவள் முகத்தில் வெளிப்பட… “ இதோ இப்படி பதட்டம் படவே கூடாது.” அங்கு மீட்டிங்கில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை, நேற்று மாலையில் ஆராம்பித்த பயிற்ச்சி இதோ மீட்டிங் நடக்கும் கீழ் தளம் வந்த பிறகும் அவனின் பயிற்ச்சியை பவித்ரன் நிறுத்தவில்லை.
“ பவி போதும். போதும் . நான் பார்த்துக்குறேன்.” என்று சொல்லி, உன் பேச்சில் நான் மிகவும் சோர்ந்து விட்டேன், என்பது போல் தன் தோளை கீழ் இறக்கி, முகத்தில் கலைப்பு கொண்டு வந்து பாவம் போல் அவன் முகத்தை அவள் பார்த்தாள்.
“ இதோ இதோ... நான் ரொம்ப சொங்கி என்பது போல் இப்படி தளர்ந்து தெரியக் கூடாது. சும்மா கெத்தா உன்னை பார்த்தாலே...ஒரு மரியாதை வரனும். இவங்க கையில் இந்த க்ரூப் போனா, நம்ம பணம் இரட்டிப்பாகும், என்ற நம்பிக்கை ஷேர் ஓல்டருக்கு வரனும்.” பவித்ரன் தன் பயிற்ச்சியை மீண்டும் தொடர்ந்தான்.
பவித்ரன் வேணியை சென்னை அழைத்து வரும் முன்னரே, இந்த க்ரூப்பை பற்றி நெட்டின் உதவியுடனும், நட்பின் உதவியுடனும் கேட்டு தெரிந்துக் கொண்டது இது தான். அந்த க்ரூப்பின் அச்சாணியே பரமேஸ்வரர். அவருடைய பெரிய மகன் கஜெந்திரன் அந்த அளவுக்கு திறமை இல்லாதவர் என்பதையும் தெரிந்துக் கொண்டவன்.
இன்னொன்றையும் தெரிந்துக் கொண்டான். அது நம் நாயகன் புரிந்துக் கொண்ட சந்திரசேகரை பற்றியது தான். என்ன தான் அந்த ஆள் மோசமானவராய் இருந்தாலும், அவர் அந்த க்ரூப்பை தன் வசப்படுத்திய நாள் முதல், பரமேஸ்வரர் காட்ட முடியாத அளவுக்கு அந்த க்ரூப்பை உச்சாணி கொம்பில் ஏற்றியது தான்.
அவர் திறமை கூட நமக்கு சாதகமாய் தான் போயிற்று. அவர் அப்படி திறமையாக இருந்ததால் தானே, அந்த கிழட்டு சிங்கம் அனைத்து பொறுப்புகளையும் சந்திரசேகரிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி கொண்டார்.
அப்படி ஒதுங்கி கொண்டதால் தானே, இன்று அந்த பதவி வேணிக்கு கிடைத்து இருக்கிறது. அந்த க்ரூப்பின் இன்றைய நிலையை ஆராயும் போதே அவன் மனதில் ஒரு சில கணக்கு போடலாயிற்று.
அது அந்த க்ரூப்பில் இருக்கும் ஷேர் ஓல்டர்கள் சந்திரசேகரின் திறமை மீதும், அவர் ஆளுமை மீதும் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. இந்த நம்பிக்கையையும், பெயரையும், நாம் இருவகையாக நமக்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.
ஒன்று சந்திரசேகரின் சட்டப்படி மனைவி தன் அத்தை புனிதாவின் மகள் கிருஷ்ணவேணி தான். சட்டப்படி வாரிசு என்ற போது கண்டிப்பாக அவர்களின் ஆதாரவு வேணிக்கு கிடைக்கும். மற்றொன்று ஆதாயம் எது தெரியக்கூடாது என்று மறைத்து வைத்தார்கலோ, அதை அனைவரின் முன்னும் வெளிப்பட வைக்க வேண்டும். ஆதாவது ஜெய்சக்தி இல்லீகல் ஒய்ப் என்பதை. (பார்க்கலாம் பவித்ரனின் கணக்கை.)
அந்த மீட்டிங் நடைப்பெறும் ஹாலின் கதவை காவலாளி திறக்க , தன்னால் தனது வலது காலை எடுத்து வைத்த வேணி, பவித்ரன் சொன்னது போல் நேர்க் கொண்டு அனைவரையும் ஒரு பார்வை பார்த்தாள்.
அங்கு இவர்களின் வருகைக்காக யார் இந்த பெண் என்று அறிந்துக் கொள்ள ஆர்வமுடன் கூடி இருந்த ஷேர் ஹோல்டர்சும், அந்த க்ரூப்பின் தூண் என்று கருதப்பட்ட பரமேஸ்வரரின் மொத்த குடும்பமும், அக்கதவு திறந்த வேளயில் தன்னால் தலை நிமிர்ந்து கிருஷ்ணவேணியை பார்க்க,அவளின் தோற்ற பொலிவா…? இல்லை அந்த கம்பீரமா…? அனைவரையும் பார்த்த அந்த பார்வையா…? அவர்களின் எண்ணத்துக்கு ஏற்ப அதிர்ந்தோ, ஆச்சரியத்தோட, மலைத்தோ பார்த்தனர் என்றால், தன் காதல் கணவனின் மறு பிம்பமாய் வந்து நின்ற வேணியை பார்த்து, ஜெய்சக்தி தன்னால் எழுந்து நின்று விட்டார்.
என்ன தான் இத்தனை நேரம் பவித்ரன் பயிற்ச்சி கொடுத்தாலும், இது வரை பழக்கமே படாத அந்த சூழ்நிலை, அனைவரும் தன்னை பார்த்த பார்வை, அவளுக்கு ஒரு வித அச்சத்தை கொடுத்தது.
அதன் விளைவு, பவித்ரன் இடது கையைய், தன் வலது கைய் கொண்டு கெட்டியாக பிடித்துக் கொண்டாள். வேணி தன் கைய் பற்றவும், பவித்ரனுக்கு முதல் முறை யூகேஜி சென்ற அந்த தினம் தான் நியாபகத்தில் வந்தது.
இதே போல் தான் வீட்டில் அனைவரும் சொன்ன…” சமத்தா இருக்கனும். அழக் கூடாது. “ என்ற அனைத்துக்கும் “ எனக்கு தெரியும்.” என்று சொன்னதோடு, “ பவியையும் நான் அழாம பார்த்துப்பேன்.” என்று வீராப்பாய் பேசிய வேணி,
வகுப்பில் நுழைந்ததும், வகுப்பில் அமர்ந்து இருந்த பிள்ளைகள் அனைவரும் தன்னை பார்ப்பதை பார்த்து, தன் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டவளின் அந்த தோற்றத்தை கொண்டு இப்போது தன்னை பார்ப்பவளை பார்த்தவன் தன்னால் ‘நான் இருக்கேன்’ என்பது போல் அவன் கண் ஜாடை காட்டினான்.
பவித்ரன் பக்கம் இருக்க தனக்கு என்ன பயம் என்பது போல் , நிமிர்ந்த நடையோடு அவள் பெயர் எழுதி வைத்திருந்த இருக்கையில் அமர்ந்தவள், சுற்றி ஒரு பார்வை பார்த்தவளின் கண்ணில் அந்த ஆபிசில் ப்யூன் நான் தான் என்ற வகையாக நின்றுக் கொண்டு இருந்தவனை அழைத்தவள் தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்தவரை காட்டி..
“ அவரை எழுப்பி விட்டு, இவரை அமர வை.” என்று ஆணையிடும் குரலில் பவித்ரனை காட்டி சொன்னாள்.
அவள் அந்த ஹாலில் நுழைந்ததில் இருந்து, தன் கண்ணை அங்கும் இங்கும் அலைய விடாது, கிருஷ்ணவேணியை மட்டுமே பார்த்திருந்த உதயேந்திரனின் மனநிலை என்ன என்று அவனுக்கே தெரியவில்லை.
கம்பத்தில் இருந்து வருகிறாள். கொஞ்சம் மிரட்டினால் போதும் ஓடி விடுவாள். அதுவும் இல்லாது அவளுக்கு மேல் ஷேரை வைத்திருக்கும் நான் தான் சேர்மேன் என்று சொன்னாலே போதும் என்று நினைத்திருந்தவனுக்கு கிருஷ்ணவேணியின் இந்த தோற்றம் மிக அதிர்ச்சியை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு சிலர் குடும்பத்தை படித்த குடும்பம் என்று சொல்வது உண்டு. பரமேஸ்வரரின் குடும்பம் அழகு குடும்பம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அந்த வீட்டில் அனைவரும் அழகுடன் இருப்பர்.
திறமை இல்லாத கஜெந்திரன் கூட பார்க்க கம்பீரத்தோடு இருப்பான் என்றால், அன்னிய நாட்டில் அவர்களுக்கு இணையாக தொழிலை தொடங்கி சாதித்தும் காட்டிய நம் நாயகன் உதயேந்திரன் அழகோடு திறமையும் சேர்ந்து பார்க்க மேன்லி லுக் என்பார்களே அது போல் வசிகரமாய் இருப்பான்.
அவனிடம் இருக்கும் அழகுக்கும், பணத்திற்க்கும், அவன் பின் சுற்றாத பெண் இல்லை. தன் பின் சுற்றியவர்களோடு எல்லாம் அவன் பார்வை செல்லாது, தன்னை யார் கவர்கிறார்களோ, அவர்களிடமே தன் தனிமையை பகிர்ந்துக் கொள்வான்.
அப்படி பட்டவன் மனதில் வேணி ஒரு பிரமிப்பை ஏற்படுத்தி விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும். பிரமிப்பு என்றால் வேணியின் அழகில் உதயேந்திரன் விழவில்லை.
ஏதோ கம்பத்து பொண்ணு வரா. பார்த்துக்கலாம். என்று இருந்தவனின் மனது இப்போது வேறு மாதிரி எண்ண தோன்றியது. அது ‘இவளை வெல்வது கொஞ்சம் கடினம் தான். கடினமே அன்றி என்னால் முடியாது என்று இல்லை.’ பார்க்கலாம் ‘நீயா…?நானா…?’ மனதில் நினைத்தவனின் பார்வை வேணியின் பக்கத்தில் கைக் கோர்த்து நின்றுக் கொண்டு இருந்த பவித்ரன் புறம் சென்றது.
பவித்ரன் S.P குழுமத்தை பற்றி விசாரித்தது போல் , உதயனும் வேணியின் குடும்பத்தை பற்றி ஒரே நாளில் விசாரித்து விட்டான். அந்த விசாரிப்பில் அவனுக்கு கிடைத்த தகவல்...பவித்ரன் இல்லாது வேணியை எங்கும் தனியே பார்க்க முடியாது என்பதே…
அதுவும் இப்போது இந்த ஹாலில் அவள் நுழைந்த அந்த கம்பீரம். பின் அனைவரையும் பார்த்ததும், அவள் முகத்தில் வந்து போன பதட்டம். பவித்ரனின் கைய் பிடியில் அவள் நடையில் வந்த தோரணை அனைத்தையும் கூர்மையுடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.
கூடவே மனது பவித்ரனின் தோற்றத்தையும் எடை போட்டது. வயது கல்லூரி படிப்பை முடித்து ஒரு இரு வருடம் தான் ஆகி இருக்கும் என்று அவன் முகத்தில் இருக்கும் இளமை சொன்னது என்றால், அவன் கன்னத்தில் விழும் குழியும், அவனின் வெண்மை நிறமும் அவன் முகத்துக்கு ஒரு தனி அழகை கொடுத்தது. மொத்தத்தில் இன்றைய கல்லூரி பெண்கள் விரும்பும் சாக்லைட் பாய் தோற்றத்தில் இருந்தான் எனலாம்.
உதயேந்திரன் பவித்ரனின் தோற்றத்தை எடை போட்டு முடிக்கும் வேளையில் தான் வேணியின் இந்த கடைசியான செயல் அவனை வியப்பில் ஆழ்த்தியது.
அதுவும் அவள் யாரை எழுப்பி விட்டு அந்த இடத்தில் பவித்ரனை அமர வை என்று சொன்னாளோ…அந்த இடத்தில் அமர்ந்து இருந்தது கீர்த்தி. சந்திரசேகர் இறந்து நடக்கும் முதல் போர்ட் மீட்டிங் என்பதாலும்,அங்கு என்ன நடக்குமோ என்று உதயேந்திரன் குடும்பம் மொத்தமும் ஒரு வித பதட்டத்தில் இருந்தனர்.
பரமேஸ்வரர் முன்னெல்லாம் மீட்டிங்கிள் கலந்து கொள்ளுங்கள். அப்போது தான் பங்குதாரர்களின் மனநிலையை கணிக்க முடியும் என்று சொல்லும் போது எல்லாம் வராத குடும்ப உறுப்பினர்கள் மொத்த பேரும், வீட்டில் இருக்க முடியாது இன்று மீட்டிங்குக்கு வந்து விட்டனர்.
கீர்த்தி இருக்கையை காட்டி வேணி இப்படி சொன்னதும், அந்த ப்யூன் சொல்லாமலேயே தன்னால் கீர்த்தி எழுந்து நின்று விட்டாள். கீர்த்திக்கு தந்தை என்றால் மிகவும் பிடிக்கும். அவள் ஹீரோவே தன் தந்தை தான்.
தன் பள்ளி தோழிகள் தந்தையை பார்த்து…” உன் அப்பா இந்த வயசிலும் என்ன ஹான்சமா இருக்குறார்ப்பா. நம்ம கணக்கு டீச்சர் உங்க அப்பா உன்னை அழச்சிட்டு வந்து விடும் போது எல்லாம், உன் அப்பாவை முறச்சி முறச்சி பார்க்குது. பார்த்து கணக்கு பண்ணிட போகுது.” என்று சொல்ல..
“ என் அப்பா என் அம்மாவை விரும்பி கட்டிக்கிட்டாங்க. அப்பா அம்மாவை தவிர யாரையும் பார்க்க மாட்டாங்க.” அன்று தான் சொன்ன அந்த வார்த்தை தந்தை மறைந்ததும், தான் அப்பா மீது வைத்த நம்பிக்கையும் மறைந்து போனது தான் அவளாள் தாங்கிக் கொள்ள முடியாது போனது.
தனக்கு பிடித்த தந்தையின் மறு உருவமாய் வந்து நின்ற வேணியை பார்த்த நொடி காதலனை பார்த்தால் ஏதோ மனது பட படக்கும் துடி துடிக்கும் என்று சொல்வார்களே… அந்த நிலையில் தான் இப்போது கீர்த்தி இருந்தாள்.
காதலனை பார்த்து அந்த காதலி ஏன் அப்படி பட படக்கிறாள். தன் மனதில் பதித்து வைத்திருந்த பிம்பம் தன் கண் முன் வருவதை பார்த்து தானே அவள் இதயம் தன்னால் துடிக்கிறது.
தன் தந்தையைய் ஒரு நாயகன் அளவுக்கு உயர்த்தி வைத்திருந்த கீர்த்தி , அதே பிம்பத்தோடு பெண் உருவமாய், வந்து நின்றால் தன்னால் எழ தானே செய்வாள்.
இவர்களின் மனநிலையாவது சொல்லி விடலாம். ஆனால் பரமேஸ்வரரின் மனநிலை சொல்ல முடியாத நிலையில் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
இருபத்திரெண்டு வருடம் முன் பார்த்த சந்திரசேகரின் அதே தோற்றம். தோற்றம் மட்டும் அல்லாது, அந்த நடை, பார்க்கும் விதம். அந்த கண்ணில் தெரியும் ஏதோ ஒன்று அவரை நிலை குலைய வைத்தது.
தன் மாப்பிள்ளை உயிலை இப்படி எழுதிய போது, கொஞ்சம் பதட்ட பட்டார் தான். அதுவும் கம்பெனி ஷேரை அந்த பெண் மீது இருக்கிறது என்று தெரிந்ததில் இருந்து இன்னும் கொஞ்சம் அவர் பதட்டம் கூடியது எனலாம்.
இந்த பதட்டம் பிரச்சனையை தீர்க்க முடியாது என்று வந்தது கிடையாது. பிரச்சனையை தீர்க்கும் போது …” யார் அந்த பெண்…? இவ்வளவு பெரிய குழுமம் தானே இறங்கி வந்து இருக்கிறது என்றால், இப்படி சமூகம் பேச கூடும் என்றதால் தான் அவருக்கு அந்த பதட்டம் ஏற்பட்டது.
அந்த பதட்டம் கூட நேற்று மாலை உதயன் செய்த ஏற்பாட்டில் மறைந்து விட்டது எனலாம். ஆனால் இப்போது இந்த பெண்ணை பார்த்த போது, பிரச்சனை பெரியதாக வளருமோ…? என்ற பயம் மனதில் பற்றிக் கொண்டது.
இப்படி ஆளுக்கு ஒரு வகையில் பதட்டப்பட வைத்த நம் நாயகியோ… முன்பு கீர்த்தி அமர்ந்து இருந்த இருக்கையில் இருந்த பவித்ரனை பார்த்து ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி விட்டு ஒரு மர்மமான புன்னகை செய்தவள், பின் கூலாக அனைவரையும் பார்த்து …
“ ஆக்சுவலி இவங்க தான் என்னை அறிமுகம் செய்யனும்.” உதய்யேந்திரன் குடும்பத்தை காட்டி சொன்னவள். “ ஆனால் அவங்க இப்போ பேசுற நிலையில இல்லாததால் நானே என்னை அறிமுகம் செய்துக்குறேன்.”
அவள் தன்னை அறிமுகம் செய்துக் கொள்ள தேவையில்லாத்து போலவே அங்கு இருந்த அனைவருக்கும் புரிந்து விட்டது அவளின் தோற்றத்தை பார்த்து.
ஆனால் அப்போது கூட சந்திரசேகருக்கு மகளாய் இருக்க கூடும் என்று நினையாது, தன் பக்கத்தில் அமர்ந்து இருப்பவரின் காதில்… “ சந்திரா சாருக்கு அண்ணன் மகளா இருப்பாங்களா…?” என்று ஒருவர் சொன்னார் என்றால்,
மற்றொருவர்… “ எனக்கு என்னவோ தங்கை மகளாய் தான் இருப்பாங்கன்னு தோனுது.” அந்த அமைதியான ஹாலில் என்ன தான் குசு குசு என்று பேசினாலும் அது தெளிவாய் அனைவரின் காதிலும் விழத்தான் செய்தது.
“நீங்க நான் மிஸ்டர் சந்திரசேகருக்கு என்ன உறவுன்னு குழம்பிக்கவே வேண்டாம்.” தன் கையில் உள்ள ஒரு காகிதத்தை காண்பித்து…. “ இது என் பிறப்பு சான்றிதழ். இது சொல்லும் நான் அவருக்கு என்ன உறவு என்று.”
இப்படி பேசிக் கொண்டு இருக்கும் கிருஷ்ணவேணியின் வாயை உதயேந்திரன் எதைக் கொண்டு அடைக்க போகிறான்.
ஞாயிறு என் மகளின் நிச்சயம். அதற்க்கு தொடர்ந்தார் போல் வேலை இருப்பதால், வெள்ளி அன்று கதை கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. முடியும் மட்டும் கொடுக்க பார்க்கிறேன்.
இல்லை என்ற அடுத்த வாரம் புதன் கிழமைக்கு கொடுக்கிறேன். உங்கள் தொடர் ஆதாரவுக்கு நன்றி.