Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kambathu Ponnu...6.2

  • Thread Author
வேணியின் பார்வையில் உதயேந்திரன் மகிழ்ந்து போனான் என்றால், வந்ததில் இருந்து தன் பார்வை அவனிடம் செல்வதை தடுக்க முடியாது இருக்கும் தன் மானம் கெட்ட மனசை நினைத்து அவளுக்கு அவள் மேலயே கோபமாய் இருந்தது.

நான் சென்னை வந்த காரணம் என்ன…? என் அம்மாவை அசிங்கப்படுத்தி பேசியவர்களை, இந்த சமூகத்தின் முன் தலை குனிய வைக்க வேண்டும் என்று.

ஆனால் இப்போது நான் செய்துக் கொண்டு இருக்கும் காரியம் என்ன….? அதுவும் அவர்கள் வீட்டில், தன் தாயின் வாழ்க்கை பறித்த வீட்டில், தன்னை எதிர்த்து நிற்க்கும் குடும்பத்தில், தன்னை ஏதாது செய்து இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் தன் தாயைய்.

அவரை நினைத்தால் தான் வேணியின் அடி வயிறு எல்லாம் கலங்கியது. என் மனம் போகும் பாதை மட்டும் என் அன்னை அறிந்தால், என்னை பற்றி என்ன நினைப்பார்.

தாயைய் போல் சேலை என்று மாறி. தந்தை போல் தடுமாற்றம் என்ற பெயர் வந்து விடுமோ…

இப்போது நான் செய்துக் கொண்டு இருக்கும் செயல் என்ன…? இந்த அறையில் வந்ததில் இருந்து உதயேந்திரனை பார்ப்பதும், பின் குனிவதும் என்று இருந்த வேணியின் தடுமாற்றமான மனநிலை, தன் தாயின் நிலை குறித்து ஒரு நிலைக்கு வந்த பின் மனதில் ஏதோ ஒரு உறுதி வர, உதயேந்திரனிடம் இருந்து தன் பார்வையை சட்டென்று திருப்பியவள் சாக்கு போக்கு என்று பவித்ரனிடம் குனிந்து பேசாது, அனைவரையும் நேர்க் கொண்டு பார்த்து அவர்கள் பேசுவதை செவி மடுத்து கேட்டுக் கொண்டு இருந்தாள்.

உதயேந்திரனும் தன் கூலிங் க்ளாஸ் வழியாக அவளின் அந்த முகத்திருப்பளை பார்த்தவனின் பார்வை இப்போது நேர்க் கொண்டு கிருஷ்ணவேணியை பார்த்தது.

பார்த்தவன் கண்ணுக்கு கிருஷ்ணவேணியின் தெளிந்து இருந்த முகம், அவனுக்கு பல கதைகள் சொல்லியது. இது சரியில்லையே…? நாங்கள் இருவரும் விரும்பினாலே, இவளை திருமணம் செய்ய பல பிரச்சனைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். அதுவும் அவள் பக்கத்தில் உட்கார்த்துக் கொண்டு இருக்கும் அந்த சாக்லேட்டை சரிகட்டவே நான் என்ன என்ன பிளான் எல்லாம் போட வேண்டுமோ… இதில் இவளே எனக்கு பிரச்சனை ஆனால், கடவுளே என்னை காப்பாற்று.

உதயேந்திரன் கடவுளிடன் மனு கொடுத்து முடிக்கவும், அந்த மீட்டிங் முடியவும் சரியாக இருந்தது. வேணிக்கு இந்த அறைக்குள் நுழையும் போது இருந்த தடுமாற்றம் இப்போது இல்லை என்பதால், அனைவரையும் பார்த்து ஒரு ஸ்நேக புன்னகையை அவளாள் சிந்த முடிந்தது.

அனைவரிலும் உதயேந்திரனும் அடக்கம். நியாயத்துக்கு பார்த்தால் தன்னை முறைத்துக் கொண்டு இருப்பவள் இப்போது சிரித்ததிற்க்கு அவன் மகிழ்ந்து தான் இருக்க வேண்டும்.

ஆனால் அவன் அதற்க்கு எதிர் பதமாய்...உன்னுடைய இந்த பார்முலா சிரிப்பு எனக்கு எதுக்கு டீ. வந்ததில் இருந்து என்னை திருட்டு பார்வை பார்த்தாயே...அது போல் பார்த்து விட்டு, போகும் போது அதே திருட்டு தனமாய் உன்னுடைய அந்த மெல்லிய உதட்டின் ஓரம் கசிந்து வரும் மில்லி மீட்டர் புன்னகை தான் எனக்கு வேண்டுமடீ. இப்படி அவன் மனசாட்சி அவனுக்குள் பேசிக் கொண்டு இருக்கும் போது.

அவன் அறிவு அவள் போறா..பார். அவள் இங்கு இருந்து போவதற்க்குள் உன்னை நினைக்கும் படி ஏதாவது செய். திரும்பவும் அவளை எப்போது பார்ப்பாயோ…?

அப்படி அவள் எங்கு போகிறாள் என்று தெரிந்து அவளை பார்க்க முயன்றாலும், இதோ பாடிகாட் மாதிரி அந்த சாக்லேட் ஒட்டிக்கிட்டு நிக்கும்.

அவன் நம்மளை பார்த்தால், என் பிகர் என்னை முறைப்பதற்க்கும் மேல் இவன் என்னை பார்த்து முறைத்து வைப்பான். எனக்கு இது தேவையா…? இங்கு இருந்து போவதற்க்குள் ஏதாவது செய்டா….

இப்படியாக உதயேந்திரனின் மனது, அறிவு இரண்டும் தர்க்கம் செய்து முடிக்கும் வேளயில் பவித்ரனும், வேணியும் அந்த அறையை விட்டு வெளியேறும் இருந்த சமயத்தில் ராஜசேகர் …

“பவித்ரன் உன்னிடம் கொஞ்சம் வேலை இருக்குப்பா…” என்ற ராஜசேகரின் பேச்சுக்கு திரும்பி அவரை பார்த்த பவித்ரன் “என்ன…?” என்பது போல் அவரை திரும்பி பார்த்தான்.

“வேணியோட வங்கி கணக்கை கொஞ்சம் சரி பார்க்கனும். அப்புறம் வேணி பெயரில் இருக்கும் சொத்துக்கு டாக்ஸ் கட்டுவது பத்தி கொஞ்சம் பேசனும்.” என்று பவித்ரனின் பார்வைக்கு பதிலாய் ராஜசேகர் சொன்னதற்க்கு,

திரும்பி வேணியை பார்த்த பவித்ரன் தன்னிடம் இருந்த காரின் சாவீயை அவளிடம் நீட்டிய வாறே… “கார் பக்கத்திலேயே ட்ரைவர் நின்னுட்டு இருப்பான். நீ வீட்டுக்கு போயிடு.” என்ற சொல்லோடு ராஜசேகரை நோக்கி செல்ல பார்த்த பவித்ரனின் கையை பிடித்து நிறுத்திய வேணி.

“நான் வெயிட் பண்ணிறேன் பவி. நாம இரண்டு பேரும் ஒன்னாவே போவோம்.” என்று சொன்னவளை நேர்க் கொண்டு பார்த்த பவித்ரன் ஏதோ சொல்ல வருவதும், பின் தயங்கி குனிவதுமாய் இருந்தவன்.

பின் “நீ வீட்டுக்கு போ வேணி. எனக்கு வெளியில கொஞ்சம் வேல இருக்கு. அதை முடிச்சிட்டு வர்றேன். நீ போ.” வலுக்கட்டயமாய் அவளை வீட்டுக்கு போக சொன்னாலும், ராஜசேகரை நோக்கி வந்தவனின் கைகள் தன்னால் வேணியின் கைய் பேசிக்கு தங்கள் ட்ரைவரின் பேசியின் எண்ணை வேணிக்கு அனுப்பி வைத்தான்.

வேணியின் மேல் பவித்ரனுக்கு கோபம் தான். இங்கு வந்ததில் இருந்து அவளின் பார்வையின் தடுமாற்றத்தை அவனும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான்.

வேணியை இன்று நேற்றா தெரியும் அவனுக்கு. அவளை பற்றி அவளுக்கு தெரிந்ததை விட அவனுக்கு தானே நன்கு தெரியும்.

அன்று அவள் சொன்ன… “அதற்க்குள் அவர் காப்பாற்றிட்டாரு.” அந்த வார்த்தையை அவள் சொன்ன விதம். சொல்லும் போது அவள் குரலில் இருந்த தடுமாற்றம்.

தடுமாற்றத்தோடு அவர் என்று சொல்லும் போது அந்த சொல்லில் ஏதோ ஒன்று அவனுக்கு உணர்த்துவதாய் இருந்தது. தான் உணர்ந்தது மட்டும் சரியாக இருந்தால்…இப்படி நினைத்தவன், பின் இல்லை அப்படி இருக்க கூடாது.

வேணி அப்படி இல்லை. தன் தாயின் வாழ்க்கையை தட்டி பறித்த வீட்டில், அவள் அப்படி நினைத்துக் கூட பார்க்க மாட்டாள் என்று தனக்கு தானே சமாதானப்படுத்திக் கொண்டவனுக்கு, இன்றைய தினம்.

இன்று வேணி நடந்துக் கொண்ட முறை. அவள் பார்வையின் தடுமாற்றம். பின் அவள் தெளிந்த விதம். அனைத்தையும் பவித்ரன் பார்த்துக் கொண்டு தானே இருந்தான்.

இதோடு இன்னொன்றையும் கவனித்ததினால் தான் வேணியை தனியே விட்டு அவன் பின் தங்கினான். இல்லை என்றால் வேணியை அவன் தனியே அனுப்பி இருக்க மாட்டான். அதுவும் அந்த கடத்தல் சம்பவத்துக்கு பின் அவன் அவளை எங்கேயும் தனியே விட்டது கிடையாது.

அவன் கவனித்தது, வேணி மட்டும் அவன் மீது ஆவல் பார்வை பார்க்கவில்லை. உதயேந்திரனும் அவ்வப்போது வேணியை பார்ப்பதை பவித்ரன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

வேணியை பற்றி பவித்ரனுக்கு நன்கு தெரியும். ஆனால் உதயேந்திரனின் இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்…? ஜெர்மனியின் பழக்கத்தை இங்கு தொடர நினைக்கிறானா…? இல்லை இந்திய பழக்கத்தை புதுபிக்க நினைக்கிறானா…?

உதயேந்திரனின் இந்த பார்வைக்கான அர்த்தம் தனக்கு மட்டும் தெரிந்தால் போதாது. முக்கியமாக வேணிக்கு தெரியவேண்டும்.

என்ன எது வேணியின் கண்ணை மறைத்தாலும், அவள் வளர்ந்த கலாச்சார சூழல் அவளை விட்டு போகாது.

ஒருவன் தன்னை நேர்மையான கண்னோட்டத்தில் பார்க்கிறானா…? இல்லை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறானா…? என்று தெரியாதவள் இல்லை வேணி.

தாங்கள் கிளம்பும் போது உதயேந்திரனின் பதட்டமான முகமே அவன் வேணியிடம் தனியாக பேச நினைக்கிறான் என்பதை பவித்ரன் புரிந்துக் கொண்டான். உதயேந்திரன் வேணியிடம் பேசினால் தான், வேணியின் இந்த மயக்கம் தெளியும். அதனால் பேச விட்டு தான் பார்ப்போமே என்று தான் வேணியை தனியே அனுப்பியது.

வேணி தனியாக செல்வதால் கண்டிப்பாக உதயேந்திரன் அவளிடம் தனியாக பேசுவான் என்று பவித்ரன் நினைத்ததிற்க்கு ஏற்ப தான் உதயேந்திரன் வேணி தனியாக செல்வதை பார்த்து அவசர அவசரமாய் அந்த அறையை விட்டு வெளியேறினான்.

வெளியேறும் முன் பவித்ரனை பார்த்து ஒரு நன்றி புன்னகையைய தரவும் உதயேந்திரன் மறக்கவில்லை.

படிகட்டின் வழியாக இரண்டாம் தளத்திற்க்கு வந்தவன் மூன்றாம் தளத்தில் இருந்து முன்தூக்கி வர காத்திருந்தான்.

மூன்றாம் தளத்திலேயே மின்தூக்கி அருகில் அவளை பார்த்து இருக்க முடியும். அப்படி தான் அங்கு நின்று இருந்தால் கண்டிப்பாக அவள் மின்தூக்கியை பயன் படுத்தி இருக்க மாட்டாள் என்று அவளை பற்றி சரியாக கனித்தே இப்படி இரண்டாம் தளத்திற்க்கு

வந்து காத்திருப்பது.

உதயேந்திரன் நினைத்தது போலவே மின்தூக்கியில் எவரும் இல்லாது வேணி மட்டும் உள் இருக்க உதய மின்தூக்கியில் ஏறியதும், ஒரு நிமிடம் அதிர்ந்து நின்று விட்டாள்.

பின் மின்தூக்கியில் இருப்பதா…? இல்லை வெளி செல்வதா…? என்று அவள் யோசித்து முடிக்கும் தருவாயில் மின் தூக்கி தன் வேலையான இரண்டாம் தளத்தில் இருந்து ஒன்றாம் தளத்திற்க்கு சென்று கொண்டு இருந்தது.

ஆனால் முதல் தளத்தை மின்தூக்கி தொடும் முன், மின்தூக்கியில் இருக்கும் பட்டனை தட்டி விட்டு அதை செயல் படுத்த முடியாது செயல் இயக்கம் செய்து விட்டு நிதானமாய் உதயேந்திரன் வேணியை பார்த்தான்.

வேணியும் அவனினும் மிக நிதானமாய் உதயேந்திரனை கேள்வியுடன் பார்த்திருந்தாள். வேணியிடம் இருந்து உதயேந்திரன் இந்த நிதானத்தை எதிர் பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தான் மின்தூக்கியை நிறுத்தியதும், ஒன்று பயப்படுவாள். அந்த பயம் என்னிடமா…?இல்லை அவளிடமேவா என்பதை அவள் முக பாவனையை வைத்து தெரிந்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தான். பயம் இல்லையேல் கோபம் கொள்வாள்.

கோபத்தில் விடும் வார்த்தையில் கண்டிப்பாக தனக்கு சாதகமாய் ஏதாவது வரும். இதை எதிர் பார்த்திருந்தவனுக்கு, வேணியின் இந்த நிதானம் அடுத்து இப்போது தான் என்ன செய்ய வேண்டும்…?

அவனுக்கு அவனே கேட்டுக் கொண்டு இருக்கும் வேளயில் வேணி பேசிய…

“என்ன அன்னிக்கி மயக்கத்தில் கொடுத்ததை, இப்போ தெளிவில் இருக்கும் போது கொடுக்க வந்து இருக்கிங்கலா…?” என்ற கேள்வியில்…

உதயேந்திரன் முகத்தில் மின்னல் அடிக்க… “அட இது கூட நல்லா இருக்கே…” என்று சொல்லிக் கொண்டே வேணியின் அருகில் மிக அருகில் சென்றான்.

அத்தியாயம்……31 (1)
 
Top