Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kambathu ponnu....6

  • Thread Author
அத்தியாயம்….30 (1)

அந்த குழுமத்தின் வருடாந்திர கணக்கு வழக்குகளை பார்க்கும் நாள் அன்று.அதனால் அந்த குழுமத்தின் முக்கியமானவர்கள் அந்த அறையில் கூடி இருந்தனர்.

கூடவே வந்த லாபத்தில் பங்குதாரர்கள் எத்தனை சதவீதம் பங்கு இருக்கிறதோ அதை பொறுத்து பணத்தை அந்த பங்குதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்தி விடுவர்.

வந்த லாபத்தின் சதவீதம். அதன் தொகை. பின் எந்த எந்த பங்குதாரர்களுக்கு எத்தனை சதவீதம் செல்கிறது.

அதாவது யார் கணக்கில் எவ்வளவு தொகை போடுவது என்று அன்று தான் தீர்மானிப்பர். அதன் படி உதயேந்திரனுக்கு அடுத்த படியாக வேணியின் வங்கி கணக்கில் தான் அதிகப்படியாக பணம் செலுத்த வேண்டி இருந்தது.

அன்று அந்த இடத்தில் பரமேஸ்வரரின் மொத்த குடும்பம் கூடி இருந்தது. பரமேஸ்வரருக்கு வேணியின் வங்கி கணக்கில் போகும் தொகையை கேட்டு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

யார் வீட்டு சொத்தை யார் வங்கி கணக்கில் போவது. இது என்ன வாரிசு இல்லாத சொத்தா…? கண்டவர்களின் வங்கி கணக்கில் செல்வதற்க்கு, அதை நினைத்து பரமேஸ்வரருக்கு கோபம் எல்லையைய் கடந்தது என்றால்,

பரமேஸ்வரரின் பக்கத்தில் அமர்ந்து இருந்த அவர் மகள் ஜெய்சக்திக்கு எல்லாம் துறந்த நிலை என்பார்களே அது போல் ஒரு பற்று அற்ற நிலையில், எதிரில் அமர்ந்து இருந்த வேணியையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

அதுவும் வேணி தன் காதல் கணவன் முகம் சாயலில் அப்படியே அச்சு அடித்தது போல் இருந்தவளை பார்க்க பார்க்க மனதில் ஏதோ பிழைவது போல் இருந்தது.

தன் கண் முன் தன் இரு மக்களின் உருவத்தை கண் முன் கொண்டு வந்தாள். இருவரும் தன் வீட்டு வகையாரின் முக சாயலில் இருந்தனரே ஒழிய, தன் கணவனின் முகம் சாயல் துளியும் அவர்களுக்கு இல்லை என்று தன் மனம் உணரும் வேளயில் வேணியையே பார்த்துக் கொண்டு இருந்த ஜெய்சக்தியின் கண் தன்னால் மூடிக் கொண்டது.

புனிதாவுடன், அதாவது தன் முதல் மனைவியுடன் காதலோடு கூட வில்லை. கடமையோடு தான் கூடினேன். தங்கள் கல்யாணம் ஆனா அன்று தன் கணவன் தன்னை தொடும் போது தன்னிடம் சொன்ன வார்த்தை காதில் இப்போதும் எதிரொலிப்பது போல் இருந்தது.

அந்த வார்த்தை அன்று தேனாய் தான் தன் காதில் கேட்டது. ஆனால் இப்போது அந்த வார்த்தை கேட்பது போல் இருக்கும் அந்த பிரம்மையை கூட தாங்க முடியாது தன் இரு காதுகளையும் மூடிக் கொண்டாள்.

காதலோடு கூடிய தங்கள் உறவில் உதித்த கருவில் தன் காதலனின் சாயல் இல்லை. கடமையோடு கூடியதாக சொன்ன கருவில் உதிர்த்த குழந்தை அச்சு அசல் தன் கணவரின் சாயல்.

அதை நினைத்த உடன் மூடிக் கொண்ட கண் ஓரம் ஒரு சில மணி துளிகள் விழியோரம் வழிந்து ஓட, அதற்க்கு மேல் அங்கு அமர்ந்து இருக்க முடியாதவளாய் அந்த இடத்தை விட்டு போனாள் என்பதை விட ஏதோ துரத்துவது போல் ஓடினாள் என்று தான் சொல்ல வேண்டும்.

அதை பார்த்த அனைவரும், வேணியின் வங்கி கணக்கில் போகும் பணத்தை கேட்டு தான் கோபத்தில் செல்கிறாள் என்று நினைத்தனர். ஏன் ஜெய்சக்தியின் தந்தை பரமேஸ்வரர் கூட அதை தான் நினைத்தார்.

ஆனால் உதயேந்திரனின் முகம் மட்டும் தன் அக்கா போவதை பார்த்து மனது வேதனையில் துடித்தது.

தன் மாமன் இறந்த அன்று அவன் என்ன நினைத்தானோ அதையே தான் இன்றும் நினைத்தான்.

இவளுக்கு என்ன தலையெழுத்து இரண்டாம் தாரமாய் வாழ்க்கை பட. அதுவும் ஒரு குழந்தையின் தகப்பனை திருமணம் செய்துக் கொள்ள.

தன் தமக்கைக்கு அழகு இல்லையா…? கல்வி இல்லையா…?செல்வமில்லையா…? இதில் எது குறை என்று அவர் பின் சென்றாள்.

மாமனுக்கு அழகு தவிர வேறு என்ன இருக்கிறது. ஒரு பெண்ணை விட்டு தன்னை தேடி வந்து இருக்கிறானே, இவன் தன்னை விட்டு போக மாட்டான் என்று என்ன நிச்சயம். இது யோசித்து இருந்தால் கூட அவரை விட்டு விலகி இருப்பாளே… விலகி இருந்தால் மற்றவர்களை போல் ஒரு சந்தோஷமான வாழ்வை வாழ்ந்து இருப்பாளே…

இதோ இன்று இவளுக்கு இந்த வேதனையும் இருந்து இருக்காது அல்லவா…? உதயேந்திரனின் காதல் கொண்ட மனது வேணியின் பக்கம் சாய்ந்தாலும், ஒரு சகோதரனாய் தன் அக்காவின் இன்றைய மனநிலையையும் யோசித்தான்.

சந்திரசேகர் மீது எவ்வளவு காதல் இருந்தால், திருமணம் ஆனது தெரிந்து அவரை விட முடியாது அவரையே திருமனம் செய்து இருப்பாள்.

ஆனால் அந்த காதலுக்கு தன் அக்காவுக்கு கிடைத்த பரிசு. தன் உழைப்பு மொத்தமும் தன் பெரிய பெண் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தையே சேரும் என்று எழுத்தி விட்டு சென்று விட்டார்.

முதல் மனைவியை விட்டு தன் அக்காவை திருமணம் செய்து தன் முதல் மனைவிக்கு துரோகம் செய்தார் என்றால், இரண்டாம் மனைவியுடன் குடும்பம் நடத்திக் கொண்டு தன் உரிமை மொத்தமும் தன் முதல் மனைவிக்கு கொடுத்து விட்டு சாகும் போது தன் இரண்டாம் மனைவிக்கு துரோகம் செய்து இருக்கிறார் மிஸ்டர் சந்திரசேகர். மொத்தத்தில் அவர் யாருக்கும் உண்மையாக இருக்கவில்லை.

இந்த நினைவோடு உதயேந்திரன் தன் மனம் கவர்ந்தளின் முகம் பார்த்தான். அப்போது வேணி தன் பக்கத்தில் அமர்ந்து இருந்த பவித்ரனிடம் ஏதோ குனிந்து மிக மும்முரமாய் பேசிக் கொண்டு இருந்தாள்.

அப்போது தான் உதயேந்திரன் ஒன்றை கவனித்தான். முதல் முறை வேணியை தன் முதல் பகையாளியாய் நினைத்துக் கொண்டு இருக்கும் போது பார்த்த அன்று கூட இவள் தலை குனிந்து இப்படி அமர்ந்து இருக்கவில்லையே…

எல்லோரையும் நேர்க் கொண்டு பார்த்து தானே பேசினாள். முதலில் தன் முகம் பார்த்து பேசவில்லை என்றாலும், பின் தனக்கு பதில் அளிக்க தன் முகத்தை பார்த்து கோபமாக இருந்தாலும் பேசினாளே…

இன்று என்ன வந்தது…?இவளுக்கு யாரையும் நிமிர்ந்து பார்க்காது இருக்கிறாள் என்று அவன் நினைக்கும் போதே…

இல்லை யாரையும் இல்லை. ஆடிட்டர் கேட்ட கேள்விக்கு அவர் முகத்தை பார்த்து தான் பதில் அளித்தாள். அது போல் லாயர் ராஜசேகர் அதாவது இந்த குழுமத்தில் வக்கீல் ராஜசேகர் ஏதோ கேட்டதற்க்கு அவர் முகத்தை பார்த்து தான் பேசினாள்.

ஆனால் பேசிய உடன் உடனே குனிந்து கொள்கிறாள் இல்லை என்றால் அந்த சாக்லெட் கிட்ட ஏதோ பேசுறாள்.

ஆம் இப்போது எல்லாம் உதயேந்திரன் பவித்ரனை சாக்லெட் என்று தான் மனதில் நினைத்துக் கொள்கிறான்.

நினைக்கும் போது எல்லாம் அவன் அடி வயிறு கப கப என்று பத்தி வேறு எரிகிறது. வேணியின் பக்கத்திலேயே இருக்கும் குடுப்பினையோடு, வேணியின் நன்மதிப்பை பெற்றவன் என்ற தகுதியோடு, கூடுதலாய் வீட்டில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டு இருக்கிறது.

இதை எல்லாம் நினைக்கும் போது, தன்னால் அவன் மனதில் பொறாமை தீ பற்றி எரிவதை தடுத்து நிறுத்திட முடியவில்லை.

இந்த பொறாமை தீ வேணி தன் பக்கம் பார்த்தால், அதாவது அவள் காதல் தனக்கு கிட்டினால் அவர்களின் நட்பை அவன் பெருந்தன்மையோடு ஏற்று கொள்வானோ என்னவோ…

வேணியின் ஒரே ஒரு பார்வைக்கு கூட பஞ்சமாய் இருக்கும் இவ்வேளயில், என்று அவன் நினைவு ஓடும் போதே…

அடி ராட்சசி என்னை பார்க்க தவிர்க்க தான் அந்த சாக்லேட்டிடம் ஏதோ மிக மும்முரமாய் பேசிக் கொண்டு இருக்கிறாளோ...ஏன் என்னை பார்க்க தவிர்கிறாள்.

ஒரு வேளை அன்று தான் முத்தமிட்டத்தை கண்டு பிடித்து விட்டாளோ… என்று நினைக்கும் போதே அவள் அன்று தன் கன்னத்தில் முத்தமிட்டது நினைவின் அடுக்கில் எழும் போதே...தேகத்தில் ஒரு சிலிர்ப்பு தன்னால் எழுந்து அடங்கியது.

மீண்டும் அந்த வாய்ப்பு கிட்டுமா…? என்று நினைத்துக் கொண்டே மீண்டும் வேணியின் பக்கம் தன் பார்வையைய் செலுத்தும் போது தான், அவசரமாய் வேணி பவித்ரன் பக்கம் திரும்பியது கண்ணில் பட்டது.

அப்போ இப்போ தான் திரும்பினாள் என்றால், இவ்வளவு நேரம் யாரை பார்த்துக் கொண்டு இருந்தாள். தன்னையா…?

தன்னை பார்த்து இருப்பாளோ என்ற அந்த சந்தேகமே அவன் மனதுக்குள் சந்தோஷ ஊற்று பெருகி வர போது மானதாய் இருந்தது.

இதுவே இவ்வளவு நேரமும் தன்னை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள் என்று நிருபனம் ஆனால்,

கண்டு பிடிக்க வேண்டும். இப்போதே...எப்படி…? எப்படி…? என்று யோசித்தவனுக்கு தன் முன் டேபில் மேல் இருந்த தன் கூலிங் க்ளாஸ் கண்ணில் பட, முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு இழையோட அதை தனக்கு வாட்டமாய், வசதியாய், வேணியின் பிம்பம் அந்த கூலிங்க்ளாஸில் விழும் படி வைத்தவன் தன் பக்கத்தில் இருந்தவனிடம் ஏதோ முக்கியமாய் பேசுவது போல் பேசிக் கொண்டு இருந்தாலும், அவன் பார்வை முழுவதும் அந்த க்ளாஸிலேயே இருந்தது.

நேரம் செல்ல செல்ல வேணி தன்னோடு தீவிரமாய் அந்த சாக்லெட்டோடு கதையடித்துக் கொண்டு இருந்தாளே ஒழிய, தன் பக்கம் பார்வை செலுத்துவதாய் இல்லை.

நாம் தான் ஏகத்துக்கும் கற்பனை வளர்த்துக் கொண்டமோ…அந்த பக்கம் எந்த ரியாக்க்ஷனையும் காணுமே. சரி இது வேலைக்கு ஆகாது என்று உதயேந்திரன் அந்த க்ளாஸில் இருந்து தன் பர்வையைய் விலக்கும் வேளயில், வேணி தன் காதோரம் ஒதுங்கி இருந்த முடியை மீண்டும் காதோரம் இழுத்து விடுவது போல் தன் பக்கம் முதலில் ஒர பார்வையை செலுத்தியவள், அவன் தன்னை பார்க்கவில்லை தன் பக்கத்தில் அமர்ந்து இருப்பவனிடம் மும்முரமாய் பேசி கொண்டு இருப்பதை பார்த்து, ஓரப்பார்வையை மாற்றி, நேர்ப்பார்வையிட ஆரம்பித்தாள்.

அதை அந்த க்ளாஸ் வழியே பார்த்த உதயேந்திரனின் மனது குத்தாட்டம் போட்டது. நம் முத்தத்திற்க்கு இவ்வளவு பவரா…? என்று இதழோரம் புன்னகை மின்ன நினைத்தவனின் மனதோ தூ...அவளே மயக்கத்தில் இருந்தாள்.

உன் முத்தத்தை அவள் உணர்ந்து இருப்பாளோ… இதில் அவள் உன் முத்தத்தில் மயங்கிட்டான்னு உனக்கு கற்பனை வேறா…? அவனே அவன் மனதை அதட்டி அதை அடக்கினாலும், பார்வையை அந்த க்ளாஸிலேயே வைத்துக் கொண்டு இருந்தானே ஒழிய நிமிர்ந்து அவளை பார்க்கவில்லை.

தன் மேல் விழும் அந்த பார்வையை அவன் அனுபவித்துக் கொண்டு இருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

உதயேந்திரனையே பார்த்துக் கொண்டு இருந்த வேணிக்கோ, உதயேந்திரனின் இதமான மனநிலைக்கு எதிர் பதமாய் மனநிலை கொதித்துக் கொண்டு இருந்தது.

ஒரு முத்தம் பெற்றதும். ஒரு முத்தம் கொடுத்ததும். அதுவும் பாதி மயக்கத்தில் இருக்கும் போது ஒருவரை வீழ்த்த முடியுமா…? முடியும் என்று சொன்னது அவள் மனசாட்சி.






 
Top