Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kambathu Ponnu....8.

  • Thread Author
அத்தியாயம்….32

முதலில் பவித்ரன் மட்டும் வீட்டுக்கு வருவதை பார்த்த பவித்ரனின் தாத்தா நாரயணன்… “என்னப்பா நீ மட்டும் வர்ற….வேணி எங்கே…?” என்ற கேள்விக்கு,

“உங்க பேத்தி பின்னால் வர்றா…” பவித்ரனின் இந்த பதில் பொதுவாக பார்த்தால் சாதரணமாக தான் தெரியும்.

ஆனால் பவித்ரன், வேணியின் நட்பை கொண்டு பார்த்தால், இந்த பதில் அவர்களுக்குள் எதாவது பிரச்சனையா…? என்று தான் யோசிக்க வைக்கும்.

ஏன் என்றால் எப்போதும் பவித்ரன் வாயில் இருந்து என் வேணி இப்படி தான் அவன் வாயில் இருந்து வரும். இப்போது அவன் சொன்ன உங்க பேத்தி இந்த வார்த்தை, தன்னிடம் இது போல் தன் பேரன் இப்படி சொல்லி இருக்கானா...என்று யோசித்த அந்த பெரியவருக்கு தோன்றியது என்னவோ தன்னிடம் மட்டும் இல்லை இது போல் வேணியை பற்றி பேசும் போது வேணியின் அம்மா புனிதாவிடமே உங்கள் மகள் என்று அவன் குறிப்பிட்டு சொன்னது இல்லை என்று தான் தோன்றியது.

“என்னடா பிரச்சனை…?” என்று தன் பேரனிடம் நாரயணன் கேட்பதற்க்குள் தன் அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக் கொண்டான். அவனின் இந்த செயல் கூட அவனின் தாத்தா நாரயணனுக்கு புதியதாகவே பட்டது.

ஒரு போதும் இது போல் பெரியவர்கள் பேசும் போது நின்று பதில் கொடுக்காது சென்றது இல்லை. வேணிக்கும் இவனுக்கு பிரச்சனையா…? இல்லை இன்று சென்ற இடத்தால் பிரச்சனையா…? என்று அந்த பெரியவர் யோசித்து ஒரு முடிவுக்கு வரும் முன் அங்கு வந்து சேர்ந்த தன் பேத்தி வேணியிடம் தன் சந்தேகத்தை தெளிவு படுத்திக் கொள்ள அவள் முகத்தை பார்தவருக்கு என்ன தோன்றியதோ…

“என்னம்மா உடம்பு சரியில்லையா…?” தன் மனதில் எழுந்த சந்தேகத்தை அனைத்தும் விட்டெறிந்தவராய் பேத்தியின் முகசோர்வே முதன்மையாக தெரிய கேட்டார்.

“இ..ல்ல தா..த்தா உட..ம்புக்கு...எல்லாம் ஒன்னும் இ..ல்ல.நான் நல்லா தான் இருக்கேன்.” என்று சொன்னவள் பின்… “பவி வந்துட்டானா தாத்தா…?” என்ற கேட்டுக் கொண்டே தாத்தாவின் தோள் சாய்ந்தாள்.

சிறிது யோசித்த அந்த பெரியவர் என்ன நினைத்தாரோ… “அவனுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்ல போல. அதான் வந்துதும் அவன் அறைக்கு போய் படுத்துட்டான்மா…”

நாரயணன் இப்படி சொன்னதும், தாத்தாவின் தோள் மீது இருந்து தன் முகத்தை எடுத்தவள் முகத்தில் கவலை ரேகை பாய...“கொஞ்ச நேரத்துக்கு முன்ன கூட நல்லா தானே இருந்தான். இப்போ என்ன ஆச்சி…?” என்று தனக்கு தானே பேசிய வாறு எழுந்து போக பார்த்தவளின் கை பற்றி தடுத்த அந்த பெரியவர்…

“வேண்டாம்மா அவன் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.” வேணியை போக விடாது தடுத்து விட்டார் நாரயணன்.

இதுவே சாதரண மனநிலையில் வேணி இருந்து இருந்தால், அவனை பார்க்க யார் என்னை தடுப்பது என்பது போல் அவனை பார்த்து விட்டு தான் அவள் மறுவேலை பார்த்து இருப்பாள்.

ஆனால் இன்று அவளுமே மிகுந்த மனவுளச்சலிலும், குற்றவுணர்விலோடு, புதியதாய் தோன்றிய மனகுறு குறுப்பில் அவளுக்குமே கொஞ்சம் தனிமை வேண்டி இருந்ததால்…

“சரி தாத்தா அவன் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். எனக்கும் கொஞ்சம் டையடா தான் இருக்கு. சாயங்கலாம் அவனை பாக்குறேன்.” என்று தன் தாத்தாவிடம் சொல்லி விட்டு தன் அறைக்கு சென்று விட்டாள். அந்த பெரியவருக்கு இதுவும் புதியதாய் தான் தோன்றியது.

என்ன…? இது நல்லதிற்க்கா…? கெட்டதிற்க்கா…? அவர்கள் தான் குழம்பி போய் இருக்காங்கலா…?இல்லை நான் தான் தேவையில்லாது குழம்பி போய் இருக்கேனா…?

இதே போல் தான் தன் மனது இருபது வருடத்திற்க்கு முன் ஏன்…? எதற்க்கு…? என்று தெரியாது தத்தளித்தது.

மனது ஒரு மாதிரி பிசைவது போல். தன் குடும்பத்தில் இருப்போருக்கு ஏதோ தீங்கு வருவது போல் அவர் மனதுக்கு தோன்றியது.

தன் குடும்பத்தின் மொத்த உறுப்பினரும் தன்னோடு இருந்தனர். ஒருவனை தவிர் அந்த ஒருவன் தன் மகன்.

அவன் சென்னையில் ஒத்தையில் இருக்கான். அவரும் தன் மகன் சந்திரசேகர் ஊருக்கு வரும் ஒவ்வொரு தடவையும்…

“இங்கயே இருக்கும் நம்ம விவசாயத்தை பார்த்துக்கலாமே…” என்று கேட்கும் போது எல்லாம் சந்திரசேகர் பார்க்கும் பார்வைக்கு பொருள் புரிந்தவராய்…

“உன் படிப்புக்கு ஏத்த மாதிரி இங்கயே வேலை பார்த்துக்கலாமேப்பா…” தன் பேச்சை மாற்றியும் கேட்டு பார்த்து விட்டார்.

ஆனால் தன் மகனின் பதில்… “இங்கு வக்கீல் படிச்சவன் எல்லாம் கோர்ட் வாசல்ல மரத்தடியில் உட்கார்ந்திட்டு பத்து நூறுக்கு, கேசு கிடைக்குமான்னு பார்த்துட்டு இருக்கான். அவன் பக்கத்துல, அவனுக்கு போட்டியா நான் உட்காரட்டுமா…?”

முதலில் எல்லாம் சந்திரசேகர் தன்னிடம் இப்படி மரியாதை இல்லாது பேசியது கிடையாது. தன் தங்கை மகள் புனிதாவை இவனுக்கு கட்டி வைத்ததில் இருந்து தான் இது போல் பேச்சு எல்லாம் இவன் வாயில் இருந்து வந்து விழுகின்றன.

ஒரு குழந்தையும் பிறந்த பின் ஏன் இந்த கோபம். பாவம் பெரியவர்கள் பார்த்து மனம் முடித்தாலும், தன் மனைவியோடு ஒன்றி வாழ்ந்த அந்த பெரியவருக்கு இதை பற்றி எல்லாம் புரியவில்லை.

அந்த பெரியவருக்கு இது மட்டுமா புரியவில்லை. சென்னையில் மட்டும் படித்த படிப்பை ஒட்டியா வேலை பார்க்கிறான். ஏதோ பணக்காரனுக்கு கீழ் தானே வேலை பார்க்கிறான். இதை தன் மகனிடம் கேட்க முடியுமா…?

முடியாது என்ற பட்சத்தில் மகனை சென்னைக்கு அனுப்பி வைத்தாலும், ஊருக்கு வரும் போது எல்லாம்….

“பொண்டாட்டி பிள்ளைங்கல எப்போ உன் கூட கூட்டிட்டு போக போற…?” என்ற இந்த வார்த்தையை நாரயணன் தன் மகனிடம் கேட்காத நாள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மனைவியை கூட்டிட்டு போ….என்று சொல்லும் போது … ‘இவளையா…?’ என்பது போல் தான் மனைவியின் பக்கம் சந்திரசேகரின் பார்வை செல்லும். கூடவே மகள் என்று நாரயணன் சொன்னால்…

“என் தேவதையை இப்போ இருக்கும் சின்ன வீட்டுக்கு எல்லாம் கூட்டிட்டு போக மாட்டேன். என் லிட்டில் பிரின்ஸ் பேலசில் இருக்கனும். அது போல் வீடு கட்டிட்டு அப்புறம் என் மகளை கூட்டிட்டு போவேன்.” என்று சொல்லும் தன் மகனை மிகவும் நம்பினார் அந்த பெரியவர்.

மகள் மீது இருக்கும் இந்த அதிகப்படியான பாசமே தன் மனைவி மீது ஒரு பிடித்தத்தை ஏற்படுத்தும் என்று அந்த பெரியவர் நம்பினார்.

மனது ஏதோ போல் பிசையவும், மகன் உடல் நிலைக்கு தான் ஏதோ என்று பயந்து போய் தான் தன் மகள், மருமகன், மருமகள் பேரப்பிள்ளைகளோடு சென்னைக்கு விஜயம் செய்தது.

அங்கு சென்ற பின் தான் தன் மனது பிசைவதற்க்கு உண்டான உண்மையான காரணம் விளங்குவது போல் இருந்தது அந்த பெரியவருக்கு. ஆம் முதன் முதலில் அன்று தான் ஜெய்சக்தியை நாரயணன் பார்த்தார்.

நாரயணன் குடும்ப சமயோதராய் சென்னை வந்து இறங்கும் போதே மதியம் கடந்து விட்டது.இப்போது அவன் அலுவலகத்தில் தானே இருப்பான் என்று தான் அந்த பெரியவர் நேராய் சந்திரசேகர் வேலை செய்யும் கம்பெனிக்கு சென்றது.

முதலில் அந்த கம்பெனியை வெளியில் இருந்து பார்க்கும் போது, நாரயணன் மகிழ்ந்து தான் போனார். இவ்வளவு பெரிய ஆபிசிலயே தன் மகன் வேலை செய்கிறான். அப்போது அதை அவர் கொஞ்சம் பெறுமையாக கூட உணர்ந்தார்.

ஆனால் ஆபிசில் வரவேற்ப்பு அறையில் அமர்ந்து இருந்த போது மிக அழகோடு, கூடவே மிடுக்கும் சேர்ந்த ஒரு பெண் அந்த வரவேற்ப்பு பெண்ணிடம் ஏதோ பேசினாள்.

அந்த பெண் தங்களை காட்டி ஏதோ சொல்ல. தங்கள் பக்கம் பார்வையை செலுத்திய அந்த பெண் எங்களை கூர்மையுடம் நோக்கினாள்.

அந்த நோக்கலில் ஏதோ ஆராயும் தன்மை இருந்ததோ…?அப்போதே அந்த பெரியவருக்கு அது தான் தோன்றியது.

அதுவும் தன் மகள், மருமகள் பக்கம் அவள் தன் பார்வையை செலுத்தும் போது இன்னும் கூர்மை பெற்றது போல் தான் அந்த பெரியவருக்கு தோன்றியது.

பின் தங்களை நோக்கி வந்தவள்… “நீங்க சந்துருவோட பேமலிங்கலா…? கேள்வி என்னவோ தன்னை நோக்கி இருந்தாலும், மீண்டும் மீண்டும் அந்த பெண்ணின் கண் தன் மகள், மருமகள் மீதே தான் இருந்தது.

அப்போது நாரயணன் அதை பெரியதாய் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு பெண் பெண்ணை தானே ஆராய்ச்சி பார்வை பார்க்கிறார் என்று நினைத்து விட்டார்.

பின் அந்த பெண் தான்… “அந்த கம்பெனியின் முதலாளியின் பெண். தன் பெயர் ஜெய்சக்தி.” என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பின், தான் தன் குடும்பத்தை அறிமுகப்படுத்த வில்லை என்றால் நன்றாக இருக்காது என்று கருதி தான்…

“நான் சந்திரசேகரின் அப்பா. இவள் என் மகள். இவர் என் மருமகன்.” என்று தன் அறிமுகப்படலாம் முழுமை பெறும் முன்…

“அ.ப்போ இவங்...கலா சந்துருவோட மனைவி.” கேட்ட அப்பெண்ணின் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி.

அதிர்ச்சியோடு தன் மருமகள் புனிதாவை அப்பெண் பார்த்த பார்வை. ஏதோ மலம், எச்சலை பார்த்தால் பார்போமே அந்த பார்வையை தான் தன் மருமகள் மீது அப்பெண் செலுத்தினாள்.

அந்த பார்வை தன் மருமகளுக்கும் தெரிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். சாதரணமாகவே புனிதா மிக ஒல்லியாக தான் இருப்பாள். காட்டன் புடவையில் கம்பத்தில் இருந்து சென்னை வரை பேருந்தில் வந்ததால் சேலை கசங்கி இன்னும் உடம்போடு ஒட்டிக் கொண்டதால், புனிதா இன்னும் ஒல்லியாக தான் தெரிந்தாள்.

அழகோடு கம்பீரமும் சேர தன் வயதை ஒற்ற பெண் தன்னை அந்த பார்வை பார்க்கவும், தன்னை தன் தமையன் பின் இன்னும் ஒன்டிக் கொண்டு தன்னை மறைத்தார் போல் நின்றுக் கொண்டாள்.

அப்போது சந்திரசேகரும் வர… “என்ன சந்துரு இவங்கலா உங்க மனைவி…?” கேட்ட குரலில் கேலியோடு அவள் தன் மகனை பார்த்த அந்த பார்வையில் ஏதோ ஒரு உள்ளர்த்தம் இருப்பது போல் அனுபவம் வாய்ந்த அந்த பெரியவருக்கு அப்போதே தெரிந்து விட்டது.

ஜெய்சக்தி அந்த இடத்தை விட்டு போகும் வரை பல்லை கடித்துக் கொண்டு இருந்த தன் மகன் அப்பெண் சென்று விட்டதும்…

“இப்போ எதுக்கு இங்கே வந்த…? என் மானத்தை வாங்கவா….?உயிரை வாங்கவா…?” சந்திர சேகர் புனிதாவிடன் எரிந்து விழுந்தான்.

“அவளை ஏன்டா திட்டுற….?நான் தான் கூட்டிட்டு வந்தேன்.” தன் மகனை அடக்கியவர் மறந்தும் ஜெய்சக்தி பற்றி தன் மகனிடம் எதுவும் பேசவில்லை.

ஆனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ…?அவ்வளவு சீக்கிரம் தன் மகனை தங்களோடு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார்.

ஆனால் அவர் தன் மனதோடு எடுத்த முடிவை செயலாற்றும் முன், அனைத்தும் தன்னை மீறி நடந்து முடிந்து விட்டது.

நாரயணன் தன் பழைய நினைவுகளில் மூழ்கி இருந்ததோடு, புதியதாய் தற்போது தன் மனது அலைபாய்வதற்க்கு காரணம் என்னவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் வேளயில் அதற்க்கு காரணமானவனோ….


தன் முன் இருந்த ஆளுயர கண்ணாடி முன் தன் கோட்டின் கைய் பட்டனை கழட்டும் போது தான் கோர்ட்டுக்கு உள் அணிந்த இளநீல சட்டையில் மேல் பட்டனுக்கு மிக அருகில் ஏதோ சிவப்பாய் திட்டு. என்ன இது….? என்று யோசித்துக் கொண்டே வலது கை கொண்டு, இடது கை கோட் பட்டனை அவிழ்த்தவன், இடது கையை வலது கோட் பட்டன் அருகில் கொண்டு சென்ற போது தான் மின்னலாய் வேணி தன் மார்பில் சாய்ந்தது நினைவில் வந்து போனது.

கோட் பட்டனை கழட்ட மறந்தவனாய் அந்த கரையை மெல்ல தடவலானான்.(கரை நல்லது தானே….)

பின் அவளுக்கும் அவனுக்கும் நடந்த நிகழ்வை நினைக்கும் போது, உதயேந்திரனின் முகத்தில் மகிழ்வோடு, சிறு வேதனையும் வந்து சென்றது.

“என்னை அப்படி கூப்பிடாதிங்க.” என்று சொல்லிக் கொண்டே தன் மார்பில் சாய்ந்ததும், உதயேந்திரனுக்கு முதலில் அதிர்ச்சி தான் ஏற்பட்டது.

இப்போது நான் அணைக்கவா….?விலக்கவா…? இந்த யோசனையின் முடிவு அவளை அணைத்துக் கொள் என்று சொல்ல. அணைத்துக் கொண்டான்.

“சரி நான் அப்படி கூப்பிடல...சரியா…?”அவள் வேதனை குறைந்தால் போதும் என்று தான் உதயேந்திரன் அவ்வாறு சொன்னான்.

அவளை மனதில் நினைத்த நாள் முதலாய், அவள் நினைவு எழும் போது எல்லாம் கிருஷ்ணா என்று தான் நினைப்பான். அனைவரும் அவளை வேணி என்று கூப்பிடும் போது, தன் அழைப்பு தனித்து தானே இருக்க வேண்டும்.

ஆனால் தன் அழைப்பு அவளை முன்னே அவளை அழைத்த அழைப்பு. அதுவும் இப்போது அந்த அழைப்பு அவள் மனதை காயப்படுத்தும் என்று தெரிந்ததும், அவளை சமாதான படுத்த முயன்றான்.

தன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு இருந்தவள், நிமிர்ந்து தன் உதட்டை பிதிக்கிய வாறு… “அவங்க ஏன்...அப்படி செஞ்சாங்க…?” கிருஷ்ணவேணி கேட்ட கேள்வி சத்தியமாக உதயேந்திரனுக்கு புரியவில்லை.

ஆனால் அவள் அவ்வாறு கேட்கும் போது அவள் முகத்தில் காணப்பட்ட அளவுக்கு மீறிய வேதனையை பார்க்கும் போது அவள் சொன்ன செஞ்சவங்களை ஒரு வழி செய்ய வேண்டும் என்று தான் அவனுக்கு தோன்றியது.

“யார் என்ன செஞ்சது…?” என்று உதயேந்திரன் கேட்கும் போது தான் அவன் மூளையில் மின்னல் வெட்டாய் தன் குடும்பத்தை தவிர வேறு யார் இவளின் இந்த வேதனைக்கு காரணமாய் இருக்க போகிறார்கள் என்பதே….

அதற்க்கு ஏற்றார் போல்… “உங்க அக்கா அழகா...படிச்சி… பணத்தோடு தானே இருந்தாங்க. அவங்க நினச்சி இருந்தா அவங்கல கட்டிக்க போட்டி போட்டுட்டு கட்டிக்க வரிசை கட்டி நின்னுட்டு இருந்து இருப்பாங்கலே… என் அப்பா தான் அவங்க கண்ணுக்கு தெரிஞ்சாங்கலா…?”

இப்படி கேட்டவளிடம் அவன் என்ன என்று பதில் சொல்லுவான். ஆனால் அவள் வேதனையை போக்க வேண்டும். எப்படியாவது… என்று நினைத்துக் கொண்டே குனிந்த வாக்கில் அவள் முகத்தை பார்த்தான்.

அவளின் உதடு விரிந்த வாக்கில் இருந்ததை பார்த்து என்ன தோன்றியதோ….அவள் உதட்டின் மீது தன் உதட்டை அவள் நினைவோடு இருக்கும் போது பதித்து விட்டான்.

அவனுக்கு இதழ் முத்தம் புதியது கிடையாது. ஆனால் காமம் இல்லாது, காதலோடு தன் காதலியின் மனவேதனையை போக்கும் பொருட்டு கொடுக்கும் முத்தம் அவனுக்கு புதியது.

அந்த முத்தம் அவனுக்கு இது வரை இல்லாத ஒரு உணர்வை கொடுத்தது. இதழ் முத்தம் பழகிய அவனுக்கு புதிய உணர்வு விளைவித்தது என்றால்… முத்தத்தில் அறிச்சுவடி கூட தெரியாத வேணிக்கு அந்த முத்தம் எந்த விதமான உணர்வை ஏற்படுத்தி இருக்கும்.




















 
Top