Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kambathu Ponnu....9

  • Thread Author
அத்தியாயம்….9

பவித்ரன் தனி வீடு பார்க்க அவசியம் இல்லாது ராஜசேகர் போன் செய்து… “ அண்ணா நகரில் வேணி பெயரில் சந்துரு ஒரு பங்களா கட்டி இருக்கான். நீ ஏன் வீட்டுக்கு அலையிற….?” என்று கேட்டதும்,

“ என்ன என்னை வேவு பாக்குறிங்கலா….?” பவித்ரனின் குரல் கோபத்தில் இருந்தது.

“ அய்யோ அப்படி எல்லாம் இல்லை பவித்ரன். நீ வீடு பார்க்க சொன்ன ப்ரோக்கர் தான், அந்த இடத்தை சந்துருக்கு கை காட்டி விட்டவன். அது தான் என் கிட்ட நேரா வந்து சொல்லிட்டான்.” பொறுமையுடன் பவிதரனுக்கு விளக்கி சொன்னதும்,

“ம்.” என்ற ஒத்த வார்த்தையே பதிலாய் பவித்ரன் அளித்தான்.

இவன் கிட்ட இருந்து வார்த்தைய பிடுக்குறத்துள்ள, மனதில் சலித்துக் கொண்டாலும், வெளியில்… “ அப்போ அந்த பங்களாவுக்கே கூடி போயிடுறிங்கலா…?” ஆர்வத்துடன் ராஜசேகர் கேட்டார்.

“ இதை வேணி தான் டிசைட் செய்யனும்.” என்று சொல்லி போனை வைத்த பவித்ரனின் மனதில் அங்கு போனால் தான் என்ன…? புதியதாய் ஒரு எண்ணம் அவன் மனதில்.

“ என்னால அங்கு எல்லாம் வர முடியாது பவி.” அந்த வீட்டுக்கே போகலாம் என்று வேணியிடம் பவித்ரன் சொன்னதும், வேணி திட்ட வட்டமாய் மறுத்து விட்டாள்.

“ ஏன் வர மாட்டேங்குற…?” பவித்ரன் இப்படி கேட்டதும்,எதுவும் சொல்லாது அமைதி காத்தவளை தன் பக்கம் திருப்பி, திரும்பவும் அதே கேள்வியை கேட்டதும்,

“ தெரியாதவங்களுக்கு சொல்லலாம். காரணம் தெரிந்தே கேட்குறவங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியல் இல்ல பவி.”

“அது தான் ஏன்னு கேட்குறேன்.”

“பவி.” பல்லை கட்டித்துக் கொண்டு தன் கோபத்தை அடக்கியவளாய் அவன் பெயரை கடித்து துப்பினாள் வேணி.

“ இதோ பார் வேணி. இப்போ நமக்கு இருக்க கூடாதுல்ல முதன்மையானது இந்த வீராப்பு. காரியம் பெருசா…? வீரியம் பெருசான்னா…? இப்போதைக்கு நமக்கு காரியம் தான் பெருசு.” என்று சொல்லிக் கொண்டு வந்த பவித்ரனை முழுமையாக பேச விடாது,

“ இப்போ நீ என்ன தான் சொல்ல வர்ற…”

“ம். இது சரியான கேள்வி.” என்று பவித்ரன் சொன்னதும்,

சின்ன வயது பழக்கத்தில் “ பதில் சொல்லு தம்பி.” என்று வேணி சொன்னதும், சிரிப்புடன் அவள் தலையில் கொட்டிய பவித்ரன்..

“ வேணி இப்போ நான் பேசுவது விளையாட்டு பேச்சு இல்ல. இந்த சேர்மேன் பதவி உனக்கு கிடைக்கும். அதால அவங்கு குடும்பத்துல குழப்பம் ஏற்படுமுன்னு நான் நினச்சேன். ஆனா அந்த உதயன்.”

அடுத்து அவன் பேச்சு பேசாது … “ அது நடக்காம போச்சு. இப்போ அந்த மீட்டிங்கில் வந்தவங்களுக்கு தான் நீ சந்திரசேகர் மகளுன்னு தெரியும். அதுவும் அவங்க யார் பக்கம் என்று இன்னும் நமக்கு முழுமையா தெரியல.

இப்போ மிஸ்டர் ராஜசேகர் சொன்ன பங்களா.. ஒரு வருடம் முன் தான் எல்லோரையும் கூட்டி கிரக்கப்பிரவேசம் செஞ்டு இருக்காங்க. அந்த எல்லோரையிலும்ல. கலெக்டர், மந்திரிகளும் அடக்கம்.”

“ பவி இப்போ நீ என்ன தான் சொல்ல வர….” பவித்ரனின் பேச்சி வேணிக்கு குழப்பத்தையே கொடுத்தது.

‘அந்த பங்களா யாரை கூப்பிட்டு கிரகப்பிரசேசம் செஞ்சு இருந்தா எனக்கு என்ன வந்தது. கலெக்டரும், மந்திரியும் மிதிச்ச பங்களா என்றதால அங்கு நான் போயிடனுமா….?’ பவித்ரனை மனதில் திட்டி தீர்த்தாள் வேணி.

“ முதல்ல என்னை முழுசா பேச விடு. சின்ன போதுல இருந்தே உனக்கு இதே தான், மத்தவங்கல முழுசா பேச விடுறதே இல்ல. மத்தவங்கல பேச விட்டா தான் அவங்க மனச புரிஞ்சு நாம நடந்துக்க முடியும் என்று உனக்கு நான் எத்தன தடவை சொல்லி இருக்கேன்.” வேணி சிறு வயது முதலே இதே தான் பொறுமைக்கும் அவளுக்கும் காத தூரம்.

“ அதே தான் உனக்கும் நான் சொல்றேன். சின்ன வயசுல இருந்து சொல்ல வேண்டியதை ஷாட்டன் ஸ்வீட்டா சொல்லி முடின்னு. பல்லு போன கிழவன் மாதிரி சும்மா ரம்பம் போட்டு அறுக்காதேன்னு. நீ கேட்குறியா…?” பவித்ரனை ஒழுங்கு காட்டிய வாறே அவனை எதிர்த்து பேசினாள்.

“ வேணி…” அடுத்து பவித்ரன் என்ன சொல்லி இருப்பானோ…

“ சரி. சரி. நான் இடையில புகுல. நீ என்ன சொல்லனுமோ சொல்லு. நான் கேட்டுக்குறேன்.” என்று சொன்னவளின் குரலில் நக்கல் வடிந்து ஒடியனவோ..

வேணி எப்போதும் இப்படி தான். பவித்ரன் சொல்லே அவளுக்கு வேத வாக்கு. இருந்தும் அப்போது அப்போது இது போல் சிறு வயதில் அவனை வம்புக்கு இழுப்பது போல் இழுக்கா விட்டால் அந்த நாள் அவளுக்கு வெறுமையாக போனது போலவே இருக்கும்.

“ நான் என்ன சொல்றேன்னா… உன் மனசுக்குள்ள என்னை திட்டினியே அந்த பங்களாவுக்குள்ள கலெக்கட்டரும், மந்திரியும் போனா நானும் போகனுமான்னு….?” என்று சொல்லிக் கொண்டே பவித்ரன் வேணியை பார்த்தான்.

‘நம்ம மனசுக்குள்ள நினைக்கிறதா நினச்சிட்டு சத்தமா சொல்லிட்டோமோ…” என்று மனதில் நினைத்துக் கொண்டே பல்லை கடித்துக் கொண்டவளின் தலையில் கொட்டி…

“ நீ மனசுல தான் நினச்சே. ஆனா நீ எந்த நேரத்துக்கு என்ன நினைப்பேன்னு எனக்கு தானே தெரியும்.” இப்போதும் அவள் மனதில் என்ன நினைத்து இருப்பாள் என்று சரியாக யூகித்தவனாய் சொல்லி விட்டான்.

பவித்ரனின் தோள் மீது கைய் போட்டுக் கொண்டு…. “ நண்பேன்டா….” என்று சந்தானம் மாடுலேஷனில் சொல்லிய வேணியின் பேச்சில், பவித்ரனுக்கு சிரிப்பு வந்தாலும், அதை அடக்கியவனாய்..

“ வேணி பீ சிரியஸ்.”

“சரி சரி.” என்று சொல்லி விட்டு சமத்து பிள்ளை போல் கை கட்டி அவன் முகத்தை பார்த்திருந்தாள்.

இவளிடம் அவள் கை கட்டளை பத்தி ஏதாவது பேசினால், நான் சொல்ல வேண்டியதை சொல்ல விடாது செய்து விடுவாள் என்று நேராக விசத்தை சொல்ல ஆராம்பித்தான் பவித்ரன்…. “ அந்த பங்களா மிஸ்டர் சந்திரசேகருடையது என்று எல்லோருக்கும் தெரியும். அதுல நீ இருந்தா…

“ யார்…? இந்த பெண்….? சந்திரசேகர் பங்களாவுல இருக்கு. எல்லோரும் மனதுல நினைக்கலாம். ஒரு சிலர் உன் கிட்டயோ..இல்ல மிஸ்டர் பரமேஸ்வரர் கிட்டயோ நேரிடையாக கூட கேட்கலாம். உன் கிட்ட கேட்டா சொல்லு. அப்பா பங்களாவிலே பொண்ணு இருப்பது தானே முறைன்னு. அவங்க கிட்ட கேட்குறதுக்கு அவங்க என்ன பதில் சொல்றாங்கன்னு பார்க்கலாம்.”

கை கட்டி இருந்தவளின் கை தன்னால் தளர… “ எல்லாம் சரி. அது என்ன அப்படி பட்ட பங்களா எல்லோர் பார்வையும் அது மேல இருக்க.” என்று கேட்டவளின் குரலில் இப்போது சிரியசின் தன்மை வந்து இருந்தது.

“ அந்த பங்களா கட்டி முடித்ததும், மிஸ்டர் பரமேஸ்வரர் , மேடம் ஜெய்சக்தி..இந்த பங்களாவுக்கே குடிபோயிடலாமுன்னு கேட்டு இருக்காங்க.

அப்புறம் சினிமா ஷூட்டிங்குக்கு வாடகைக்கு அந்த பங்களாவை கேட்டு இருக்காங்க. அப்போன்னா பார்த்துக்க அது எவ்வளவு அழகான பங்களா என்று.”

“ஓ…” என்று ராகம் இழுத்தவள் யோசனையுடன்…

“ அந்த பங்களாவை பத்தின இத்தனை விவரம் உனக்கு தெரிஞ்சு இருக்கு.”

“ அந்த பங்களாவை பத்தி மட்டும் இல்ல. மிஸ்டர் சந்திரசேகர் உனக்கு எழுதி வெச்ச சொத்து பத்தின அனைத்து விவரமும் எனக்கு தெரியும். அது மட்டும் இல்லாம சந்திரசேகர் வாங்குன சொத்து, அதுல உனக்கு எவ்வளவு எழுதி வெச்சி இருக்கார். அந்த குடும்பத்துக்கு எவ்வளவு போயி இருக்கு. ஹால் டிடையல்ஸ் ஐ நோ.” என்பது போல் சொல்லி புன்னகை புரிந்தவனின் கை பற்றியவள்.

“ எல்லாம் சரியா நடக்குமா பவி. எனக்கு இந்த சொத்து முக்கியம் இல்ல பவி. அம்மா. அம்மா தான் சட்டப்படி சந்திரசேகர் மனைவி. ஜெய்சக்தி இல்லீகல் வைப். எல்லோர் முன்னாடியும் நான் சொல்லனும் பவி.

அது வரை அந்த பெரிய மனுஷர் உயிரோட இருக்கனும். அவர் கிட்டயும் கேட்க கேள்வி என் கிட்ட நிறைய இருக்கு பவி .” மனதில் அவ்வளவு வலி இருந்தாலும், அதை அடக்கியவாய் பேசியவளின் பேச்சில் பவித்ரன் மனதில் பாரம் ஏறினாலும், நாம் தோய்ந்து போனால் இவளும் தோய்ந்து போவாள்..

வேணியை பற்றி நன்கு அறிந்தவனாய்… “ நல்லவங்களுக்கு தான் சீக்கிரம் சாவு வரும். இனி தானே அவர் பாக்க வேண்டியது நிறைய இருக்கு. அந்த பெரிய மனுஷருக்கு ” என்று சொல்லி விட்டு…

“ என்ன சொல்ற…?” கண் சிமிட்ட..

“ கண்டிப்பா. அவர் நிறைய பார்க்கனும்.” வேணி ஏதோ மனதில் நினைத்தவளாய் சொன்னாள்.

“ என்ன அங்க கடைய பரப்பிடலாமா…?” அந்த பங்களாவுக்கு குடி போவதை தான் பவித்ரன் இந்த லட்சணத்தில் சொன்னான்.

“ம்...ம்..ம்.” என்று அதற்க்கு வேணி பலமாக தலையாட்டினாள்.

***************************************************************************

“ அப்பா என்னப்பா சும்மா இருக்கிங்க. ஊரு விட்டு ஊரு வந்த ஒரு சின்ன பொண்ணு நம்ம கண்ணுல விரல விட்டு ஆட்டிட்டு இருக்கா...இந்த ஊருலேயே பேரும், புகழுமா இருக்க நாம அதை கை கட்டி பார்த்துட்டு இருக்கனும்மா…?”

தான் ஆசை பட்ட அந்த பங்களாவை, தன் கணவர் வாங்கும் போதே அந்த பெண் பெயரில் தான் வாங்கி இருக்கிறார். இது இரண்டு நாள் முன் தான் ஜெய்சக்திக்கு தெரிய வந்தது. அதிலேயே எதிலேயோ தோற்று போன உணர்வு ஜெய்சக்திக்கு.

தாங்கள் இருக்கும் பங்களாவுக்கு, அடுத்த தெருவிலேயே நிலம் வாங்கி அந்த பங்களாவை சந்திரசேகர் கட்டி கொண்டு இருக்கும் போது எல்லாம் ஜெய்சக்திக்கு அதன் மீது அவ்வளவு ஆசை எல்லாம் இல்லை. சொல்ல போனால்… இன்னும் ஒரு பங்களா என்ற எண்ணம் தான்.

முக்கால் வாசி முடிந்த நிலையில் தன் அண்ணி வாணி வந்து… “ என்ன இருந்தாலும் அண்ணாவின் ரசனையே ரசனை தான். அவர் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவருன்னு எனக்கு தெரியும். ஆனால் அது எந்த அளவுக்கு என்று அந்த பங்களா பார்த்த பிறகு தான் எனக்கே தெரியும்.”

அந்த பங்களாவை பத்தி அண்ணி புகழ்ந்து தள்ளியதும் அடுத்த நாளே அங்கு போய் பார்த்த ஜெய்சக்தி உண்மையில் பிரமித்து தான் போனார். வாங்கும் போதே அங்கு வளர்ந்த மரம் இருந்து இருந்தது.. அதை முழுவதுமாய் வெட்டாது பாதி வெட்டிய நிலையில் அதன் போல் குடில் போல் பங்களாவின் பின் பக்கம் இது போல் நான்கு இடத்தில் குடில் அமைத்து இருந்தது என்றால்,

அந்த பங்களாவின் முன் பக்கம் அதே போல் மரத்தை முக்கால் வாசி அறுத்த நிலையில், மேஜை, அமரும் இருக்கை என்று ஒரு இயற்க்கை டையினிங் டேபுளை வடிவமைத்து இருந்தார் சந்திரசேகர்.

கிரகப்பிரசவத்துக்கு வந்தவர்கள் அனைவரும் ஒன்று போல்… “ என்ன மிஸ்டர் சந்திரசேகர் மனைவிக்கான தாஜ்மாஹாலா…? என்று கேட்டதற்க்கு அன்று அமுக்கமாய் புன்னகைத்த கணவனின் முகம் வந்து போக…

‘ அப்போ அவர் என்னுடன் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்….?’ எதிலோ தோற்று போன உணர்வு ஜெய்சக்திக்கு.

தன் கணவர் இறந்த சோகத்தை விட, ஜெய்சக்திக்கு அடுத்து அடுத்து ஷேர், சொத்து, தான் ஆசைப்பட்ட பங்களா அனைத்தும் அந்த பெண்ணின் பேருக்கு. அதுவும் தன்னுடன் இருந்துக் கொண்டே. எப்படி பட்ட துரோகம்.

இத்தனை நாள் மனதில் நினைத்ததை தன் தந்தையிடம் வெடித்துக் கொண்டு இருக்கும் போது….அங்கு வந்த உதயேந்திரன்…

“ இது அடுத்தவங்க புருஷனுக்கு ஆசை படும் போதே நினைத்து பார்த்து இருக்க வேண்டும்.”

இத்தனை நாள் உதயேந்திரன் மனதில் நினைத்தது தான். ஏற்கனவே கணவன் பறிகொடுத்த துக்கத்தில் இருக்கிறாள். மேலும் மேலும் அவர் செய்த செயலின் விளைவால் மனதில் நொந்து இருப்பவளை மேலும் நோக அடிக்க கூடாது என்று தான் இத்தனை நாள் அமைதி காத்தது.

அந்த கம்பத்து பொண்ணு சென்னை வரக்கூடாது. வந்தாலும் விரட்டி அடித்து விட வேண்டு என்று அவன் செய்த செயல் அனைத்தும், தங்கள் குடும்பத்துக்கு என்று ஒரு கவுரவம் இருக்கிறது.

அதோடு இதன் விளைவு. தன் அக்கா பிள்ளைகளை தாக்க கூடாது. டீன் ஏஜ் பருவத்தில் இது போல் பிரச்சனை ஏற்பட்டால், அதன் பின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை அறிந்தவனாய் தான் வேணியை எதிர்த்தது.

இன்று அக்கா பேசிய தன்னுடம் வாழும் போதே அந்த பெண்ணுக்கு சொத்து கொடுத்து தனக்கு துரோகம் செய்து விட்டார் என்ற அந்த புலம்பலில்..

“யாருக்கு அவர் உண்மையா இருந்து இருக்கார். முதல் மனைவி கூட இருந்து உன்னை கல்யாணம் செய்து அவங்களுக்கு துரோகம் செய்து இருக்கார். அதே போல் உன்னுடன் வாழ்ந்துக் கொண்டு அந்த பெண்ணுக்கு அனைத்தும் செய்து தன் அக்கா பிள்ளைகள் இருவருக்கும் அவர் துரோகம் செய்து இருக்கார்.

துரோகம் என்னவோ அவருக்கு புதியது போல் இவள் என்ன புலம்பிக் கொண்டு இருக்கிறாள். அந்த கோபத்தில் தன் அக்காவை பார்த்து கத்தியது..

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த பரமேஸ்வரர்…” உதய் என்ன இது புது பழக்கம்…?யாரோக்கா உன் அக்காவை இப்படி பேசுவியா…?”

“ஆமாப்பா புது பழக்கம் தான். நம்ம குடும்பத்துல அடுத்தவங்க புருஷனை கட்டி இருக்காங்கன்னு எனக்கு இப்போ புதுசா தானே தெரிஞ்சது. அதான் புது புது பழக்கம் எல்லாம் எனக்கு வந்து இருக்கு.”

கஜெந்திரன் தான் தன் தந்தைக்கு அடங்கி நடந்துக் கொள்வான். உதயேந்திரன் எப்போதும் தன் மனதில் இருப்பதை யார் என்ன நினைப்பார்கள் என்று எல்லாம் பார்க்க மாட்டான். மனதில் இருப்பதை அப்படியே கொட்டி விடுவான். பின் அதன் பின் விளைவுகளுக்கும் அவன் பயப்பட மாட்டான்.

இவன் பேசிய இந்த பேச்சின் பின் விளைவாய்… “ புதுசா…? எது புதுசு….? ம் எது புதுசுன்னு கேட்குறேன்…? ஜெர்மனியில நீ செஞ்சா இங்கு இருக்குறவங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு நினச்சிட்டியா….? இரண்டு ப்ரேக்கப் செய்தது. மூனாவது புதுசா பிக்கப் செய்தது. எல்லாம் எனக்கு தெரியும்.” என்று சொன்ன ஜெய்சக்தி அப்போது அங்கு வந்த தன் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

அவர்கள் எதிரில் இதெல்லாம் பேச வேண்டுமா என்பதையும் பொருட்படுத்தாது… “ பிக்கப் ப்ரேக்கப் என்று நான் சொன்னது. லவ் பண்ணி பெயிலியர் இல்ல. அது எல்லாம் வேறு மாதிரி. அதை உங்க மகனிடமே கேளுங்க.” கடைசியாக தன் பஞ்சாயத்தை தன் தந்தையிடம் முடித்து வைத்தாள் ஜெய்சக்தி.
































 
Top