அத்தியாம்…9
இரவு முழுவதும் உதயேந்திரன் பொட்டு தூக்கம் இல்லாது விழித்திருந்தான். ஒரு பக்கம் மகிழ்ச்சியில் உறக்கம் வரவில்லை. தன் மீது பிடிப்பு இல்லா விட்டால் கண்டிப்பாக வேணி தன் மார்பு சாய்ந்து இருக்க மாட்டாள்.
அதுவும் அவளை முத்த மிட்ட போது முதலில் அவள் கண்ணில் அதிர்ச்சி ஏற்ப்பட்டதே ஒழிய அறுவெருப்பையோ...கோபத்தையோ… அவள் கண்கள் காட்டவில்லை.
விருப்பம் இல்லை என்றால் தன்னை உதற ஒரு நிமிடம் ஆகாது. கண்டிப்பாக அந்த முத்தத்தை நான் அவளுக்கு வலுக்காட்டாயமாக கொடுக்கவில்லை.
அவள் சம்மதம் கேட்காது கொடுத்தேன் தான். ஆனால் அவள் மேல் என் முத்தத்தை திணிக்கவில்லை.
நடந்த நிகழ்வை மனக்கண்ணில் கொண்டு வந்து ஆராய்ந்ததில் அவன் மனது சொன்னது இது தான். அவளுக்கும் என்னை பிடித்து தான் இருக்கிறது. தன்னோடு இருக்கும் உறவு முறையை வைத்து அவள் மனது என்னை ஏற்க மறுக்கிறது.
தனக்கும் அந்த பயம் முதலில் இருந்தது தானே…இக்காதல் சாத்தியமா…? சாத்தியம் என்றால் எந்த அளவு இந்த காதல் ஜெயிக்க சாத்திய கூறுகள் இருக்கிறது. இப்படி நினைத்து தானே தன்னை முதலில் அடக்கிக் கொண்டது.
ஆனால் மனது எதை ஒன்றை நினையாதே என்று நம் அறிவு நமக்கு எடுத்துரைக்கிறதோ மனம் அதையே நினைப்பது தானே மனிதனின் மனதின் குணம்.
நினையாதே இது சாத்தியம் இல்லை. இந்த காதலால் இரு குடும்பத்தின் பிரச்சனையோடு, அவன் மனதில் முதன்மையாய் நின்றது வேணி இதனால் காயப்பட்டு போவாள் என்பதே…
இருந்தும் தன் மனம் அவள் பக்கம் செல்வதை தடுக்க முடியாது தடுமாறி இருந்தவனின் மனது அவளுக்கும் தன் மீது விருப்பம் இருக்கிறது என்பது தெரிந்ததும்…
அவள் கை பிடிக்க என்ன என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தவனுக்கு, முதன்மையாய் மனதில் நின்றவர் ராஜசேகர் தான்.
அவர் தான் மாமாவின் சிறிவயது முதலே தோழர் மட்டும் அல்லாது, அக்குடும்பத்தின் நண்பரும் ஆவார். அதோடு வேணி தன்னிடம் கேட்ட உங்க அக்கா விருப்ப பட்டால் யார் வேணா கிடைத்து இருப்பாங்க… என் அப்பா தான் அவர் கண்ணில் பட்டாரா…?
இதை அவனும் நினைத்தது தானே…அப்படி என்ன தன் அக்காவுக்கு மாமாவின் மீது மயக்கம்…? திருமணம் ஆனவர். ஒரு குழந்தைக்கு தந்தை என்று தெரிந்தும் அவரையே திருமணம் செய்து உள்ளார் என்றால்…
தன் குழப்பத்திற்க்கு ஆனா விடை ராஜசேகரிடம் தான் கிடைக்கும் என்று இதோ காலையிலேயே ராஜசேகரை தேடி அவர் வீட்டுக்கே வந்து விட்டான்.
“சார் உங்கல பார்க்க உதயேந்திரன்னு ஒருத்தர் வந்து இருக்கார்.” என்று வேலையாள் சொல்லும் போது ராஜசேகர் அப்போது தான் சாப்பிடும் இருக்கையில் அமர்ந்து, வெண்பொங்கல் மீது கை வைத்து இருந்தார்.
காயத்ரியோ பொங்கலை கொஸ்த்து மீது முக்கி பொங்கலையும், கொஸ்த்தையும் கலந்து அடித்து கொண்டு இருந்தாள். பொங்கல் மீது கை வைத்தவர் சூட்டு தாங்காது கை உதறினாரா…? இல்லை உதயேந்திரனின் பெயரை கேட்டு கை உதறினரா….? சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் உதயேந்திரன் பெயர் கேட்ட உடன் சட்டென்று கை உதறி இருக்கையில் இருந்து எழுந்துக் கொண்டு வரவேற்ப்பு பகுதிக்கு விரைந்தார்.
கூடவே கை கூட கழுவாது தன் மகள் பின் செல்வதை பார்த்த ராஜசேகரின் மனைவி. “ உங்க அப்பாவ தானேடி பாக்க வந்து இருக்கார். நீ ஏன்டி சாப்பிட்டு முடிக்காம அவர் பின்னாடி போற…?” என்ற தன் மகள் காயத்ரியை கண்டித்தார்.
அவளோ …. “பொங்கல் ரொம்ப கம்மியா இருக்கு. அதான் நீங்க சாப்பிடுவிங்கன்னு வெச்சேன்.” தன் மகளின் கூற்றை கேட்ட அந்த தாய்…
சாப்பிடும் மேடை மீது இருக்கும் அவள் தட்டை பார்த்ததும் அடி வயிற்றில் இருந்து ஒரு ஓக்காலம் எழும்பி வந்து நின்றது. திரும்பவும் அது போல் வராது இருக்க அவள் தட்டு பக்கம் இருந்து பார்வையை சட்டென்று விளக்கி கொண்டவர்…
“ஏன்டி அத நம்ம ஜீம்மிக்கு கூட போட முடியாத அளவுக்கு அப்படி நொலப்பி வெச்சி இருக்க. நீ சாப்பிடாட்டியும் பரவாயில்ல. உன் தட்ட ஷிங்கிலயாவது போட்டுட்டு போ…”
“இப்போ இருக்க அம்மா எல்லாம் ஹமாம் சோப்புல வர அம்மா போல அன்பானவங்க இல்ல.” என்று மெல்ல முணு முணுத்துக் கொண்டே அம்மா சொன்னது போல தன் தட்டை ஷிங்கில் போடும் போது தன் தட்டை பார்த்த காயத்ரி…
‘இன்னும் கொஞ்சம் டீசண்டா சாப்பிட்டு இருக்கலாமோ…’ என்று நினைத்துக் கொண்டே தன் தட்டை ஷிங்கில் போட்டவள் அவசர அவசரமாய் அந்த ஷிங்கிலேயே கையை கழிவிக் கொண்டவள் தன் கையில் இருக்கும் பத்து போச்சா… இல்லையா…என்று கூட பாராது தன் தந்தையை நாடி…
அப்படி சொல்ல கூடாதோ உதயேந்திரன் எதுக்கு வந்து இருக்கான் என்று அறிந்துக் கொள்ளும் ஆவாளில் தன் வீட்டு வரவேற்ப்பு அறைக்கு ஓடியவளின் காதில்…
“அவர பாக்க தானே வந்து இருக்காங்க,. நீ ஏன்டி இப்படி ஓடுற…?” என்று கேட்கும் தாயை திரும்பி பார்த்தவள்.
“எதுக்கு இப்படி என் கிட்ட குறுக்கு விசாரணை நடத்திட்டு இருக்கிங்க…?” தாய் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வது யோசிக்க அவகாசம் தேவையில்லையா…? அதனால் தன் தாயிடம் ஒரு கேள்வியை முன் வைத்தாள் காயத்ரி.
“ஆ கணவனும் வக்கீல். மகளும் வக்கீலுலே அது தான் விசாரணை செஞ்சிட்டு இருக்கேன்.” உனக்கு நான் தாய்டீ என்று அவர் தன் பேச்சால் நிருபித்தார்.
‘நல்ல வேல இவங்கல தாத்தா வக்கீலுக்கு படிக்க வைக்கல. இல்லேன்னா நாம என்பதை விட அப்பா கேசு இல்லாம வீட்ல இருந்து இருப்பார். இன்நேரம் அவருக்கு துணையா நானும் வீட்ல இருந்து இருப்பேன்.’
காயத்ரி இப்படி நினைப்பதிலும் ஒரு நியாயம் இருக்க தானே செய்கிறது. தனியாக எந்த கேசையும் காயத்ரி எடுக்கவில்லை. எடுக்கவில்லை என்பதை விட எடுக்க முயற்ச்சி செய்யவில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்.
ராஜசேகர் கூட… “என் நிழலிலேயே நிக்காதே… தனியா ப்ராக்டீஸ் செய்யறியா…” என்று கேட்டு பார்த்தார்.
அவருக்கு பதிலாய்… அவளிடம் இருந்து … “ஆலம் விழுதுகள் போல் நீ இருக்க….” என்று இந்த பாடல் தான் ஒலிக்கும்.
“சரி அது தான் வேண்டாம் கம்பெனியின் கேசிலாவது நீ பாதி எடுத்துக்கலாம் இல்லையா…?”
எப்படியாவது தன் மகளை தனியாக செயல் படுத்தி ஆக வேண்டும் என்று ராஜசேகர் கேட்டார்.
அதற்க்கும்… “தலை இருக்க வால் ஆட கூடாது.” தன் கையை பின் பக்கம் வைத்து ஆட்டியும் காட்டுவாள்.
தன் தலையில் அடித்துக் கொண்ட ராஜசேகர்… “ இது எல்லாம் தேறாத கேசு. நான் முன்னுக்கு வர யார் யாரு காலில் எல்லாம் விழுந்தேன்.” என்று தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டு வந்தவர் தன் மனைவி பார்த்த பார்வையில் மெளனமாகி போனார்.
தன் மனைவி வாய் திறக்கவில்லை தான். ஆனால் அவள் பார்த்த அந்த பார்வை சொன்னதே…
“காலில் மட்டுமா விழுந்தாய். ஒரு குடி கெடவும் காரணமாகி போனாயே என்று.”
அடுத்த குடி கெடுத்து விட்டு இந்த உயர்வுக்கு வந்த அந்த தந்தைக்கு மகளாய் பிறந்தும், உயர வாய்ப்பு தேடி அவள் காலடியில் விழுந்தும் அதை எட்டி உதைப்பது போல் தான் அவள் செயல் பேச்சு அனைத்தும் இருக்கும்.
ராஜசேகருக்கு அசிஸ்ட்டெண்டாக வரவே வெளியில் காத்துக் கொண்டு இருக்க...தன் தந்தையை காயத்ரி ஒரு போதும் பயன் படுத்திக் கொள்ளாது தான் இது வரை இருந்தாள்.
அப்படி பட்ட மகள் இன்று தந்தைக்கு பின் ஓடவும் அந்த தாய்க்கு என்ன விசயமா இருக்கும்…? என்ற கேள்வி அவர் மண்டையை போட்டு குடைந்து கொண்டு இருந்தது.
தாயை இப்படி அல்லாட விட்ட நம் காயத்ரி… “ஹலோ என்ன காலையிலேயே நம்ம வீட்டுக்கு விஜயம்…?” இப்படி கேட்டதோடு உதயேந்திரனின் முதுகில் தட்டி விட்ட வாறே அவன் பக்கத்தில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.
இதை பார்த்த ராஜசேகருக்கு ஹார்ட் அட்டாக் வராத குறைதான். பின் என்ன…?
காலையிலேயே நம்மை தேடி ஏன் வந்து இருக்கார். கம்பெனியில் ஏதாவது பிரச்சனையா…? இல்லை வேணி சொத்து விசயத்தில் திரும்பவும் ஏதாவது பிரச்சனையா…? என்று பயந்துக் கொண்டு வந்தவர்.
உதயேந்திரனிடம்… “வேணிக்கு சேர வேண்டியதை அவர் தந்தை உயில் படி நான் சரியாக தான் செய்தேன் மிஸ்டர் உதயேந்திரன்.” என்று பட படப்பாக ராஜசேகர் சொன்னதும்.
“நான் சொத்தை பற்றி அதுவும் வேணிக்கு சேர்ந்ததை பற்றி நான் கேட்க வரல.” என்று மிக கூலாக உதயேந்திரன் சொல்ல கேட்டதும் தான், ராஜசேகர் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தார்.
பின்… “கம்பெனி ஷேரில் ஏதாவது பிரச்சனையா மிஸ்டர் உதயேந்திரன்.” என்ற தன் கேள்விக்கு பதில் அளிக்காது…
“இந்த மிஸ்டர் எல்லாம் வேண்டாமே அங்கிள் உதயன்னே கூப்பிடுங்க.”
முதன் முதலில் உதயேந்திரனின் வாயில் இருந்து தன்னை அங்கிள் என்று கூற கேட்டதற்க்கு அதிர்ச்சியாக நின்றவர் பின் அவன் சொன்ன என்னை உதயின்னே கூப்பிடுங்க என்ற பேச்சில் அவருக்கு மயக்கம் வராத நிலை தான்.
அப்படி மயக்கம் போடும் நிலையில் இருந்த ராஜசேகரை காயத்ரி தன் செயல் மூலம் அவரை ஹார்ட் ஹட்டாக் வரும் நிலைக்கு தள்ளி விட்டாள்.
காயத்ரியின் இந்த முதுகில் தட்டி விளையாடும் அளவுக்கு பழக்கம் என்றால்… அது எந்த விதமான பழக்கம்….? அதுவும் உதய் சொன்ன என்னை அங்கிள் என்றே கூப்பிடுங்க என்ற வார்த்தை. காலையிலேயே தன் வீடு தேடி வந்தது. ஒன்றும் ஒன்றும் மூன்று என்ற கணக்கு தான் அவரை போட வைத்தது.
அவர் போட்ட கணக்கு கொடுத்த பயத்தில்… “அது என்ன பெரியவங்கன்னு ஒரு மரியாதை இல்லாது முதுகில் தட்டி விளையாடுவது…?”
உதயேந்திரன் பெரிய இடம் . அதுவும் இல்லாது அவனின் ஜெர்மனி வாசத்தை பற்றியும் அறிந்து இருந்ததால் அவருக்கு கொஞ்சம் பயம். தன் மகளை எங்கே யூசன் த்ரோ போல் பயன் படுத்தி விடுவானோ… என்று.
அவர் பயத்தில் நெய்யை ஊற்றியது போல்… “பரவாயில்ல அங்கிள் நம்ம காயூ தானே...என் கிட்ட விளையாடம வேறு யாரு கிட்ட இப்படி விளையாட போறா…”
இவன் என் நெஞ்சி வெடிச்சி சாகம என்னை விட மாட்டான் போலவே...என்று பல்லை கடித்துக் கொண்டவர்.
“சரி அவள பத்தி ஏன் தேவையில்லாத பேச்சு. என்ன விசயமா என்னை தேடி வந்து இருக்கிங்க மிஸ்டர் உதயேந்திரன்.”
முதலில் எல்லாம் உதயனின் பெயரை இப்படி மிஸ்டர் உதயேந்திரன் என்று ராஜசேகர் நீட்டி முழக்கி கூப்பிடும் போது எல்லாம் அவர் மனதில் இது தான் ஓடும்.
நான் பார்த்து வளர்ந்த பையன். நான் மிஸ்டர் கூப்பிடுறேன். வேண்டாம் என்னோட பெரியவங்க நீங்க என்னை பெயர் சொல்லி மட்டும் அழத்தால் போதும் என்று சொல்லுறானா பார் என்று நினைத்தவர் இப்போது பெயர் சொல்லி கூப்பிடுங்க என்று உதயேந்திரன் அனுமதி கொடுத்த பின்னும், அப்படி கூப்பிட பயந்தவராய் வார்த்தைக்கு வார்த்தை மிஸ்டர் போட்டு அழைத்தார்.
“இது பர்சனல் நாம வெளியில் போய் பேசுவோமா அங்கிள்.”
அடகடன் காரா அந்த அங்கிள நீ விடவே மாட்டியா…? ராஜசேகர் உதயேந்திரனை மனதில் தான் இப்படி திட்டி தீர்த்தார்.
பரமேஸ்வரரின் மகனை நேரடியாக பகைத்துக் கொள்ளும் அளவுக்கு, அவருக்கு புத்தி இன்னும் மழுங்கி போய் விடவில்லை.
அதுவும் உதயேந்திரன் சொன்ன பர்சனல் என்ற வார்த்தையில் பகீர் என்றாக… “நம்மக்குள் பர்சனல் என்ன இருக்குப்பா….” பயத்தில் மிஸ்டர் போட்டு அழைக்க மறந்து போய் விட்டார்.
“ஏன் நம்மக்குள்ள என் மாமா இல்லையா…?” என்ற உதயேந்திரனின் அந்த வார்த்தை அவர் மனதில் பாலை வார்த்தது எனலாம்.
“ஆமாம் ஆமாம் உதய். சந்திரசேகர் இறந்தாலும், அவர் மகள்கள், மகன் , இருக்கும் வரை நம்மக்குள் உறவு இருக்குப்பா…” ராஜசேகர் இப்போது அந்த மிஸ்டரை தெரிந்தே தான் தவிர்த்து பேசினார்.
“அவர பத்தி தான் உங்க கிட்ட பேசனும் அங்கிள்.” என்று சொன்னவன் பின் தயங்கிய வாறு…
காயத்ரி பக்கம் தயக்கமான பார்வையை தவழ விட்ட வாறே… “மாமாவ பத்தின்னா...மாமா அக்காவை பத்தி. அதாவது எப்படி…?”
உதயேந்திரன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை நடத்தியவன் தான். இருந்தும் தன் மனதை கவர்ந்தவளின் மனமும் இதில் சம்மந்தப்பட்டு இருக்கிறது என்ற போது அதை வார்த்தையால் கூட சாதரணமாக பேச தயங்கினான்.
ராஜசேகருக்கு உதயேந்திரனின் இந்த தயக்கம் புதியதாய் பட்டது. இவன் இப்படி பம்ம மாட்டானே...என்று அவர் மனதில் நினைத்துக் கொண்டு இருக்கும் வேளயில்..
காயத்ரி… “வேணி ரொம்ப கஷ்டப்படுறாங்கலா உதி.” வேணி கஷ்டப்பட எல்லாம் இவன் கவலை பட மாட்டானே...இன்னும் கேட்டால் பரமேஸ்வரரின் மகனாய் வேணி கஷ்டப்பட வேண்டும் என்று தானே நிநைப்பான்.