Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Kangal Verkindrana-2

  • Thread Author
அத்தியாயம் – 2

ராஜீவ் அந்த வாரம் முழுவதும் மிகவும் பிசியாக இருந்தான். எதைப்பற்றியும் அதிகமாக சிந்தக்காத அளவு அவன் வேலை அமைந்தது. இல்லை அவனே அமைத்துக் கொண்டானா? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!!

மிகுந்த மன உளைச்சள்களுக்கு ஆகாமல் இருக்க அவன் கண்ட வழி இரண்டு! ஒன்று, அவன் வேலையில் மட்டுமே கண்ணாக இருந்து, அவன் உயர் அதிகாரிகளிடம் அவன் இழந்த நற்பெயரை மீண்டும் பெற முயன்றான்.

இரண்டாவது வழியே அவனுக்கு மிகவும் பிடித்த வழி… அவன் வீட்டினருடன் நேரம் செலவழிப்பது. அவன் குடும்பத்தை பத்தி நினைக்கும் போதே, அவனுக்குள் ஒரு புன்னகை மலரும்.

அவன் குடும்பத்தில், மொத்தம் ஐந்து பேர். முதலாவது அவன் தந்தை வழி தாத்தா, ஈஷ்வர். மின்சார துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கண்டிப்புப் பாதி, கலகலப்பு மீதி என இருப்பவர். அவர் மனைவி பத்து வருடங்கள் முன்பே இயற்கை எய்தினார்.

இரண்டாவதாக ராஜீவ்வின் தந்தை, ராஜேந்திரன் மற்றும் அவர் மனைவி கீதா! ராஜேந்திரன் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர். தாய் கீதா நல்ல குடும்பத்தலைவி. அவர்களுக்கு இரண்டு செல்வங்கள்!!

முதலாவது தான், ராஜீவ்! விருப்பப்பட்டு ஐ.பி.எஸ். ஆனவன். சிறு வயதில் இருந்தே போலீஸ் துறையின் மீது ஒரு ஈடுப்பாடு! குடும்பத்திலும் அவன் முன்கோபமும், பிடிவாதமும் தெரிந்ததால் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை!

கடைசியாக அந்த வீட்டினரின் உயிர் நாடி என கூட சொல்லலாம், ராஜீவ்வின் தங்கை நிஷா!! எப்பொழுதும் எல்லோரையும் உயிர்ப்போடு வைத்திருப்பவள்.

சமீபகாலமாக அதிக நேரம் வீட்டினருடன் செலவிட்டான் ராஜீவ். அவனை தேவையில்லாத நினைப்பிலிருந்து காப்பாற்றினர் அவர்கள்!!

அவர்கள் இல்லை என்றால் என்னவாகி இருப்பானோ!! அவனின் மனநிலையை சரியாக புரிந்து கொண்டு அவர்கள் செயல்ப்பட்டனர் என்பதே உண்மை!!

அதுவும் நிஷா சொல்ல வேண்டியதே இல்லை!!! அண்ணனை ரோல் மாடலாக எண்ணி மனதிற்க்குள் பூஜிப்பவள் அவனின் மனம் வாட விடுவாளா என்ன??? அதனால் ஒரு படி மேலே போய் அவனை எப்பொழுதும் வெறுப்பேற்றியும் கிண்டலடித்துமே அவனை மற்றவற்றை மறக்கச் செய்தாள்!!!

ராஜுவ்வும் படத்தில் எல்லாம் காண்பிக்கும் போலீஸ் போல் எப்பொழுதும் கண்டிப்பாக இறுக்கமாக இல்லாமல், வீட்டில் கலகலப்பாக இருப்பவன். அதனாலா இல்லை அவனுக்கும் நிஷாவுக்கும் நடுவில் இருக்கும் எட்டு வருட வித்தியாசமா தெரியவில்லை, அவன் எந்நேரமும் அவளுடன் வம்பு வளர்த்துக் கொண்டிருப்பான்.

நிஷாவும் அவனுக்கு சரிக்கு சரியாக நின்று பேசக் கூடியவளே!! அவனின் மேல் எவ்வளுக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறதோ அவ்வளவு பாசமும் உண்டு. இப்பொழுது ராஜீவ் என்ன செய்கிறான் என்று பார்ப்போமா???

அவன் தீவிர யோசனையில் இருந்தான். என்ன யோசனை? அர்ஜுனின் திருமணத்திற்க்கு போகலாமா வேண்டாமா, என்பதே அவன் யோசனை!! மிகுந்த மூளை குடைச்சளுக்கு பிறகு அவன் கண்ட விடை, போகாமல் இருப்பதே சாலச் சிறந்தது!! ஒரு வேலை, அந்த திருமணத்தை காணும் மனத்திடம் இல்லாமல் போக வேண்டாம் என முடிவேடுத்தானோ?!

ஏதோ ஒன்று!!! ஒரு முடிவேடுத்தபின் அவனால் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடிந்தது…. அதன் பின் அந்த வாரம் எந்தவித பெரிய மாற்றமும் இன்றி கழிந்தது!

அன்றைக்கு அர்ஜுனின் திருமணம் நடைப்பெறும் நாள். மனதிற்க்குள் ஏதேதோ எண்ணங்கள்!! அதனால் அவன் அன்றைக்கு வேலைக்கு செல்லவில்லை! அவன் நினைப்பது சரியா இல்லையா என கூட அவனுக்கு தெரியவில்லை.

ஆனாலும் மனது நினைப்பதை நிறுத்தி விடுமா என்ன? அது பாட்டுற்க்கு எக்ஸ்பிரஸ் வேகத்தில் சிந்தனை ஓட்டம் கொண்டது.

‘நான் நினைப்பது எல்லாம் நடக்காமல் கூட போகலாம். தேவையில்லாத வீண் மன உளைச்சலாக கூட இருக்கலாம். ஆனால், இந்த எண்ணத்தை நிறுத்த முடியவில்லையே! என்ன செய்வது???? கடவுளே, எந்த வித பிரச்சனையும் இருக்க கூடாது’- இதுவே அவன் எண்ணமாக இருந்தது.

அன்றைக்கென்று பார்த்து அவன் வீட்டினர் சொந்ததில் ஒரு கல்யாணத்திற்க்கு சென்றிருந்தனர். அவன் தனிமையை போக்க, எப்போழுதும் போல் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.

காலை மணி பதினொன்று தான் ஆகியது, அதற்க்குள் அவன் வீட்டினர் திரும்பி விட்டனர். அவர்கள் சென்ற திருமணத்தில் 9.00-10.30 தான் முகூர்த்தம். என்ன அதுக்குள்ள திரும்பிட்டாங்க, என்று நினைத்தான்.

அதே கேள்வியை, முகத்தை தொங்க போட்டுக் கொண்டு வந்த தன் தாத்தாவிடம் கேட்டான். ப்ச்ச்ச்… பதிலே இல்லை! அடுத்து அவன் அப்பாவிடம். அவர் தன் மனைவியை, கைக்காட்டினார். அம்மாவை பார்த்தால் அழுது விடு2பவர் போல இருந்தார்!!

இப்பொழுது ராஜீவ்வின் மனதிற்க்குள் பதற்றம் அழையா விருந்தாளியாக குடி ஏறியது! “தயவு செஞ்சு யாராவது அங்க என்ன நடந்ததுனு சொல்லுங்க! ஹே நிஷா! நீயாவது சொல்லு??” அவன் குரல் இப்பொழுது அதட்டியது… பின்ன ஒரு மனுஷன் எவ்ளோ தான் பொறுமையா இருக்கறது??

கடைசியில் அவன் முதலில் கேட்ட அவன் தாத்தா ஈஷ்வரே பதிலளித்தார். “என்னத்தடா சொல்ல? அங்க எல்லோருமா சேர்ந்து எவ்ளோ கேள்வி கேட்டாங்க தெரியுமா? உங்க பேரன் ஸஸ்பெண்ட் ஆகிட்டானமே? திரும்ப சேர்ந்துட்டானா?

ஸஸ்பெண்ட் ஆனப்போ நிறைய வதந்தி வந்துச்சே, அது எல்லாம் உண்மையா? இப்படி என்னென்னவோ கேட்டானுங்கடா!! என்ன பதில் சொல்லச் சொல்ற? எல்லாம் நம்ம நேரம்!” அவர் சொல்ல ஆரம்பித்த போதே, கீதா அழ ஆரம்பித்தார்.

நிஷா அவரை சமாதானப் படுத்தினாலும் அவளும் மிகுந்த கவலையில் இருந்தது, அவள் முகத்தில் இருந்தே தெரிந்தது! ராஜீவ் அப்படியே தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டான்.

அவன் அப்பா ராஜேந்திரன் தான் எல்லோரையும் சமாதானப் படுத்தவேண்டியதாக போயிற்று. “இப்போ என்ன ஆச்சுனு எல்லோரும் இப்படி உட்காருந்திருக்கிங்க! இது எல்லாம் நடக்கலாம்னு தெரிஞ்சு தான போனோம்.

அப்புறம் நாம எதுக்கு கவலைப்படனும்! நாம கவலைப்பட, கவலைப்பட தான் இன்னும் கேட்டுட்டே இருப்பாங்க. ஆமா! இப்படி தான், நடந்து போச்சு!!! இப்போ அதுக்கு என்னனு? கேட்டுப் பாரு.

எல்லாரும் பேசாம போவாங்க. அத விட்டுட்டு சும்மா இப்படி முகத்த தூக்கி வெச்சுட்டு, அழுது வடிஞ்சா சரியா போயிடுமா?” அவரின் அதட்டலில் கீதாவின் அழுகை சற்று மட்டு பட்டது.

ஆனாலும் ராஜீவ்வின் முகத்தை யாராலும் சரி படுத்த முடியவில்லை! அவனின் மனதில் அழுத்தம் கூடிக் கொண்டே போனது. என்ன நினைத்தான், என்ன நடந்தது!

எல்லோரையும் ஒரு முறை பார்வையால் வலம் வந்து, அவன் தாத்தாவிடம் நிறுத்தி, அவரிடம், “என்னை மன்னிச்சுடுங்க தாத்தா. இப்படி எதாவது பேச்சு வரும்னு தான் நான் அங்க வரலைன்னு சொன்னேன்.

என்னால உங்களுக்கு எவ்வளவு தலை குனிவு. ரொம்ம்ம்ம்ப ரொம்பபப சா…” அவனால் முடிக்க முடியவில்லை. அவனின் தாத்தா அவனின் வாயை தன் கைகளால் அடைத்தல்லவோ இருந்தார்!

“போதும்டா!! இன்னும் நீ வேற எதாவது சொல்லாத. எப்போடா நீ எங்களுக்கு இப்படி ஒரு நிலைமையை ஏற்ப்படுத்தி இருக்க? உன்னால எப்போவுமே எங்களுக்கு சந்தோஷம் தான்டா! நான் முன்னாடி சொன்ன மாதிரி எல்லாம் நம்ம கெட்ட நேரம்! இதோட எல்லாரும் இதப் பத்தி பேசுறத விட்டுட்டு, மத்த வேலைய பாருங்க!”

அவரின் அந்த குரைலை மீறும் துணிச்சல் இன்னும் யாருக்கும் வரவில்லை! அதனால் மற்ற வேலைகளை கவனிக்க சென்றனர்.

நிஷா மட்டும் தன் அண்ணனிடம் வந்து, “ஆமா, நீ இன்னிக்கு வேலைக்கு போகலையா?” என்றாள். பதிலாக ஒரு இடம் வலமாக சிறு தலையசைப்பு மட்டுமே வந்தது.

அந்த நேரத்தில் ஈஷ்வரனின் கைப்பேசி அலறியது…. அவர் அதை எடுத்துக் கொண்டு அவரின் அறைக்குள் போய் பேசினார். நிஷாவும் ஏதேதோ பேசி அவள் அண்ணனை வழிக்கு கொண்டு வந்தாள்.

முடிவில் அவனே அவள் காதைப் பிடித்து திருகவும், அவன் பேசுவதற்க்குள், இவளே “வர வர உனக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சு! அது தான, பிரதர்? என்ன முறைக்குற? அப்போ அது இல்லையா? ம்ம்ம்ம்ம்… அப்போ ‘இந்த வாய் மட்டும் இல்லனா நாய் கூட உன்னை மதிக்காது!’ கரெக்டா?”

கண்ணடித்து அவள் சொல்லவும் அவனின் கை தானாக, தளர்ந்தது! முகமும் புன்னகையை பூசியது…. அதன் பின் அந்த நாளில் எதுவும் பெருசாக நடக்கவில்லை, சாயங்காலம் வரை!

நான்கு மணிக்கு கீதா அனைவரையும் டீ குடிக்க கூப்பிட்டார். எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்த போது, வெளியே கார் சத்தம் கேட்டது.

யார் என்று பார்க்க நிஷா வெளியே சென்றாள். பார்த்தவள் பதறி அடித்து ஓடி வந்தாள், எதோ வர கூடாதவர்கள் வந்தது போல!! ஆனால், வந்திருந்தவர்கள் அந்த வீட்டினரால் வரவேற்க்கப் படவில்லை என்பதே உண்மை!!!

ஏன்னென்றால் அனைவரும் வாயடைத்து போய் இருந்தனர். சிறுது நேரம் கழித்து ஈஷ்வரே அவர்களை வரவேற்றார்! அப்படி உள்ளே வந்தவர்கள் ப்ரியங்காவும் அவள் பெற்றோர்களும்!

ப்ரியங்கா பேந்த பேந்த விழித்து, அவள் அம்மாவுடன் நடந்து வந்தாள். கீதா அவர்களை உட்கார சொன்னதும், ராஜீவ் மிகுந்த கோபத்திற்க்கு ஆளானான். அவனின் அன்னையை முறைத்தான்.

அங்கே ஒரு சங்கடமான அமைதி நிலவியது. யாருக்கும் என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை!

ராஜீவ் மட்டும் கண்களாளே ப்ரியங்காவை பஸ்பம் ஆக்கிக் கொண்டிருந்தான். அவளோ குனிந்த தலையை நிமிரவே இல்லை! அதை பார்த்து இன்னும் டென்ஷன் ஆனான்.

சிறிது நேரத்திற்க்கு பின், கீதா சமிஞ்சை செய்யவும் ராஜேந்திரனே பேச்சை ஆரம்பித்தார். வாக்குவாதத்தை அல்லது பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார் என்று சொல்ல வேண்டுமோ??

“என்ன விஷயமா வந்திருக்கீங்க?” அவரின் குரலில் ஒரு நிதானம் நிலவியது, அவருக்கே ஆச்சரியமாக இருந்தது!
ப்ரியங்காவின் அப்பா ரவிக்கு எப்படி கேட்பது என்று தெரியவில்லை! யோசித்து வந்ததெல்லாம் மறந்து போனார் போல் இருந்தது. ஐய்யோ, இது என்ன சோதனை ஆண்டவா, என்று மனதிற்க்குள் வேண்டியபடி, தைரியம் கூட்டி, “என்னோட பொண்னுக்கு…ம்ம்ம்ம்ம்..… ப்ரியங்காக்கு உங்க பையனை கல்யாணம் பண்ணி கொடுப்பீங்களா?”

எப்படியோ கேட்டு விட்டார்! ராஜீவ் வீட்டினரின் அதிர்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது, ஈஷ்வரனை தவிர! ராஜீவ் உடனே எழுந்து, “ஹலோ! எழுந்திருங்க. யார் வீட்டுக்கு வந்து என்ன பேசறீங்க? எழுந்துருங்க! போங்க வெளியே” அவனால் எவ்வளவு கத்த முடியுமோ அவ்வளவு கத்தினான்!

ரவியும், அவர் மனைவியும் மகளும் எழுந்தனர். அதுவும் ப்ரியங்காவுக்கு அவமானத்தில் உடல் கூசி குறிகிப் போயிற்று!

கீதா தான் உடனே சுதாரித்து அவனை அடக்கினார். “நீ பேசாத ராஜ்! இது தான் நான் சொல்லி குடுத்த பழக்கமா?” முகத்தை கோபமாக வைத்து பேசினார். அவன் மறுபடியும் பேசும் முன், அவர்களிடம் மன்னிப்பு கேட்டு உட்காரச் சொன்னார்.

ப்ரியங்கா அப்பொதும் ராஜீவ்வின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் முகத்தை வேறு புறமாக திருப்பவும், அவனின் தந்தையும் அவர்களை வற்புறுத்தவும் மீண்டும் உட்கார்ந்தனர்.

அப்பொழுது ஈஷ்வர் சத்தமில்லாமல் ஒரு வெடிக் குண்டை போட்டார். “ஏன்டா? நான் தான் வர சொன்னேன்! அதுக்கு என்ன இப்போ? முதல்ல என்னை கேள்வி கேட்டுட்டு அப்புறம் அவங்கள கேளு!”

அனைவரும் இரண்டாம் முறையாக அதிர்ந்தனர்!! ப்ரியங்காக்கு தாத்தாவே சப்போர்ட்டு பண்ணுவார் என எதிர்பாக்காத ராஜீவ் தான் மிகவும் அதிர்ந்தான்!

அதற்க்குள் ரவி மன்னிப்பு படலத்தை ஆரம்பித்து வைத்தார்! “நானும் என்னோட குடும்பமும் சேர்ந்து நடந்ததுக்கு மன்னிப்பு கேக்கறோம். எங்கள மன்னிசிருங்க!!” என்ற முடித்தார், கைகளை கூப்பி!

ராஜீவ் அவரை அர்ப்பமாக பார்த்து, “நீங்க மன்னிப்பு கேட்டா நடந்தது எல்லாம் சரியாகிடுமா? இன்னிக்கு கூட ஒரு சொந்தகாரங்க கல்யாணத்துக்கு போயிட்டு, எல்லோரும் கேள்வி கேட்டு வெறுத்து போய் தான் வந்தாங்க, தெரியுமா?”

இதை முற்றிலும் தாங்கிக்க முடியாத ப்ரியங்கா, ராஜீவ்விடம், “என்னை என்ன வேணும்னா சொல்லுங்க! அப்பாவ ஒன்னும் சொல்ல வேண்டாம்!” என்று அழுகையுடன் சொல்லி முடித்தாள்.

ஆம், அவன் வெளியே போங்க என்று சொன்ன போது வந்த அழுகை, இப்பொழுதும் நின்றபாடில்லை!

அவள் சொன்னதை கேட்ட ராஜீவ்விற்க்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ, “ஏய்ய்ய்ய்!! நீ பேசாத!! எல்லாத்துக்கும் காரணம் நீ தான்… பேசற தகுதி உனக்கு எப்பயோ போயிடுச்சி! தெரிஞ்சுக்கோ!”

ப்ரியங்காவும் அவன் பேச்சை கேட்டு பேசுவதை நிறுத்தி, அழுகையை இன்னும் அதிகப் படுத்தினாள்! இவன் அடங்க மாட்டான் போலவே, என்று நினைத்து ஈஷ்வரும் ராஜேந்திரனும் சேர்ந்து அவனை ஹாலை ஒட்டி இருந்த ஈஷ்வரனின் படுக்கை அறைக்கு அனுப்பினர்!

அதுவும் அவன் சட்டென்று போகவில்லை. அவனை தள்ளியே அந்த அறைக்குள் விட்டனர். இதில் மிகவும் பாதிப்படைந்தது ப்ரியங்காவின் பெற்றோர்களே! மகளை தம் முன்னாடியே இப்படி நடத்தும், மாப்பிள்ளையை யார்தான் விரும்புவார்!

ஆனால் இதை மாற்ற முடியாது. ஏன்னென்றால் இது அவளே தேடிக் கொண்ட வாழ்க்கை! அவள் வாழ்ந்து தான் ஆக வேண்டும்!

இப்படி பல எண்ணங்கள் மனதிற்க்குள் இருந்த போதும், எதுவும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை, அவர்கள்! பெண் பிள்ளைகளை பெற்று விட்டவர்கள், எப்பொழுதும் மாப்பிள்ளை வீட்டாரிடம் கொஞ்சம் தாழ்ந்து போவது, நம் வழக்கம் தான்!

ஆனால் இவர்கள் தாழ்ந்து போவதற்க்கு காரணம் அவர்கள் பெண் செய்த தப்பாயிற்றே!! அவர்களின் சிந்தனையை கலைத்து மீண்டும் பேச உட்கார்ந்தனர் ராஜேந்திரனும் ஈஷ்வரரும்!

“நீங்க நல்லா யோசிச்சுதான் இந்த கல்யாணத்துக்கு பேச வந்திங்களா? உங்க பொண்னு பண்ண தப்பால இங்க நிறைய பிரச்சனை! இதுல கல்யாணம் பண்ணி வெச்சா என்னென்ன நடக்குமோ தெரியல! அப்புறம் முக்கியமான விஷயம், உங்க இரண்டு பேருக்கும் இதுல முழு சம்மதமா?

ஏன் கேக்கறேன்னா, இந்த மாதிரி நம்ம குடும்பத்துல முன்னாடி நடந்துருக்காது! உங்கள பத்தியும் எங்களுக்கும் தெரியாது! அதனால ஒருத்தருக்கு ஒருத்தர் நாம தான் புரிஞ்சி நடந்துக்கனும்!”

ராஜேந்திரன் பேசி முடிக்கவும், ரவியின் மனதில் ராஜ்ந்நெதிரன் எங்கயோ……. போயிட்டார்!!! ரவியும் தலையசைத்து, “நீங்க சொல்றது, எங்களுக்கு புரியுது. ஆனா, என்னோட பொண்னு இவ்வளவு தீவிரமா எந்த விஷயத்திலேயும் நான் பார்த்தது இல்லை! அவ உங்க பையனை தான் கல்யாணம் பண்னுவேன்னு சொல்றா! எங்களுக்கும் உங்க பையனை புடிச்சுருக்கு! அதனால தான் பேச வந்தோம்!”

அவரின் குரலில் இருந்த இரைஞ்சல், ராஜேந்திரனை யோசிக்க வைத்தது. ஈஷ்வர் அதற்க்குள் அவர்களிடம் சொல்லிக் கொண்டு, ராஜேந்திரனையும் கீதாவையும் பூஜை அறைக்குள் கூட்டிப் போனார்!

அங்கே அவர்களிடம், “அந்த பொண்னு மேல தப்பு இருக்கு தான், இல்லைனு சொல்ல மாட்டேன். ஆனா அந்த பொண்னு நிலமையும் மோசம் தான? என்ன தப்பு செஞ்சா, நம்ம பையனை காதலிக்கிறத தவிர! ப்ளீஸ், கொஞ்சம் யோசிங்க!” என்று சொன்னார்.

அதற்க்குப்பின் ராஜேந்திரனும் கீதாவும் விவாதித்து, அவரிடம் சம்மதம் தெரிவித்தனர்! அடுத்து தான் பெரிய வேலையே! அவர்களின் வீட்டு வாரிசை சமாளிக்க வேண்டாமோ?

அவர்கள் ராஜீவ்விடம் வந்த போது, அவன் தலையை தேய்த்த படி உட்கார்ந்து இருந்தான்! பாவம் அவனும் தான் என்ன பண்னுவான்?? கீதா தான் அவனிடம் சென்று, அவன் தோளை தொட்டார்!

“அவங்க போய்ட்டாங்களா?” இதுவே அவனிடம் இருந்து வந்த முதல் கேள்வி! ஏன்னென்றால், அதற்க்குப்பின் அவர்கள் சொன்னதற்க்கு எல்லாம், அவன் எதிர் கேள்வி தான் கேட்டுக் கொண்டிருந்தான்!

“ராஜ் இப்போ நான் சொல்லுறத பொறுமையா கேளு! ப்ளீஸ்!” ராஜேந்திரன் கெஞ்சிக் கேட்ட பிறகு மறுப்பேது?? வேறு வழியில்லாமல், தலையசைத்தான் ராஜீவ்.

“ப்ரியங்காவும் பாவம் தான்டா… யோசிச்சுப் பாரு! அவளும் உன் மேல அவ்ளோ ஆசை வெச்சிருக்கா! அவ உனக்கு ஸஸ்பென்ஷன் வாங்கி குடுக்க காரணமா இருப்பாளா? எதோ நடக்கனும், நடந்து போச்சு! அத மறந்துட்டு, இப்போ கல்யாணத்துக்கு ஓகே சொல்லு!”

அவர் முடித்த பிறகு உடனே ஆரம்பித்தான் அவரின் புதல்வன்!! “எப்படிப்பா மறந்துடுனு ஈசியா சொல்றிங்க? அப்படி எல்லாம் மறக்க நான் ஒன்னும் கடவுள் இல்லப்பா! சாதாரண மனுஷன்…. என்னால முடியாது! முடியவே முடியாது!”

அவனின் குரலில் உறுதித்தன்மை வெளிப்பட்டது. அவனின் அம்மாவின் முகத்தை பார்த்தான், அதிலும் ஒத்துக்கொள்ளேன், என்ற மன்றாடளே இருந்தது! நம் சமுகத்தில் தான் என் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வேன், என்று இருந்த அம்மாவா இது???

இந்த ப்ரியங்கா எதோ மந்திரம் வச்சுருப்பா போல, என்று நினைத்தான்! அதற்க்குள் அவனின் தாத்தா, அவனின் பக்கம் வந்து, “அவளும் நம்ம நிஷா மாதிரி தானேடா? கொஞ்சம் யோசிடா!” என்றார்.

“அவளையும் நம்ம நிஷாவையும் கம்பேர் பண்ணாதீங்க தாத்தா! எனக்கு கோபம் கோபமா வருது!” அவனின் முகமே கோபத்தின் அளவை சொல்லியது!

இப்போழுது மூவருக்கும் எப்படி அவனுக்கு பேசி புரிய வைப்பது, என்று தெரியவில்லை! ஈஷ்வர் ஒரு முடிவுற்க்கு வந்தார் போல், முகத்தை கடினமாக மாற்றி, “ராஜ், ‘நீங்க என்ன சொன்னாலும் செய்வேன் தாத்தா’ ன்னு அடிக்கடி சொல்லவேல? இப்போ நான் சொல்றேன் கேக்க மாட்டியா? எனக்காக, இந்த கிழவனுக்காக, பார்க்க கூடாதா?” என்று பேசி முடித்தார்! ‘கிழவன்’ என்ற வார்த்தையை கேட்டால் அவன் இலகுவான், எப்பொழுதும்!

ஆனாலும் ராஜீவ் சட்டென்று ஒத்துக் கொள்ளவில்லை!!! மேலும் அவனின் பெற்றோர்களும் வற்புருத்தவும் அவன் அரை மனதாக சம்மதித்தான்!

அதை கேட்டவுடன் வெளியே ஹாலுக்கு வந்தனர், மற்ற மூவரும்! எங்கே, சிறிது நேரம் அந்த இடத்தில் இருந்தாலும், அவன் மனம் மாறிடுவானோ, என்ற நல்ல எண்ணம் தான்!

வெளியே ப்ரியங்காவின் பெற்றொர்களுடன் பேச்சு கொடுத்து இருந்தது, நம் நிஷா தான்!! இவர்கள் சொன்ன விஷயத்தை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்!

ப்ரியங்காவிற்க்கு நம்பவே முடியவில்லை! அவள் ராஜீவ்வின் முகத்தையே ஏதோஅதிசயம் நிகழ்ந்தது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்!!! அவர்களின் திருமணம் குறித்து பெரியவர்கள் பேச ஆரம்பித்தனர்!

இப்படியே, செல்வன் ராஜீவ் குமார் ராஜேந்திரன் என்பவனுக்கும், செல்வி ப்ரியங்கா ரவி தேஷ்பான்டே என்பவளுக்கும் திருமணம் பேச பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது!
 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
ராஜீவ் 😍😍😍 போலிஷ் காரன் ரொம்ப கோவக்காரனா இருக்கான் 😆 😝 😝 😝 😝

ப்ரியங்கா வட இந்திய பொண்ணா 😀😀😀😀😀
இவ செஞ்ச தப்பால் தான் ராஜீவ் சஸ்பென்ட் ஆனானா 😕😕😕😕😕


அர்ஜீன் ராஜீவ் இரண்டு பேரும் ப்ரணட்ஸா இருப்பாங்களோ 🧐🧐🧐🧐🧐🧐
 
Last edited:
Active member
Joined
May 11, 2024
Messages
182
Priya yenna panna vacha Ivan suspend aagura alavukku🤔nice interesting ud ❤️
 
Top