அத்தியாயம் இருபத்தியிரண்டு
ப்ரியங்காவால் அவள் கணவன் கூறுவதை நம்ப தான் முடியவில்லை… தான் சொல்லாமல் கொள்ளாமல் வந்ததில் கோபமாக இருப்பான், ஓவரா திட்டுவான் என பார்த்தால், இது என்ன புது ட்விஸ்டாக இருக்கு!!
தேகம் அவன் இழுத்த இழுப்பிற்க்கு வளையும் வேளையில், ப்ரியங்காவின் ரோஷக்கார மனது விழித்துக் கொண்டது. அவனிடம் இருந்து தள்ளி நின்று, அவனை முறைத்தாள், முடிந்த மட்டும்! இவளின் நிலை அறிந்து ராஜீவ்வும் அதன் மேல் அவளை சோதிக்காமல், அவளின் கைப்பற்றி(?!) அங்கே உட்காரும் இடத்தில் அமர்த்தினான்.
“நீ என்ன கேக்க போறேன்னு தெரியும்டா… அதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட சாரி கேட்டுக்கறேன்! ஆயிரம் வாட்டி இல்ல, லட்சம் வாட்டி சாரி! எனக்கு தெரியும் சாரி கேட்டா சரியாகிடாது. பட், போக போக சரி பண்ணிடலாம்!”
“நீங்க எப்படி இங்க வந்தீங்க? நான் இங்க இருக்கேன்னு யாரு சொன்னா?”
‘சே! இங்க ஒருத்தன் ஃப்ளீங்ஸா பேசுறானே, எதாவது கூட பேசுவோம்னு இல்லாம! பயபுள்ள, கரக்டா அவளுக்கு வேண்டிய விஷயத்துக்கு வரா! இவள!!!’ மனதிற்க்குள் ப்ரியங்காவை திட்டினாலும், இன்னோரு மனது, ‘மகனே, இத்தன நாளா நீ இப்படி தான் இருந்த… அத மறந்துடாத’ என ஞாபகம் ஊட்டியது.
அதனால், ஒழுங்காக அவள் கேட்ட கேள்விக்கே பதிலை கூறினான். “அம்மா நேத்து நைட், ரொம்ப நேரமா போன்ல, யார் கிட்டயோ பேசிட்டே இருந்தாங்களா… எனக்கு ஒரே டவுட்! போன் எடுத்து யாருனு பார்த்தா, அத்தை! கண்டிப்பா நீ இங்க தான் இருக்கனு தெரிஞ்சு போச்சு!
அதான் ராத்திரியோட ராத்திரியா கிளம்பி வந்துட்டேன்… அம்மா கிட்ட மட்டும் சொல்லிட்டு.” அவன் கூறியதை கேட்டதும், ஆச்சரியமாக இருந்தாலும், மேலும் எதுவும் பேசாமல், ப்ரியங்கா தரையையே வெறித்தாள்.
அதை பார்த்து ஒரு பெருமூச்சை எரிந்துவிட்டு மீண்டும் பேச்சை தானாகவே ஆரம்பித்தான் ராஜீவ். “ஹே ப்ரியா! நான் பண்ணது எல்லாம் தப்பு தான்… அதுக்கு என்ன பனிஷ்மென்ட் வேணா கூடு! பட், அங்க நம்ம வீட்டுல இருந்து குடு. என்னை தனியா மட்டும் விட்டுட்டு வந்துராத! ப்ளீஸ்!!”
இதை கேட்டு ஓவேன பொங்கியது ப்ரியங்காவிற்க்கு! என்ன பொங்கியதா? வேற என்ன பொங்க போது? கண்ணீர் தான். அவனின் தோளில் சாய்ந்தபடியே கண்ணீர் வடித்தாள். அதுவும் ஒரு வகை சுகமாக தான் இருந்தது, அவளுக்கு.
ஆனால், அவளின் அழுகையை பார்த்து ராஜீவ் பதறிவிட்டான். “நான் தான் சாரி கேக்குறேன்ல… நீ ஏன்மா அழற!? எல்லாத்துக்கும் நான் தான் காரணம்… எனக்கு இருந்த குழப்பம் தான் காரணம்! உன்னை லவ் பண்றேனா இல்லையா? உன் மேல இருந்த கோபம் முழுசா போயிடுச்சா? இப்படி நிறைய குழப்பம் கொஞ்ச நாளா…”
இப்போது ஏன் அழப் போகிறாள், ப்ரியங்கா. அழுகை சுவிச் ஆப் ஆகிவிட, அவன் பேசுவதையே ஓரக் கண்ணால் நோக்கினாள். மடை திறந்த வெள்ளமேன பேசினான் ராஜீவ், முதல் முறையாக…
“அதுலயும் அன்னிக்கு நீ ரொம்ப அழகா வேற இருந்தியா? என்னால என்னையே கன்ட்ரோல் பண்ண முடியுல! அதனால வந்த கோபம், பாட்டி வேற இப்படி எல்லார் முன்னாடியும் பேசறாங்களேனு வந்த கோபம், எல்லா சேர்ந்து உன்மேல…”
இதை அவனால் முடிக்க முடியும் என்று தோன்றவில்லை. பின்னே, அவன் மனையாள் அவனை கண்களாலே பஸ்பம் ஆக்கிக் கொண்டிருக்க, அவன் எங்கே மேலே பேசுவான்? ஆனால், ப்ரியங்கா பேசினாள்!
“ஆமா, அதுக்கு நான் தான் கிடைச்சேனா? என்னையும் தான் பாட்டி திட்டுனாங்க! அப்போ நான் திட்டவா? நீங்க என்ன எல்லாம் பேசுனீங்க அன்னிக்கு நைட்… எனக்கு எவ்வளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா? அதனால கொஞ்ச நாள், தனியா இருக்கலாம்னு இங்க வந்தேன்.”
அவள் பேசும் போதே அவளை அள்ளி அணைத்து, உச்சி முகர்ந்தான் ராஜீவ். “ஹே! இனிமே என்ன சண்டை போடுறதா இருந்தாலும், நம்ம வீட்டுல, நம்ம ரூம்ல இருந்தே போடு. நீ பாட்டுக்கு கிளம்பி வந்துட்ட… அங்க ஐயாக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் அவுட்….”
மேலும் அவள் இல்லாத போது, வீட்டில் என்னவெல்லாம் நடந்தது என கூறினான். கேட்ட ப்ரியங்காவிற்க்கு நெஞ்சம் நெகிழ்ந்தது! என்ன தவம் செய்து இந்த குடும்பத்தில் வந்து சேர என அவள் அசை போட, ராஜீவ் என்ன யோசனை என்று வினவினான்.
ப்ரியங்கா தான் நினைத்ததை கூறவும், ராஜீவ் அவளை மேலும் அருகில் இழுத்து, “அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டியே அதுதிர்ஷ்டம் இல்லையா?” என்றான் கிண்டலாக. வாய் தான் இப்படி பேசியதே ஒழிய, கைகளோ குறும்பாக, அவள் இடுப்பு வளைவில் விளையாடியது.
ப்ரியங்கா விலகிக் கொண்டே, இல்லை இல்லை விலக முயற்சி செய்துக் கொண்டே அவனிடன் எச்சரித்தாள். “ராஜீவ், என்ன இது… இங்க இப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க! ஒழுங்கா இருங்க. சொல்லிட்டேன்..”
“ஹோ, அப்போ வா, நாம சென்னை போலாம்! அங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம்ல?” கண்ணடித்து ராஜீவ் கூறியதை பார்த்து, ப்ரியங்காவிற்க்கு எதோ வேற்று கிரகத்தில் இருப்பது போன்று தோன்றியது.
அவளின் கண்ணாளனா இப்படி காதலுடன் பார்த்து, ஆசையாக பேசுவது? இவள் இப்படி யோசித்து கொண்டே இருந்த வேளையில், ராஜீவ் தொலைப்பேசி அவர்களின் சிந்திக்கும் திசையை மாற்றியது.
அழைத்தது தன் அன்னை என்ரவுடன் சிரிப்புடனே பேசலானான் ராஜீவ். ஆனால், அந்த சிரிப்பு சில நோடிகளிலேயே மறைந்ததை பார்த்து குழம்பினாள் ப்ரியங்கா.
அவளை விட்டு விலகி சென்று பேசிவிட்டு வந்தவனோ, சொல்லியது இது தான்.
“சந்தியா லேபர் பெயின் வந்துடுச்சாம் ப்ரியா… நம்ம வீட்டுல எல்லாரும் அங்க ஹாஸ்பெட்டல் போறாங்க! நாமலும் உடனே சென்னைக்கு கிளம்பனும்!”
அதன் பின், ஒரு நிமிடம் கூட நிற்கவில்லை, ப்ரியங்கா. உள்ளே ஓடிச் சென்று தன் மேகலை பெரியம்மாவிடம் விஷயத்தை விளக்கி கூறி, கணவனுடன் உடனே புறபட்டாள்.
காரில் அவர்கள் பயணித்த ஐந்து மணி நேரமும், ப்ரியங்காவும் சரி, ராஜீவ்வும் சரி, குழந்தையும் சந்தியாவும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுதல் இட்டப்படியே வந்தனர்.
ஏனோ அவர்களின் வேண்டுதல் கடவுளின் காதுகளுக்கு எட்டவில்லை போலும்!
****************************சென்னை – சந்தியா இருக்கும் மருத்துவமனை********************
பிறந்து சில நிமிடங்களே ஆன தன் பச்சிளம் குழந்தையை கைகளில் வாங்கிய அர்ஜுனுக்கு தான் எப்படி உணர்கிறோம் என்றே வரையருக்க முடியவில்லை. ஒரு பக்கம் கண்களில் கண்ணீர் வர, மறுபக்கம் இப்படி செய்த ஆண்டவன் மேல் கோபம் கோபமாக வந்தது.
அதற்க்குள் டாக்டர் குழந்தையை வெளியே இருக்கும் அவனின் பெற்றோர்களிடம் காட்ட சொன்னார். அப்போது தான் உரைத்தது! எல்லோரும் இதை எப்படி தாங்கிக் கொள்வர்?? முதலில் சந்தியாவே எப்படி தாங்குவாள்???
டாக்டரை பரிதாபமாக பார்த்தான் அர்ஜுன்! “உன்னுடைய நிலைமை புரியுதுபா! ஆனாலும் வெளிய இருக்குறவங்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்? போ, போய் காட்டு!” அவர் கூறியப்படியே, வெளியே குழந்தையுடன் போனான் அர்ஜுன்.
எல்லோரும் ஆவலுடன் அவனை நோக்கி ஓடி வந்தனர், ஜுனியர் அர்ஜுனை பார்க்க! ஆம், வெளியே இருக்கும் எல்லோருக்கும் ‘பையன் பிறந்திருக்கான்’ என்பது வரை சொல்லப்பட்டது. ஆனால், எப்படி பிறந்தான் என்பதை சொல்லவில்லை யாரும்!
அர்ஜுனின் இருண்ட முகத்தை பார்த்து, என்னவோ சரியில்லை என்று புரிந்துக் கொண்டார், ராஜேந்திரன். அவனின் அருகில் சீக்கிரமாக சென்று, குழந்தையை கையில் வாங்கினார். வாங்கிய அவருக்கும் மிக்க அதிர்ச்சியே!
ஏன்னென்றால் குழந்தைக்கு கால் பாதங்களில் விரல்களே இல்லை… இரண்டு கால்களிலும்!!! அதை கண்ட எல்லோருக்கும் அதிர்ச்சி கூடவே இப்படி ஆகிவிட்டதே என்ற வேதனையும்!
முதலில் அலறியது, சந்தியாவின் அம்மா பத்மா தான். “என்ன மாப்பிள்ள இது? குழந்தை இப்படி இருக்கான்? என்னாச்சு?” அடுத்தடுத்து எல்லோரும் இதே கேள்வியை கேட்டனர். பதில் சொல்லாமல், கண்களில் வழிந்த நீரோடு குழந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
அப்போது, சந்தியா மயக்கித்திலிருந்து முழித்து இருப்பதாக செவிலியப் பெண் வந்து கூற, எல்லோரும் அங்கே விரைந்தனர். ராஜேந்திரனின் கைகளில் தவந்த தன் உதிரத்தில் பிறந்த முத்தை, ஆவலாக பார்த்தாள் சந்தியா. ஆனால், கைகளில் அந்த முத்தை வாங்கியவுடன் அவளின் முகமே பேய் அறைந்தது போல் ஆனது.
பூமியே அழிந்துவிட்டது போல், ஒரு முகத்துடன் தன் கணவனை பார்த்தாள் சந்தியா. அவளை அதே வேதனையுடன் நோக்கினான் அர்ஜுன்! அதற்க்குள் எல்லோரும் ஏதேதோ பேச, டாக்டர் வந்து தான் அவர்களை அடக்க வேண்டியதாக போயிற்று.
“கொஞ்ச நேரம் எல்லாரும் அமைதியா இருக்கீங்களா? எல்லாரும் ஃபர்ஸ்ட் வெளிய வெயிட் பண்ணுங்க! நான் இவங்ககிட்ட பேசனும்…” அர்ஜுனையும் சந்தியாவையும் பார்த்து, டாக்டர் கூறியவுடன் எல்லோரும் வெளியே சென்றனர். ராஜேந்திரன் மற்றும் சேகர் தவிர.
தாங்களும் இருக்க அனுமதி வாங்கியப் பின்னர் இன்னும் ஒரு குழந்தை நல மருத்துவர் வர வேண்டி காத்திருந்தனர்.
அவர் வர எடுத்துக் கொண்ட நேரத்தில், சந்தியா அழுது கொண்டே தன் குழந்தையை வருடிக் கொண்டிருந்தாள். அர்ஜுனும் தன் பார்வையை தன் வாரிசிடம் முழுவதுமாக தொலைத்திருந்தான். டாக்டர் வந்தவுடன், குழந்தையை தூக்கி பார்த்து சில நிமிடங்கள் ஆராய்ந்தார்.
பிறகு இவர்களிடம் திரும்பி, “நீங்க தான் அப்பா அம்மாவா?” என வினவினார். வேர்த்திருந்த கண்களுடனும், வேதனை படிந்த முகத்துடனும், பாரம் பல மடங்கு ஏறிய செஞ்சத்துடனும், கஷ்டப்பட்டு தலையசைத்தனர் இருவரும்.
ஆனால், அவர் கேட்ட முதல் கேள்வியே இவர்கள் நால்வரையும் வியப்பில் ஆழ்த்தியது! “நீங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்னாடியே சொந்தகாரங்களா?” இவர் எதுக்கு இப்போது இதை கேட்கிறார், என யோசித்தபடியே ‘ஆம்’ என்று சொன்னான் அர்ஜுன்.
அடுத்து, பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர், எப்படி சொந்தம் என்று கேட்டார். ராஜேந்திரன் உறவு முறையை சொன்னதும், டாக்டர் இருவரும் கண்களாலே எதோ பேசிக் கொண்டனர். கோபம் அவர்களின் முகத்தில் பிரதிபலித்தது.
அவர்களையே திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனையும் சந்தியாவையும் பார்த்து கோபக் குரலில் பேசலானார்கள். “நீங்க எல்லாம் படிச்சவங்க தான? உங்களுக்கு தெரியாதா சொந்தத்துக்குள்ள கல்யாணம் பண்றது நல்லது இல்லைனு? சே! உங்களால இப்போ கஷ்டப்படப் போறது உங்க குழந்தை தான?
இது எல்லாம் யோசிக்கவே மாட்டீங்களா? என்னதான் அப்படி சொந்தமோ தெரியல!!” இது ஒரு மருத்துவர் என்றால், இன்னொருவர் மேலும் கர்ஜித்தார். “உங்கள நாங்க சொந்தத்துக்குள்ள கல்யாணம் பண்ணவே கூடாதுனா சொல்றோம்? ஒரே ஒரு பிளட் டெஸ்ட் எடுத்தா போதும்.
உங்க உடம்புல இருக்குற பரம்பரை வாய்திகளின் அடிப்படைல நாங்க கல்யாணம் பண்ணலாமா, வேண்டாமானு சொல்வோம். அத கூட பண்ண முடியாதா, உங்களால?? இப்போ யாரு அனுபவிக்க போறது? நீங்க தான??”
டாக்டர்களின் கோபமான பேச்சை கேட்டு தலைகுனிந்தனாள் சந்தியா, அழுகையுடன் தான்…. ஆனால், அர்ஜுன் தான் ‘பளார்’ என்று கன்னத்தில் அறை வாங்கிய உணர்வுடன், உள்ளுக்குள்ளேயே கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்தான்.
‘சொந்தத்துக்குள்ள கல்யாணம் பண்ணக் கூடாது அர்ஜுன். சந்தியாக்கு நானே நல்ல மாப்பிள்ளையா பார்க்கறேன்’ – ராஜீவ்வின் குரல் காதுகளில், இப்போது தான் சொன்னது போல ரீங்காரமிட்டது.
ராஜேந்திரன் தான் மேலும் மருத்துவர்களிடம் துருவி துருவி கேள்விகளை கேட்டார். “இந்த விஷயம் எப்படி டாக்டர் ஸ்கேன் பண்ணும் போது தெரியாம போச்சு?” என்ற அவரின் கேள்விக்கு உற்ச்சவ மூர்த்தியாக முறைத்தார் மருத்துவர்.
“குழந்தைங்க எப்போவும் கை, கால்களை சுருக்கியே வெச்சுருப்பாங்க கருவரைல. அதனால, இந்த குறைப்பாடு ஸ்கேன் பண்ணும் போது தெரிய வாய்ப்பில்லை… நீங்க சொந்தத்துக்குள்ள கல்யாணம் பண்ணது தான் இங்க பிரச்சனையே! அதனால குழந்தைக்கு இன்னும் எதாவது குறைப்பாடு இருக்கானு வேற நாங்க டெஸ்ட் பண்ணனும்.“
‘இன்னும் எதாவது குறைப்பாடு இருக்கானு’ இந்த வார்த்தைகளை கேட்டதும் சந்தியா குழந்தையை கட்டிக் கொண்டு ஓவேன அழ ஆரம்பித்தாள்…. அவளின் நிலை அறிந்து மருத்துவர்களும் நாளை குழந்தையை பரிசோதிப்பதாக கூறி வெளியேறினர்.
அர்ஜுனுக்கும் தாங்க முடியவில்லை தான்… ஆனால், சந்தியா அழுவதை பார்க்க முடியாமல், அவளை சமாதானப்படுத்தினான். சேகரும் வெளியே வந்து, மருத்துவர் கூறியதை அவர் மனைவியிடமும் தங்கையிடமும் சொல்ல, அவர்களும் கலங்க ஆரம்பித்தனர்.
உள்ளே, ராஜேந்திரன் தான் அவர்களை ஆறுதல் படுத்தினார். அவ்வேளையில் தான், ராஜீவ்வும் ப்ரியங்காவும் சரியாக அங்கே வந்தனர். வந்தவர்கள் இவர்களின் நிலை பார்த்து திகைத்து நின்றனர்.
உள்ளே நுழைந்த ராஜீவ்வை கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தார் அவன் தாயார் கீதா. “கடைசியில நீ சொன்ன மாதிரியே ஆகிடுச்சுடா ராஜ்!! ஐய்யோ நம்ம குடும்பத்துலயா இப்படி நடக்கனும்?” அவர் கூறியது தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை அவர் மகனுக்கு.
ஆனால், ஏதோ அசம்பாவிதம் நடந்துருக்கு என்று மட்டும் புரிந்துக் கொண்டதால், அவனின் தந்தை எங்கே என்று கேட்டான். அதற்க்கு அவர், உள் அறையை கை காட்டியதும் அங்கே விரைந்தான், ப்ரியங்காவுடன். மனம் அது பாட்டிற்க்கு ‘கடவுளே கடவுளே’ என்று ஜபித்துக் கொண்டிருந்தது.
உள்ளேயும் எல்லோரும் அழுதுபடி இருந்ததால், ப்ரியங்கா தன் மாமனாரிடம் என்னவாகிற்று என வினவினாள். அவர் குழந்தையை கை காட்டவும், அப்போது தான் சந்தியாவின் கையில் உள்ள சின்ன கண்ணனை நோக்கினாள். பார்த்த அடுத்த நொடி தூக்கியும் கொண்டாள்.
முதலில் குழந்தையை ஆராய்ந்தவள் அதன் கால்களில், அவள் கண்கள் வேரூன்றி போனது போல நிலைகுத்தி நின்றது. பார்த்த ராஜீவ்விற்க்கும் மிகுந்த மன வேதனையை கொடுத்தது. ப்ரியங்காவும் தன்னை அறியாமல் அழ ஆரம்பித்திருந்தாள்.
இப்படி ஒருத்தர் மாற்றி ஒருத்தர் அழுவதை பார்த்த ராஜேந்திரன், “இந்த பிரச்சனைலயும் குழந்தை நல்ல வெயிட்டோட எந்தவித பிரச்சனையும் இல்லாம, இருக்கான். அதை நினைச்சு மனச தேத்திக்கோங்கடா… குழந்தைக்கு ஒன்னும் ஆகாது.
இப்போ இருக்குற மெடிகல் உலகத்துல என்னவெல்லாமோ நடக்குது. எல்லாம் சரியாகிடும். முதல்ல அழறதை நிறுத்துங்க எல்லாரும். ப்ரியங்கா நீயுமா அழற? சந்தியாவை நீ தான் பார்த்துக்கனும் சொல்லிட்டேன்… குழந்தையும் தான்! சரி எல்லாரும் வெளிய வெயிட் பண்ணலாம் சந்தியாவும் குழந்தையும் ரெஸ்ட் எடுக்கட்டும்.”
ராஜேந்திரனின் குரலுக்கு ஆட்பட்டு ராஜீவ்வும் அர்ஜுனும் வெளியேறினர். சந்தியாவை ப்ரிய்ங்கா தேற்ற, அர்ஜுனை தேற்றும் பொறுப்பு ராஜீவ்வின் வசம் வந்தது. அதுவும் அர்ஜுன் கண்களில் பெரும் வலியுடன், “நீ அப்போவே சொன்னடா… நான் தான் பிடிவாதமா காதுல வாங்காம விட்டுட்டேன்!
எல்லாம் என்னோட தப்பு தான்டா!” என்று கூறியப் போது, ராஜீவ்விற்க்கே மிகவும் சங்கடமாக இருந்தது. “நான் சொல்லலனா கூட இது நடந்துருக்கும் அர்ஜுன். விதியை யாராலும் மாத்த முடியாது. விடு! அடுத்து என்ன செய்வதுனு யோசிக்கலாம்.
அது தான் இப்போ முக்கியம்! வா, டாக்டர் கிட்ட போய் இன்னோரு வாட்டி பேசலாம்.”
ராஜீவ் கூப்பிட்டவுடன் சிறிதும் தயக்கம் இல்லாமல், அவனுடன் சென்றான் அர்ஜுன். தான் செய்த தவறுக்கு மருத்துவர் தன்னை திட்டியது கூட பரவாயில்லை என்றே தோன்றியது, அவனுக்கு.
மருத்துவர் இவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதிலை தான் சொன்னார். ‘நாளைக்கு எல்லா டெஸ்டும் எடுத்தா, ரெண்டு நாள்ல ரிசஸ்ட் வந்துடும். அதுக்கு அப்புறம் தான் என்னால குழந்தையை பத்தி முழுசா சொல்ல முடியும். அது வரைக்கும் என்னால எதுவும் சொல்ல முடியாது. ப்ளீஸ்… புரிஞ்சிக்கோங்க!’
டாக்டர் இப்படி கூறியப் பின்னர், என்னவென்று கேட்க முடியும்?? மீண்டும் எல்லோருடனும் வந்து டாக்டர் கூறியதை பகிர்ந்துவிட்டு, அமர்ந்தனர். அதற்க்கு அடுத்த மூன்று நாட்கள் எப்படி சென்றது என்றூ, அவரவரை தான் கேட்க வேண்டும்.
ஏன்னென்றால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக கழிந்தது. அர்ஜுனுக்கு சந்தியாவிற்க்கும் அழுகை, வலி, வேதனை, குழந்தை பற்றிய பயம் ஆகியவற்றில் கழிந்தது என்றால், பெரியவர் ஈஷ்வர் முதற்கொண்டு ராஜேந்திரன், கீதா, சேகர், பத்மா, அர்ஜுனின் பெற்றோர், நிஷா அனைவருக்கும் பிரார்த்தனையில் கழிந்தது.
ப்ரியங்காவிற்க்கும் சரி, ராஜீவ்விற்க்கும் சரி அனைவரையும் பார்த்துக் கொள்வதிலேயே நேரம் பறந்தது எனலாம். அவர்களால், குழந்தையை பற்றி கவலை கூட பட முடியவில்லை என்று நினைக்கும் அளவிற்க்கு வேலை அவர்களை துரத்தியது.
பாட்டி தையல்நாயகி கொஞ்சம் வேறு விதமாக சென்றது. பிறந்த குழந்தையை பார்த்தவர் திகைத்து நின்றது என்னவோ சில நிமிடங்கள் தான். ஆனால், அதுவே வாழ்க்கை பாடத்தை அவருக்கு கற்றுத் தந்தது.
தான் தானே சொந்ததுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என இந்த திருமணத்தை செய்து வைத்தோம்… இப்படி ஆகிற்றே என்று மிகவும் வருந்தினார். எந்த காரணத்தை கூறி ராஜீவ் கூறி திருமணத்தை தடுத்தானோ, அது இப்போது உண்மை ஆயிற்றே!! என்ன செய்வது? என்று மிகவும் கவலைக்கொண்டார்.
இவர்களுக்கெல்லாம் இப்படி நகர்ந்தது என்றால், குழந்தைக்கு? அந்த பிஞ்சு உடம்பில் ஓடிய கொஞ்சம் நஞ்சம் இருந்த ரத்தத்தையும் டெஸ்ட் எடுக்கவென்றே எடுத்துவிட்டனர். மேலும் பல டெஸ்ட்கள், தடுப்பூசிகள்!!
அப்பப்பா!! குழந்தையின் அழு குரல் எப்போதும் கேட்ட வண்ணம் இருந்தது. ஒருவழியாக அனைத்து பரிசோதனைகளும் முடிந்து, ரிஸல்ட் வந்தவுடன் டாக்டர் சந்தியா மற்றும் அவள் குடும்பத்தினர் இருக்கும் அறைக்கு வந்தனர்.
அனைவரும் ஆவலாக அவரின் முகத்தை பார்க்க, மருத்துவர் உதட்டில் குடியிருந்த புன்னகையுடன் அழகாக சிரித்து, “எல்லாம் நல்லபடியா இருக்கு குழந்தைக்கு! நோ பிராப்ளம்… “ என்று கூறினார்.
அதை கேட்டு சந்தோஷத்தில் அனைவரின் மனதும் நிறைந்தது.! பாட்டி உட்பட! “இப்போ குழந்தைக்கு இருக்குற பிரச்சனைக்கு என்ன ட்ரீட்மெண்ட் எடுக்கலாம் டாக்டர்?” ப்ரியங்காவின் இந்த கேள்விக்கு, “அதை பத்தி தான் சொல்ல வந்தேன்”, என்று பிடிகையுடன் துவங்கினார் மருத்துவர்.
“உங்க குழந்தைக்கு கால்ல எந்த பிரச்சனையும் இல்ல… விரல்கள் இல்ல என்ற குறையை தவிர! அது நடக்கறதுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும். ஆனா, இப்போ எல்லாம் இதுக்காவே நிறைய ஷூ வருது… உங்க பையனுக்கு எந்தெந்த வயசுல எப்படி ஷூ வேணுமோ, அப்படி வாங்கி யூஸ் பண்ணிக்கலாம்.”
“வேற எதுவும் ஆப்ரேஷன் பண்ணி எல்லாம் சரிபடுத்த முடியாதா, டாக்டர்?” சேகரின் இந்த கேள்வுக்கு டாக்டர் மறுப்பாக தலையசைத்தார். “வேணும்னா நீங்க வேற எதாவது சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் கிட்ட குழந்தையை காட்டி, கேட்டுக்கோங்க! எல்லாரும் இதை தான் சொல்லுவாங்க…”
கூறிவிட்டு விடைபெற்று சென்றார் மருத்துவர். அவர் சென்றதும், ராஜீவ்வும் அர்ஜுனிடம் குழந்தையை வேறு சில மருத்துவமனைகளின் பெயர்களை கூறி அங்கே சென்று பார்க்கலாம் என்றான். எல்லோரும் ஆமோதிப்பாக தலையசைத்தனர்.
அடுத்த நாளே, மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டாள் சந்தியா… குழந்தையை அதற்க்குள் பிரிய வேண்டுமே என்று ப்ரியங்கா தான் மிகுந்த வருத்தப்பட்டாள். ஆம், இந்த சில நாட்களிலேயே குழந்தையின் பால் நிறத்திலும், தூக்கத்தில் உதட்டில் உதிக்கும் புன்னகைக்கும், அதன் ‘ங்ஙா’ சத்ததிற்க்கும் மயங்கிப் போனாள்!!
பாட்டி இல்லாமல் இருந்ததால் தான் அங்கே போகவும் முடியாது என்று அவள் ராஜீவ்விடம் வருந்திய நேரம், தையல்நாயகியே அவளிடம் வந்து, தான் அன்று நடந்துக் கொண்டதற்க்கு மனிப்பு கேட்டார். யாராலும் நடப்பதை நம்ப முடியவில்லை…
“ராஜா நீயும் என்னை மன்னிச்சிடுப்பா! இந்த கெழவி தெரியாம பண்ணிட்டேன்னு நினைச்சுக்கோ… எனக்கு என்னோட கொள்ளு பேரன் வந்து தான், பாடம் நடத்தனும்னு இருக்கு! செய்யக் கூடாதது, பேசக் கூடாதது எல்லாம் பேசிட்டேன். எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க!” கை எடுத்து அவர் மன்னிப்பு வேண்ட, கூடியிருந்த அனைவரும் நெகிழ்ந்து அவரை கட்டிக் கொண்டனர்.
அங்கே ஒரு அழகிய விக்கரமன் படக்காட்சி தென்பட்டது.
அடுத்து தான் ராஜீவ்வுக்கும் அர்ஜுனுக்கும் வேலை வந்தது. குழந்தையின் மருத்துவ அறிக்கையை தூக்கிக் கொண்டு சென்னையில் உள்ள அனைத்து புகழ்பெற்ற குழந்தை மருத்துவமனையிலும் விசாரித்தனர்.
ப்ச்ச்ச்… ஆனால், பலன் தான் இல்லை!! எல்லோரும் அவர்களின் டாக்டர் கூறியது போல, ஷூ தான் இதற்க்கு நிறந்தர தீர்வு என்றனர். மூம்பையில் இருக்கும் ஒரு மருத்துவனைக்கும் வென்று வந்தனர். அவர்களும் ‘ஷூ’ என்று கூப்பாடு போட, வேறு வழியின்றி வீடு திரும்பினர்.
இதற்க்கே ஒரு மாதம் பறந்தோடியது… ஒரே சோக மயமாக காட்சியளித்த வீட்டை தினமும் வந்து சந்தோஷம் பரவ செய்து போனாள் ப்ரியங்கா. மாலை அலுவகத்திலிருந்து நேராக சந்தியா வீட்டிற்க்கு தான் அவள் செல்வது… இரவு எட்டு மணி போல, ராஜீவ் வந்து அவளை அழைத்து செல்வான்.
முதலில் எல்லாம் கூட சேர்ந்து சிரிக்காதவர்களும் இப்போது இது தான் நிதர்சனம் என்று உணர்ந்து கவலையில் இருந்து சிறிது சிறிதாக வெளியே வந்தனர். அப்படி ஒரு நாள், எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்த வேளையில், ப்ரியங்கா திடீரென்று “குழந்தைக்கு இன்னும் பெயர் சூட்டுற பங்ஷனே பண்ணலயே?” என்று கேள்வி எழுப்பினாள்.
அப்போது தான் அது அனைவருக்கும் உரைத்தது. “பரவயில்லயே.. உனக்கும் மூளை எல்லாம் வேலை செய்து!” பக்கத்தில் இருந்த ராஜீவ் அவளின் காதருகில் கூறியதை கேட்டவுடன், “ஹாஹா ஹா!! சிரிப்பே வரல…” என்று நாக்கை துரத்தி பதிலளித்தாள்.
இதை பார்த்து அர்ஜுனும் சந்தியாவும், தும்முவது போல் செய்கை செய்து தாங்களும் அங்கே தான் இருக்கிறோம் என்று நினைவுலகிற்க்கு கூட்டி வந்தனர். இதற்க்குள் பெரியவர்கள் அடுத்த வெள்ளிக்கிழமையே பெயர் சூட்டும் விழாவை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
அதன்படியே, அடுத்த வெள்ளியன்று குழந்தைக்கு ‘ஆரவ்’ என்று பெயர் சூட்டினர். சந்தியா தான் பெயரை தேர்ந்தெடுத்தாள். மிகவும் நெருங்கிய சொந்தங்களை தான் கூப்பிட்டதால், பெரிதும் எந்த அசம்பாவிதமும் இன்றி விழாவும் இனிதே முடிந்தது.
விழா முடிந்து வந்த இரவு ராஜீவ் தன் மனைவிக்காக படுக்கை அறையில் காத்திருந்தான். இந்த ஒரு மாதக்காலமாக அவன் அவளிடம் சரியாக பேசக் கூடயில்லை… அவனுக்கு அர்ஜுனுடன் வெளியே அலையவும், அவனின் அலுவக வேலையும் நேரத்தின் பெரும் பகுதியை எடுத்தன.
இன்றைக்காவது அவளுடன் பேசி, அவளிடம் நெருங்க வேண்டும் என்று யோசித்தபடி இருக்க, அவனின் மனைவியோ அறைக்குள் வந்து இவனை ஆச்சரியமாக நோக்கினாள். பின்னே, தினமும் அவன் தூங்கியதும் தான் இவள் வருவது.
இன்று அவன் தூங்காமல் இருந்ததும், நாள் முழுக்க இவள் மேல் படிந்த அவன் கண்களின் தேடலும் அவளுக்கு எதையோ உணர்த்தியது.வந்த சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டு, முயற்சியும் பெற்று, ஒன்றும் அறியாதவள் போல, படுத்து தூங்க முயன்றாள் ப்ரியங்கா. வந்ததே கோபம் ராஜீவ்வுக்கு!
அவளை அவனின் பக்கமாக திருப்பி, “ஏன்டி, உனக்காக நான் இங்க ஒருத்தன் வெயிட் பண்ணிட்டு இருந்தா, நீ என்னனு கூட கேக்காம தூங்க போறியா??” என்று கொஞ்சும் குரலில் மிரட்டினான்.
“நீங்க எனக்காக வெயிட் பண்ணீங்களா? எனக்கு தெரியாதே!”
“உனக்கு தெரியாது?? இத நான் நம்பனும்? ஹ்ம்ம்” அவளின் முக்கை பிடித்து ஆட்டியபடி கேட்டவனை பார்த்து தலையசைத்து சிரித்தாள், ப்ரியங்கா. “என்ன பேசனும்” என்று கேடக்வும் மறக்கவில்லை.
“சும்மா தான் பேசலாம்னு” பதில் கூறியப்படி அவளின் இடையின் வனப்பில் விளையாடியபடி கூறினான் ராஜீவ். ஆனால், ‘சும்மா’ என கேட்டதும் களுக்கென்று சிரித்தாள் ப்ரியங்கா.
‘ஏன் இவ இப்போ சிரிக்கறா? என்ன சொல்லிட்டோம் நாம?’ என யோசித்த ராஜீவ்விற்க்கு சிறிது நோடிகளில் புரிந்து போனது. அவன் கூறிய வரிக்கு, ‘முத்தத்தால் பேசலாம்னு’ எனவும் ஹிந்தி மற்றும் தமிழை ஒன்றாக இணைத்து பொருள் வரும் என்பதை அறிந்தான்.
புரிந்தவுடன் மேல் அவளை இறுக அணைத்துக் கொண்டு, அவளின் காதில் முனுமுனுத்தான். “ஆமாடி, சும்மா தான் பேசப்போறோம்! என்ன ஓகேவா?”
உடலே சிலிர்த்து, காது மடல்கள் ஜீவ்வென்று சூடாகினாலும், அவன் கேட்ட கேள்விக்கு தானாக தலையசைத்து அவனை கட்டிக் கொண்டு, தாம்பத்தியம் எனும் கடலில் அவனுடன் சந்தோஷமாக மூழ்கிப் போனாள் ப்ரியங்கா.
காதலுடன் காமமும் சேர்ந்து விளையாடியதில் குடும்ப சாம்ராஜ்யத்தில், ராஜா ராணியாக அடியெடுத்து வைத்தனர். அவர்களின் செங்கோல் ஆட்சி என்றும் ஓங்கி வளரட்டும்…!
**********************************7 ஆண்டுகள் கழித்து*******************************************
“ப்பா…. இங்க பாருப்பா… ஆருண்ணா எனக்கு சாக்கி தரவே மாட்றான்”
தன்னுடைய ஆறு வயது மகள் ரித்திக்கா கூறிய புகாரை புன்னகையோடு கேட்டுக் கொண்டிருந்தான் ராஜீவ். அதற்க்குள் அவனின் ஆரவ்வும் அவனின் மகன் ரித்விக்கும் வந்துவிட இடம் அமளி துமளிபட்டது.
மூவரும் போட்ட சத்தத்தில் அவர்களின் தாய்மார்கள் வெளியே வந்துவிட, அதன்பின் தாய்மார்கள் போட்ட சத்தத்தில், இல்லை இல்லை அவர்களை பொறுத்தவரை அது அதட்டலில் மூவரும் அடங்கிவிட்டனர்.
சந்தியா ஆரவ்விடம் சாக்லேட்டை ரித்திக்காவிடம் கொடுக்க சொல்ல, அதன் படியே செயல் பட்டான் மகனும். “தேங்க்ஸ்” என்று அழகாக கூறி அவனிடம் இருந்து அதை வாங்கிய ரித்திக்காவை பார்த்ததும், ஆசை பொங்க அவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான் தந்தையவன்.
கூடவே, “அப்படி அம்மா மாதிரி! பிடிவாதம்!” என்று சொன்னது தான் தப்பாக போயிற்று. “அப்பா உங்களுக்கு அம்மாவ கிஸ் பண்ணனும்னா அவங்களுக்கு குடுங்க! எதுக்கு என்னை கிஸ் பண்றீங்க?” அவன் முத்தமிட்ட கன்னத்தை துடைத்தபடி கேட்டதில், ராஜீவ்வின் பக்கத்தில் இருந்த அர்ஜுன் அடக்கமாட்டாமல் சிரித்தான்.
சொல்லிவிட்டு, “வாங்க போயி விலையாடுலாம்” என்று தன் சகாக்கலையும் கூட்டிக் கொண்டு சென்றுவிட்டாள். ராஜீவ்வின் பாடு தான் திண்டாட்டம் ஆகியது. அவன் பெற்ற செல்வங்கள் இரண்டு பேருக்கும் இன்று ஆறாவது பிறந்த நாள்.
அதை கொண்டாடவே அனைவரும் ஒன்றுக் கூடி உள்ளனர். ஆம், அவனுக்கு ஆனொன்று பெண்ணொன்று என இரட்டை செல்வங்கள். உள்ளே சமையல் அறையிலும் இதை கேட்டு சந்தியா ப்ரியங்காவை கால்ய்த்தாள், நன்றாகவே.
ப்ரியங்கா எதை எதையோ கூறி அவளை சமாளித்தாள். மாலை நேரம் நெருங்கியதால் அனைவரும் விழா ஏற்பாடுகளில் முனைந்தனர். குட்டிஸ் உட்பட! ஆரவ்வும் இப்போது எல்லாம் அந்த ஷூ போட்டுக் கொண்டு நடமாடுவதால், அவனால் எல்லோர் போலவும் நடக்க, ஏன் ஓடக் கூட முடிந்தது.
அதுவே, அனைவரின் மனதையும் சந்தோஷத்தில் தள்ளியது…. விழாவிற்க்கு மிகவும் போராடி தன் இரண்டு செல்வங்களையும் தயார்படுத்தி கீழே அனுப்பிவிட்டு தான் தயார் ஆக, அறை கதவை மூடப் போனாள் ப்ரியங்கா.
அப்போது பார்த்து கதவை முட்டிக் கொண்டு வந்தான் ராஜீவ். “நான் ரெடியாகனும். கொஞ்ச நேரம் வெளியே இருங்களேன்!”
இவளின் குரலே கேட்காதது போல, அவளை ஆழ்ந்த பார்வையுடன் நோக்கி, இடுப்பில் கை கோர்த்து அணிஅத்துக் கொண்டான் அவன்…! ‘விடுங்க விடுங்க’ என அவள் செய்த விடுபடும் முயற்சிகளை வெற்றிகரமாக தோற்கடித்து, முன்னேறி அவளின் கன்னத்தில் நெற்றியில் முத்தமிட்டான் ராஜீவ்.
அவள் தோய்ந்து தன்னை மறந்து, அவனிடம் தஞ்சம் புகுந்த நேரத்தில், அவளின் இதழ்களில் காதல் கவிதைகளை எழுதினான், அந்த கணவான். சிறிது நேரம் கழித்து,
அவளை தானாக விடுவித்து, “என்னோட பொண்ணு சொன்னா நான் கேப்பேன்! அவ அம்மாக்கு கிஸ் கொடுங்கனு சொன்னா குடுத்துட்டேன்! போதுமா?” என அவன் வினவவும், அவனை செல்லமாக தோள்கலில் அடித்தாள் ப்ரியங்கா.
“இல்லனா மட்டும் இவரு ரொம்ப நல்லவரு!! கீழ பங்ஷன் வெச்சிட்டு என்னதிது ராஜ்?”
“ஐய்யோ! இது கூடவா தெரியல? இது பேரு ‘கிஸ்’… ஹிந்தியில ‘சும்மா’.. தமிழ்ல…” அவனை முடிக்க விட்டாமல், அவனின் வாயை தன் கைகளால் முடினாள். அப்போது கரக்டாக அவளின் மொபைல் ஒளித்தது.
என்ன பாட்டுடன் என்பது தான் இங்கே முக்கியம்.
“Yesss, I love this idiot!! I love this lovable idiottttttttttt !!!!!!!!
காதல் கவிதைகள் படித்திடும் நேரம், இதழ் ஓரம்”
இதை கேட்டு தலையில் அடித்து கொண்டு, “இந்த பாட்டை மாத்தவே மாட்டியாடி??” என சலிக்கும் குரலில் கேட்டான் ராஜீவ்…. ‘மாட்டேன்’ என்பதை இடமும் வலமுமாக தலையசைத்து, குறும்பான புன்னகையுடன் அவனுக்கு சொல்லிட்விட்டு, அவனை இறுக கட்டிக் கொண்டாள் ப்ரியங்கா.
இந்த சிரிப்பும் சந்தோஷமும் எப்போதும் நிலைக்கட்டும் என வேண்டியபடி விடைபெறுவோம்!!

அத்தியாயம் இருபத்திமூன்று

அத்தியாயம் இருபத்திநான்கு