அத்தியாயம் – 7
ராஜீவ் ப்ரியங்கா சொன்னதை மதிக்கவேயில்லை!! எப்போதும் போல், அவள் ஏதாவது உப்புச் சப்பு இல்லாத விஷயத்தை சொல்லப் போகிறாள், என அவனே யூகித்துக் கொண்டான்.
பிறகு அதைப் பற்றி மறந்தே போனான் என்பதே உண்மை!! ஆனால், ப்ரியங்கா மறக்கவில்லை! அவன் ஒரு நாள் இல்லை என்றால், இன்னொரு நாள் இதை பற்றி கேட்பான், அப்பொழுது அவனுக்கு பதில் கூறாமல் அவனிடம் வம்பு பண்ண வேண்டும் என்று முடிவு செய்தாள்.
அதற்க்குப் பின் தான் அவளுக்கு தூக்கமே வந்தது! அடுத்த நாள், சனிக்கிழமை என்பதால், ப்ரியங்கா விடிந்ததும் தெரியாமல், நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
ராஜீவ்வும் அவள் எழுந்துக் கொள்ள காத்திருந்து, காத்திருந்து, வெறுத்துப் போய், கடைசியில் அவளை எழுப்பினான்.
சோபாவிலேயே புரண்டவள் தமிழ் பாதி, மராட்டி மற்றும் ஹிந்தி மீதி என உளறினாள். ராஜீவ் மீண்டும் நன்றாக உலுக்கி, “ஹே ப்ரியங்கா… இங்க பாரு! மார்னிங் டிப்பனுக்கு சோளா பூரி செய்யறேன்னு சொல்லிட்டு, இப்படி தூங்கிட்டு இருக்க?
சீக்கரமா போய் பண்ணு. எனக்கு டைம் ஆச்சு!” ராஜீவ் சொன்னது காதில் விழுந்ததும் படக்கென்று எழுத்து அமர்ந்தாள் ப்ரியங்கா! ஆனால், அந்த தூக்க கலக்கத்திலும், அவனை பார்த்து, “ஹே பகவான்! அது சோளா பூரி இல்ல… சென்னா பட்டுரா” என்று அவனை திருத்தவும் மறக்கவில்லை.
“ஏதோ ஒன்னு! சீக்கரமா பண்ணு… அப்புறம் லேட் ஆகிடும் எனக்கு!” என்றான் அவசரமாக. அவளும் காலைக் கடன்களை முடித்து, கீழே இறங்கி வேகமாக செய்ய ஆரம்பித்தாள்.
போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ராஜீவ். நன்றாக ருசிப் பார்த்து சாப்பிடுபவன் அவன். ப்ரியங்காவும் சிறு வயதில் இருந்தே சமைப்பதால், அவளின் சமையல் அந்த வீட்டில், அனைவருக்கும் பிடித்து இருந்தது.
அவள் செய்யும் சாப்பாட்டிற்க்கு அடிமை ஆகி விட்டோமோ? ஆம், என்ற பதிலையே அவன் மனமும் கூறியது. அதற்க்காக, அவன் வருத்தப்படவும் இல்லை. ஆனால், விரைவிலேயே அவன் மனம் அவள் காதலுக்கும் அடிமையாக போவதை அவன் அறியவில்லை.
ஒரு மணி நேரம் கழித்து டைனிங் டேபிளில் உட்கார்ந்து சமையல் அறை பக்கம் பார்த்தான். ஐந்து நிமிடத்தில், ஆவி பறக்க, அவன் முன் சோளா பூரி, சாரி சாரி, சென்னா பட்டுரா வைக்கப்பட்டது.
இவன் மட்டும் எப்படி சாப்பிடலாம், என்பது போல, அவன் தங்கை நிஷாவும் வந்து சாப்பிட துவங்கினாள். அன்றைக்கு மிகவும் நல்ல மூடில், இருந்தான் ராஜீவ். ப்ரியங்கா அடுத்த பூரி வைக்கும் போது, அவளை நக்கலாக பார்த்து, “நிஷா ஒரு கவிதை சொல்லட்டுமா?” என்றான்.
நிஷா “என்ன கவிதையா? நீயா?? சரி சொல்லு!” என்றாள் பூரியை மென்றுக்கொண்டே! ப்ரியங்காவிடம் பார்வை இருக்க, நிஷாவிடம் சொல்லுவது போல் கூறினான் ராஜீவ், “ஒரு மைதா மாவே.... மைதா மாவு பூரி சுடுகிறதே…. ஆச்சரியக்குறி!!!”
பார்த்திபன் ஸ்டைலில் அவன் கூறியதும் நிஷா சிரிக்க ஆரம்பித்தாள். ஆனால், ப்ரியங்காவிற்க்கு ஒன்றும் புரியவில்லை என்பது அவள் முழித்த முழியில் இருந்தே தெரிந்தது! புன்னகையுடன் கை கழுவ சென்றான் ராஜீவ்.
ராஜீவ் ஆபிஸ்க்கு கிளம்பியப் பின் அவள் நிஷாவிடம் விளக்கம் கேட்டாள். நிஷா கூறிய விளக்கத்தில், தான் அவள் நேடு நாள் சந்தேகம் முடிவுக்கு வந்தது. முதல் இரவன்று, அவன் அவளை ‘மைதா மாவு’ என்று கூறவும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் யாரிடம் என்னவென்று கேட்பது?!
இப்பொழுது அர்த்தம் தெரிந்ததும், அவன் தனக்கு ஒரு செல்ல பெயர் வைக்கும் அளவுக்கு சென்று விட்டான் என்று சந்தோஷப்பட்டாள் ப்ரியங்கா!!
அன்று முழுக்க சந்தோஷமாக இருந்தாள் அவள். அடுத்த நாளும் நன்றாக தான் விடிந்தது! காலையில், சாப்பிடும் போதே, அனைவரிடமும், ப்ரியங்கா அன்று மாலையில் அவள் நண்பர்களை பார்க்க போவதாக கூறினாள்.
எல்லோரும் சம்மதமாக தலையசைக்கவும் கீதா மட்டும், “சீக்கரமா வரனும் ப்ரியா! நைட் டைம் லேட் ஆக்க கூடாது. சரியா?” என்று கேட்டார். ப்ரியங்கா அவரை பார்த்து, “ஓகே அத்தை! டன்” என்று கண்ணடித்து கூறினாள்.
டிபன் முடிந்ததும், ரூமில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜீவ். அவனிடம் வந்து நிறைய தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்டாள் ப்ரியங்கா! எரிச்சல் அதிகமுற, “இப்போ எதுக்கு இதை எல்லாம் கேக்கற?” என்றான் ராஜீவ்.
“ஹான்…. எனக்கு வேணும்! ப்ளீஸ் டெல் மீ” என்று கெஞ்சினாள் ப்ரியங்கா. அப்போதும் அசராமல், “எனக்கு வேலை இருக்கு… உன்னோட டவுட் எல்லாத்தையும் உன்னோட தமிழ் டீச்சர்க்கிட்ட கேட்டுக்கோ. எனக்கு பொறுமையில்ல அதுக்கெல்லாம்!” என்று முடித்தான் ராஜீவ்.
“பொறுமை மீன்ஸ் பேஷன்ஸ் தான ராஜ்?” என்று அடுத்த கேள்வியை அடுக்கினாள் அவன் மனைவி! ‘கடவுளே!!! இவள என்ன செய்யறது? இவளை எல்லாம் பெத்தாங்களா இல்ல ஆர்டர் குடுத்து செஞ்சாங்களா?’ ஒரு விளங்காத பார்வையுடன் அவளை பார்த்தான் ராஜீவ்.
அவன் டென்ஷன் ஆவதை புரிந்துக் கொண்டு, “தெரியாதா? ஓகே நோ ப்ராப்ளம். நா அத்தை கிட்ட கேக்கறேன்!” என்று கூறி ஓடியே போனாள் ப்ரியங்கா!
அதற்க்குப்பின் அவனை எதுவும் வம்பு செய்யவில்லை அவள். ஈவ்னிங் ஒரு ஐந்து மணிக்கு கிளம்பினாள் ப்ரியங்கா. ராஜீவ்விடமும் சொல்லிக் கொண்டு தான்.
அவள் கிளம்பிய சிறிது நேரத்தில் அவன் கல்லூரி நண்பன் அவனை மொபைலில் கூப்பிட்டு, பீச்சில் மீட் பண்ணலாம் என்று சொன்னான். சரி என்று இவனும் பைக்கில் கிளம்பிச் சென்றான்.
போகும் போது, வழியில் ஒரு சிக்னலில் நிறுத்தி இருந்த போது, எதர்ச்சையாக பக்கவாட்டில் திரும்பினான் ராஜீவ். அப்போழுது பார்த்த காட்சியை அவனால், நம்பவே முடியவில்லை.
பின்னே அவன் மனையாள், அர்ஜுன் மற்றும் சந்தியாவுடன் ஒரு புகழ்ப்பேற்ற காபி ஷாப்பில், அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டல்லவோ இருந்தாள்!
அதற்க்குள் சிக்னல் விழுந்து, எல்லா வண்டியும் கிளம்பவும் ராஜீவ்வும் பைக்கை அடுத்த யூ-டேர்னில் திருப்பி, அந்த காபி ஷாப்பிற்க்கு வந்து சேர்ந்தான். அவனுக்குள் பல கேள்விகள்….
‘எப்படி இவ அவங்க கிட்ட பேசுறா? அதுவும் சும்மாவா?! சிரிச்சுச் சிரிச்சு இல்ல பேசறா! ரிசப்ஷன்ல இவங்க வரற்த பார்த்து நம்ம கைய்யை பயந்து புடிச்சவளா இவ? கடவுளே…. இப்போ என்ன பண்ணி வெச்சுருக்கா தெரியலையே….?
இது எல்லாத்துக்கும் மேல, என்கிட்ட பொய் வேற சொல்லிருக்கா! ப்ரெண்ட்ஸ பார்க்க போறேன்னு சொல்லிட்டு இங்க என்ன பண்ணிட்டு இருக்கா?’
அவளை மனதிற்க்குள் திட்டியப் படியே காபி ஷாப்பிற்க்குள் சென்றான். அர்ஜுனும் சந்தியாவும் ப்ரியங்காவிற்க்கு எதிர்பக்கம் உட்கார்ந்திருந்தனர். அதனால் அவனை முதலில் பார்த்தது அர்ஜுன் தான்.
ராஜீவ்வையே பார்த்துக் கொண்டே இருந்ததால், மற்ற இரு பெண்களும் அவன் பார்வை சென்ற பக்கம் திரும்பினர். பார்த்தவுடன் பளிச்சென்று ஆனது ப்ரியங்காவின் முகம்.
அவன் ப்ரியங்காவின் அருகில் வந்து நின்றவுடன், “ஹே ராஜ்? கரக்டா வந்துட்ட மேன்! ஜஸ்ட் நௌ, நா இவங்க கிட்ட எப்படி வீட்டுக்கு போறதுனு டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்த…
நீங்களே வந்து…. வந்துட்டீங்க! நா ராஜ் கூடவே வீட்டுக்கு போறேன் பைய்யா!” என்று ராஜீவ்விடம் ஆரம்பித்து, அர்ஜுனிடம் முடித்தாள்.
ராஜீவ்விற்க்கு என்ன சொல்லவது என்றே புரியவில்லை, ஒரு நிமிடம்…. ஆனால், அவனை யோசிக்கவிடாமல் ப்ரியங்கா அவனின் கையை பிடித்து, இல்லை இல்லை, இழுத்து உட்கார வைத்தாள்.
அங்கே ஒரு நிமிடம், மவுனம் நிலவியது. சிறுது நேரத்திற்க்கு பின், சந்தியாவும் அர்ஜுனும் அவர்களுக்குள் மிக மெல்லிய குரலில், பேசிக் கொண்டனர்.
இங்க, நம்ம ஹீரோ என்ன செஞ்சிருப்பார்? அது, அதே தான்! ப்ரியங்கா பக்கம் திரும்பி, வார்த்தைகளை கடித்துத் துப்பினான்! “ப்ரெண்ட்ஸ பார்க்க போறேன்னு சொல்லிட்டு இங்க என்ன பண்ணிட்டு இருக்க? இவங்க தான் நீ பார்க்க வந்த ப்ரெண்ட்ஸா?” என்று ஒரு இறுகிய முகத்துடன் கேட்டான் ராஜீவ்.
இதை கேட்டு, ஒரு புரியாத முகத்துடன், “எஸ், இவங்க தான் என்னோட ப்ரெண்ட்ஸ்! இவங்கள பார்க்க தான் நா வந்தேன்” என்றாள் ப்ரியங்கா சாவதானமாக!
‘இவனுக்கு இதுல என்ன டவுட்? ஹோ… சாருக்கு விஷயமே தெரியாதுல?’ என்று அவளுக்குள் நினைவுக் கூர்ந்தாள்.
அதற்க்குள் பேசி முடித்திருந்தனர் அர்ஜுன் சந்தியா தம்பதியர். அர்ஜுன் ப்ரியங்காவை நோக்கி, “நாங்க கிளம்பறோம் ப்ரியா… டைம் ஆச்சு” என்று கூறிக் கொண்டே எழுந்தான்.
சந்தியாவும் எழுந்து, “பை ப்ரியா” என்று கைகளை ஆட்டி விடைப் பெற்றாள். ராஜீவ்விடம் ஒரு சிறு தலையசைப்புடன் விடைப்பெற்றனர், இருவரும்.
அவர்கள் இருவரும் சென்றவுடன், ராஜீவ் ப்ரியங்காவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ரோமான்டிக்காலாம் எதுவும் இல்லை. எதாவது விளக்கம் சொல்லுவாள் என பார்த்தான்.
ஆனால், அவன் மனைவி அவனையே மிஞ்சியவள் இல்லையா? அவள் மேனு கார்டையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள்!! இரண்டு நிமிடங்கள் கழித்து, “ராஜ், உங்களுக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்? காபி ஆர் எனி திங் எல்ஸ்?” என்று கேட்டு ராஜீவ்வின் டென்ஷனை ஏற்றினாள்.
ராஜீவ் அவளை முறைத்து ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, வெளியே செல்ல துவங்கினான். அவனின் பின்னே அவன் மனைவி ஓடலானாள்!!
பைக்கில் அவன் பின்னால் ஏறி அமர்ந்ததோடு சரி! அதற்க்கு பின் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சிறிது நேரம் கழித்து அவன் பைக்கை நிறுத்தவும் தான் சுய நினைவிற்க்கு வந்தாள் ப்ரியங்கா!
நின்ற இடம் ஒரு கோவிலின் முன். “வீட்டுக்கு போலயா? இங்கே எதுக்கு…?” அவள் முடிக்கக் கூட இல்லை, அதற்க்குள் அவளின் கணவன் அவளின் வாயை அடைத்துவிட்டான்!! கைகளை கொண்டு தான்!
“எந்த கேள்வியும் கேக்க கூடாது. சாமி கும்பிட்டு அப்புறம் என்ன வேண்ணும்னா கேளு!” என்றான் அவன். ஆனால், அவன் விரல்கள் தன் இதழ்களில், பட்டதற்க்கே மெய் சிலிர்த்து, சந்தோஷப்படலானாள் ப்ரியங்கா. அதற்க்கும் சேர்த்து சாமிக்கு நன்றிகள் கூறினாள்.
சாமி கும்பிட்டுவிட்டு, இருவரும் கோவிலின் உள்ளே ஒரு ஓரமாக அமர்ந்தனர். இப்போழுது கோபம் குறைந்து விட்டது ராஜீவ்விற்க்கு! இறைவனை வணங்கினால் கோபம் குறையும் என்று தானே கோவிலுக்கு வந்தான். அதனால், பொறுமையாகவே தன் கேள்விகளை கேட்டான் அவளிடம்.
“எப்படி அவங்க உனக்கு ப்ரெண்ட்ஸ் ஆனாக?”
“நீங்க கேக்க மாட்டேன்னு சொன்னிங்க! தென் இப்போ கேக்கறீங்க?”
ப்ரியங்காவின் குரலிலே நக்கலும், கேலியுமே நிறைந்து இருந்தது! அப்பொழுதும் ராஜீவ்விற்க்கு நினைவு வரவில்லை, எதை பற்றி சொல்கிறாள் என…
ப்ரியங்கா அன்றைக்கு நடந்ததை அவனுக்கு திரும்ப கூறவும் தான் ஞாபகத்திற்க்கு வந்தது ராஜீவ்விற்க்கு!
அவனுக்கு இப்பொழுது மறுபடியும் கேக்க மனம் வரவில்லை. பேசாமல், அவன் முகத்தை தூக்கி வைத்து கொண்டு இருக்கவும், ப்ரியங்கா அதை தாங்க முடியாமல், உடனே நடந்ததை விளக்க ஆரம்பித்தாள்.
“ஓகே. நோ ப்ராப்ளம்! நானே சொல்றேன். அன்னிக்கு நான் ஆபிஸ் முடிஞ்சு வரும் போது வெஜிடெபிள்ஸ் வாங்க மார்க்கெட் போனேன். அப்போ, அங்க சடன்னா ஒரு சத்தம்! நான் திரும்பி பார்த்தேன்!
அங்க சந்தியா, அன்கான்ஷியஸ்ஸா இருந்தாங்க. சோ, நான் அவங்கள ஹாஸ்பெட்டல்ல அட்மிட் பண்ணேன்.
தென், சந்தியாவோட மொபைல் எடுத்து அர்ஜுன் பைய்யாக்கு இன்பார்ம் பண்ணேன். சோ, ஹீ கேம்! டாக்டர், சந்தியா பெர்க்னேன்ட்டா இருக்கருதுனால தான் மயக்கம் சொல்லிட்டாங்க!
அப்புறம் பைய்யா நிறைய தாங்க் பண்ணாங்க! நோ நோ தாங்க்ஸ் சொன்னாங்க! சந்தியாவும் தாங்க்ஸ் சொல்லனும், சோ வெளிய மீட் பண்ணனும்னு பைய்யா சொன்னாங்க! சோ, டுடே மீட் பண்ணோம். ஹ்ம்ம்ம்… தாட்ஸ் ஆல், யுவர் ஆனர்!”
சீரியஸ்ஸாக ஆரம்பித்தாலும், காமெடியாக முடித்தாள் ப்ரியங்கா. இதுவே அவள்! எல்லாவற்றையும் கேட்டவுடன், ‘இவ்வளவு தானா?’ என்று இருந்தது ராஜீவ்விற்க்கு!
அவன் என்னென்னவோ நினைத்து இருந்தான். அதனுடன் கம்பேர் பண்ணும் போது இது எல்லாம் ஒன்றும் இல்லை தான்.
ஆனாலும், ப்ரியங்காவை ஒரு தீவிரப்பார்வையுடன் நோக்கி, “எல்லாம் ஓகே தான். இருந்தாலும் யாரையும் உடனே நம்பாத! இந்த மாதிரி க்ளொஸா மூவ் பண்ணாத. உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்!” என்றான்.
அவன் இப்படி கூறியவுடன் ஒரு சின்ன “ஓகே” மட்டும் சொல்லி, மனதில் உணரப்பட்ட வலியுடன் தன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள் ப்ரியங்கா.
ஆனால், எல்லாம் ஒரு நிமிடம் தான் தன் மனதின் உணர்வுகளை அவனுக்கு வெளிக்காட்டாமல், பழைய நிலைமைக்கு வந்தாள்.
நீண்ட பெருமூச்சு விட்டு, “போலாம்” என்று கூறி எழுந்தான் ராஜீவ். “எங்க போறோம்?” என்று கேட்டாள் ப்ரியங்கா அவனின் பின்னே வந்துக் கொண்டு.
ஒரு விசித்திரமான பார்வையை அவளிடம் வீசி, “வீட்டுக்கு” என்று பதிலளித்தான் அவன்.
“என்ன வீட்டுக்கா? மேரேச் முடிஞ்சு, திஸ் இஸ் ஃபர்ஸ்ட் டைம் என்னை வெளிய கூட்டிட்டு வந்திருக்க… கண்டிப்பா வேற எங்கயாவது போனோம். இல்லனா இல்லனா…” என்று கோபமாக இழுத்துக் கொண்டிருந்தாள் நம் நாயகி.
காலில் செருப்பை மாட்டிய படியே, அவளை பார்த்து சிரித்து, “இல்லனா என்ன பண்ணுவ?” என்று கேட்டான் ராஜீவ்.
அவளின் முகத்தை பார்த்து சிரிப்பு பொங்கியது அவனிற்க்கு! அந்த சிரிப்பை பெரிதாக்கவே, கீழ் வருபவற்றை கூறினாள் ப்ரியங்கா.
“இல்லனா, நா அத்தை கிட்ட சொல்லுவேன்” இதை கேட்டதும் அடக்க மாட்டாமல், சிரிக்க ஆரம்பித்தான் ராஜீவ்.
“நீ வேணும்னா உங்க அத்தைக்கிட்ட சொல்லிக்கோ!! சின்ன பாப்பா மாதிரி… எனக்கு ஒன்னும் பயம் இல்ல!” என்று நக்கலாக கூறினான். அவன் சொன்னதை கேட்டவுடன் மிகுந்த கோபத்திற்க்கு ஆளானாள் ப்ரியங்கா.
பைக்கின் அருகில், சென்று நின்றுக் கொண்டாள், அதே கோப முகத்துடன். ராஜீவ்வின் நல்ல மூடோ, இல்லை ப்ரியங்காவின் கோப முகத்தை பார்த்து வந்த சிரிப்போ, எதுவோ ஒன்று அவளிடம் சென்று, “பக்கத்திலயே எங்கயாவது போலாம். டைம் ஆச்சு” என்று கூற வைத்தது, ராஜீவ்வை!!
ப்ரியங்காவும் சந்தோஷமாக அருகில் இருக்கும் ஹோட்டலின் பெயரை கூறினாள்.
கூடவே, வீட்டிற்க்கும் தகவல் கொடுத்தாள், அவர்கள் வர லேட் ஆகும் என. ஹோட்டலிலும் ப்ரியங்காவே பேசிக் கொண்டிருந்தாள் எப்பொழுதும் போல!
ராஜீவ், “எப்படி உன்னால் இப்படி பேச முடியுது? வாய் வலிக்காதா?” என்பன போன்ற கேள்விகளை கேட்டே அவளை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான்.
வீட்டிற்க்கு மகிழ்ச்சியுடனே திரும்பினர். ஆனால், இந்த மகிழ்ச்சி எல்லாம் இன்னும் ஒரு வாரத்திற்க்கு தான் என்று அவர்களுக்கு தெரியவில்லை.
ஆம், ஒரு வாரம் கழித்து ராஜிவ், ஸ்பெஷல் ட்ரெயினிங்கின் பெயரில் தலைநகரம் டெல்லிக்கு செல்ல வேண்டும் என்று வந்து நின்றான். அதுவும், ஒரு சில மாதங்களுக்கு!!
அதை கேட்டு தலை சுற்றியது ப்ரியங்காவிற்க்கு!