அத்தியாயம் 8
அன்றைக்கு என்னவோ நன்றாக, இன்னும் சொல்ல போனால் சந்தோஷமாக தான் இருந்தாள் ப்ரியங்கா. அடுத்த நாளும் நிஷாவின் கேலி பேச்சால், வீடே கலகலத்தது.
“ரெண்டு பேரும் தனித்தனியா போயிட்டு, ஒன்னா திரும்ப வர்றீங்களே! சரி இல்ல, இது சரியே இல்ல! அம்மா நீங்க இதை எல்லாம் கேக்க மாட்டிங்களா?” என்று காலையில், டிபன் சாப்பிடும் போது, தன் அண்ணனை வாரிக் கொண்டிருந்தாள்.
“என்ன கேக்கனும்? ஒன்னா போயிட்டு தனித்தனியா வந்தா தான் தப்பு! தனித்தனியா போயிட்டு, ஒன்னா திரும்ப வந்தா, தப்பே இல்ல!” என்று தன் பேரனுக்கு சப்போர்ட் செய்தார் ஈஷ்வர்.
“தாத்தா, ஒரு ப்லோல போயிட்டு இருக்கும் போது, நடுவுல வந்து டிஸ்டர்ப் பண்ணாதிங்க! அப்புறம் நான் சொல்ல வந்ததை மறந்துடுவேன்.” நிஷா கோபமாக முகத்தை வைத்து கூறினாள்.
“அது தான எங்களுக்கு வேணும்!!” சிரித்தபடி கூறினான் ராஜீவ். இதில் தாத்தாவிடம் ‘ஹைபை’ வேறு!
பார்த்த நிஷாவிற்க்கு யார், யாரை ஓட்டுவது என்று சந்தேகமாக போயிற்று. ப்ரியங்கா, ‘உங்க பேச்சுக்கே நான் வரலைப்பா’ என்ற தோனியில், நின்றிருந்தாள். ஆனால், அவளை பேச்சில் இழுத்துக் கொண்டே இருந்தாள், அவள் நாத்தனார் கம் தோழி!
ப்ரியங்காவும் ஒரு கட்டதிற்க்கு மேல், கூடக் கூட பேச ஆரம்பித்தாள். இதை பார்த்து, காதை தேய்த்துக் கொண்டே, கை கழுவச் சென்றான், ராஜீவ். ஆனால், அவன் மனைவியும் தங்கையும் அதை கண்டுக் கொள்ளவேயில்லை!
சிறிது நேரம் கழித்து, அவன் அலுவகத்திற்க்கு கிளம்பிச் சென்றான். அவன் கிளம்பினவுடன், நிஷாவை தனியே அழைத்து, “ஏன் கலாய்க்குற? தென் உங்க அண்ணா என்னை வெளியே கூட்டிட்டு போகவே மாட்டா” என்று தன் ஆதங்கத்தை கொட்டினாள் ப்ரியங்கா.
பாவமான முகத்தை வைத்து அவள், சொல்லவும் ஒரு நிமிடம் ராஜீவ் மேல், போபமாக வந்தது நிஷாவிற்க்கு. ஆனால், உடனேயே முகத்தை சீராக்கிக் கொண்டு, “ஏன் அப்படி சொல்ற ப்ரியா? ராஜீவ்வோட வெளிய போகனும்னு அவ்ளோ ஆசையா?”
நான் வேணும்னா ராஜீவ் கிட்ட சொல்லட்டுமா, ‘ப்ரியாவை அடிக்கடி வெளிய கூட்டிட்டு போடா அண்ணா’ அப்படினு?” என்று கண்ணடித்து கேட்டாள் நிஷா.
அவளின் காதை பிடித்து திருகி, அவளை செல்லமாக அடிக்க ஆரம்பித்தாள் ப்ரியங்கா…..
இவர்களின் அன்னொன்யத்தை பார்த்து சந்தோஷப்பட்டனர் ராஜேந்திரனும் கீதாவும்!
ஆனால் தாத்தாவின் நினைப்பு எல்லாம் வேறாக இருந்தது…. ‘இவங்க ஒண்ணா இருந்து என்ன பண்ண? ராஜீவ்வும் ப்ரியாவும் ஒண்ணா இருந்தா சந்தோஷம் தான்’ என்று நினைத்தார் ஈஷ்வர். அவர் எண்ணமும் நியாயமானது தானே??
***************************************************************************************************
வீட்டில் இருந்து கிளம்பிய ராஜீவ், சென்னை ட்ராப்பிக்கில் ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்தான். எரிச்சலாக இருந்தான் அவன், ட்ராபிக்கால். அப்பொழுது அவன் தொலைப்பேசி, தன் பங்கிற்க்கு தொல்லைப் பண்ணியது.
எடுத்துப் பார்த்தால், அவன் மேலதிகாரி மற்றும் சென்னை கமிஷ்னர், தினகரன் தான் அழைத்துக் கொண்டிருந்தார்.
அவசரமாக அட்டென்டு செய்து பேசினான், ராஜீவ். அவனை கமிஷ்னர் அலுவகத்திற்க்கு உடனடியாக வரச் சொன்னார் தினகரன். என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே வண்டியை செலுத்தினான்.
கமிஷ்னர் ஆபீஸில், அவனுக்கு முன்பே அவன் அஸிஸ்டென்ட் கவுதம் இருந்தான்.
ஏதோ பெரிய விஷயம் தான், என்று உள்ளுக்குள் மணி அடித்தது ராஜீவ்விற்க்கு. இருவரும் தினகரனின் அறைக்கு சென்றனர். இருவரையும் அமரச் சொன்னவர் ஒரு நிமிடம் அமைதிக் காத்தார்.
பிறகு, கவுதம்மை ஜாடை காட்ட, அவன் ராஜீவ்விற்க்கு விஷயத்தை சொன்னான். “சார், நேத்து நைட், கிருஷ்ணாவை அவன் வீட்டிலேயே மர்டர் பண்ணிட்டாங்க சார்”
தன் காதுகளையே நம்ப முடியாமல், உட்கார்ந்து இருந்தான், ராஜீவ். ‘எப்படி? எப்படி?? ஏன்?’ இது மட்டுமே அவன் நினைவுகளில், இருந்தது.
அவன் இவ்வளவு குழம்பக் காரணம், கிருஷ்ணா போன வாரம் தான், பெயிலில் வெளியே சென்றான். ‘அப்பொழுது யாரோ, திட்டமிட்டு செய்து இருக்கின்றனர்.’ அவனின் குழப்பமான முகத்தை பார்த்து, அவனுக்கு எல்லாம் விளக்க ஆரம்பித்தார் தினகரன்.
“ராஜீவ், போன வாரம் தான் அவன் அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு, பெயில்ல வெளிய எடுத்தாங்க! ஆனா, இந்த ஷேக் அவனை சும்மா விடாம, அவனையும் அவன் அம்மாவையும் நேத்து ராத்திரி போட்டுட்டான்!” என்றார் ஒரு வறண்டு போன குரலில்.
“என்ன சார் சொல்றீங்க? அவன் அம்மாவுமா?” அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்தான் ராஜீவ்.
இப்பொழுது கவுதம் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தான். “நான் தான் சார், அங்க இன்வஸ்டிகேட் பண்ண போனேன். நேத்து ராத்திரி ஒரு ஒன்பது மணி போல, கடைசியா கிருஷ்ணாவையும் அவன் அம்மாவையும் பார்த்திருக்காங்க, பக்கத்து வீட்டில இருக்கறவங்க.
அதுக்கு அப்புறம் என்ன ஆச்சுனு யாருக்கும் தெரியல. காலையில, தான் பால்க்காரன் பார்த்து, பக்கத்து ஸ்டெஷனுக்கு இன்பார்ம் பண்ணிருக்கான். கத்தியில தான் சார் கொலை பண்ணிருக்காங்க. கழுத்த அறுத்து வெட்டிருக்காங்க!
எத்தன பேர் வந்தாங்கனு தெரியல…. பட், என்னோட கெஸ் கரக்ட்னா, இந்த கொலைக்கு காரணம் முழுக்க முழுக்க ஷேக் தான்.”
இந்த விளக்கத்தை கேட்டதும் ராஜீவ்விற்க்கு தோன்றியது எல்லாம் இது தான், “சே!! நான் அவனை வெளிய விட்டுருக்க கூடாது. பெரிய தப்பு பண்ணிட்டேன். பச்ச்…”
அதற்க்குள், தினகரன் பேச ஆரம்பித்தார். “உன்னை இன்னும் முடிக்காம இருக்கான்னு அவனை கொலை பண்ணிட்டாங்க, ஷேக் ஆளுங்க! அப்படித் தான நினைக்கிற ராஜீவ்?”
“இதுல என்ன சார், டவுட்? கண்பார்ம்மா அது தான் காரணம்! நாளுக்கு நாள் ரொம்ப டேன்ஜரஸா ஆகிட்டு வரான் சார், இந்த ஷேக். இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகனும்”
ராஜீவ்வின் குரலிலும் முகத்திலும் தீவிரமும் கொலை வெறியும் தாண்டவமாடியது கண்டு, கவுதமே பயந்து போனான்.
ஆனால், தினகரன் மிக பொறுமையாக, “நாம என்ன பண்ண முடியும், ராஜீவ்? ஹி இஸ் அ வெரி பிக் கிரிமினல்…. அவ்வளவு ஈஸியா அவனை ஒன்னும் பண்ணிட முடியாது.” என்றார்.
“பண்ண முடியும் சார்! கண்டிப்பா பண்ணலாம். நீங்க நினைச்சா முடியும்!” ராஜீவ் பீடிகை வைத்து தினகரனை நோக்கினான்.
“நான் நினைச்சா முடியுமா? என்ன சொல்ல வர?” திரும்பி கவுதமை நோக்கி, ஒரு பார்வை பார்த்து, “எனக்கு ஒரு இன்பர்மேஷன் கிடைச்சுது சார்…. அதை உங்க கிட்ட சொல்லி, பெர்மிஷன் வாங்கனும்னு நானே நினைச்சுட்டு இருந்தேன்.
கவுதமுக்கு மட்டும் தான் இது வரைக்கும் அந்த விஷயம் தெரியும். எல்லோருக்கும் சொல்லலாம்னு இருந்தேன். அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு! ஷேக் டெல்லில தான் இப்போ இருக்கான் சார்.”
இதை கேட்டு ஆச்சரியம் அடைந்த தினகரனுக்கு, மேலும் சில விஷயங்கள் ராஜீவ் கூறினான். ஆனால், எல்லாவற்றையும் சொல்லிய பின்னர், அவன் கேட்டதை மறுத்தார், தினகரன்.
“வேணாம் ராஜீவ். உன்னோட உயிருக்கே ஆபத்தா முடியும். சோ, புரிஞ்சிக்கோ!” என்றார், பொறுமையாக!
பின்னே, அவன் டெல்லிக்கே சென்று, ஷேக்கை அரேஸ்ட் பண்ணவோ இல்லையென்றால் என்கவுன்டர் பண்ணவோ அனுமதி கேட்டால், யார் தான் ஒத்துக் கொள்வார்?
ஆனால், அவரை மிகவும் வற்புறுத்தவும், தினகரன் கொஞ்சம் கொஞ்சமாக மசிய ஆரம்பித்தார். கூடவே, கவுதமும் தன் பங்கிற்க்கு வற்புறுத்த ஆரம்பித்தான்.
கடைசியாக, “ஓகே! இதை பத்தி நான் ஐ.ஜீ. கிட்ட பேசிட்டு சொல்றேன். அது வரைக்கும் கொஞ்சம் அமைதியாக இருங்க!” என்று சொன்னார்.
ராஜீவ்வும் கவுதமும் அவரிடம் விடைப்பெற்றுக் கொண்டு, தங்களின் வேலைகளை கவனிக்க சென்றனர். தங்களுக்குள் திட்டம் வகுக்கவும் மறக்கவில்லை, அந்த கடமை மிக்க காவல்காரர்கள்.
அன்றே, மீண்டும் ராஜீவ் தினகரனின் முன் நின்றான், அதே கேள்வியுடன்! அவனின் தீவிரத்தை பார்த்து, ஒத்துக் கொண்டார் அவர். “நீங்க போறதுக்கு ஐ.ஜீ. ஓகே சொல்லிட்டாங்க!
டெல்லி போலீஸ் கிட்டயும் பேசறேனு சொன்னார். ஆனா, நீயும் சரி, உன்னோட வரவங்களும் சரி, யார்கிட்டயும் இதுக்கு தான் போறேன்னு சொல்லக் கூடாது! எல்லாருக்கும் ‘ஸ்பெஷல் ட்ரெயினிங்க்கு போறேன்’, அப்படினு சொன்னா போதும்!
இதை உன் கூட வரவங்ககிட்ட சொல்லிடு ராஜீவ். இன்னும் ஒரு வாரத்துல கிளம்பற மாதிரி இருக்கும்! ஓகே வா?” இதை கேட்டதும், ராஜீவ்வின் முகம் உப்பிப் போன, பூரி போல, மலர்ந்தது!!
அவனையும் கவுதமையும் சேர்த்து, மொத்தம் ஆறு பேர் போவதாக ஒரு மனதாக முடிவு செய்தனர். அவருக்கு நன்றியை சொல்லிவிட்டு, சந்தோஷமாக கிளம்பினான் வீட்டிற்க்கு!
வண்டியை செலுத்தும் போது தான் தோன்றியது, வீட்டில் இருப்பவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என?! மிகப்பெரிய கேள்விக் கூறியாகவே இருந்தது.
ஆனால், இதை எல்லாம் மீறி, டெல்லிக்கு சென்று, அப்படி ஏன் தான் தன்னை கொலை பண்ண துடிக்கிறான் அந்த ஷேக், என்று தெரிந்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது, அவனுக்கு.
ஏதோ ஒரு புதிருக்கு விடை கண்டு பிடிப்பது போல, இருந்தது!
****************************************************************************************************
வீட்டில், அவன் உள்ளே நுழையும் போது எல்லோரும் காரம் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் எப்படி கூறுவது என்று தெரியாமல், நேரடியாக அவன் அறைக்கு சென்றான்.
ஒரு அரை மணி நேரம் கழித்து, கீழே வந்த போதும், அவர்கள் அப்போதும்விளையாடிக் கொண்டு தான் இருந்தார்கள். ப்ரியங்காவின் அருகில், மட்டும் அவனுக்கான காபி இருந்தது.
அதை எடுத்துக் கொண்டு அவன் தாத்தாவின் அருகில் அமர்ந்தான். “ஏன்டா, வந்த உடனே மாடிக்கு ஓடிட்ட இன்னிக்கு? வா, நீயும் வந்து விளையாடு.” கூறியது அவன் அன்பு தங்கை நிஷா.
மேலும் காலம் தாழ்த்தாமல், “நான் ஒரு ஸ்பெஷல் ட்ரெயினிங்க்கு, டெல்லிக்கு போகனும். நெக்ஸ்ட் வீக் கிளம்பனும். அங்க ஒரு மூனு இல்ல நாலு மாசம் ஆகலாம்.”
ரொம்ப நிதானமாக, முகம் மாறாமல், அவன் கூறியது எல்லாருக்கும் வியப்பை அளித்தது. அதுவும், கூனிந்து பேக் ஷாட் அடிக்க ட்ரை பண்ணிய ப்ரியங்காவின் கை அப்படியே அந்தரத்தில் தொங்கியது, பாவமாக!!
“என்னடா சொல்ற? எதுக்கு இப்போ நீ ஸ்பெஷல் ட்ரெயினிங் எல்லாம் போகனும்?” ராஜேந்திரனின் முகம் குழப்பத்தை காட்டியது.
“அது என்னோட சேர்த்து, இன்னும் ஒரு அஞ்சு பேருக்கு இந்த ஸ்பெஷல் ட்ரெயினிங் போட்டிருக்காங்க. கொஞ்ச நாள் தான் திரும்ப வந்துடுவேன் சீக்கிரமா!”
அவன் அவ்வளவு கூறியும் அவன் வீட்டின் மகளீரின் முகத்தை சரிப் பண்ண முடியவில்லை. அதில் நிஷா தான் பொறிந்து தள்ளிவிட்டாள்.
“அது தான் ஐ.பி.எஸ். முடிஞ்சவுடனே ட்ரெயினிங் போனல? அது போதாதா? இப்போ என்ன புதுசா? அதுவும் மூனு இல்லனா நாலு மாசமா? வேண்ணாம்…. நீ போகவே வேண்டாம்” என்றாள்.
ப்ரியங்கா முகம் பேய் அறைந்தது போல் இருண்டு இருந்தது. அவன் அம்மாவும் வேண்டாம் என்றார். அப்பாவின் முகத்தை பார்த்தாலே தெரிந்தது, அவருக்கும் விருப்பமில்லை என.
என்ன செய்யலாம் என யோசிக்கும் போது, ஆபத்தான்டவனாய் வந்து சேர்ந்தார் அவனின் தாத்தா ஈஷ்வர். “ஏன் எல்லாரும் போக வேண்டாம்னு சொல்றீங்க?
இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? எல்லாருக்கும் கிடைக்காது! ஆனா நம்ம பையனுக்கு கிடைச்சுருக்கு! அதனால, அவன் டெல்லி போகட்டும்… கொஞ்ச நாள் தான் திரும்ப வந்துடுட போறான்.
இல்லனா, நாம்ம போய் பார்க்கலாம்! இதுக்கு போய் முகத்தை தூக்கி வெச்சுருக்காம வேலையை பாருங்க எல்லாரும்.” என்று அதிகாரமாக முடித்தார்.
அவர் சொன்ன உடனே, ப்ரியங்கா கண்களில் கண்ணீர் குளம் கட்ட, மாடி அறைக்கு சென்றாள். அவளுக்கே தெரிந்தது இது நல்ல விஷயம் தான் என்று. ஆனால், அவனை பிரிய வேண்டுமே, என்று நினைக்கும் போது மனதில், சுருக்கென்று தைத்தது.
நிஷாவும் கூடவே, அவளை பின் தொடர்ந்து வந்து சமாதான படுத்த தொடங்கினாள். ப்ரியங்கா அழுவதை பார்த்து, அவளுக்கும் அழுகை பொத்துக் கொண்டு வந்தது.
ஆனாலும் அழுகையை கட்டுப்படுத்தி, ப்ரியாவை சிரிக்க வைத்தாள், அவளின் குதூகல பேச்சால்!! ஒரு வழியாக அவன் டெல்லிக்கு பயணம் ஆவதை, ஏற்றுக் கொண்டனர் அவன் குடும்பத்தினர்.
அன்று இரவு, ராஜீவ் படுக்க வரும் போது, ப்ரியங்கா சோகமான முகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளை பார்த்து, “நான் சீக்கிரமா வர பார்க்கறேன் ப்ரியா! டோன்ட் வொறி” என்றான்.
“ஹ்ஹ்ம்ம்ம்…ஓகே…. பட், நா அங்க வரலாம்ல? உன்ன பார்க்காம இருக்க மாட்டேன் நான்” என்று பதிலளித்தாள் அவன் மனைவி. இதற்க்கு என்ன சொல்லுவது என்று தெரியாமல், ஒரு நிமிடம் விழித்தான் ராஜீவ்.
“அங்க நாங்க ஆறு பேரும் ஒன்னா தான் தங்க போறோம் ப்ரியா. சோ, உன்னால வர முடியாது. நானே இங்க டைம் கிடைக்கும் போது வர பார்க்கறேன்.” என்று முடித்தான் ராஜீவ்.
இதை கேட்டு மேலும் அழுகையாக வந்தது ப்ரியங்காவிற்க்கு. எல்லா அழுகையையும், அன்று தலையனையே வாங்கியது. ராஜீவ் இதை எல்லாம் அறியாமல், நன்றாக உறங்கினான்.
அதற்க்கும் சேர்த்து அவனை திட்டினாள், ப்ரியா! வெளியே அல்ல, மனதிற்க்குள் தான்….
ஆயிற்று!! ஒரு வாரம் பேக்கிங்கிலும், அவன் அலுவக வேலையிலும் விரைவாக சென்று மறைந்தது. அவன் கிளம்பும் சமயம் அழுகை அவளை மீறி வர, கீழே தரையை நோக்கிய படி இருந்தாள் ப்ரியங்கா.
அவளிடம் வந்து, “பை ப்ரியா… டேக் கேர்” என்று விடைப் பெற்றான் ராஜீவ். அப்பொழுது தான் அவளின் அழுகையை கவனித்து, அவளின் தோளில் கையை போட்டு, “ஹே! அழாத ப்ரியா…. நீ தான் எல்லாரையும் பார்த்துக்கனும். நீயே அழுதா எப்படி?
கிளம்பும் போது அழறத நிறுத்து! எனக்கு பிடிக்காது… சீயர் அப்” ராஜீவ்வின் அந்த அன்பு கலந்த அதட்டல் கொஞ்சம் தான் வேலை செய்தது.
விசும்பியப்படி, அவனுக்கு விடைக் கொடுத்தாள், ப்ரியங்கா. டெல்லியில் தனக்கு இருக்கும், அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் தெரியாமல் விமானம் ஏறினான் ராஜீவ்.