அத்தியாயம்..4
நயனியும் சுகதீபனும் பேச்சு மும்மூரத்தில் இளந்தமிழை முதலில் கவனியாது போனாலுமே, அவள் கோயிலை நோக்கி செல்லும் அந்த சத்தத்தில் தான் இருவரும் இளாவை பார்த்தது..
பார்த்ததும் நயனி அதிர்ந்து தான் போய் விட்டாள்… இவள் தாங்கள் பேசுவதை கேட்டு இருப்பாளோ.. என்ற சந்தேகம் நயனிக்கு..
அதை அவள் தீபனிடம் சொல்ல.. “சேச்சே.. அவள் எப்போதும் இந்த கோயிலுக்கு வந்தா இங்கு வராம போக மாட்டாள்..” என்று அவள் பழக்கத்தை சொன்னான்.
“உன் அத்தை பெண்ணை பத்தி புள்ளி விவரமா சொல்ற..?” என்று ஒரு மாதிரியான குரலில் நயனி கேட்டாள்..
சுகதீபனோ.. “நயனி.. அவள் என்னுடம் வளர்ந்தவள்.. அவளை எனக்கு பிடிக்கும் என்றால், நான் எந்த முயற்ச்சியும் செய்யாது போனாலுமே எனக்கு அவள் கிடைப்பாள்…
எனக்கு அது போலான ஒரு தாட் சுத்தமா அவள் மேல எனக்கு இல்ல.. இது ஒரு முறை இல்லை.. பல முறை உன் கிட்ட சொல்லிட்டேன்..
திரும்ப திரும்ப இது போலவே பேசி என்னை டென்ஷன் படுத்தாதே… இப்போ இருக்கும் பிரச்சனையை நாம பார்க்கலாம். சத்தியமா நீ சொல்லும் வரை நான் இந்த விதமா யோசிக்கவே இல்ல.. இதுல நாம் பேசுவதை இளா கேட்டு இருக்கவில்லை என்றாலுமே, நாம் ஏன் தனியா பேசிட்டு இருக்கோம் என்று யோசித்து இருப்பா… ஏன்னா இது வரை நாம பேசி அவள் பார்த்ததே கிடையாது தானே.. அதுக்கு என்ன சொல்றது என்று முதல்ல பார்ப்போம்” என்று சொன்ன தீபன் அவள் சொன்ன உறவு முறையில் குழம்பி மீண்டும் .
தெளிவு படுத்த வேண்டி.. “அது எப்படி உன் அண்ணாவை இளா கல்யாணம் செய்து கொண்டா நீ எனக்கு தங்கை முறை வருவே..?”
என்று இது போலான நுட்பமான உறவு முறை எல்லாம் சுகதீபனுக்கு தெரியாது. அதனால் அதை தெளிவுப்படுத்தி கொள்ள வேண்டி நயனியிடம் கேட்டான்..
ஆனால் நயனியோ. “நீ எனக்கு தங்கை முறை ஆவேன்…” என்ற வார்த்தை தீபனின் வாயில் இருந்து வருவதே அவளுக்கு கடுப்பை கிளப்பியது..
“அதை சொல்லாதே..” என்று சொன்னாலுமே..
உறவை விளக்கம் கொடுத்தாள்..”உனக்கு இளா அத்தை பெண்.. அதாவது கல்யாணம் செய்யும் முறை.. அவள் என் அண்ணாவை கல்யாணம் செய்து கொண்டா.. நீயும் என் அண்ணாவும் என்ன முறை ஆவிங்க..” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே..
தீபனுக்கு அப்போது தான் பல்ப் எரிந்தது போல.. “ஆமா ..ஆமா.. உன் அண்ணாவுக்கு நீ என்ன முறையோ அது தானே எனக்கும்..” என்று சொன்னது தான் தன் கையில் இருந்த செல்லின் மூலமே அவன் வாயின் மீதே ஒரு அடி போட்டாள் நயனி..
“அந்த வார்த்தை சொல்லாதே என்று சொல்றேன் லே..” என்று.பாவம் எந்த வார்த்தை சொன்னாலே பிடிக்காது தீபனிடம் சண்டை போட்டு கொண்டு இங்கு நயனி இருக்க..
கோயிலை நோக்கி சென்ற இளாவின் கண்ணில் பட்டது இன்னும் அனைவரிடமும் பேசிக் கொண்டு இருந்த வீராவை தான்.. அப்போதும் மற்றவர்கள் அவன் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து கொண்டு இருந்த சூழலை தான்..
தான் சென்ற பின் என்ன பேச்சு நடந்தது,… என்ன பேசினார்கள்.. என்று எதுவும் தெரியாது.. எனக்கு அதை பற்றி எல்லாம் தெரியவும் வேண்டாம் என்று முடிவு செய்தவள் நின்றால் வீராவின் எதிரில் தான்..
இத்தனை நேரம் சல சலத்து கொண்டு இருந்த அந்த இடம் இளா வீராவின் முன் நின்றதும் அமைதியாகி விட்டது…
இளாவின் கவனம் யாரின் மீதும் திரும்பவில்லை.. வீராவின் கண்ணை மட்டுமே பார்த்த வாறு..
“ டூ யூ லவ் மீ..?” என்று கேட்டாள்..
வீரா அப்படி தன்னிடம் வந்து.. அதுவும் அத்தனை பேர் இருக்க.. தன்னிடம் கேட்பாள் என்று அவன் நினைத்து பார்க்கவில்லை.. இவ்வளவு நேரமும் அத்தனை பேரிடமும் அவன் இதை தான் சொல்லி கொண்டு இருந்தான்..
நாங்கள் காதலர்கள் என்று… ஆனால் அதை அவளிடம் இது வரை சொன்னது இல்லை.. அவளும் தன்னிடம் சொன்னது கிடையாது.. பிடிக்கும் வீராவுக்கு அவளை அவ்வளவு பிடிக்கும்..
அவளுக்கும் தன்னை பிடிக்கிறது என்பதனை ஒரு சில பார்வைகள் மூலமே அவள் அவனிடம் அவளுக்கு தெரியாது வெளிப்படுத்தி இருக்கிறாள்..
வீராவுக்கு இதுவும் தெரியும்.. தந்தை இல்லாது தாய் மாமனிடம் வளர்பவள்.. அதுவும் தாய் மாமன் என்றால் அவளுக்கு எவ்வளவு பிடித்தம் என்பதனை அவன் தன் வீட்டில் மொட்டை மாடியில் இருக்கும் போது இருவரின் பாசத்தை பார்த்தும் இருக்கிறான்..
இன்னும் இதுவும் தெரியும்.. மாமன் மகனை தான் இளாவுக்கு பேசி இருக்கிறார்கள் என்பதும்.. மேலும் மாமன் சொன்னால் கிணற்றில் கூட விழ தயாராக இருக்கும் அவனின் தமிழ்..
சொல்லும் படி எந்த பிரச்சனையும் இல்லாத.. அதுவும் அவளுக்கு என்று பார்த்து பார்த்து செய்யும் அவனின் அத்தான் சுகதீபனையே கல்யாணம் செய்தும் கொள்வாள் என்பதும்..
ஆனால் அனைத்தும் தெரிந்த நம் வீராவுக்கு தன் தங்கையை பற்றி மட்டும் தெரியாது போனது தான்.. இப்போது அவன் வாழ்க்கையோடு தங்கையின் வாழ்க்கையும் அந்தரங்கத்தில் தொங்க போகிறது என்று தெரியாது..
தன் காதலுக்கு நாம் தான் ஏதாவது செய்ய வேண்டும்.. குறைந்த பட்சம் தன் காதலை கூட தமிழ் தன்னிடம் ஒத்து கொள்ள மாட்டாள்… ஏதாவது செய்தால் தான் தமிழை கல்யாணம் செய்து கொள்ள முடியும் என்று நினைத்தான் தான்..
ஆனால் இன்று கிடையாது.. தமிழ் இன்னும் தன் படிப்பை முடிக்கவில்லை.. தந்தை இல்லாத வீட்டிற்க்கு பொறுப்புள்ள ஒரு ஆண் மகனாக அதற்க்குள் தங்கைக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும்..
இது தான் அவனின் திட்டமாக இருந்தது.. ஆனால் இப்போது தமிழை தீபனோடு சேர்த்து வைத்து அத்தனை பேர் பேசவும் அவனால் பொறுக்க முடியவில்லை.
அதோடு அதில் ஒரு பெருசு.. இரண்டு பேருக்கும் இப்போதே திருமணம் செய்து வைத்து விடலாம் என்று சொல்லவும் தான்..களத்தில் அவன் குதித்து விட்டான்…
உறவு முறை முன் பேசி விட்டால் தமிழ் தனக்கு தான்.. அவள் மாமன் மீது அவளுக்கு இருக்கும் அந்த பாசம்.. முதல் முறை தமிழ் தன்னை ஆர்வமாக பார்த்தது.. அனைத்தையும் கூட்டி கழித்து பார்த்து தான் செய்தான்.. ஆனால் விடை வேறாக போக.. இதோ அதை மாற்றி எழுத தன் முன் நின்று தமிழ் கேட்ட…
“டூ யூ லவ் மீ…?” என்ற கேள்விக்கு பதில் அளிக்காது இருந்தவனிடம் .திரும்ப அதே வார்த்தையை கேட்டாள்.. இவ்வளவு நேரம் யாரையும் பேச விடாது தன் குரல் மட்டுமே ஒங்கி ஒலிக்கும் படி பேசிக் கொண்டு இருந்த வீரா… அவளை காதலிப்பை மட்டும்… தலையசைத்து தன் சம்மதம் சொன்னவன்..
அவன் சம்மதம் கிடைத்ததும்.. “டைம் பாஸ்ஸுக்கு லவ் பண்ணலையே..? என்று அடுத்த கேள்வியாக கேட்டாள்..
“கல்யாணம் செய்ய தான் காதலிப்பாங்க..” என்று இப்போது விரைப்பாக அவளிடம் கூறினான்..
குலதெய்வம் வழிப்பாடு எனும் போது அம்மனுக்கு புடவை.. வளையல் மஞ்சள்.. குங்குமம்.. வைத்து சீராக அந்த அம்மன் முன் வைப்பார்கள்.. அதில் தாலியுமே அடக்கம்..வீரா கல்யாணம் செய்ய தான் காதலிப்பாங்க என்றதும்..
“சரி அப்போ அந்த தட்டில் இருக்கும் தாலியை எடுத்து என் கழுத்தில் கட்டு..” என்று விட்டாள்..
இதை சத்தியமாக வீரா எதிர் பார்க்கவில்லை… அவனே எதிர் பாராத போது அங்கு இருந்தவர்கள்..தன் மகளை கோபத்தில் தாமரை அடித்தாள் தான்..
ஆனால் கணவன் இல்லாது அனைத்தும் மகள் மட்டுமே என்று நினைத்து வாழ்ந்தவளுக்கு மகளின் இந்த திடிர் திருமணத்தில் விருப்பம் இல்லை..
சந்திரமதியும் தாமரை போல் தான் நினைத்தாள்.. அவளுக்குமே சின்ன வயதில் இருந்து பார்த்த தன் நாத்தனார் மகளை பிடிக்கும்..
ஆனால் அனைத்தையும் விளையாட்டு தனமாக எடுத்து கொள்வது தான் பிரச்சனை… இவளின் இந்த விளையாட்டு தனமான புத்தியில் தன் மகன் தானே நாளை பாதிக்கப்படுவான்.. அதை நினைத்து தான் அவளுக்கு பிரச்சனை,
இப்போது என்ன இது.. கல்யாணத்திலும் விளையாட்டா.. என்ற கோபத்தில் அவளிடம் சென்ற சந்திரமதி..
“என்ன இது இளா.. ?உனக்கு எல்லாம் விளையாட்டு தனமா போச்சா..?” என்று சொல்லி கை பிடித்து இழுத்து செல்ல பார்த்தார்..
ஆனால் இளா அவர் பின் செல்லாது அடமாக அதே இடத்தில் அதுவும் முன் வீராவை பார்த்து நின்று கொண்டு இருந்தாளே.. அதே தோரணையில் தான் நின்றிருந்தாள்..
இப்போது தாமரையும்.. “இளா வா போகலாம்.. எது என்றாலும் நிதானமா யோசிச்சி செய்யலாம்..” என்று இப்போது கோபத்தை கை விட்டு நிதானமாக பேசினாள்..
ஜனம் .. உறவும் இப்போது பார்க்கிறார்களே.. இப்போது தாமரைக்கு அந்த எண்ணம் எல்லாம் கிடையாது… இப்போது அவள் முன் நின்பது தன் மகளின் வாழ்க்கை பற்றிய பயம் தான்..
ஆம் பயமே தான்.. தன் வாழ்க்கை தான் இப்படியாகி விட்டது.. தன் மகள் தான் வாழாத வாழ்க்கையையும் சேர்த்து வாழ வேண்டும் என்பது தான் அவர் ஆசை..
வீராவை பற்றி என்ன தெரியும்.. அவன் தங்கை நயனி பற்றியாவது தெரியும்.. ஆனால் வீரா… பெயர் அவன் செய்யும் தொழில் இதை தவிர வேறு எதுவும் தெரியாதே..
இவர்களுக்குள் எத்தனை நாள் பழக்கம்.. இளாவுக்கு அவனை பற்றி என்ன தெரியும்..? இதிலும் இவள் விளையாட்டாக பழகி இருந்தால், நாளை பின் அவள் வாழ்க்கை.. இது தான் அவள் மனதில் பூதாகரமாக வந்து நின்றது..
பாவம் அந்த அன்னைக்கு தெரியவில்லை.. அவருக்கு தெரிந்த அளவுக்கே தான் இளாவுக்கும் வீராவை பற்றி தெரியும் என்பது..
மாமீ அம்மா சொல்வதை கேட்காது அடமாக நின்று கொண்டு இருந்தவள் அருகில் வந்த அவள் தாய் மாமான்..
“ உனக்கு விருப்பமா இளா..” என்று இப்போதும் பாசத்துடன் தலையை தடவி கேட்டால்.. இவளும் தன் மாமனின் தோள் மீது தலை சாய்த்து செல்லம் கொஞ்சுபவள்…
இன்றைக்கு அது எல்லாம் செய்யாது.. விருப்பம்..” என்று விட்டாள்.. அந்த குரலில் என்ன பாவனை.. மகள் போல் வளர்ந்தவளை பற்றி அறியாது விட்டு விட்டோமோ.. என்று மனதில் வேதனை இருந்தாலுமே..
“இப்போதே ஏன் அவசரம்.. உனக்கு அவரை தான் பிடித்து இருக்கு என்றால், அவரையே உனக்கு கல்யாணம் செய்து கொடுக்கிறோம்.. ஆனால் கொஞ்சம் பொறு.. அவர் வீட்டிலும் பேச வேண்டும் இல்லையா.. அவருக்கும் அவர் தங்கையின் கல்யாணம்.. இந்த பொறுப்பு எல்லாம் இருக்கு தானே..”
இளாவுக்கோ.. கார்முகிலன் சொன்ன அவர் தங்கை கல்யாணம் என்ற அந்த வார்த்தையிலேயே மனது நின்று விட..
இப்போது வீராவை பார்த்து… “இன்னைக்கு என் கழுத்தில் நீ தாலி கட்டினா தான் உண்டு.. இல்லை என்றால்..” அவள் பேச்சை முடிக்க விடாது.. தட்டில் இருந்த தாலியை கையில் எடுத்தவன்.. அந்த அம்மனை பார்த்து வேண்டிக் கொண்டு செல்வி… இளந்தமிழை… திருமதி.. இளந்தமிழ் வீரவேலோனாக மாற்றிக் கொண்டான்..
இளாவிடம் தாங்கள் தனியாக பேசிக் கொண்டு இருந்ததிற்க்கு என்ன காரணத்தை சொல்வது என்று இருவரும் பேசிக் கொண்டே கோயிலை வந்து அடைந்த நயனி.. தீபன் பார்த்தது.. வீரா இளந்தமிழ் கழுத்தில் தாலி கட்டும் காட்சியை தான்..
பவானி வீட்டிற்க்கும் வாசலுக்கும் நடையாக நடந்து கொண்டு இருந்தார்.. போன பசங்க தான் ஒரு போன் செய்யல.. நான் போன் செய்யும் போதாவது அதை எடுக்கலாமே..
அதுவும் இந்த வீரா போனுக்கு முயற்ச்சி செய்து அதை எடுக்காது போகவும் ட்ராவல்ஸ் தொலை பேசிக்கு அழைத்து கேட்டதற்க்கு.
அங்கு வேலை செய்த பையன்… “முதலாளியே ஒரு கஸ்ட்டமருக்கு கார் ட்ரைவ் பண்ண போயிட்டாரு..” என்ற பதிலில்..
பவானி.. “ஏன் ட்ரைவர் யாருமே இல்லையா..” என்று கேட்டதற்க்கு..
அந்த பையன்.. “இருந்தாங்கம்மா.. ஆனா வீரா சார் தான் நானே போறேன் என்று சொல்லிட்டார்..” என்று சொன்னதுமே..
பவானியம்மா தனக்குள் முனு முனுப்பாக.. தெரிந்தவங்களா இருந்து இருப்பாங்க.” என்று சொல்ல.. அது தொலை பேசியில் இருந்த அந்த பையன் காதில் விழுந்தது..
“ஆமாம் உங்க வீட்டு கிட்ட தான்.” என்ற பதிலில் பவானிக்கு தெரிந்து விட்டது.. இளா வீட்டவர்கள் சென்று இருக்கும் கோயிலுக்கு தான் சென்று உள்ளான் என்று..
அது அவருக்கு தவறாக படவில்லை.. ஏற்கனவே வீரா நயனி அந்த வீட்டிற்க்கு அடிக்கடி சென்று வருவதை கவனித்து..
“அம்மா ஏன் அவள் எப்போதும் அங்கேயே இருக்கா.. பார்க்கிறவங்க தப்பா எடுத்துக்க மாட்டாங்களா…?” என்று கேட்டு இருக்கிறான்..
“இல்ல தம்பி அந்த பொண்ணு என்றால் நயனிக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு போல.. இளாவுக்கு இது பிடிக்கும்.. இளாவுக்கு அது பிடிக்கும் என்று அவள் என் கிட்ட செய்ய சொல்லி கொண்டு போவா..” என்று நடப்பதை தன் மகனிடம் பகிர்ந்தார்..
அதற்க்கு வீராவும்..“ஆனா அந்த பொண்ணுக்கு நயனி போல நெருக்கம் இல்ல போல.. இவள் தான் அங்கே போறா.. அந்த பெண் இங்கு வந்து நான் பார்த்ததே கிடையாதே..” என்ற பேச்சு அன்றோடு முடிவடைந்தது..
அதை நினைத்து கொண்ட பவானி.. “அப்பா இல்லாத பெண் .. அதனால அவனுக்கு கொஞ்சம் பயம் போல.. தங்கைக்கு பாதுகாப்பா தானே ஒட்டிக் கொண்டு போயிட்டான் போல..” என்று அவள் நினைத்து கொண்டு இருக்கும் போது தான்..
அவர்கள் ட்ராவல்ஸ் கார் அவர்கள் வீட்டு வாசல் முன் வந்து நிற்கவும். சில சமயம் இப்படி தான் வீரா ட்ராவல்ஸ் கார் எடுத்தால், வீட்டிற்க்கு வரும் வேலை ஏதாவது இருந்தால், அதை முடித்து விட்டு பின் காரை ட்ரவல்ஸ்க்கு என்று இருக்கும் நிறுத்தும் இடத்தில் விட்டு விடுவான்..
அதை நினைத்து பவானி அமைதியாக இருக்க.. முதலில் கார்முகில் தன் மனைவியோடு இறங்க.. அதன் பின் தாமரை.. அடுத்து தன் மகள் இறங்கவும்..
அது வரை கூட அதை தவறாக நினைக்கவில்லை. ஏன் இளா காரை விட்டு இறங்கும் போது கூட தவறாக நினைக்காது தான் வந்தவர்களை வரவேற்க சிரித்த முகத்துடன் தான் கேட்டின் அருகில் சென்றாள்..
ஆனால் தன் மகன் காரை விட்டு இறங்கியதோடு மட்டும் அல்லாது இளா பக்கத்தில் நின்றதோடு அவள் கை பற்றிக் கொண்டு தன்னை பார்த்த அந்த பார்வையில் தான் பவானியின் கண் அவசரமாக இளாவின் கழுத்து பக்கம் சென்றது..
அங்கு இடம் பிடித்து இருந்த புத்தம் புதிய தாலி கயிறு சொல்லி விட்டது.. நடந்ததை… அதை பார்த்த உடன் தாயாக முதலில் அவர் அதிர்ந்தார் தான்..
ஆனால் அந்த அதிர்ச்சி எல்லாம் சில நொடி தான் பின் தன்னை சமாளித்து கொண்டவராக..
நயனியிடம்..“ஆலம் கரைத்து அண்ணாவுக்கும், அண்ணிக்கும் சுற்றி உள்ளே கூட்டிட்டு வா…” என்று சொல்ல..
வரின் அண்ணி என்று சொன்ன அந்த வார்த்தையில் நக்கலாக இளா நயனியை ஒரு பார்வை பார்த்தாள்…