அத்தியாயம்…15
மான்சியின் பேச்சின் மூலம் சர்வேஷ்வரன் புரிந்து கொண்டது தன் மாமா சூர்ய நாரயணனை பற்றி தான் அக்கா, தம்பி பேசுகிறார்கள் என்று..
புரிந்தவனுக்கு, இன்னொன்றும் புரிந்தது.. அது சூர்ய நாரயணன் அங்கு வருவது இவர்கள் இருவருக்கும் பிடிக்கவில்லை என்பதும் தான்..
தெரிந்தவனுக்கு இது தான் தோன்றியது.. அந்த வீடு தன் மாமா சூர்ய நாரயணன் உடையது.. அப்போது பிடிக்கவில்லை என்றால், இவர்கள் தான் அங்கு இருந்து சென்று இருக்க வேண்டும் என்பதும்… நினைத்தவன்..அதை சொல்லவில்லை…
சர்வேஷ்வரனின் யோசனை பலதில் இருந்தாலும், பார்வை மான்சியிடம் மட்டுமே இருந்ததால் அவள் பேசி முடித்து விட்டு, தன்னை யோசனையுடன் பார்ப்பதை பார்த்தவன்..
சைகையில் படுக்கையில் தன் பக்கத்தில் படுக்கும் மாறு சொன்னவனின் பேச்சை கேட்டு மான்சி படுத்தாலுமே, சர்வேஷ்வரன் அவளை அணைக்காது விளக்கை மட்டுமே
அணைத்து படுத்தவனுக்கு ஏனோ இன்று தன்
மனைவியை நாட தோன்றவில்லை..
மான்சியோ விளக்கை அணைத்ததும், தன் அருகில் வருவான் என்று ஒரு வித இறுக்கத்தோடு படுத்துக் கொண்டு இருந்தவள், அது போல் ஒர் நிகழ்வு நடவாது..
நேரம் சென்றதே ஒழிய அவன் தன்னை அணைக்காது போகவும், ஒரு வித நிம்மதியிடன் தூக்கத்தின் வசம் தன்னை ஒப்படைத்தாள்…
சர்வேஷ்வரன் காலையில் எழுந்தது பார்த்த உருவம் தன் மனைவியின் உருவமே.. அதுவும் எங்கோ செல்வது
போல் உடையணிந்து கொண்டு அவள் கை பையில் ஏதோ எடுத்து வைத்துக் கொண்டு இருப்பதை பார்த்தவன்… கண்ணை கசக்கிக் கொண்டே எழுந்து அமர்ந்தவன்…
“ காலையிலே எங்கே போக கிளம்பிட்ட..?” என்று ஒரு வித ஆராய்ச்சி பார்வையை மான்சியின் மீது செலுத்திக் கொண்டே அவளிடம் கேட்டான்..
“ நேத்து தான் நான் படிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னிங்க .. இப்போ என்ன என்றால் எங்கு ஏன்னு கேட்கிறிங்க..?” என்று மான்சிஅதிர்ச்சியுடன் கேட்டாள்..
எங்கு அவன் மனது மாறி தன் படிப்புக்கு தடை வந்து விடுமோ என்ற பயத்தில்…
“ ஓ லைப்ரேரி கிளம்புறியா..?” என்று ஆசுவாசமாக கேட்டுக் கொண்டே அடர் நீலத்தில் சுடியும் வெள்ளை நிறைத்தில் துப்பட்டாவை ஒழுங்காக போடாது ஏனோ தானோ என்று அவள் போட்ட விதமே, அவளுக்கு இன்னும் அழகு கூடி தெரிவது போல் சர்வேஷ்வரனின்கண்ணுக்கு தெரிந்தது..
மனைவியின் அழகை கண் குளிர ரசித்த வாறே எழுந்தவன் குளியல் அறைக்குள் செல்லாது, மான்சியின் பக்கம் சென்று அவளை பின் பக்கத்தில் இருந்து அணைத்துக் கொண்டவனாய், அவள் கழுத்து நடுவில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு அவளின் வாசம் பிடித்த வாறே..
“ நேத்து ரொம்ப நிம்மதியா தூங்கின போல..” என்று சர்வேஷ்வரன் பேச பேச அவளின் மீசை முடியின் உராய்வு அவள் கழுத்து வளைவில் பட்டு அவளுக்கு ஒரு வித கூச்சத்தை கொடுத்தாலுமே,
அவன் கேட்ட நிம்மதியா தூங்கினாயா…? என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாது முழித்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தவளின் தோற்றம் தங்கள் முன் இருந்த கண்ணாடியில் அவனுக்கு தெளிவாக தெரிந்தது.
அதுவும் அந்த தோற்றம் இன்னும் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் மான்சி இன்னும் அழகோடு தெரிய….பின் பக்கம் அணைத்துக் கொண்டவனுக்கு, அவளின் முன் பக்கம் பரிசமும் தேவைப்பட்டதில்,
நொடி பொழுதில் அவளை ஒரு சுழற்று சுழற்றியவன் முன் பக்கம்அவள் முகத்தை நேராடியக பார்க்கும் படி கொண்டு வந்தான்..
அவள் கண்ணை பார்த்த படி.. “ ஆனால் நான் சரியாவே தூங்கல.. தூங்க முடியல… காரணம் நீ தான்… அதனால் தான் இதோ ஒன்பது மணியாகியும் என்னால் விழிக்க முடியாது ஒரு வித சோம்பலிலேயே இருக்கிறதும் உன்னால் தான் புரியுதா..?
ஆனால் நீ நல்லா நிம்மதியா தூங்கினேன் என்பது உன் முகம் பளிச்சிடலிலேயே தெரியுதே… இப்போ நீ நிம்மதியா போய் படிச்சி உன் ஐ.ஏ.எஸ் கனவைநிறைவேத்திப்ப…
ஆனால் நான் என் கனவு என் தொழில் எல்லாத்திலும் உன்னால் கவனம் செலுத்த முடியாது.. அதனால் அது அதல பாதளத்துக்கு போக போகுது பார்..
ஆனா அப்படி போனா அதற்க்கு காரணம் நீ தான் சொல்லிட்டேன்..” என்றவனின் பேச்சை எதில் எடுத்துகொள்வது என்று தெரியாது இன்னும் தான் திரு திருஎன்று முழித்துக் கொண்டு இருந்தாள்..
அவளின் அந்த தோற்றம் சர்வேஷ்வரனின் கண்ணுக்குஇன்னும் இன்னும் அழகாக தெரிய.. தன்னை கட்டுப்படுத்த முடியாதவனாக அவளின் இதழை நோக்கி குனிந்தவன் தனக்கு பிடித்ததை பிடித்த விதத்தில், எடுத்துக் கொண்டவனின் நிலை இன்னும் மோசமாக தான் ஆனது எனலாம்…இன்னும் இன்னும் தேவை என்பது போல்..
நேற்று தன் மனைவியை பேசிய பேச்சுக்கு, ஏனோ அவளை நாட மனது வரவில்லை.. அதனால் தான் அவளை நாடாது இருந்தான்..
ஆனாலும் முன் இரவு தங்களுக்குள் நடந்த அந்த நிகழ்வு கண் முன்வரும் முன்னவே அவன் உடலில் ஒரு வித மாற்றம் நிகழ்ந்தது…
அதன் தாக்கத்தை அடக்க முடியாது தன் மனைவியை திரும்பி பார்த்தவன்… அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை பார்த்து ஏனோ அவளை எழுப்ப மனம் இல்லாது நடு இரவுக்கு மேல் கூட தூக்கம் வராது விழித்து கொண்டு தான் இருந்தான்..
அதனால் தான் நேரம் போனது கூட தெரியாது தூக்கத்தில் ஆழ்ந்து இருந்தவன் மான்சி எங்கோ வெளியில் செல்வது போல் கிளம்பி இருந்தவளை அவள் அம்மாவை பார்க்க தான் செல்கிறாள் என்று நினைத்து ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்து கொண்டே கேட்டது…
பின் அவள் படிப்பு என்பதில் நிம்மதி அடைந்தவனாய் பார்த்த தன் மனைவியின் தோற்றம் நெருங்க சொல்ல.. நெருங்கியவனால் விலக முடியாது போனாலும், அவளை விட்டு விலகி விட்டான்..
நெருங்கினான் அணைத்தான். முத்தம் இட்டான். பின் விலகினான்.. அவை எதற்க்கும் எந்த எதிர் வினையும் காட்டாது அதே திரு திரு பார்வையிலேயே பார்த்துக் கொண்டு இருந்த அவளின் தோற்றம் ஏனோ சர்வேஷ்வரனின் மனதில் பதிந்து போனது..
அந்த பதியதிற்க்கு காரணம்.. அவளின் அந்த தோற்றம் வெகுளியாகவும், தூய்மையானவள் நான் என்பது போல் அவன் கண்ணுக்கு தெரிந்தது.. அவன் மனதில் பதிந்த அந்த தோற்றம் அவன் ஆழ் மனது வரை செல்லவில்லை என்பது, பின் நடந்த சில சம்பவங்கள் மூலம் அவன் மட்டும் அறியாது நமக்குமே புரிய வைத்தான்…
மனைவியின் முகத்தை பார்த்தவன் என்ன
நினைத்தானோ .. “ சரி சரி என் முகத்தையே பார்த்துட்டு இருந்தால் உனக்கு டைம் ஆக வில்லையா..? ஐ,ஏ,எஸ் ஆகனும் என்று கனவு மட்டும் இருந்தால் போதாது…
அதுக்கு உண்டான உழைப்பை நாம் அதற்க்கு கொடுக்க வேண்டும்.” என்ற கணவனின் பேச்சில் மான்சி இப்போது குழப்பத்தில் இருந்து ஒரு தெளிவுக்கு வந்து விட்டாள்… என்பதை அவளின் முறைப்பின் மூலம் அவன் புரிந்து கொண்டான்…
“ இப்போ தான் நீ நார்மல் மோடுக்கு வந்து இருக்க..” என்று சொல்லி விட்டு குளிக்க சென்றவனின் முதுகையே பார்த்து கொண்டு இருந்தவளுக்கு இது தான் தோன்றியது..
என்னை பற்றி எல்லாம் தெரியும் போல் என்ன இது பேச்சு என்று நினைத்தாள்… எப்போதும் போல் அவள் மனதோடு நினைத்து மனதோடு பேசும் இந்த அவளின் பழக்கம் தான்… பிற்காலத்தில் அவளுக்கே பெரிய வினையாகாக போகிறது என்பதும்..
பேசுவாள்.. ஒரு நாள் பேசுவாள்.. ஆனால் அவள் பேச்சுக்கு யாரும் எதிர் பேச்சு பேசாத வாறு தான் அவள் பேச்சு இருக்கும் என்று கூட அவளுக்கு தெரியாது தன் தம்பியின் கை பேசி அழைப்பை ஏற்றவள்..
அவனிடம் பேசி முடிக்கவும் சர்வேஷ்வரன் குளியல் அறையில் இருந்து வெளியில் வரவும் சரியாக இருந்தது…
டவளை மட்டும் இடுப்பில் கட்டி வெளியில் வந்தவனுக்கு வெட்கமாக இல்லை.. ஆனால் அதை பார்த்த மான்சிக்கு தான் வெட்கம் பிடிங்கி தள்ளியது..
வேறு திசையில் பார்த்த வாறு நின்று கொண்டவள்.. சாப்பிடுவதற்க்கு கீழே செல்ல.. அவன் ரெடியாகி வரும் வரை காத்துக் கொண்டு இருந்தாள் ..
இவள் முகத்தை வேறு பக்கம் பார்த்தாள் என்றால், சர்வேஷ்வரன் தன் முழு உடையை உடுத்தி, பின் பர்பூயும்.. வாட்ச் …டை… பெல்ட்… என்று அனைத்தும் பொறுமையாக அணியும் வரை, அவன் பார்வை முழுவதும் மான்சியிடம் மட்டுமே நிலை பெற்று இருந்தன..
பின் இருவரும் ஒரு சேர சாப்பிட போகும் போது, குடும்பத்தில் இருக்கும் மொத்த உறுப்பினரும்.. அனைவரும் சாப்பிடும் இடத்தில் தான் இருந்தனர்..
இருவரும் ஜோடியாக படி இறங்கி வரும் போது, ஜோடி பொருத்தம் அவ்வளவு பொருந்தி இருந்தது… அதுவும் சர்வேஷ்வர் படியில் இறங்கும் போதே தன் மனைவியை
பார்க்கும் அந்த பார்வையை பார்த்த குடும்பத்தினருக்கு, தெரிந்தது சர்வாவுக்கு மான்சியை பிடித்து இருக்கிறது என்று..
அதுவும் மற்றவர்களின் கண்ணுக்கு தெரியாத மான்சியின் உதட்டின் அந்த காயம் வனிதாவுக்கு தெரிந்தது... அது எதனால் என்று அனுபவமிக்கவளுக்கு புரிந்து போனதில், தன் பக்கத்தில் அமர்ந்திருந்த மகேஷ்வரனின் காதில் சொல்ல..
அவனோ மான்சியை பார்க்காது தன் மனைவி
வனிதாவை முறைத்து.. “ உனக்கு விவஸ்தையே கிடையாதா..? என்ன இது..? சீ..” என்று அருவெறுத்து தான் போனான்..
சர்வா தன் தம்பி.. தன் தம்பி மனைவியோடான அவர்கள் அந்தரங்கமான விசயத்தை பார்ப்பது என்ன அதை பற்றி நினைப்பதே தவறு… இதில் இதை பற்றி என்னிடமே சொல்கிறாளே என்று அருவெருத்தவனாக தன் தம்பியின் பக்கம் பார்வை செலுத்தாது சாப்பிட்டு விட்டு சென்று
விட்டான்..
ஆனால் வனிதாவுக்கு அந்த நாகரிகமே இல்லாது போல்..
“ சின்ன மாமா நீங்க வருவீங்க என்று சாப்பிடாது காத்து கொண்டு இருக்கிறார்… அவருக்கு சுகர் வேறு… நீங்க ரொமன்ஸ் செய்து முடித்து விட்டு வரும் நேரமாகும் என்று சொல்லி இருந்தால்,
குறைந்த பட்சம் இரண்டு மாமாவாவது சாப்பிட்டு இருந்து இருப்பாங்க..” என்று மான்சியின் காயம் பட்ட உதட்டை பார்த்து கொண்டே பேசிய பேச்சில், அவளின் இரண்டு
மாமாக்களும் தலையை குனிந்து கொண்டார்கள் என்றால்,
வைதேகி..“ சீ என்ன பேச்சு இது ..? பெண் போலவா பேசுற..? ” என்று கண்டித்தார்…
அப்போதும் வனிதா விடாது.. “ என்ன அத்தை என்னை சொல்றிங்க.. நான் நம்ம வீட்டு ஆண்களின் நல்லதிற்க்காக தான் சொல்றேன்.. இதில் என்ன சீ இருக்கு..” என்று தன் பேசிய பேச்சு நியாயமான பேச்சு தான் என்பது போல் பேசினாள்..
இப்போதும் அனைவரும் சர்வேஷ்வரனை தான் ஒரு வித பதட்டத்துடன் பார்த்தனர்.. ஆனால் அவனோ கூலாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தவன்.. சாப்பிடாது ஒரு வித அவஸ்த்தையோடு அமர்ந்திருந்த மான்சியை பார்த்து..
“ சாப்பிடு உனக்கு டைம் ஆகல..”என்று அவளை கண்டிப்பது போல் பேசியவன்.. பின் அனைவரும் தன்னையே பார்த்து கொண்டு இருப்பதை பார்த்து…
“மாம் வனி சொன்னது சரி தான்.. இனி எங்களுக்காக நீங்க சாப்பிடாது காத்திருக்க வேண்டாம்.. வனி உங்க எல்லோரையும் மனதில் வைத்து தானே சொல்றா…” என்று பொதுவாக அனைவரையும் பார்த்து கூறியவன்..
பின் வனிதாவின் பக்கம் பார்வையை திருப்பியவன்…
“இதில் கூச்சப்பட எதுவும் இல்ல வனி… இரண்டு நாள் முன் கல்யாணம் ஆனவங்களுக்குள் என்ன நடக்குமோ அது நடந்தது.. அவ்வளவு தான்..
அதோடு என் மனைவியோடு ரொமான்ஸ் செய்ய .. நான் காலம் நேரம் எல்லாம் பார்க்க தேவையில்லை தானே..” என்று சொல்லி விட்டு தன் மனைவியை அழைத்து கொண்டு சென்றவனின் பேச்சில் ஏதோ மறை முகமான தகவல்…
அதாவது தன்னிடம் மறைமுகமாக ஏதோ சொல்வது போல் தோன்றியது வனிதாவுக்கு…
அவளின் அந்த நினைப்பு எல்லாம் சிறிது நேரம் தான்.. சிறிது நேரம் என்றால், அவளின் பேசிக்கு அழைப்பு வரும் வரை மட்டும் தான்… வனிதாவின் மனது சர்வேஷ்வரனின் பேச்சை மனது அசைப்போட்டது..
வந்த அழைப்பில் பேசிய பின்.. “ இதோ கிளம்பிட்டேன்..” என்ற வனிதாவின் பேச்சை கேட்ட அவளின் இரு அத்தைகளும்..
“என்ன வனி ஆஸ்பிட்டலுக்கா..?” என்று கேட்டு அவளுக்கு என்ன பொய் சொல்வது என்ற, சிரமத்தை கொடுக்காது …
“ஆமாம்..” என்று மட்டும் சொன்னவள்.. அத்தைகள் சொன்னது போல் வனிதா முதலில் நேராக மருத்துவமனைக்கு தான் சென்றாள்..
அன்று தான் பத்மாவதியையும் , அனிதாவையில் டிஜ்ஜார்ஜ் செய்வது… அதனால் அந்த நேரம் சூர்ய நாரயணனும் அங்கு தான் இருந்தார்…
அவரை பார்த்ததும் வனிதா… “ நீங்க டிஜ்ஜார்ஜ் செய்து மாமையும், அனிதாவையும் வீட்டுக்கு கூட்டிட்டு போறிங்களா..? எனக்கு வெளியில் முக்கியமான வேலை ஒன்று இருக்கு… “ என்று தன் தந்தையிடம் சொன்னாள்..
அதற்க்கு சூர்ய நாரயணன்… “ என்ன முக்கியமான வேலை .. அம்மா, தங்கையை ஆஸ்ப்பிடலில் இருந்து வீட்டுக்கு அழைத்து போவதை விட முக்கியமானது…?” என்ற தந்தையின் கேள்விக்கு வனிதா பதில் அளிக்காது அவரை ஒரு விதமாக பார்த்தவள்..
“ ஏன் உங்களுக்கு இதோட முக்கியமான வேலை இருக்கா…. அவங்க கூட ஏதாவது வெளியில் போவது போல்..” என்ற மகளின் கேள்விக்கு, அவரால் பதில் அளிக்க முடியவில்லையா..? இல்லை பதில் சொல்வதற்க்கு முன் அவரை நோக்கி வந்த மருத்துவரை பார்த்து, இவருக்கு முன் என்ன பேசுவது என்று விட்டு விட்டாரா….? தெரியாது..
ஆனால் ஒன்று அவர் வனிதாவின் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்பது.. எனக்கு இது தானே தேவை என்பது போல் தன் பேசியில் ஏதோ பேசிக் கொண்டே அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறும் மகளை , ஒரு தந்தையாக தடுக்க வழியில்லாது, தன் மனைவி மகளை வீட்டுக்கு அழைத்து சென்றார்..
அவர்கள் இருவரையும் வீட்டுக்கு அனுப்பும் முன்… இருவரையும் பார்த்த மருத்துவர் சூர்ய நாரயனணை தனியே அழைத்து… அவ்வளவு சொல்லி தான் அனுப்பினர்..
அதுவும் குறிப்பாக மகளை பற்றி சொன்ன.. “ குறைந்தது ஒரு வருடமாவது அவங்க அது போலான உறவில் ஈடு பட கூடாது..” என்று திருமணம் ஆகாத மகளை பற்றி சொன்னவரிடம் சூர்ய நாரயணன் தலை குனிந்து கொண்டு..
‘ சரி..” என்பது போல் சொல்லும் படியான நிலையில் தான் அவரை அவர் மகள் கொண்டு வந்து நிறுத்தி உள்ளாள்..
தன் மனைவியை பற்றிய உடல் நிலையான.. “அவங்களை பற்றி முன்னவே உங்களுக்கு தெரிந்தது தான்… அதோட இப்போ அவங்களுக்கு மகளின் நிலை நினைத்தும் மனது கஷ்டமா தான் இருக்கும்..
அதனால் தூக்கம் குறையலாம்.. அதற்க்கு மாத்திரை எழுதி கொடுத்து இருக்கிறேன்..” என்று ஒரு சில மருந்துவகைகளை சொன்னவர்..
பின்.. “ இந்த மாத்திரை மருந்து எல்லா வற்றையும் விட மிக முக்கியம்.. அவங்க மனது அழுத்தம் கூடாது .. “ என்பது தான்…
அந்த வழி வகையை முதலில் சூர்ய நாரயணனே செய்வாரா என்பது தெரியாத ஒன்று என்றால்,
அவரின் மூத்த மகள்… மான்சியை தன் ஆண் நண்பனிடம் காண்பித்து …
“அந்த பெண் தான் நல்லா பார்த்துக்கோ.. நான் சொன்னது போல் செய்து முடி..” என்று சொல்லி கொண்டு இருந்தாள்… பின் விளைவு தெரியாது…
அத்தியாயம்….16
சர்வேஷ்வரனின் வாழ்க்கை திருமணம் முடிந்த பின்னும் இலகுவாக தான் எந்த வித பிரச்சனையும் இல்லாது சென்று கொண்டு இருந்தது… ஆனால் மான்சிக்கு…?
தினம் தினம் ஒரு பிரச்சனை அவள் எதிரில் வந்து நின்றது.. அது தானே வருகிறதா..? இல்லை வரவழைக்கபடுகிறதா..? என்று ஆராயும் நிலையில் கூட மான்சிக்கு நேரம் இல்லை…
காலையில் நூலகம்… மாலையில் கோச்சிங் க்ளாஸ்.. பின் அதை பற்றி இன்னும் அறிய புத்தகம்,, கூகுல் என்று அவளின் தேடல் இன்னும் இன்னும் அதிகமானது..
கூடிய விரைவில் அவள் எழுதும் தேர்வு நெருங்கி கொண்டு வருவதால்… அவளுக்கு நேரம் இறக்கை கட்டி பறந்து கொண்டு இருந்த வேளயில், தன் தம்பியிடமே அவன் படிப்பு …உணவு …அவன் மனநிலை… என்று தன் பேச்சை சுருக்கி கொண்டாள் என்றால்,
மற்றவர்களுக்கு அவள் செலவழிக்கும் நேரத்தை நீங்களே கணக்கீட்டுக் கொள்ளலாம்…
காலை உணவு உண்ண அமர்ந்தால், இது என்ன சத்திரமா என்ற முனுகலோடு தான் அவள் காலை உணவு தொடங்கும்…
பின் அவள் உடுத்தும் உடை… அவள் எப்போதும் உடுத்தும் உடை எளிமையாக தான் இருக்கும்.. அவள் தம்பி கூட…
“ என்ன அக்கா கலெக்ட்டர் ஆகுவதற்க்கு படிப்போட , உடையில் கூட பிரப்பர் ஆகிட்டு வர போல…” என்று அவன் கிண்டல் செய்வான்.. அப்படி தான் இருக்கும் அவள் உடை..
நேர்த்தியாகவும்.. அடர் நிரத்தில் இல்லாதும். முழு உடலும் மறைத்த வாறும் தான் இருக்கும்.. அதே போல் தான் அணிகண்லங்களும்..
காதில் சின்ன கம்பல்… ஒரு கையில் மெல்லிய வளையல்… மறு கையில் வெளியில் போகும் போது மட்டும் அதில் வாட்ச் இடம் பெற்று இருக்கும்.. மற்ற நேரத்தில் அங்கு வெறுமை மட்டுமே காட்சி தரும்…
பார்க்க ஆடம்பரமாக இல்லை என்றாலும், நேர்த்தியாக தான் எப்போதும் இருப்பாள்.. புடவை என்பது திருமணத்தில் உடுத்தியது.. அதன் பின் ஜீன் குர்த்தி.. இல்லை ஜுடி இது தான்… அதுவே அவளுக்கு அழகோடு கம்பீரத்தையும் சேர்த்து கொடுக்கும்..
ஆனால் சர்வேஷ்வரனின் வீட்டு ஆட்களுக்கு மட்டும், குறிப்பாக, அந்த வீட்டின் பெண்களின் கண்களுக்கு அந்த அழகும்… கம்பீரமும் தெரியாது… அவளின் தோற்றம் ஒன்றும் இல்லதவர்கள் போல் தெரிந்தது போல்..
அதனால்.. “ என்ன இது ட்ரஸ்…?” என்று தன் மாமியார் கேட்டார்கள் என்றால், அவளின் பெரிய மாமியார் …
“ உன் வீடு போல் இது ஒன்றும் இல்லாத வீடு கிடையாதும்மா… இது என்ன கண்ணுக்கே தெரியாத போல தாலி சரடு…? கைய் தொட்டா கூட கையோட வந்து விடும் போல இருக்கு… . நான் அப்போதே சொன்னேன் கொஞ்சம் தெருப்பா எடு என்று…
சர்வாவே கூட்டிட்டு நகை கடைக்கு போய் இதை மாற்றி கொஞ்சம் பார்க்குறப்ப போலாவது எடு…” என்று சொன்னவரின் மருமகள் கழுத்தில் ஒன்றும் இல்லாது அந்த வீட்டில் உலவுவது ஏனோ அவர்கள் பார்வைக்கு பட வில்லை போல்..
இல்லை அவளிடம் காட்ட முடியாத மாமியார் அதிகாரத்தை மான்சியிடம் காட்டி தங்கள் அதிகாரத்தை தக்க வைத்து பார்த்து கொள்கிறார்களோ… என்னவோ…
பக்கத்தில் அமர்ந்து இருந்த சர்வேஷ்வரை பார்த்து.. “ சர்வா வாங்கி தருவே தானே..?” என்ற கேள்விக்கு பதில் அளிக்காது தன் மனைவியை திரும்பி தன் மனைவியின் தோற்றத்தை பார்த்தவன் ஒன்றும் சொல்லாது…
“எனக்கு ஆபிசுக்கு டைம் ஆகிறது..” என்று அந்த பேச்சுக்கு உண்டான பதிலாக ஒன்றும் சொல்லாது கிளம்பி விட்டான்…
சொல்லி இருக்கலாம்.. அவள் தோற்றத்தை பார்த்து தன் மனதில் நினைத்தது ஆன.. ‘ இதுக்கு என்ன குறை.. நல்லா தானே இருக்கா…’ என்று சொல்லி இருக்கலாம்.. சொல்லி இருந்தால், குறைந்த பட்சம் அவன் வீட்டு ஆட்கள் இனி மேல் உடை.. நகை விசயத்திலாவது மான்சியை பேசாது விட்டு இருப்பார்கள்…
இதில் என்ன கொடுமை என்றால், உடையை பற்றி வனிதா… பேசுவது தான் மான்சிக்கு தலை வேதனையாக இருந்தது…
மான்சிக்கு இப்போது எல்லாம் நூலகம், கோச்சிங் க்ளாஸ் முடிந்து வீட்டுக்கு போக வேண்டும் என்று நினைத்தாலே … தலை வேதனையாக இருந்தது…
காரணம் அது என்னவோ இப்போது எல்லாம் இரு அத்தைகளின் பேச்சில் குத்தல் மிக தூக்கலாக தெரிந்தது… இப்போது என்ன அந்த ஒரு நாள் தான் அவளிடம் அவர்கள் பேச்சில் அன்பு தெரிந்தது..
பின் ஏதாவது பேசுவது.. அதில் ஏதாவது மறைத்து வைத்து பேசுவது.. இது எல்லாம் அவளுக்கு புதியது… வாழ்க்கையே புதியது.. அதில் அவள் பொருத்தி கொள்ளும் முன்னவே கணவனாக சர்வேஷ்வரன் மான்சியிடம் தன் உரிமையை எடுத்து கொண்டான்..
ஆனால் அதற்க்கு உண்டான மரியாதையை அவன் அவளுக்கு பெற்று கொடுத்தானா..? என்பதே அவளுக்கு விளங்காத போது.. வீட்டு ஆட்களின் பேச்சை எதிர் சேர்த்து கொள்வது என்று தெரியாது குழம்பி தான் போனாள்…
புது பெண் புகுந்த வீட்டில் நடக்கும் பிரச்சனையை தாயிடம் சொல்லி ஆலோசனை கேட்பாள்.. ஆனால் இங்கு பிரச்சனையே மான்சியின் அன்னை வைத்து எனும் போது..
அதுவும் மான்சி தன் அன்னையிடம் பேச்சு வார்த்தைகளே முற்றிலும் விட்ட நிலையில், தன் குழப்பங்களை யாரிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வாள்..
அவளின் ஒரே ஆறுதல் தன் தம்பி… அவனிடம் பேச தான் முடியும்.. தன் பிரச்சனைகளை அவனிடம் சொல்ல தோன்றவில்லை..
காரணம் ஒன்று அவன் வயதாக இருக்கலாம்.. மற்றொரு காரணம் அவன் படிப்பு.. ஏற்கனவே தன்னை தன் எதிர் கால வாழ்க்கையை நினைத்து குழம்பி போய் கொண்டு இருந்தவனின் மனது தெளியவே தான் இந்த திருமணத்திற்க்கு ஒத்துக் கொண்டது…
இதில் தன் குழப்பத்தை சொல்லி அவனிடம் சொல்லி அவனை குழப்புவதோடு மட்டும் அல்லாது, அவனின் மருத்துவ கனவையும் சிதைக்க கூடாது என்று நினைத்து தன் மனதில் தோன்றும் குழப்பங்களை எப்போதும் போல் யாரிடமும் சொல்லாது தன் மனதில் போட்டுக் கொண்டவள் எப்போதும் போல் மனதோடவே பேசிக் கொண்டாள்…
வீட்டில் தான் இப்படி என்றால், வெளியில் யாரோ தன்னை பின் தொடர்வது போல் ஒரு உணர்வு … அவள் மனதில் எழுந்த வண்ணம் இருக்கிறது.. அவள் உணர்வு தந்த வேகத்தில் திரும்பி யார்…? என்று தான் பார்க்கிறாள்..
ஆனால் தனக்கு தெரிந்தவர்கள் யாரும் கண்ணில் மாட்டுவது இல்லை.. இல்லை வேறு யாரோ தன்னை பின் தொடர்கிறார்களா..? என்று பார்த்த போது பொதுவான வீதி எனும் போது…
அனைவரும் வர இடத்தில் தன்னை யார் பின் தொடர்கிறார்கள் என்று அவளாள் அறிய முடியவில்லை… கூர்ந்து கவனித்தால் தான்… ஒரே நிறத்தில் இருக்கும் கார் தன்னை பின் தொடர்கிறதா என்று.. அப்படி இல்லை என்பது அவளுக்கு நிச்சயம் ஆனது…
பின் சிறிது நாள் கழித்து, முதலில் தன்னை பின் தொடர்கிறார்களா..? இல்லை தன் மனதின் பிரம்மையா..? என்று அவள் குழம்பும் வேளயில், இன்னொரு குழப்பமாக அவள் வீட்டை விட்டு வெளி வந்த உடன் அவள் பேசிக்கு தனக்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வரும்..
அழைப்பு என்றால் தொடர்ந்து கிடையாது… இவள் நூலகத்துக்கு செல்லும் வழியில்… பின் கோச்சிங் க்ளாஸ் செல்லும் வழியில் ஒரு அழைப்பு, பின் மாலை… அதன் பின் இரவு.. ஒரு பத்து மணியளவில்…
முதலில் யாரோ என்று எடுத்தவள் .. பின் அதை எடுக்காது விட்டு விடுவாள்.. என்ன ஒன்று இரவும் சர்வேஷ்வரனும் தன் அறையில், தவறு தவறு சர்வேஷ்வரனின் அறையில் தான் இருப்பதால், அந்த இரவு நேரத்து அழைப்பை தான் ஏற்காத போது…
அவன் எப்போதும் போல் மடி கனிணியில் வேலை பார்க்கும் போது , இரவு நேர அந்த அழைப்பில் அவனுக்கு இடையூறு செய்ததால் தலை நிமிர்ந்து தன்னையும், தன்னை பேசியையும் ஒரு பார்வை பார்த்து விட்டு பின் மீண்டும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவான்..
இது போல் மூன்றாம் நாளும் நிகழும் போது மட்டும்.. “ உனக்கு தெரிந்தவங்களா இருக்க போகிறது.. அதுவும் இந்த நேரத்திற்க்கு உனக்கு நெருங்கினவங்க மட்டும் தானே அழைப்பாங்க.. யார் என்று பார்..” என்று சர்வேஷ்வரன் சொன்ன போது மான்சி சொல்லி இருக்கலாம்…
“ இது போல் எனக்கு தினம் தினம் வருகிறது.. எடுத்து பேசினால் பேச மாட்டார்கள்..” என்று சொல்லி இருக்கலாம்… ஆனால் அதை சொல்லாது..
“ முக்கியமான கால் எல்லாம் கிடையாது..” என்று விட்டாள்…
ஒரு சமயம் பேசியில் அழைத்தவன்.. ஏதாவது அதாவது தவறாக பேசி இருந்தால், சொல்லி இருப்பாளோ.. என்னவோ..? ஆனால் அதுவும் சந்தேகம் தான்.. அவர்களின் விசித்திரமான வாழ்க்கை முறமைக்கு..
ஆம் அவர்கள் வாழ்க்கை ஒருவகையில் விசித்திரத்தில் சேர்த்தி என்று தான் சொல்ல வேண்டும்… பின் என்ன ஆசையோட இல்லை காமத்தோட அவர்களின் உறவு முதல் ராத்திரியோடு சரி..
அடுத்த ராத்திரியில் சர்வேஷ்வரனுக்கு அவளை அணைக்க நினைத்தாலும், அவளின் முக சோர்வில் அவளை சேராது விடுத்தவன்..
அடுத்து அவளை நெருங்கினாலே அவள் அம்மாவை தான் ஏதாவது பேசி விடுகிறோம்.. அது என்னவோ அவன் மான்சியிடம் அவள் அம்மாவை பற்றி பேச கூடாது என்று நினைத்ததை அவனால் நிறை வேற்ற முடியாது போயின…
அதற்க்கு காரணம்.. மான்சியை பார்க்கும் சர்வேஷ்வரனின் மனது தன்னால் அவள் பக்கம் அவனையும் மீறி சாய்வதை அவனால் நன்கு உணர முடிகிறது… அதற்க்கு தன் மனது என்று உணராது..
அம்மாவை போலவே மயக்குகிறாள் என்று தன் மனம் அவள் வசம் சாயும் போது எல்லாம் நினைப்பு தோன்ற… அதன் தாக்கத்தில் வாயை விட்டு விட்ட பின்… அவள் முகம் கசங்களில் தன் தவறை உணர்க்கிறான்..
அதனால் எதற்க்கு வம்பு என்று நினைத்து தனக்கே தன்னை கட்டுப்படுத்துவோம் என்று தோன்றுக்கிறதோ அப்போது அவளை நெருங்கலாம் என்று முடிவோடு இருந்தான்…
மான்சியும் சர்வா முதல் முறை தன்னிடம் அப்படி இருந்தது சரி.. பின் இல்லை எனும் போது ஏன்..? என்று ஒரு இரண்டு நாள் தான் அந்த எண்ணம் எல்லாம்..
பின் தன் கனவு தன் படிப்பு என்று யோசிக்கும் போது இதுவும் ஒரு வகையில் நல்லது தான் என்று நினைத்து கொண்டு தன் கனவினை நோக்கி அவள் பயணம் இருந்தது..
என்ன ஒன்று இருவரும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கவனித்து இருந்தால், இருவருக்கும் நல்லதாக இருந்து இருக்கும்.. என்ன செய்ய… நடப்பதை யாராலும் தடுக்க முடியாது எனும் போது.. இவர்களால் மட்டும் முடியுமா என்ன…?
மான்சி ஏற்கனவே குழப்பத்தில் தத்தளித்து கொண்டு இருக்கும் வேளயில் தான் பத்மாவதி தன் சின்ன மகள் அனிதாவோடு தன் தாய் வீட்டுக்கு வந்தாள்….
அவர்கள் வரும் போது எப்போதும் போல் அனைவரும் அவர் அவர் அறையில் இருக்கும் போது, வைதேகியும், ரேவதியுமே இவர்களை பார்த்து..
“ வா பத்து இப்போ உடம்பு எப்படி இருக்கிறது..?” என்று விசாரித்துக் கொண்டே அனிதாவையும் ஒரு பார்வை பார்த்த வாறு..
“வாம்மா..” என்று சொன்னதோடு சரி.. ஒரு முறைக்கு கூட அவள் உடல் நலத்தை பற்றி விசாரிக்கவில்லை.. அவள் உடலுக்கு என்ன கேடு.. மனது கெட்டு சீரழிந்ததால் தானே உடம்பு கெட்டது என்று எண்ணி விட்டர்களோ என்னவோ..
ஆனால் ஒன்று முன்பு இருந்த அந்த பொலிவு அனிதாவின் முகத்திலும் சரி.. உடம்பிலும் சரி இல்லை.. ஏதோ நோயாளி போல் கழுத்து எலும்பு முன்னுக்கு வந்து கண்கள் சுற்றியும் கருவளையம் படர்ந்து என்னவோ போல் காணப்பட்டாள்.. இருந்தும் அவள் மீது பரிதாபம் எழவில்லை..
பரிதாபப்படும் காரியத்தையா அவள் செய்து இருக்கிறாள் என்று நினைத்து அவளிடம் பேச்சு எல்லாம் ஒரு கடமைக்கு தான் வந்தது…
ஆனால் பத்மாவதியின் சோர்வில் அண்ணிகள் இருவரும் வீட்டு பெண்ணாக அவள் மீது அக்கறை காட்டி பேசினார்கள்…
“என்ன பத்து ஆஸ்பிட்டலில் பார்த்ததோடு இன்னும் சோர்வா தெரியுற..? டாக்டர் சொன்னது போல் மாத்திரை எல்லாம் சரியா எடுத்துக்குறியா இல்லையா..? என்று கேட்டனர்…
அதற்க்கு பத்மா.. “ம் ..” என்ற பதிலோடு சோர்வாக அங்கு இருந்த ஷோபாவின் மீது சாய்ந்தவளின் ஒய்ந்த தோற்றத்தில் ரேவதி அவசர அவசரமாக அவளுக்கு பழச்சாறு கொண்டு வந்து கொடுத்து..
“ முதலில் இது குடி..” என்று பத்மாவை குடிக்க வைத்தவர் அனிதாவை பார்த்து..
“ உனக்கும் கொண்டு வரட்டுமா.? என்று கடமைகே என்று கேட்டார்… இதை எல்லாம் அந்த சோர்விலும் பத்மாவதி கவனித்தார் தான்..
ஆனால் அவரால் ஒன்ட்ரும் கேட்க முடியாத நிலையில் தானே அவள் மகள் அவளை வைத்து இருக்கிறாள்…
பத்மாவதியின் சோர்வை பார்த்த வைதேகி.. “ டிபன் எல்லாம் செய்து முடித்து விட்டாங்க்க.. சாப்பிட்டு உன் அறையில் ரெஸ்ட் எடுக்கிறியா பத்மா…” என்று கேட்டார்… இப்போதும் அந்த வீட்டில் பத்மாவதிக்கு என்று தனி அறை இருக்கிறது… தங்கையும், மாப்பிள்ளையோடு வந்து தங்க..
பத்மாவதிக்கு அந்த அறை அவ்வப்போது உபயோகப்படுகிறது தான்.. ஆனால் என்ன ஒன்று… மாப்பிள்ளையோடு தங்க தன் அண்ணங்கள் ஏற்பாடு செய்த அந்த அறை தனியே… வெறுமையில், தன் நிலையை எண்ணி அழுதிட உபயோகமாகிறது….
ஏதோ யோசனையில் இருந்த பத்மாவதி மீண்டும் கேட்கவும் தான் தன்னிலைக்கு திரும்பி அண்ணியின் பேச்சுக்கு ..
“ பரவாயில்லை அண்ணி இப்போ தானே ஜூஸ் குடித்தேன்.. அண்ணங்களை பார்த்துட்டு நான் ரெஸ்ட் எடுக்கிறேன்…” என்று பதில் அளித்தவர் திரும்பி தன் மகளை பார்த்தார்..
அவளோ எப்போதும் போல் தன் பேசியில் மூழ்கி போய் இருந்தவளிடம்… “ நீ வேணா ரெஸ்ட் எடுக்கிறியா…?” என்று கேட்க..
அனிதாவுக்கும் சிறிது படுத்தால் நன்றாக இருக்கும் என்று தான் அவள் உடல் ந்லை அவளுக்கு உணர்த்தியது..
ஆனால் தினம் தினம் வனிதா அவளை அழைத்து.. “ நீ செய்த முட்டாள் தனத்தால், அங்க்த பொம்பளையின் மகளை நான் தினம் தினம் பார்க்க வேண்டி இருக்கிறது..
அதுவும் அந்த சர்வாவோடு அவள் ஜோடி போட்டுக் கொண்டு வருவதை பார்க்க பார்க்க எனக்கு எப்படி இருக்கு தெரியுமா…?
அவளுக்கு என்று போய் வர தனி கார்… கல்யாணம் ஆன அடுத்த நாளே வாங்கி கொடுத்து விட்டான்… ஏதோ படிப்பு வேற படிக்குதாம்..
நல்லா வேற படிப்பா போல… சர்வா எப்போதும் பிசினஸ் பிசினஸ் என்று சுத்தி கொண்டு இருப்பவன்.. இவளுக்கு என்று அவளுக்கு தேவைப்படும் புக்கை தேடி வாங்கி வந்து கொடுக்கிறான்…
அததைங்க எல்லாம் அவ்ஸ்ளிடம் தான் பிடிக்கவில்லை என்பது போல் பேசுவது.. ஆனால் அவள் போன பின்.. பரவாயில்லை நாம என்ன சொன்னாலும் எதிர்த்து பேசுவது இல்லை .. என்று சொல்றவங்க இடையில் என்னையும் ஒரு பார்வை பார்க்கிறாங்க…
நான் நல்லா கேட்டு விட்டுடேன்… அவள் நிலைக்கு இந்த வீட்டில் எல்லாம் கால் எடுத்து வைக்க கூட முடியாது.. அதனால தான் அவள் அடங்கி இருக்கா. நான் எந்த தேவைக்கு அடங்கி இருக்கனும்…?” என்று கேட்டாள்…
அதற்க்கு நம்ம சின்ன அத்தை… “ கால் வைக்க கூட தகுதி இல்லாதவ இந்த வீட்டுக்கு எதற்க்கு கால் எடுத்து வைத்தாள் என்று யோசித்தா நல்லா இருக்கும் என்று எனக்கே ஸ்ல்ல்லிட்டு போறாங்க..
எல்லாம் உன்னால் தான்.. நீ மட்டும் இப்படி மாட்டாது இருந்து இருந்தால், இந்த பேச்சு எல்லாம் நான் கேட்டுட்டு சும்மா இருந்து இருப்பேனா…
முதல்ல அவங்கள பேச விட்டு தான் மாமாங்க இருப்பாங்களா..? எப்போ எல்லாம் மாமா எதிரில் கூட இது போல் பேச்சு பேசுறாங்க.. அவங்க்களுக்கு இந்த தைரியம் எங்கு இருந்து வந்தது எல்லாம் உன்னால..
அதுவும் இல்லாது இந்த வீட்டில் சர்வா வைத்தது தான் சட்டம் என்பது போல்… இபோ அவன் மனைவி மான்சி எனும் போது நாளை பின்ன இந்த வீட்டில் என் அதிகாரம் எந்த அளவுக்கு இனி இருக்கும் என்று கூட தெரியல..
இவ்வளவு கெட்டதிலும் ஒரு நல்லது என்றால், அந்த மான்சி இந்த வீட்டில் ஒரு பெயின் கெஸ்ட் போல் தான் இருக்கா.. அவள் உண்டு அவள் படிப்பு உண்டு…
கீழே வந்தா அவள் சாப்பிடும் வேலையை மட்டும் பார்த்துட்டு போயிட்டே இருப்பா.. இவள் தன் படிப்பை முடித்து விட்டு, இது போலான எண்ணம் மாறி தன்னை சுற்றி கவனிக்க ஆரம்பித்து விட்டாள் .. என் நிலை என்ன என்று எனக்கு தெரியல..” என்று வனிதா அனிதாவிடம் இது போலான பேச்சை கேட்டு கேட்டு தான் அவளை இங்கு வர வழைத்து விட்டது..
இது நல்லதிற்க்கா..? கெட்டதிற்க்கா…? என்று தெரியாத நிலையில் அவளின் இரண்டு மாமன்களும் சாப்பிட வந்தனர்..
பத்மாவதியையும்.. அனிதாவையும் பார்த்தவர்கள்.. பத்மாவதியிட எப்போதும் போல் பாசத்துடன்..
“ எப்போ வந்தே பத்து.. இப்போ உடம்பு எப்படி இருக்கு..?” என்று பாசத்துடன் விசாரித்தவர்கள்.. இரு அத்தைகளையும் போல் அனிதாவிடம் போனால் போகிறது என்பது போல் தான்..
“ எப்படி இருக்க…? என்று கடமைக்கு என்று விசாரித்தனர்.. இதையும் மனதில் வேதனை பொங்க தான் பத்மாவதி பார்த்து கொண்டு இருந்தார்…
முன்பு எல்லாம் தான் மட்டும் இங்கு வரும் போது.. “ ஏன் அனிதாவை அழைத்துக் கொண்டு வர மாட்டே..?” என்று பாசத்துடன் கேட்டவர்கள்..
இன்று வந்தவளுக்கு நடத்தும் முறையில் உரிமையுடன்.. “ என்ன…? என்று கேட்க கூட முடியாத நிலையில் தான் அவரை அவள் மகள் வைத்து இருக்கிறாள்…
அனிதாவும் முன் எல்லாம் இங்கு அடிக்கடி எல்லாம் வந்தது கிடையாது தான்.. ஆனால் எப்போதாவது வந்தால், நல்ல உபரிப்பு தான் அவளுக்கு கிடைத்தது..
அதே போல் அத்தைகள் தன் வீட்டுக்கு வந்தால், .. “ என்ன அனி எதுவும் பேச மாட்டேங்குற..” என்று கேட்பார்கள்..
ஆனால் இன்று அவர்கள் தன்னிடம் பேசுவதை தவிர்ப்பதும் அவள் நன்றாகவே உணர்ந்தாள்.. உணர்ந்தவள் என்ன நினைக்கிறாள் என்று தெரியாதது போல் தான் அவள் முக பாவம் இருந்தன..
ஆனால் ஒரு வித எதிர் பார்ப்போடு தான் அவள் கண்கள் பேசியிலும் மேல் இருந்து வரும் படிக்கட்டிலும் அவள் பார்வை சென்று சென்று வந்தது..
முதலில் அவளின் மகி அத்தான் டையினிங்க் டேபில் மீது வந்து அமர்ந்தவன்.. பத்மாவதியிடம்.. “ எப்போ அத்தை வந்திங்க எப்படி இருக்கிங்க..” என்று விசாரித்து விட்டு அனிதாவிடமும்.
“ என்ன அனி அதிசயமா வீட்டுக்கு வந்து இருக்க..?” என்று கேட்டவன்.. பின்..
“ உனக்கு போர் அடித்தால், நீ வேணா வனி கிட்டயிடம் பேசிட்டு இறேன்..” என்று சொல்லும் போதே இங்க்கு வைதேகி தன் ஒரவத்தியிடம்..
“ ஆமாம் ஆமாம் இரண்டு குட்டி சுவர்களும் பேசும் ஏத்த இடம் தான் அது..” என்று சொல்ல..
அதற்க்கு ரேவது.. “ நம்ம மகியும் அங்கு தான் இருக்கான்..” என்று சொல்ல ..
“ நான் அவனையும் சேர்த்து தான் சொல்றேன்… இப்போ எல்லாம் வனியி நடவடிக்கை இன்னும் இன்னும் மோசமா தான் ஆகிட்டு வருது… இதோ இந்த நேரம் வர இந்த மகாராணி வந்த பாடு இல்ல… இவனும் அவளை விட்டுட்டு இருக்கான்.. இதே சர்வா இருந்தால்..” என்று ரேவதி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…
சர்வாவும் மான்சியும் படியில் இருந்து ஜோடியாக இறங்கி வருவதை மொத்த குடும்பமும் கண் கொட்டாது பார்த்து கொண்டு இருந்தனர்…
பெரும் பாலும் சாப்பிட இருவரும் ஒரு சேர தான் வருவர்.. இந்த வீட்டுக்கு வந்த மறு நாளே இதை சர்வா சொல்லி விட்டான்..
ஆனால் இன்று போல் இந்த அளவு நெருக்கமாக வந்தார்களா? அந்த அகன்ற படிக்கட்டில் சர்வா பக்கத்தில் மான்சி படி இறங்க்கி வர..
அதுவும் அவளுக்கு ஏற்றது போல் சர்வாவும் தன் நீண்ட கால்களை ஒரு ஒரு படியாக எடுத்து வைத்து கொண்டு …
மான்சியிடம் மெல்ல பேசிக் கொண்டு வருவதும்… மான்சி சர்வாவின் முகம் பார்த்து பதில் சொல்ல வேண்டி… கொஞ்சம் நிமிர்ந்து ஏதோ சொன்ன வாறு வந்த அந்த காட்சியை ஒரு சிலர் ரசித்தனர்கள் என்றால், ஒரு சிலருக்கு வயற்றில் அமிலம் சுரக்காத குறையாக வயிறு எரிந்து போய் விட்டது… இதை பார்த்த அனிதா என்ன நினைக்கிறாள் என்ன செய்ய போகிறாள் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்….