Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Meezhveno Muzhgiduveno...18

  • Thread Author
அத்தியாயம்…..18



மான்சியின் கண்கள் கீழ் நோக்கி வனிதா, அனிதாவையே பார்த்து கொண்டு இருந்ததால், மேல் நோக்கி நடந்து வந்த சர்வேஷ்வரன் அவள் பக்கத்தில் நின்று கொண்டு அவள் கண் திசை போகும் பாதையை நோக்கி சர்வேஷ்வரனின் கண்ணும் பயணித்ததை மான்சி கவனிக்கவில்லை…



அதில் சர்வேஷ்வரனுக்கு கொஞ்சம் கோபம் தான்.. இவள் என்ன இந்த வீட்டில் பெயின் கெஸ்ட்டா…? முதல் நாள் இரவு அவளை நான் தொட்டது.. பின் நான் அவளை நாடவில்லை…



ஏன்..? எதற்க்கு..? என்று இவள் யோசிக்கவில்லையா…? இல்லை விட்டது தொல்லை என்று விட்டு விட்டாளா…?



தொல்லை விட்டது என்று தான் இருந்து இருப்பாள்… இல்லை என்றால் தன்னிடம் அதை பற்றி வெளிப்படையாக கேட்க தயங்கினாலும், ஒரு பார்வையில் கூட அதை தனக்கு உணர்த்தாது இருந்து இருப்பாளா…?



சாப்பிடுவது.. நூலகம்.. கோச்சிங்க் க்ளாஸ்… பின் வீட்டுக்கு.. வீட்டுக்கு என்றால், ஹால் அது போன்ற இடத்தில் எல்லாம் அவளை பார்க்க முடியாது..



சாப்பிடும் அறைக்கு சாப்பிட மட்டுமே செல்வது… பின் தங்கள் அறையிலேயே முடங்கி கொள்வது.. சரி அறையில் இருக்கிறாள்… படிக்கிறாள்… அது நல்ல விசயம் தான்.. அதில் தவறு ஒன்றும் கிடையாது..



ஆனால் ஒருத்தன் வருகிறானே.. அவன் வரும் சத்தத்தை கேட்டாவது, தலை நிமிர்ந்து பார்ப்போம் என்று இருக்கா..



யாரோ யாரோட அறைக்கு வருவது போல் அப்படியே புத்தகத்தில் தலையை புகுத்தி கொள்வது.. இல்லையேல் கணினியில் …





சரி எப்போதும் வருபவன்.. அவன் அறை… அவன் வருகிறான் என்று நினைத்து விட்டாள் போல் என்று…





அவள் கவனத்தை தன்னிடம் திருப்ப , அவளை ஒரு பார்வை பார்த்து கொண்டே… தைலத்தை எடுத்து தலையில் தெய்த்து கொள்வான்.. அதன் வாசத்திலாவது தன்னை நிமிர்ந்து பார்த்து..



“ தலை வலிக்கிறதா…? “ என்று கேட்பாள் என்று நினைத்து..



அவன் நினைத்தது போல் நிமிர்ந்து பார்த்தாள் தான்.. ஆனால்… தன்னிடம் எதுவும் கேட்காது… திரும்பவும் அந்த புத்தகத்தில் தலையை புகுத்தி கொள்பவளை இவன் எந்த கணக்கில் சேர்த்து கொள்வது என்று நினைத்து திண்டாடி தான் போனான்…

இப்போது இவ்வளவு பெரிய உருவம் வருகிறேன் அது கூட உணராது அப்படி என்ன பார்க்கிறாள் என்று நினைத்து தான் சர்வேஷ்வரன் மான்சி பார்த்த திசை பக்கம் பார்த்தது…



இவள் வனிதாவையும், அனிதாவையும் தான் ஒரு வித யோசனையுடன் பார்க்கிறாள் என்றதை கண்டு கொண்டவன்…

எதற்க்கு இவள் இப்படி அவர்களை பார்க்கிறாள் என்று நினைத்தவனுக்கு சிறிது நேரம் முன் மாமா சூர்ய நாரயணன் தன்னை அழைத்து பேசிய பேச்சு நியாபகத்தில் வந்தது..



கூடவே இதை பற்றி தன்னிடம் ஒன்றும் கூறாது… அவளே செய்த செயல்களும் நியாகத்தில் வந்ததால், தன் பக்கத்தில் யாரோ நிற்கிறார்கள் என்று உணர்ந்து அவள் திரும்பும் முன்…



அவளின் கையை அழுந்த பற்றி தங்கள் அறைக்கு அழைத்து சென்றான் என்பதை விட, இழுத்து சென்றான் என்று சொன்னால் சரியாக இருக்கும்…





மான்சி என்ன என்று உணரும் முன், அவள் தங்கள் அறையில் இருந்தாள்.. சர்வேஷ்வரனின் கை பற்றிலில் வலித்த கையை சதையை மறு கைய்யால் தடவி விட்ட வாறே..



“ வான்னு சொன்ன வர போறேன்.. இப்போ எதற்க்கு இப்படி என்னை இழுத்துட்டு வர்றிங்க..?” என்று மான்சி முகத்தை வலியால் சுளுக்கினாளா…? இல்லை கோபத்தில் அவள் முகம் சுணக்கம் காட்டியதோ என்று, சர்வேஷ்வரனுக்கு தெரியவில்லை..



ஆனால் முகம் சுருங்க அவள் தன்னிடம் கேட்ட அந்த விதத்தில், முன் அவள் மீது இருந்த கோபம் மேகம் போல் மெல்ல கரையலாயிற்று..



அது கொடுத்த இதத்தில்… “ அப்போ கூப்பிட்டா வருவியா..?’ என்று கேட்டதற்க்கு..



மான்சி இது என்ன கேள்வி என்பது போல் அவனை பார்த்த வாறு..



“ நீங்க கூப்பிட்டு நான் எப்போது வராது இருந்து இருக்கேன்…”

மான்சி தன்னை சாப்பிட அழைத்த போது எல்லாம் அவன் பின்னாடி சென்றதை நினைத்து சொன்னாள்..



ஆனால் சர்வேஷ்வரனோ… முதல் நாள் இரவு அவளை அணைத்த போது அவள் தடுக்காது தன் அணைப்பிற்க்குள் அவள் வந்ததை நினைத்து கொண்டவனின் முகம் தன்னால், அன்றைய இரவை நினைத்து முகம் சிவந்து போனது..





அவனின் சிவந்த முகத்தை பார்த்த மான்சி… நான் என்ன சொல்லி விட்டேன் என்று இவன் கோபப்படுகிறான் என்று நினைத்து விட்டாள்..



அதாவது குருடனும், செவிடனும் சேர்ந்து கூத்து பார்த்த கதை தான் அங்கு நடந்து கொண்டு இருந்தது…



“ ஓ அப்போ என் மீது தான் தப்பு… “ என்று அவன் ஒன்று நினைத்து சொல்ல இவள் வேறு ஒன்று நினைத்து…



“ பரவாயில்லை அவ்வளவா எல்லாம் வலிக்கவில்லை..” என்று தன் கையை தடவிய வாறு சொன்னவளை பார்த்து குபீர் என்று தான் சர்வேஷ்வரனுக்கு சிரிப்பு பொங்கியதில் அவன் சிரித்தும் விட்டான்..



திருமணம் முடிந்து இத்தனை நாள்களில் அவன் இவ்வாறு சிரித்து மான்சி பார்த்ததே கிடையாது… அவன் இப்படி சிரிக்கவும்.. இப்போ நாம என்ன பேசினோம் என்று இவன் இப்படி சிரிக்கிறான் என்று, அவனையே பார்த்திருந்தாளே தவிர..



அதை.. “ ஏன்..? சிரிக்கிறிங்க …” என்று கேட்கவில்லை…



அவளின் பார்வையில் சர்வேஷ்வரன் என்ன உணர்ந்தானோ… “ என்ன எப்போதும் போல் மனதிலேயே பேசிட்டு இருக்கியா….?” என்று கேட்டவன்.. பின் ஏதோ நியாபகம் வந்தவன் போல்..



“ ஆமா நான் வரும் போது வனி, அனியையே பார்த்திட்டு இருந்தியே என்ன விசயம்..?” என்று கேட்டான்…



சர்வேஷ்வரன் அப்படி கேட்பான் என்று மான்சி எதிர் பார்க்கவில்லை.. அதனால் சிறிது நேரம் யோசித்தவள்..



“ ஒன்றும் இல்ல சும்மா தான் பார்த்தேன்..” என்று சொன்னவளையே யோசனையுடன் பார்த்து கொண்டு இருந்த சர்வா…



“ ஒ அப்படியா…?” என்று கேட்டவன்.. பின் தொடர்ந்து…

“ ஆமா இன்னைக்கு காரில் இருந்து பாதி வழியிலேயே இறங்கிட்ட போல… அதுவும் காரை அனுப்பி விட்டுட்ட…” என்று சர்வா கேட்ட போதாவது மான்சி,



“ எனக்கு இது போல் பிரச்சனை…” என்ற உண்மைய சொல்லி இருக்கலாம்..



ஆனால் சொல்லாது.. “ படிப்பு சம்மந்தமா எனக்கு ஒரு புக் வேண்டி இருந்தது.. அதை பார்த்து வாங்க நேரம் ஆகும்.. அதான் காரை அனுப்பி விட்டு விட்டேன்..” என்று சொன்னவளுக்கு..



“ ஓ…” என்று சொன்னவனை இப்போது மான்சி யோசனையுடன்… அவன் ஓ என்று சொல்லும் போது குவிந்த அவன் உதட்டையே பார்த்து கொண்டு இருந்தவள்..



இவன் இப்போது இந்த அறைக்கு வந்ததில் இருந்து இந்த ஒவை எத்தனை முறை போட்டு இருப்பான் என்று யோசித்துக் கொண்டு இருந்தவளின் அருகில் வந்த சர்வேஷ்வரன்…



“ என்ன உன் உதடு போல் அழகா இல்லையா..? இல்ல மென்மையா இல்லையா..” என்று கேட்டுக் கொண்டே.. தன் விரல் கொண்டு அவள் உதட்டின் அழகையும், மென்மையையும் உணர ஆரம்பித்தான்..



மான்சி பேசாது இருந்து இருந்தால் அவன் விரல் அறிந்த விசயத்தை.. அவன் உதடும் அறிய ஆரம்பித்து இருக்குமோ என்னவோ..



ஆனால் மான்சி சும்மா இல்லாது… நெளிந்து கொண்டே… “ நான் இன்று வாங்கி கொண்டு வந்த புக்கை படிக்க வேண்டும்..” என்று அவள் சொன்ன வார்த்தையில், இனிமையான கனவில் யாரோ சுடு தண்ணீர் தெளித்து விட்டது போல் விழித்து கொண்டவன்.. போன கோபம் திரும்ப வந்ததில்,



அவளை விட்டு கொஞ்சம் தூரம் விலகி கொண்டவன்.. “ ஓ இன்னைக்கு வாங்கிய புக்கை படிக்கனுமா…?” என்று கேட்டவன்..



“ எடுத்துட்டு வா.. நானும் நீ என்ன புக் வாங்கினேன் என்று பார்க்கிறேன்…” என்று கேட்டதும் இப்போது மான்சி திரு திரு என்று முழிக்க ஆரம்பித்து விட்டாள்..



பொய் சொன்னவளுக்கு, அதை தொடர்ந்து பொய்யை மெய்யாக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது இருந்தாள். இல்லை என்றால் அவளிடம் இருந்ததில் இருந்து ஒரு புக்கை எடுத்து அவனிடம் நீட்டி இருக்கலாமே…



இது வரை அவள் பொய் சொன்னது கிடையாது.. மறைக்க செய்ய வேண்டிய அவசியமும் அவளுக்கு வந்தது கிடையாது.. முதல் முறை என்பதால், திரு திரு என்று முழித்து இருந்தாள்..



ஒரு வேளை இதுவும் நல்லதிற்க்கு என்று சொல்லலாம்.. வேறு புக்கை கொடுத்து இருந்தால், சுனாமி போல் பொங்கி இருப்பானோ என்னவோ…



“ என்ன இதுக்கு என்ன சொல்வது என்று யோசிக்கிறியா…?” என்று கேட்டவன்.. திரும்பவும் அவள் அருகில் வந்து முன் போல் அவள் கையை அழுத்தத்துடன் பற்றியவன்..



“ சந்தோஷம் என்று என்னை தேடவில்லை என்றாலும் பரவாயில்லை.. ஏதோ உனக்கு பிரச்சனை அப்போ கூட வீட்டில் ஒரு புருஷன் இருக்கானே அவன் காதில் போட்டனும் என்று உனக்கு தோனுச்சா…? ம் சொல் தோனுச்சா..?” என்று அவன் கேட்கும் போதே…





மான்சிக்கு அவன் எதை பற்றி பேசுகிறான் என்று புரிந்து விட்டது.. இருந்தும் எதுவும் பேசாது அமைதியாக நின்றிருந்தாள்…



அது இன்னும் அவனுக்கு கோபத்தை கூட்டியது என்று தான் சொல்ல வேண்டும்..

“பாம்பேலே இருந்து என் மாமா என் கிட்ட சொல்றார்… உன் வீட்டில் .. உன் அறையில் தானே இருக்கா நீ அவளை கவனிக்கிறது இல்லையா என்று…



சர்வேஷ்வரன் மாமா என்றதும் யார் என்பது போல் அவனை பார்த்தவளின் பார்வையின் பொருளை சர்வேஷ்வரன் புரிந்து கொண்டான் தான்..



ஆனால் அதற்க்கும் அவனுக்கு கோபம் வந்தது.. இவள் வாய் திறந்து சந்தோஷமா பேச வேண்டாம்.. ஆனால் யார் என்பது போல் ஒரு சகஜ பேச்சையும் தன்னிடம் வைத்து கொள்ள மாட்டாளா… என்று அது கொடுத்த அழுத்ததில்..



“ மாமா யார் என்று யோசிக்கிறியா…? உன் அம்மாவோட…” என்று சொல்லிக் கொண்டு வந்தவனுக்கு பின் மண்டையில் அடித்தது போல் தான் என்ன பேசுகிறோம் என்று உரைக்க.. தன் பின் பக்கம் கழுத்தை தடவி விட்ட வாறே கண்ணை மூடி தன்னை ஒரு நிலைக்கு வர வழைத்த பின்..



இப்போது கொஞ்சம் கோபம் குறைந்தவனாக.. இருக்கையை காட்டி உட்கார்… “ என்று அவளை அமர வைத்தவன்.. அவனும் அவளுடைய எதிர் இருக்கையில் அமந்து கொண்டு..

“ மாமா என் சூர்ய நாரயணன் மாமா போன் செய்து மான்சிக்கு ஏதோ போன் எல்லாம் வருதா.. டிடெக்டீவுக்கு போய் இருக்கா.. நீ அவளை கவனிக்கிறது இல்லையா என்று என் கிட்ட கேட்கிறா…?



அவர் கிட்ட நான் என்ன சொல்வேன்.. அவள் தான் என்னை கவனிக்கிறதே இல்லை என்றா…ம் சொல்..” என்று சொன்னவன்..



“ சரி நான் கோபப்படாது கேட்கிறேன்.. என்ன பிரச்சனை..?” என்று கேட்டவனுக்கு சொல்லி விட்டாள் இது போல் என்று…

அடுத்து அவன் கேட்ட .. “ ஏன் என் கிட்ட சொல்லவில்லை.. என்ன என்றாலும் என் கிட்ட தானே சொல்ல வேண்டும்..” என்று கேட்டவனுக்கு மான்சி உடனே பதில் கொடுக்கவில்லை என்றாலும்… சிறிது தயங்கி சொல்லி விட்டாள்..

“ என் சந்தேகம் இந்த வீட்டு ஆளாக இருக்குமோ எனும் போது நான் எப்படி இதை உங்க கிட்ட சொல்வேன்..” என்ற அவளின் பேச்சி நியாயமான பேச்சு என்பதால், அமைதி காத்தான்..



அவனும் உடனே கோபம் கொண்டு கத்தவில்லை.. நீ எப்படி அப்படி சொல்லலாம் என்று.. மான்சி இதை சொன்னால் கத்துவான் கோபப்படுவான் என்று தான் நினைத்தாள்..



அதற்க்கு என்று இருக்கும் என்றும் சொல்லவில்லை..

“ ஏன் அப்படி நினைக்கிற..? என்று கேட்டான்..



“ என் பெயர் கெடுக்க என்பது என் அனுமானம்ம்.. அதுவும் குறிப்பா உங்களிடம்..”

தனக்கு தோன்றிய சந்தேகத்தை தெளிவாக சொல்லி விட்டாள்.. நீ தானே சொன்ன எது என்றாலும் என்னிடம் சொல்ல வேண்டும் என்ரு.. இது தான் என்பது போல் பேசியவளின் சாமர்த்தியத்தையும், அவள் தெளிவான சிந்தனையையும் அவனால் மெச்சாமல் இருக்க முடியவில்லை..

அவள் பேச்சுக்கு சர்வேஷ்வரன் .. “குட்..” என்று தான் அவன் அந்த இடத்தில் சொல்லி இருக்க வேண்டும்..

ஆனால் எப்போதும் போல் ஒரு.. “ஓ ..” போட்டவன்..

“ எப்படி அப்படி சொல்ற..?” என்று கேட்டான்..

அதற்க்கு மான்சி எந்த விளக்கமும் சொல்லாது சுருக்கமாக ..” எனக்கு தோனுச்சி..” என்று முடித்து கொண்டாள்..

சர்வேஷ்வரன் சிறிது நேரம் யோசித்து.. “ ஓ அதுக்கு தான் நான் வரும் போது நீ வனி.. அனியையுமே பார்த்து கொண்டு இருந்தியா..?” என்று கேட்டவன்..

இன்னொன்றையும் கேட்டான்.. “ அவங்க மீது ஏன் சந்தேகம் வந்தது…’ என்று..

“ ஏன்ன்னா அவங்க இருக்க வேண்டிய இடத்தில் நான் இருக்கேன்..” என்று அனிதாவை நினைத்து சொன்னவள்..



பின் கொஞ்சம் தடங்கியவாறே… “ அவர் அப்பா அந்த வீட்டுக்கு போவதற்க்கு பழ வாங்கலாம் கூட இருக்கலாம்..” என்று தன் சந்தேகம் ஏன் வந்தது என்பதை தெளிவு படுத்தி விட்டாள்..

அவள் சொல்ல சொல்ல.. சர்வேஷ்வரனுக்கும் இருக்கும் என்று தான் அவனு நினைத்தான்.. வனி எப்போதும் மேல் நாட்டு மோகம் தலைக்கு ஏறி ஆடுபவள் என்று இத்தனை நாள் நினைத்து கொண்டு இருந்தான்…



ஆனால் எப்போதும் அனிதாவை பற்றி தெரிந்ததோ… வனியை பற்றி கொஞ்சம் கொஞ்சமே தான் விசாரித்தான்.. விசாரித்ததில் தெரிந்த விசயங்க்ள் அவனுக்கு எதுவும் சரியாக படவில்லை..

சிறிது மறைமுகமாக சொல்லி விட்டான் தான்.. ஆனால் அதை யாரும் கவனித்தது போல் அவனுக்கு தோனவில்லை..

இவனே வீட்டில் சொல்ல வேண்டும் என்று தான் நினைத்து கொண்டு இருந்தான்.. ஆனால் சில்வதற்க்கு முன் ஆதாரம் இல்லாது பேச கூடாது..

இல்லை என்றால் பெண்டாட்டி மயக்கத்தில் அவள் பேச்சை கேட்டு இப்படி பேசுகிறேன் என்று ஒரு ட்ராம க்ரியேட் செய்ய கூடும் என்று தான் காத்து கொண்டு இருக்கிறான்…

அதனால் அவர்கள் அப்படி இல்லை என்று சொல்லாது…

“ பார்க்கலாம்… நீ நாடிய டிடெக்டீவ் ஏஜெஸியில் தான் மாமா அவர் வேலையை கொடுப்பார்.. அதனால் நல்ல திறமையானவங்க தான் அவங்க..

இன்னும் இரண்டு நாளில் தெரிந்து விடும் யார் என்று.. அது வரை அதை பற்றி எல்லாம் யோசிச்சி மனதை குழப்பி கொள்ள வேண்டாம்.. படிப்பை கவனி..” என்று சர்வேஷ்வரன் சொல்லி விட்டான் தான்..

ஆனால் மான்சியால் அப்படி படிப்பியோல் முழுகவனத்தை செலுத்தி படிக்க முடியவில்லை.. காரணம் இதற்க்கு காரணம் அனிதா, வனிதாவாக இருந்தால், எப்படி இந்த வீட்டில் தொடர்ந்து இருப்பது..?



நாளை தங்கள் அறையில் ஒரு ஆணை அனுப்பி விட்டு நான் தான் வர வழைத்தேன் என்று சொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்..என்று யோசித்து கொண்டு இருந்தவளுக்கு நல்ல வேளையாக..



இரண்டு நாள் கழித்து இதற்க்கு காரணம் வனிதா அனிதா கிடையாது என்று தெரியவந்தது..

இன்னும் கேட்டால் இந்த வீட்டில் இருப்பர்கள் என்ன இவர்களுக்கு சம்மந்தப்பட்டவர்கள் கூட கிடையாது..

இதை செய்தவனின் பெயர் பாஸ்கர் என்றதில் சர்வேஷ்வரனும் அதற்க்குள் தன் வேலையை விட்டு சென்னை வந்த சூர்யநாரயணனும் குழம்பி போனார்கள்..

யார் ..? ஏன் இப்படி செய்தான்..? என்று
 
Top