Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Meezhveno Muzhgiduveno....20

  • Thread Author
அத்தியாயம்….20

தன் மாமா சூர்ய நாரயணன் பேச ஆரம்பித்ததும், இவர் அந்த அம்மாவை முறை தவறி வைத்து கொண்டதை, ஏதோ அவருக்கு மறு வாழ்வு கொடுத்தது போல் பேச போகிறார் என்று நினைத்து தான் சர்வேஷ்வரன் அவர் பேச்சை கேட்டு கொண்டு இருந்தது..



ஆனால் பேச ஆரம்பித்து அவர் சொல்ல சொல்ல அவனுக்குமே ஒரு மாதிரியாக தான் போயின.. அதுவும் தன் மனைவியின் அன்னை எனும் போது, அதை கேட்க அவனுக்கு ஒரு மாதிரியான சங்கட நிலை என்று தான் சொல்ல வேண்டும்..



சூர்ய நாரயணன் அப்போது அவர் என்ன உணர்ந்தாரோ, அனால் அந்த பாஸ்கரன் வீட்டில் இருந்து கொண்டே வராது போகவும்…

அதுவும் முன்னவே துளசி கைய் பிடித்து தடவினான் என்ற அந்த வார்த்தை, இரண்டையும் சேர்த்தால், அது என்ன என்ற யூகம் சர்வாவுக்கு வந்து விட்டது..

சூர்ய நாரயணன் பாஸ்கரன் தடுக்க அவனை தள்ளி விட்டு அந்த அறைக்குள் நுழைந்தான்.. நான் அந்த இடத்தில் துளசியை பார்த்து இருந்தால் கூட அந்த அளவுக்கு அதிர்ந்து இருக்க மாட்டேன்..



மான்சி என்று சூர்ய நாரயணன் சொல்லும் போதே அமர்ந்து இருந்த சர்வேஷ்வரன் அதிர்ந்து எழுந்து நின்று விட்டான்..



ஆனால் அடுத்து சூர்ய நாரயணன் பதட்டத்துடன்.. “ ஒன்றும் ஆகவில்லை.. எல்லை மீறி எதுவும் நடந்து விட வில்லை..” எனும் அந்த வார்த்தை சர்வேஷ்வரனை பலமாக தாக்கியது..



தன்னை பற்றி தெரிந்து வைத்து இருப்பது இது தானா..? என்ற ஆத்திரத்தில்,..

“ நான் என் மனைவி மான்சி .. அவளுக்கு ஏதாவது நடந்து விட்டதோ என்று எல்லாம் அதிரவில்லை..

அந்த வயதில் அவள் மனைவி என்ன சிறு பெண் கணக்கில் கூட சேர்த்தி இல்லை.. குழந்தை எட்டு வயது குழந்தை.. அந்த இடத்தில் மான்சி இல்லாது வேறு ஒரு சின்ன பெண்ணை பார்த்தேன் என்று சொல்லி இருந்தால் கூட, நான் இந்த அளவுக்கு தான் பதறி போவேன்.. முதல்ல அதை புரிஞ்சிக்குங்க..” என்று கத்தி விட்டான்..





பின் தன்னை தானே அமைதி படுத்த வேண்டி அந்த அறையையே அங்கும் இங்கும் நடந்து வந்த பின்னும் அவன் கோபம் குறையவில்லை…



ஒன்று அந்த பாஸ்கரன்.. இவன் எல்லாம் என்ன ஜென்மம்… குழந்தையிடம் போய்… என்று அதை நினைக்க நினைக்க ஒரு பக்கம் ஆத்திரம் என்றால்,



இன்னொரு பக்கம் தன் மாமா பேசிய பேச்சில் அவனுக்கு கோபம் எழுந்தது.. ஒரு நிலைக்கு மேல் பொறுத்து கொள்ள முடியாது..

“ ஏதாவது நடந்தது… இல்ல என்பது எல்லாம் பேச்சு கிடையாது.. அவனை எப்படி நீங்க சும்மா விட்டிங்க…? இப்போது அது தான் என் கேள்வி…” என்றதற்க்கு..



“ நான் எப்போ சும்மா விட்டேன் என்று சொன்னேன்.. சட்டப்படி எதுவும் செய்யவில்லை.. ஆனால் செய்ய வேண்டியதை, அவன் அண்ணன் துணையோடு அனைத்தும் செய்து முடித்து விட்டேன்..” என்ற சூர்ய நாரயணனின் பதிலில்..



“ ஓ.. “ என்று சொன்னவன் மனதில், அது தான் எப்படி அவனோட அண்ணனை தன் திருமண வர வேற்ப்புக்கு இவரால் அழைக்க முடிந்தது என்று யோசித்தது..



“ நீங்க எதுவும் நல்லா செய்யல என்று நினைக்கிறேன்,.செய்து இருந்தால் திரும்ப அவன் எப்படி மான்சிக்கு பிரச்சனை கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருப்பான்..” என்று நீங்க செய்த லட்சணம் இது தான் என்ற வகையில் சர்வேஷ்வரன் பேசினான்..



“ அவனால் ஒன்றும் செய்ய முடியாது.. அதாவது அந்த இடத்தில் ஆசிட் ஊத்தியாச்சி.. ஆனால் முழுவதும் கிடையாது.. சாவாது உயிரோடு இருந்து.. ஆனால் எதற்க்கு அவன் அலைந்தானோ.. அதை செய்ய முடியாது செய்து விட்டோம்..



அவன் மனைவி அவனிடம் இருந்து விவாகரத்து வாங்கி அவன் கண் எதிரிலேயே இன்னொருத்தனுக்கு மனைவியா வாழும் படி செய்து விட்டோம்…



இன்னொன்றும் அவனுக்கு ஒரு குழந்தை இருந்தது… அதனால் மூதையார் சொத்து அவளுக்கு தான் என்பது போல் சொத்து கிடைக்காத அளவுக்கு செய்து விட்டோம்..

. இது எல்லாத்துக்கு உதவி செய்தது அவன் அண்ணன் தட்சணா தான்..” என்று சூர்ய நாரயணன் சொல்ல சொல்ல..



நல்ல தண்டனை தான்.. இருந்தும் அடங்காது எப்படி மான்சி பக்கம் அவன் பார்வை சென்றது.. அதுவும் பதினைந்து வருடத்திற்க்கு பின்..

ஏதோ நியாபகம் வந்தவனாக சர்வா.. “ இப்போ அந்த பாஸ்கரனுக்கு வயது என்ன இருக்கும்..” என்று கேட்க..

“ ஐம்பது இருக்கும்…”

“ ம் ஐம்பதிலும் அடங்காது இந்த வேலை பார்க்கிறான் என்றால், அவன் வயதில் என்ன என்ன பார்த்து இருப்பான்..” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது தான் சர்வேஷ்வரனுக்கு தன் மனைவின் மன நிலை எப்படி இருக்கும்..



அதுவும் அந்த வயதில்.. அதை நினைக்கும் போதே, தன் வீட்டு பெண்கள் அந்த வயதில் எவ்வளவு பாதுகாப்போடு, அதுவும் செல்லத்தோடு வளர்ந்தார்கள்..



ஆனால் மான்சி ஒரு கழிப்பறையை உபயோகிப்பதற்க்கு திட்டு வாங்கி கொண்டு, இது போன்ற விசயங்கள் அந்த வயதில் அவள் எப்படி ஹான்டில் செய்து இருப்பாள்..



அவள் அன்னையிடமாவது சொல்லி இருப்பாளா..? என்று நினைத்தவன் அதை தன் மாமாவிடம் கேட்டும் விட்டான்…

இன்னொன்றும் கேட்டான்.. அதாவது அந்த நிகழ்ச்சி அவளை மனதளவில் பாதித்து இருக்கும் தானே.. என்று.. அதுவும் எப்படி குழந்தையை தனியாக அவனை நம்பி மான்சியோட அம்மா விட்டு போய் இருப்பாங்க..

அவன் குணம் கெட்டவன் என்று தான் தெரியுமே தெரிந்தே எப்படி..? என்று கேட்டான்..



“ குணம் கெட்டவன் என்று தெரியும்.. ஆனால், குழந்தையிடம் இப்படி நடந்துக்க முயறச்சி செய்வான் என்று துளசி எதிர் பார்க்கவில்லை..



அன்று மான்சிக்கு உடல் நிலை சரியில்லை.. குடும்பமா வெளியில் போகும் போது அவங்க குழந்தையை பார்த்துக்க துளசி வேண்டும் என்பதனால் அங்கு சமையல் செய்யும் சுகுனாவிடம் கொடுத்துட்டு வா என்று பாஸ்கரன் மனைவி சொல்லி இருக்காங்க..

துளவியும் வேறு வழி இல்லாம தான் மான்சியை வீட்டிலேயே விட்டுட்டு, நவீனை மட்டும் அழைத்து கொண்டு போய் இருந்தாங்க..



அதிகம் நேரம் கூட இல்ல.. மூன்று மணி நேரத்திற்க்குள் வீட்டுக்கு வந்து விடலாம் என்று நினைத்து தான் துளசியும் போனது..

ஆனா அந்த மூன்று மணி நேரத்தை பாஸ்கரன் இப்படி பயன் படுத்திவான் என்று யாரும் எதிர் பார்க்காதது…

சமையல் வேலை செய்யும் சுகுனாவின் அம்மாவுக்கு உடம்பி சரியில்ல என்று போன் வந்தது என்று அவங்களை அவங்க வீட்டுக்கு அனுப்பிட்டு..



மான்சிக்கு மயக்கம் மருந்து கலந்த ஜூஸை குடிக்க கொடுத்துட்டு அப்புறம் தான்… மான்சியின் நல்ல நேரம் நான் அங்கு போனேன் இல்லேன்னா.. அதை இப்போ நினைத்தாலும் எனக்கு ஒரு மாதிரியாகி விடும்..” என்று சொன்னவர் கூடவே..



மான்சிக்கு தனக்கு இப்படி நடக்க இருந்தது என்று தெரியக்கூடாது என்று தான் நானும் தட்சணாவும் போலீஸை நாடல..



மான்சியை அப்படி பார்த்ததும், குழந்தை மீது ஒரு பெட்சீட்டை போர்த்தி வி,ட்டு அவனை அடிக்கும் போது தான் தட்சணா அவன் குடும்பத்தோடு வீட்டுக்கு வந்தது..



பின் எல்லாம் தெரிந்த பின் அவன் மனைவி அவள் அம்மா வீட்டுக்கு போயிட்டா.. “ உன்னை நம்பி என் பெண்ணை கூட வீட்டில் வைத்து இருக்க முடியாது என்று..”



மான்சியை அப்படி பார்த்ததும் துளசி மயக்கத்துக்கு போயிட்டா… அப்புறம் நானும் தட்சணாவும் தான் இது போலீசுக்கு போனால் குழந்தையின் மனநிலை பாதிக்கும் என்று நாங்களே அப்படி செய்தது..



எப்போவும் தட்சணாவுக்கு மான்சி என்றால், ரொம்ப பிடிக்கும்.. அப்புறம் துளசி இனி அங்கு எப்படி இருக்கிறது என்று தான்..”



இவ்வளவு நேரமும் சரளமாக ஒரு மேடை பேச்சாளர் போல் பேசிய சூர்ய நாரயணன் இப்போது தயக்கத்துடன்…



இப்போது துளசி இருக்கும் வீடு முடியும் தருணத்தில் இருந்தது.. “

அடுத்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது சர்வேஷ்வரனுக்கு புரிந்து விட்டது…

“ அந்த வீடு காலியா இருக்கு என்று அதில் அவங்களை வைத்து கொண்டிங்க..” என்று கேட்டவன்..

பின் .. “ உங்களுக்கு வேறு நிறைய இடத்தில் கூட தான் பங்களா இருக்கு, துளசி போல் பவித்ரா… கவிதா… என்று நிறைய அபலை பெண்களும் ஊரில் இருக்க தான் செய்யிறாங்க…



உங்க பெரிய மனசுக்கு நீங்க எல்லோருக்கும் அடைக்கலம் கொடுத்து இருக்கலாமே மாமா…” என்று கிண்டலுடன் கேட்டு வைத்தான்..



சூர்ய நாரயணன் ஒரு வித தர்ம சங்கடத்துடன் தான் சர்வேஷ்வரனை பார்த்து.. “ நான் இப்போ நான் உன்னை தங்கை மகனாகவோ… இல்லை மருமகனாகவோ நினைத்து பேசல சர்வா..



நீயும் இப்போ முழுமையான ஒரு ஆண் மகன் என்ற ரீதியில் தான் நான் என் பர்சனல உன் கிட்ட சொல்றேன்.. இந்த விசயம் பத்மா.. துளசிக்கு மட்டும் தான் தெரியும்.. உங்க அப்பாவுக்கோ உங்க அம்மாவுக்கோ கூட தெரியாது…





நான் பத்துவை கல்யாணம் செய்யும் போதே.. கொஞ்சம் நோஞ்சான் உடம்பு என்று தான் சொல்ல வேண்டும்… அடிக்கடி சோர்ந்து சோர்ந்து தான் படுத்துட்டு இருப்பா..





அவளின் இந்த தன்மை கல்யாணத்திற்க்கும் முன்னும் சரி பின்னும் சரி.. ஒரு பெரிய விசயமா தெரியல.. ஒரு சமயம் இல்லாத வீட்டில் இருந்து இருந்தால், வேலை செய்யாது இருப்பது ஏன் என்று அப்போதே ஏதாவது பார்த்து இருப்பாங்களோ என்னவோ..





இங்கு இரண்டு வீட்டிலும் எல்லா வேலைக்கும் வேலையாட்கள் எனும் போது பத்மாவின் இந்த தன்மை பெரியதாக படவில்லை..



ஏன் வனிதா பிறந்ததும் டாக்டர்.. கொஞ்சம் பார்த்துகோங்க ரொம்ப வீக்கா இருக்காங்க .. .. பெட் ரெஸ்ட்டில் இருக்கட்டும் என்று சொன்ன போது கூட நான் அதை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை..



இன்னும் கேட்டால், எப்போதும் அப்படி தானே இருப்பா என்று நினைத்தேன்.. ஆனால் அடுத்து வனிதா பிறந்த போது.. அவங்களுக்கு முழு ஒய்வு தேவை.. எதுக்கும் அவங்களை தொந்தரவு கொடுக்க கூடாது என்றதும்..







குழந்தைக்கு ஒரு மூன்று மாதம் பால் கொடுத்தா அவ்வளவு தான்.. அதுவும் இரு குழந்தைகளுக்கும் தனி தனியாக பார்த்து கொள்ள இரண்டு பெண்களையும் ஏற்பாடு செய்து விட்டேன்…





இதோடு என்ன.. வசதி இல்லாதவங்களுக்கு தான்ன பிரச்சனை என்று விட்டு விட்டேன்.. இல்லை ஒரு சிலதுக்கு வசதி படைத்தவன் இல்லாதவன்..



ஏன் வீடு கூட இல்லாமல் ப்ளாட் பார்மில் இருக்கிறவனுக்கு கூட தேவைப்படும் விசயம் இல்லாது போனால் மெண்டலா எவ்வளவு டிஸ்ட்டப் ஆவங்க என்று நான் அனுபவ ரீதியாக உணர்ந்த போது தான் எனக்கு நிதர்சனம் உரைத்தது..” என்று சொன்ன சூர்ய நாரயணன்..





அனிதாவுக்கு ஒரு எட்டு மாதம் இருக்கும் போது ஒரு கணவனா நான் பத்மாவை நாடிய போதும் தான் டாக்டர் சொன்ன..

“ அவங்களை எதற்க்கும் தொந்தரவு கொடுக்க கூடாது என்ற வார்த்தைக்கு உண்டான முழு அர்த்ததையும் உணர்ந்தேன்

..

நடு இரவு பன்னிரெண்டு மணி… கண்ணு ரெண்டும் மேல இழுக்க.. அப்படியே அவள் உடம்பு பனிக்கட்டி போல் குளிர்ந்து போய்.. நான் நம்ம ஹாஸ்ப்பிட்டலுக்கு போன போது ..



அதுவும் எப்படி இப்படி ஆயிடுச்சி என்று அவங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்ல கூசியது… என்ன புரிந்ததோ பத்மாவுக்கு டெலிவரி பார்த்த அந்த டாக்டரும் ஏதோ எமர்ஜென்ஸி என்று அங்கு தான் இருந்தாங்க..



அவங்க புரிந்து கொண்டு நான் தான் சொன்னனே எதுக்கும்ம்ம்ம்ம்ம் அவங்களை தொந்தரவு கொடுக்க கூடாது என்று… புரிந்தது.. புரிந்த பின் கூட சரி என்று தான் இருந்தேன்..





மனைவியை நாடாது.. என்னால் ஒரு ஆறுமாதம் தான் தாக்கு பிடிக்க முடிந்தது.. அப்போது தான் நான் அதில் அவ்வளவு பலவீனமானவன் என்று எனக்கே புரிந்தது..

பின் என்னால் தொழிலில் கூட முழு கவனம் செலுத்த முடியவில்லை… என் நிலை பத்துக்கு தெரிந்து என்னால் தான் முடியல வெளியில் பாருங்க என்று சொன்னாள்..

நான் அப்போ என்ன பேச்சு பத்து இது என்று அதட்டினேன்.. ஆனால் என்னால் முடியாது அந்த நிலைக்கு கூட ஒரு நாள் தள்ளப்பட்டேன்..



ஒரு ஓட்டலில் ஆனால் எதுவும் நடவாது முன்னவே அந்த ஓட்டலுக்கு ரெய்டு வந்துட்டாங்க்.. அன்னைக்கு என் மானம் தப்பி வந்ததே பெரிய விசயமா ஆகிடுச்சி..

ஆனா அப்புறம் தான் எனக்கு தெரிந்தது.. அன்னைக்கு என் மானம் மட்டும் கிடையாது என் உயிரே தப்பி இருக்கு என்று..

அன்று மாட்டின பெண்களுக்கு டெஸ்ட் செய்து பார்த்ததில் என் அறைக்கு அனுப்பிய பெண்ணுக்கு எச். ஐவி இருந்தது…

இனி இது போல் வேண்டாம் என்று நினைக்கும் போது தான் நான் தட்சணா வீட்டில் துளசியை பார்த்தது.. தட்சணா மூலம் அவள் நிலையும் எனக்கு தெரிய வந்தது..



உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அன்னைக்கு பத்திரம் வாங்கும் சாக்கில் துளசியை பார்க்கும் ஆசையிலும் தான் நான் அங்கு போனது..” என்று சூர்ய நாரயணன் எந்த ஒளிவும் மறைவும் இல்லாது அனைத்தும் சொல்லி முடித்தார்..

அனைத்தையும் கேட்ட சர்வேஷ்வரன் தன் மாமனை கேட்டது ஒன்றே ஒன்று தான்..

“ அத்தை நிலை உங்களுக்கு வந்து.. நீங்க செய்ததை அத்தை செய்து இருந்தாங்கன்னா.. அவங்களுக்கு நீங்க கொடுத்த பெயர் வேறா இருந்து இருக்கும்..” என்று சொன்னவன் அவர் முகத்தை பாராது திரும்பி கொண்டவனின் மனதில் இது தான் ஒடிக் கொண்டு இருந்தது..



அந்த பாஸ்கரன் மான்சியிடம் தவறாக நடக்க பார்த்தது தெரியாது என்று இவர் சொல்கிறார் பின் என் அன்று தட்சணா மூர்த்தியை தன் மனைவியோடு மேடையில் பார்த்ததும் மான்சியின் கை நடுக்கம் ஏற்ப்பட்டது..

ஒன்று இப்படி நடந்து இருக்க வேண்டும்.. இல்லை என்றால் அப்படி நடந்து இருக்க வேண்டும் என்று யோசித்தவனுக்கு முதலில் இப்போது செய்து முடிக்க வேண்டிய முதல் வேலை பாஸ்கரன் என்று நினைத்த சர்வேஷ்வரனின் மனதில் புதியதாக ஒரு திட்டம் உருவாகியது…




















 
Top