அத்தியாயம்….21
சர்வேஷ்வரன் தன் மாமா தான் செய்த தவறை நியாயம் படுத்தி பேசியது அவனுக்கு அப்படி ஒரு எரிச்சலை கிளப்பியது… அதனால் தான் கணவனால் முடியவில்லை என்றால், மனைவிகள் வெளியில் பார்த்து கொண்டால், அதை ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டது..
பின் தன் எரிச்சல் கொஞ்சம் மறைந்த பின், சூர்ய நாரயணன் பேச்சை கவனித்ததில் ஒன்று அவனுக்கு புரியவில்லை..
அன்று நடந்த அந்த விசயம் மான்சிக்கு தெரியாத போது, ஏன் தட்சணா மூர்த்தியை பார்த்து மான்சி பயந்தது… அப்போ தட்சணா மூர்த்தியும்… இல்லை என்றால் அந்த பாஸ்கரனால் முன்னவே ஏதாவது ஒரு பிரச்சனையை மான்சி சந்தித்து இருந்து இருக்க வேண்டும்..
அப்படி நடந்து இருந்தால், அந்த நினைவே அவனை என்னவோ செய்தது… அந்த வயதில் குழந்தை என்று யோசித்தவனுக்கு ஒன்று புரிந்தது..
அது போல் சிறு குழந்தையாக இருக்கும் போது, பாலியல் வன்புணர்வுக்கு ஆளான குழந்தைகள், பெரியவர்களாக வளந்த பின்… அந்த உறவையே வெறுத்து ஒதுக்குவது..
அதனால் திருமணம் செய்ய மறுப்பது.. அப்படி வலுக்கட்டயமாக செய்தாலும், கணவனிடம் அது போல் உறவு வைத்து கொள்வதில் சிக்கல்.. இது போல் எல்லாம் அவன் நண்பனின் மனைவிக்கு நடந்ததை அவன் கேள்வி பட்டு இருக்கிறான்..
அந்த பெண் சிறு வயதில் வீட்டில் இருந்த தன் சொந்த பெரியப்பாவினாலேயே, அது போலான கொடுமைக்கு ஆளனது… இதை வெளியில் சொன்னால், உன்னை போலவே உங்க அம்மாவிடமும் நடந்து கொள்வேன் என்று சொல்லி மிரட்டியதால், அவள் சொந்த வீட்டிலேயே பயந்து பயந்து நடந்து கொண்டது..
பின் ஒரு நாள் அந்த பெரியப்பாவே இறந்த பின்… இவள் வளர்ந்தும் அதை வெளியில் சொல்லாது… வீட்டில் பெரியவர்கள் திருமணம் செய்ய நினைக்கும் போது மறுத்தது..
அவளின் மறுப்பை மற்ற பெண்கள் செய்யும் மறுப்பு என்று எளிதாக நினைத்து சர்வாவின் நண்பனுக்கு கட்டி வைத்தது..
திருமணத்திற்க்கு பின் மூன்று மாதம் அவனை தொட விடாது இருந்ததால், அவன் அந்த பெண்ணுக்கு தன்னை பிடிக்கவில்லை என்று நினைத்து அவளிடம்..
“ இப்படி கஷ்ட்டப்பட்டு எல்லாம் நீ இங்கு இருக்க தேவையில்லை..” என்றதும் அந்த பெண் இவன் மார்பில் சாய்ந்து அழுத அழுகையில், இவளுக்கா என்னை பிடிக்கவில்லை..
தான் நினைத்தது தவறு என்று சரியான முறையில் சிந்தித்து தன் மருத்துவமனையை நாடிய பின் அவனுக்கு கிடைத்த விசயத்தில் அவன் அதிர்ந்து தான் போனான்..
அவன் மட்டும் என்ன சர்வேஷ்வரனும் தான்.. வெளி உலகத்தில் பெரிய மனித தோரணையில் சுத்தி கொண்டு இருந்தவர் தான் அந்த பெண்ணின் பெரியப்பா.. ஆனால் மகள் போல் போல் என்ன போல்… மகளை எப்படி அப்படி அவரால் நடத்த முடிந்தது..
அதுவும் எட்டு வயது முதலே..அந்த பெண் எட்டு வயது என்று சர்வேஷ்வரன் நினைக்கும் போதே தன் மனைவியின் வயதும் எட்டு தானே..
தாய் தந்தை என்று ஒரு பாதுகாப்பு வளையத்தில் இருந்த அந்த பெண்ணுக்கே அப்படி ஒரு கொடுரம் நடந்த போது மான்சி.. அதை நினைத்து கூட அவனால் பார்க்க முடியவில்லை..
ஆனாலு மூலையில் ஒரு நம்பிக்கை.. அது ஒரு நாள் உறவு என்றாலும், மான்சி அந்த உறவை வெறுக்க வில்லை என்பதை உணர்ந்தவனால், அப்படி இருக்க முடியாது என்று தனக்கு தானே நம்பிக்கை கொடுத்தவன்..
தன்னையே பார்த்து கொண்டு இருந்த சூர்ய நாரயணனிடம்.. “ எங்கள் திருமண வரவேற்ப்பு அன்று மான்சி ஏன் தட்சணா மூர்த்தியை பார்த்ததும் அப்படி பயந்தாள்..?” என்று கேட்டான்..
அதற்க்கு சூர்ய நாரயணன்.. “ அப்படியா..” என்று கேட்டதில், சர்வாவுக்கு இன்னும் இன்னும் தான் கோபம் கூடியது..
செய்த செயல் கூட அவர் ஒழுங்காக செய்து முடிக்கவில்லை… அந்த பாஸ்கரனை அடிப்பட்ட பாம்பு போல் சுத்த விட்டு இருக்கார்.. ஒன்று முழுவதுமாக முடித்து இருக்க வேண்டும்.. இல்லை என்றால் தன் கண்காணிப்பின் எல்லைக்குள் அந்த ஆளை நிறுத்தி இருக்க வேண்டும்..
அது தான் செய்யவில்லை என்றால், மான்சியிடம் அப்படி நடந்து கொள்ள பார்த்தவனுக்கு திடிர் என்றா அந்த எண்ணம் வந்து இருக்கும்..
இதை யாருமே யோசித்து பார்க்க வில்லையா..? அதுவும் சமையல் செய்யும் அம்மாவை தன் வீட்டில் இருந்து போன் என்று அவரை அவர் வீட்டுக்கு அனுப்பி விட்டு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து..
அந்த மயக்க மருந்து எப்படி அவன் கை வசம் வைத்து இருந்தான் யோசித்து இருக்க வேண்டாம்.. இப்படி ஏகப்பட்ட யோசிப்பில் இருக்க.. இவர் தனக்கு ஒன்று வேண்டும் என்ற காரியத்தில் இதை எல்லாம் மறந்து விட்டார் போலும்..
மான்சியிடம் பாஸ்கர் உன்னிடம் எப்படி நடந்து கொள்வான் என்று பக்குவமாக அவள் அம்மா கேட்டு இருந்தால் கூட அந்த குழந்தை சொல்லி இருப்பாளே.. சீ ஒரு சின்ன குழந்தையை இப்படி… அந்த குழந்தை வேறு யாரோ இல்லாது தன் மனைவி எனும் போது, அவன் மனதில் பாரம் கூடியது…
நடந்ததற்க்கு நான் எதுவும் செய்ய முடியாது தான்… ஆனால் இனி.. என்று ஒரு முடிவு எடுத்தவனாக அந்த பாஸ்கரனை பற்றி தன் மாமாவுக்கும் தெரியாத, ஏன் அவன் அண்ணன் தட்சணா மூர்த்திக்கு கூட தெரியாத தகவல்களை திரட்டும் வரை அவன் தன் சுற்றத்தை கூட மறந்து விட்டான்..
அந்த சுற்றத்தில் தன் மனைவி மான்சியுமே அடக்கம் தான்… தன்னையே ஒரு வித எதிர் பார்ப்போடு பார்க்கும் மான்சியிடம் அவன் என்ன சொல்வான்..
“ உன் பேசிக்கு அழைத்தது பாஸ்கரன் என்றா…? சொன்னால் அவளின் மனநிலை.. அதுவும் இன்னும் மூன்று நாளில் தேர்வு என்ற நிலையில், அவள் கண்டிப்பாக அதில் வெற்றி பெறுவாள் என்பது அவனுக்கு நிச்சயமே..
அவன் தான் படிப்பில் அவள் போடும் கடின உழைப்பை பார்த்து கொண்டு தானே இருக்கிறான்…
தான் இந்த விசயம் சொன்னால், கண்டிப்பாக எவ்வளவு தைரியமான பெண்ணாக இருந்தாலுமே, யார் என்பது தெரிந்தால், அவள் படிப்பை பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பது நிச்சயம்.. அதனால் இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று நினைத்தான்..
ஆம் இப்போதைக்கு தான் ஒத்தி வைத்து இருந்தான்.. கண்டிப்பாக அந்த பாஸ்கரனை பற்றி மான்சியிடம் பேச வேண்டும் என்று இருந்தான் தான்..
சர்வேஷ்வரன் இப்படி நினைத்து கொண்டு இருக்க மான்சியோ தன் படிப்போடு சர்வாவையும் கவனிக்கும் வேலையையும் இடை இடையே செய்து கொண்டு இருந்தாள்..
சர்வேஷ்வரன் மான்சியிடம்… “அந்த போன் பேசி யார் என்று நான் பார்த்து கொள்கிறேன்.. இனி நீ அதை பற்றி கவலை படாதே.. “ என்று சொன்னதும்..
மான்சி.. “ சரி..” என்று தான் சொன்னாள்..
காரணம் அவளுக்கு சந்தேகம் இவர் வீட்டவர் முன் குறிப்பாக சர்வா முன் தன்னை வேறு மாதிரி காட்ட தான் இந்த செயல்களோ என்ற சந்தேகத்தில் தான் மான்சி டிடெக்டீவை நாடியது..
அவனிடமே அனைத்தும் சொன்ன பிறகு தனக்கு என்ன கவலை என்று ஒரு நாள் ஒரே நாள் தான் அதை பற்றிய சிந்தனை இல்லாது தன் படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்த முடிந்தது..
அதன் பின் தான் நாடிய அந்த டிடெக்டீவ் இன்னும் இரண்டு நாளில் யார் என்று சொல்கிறோம் என்று சொன்ன அந்த இரண்டாம் நாளில் இன்று சர்வாவிடம் சொல்லி இருப்பார்கள்…
யார்..? என்று இந்த நேரம் தெரிந்து இருக்கும் என்று நிமிடங்களை கணக்கிட்டு கொண்டு இருந்தவள்..
தெரிந்ததும் சர்வா தனக்கு அழைப்பான் என்று நூலகத்தில் இருக்கும் போதும் அவ்வப்போது தன் கை பேசியை எடுத்து பார்த்து கொண்டு இருந்தாள்.. அதே செயலை கோச்சிங்க் சென்டரிலும் தொடர்ந்தது..
சரி வீட்டுக்கு வந்தாவது சொல்வான் என்று அவள் நினைத்தாள்.. மான்சி அப்படி நினைத்து மூன்றாம் நாள் கடந்த பின்னும் அதை பற்றி தன்னிடம் ஒன்றும் சொல்லாது இருக்க..
அப்போது தான் அவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.. தான் சந்தேகப்பட்டது போல் அழைப்பு இந்த வீட்டவர்களிடம் இருந்து தான் வந்து உள்ளது.. தன் வீட்டு ஆட்களை பற்றிய தன்னிடம் எப்படி சொல்வான்.. என்று அவளே ஒரு முடிவு செய்தவளாக… சரி இதுவும் ஒரு வகையில் நல்லது தான்..
இவனுக்கு தான் அனைத்தும் வெட்ட வெளிச்சமாக தெரிந்து விட்டதே.. இனி வேறு மாதிரி இது போல் செய்ய முயற்சித்தால், நாம் கவலை பட தேவையில்லை என்று தன் படிப்பில் இவள் முழுகவனம் செலுத்த ஆரம்பித்தாள்..
அதே முழு கவனத்தை சர்வேஷ்வரன் பாஸ்கரனை முழுவதுமாக முடிப்பதற்குண்டான வேலைகளில் ஈடுப்பட்டு கொண்டு இருந்தான்…
பாஸ்கரன் பற்றி விசாரித்ததில் அவன் போதைக்கு அடிமையானவன் என்ற விவரம் தெரிய வந்தது..
கூடவே போதை ஏற்றிக் கொள்வதோடு அந்த போதைக்கு பணத்திற்க்காகவும் வசதியாகவே வாழ்ந்து பழக்கப்பட்டவன் அந்த வாழ்க்கையை தொடரவும்… கல்லூரி, பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கும் இவன் சப்ளை செய்வது தெரிய வந்தது…
இதை இவள் நாள் கணக்கோ மாதக்கணக்கோ செய்யவில்லை.. பல ஆண்டு கணக்கில் செய்கிறான்… இத்தனை ஆண்டு செய்தும் இவன் மாட்டவில்லை என்றால், பின் பலம் மிக பெரியதாக தான் இருக்கும் என்பதை சர்வேஷ்வரன் கண்டு கொண்டான்..
இவன் தான் என்றால் சர்வேஷ்வரன் எப்போதோ தூக்கி இருப்பான்.. ஆனால் சர்வாவின் கணக்கு பாஸ்கரனின் ஒட்டு மொத்த நபர்கள் என்று இருக்கும் போது, திட்டத்தில் ஒரு சிறு பிசுகு கூட இருக்க கூடாது என்பதில், அவன் மிக கவனமாக இருந்தான்…
பாஸ்கரனின் ஒட்டு மொத்த கூட்டத்தையும் அழிக்க சர்வேஷ்வரனுக்கு பலமான காரணமும் இருக்கிறது…
பாஸ்கரனின் பற்றி தனிப்பட்டு சர்வா விசாரித்த போது, அவனுக்கு கிடைத்த தகவல்.. மான்சியை பற்றி மொத்தமும் மறந்து தான் அவன் தன் வாழ்க்கையை போதையின் பிடியில் கொடுத்து விட்டு, வாழ்ந்து கொண்டு தான் இருந்து இருக்கிறான்..
காரணம்.. சூர்ய நாரயணனின் புன்னியத்தில் அவனால் தான் ஒன்றும் செய்ய முடியாதே… பாஸ்கரனுக்கு கை நிறைய பணம் இருந்தும் அதை தனக்கு பிடித்த வகையில் அனுபவிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் மட்டும் அவனின் நெஞ்சு முழுவதும் நிறம்பி இருந்த போது..
அதற்க்கு வலுக்கூட்டும் வகையாக சூர்ய நாரயணனையும் துளசியையும் ஜோடியாக பார்க்கும் போது எல்லாம் அவன் வயிறு எரிந்து அடங்கும்…
அதை தன் போதை கூட்டாளியிடமும் சொல்லி ஆதங்கப்பட்டும் இருக்கிறான்..
“ என் கிட்ட இவள் பத்தினி வேஷம் போட்டடா.. இப்போ எங்கு போச்சி அவள் அந்த பத்தினி தன்மை…? நான் கை பிடிக்கும் போதே அப்படி முறைப்பாடா..” என்றதற்க்கு…
அவனை போலவே கயமை கொண்டவர்கள்.. “ நீ ஏன்டா கையை பிடித்த.. அது தான் நீ வேலைக்கு ஆகாதவன் என்று நினச்சிட்டு சூர்ய நாரயணனை பிடிச்சிட்டா போல…” என்று எள்ளி நகையாடியவர்கள்..
பின் மிக சீரியசாக… “ தோ பார் பாஸ்கரா அவங்க மேல வஞ்சம் வெச்சி ஏதாவது செய்யிறேன் என்று மாட்டிக்க போற.. இதில் உன்னோட நம்ம மொத்த பேரும் மாட்டிப்பது போல ஆகி விடும்..
முன்ன ஒரு குழந்தையை தொட்டதற்க்கு உன்னை இந்த கதியில் நிற்க வைத்து இருக்கார்.. வேறு புதுசா செய்து மாட்டிக்க போற ..” என்று சொன்னவர்கள்
அதற்க்கு அவன்.. “ சரி..” என்று தான் ஒத்து கொண்டது..
பின் சர்வேஷ்வரன் மான்சி திருமணம் பற்றிய செய்து மீடியாவில் பார்த்து சர்வேஷ்வரன்.. “ இந்த குட்டி அப்போதே படு சோக்கா இருப்பா மச்சி… அந்த எட்டு வயதிலேயே..*******” என்று அசிங்கமான பேச்சை கேட்டுக் கொன்டு இருந்த பாஸ்கரனின் கூட்டாளிகளின் பார்வை மான்சியின் மீதே நிலைத்து இருந்தது..
“ என்னடா அப்படி பார்க்கிறிங்க…? சூர்ய நாரயணன் வைத்து இருக்கும் துளசியே விட்டு விடு என்று சொன்னிங்க.. இப்போ இந்த சர்வேஷ்வரன் முறையா தாலி கட்டி மனைவி ஆக்கி இருக்கான்.. இப்படி பார்த்து பிரச்சனையில் மாட்டிக்காதிங்கடா…” என்ற பாஸ்கரனின் பேச்சை அவனோடு இருந்தவர்களின் காதில் விழவில்லை.. அந்த அளவுக்கு மான்சியின் அழகு அவர்களை நிலை குலைய செய்து இருந்தது..
பின் ஏதோ திட்டத்தோடு… “ நாம அந்த பெண்ணை சர்வேஷ்வரன் மனைவியா இருக்கும் போது ஏதாவது செய்தா தானே மாட்டிக்குவோம்…” என்றவன்..
பின் தொடர்ந்து.. “ இந்த பெண்ணை அவள் புருஷனே துறத்தி விட்டுட்டா… பின் நாம அவளை நெருங்குவதில் என்ன பிரச்சனை..?” என்று பாஸ்கரனின் கூட்டாளி கேட்டனர்..
பாஸ்கரனுக்கு கொஞ்சம் தயக்கம்.. “ வேண்டாம் டா.. மாட்டினா பிரச்சனை ஆகிட போகுது…” என்று இது வேண்டாம் என்று தான் பாஸ்கரன் முதலில் மறுத்தது..
ஆனால் அதற்க்கு அவர்கள்.. “ உன்னால் முடியாது என்பதால் தானே வேண்டாம் என்று சொல்ற.. அந்த பெண்ணை அந்த வயதிலேயே அப்படி பண்ணவன் தானே..” என்று சொல்லவும்..
“ அய்யோ நான் ஒன்னும் பண்ணலடா .. அதுக்குள் தான் அந்த சூர்ய நாரயணன் வந்து எல்லாம் கெடுத்ததோடு என்னை ஒன்னுத்துக்கும் வக்கு இல்லாதவனாக ஆக்கி விட்டானே..” என்று சொல்லிக் கொண்டு தன்னை குனிந்து பார்த்து கொண்டான்…
அவனின் செயலில் அவனை சுற்றி இருந்தவர்கள் சிரித்து விட்டனர்..
“ பின் சரி புலம்பாதே… சரி அன்னைக்கு ஒன்னும் நடக்கல.. ஆனா அந்த பெண்ணிடம் நீ ஒன்னும் செய்யல..” என்று கேட்டதற்க்கு ஒரு கோணல் சிரிப்பை சிரித்துக் கொண்டு ஒரு இளி இளித்து வைத்தான்..
“ அப்புறம் என்ன..?” என்று சொன்னவர்கள்… “ இதோ பார் பாஸ்கரா முறையா கல்யாணம் செய்து ஒழுங்கு முறையா இருந்தவளோட பெண்ணையே கல்யாணம் செய்தாலே அந்த பெண் மீது சந்தேகம் வந்தால் துறத்தி விடுவார்கள்..
இந்த மான்சி பெண் ஒரு வைப்பாட்டியோட பெண்.. ஆட்டமெட்டிக்கா.. அம்மா போல தானே பெண் இருக்கும் என்ற தாட் இருக்கும்… அதுவும் அந்த சூர்ய நாரயணன் பெண் எடுத்த இடத்தில் தான் இந்த பெண் போய் இருக்கு… எனும் போது … அந்த பெண்ணை அந்த வீட்டில் இருந்து வெளியில் அனுப்பி வைக்க நாம ரொம்ப மெனகெட எல்லாம் தேவையில்லை…
அந்த பெண் செல்லுக்கு அவ்வப்போது அழைத்தாலே போதும்.. அதுவும் நையிட் அவள் அவன் புருஷன் கூட இருக்கும் சமயத்தில் கண்டிப்பாக ஒரு முறையாவது அழைத்து விடனும்..” என்று அவர்கள் போட்ட அனைத்து திட்டத்தையும். அதில் இருந்த ஒருவனை தனக்கு கீழ் கொண்டு வந்து விசாரிக்கும் விதமாக விசாரித்து தெரிந்து கொண்ட பின்..
அந்த பாஸ்கரனை மட்டும் அல்லாது மொத்த பேரையும் தூக்க வேண்டும்… என்ற ஆத்திரம் என்பதை விட வெறி என்று சொல்லலாம்..
அது எப்படி மான்சியை..? அதை நினைக்க நினைக்க அவனால் தன்னையே கட்டு படுத்த முடியவில்லை.. இருந்தும் பொறுமை காத்தான்.
அவர்களை கூண்டோடு தூக்கவதிலும் சரி… தன் கஸ்டடியில் இருந்தவன் சொன்ன..
அந்த வயதில் மொத்தமாக இல்லை என்றாலும், என்று பாஸ்கரன் சொன்ன பேச்சில், மான்சியை அவன் என்ன மாதிரி துன்புறுத்தி இருப்பான்…? அதை நினைக்க கூட அவனால் முடியவில்லை…
ஆனால் கேட்க வேண்டும் .. கண்டிப்பாக கேட்க வேண்டும்… அவளின் தேர்வு முடியும் வரை காத்து கொண்டு இருந்தான்..
அப்போது சர்வேஷ்வரனுக்கு ஒன்று உரைத்தது.. அது மான்சியை பழி சொல்லி அந்த வீட்டை விட்டு அனுப்புவதில் ரொம்ப எல்லாம் சிரம பட வேண்டியது இல்லை என்ற அந்த வார்த்தை… அவளின் தாய் வாழ்க்கையே அவளுக்கு அந்த பெயரை வாங்கி கொடுத்து விடும் என்றதற்க்கு ஏற்ப தானே…
தானும் அப்படி பேசியது.. அதே போல… நேற்று கூட தன் அன்னை, பெரியம்மா மான்சி சாப்பிட்டு சென்றதை உறுதி செய்த பின்…
கொஞ்ச தயங்கினாலுமே… “ சர்வா நான் சொல்றேன் என்று தப்பா எடுத்து கொள்ளாதே… நான் உன் நல்லதுக்கு தான் சொல்வேன்..” என்று ஒரு பொடி வைத்து பேச்சை ஆரம்பித்த பெரியம்மா இடை இடையே தன்னை அன்னையையும் ஒரு பார்வை பார்த்த வாறு…
“ அது என்ன எப்போ பார்த்தாலும் மான்சிக்கு போன் வருது… மான்சிக்கு அம்மா தம்பி மட்டும் தான் உறவு என்று.. அம்மா கூட சரியான பேச்சு வார்த்தை இல்ல போல..
அதுவும் ஒரு வகையில் நல்லதுக்கு தான்.. தம்பியோடு மட்டும் தான் பேசுவது போல.. சரி அவன் சின்ன பைய்யான்… தான் விட்டு விடலாம்… ஆனால் அவள் ஸ்கூலில் இருக்கும் நேரத்தில் கூட இவள் செல்லுக்கு அழைப்பு வருது என்றால், யாரிடம் இவள் பேசுகிறாள்..?” என்று பேசியவர்..
தான் ஏதோனும் சொல்ல கூடும் என்று தன் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தவரின் முகத்தை சர்வேஷ்வரனும் பார்த்தானே ஒழிய வாய் திறந்து எதுவும் பேசாது இருந்தான்..
பின் சர்வாவின் பெரியம்மாவே..” திரும்பவும் நான் சொல்றேன் என்று தப்பா எடுத்துகாதே சர்வா… அவள் அம்மா மாதிரி..” என்று பேசிக் கொண்டு இருந்தர் சர்வேஷ்வரனின் முக மாற்றத்தை பார்த்து அமைதியாக போனவரிடம்..
அப்போது தான் எங்கோ பார்ட்டிக்கு போவது போல் உடையணிந்து கொண்டு சாப்பிட அமர்ந்த வனிதாவையும், அவள் உடையையும் மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்து வைத்த சர்வா…
இப்போது ..” நான் சொல்றேன்னு நீங்க தப்பா எடுத்துக்க கூடாது பெரியம்மா…” என்று சொன்னவன்…
தன் எதிரில் அமர்ந்து இவ்வளவு நேரமும் சாப்பிடுவதாக பெயர் செய்து கொண்டு அமர்ந்திருந்த தன் அத்தை பத்மாவதியை காண்பித்து…
“ பத்து அத்தை எப்படி பெரியம்மா…?” என்று கேட்டவன்.. அவர் பெரியம்மா அதற்க்கு பதில் அளிக்கும் முன்னவே,…
“ எனக்கு தெரிந்து நல்லவங்க தான் எல்லா வகையிலுமே.. ஆனால் அவங்க பெண்கள்..? என்று கேட்டவன்.. அதற்க்கு எந்த பதிலும் சொல்லாது பாதி சாப்பாட்டில் எழுபவனை அனைவரும் கோபத்துடன் பார்த்தனர்..
அந்த சமயம் சாப்பிட வந்த அவனின் அப்பா, பெரியப்பாவையும் சேர்த்து..
சர்வேஷ்வரின் பெரியப்பா..” என்ன சர்வா… என்ன பேச்சு இது…? திறமையானவன்.. நல்லவன்… நம்ம குடும்பத்தை இன்னும் முன்னுக்கு கொண்டு வருபவன் என்று என் மகனோடு உன்னை கொண்டாடியதுக்கு பேசுற பேச்சா இது..?” என்று கண்கள் கலங்கி கொண்டு இருந்த தன் தங்கையை கை பிடித்த வாறு தன் தம்பி மகனை கடிந்தார்..
“ அது தான் பெரியப்பா.. நீங்க சொன்னது ஒரு வகையில் சரி தான்.. இதே நான் இருக்கும் சொத்தை அழித்து கொண்டு, ஊரை சுற்றி கொண்டு இருந்தா இந்த வீட்டில் எனக்கு என்ன மரியாதை கிடைக்கும் என்பது எனக்கு நல்லாவே தெரியும்..” என்றவனின் பேச்சில்..
இப்போது சர்வேஷ்வரன் தந்தை.. “ இப்போ என்ன சொல்ல வர்ற சர்வா.. ? புரியும் படி சொல்..?” என்று அதட்டினார்…”
“ அதாவது எனக்கு உண்டான மரியாதை என் நடத்தையில் தான் இருக்கு… அதாவது நீங்க எனக்கு அப்பா.. நான் இந்த குடும்பத்து மகன் என்பதில் இல்லை… நான் எப்படி..? அது தான்..
அப்படி பார்த்தால், மான்சி எப்படி என்று எனக்கு நல்லாவே தெரியும்.. அனிதா எப்படி என்று உங்க எல்லோருக்கும் தெரியும்.. அடுத்து..” என்று சொன்னவன் வனிதாவை ஒரு பார்வை பார்த்து வைக்க..
அந்த பார்வையை கவனித்த பத்மாவதி .. “ நீ இப்படி மாறுவே என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை சர்வா.. அனிதா.. செய்தது தப்பு தான் நான் இல்லேன்னு சொல்ல வரல.. ஆனா நீ இப்போ எதுக்கு வனிதாவை அப்படி பார்த்து சந்தேகப்படுவது போல் பேசுற..
அவள் வயதில் உன்னோட சின்னவளா இருந்தாலுமே, உனக்கு அண்ணி.. இந்த வீட்டின் மூத்த மருமகள்.. இது போல் பேசுவது நல்லதிற்க்கு இல்ல…” என்று குரல் கம்ம பேசியவரின் முகத்தை பார்க்க சர்வேஷ்வரனுக்கும் வருத்தமாக இருந்தது தான்..
என்ன இருந்தாலுமே, தன் பாசமான அத்தை அல்லவா.. ஆனாலும் அனைவரையும் பேச விட்டு.. அதுவும் மான்சியை பற்றி தவறாக படுவது போல் பேசிய பேச்சில் அவ்வளவு ஆத்திரம் அவனுக்கு..
அதுவும் இந்த பேச்சுக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்தது வனிதா என்பது அவன் அறிந்தது தான்.. பத்மாவதி அத்தைக்கு இதில் பங்கு இல்லை என்றாலுமே, மான்சியை பற்றி தவறாக படும் படி தன் மகள் கதை பின்னும் போது அதை கேட்டுக் கொண்டு அமைதியாக தானே இருந்தார்..
ஆனால் இப்போது தன் மகளை பேச கூட இல்லை ஒரு பார்வை பார்த்தேன்.. வாழ்க்கை பாழக போகிறது என்று இவ்வளவு பதட்டம் படுகிறாரே.. அது போல தானே மற்றவர்களின் பெண்ணும்..
அதுவும் வனிதாவை பற்றி கேட்டதில்..தெரிந்து கொண்ட விசயத்தில். முதலில் மான்சி விசயம் முடியட்டும் என்று இருந்தவனுக்கு, தன்னை வீட்டில் இருந்தவர்களோடு மோத விட்டு தன்னை கிண்டலான ஒரு பார்வை பார்த்து கொண்டு இருந்த வனிதாவை பார்த்தவன்..
அவள் செய்து கொண்டு இருப்பதை.. மான்சியை செய்ய நினைத்ததை சொல்ல ஆரம்பித்தான்…