அத்தியாயம்….22
சர்வேஷ்வரனுக்கு மான்சி தன்னிடம் சொன்ன பேசியில் அழைப்பு வருவதை சொன்னவள் கூடவே, எனக்கு சந்தேகம் வனிதா, அனிதா மீது தான் என்று சொன்னதுமே, அவனுக்குமே இருக்குமோ என்ற எண்ணம் தான்..
ஆனால் அந்த பேசியின் அழைப்புக்கு காரணம் அவர்கள் இல்லை என்ற போது, அப்போது தான் வனியும் அனியும் பேசிக் கொண்டு இருக்கும் போது அவர்களை கடக்கும் போது அவர்கள் கடைசியாக சொன்ன ..
“ அவள் ஆட்டம் இன்னும் கொஞ்ச நாள் தான் ஆட வேண்டியது… ஆடுற எல்லா ஆட்டமும் கூடிய அடங்கிடும்..” என்று அவர்கள் பேசிய பேச்சையும் வைத்து தான் மான்சி சொன்னது போல் இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது…
இப்போது அந்த பேசி அழைப்பு அவர்கள் இல்லை எனும் போது… அவர்கள் பேசியது எதை பற்றி என்பதை விட யாரை பற்றி என்ற சந்தேகம் அவனுக்கு…
அதனால் மீண்டும் மான்சி அனுகிய டிடெக்டீவ் ஏஜென்ஸியையே அனுகியவன்..
“ நீங்க விசாரித்ததில் அந்த பாஸ்கர் பற்றிய விவரம் மட்டும் தானா.. இல்லை வேறு ஏதாவது இருக்கா..?” என்று சர்வேஷ்வரன் பேச பேச அந்த டிடெக்டீவ் ஏஜென்ஸியின் முகம் மாறுவதை கவனித்து விட்டு.
.” எது என்றாலும் சொன்னா நல்லா இருக்கும்.. ஏன்னா மான்சியின் கணவன் நான் தான்… அது நல்லாவே உங்களுக்கும் தெரியும்.. என்னை பற்றிய விவரமும் உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்பது என் அனுமானம்..” என்ற சர்வேஷ்வரனின் பேச்சுக்கு..
அவர் கொஞ்சம் தயங்கினாலும் சொல்லி விட்டார்..
“ எனக்கு உங்களோடு சூர்ய நாரயணனை தான் நல்லா தெரியும்… அது தான் உங்கள் மனைவியின் பேசியின் அழைப்புக்கு காரணம் பாஸ்கர் என்ற விவரத்தோடு,
ஒரு வாரமாக உங்க மனைவி பின் யாரோ பின் தொடர்வது தெரிந்ததும் யார் என்று பிடித்து விசாரித்ததில், அவர்கள் கை காட்டியது சூர்ய நாரயணனின் இரு மகள்கள் பக்கம்… அது தான் நான் அவரிடமே சொல்லி விட்டேன்..” என்று உண்மையை சொன்னதுமே..
“ சரி மாமாவின் விருப்ப படி எனக்கு தெரியாத விசயம் தெரியாமலேயே போகட்டும்..” என்று சொல்லி விட்டான்..
ஆனால் மான்சிக்கு என்ன பாதுகாப்பு கொடுக்க முடியுமோ, அதை அவளுக்கே தெரியாமல் செய்தவன்.. ஏன் அந்த பின் தொடரல் என்ற விசயமும் அறிந்தும் கொண்டான்..
இந்த விசயங்கள் அனைத்தும் தெரிந்தும் தெரியாதது போல், அனிதா, வனிதா ஏற்பாடு செய்தவனிடம் … “எப்போதும் போல் மான்சி பின் சென்று உன்னை நியமித்தவர்களுக்கு அப்டேட் கொடுத்துட்டே இருங்க..” என்று சொன்ன சர்வேஷ்வரன் பேச்சு அவனுக்கு புரியவில்லை…”
“ எனக்கு நீங்க என்ன சொல்ல வர்றிங்கன்னு புரியல சார்..” என்றதற்க்கு சுருக்கமாக…
“ சம்பாளத்தை அவங்க கிட்ட வாங்கிட்டு விசுவாசத்தை என் கிட்ட காமிக்க சொல்றேன்.. புரியுதா…?” என்று சொன்ன சர்வா..
பின் அவனே.. “ இதனால் உனக்கு என்ன ஆதாயம் என்று தானே யோசிக்கிற..?” என்ற சர்வாவின் கேள்விக்கு அவன் வேகமாக தலையாட்டினான்..
“ இப்படி தலையாட்ட நீ உயிரோட இருக்க பார்.. அது தான் ஆதாயம்… இப்போ உனக்கு புரியுதா..?” என்றதற்க்கு அவன் தலை முன் போலவே வேகமாக ஆடியது… மறைமுகமாக சர்வா மிரட்டுவது புரியாத அளவுக்கு அவன் முட்டாள் இல்லையே..
சர்வா சொன்னது போல் தான் மான்சியின் பின் சென்றவன்.. அன்று அன்று வனிதாவிடம் மான்சி போன இடம் போகும் சமயம் அனைத்தையும் புள்ளி விவரத்தோடு ஒப்புவித்தான்…
சர்வேஷ்வரன் இப்படு சொல்லாது மறைமுகமாக செய்ய காரணம்.. எந்த காரணத்துக் கொண்டும், மான்சியின் தேர்வு தடைப்பட கூடாது என்று தான்….
ஏன் என்றால், வனிதா, அனிதா மான்சியை பின் தொடர வைத்தவன் சொன்ன தகவல் இது தான்…
“ அவளின் தேர்வுக்கு ஒரு நாள் முன் அவளை கடத்தி விட வேண்டும்.. பின் நான்கு நாட்கள் கழித்து அவளை விட்டால் போதும் என்பதே..”
அந்த தேர்வின் போது கடத்தலும், நான்கு நாட்களுக்கு பின் விடுவிப்பதற்க்கு உண்டான காரணத்தை சர்வேஷ்வரன் ஒரளவுக்கு அனுமானித்து விட்டான்..
அதனால் தான் எந்த காரணம் கொண்டும் மான்சி இந்த தேர்வை எழுதுவதோடு, அதில் வெற்றியும் பெற வேண்டும் என்று தான்…
இதை பற்றி வீட்டில் பேசினால் மான்சிக்கு படிப்பின் மீதான கவனத்தை சிதைக்கும் என்று நினைத்து தான் வாய் திறக்கவில்லை..
ஆனால் வனிதா பேசிய பேச்சில், அவனால் சொல்லாமல் விட முடியவில்லை..
“ நீ மான்சி பின் அனுப்பியவன் என் கஸ்டடியில் இருந்து தான் உனக்கு வேலை செய்கிறான்.. நீ என்ன என்ன செய்த என்பதும் உன் அப்பாவுக்கு தெரியும்..
தெரிந்தும் அமைதியாக இருக்கிறார் என்றால்,” என்று சொல்லிக் கொண்டு வந்தவன் அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்த சூர்ய நாரயணனை பார்த்து கொண்டே…
“ என்ன இருந்தாலும், நீங்க தானே அவர் பெண்… மான்சிக்கு என்ன ஆனால் அவருக்கு என்ன..?” என்று சொல்லி விட..
வனிதா.. “ ஆமாம்.. அது தானே உண்மை.. நானும் என் தங்கையும் தான் இவருக்கு மகள்கள் ..” என்று சூர்ய நாரயணனை சுட்டி காட்டி சொன்னவள்..
பின் தன் அன்னையை காட்டி..” இவங்க மட்டும் தான் இவரின் மனைவி.. அவங்க..” என்று சொன்ன வனிதா அடுத்து என்ன சொல்லி இருப்பாளோ..
சூர்ய நாரயணன் …” போதும் நிறுத்துறியா…? நீ பேசியதும் அதிகம் செய்தது அதை விட அதிகம்…” என்று மகளிடம் கத்தியவர்..
“ என்ன சர்வா இப்படி பேசுற..?” என்று தான் வரும் போது சர்வேஷ்வரன் பேசிய பேச்சில் வேதனையுடன் கேட்டார்…
“ வேறு என்ன சொல்ல சொல்றிங்க மாமா… மான்சி அனுகிய டிடெக்டீவ் ஆள் உங்க கிட்ட முதலிலேயே எல்லா விசயமும் சொல்லிட்டார்….
அதுக்கு உங்க இரண்டு பெண்களை என்ன செய்திங்க… குறைந்த பட்சம் பார்த்தாவது கேட்டிங்களா..?” என்று சூர்ய நாரயணனுக்கு மேல் கோபத்துடம் சர்வேஷ்வரன் கத்தினான்…
“ ஆள் ஆளுக்கு அவங்க அவங்க சுய நலத்துக்காக செய்த விசயத்தால், பாதிக்கப்பட்டது அந்த இரண்டு பசங்க தான்.. அது முதல்ல உங்களுக்கு புரியுதா மாமா..
அப்படி புரிந்து இருந்தா, இன்னும் அவங்களுக்கு அந்த உறவை கொடுத்துட்டு இருந்து இருக்க மாட்டிங்க… அவங்களை அனைவரும் பார்க்க வெளியில் கூட்டி போக தெருந்தவரால், அனைவருக்கும் தெரியும் படி நல்ல உறவை கொடுத்து இருப்பிங்க..” என்றவனின் பேச்சை அங்கு இருந்த யாரும் ஏற்றுக் கொள்ளாது முகத்தை சுளித்து கொண்டனர்..
சர்வேஷ்வரனின் அன்னை வைதேகி.. “ என்னடா பேச்சு இது.. நீ என்ன சொல்ல வர்ற.. அந்த பொம்பளை கழுத்தில் அண்ணாவை தாலி கட்ட சொல்றியா..?” என்று உணர்ச்சி மிகுதியில் அவரும் கத்தினார்..
அதற்க்கு சர்வேஷ்வர் கூலாக.. “ இதில் என்ன தப்பு இருக்கு… அவங்க கூட வாழனும் என்றால், அதற்க்கு உண்டான மரியாதை கொடுத்து வாழ சொல்றேன்.. இல்லேன்னா வேண்டாம்.. இது வரை அவங்க உறவு எப்படி இருந்ததோ எனக்கு தெரியாது..
ஆனால் இது மான்சியோட கவுரவ பிரச்சனை… மான்சியோடது மட்டும் இல்லாது.. அவள் என் மனைவி எனும் போது.. எனக்கும் இது கவுரவ பிரச்சனை.. அதனால் இனி மாமா அந்த வீட்டுக்கு போக கூடாது.. அப்படி போவது என்றால், அவங்களுக்கும் முறையான ஒரு இடத்தை கொடுக்க வேண்டும்..” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவன்ன்.
பின் வனிதாவை பார்த்து.. “ நீ அடங்கி இருந்தால், நீ இங்கு இருக்க முடியும் இல்லேன்னா மான்சி இந்த வீட்டை விட்டு போக மாட்டாள்.. அதுக்கு பதிலாக நீ போக வேண்டியது வரும்..” என்ற அவனின் பேச்சில், இதை எல்லாம் கேட்டுக் கொண்டு வந்த சர்வேஷ்வரனின் பெரியப்பா…
“ என் மருமகளை இந்த வீட்டை விட்டு போக சொல்ல நீ யாரு…? உனக்கு இந்த வீட்டில் என்ன என்ன உரிமை இருக்கோ.. அந்த உரிமை எல்லாம் என் மகனுக்கும் இருக்கு… என் மகனின் மனைவி எனும் போது வனிதாவுக்கு இந்த வீட்டில் உரிமை இருக்கு..” என்று ஆணித்தரமாக சொன்னார்..
இப்போது சர்வேஷ்வரன் இகழ்ச்சியாக ஒரு புன்னகை புரிந்தவன்..
“ அதே தான் பெரியப்பா நீங்க சொன்னதை தான் நானும் சொல்ல வர்றேன்.. எனக்கு இருக்கும் அதே உரிமை தான் என் மனைவியான மான்சிக்கும் இந்த வீட்டில் இருக்கு…” என்று சொன்னவனிடம் அவனின் பெரியப்பா..
“ இப்போ யார் இல்லேன்னு சொன்னாங்க என்று நீ இந்த பேச்சு பேசுற சர்வா.. நான் உன் கிட்ட இருந்து இந்த பேச்சை எதிர் பார்க்கவில்லை..” என்று சொன்னவரிடம் சர்வேஷ்வரன்..
“ நானும் உங்க கிட்ட இருந்து நான் பேசினதுக்கு ஏன் இப்படி பேசுறான் என்று கூட யோசிக்காது உங்க மருமகளுக்கு சப்போர்ட் பண்ணி பேசுவீங்க என்று எதிர் பார்க்கவே இல்ல பெரியப்பா..” என்று சொன்னவனின் பேச்சில் இருந்த வேதனையை அவர் அப்போது தான் கவனித்தார்..
அப்போது தான் அவர் இன்னொன்றும் உணர்ந்தார்… எப்போதும் இது போல் சர்வா பேச மாட்டான்.. அதுவும் வீட்டு பெண்களிடம் அவன் இவ்வளவு பேசியது கிடையாது..
“ என்ன சர்வா என்ன பிரச்சனை.. அப்படி பிரச்சனை பெரியதாக இருந்தாலும், வீட்டில் பெரியவங்க என்ற முறையில் என்னிடம் சொல்லி இருக்க வேண்டும்..
இல்லேன்னா உன் அப்பாவிடம் சொல்லி இருக்க வேண்டும்.. அதை விட்டு விட்டு பிர்ச்சனை வருவது போல் என்ன பேச்சு..?” என்று அவர் கேட்டதற்க்கு..
தன் பெரியப்பாவை பார்த்து அவன் கேட்டது இது தான்.. பத்மாவதியை காண்பித்து.. “ இவங்க உடல் நிலை பற்றி.. இவங்க கல்யாணத்திற்க்கு முன்னவே உங்களுக்கும், அப்பாவுக்கும் தெரியும் தானே..” என்று..
அவன் கேட்ட கேள்வியில் சர்வாவின் பெரியப்பா முதலில் அதிர்ந்து போனாலும், பின் தெளிந்தவராக..
“ என்ன சர்வா பத்துக்கு கல்யாணத்துக்கு முன்ன என்ன.. அவள் சரியா சாப்பிட மாட்டா அதனால் கொஞ்சம் வீக்கா இருப்பா..?” என்று சமாளிக்க..
“ அப்படியா என்று கேட்டவன்..”
விறு விறு என்று தன் அறைக்கு சென்று வந்தவனின் கையில் ஒரு கோப்பை இருந்தது.. அதை தன் பெரியப்பா முன் போட்டவன்..
“ இதை பார்த்துட்டு இப்போ சொல்லுங்க..?” என்றவனை பார்க்காது அந்த கோப்பையையே பார்த்து கொண்டு இருந்தவர்..
“ அவளுக்கு கொஞ்சம் ஹார்ட் வீக்.. அதுக்கு உண்டான மருந்து அவளுக்கு கொடுத்துட்டு கல்யாணத்திற்க்கு முன்னவே அவளுக்கு சரியா ஆகிடுச்சே.. இப்போ என்ன அதுக்கு..?” என்று முகத்தில் வியர்வை வடிய அதை துடைத்து கொண்டே கேட்டார்..
“ இப்போ அதுக்கு என்னவா…? அதனால் தான் இப்போ அனைத்து பிரச்சனைக்கும் காரணம்.. அதுக்கு என்று மாமா செய்தது சரி என்று நான் சொல்ல வர..” என்று அந்த கோப்பையே அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டு இருந்த சூர்ய நாரயணனை காட்டி சொன்ன சர்வா..
“ நான் சொல்வது தவறு மொத்தமும் செய்தது பெரியவங்களான நீங்க எல்லோரும்… இதுல எந்த இடத்திலும் வராத மான்சிக்கும் நவீனுக்கு எதற்க்கு கெட்ட பெயர்…?
வனிதாவை காண்பித்து.. “ மான்சி யார் பேச்சும் போகாது அவள் பாட்டுக்கு தானே இருக்கா… அவள் வனியை என்ன செய்தா..?
ஆனால் இவள் அவள் எக்ஸாம் எழுத கூடாது.. அதோடு அவள் பெயரையும் கெடுக்கனும் என்று இவள் தங்கையோடு சேர்ந்து ப்ளான் செய்யிறா…” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே மான்சியிடம் இருந்து சர்வேஷ்வரனின் கை பேசிக்கு அழைப்பு வந்தது..
இவள் எப்போதும் தன்னை அழைக்க மாட்டாளே.. அதுவும் இப்போது தான் லைப்ரேரிக்கே சென்று இருப்பாள் என்ற யோசனையுடனே அவள் அழைப்பை ஏற்ற சர்வேஷ்வரனுக்கு..
பேசியில் மான்சி சொன்ன விசயத்தை ஜீரணித்து கொள்ளவே சிறிது நேரம் பிடித்தது…
“ மானு.. மானு.. நீ பயப்படாதே.. நவீனையும் பார்த்துக்கோ… இதோ இப்போ வந்துடுறேன்..” என்று சொன்ன சர்வேஷ்வரனின் குரலில் தெரிந்த பதட்டத்தில் சூர்ய நாரயணனும் பதறி தான் போனார்..
“ என்ன சர்வா என்ன பிரச்சனை மான்சிக்கு ஏதாவது.. இல்ல நவீன் என்று சொன்னியே நவீனுக்கு..? “ என்று பதட்டமும் பயமுமாக கேட்ட சூர்ய நாரயணனையே பார்த்துக் கொண்டு இருந்த சர்வா..
இகழ்ச்சியாக ஒரு புன்னகை புரிந்தவன்.. அத்தைக்கு ஹார்ட் பிரச்சனை என்று அவங்களை சேப் செய்யிறேன்னு… நல்ல எல்த்தியா இருந்த ஹார்ட்டை நிறுத்திட்டிங்க.. என்ன புரியலையா மாமா…? மான்சியின் அம்மா ஹார்ட் ஹட்டாக்கில் இறந்துட்டாங்க…” என்ற அவனின் பேச்சை நம்ப முடியாது அவனின் முகத்தையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தார் சூர்ய நாரயணன்…