அத்தியாயம்….23
மான்சியின் முகம் பார்க்க நிர்மூலமாக தான் தெரிந்தது.. ஆனால் அது வெளி பார்வைக்கு மட்டும் தான்.. உள்ளே ஆழி பெருங்கடல் போல் மனதில் ஆயிரம் எண்ணங்கள் அலை மோதிக் கொண்டு இருந்தது.
புத்தி தெரிந்த நாள் முதல் அவள் மன நிலை என்றுமே தெளிவாக இருந்தது கிடையாது.. ஆனால் அவளே அவ்வப்போது தன்னை தெளிவு படுத்திக் கொள்ளுவாள்..
இது எல்லாம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு மட்டும் தான்.. பின் தானும் தன் தம்பியும் நல்ல நிலைக்கு வந்து விடுவோம்.. அதில் அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை..
கஷ்டத்தை கொடுத்த கடவுள் கூடவே கல்வியையும் கொடுத்து, இது தான் உங்களுக்கு உண்டான வழி என்பது போல், அங்கு அங்கு சப்ஜெக்ட்டுக்கு டியூஷன் வைத்தும் வராத மதிப்பெண்களை, அக்காவும் தம்பியும் எந்த மெனகெடலும் இல்லாது பெற்று விடுவார்கள்..
தங்களுக்கு உண்டான பாதை இது தான் என்று அதை பற்றிக் கொண்ட மான்சி, தன் பின்னே தன் தம்பியையும் அதன் வழியே அழைத்து வந்தாள்..
ஆனால் இன்று… அந்த பாதை கூட அடைக்கப்பட்டது போலான மனநிலையில் தான் மான்சி இப்போது இருந்தாள்..
அதுவும் தங்கள் அறையில் இருந்த ஷோபாவின் கூனி குறுகி படுத்து கொண்டு இருந்த நவீனை பார்க்க பார்க்க, அவளின் அடி வயிறு கலங்கி போனது..
இந்த வயதில் இவன் என்ன தவறு செய்தான்.. அங்கு அங்கு இவன் வயது பிள்ளைகள் எல்லாம் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து கொண்டு இருக்க..
குறைந்த பட்சம் இவனுக்கு மன நிம்மதி கூட கிடைக்காது.. இது என்ன வாழ்க்கை..? நாங்கள் என்ன தவறு செய்தோம்.. தந்தை இல்லை.. தாய் இருந்தும் இல்லாது நிலையில் தான் நாங்கள் இருந்தோம்..
ஆனால் அந்த ஒப்புக்கு ஒட்டிக் கொண்டு இருந்த உறவு கூட, முற்றிலும் அறந்து அந்தரத்தில் தொங்கி கொண்டு இருப்பதும்..
அந்த கயிறை யார் பிடித்து நிறுத்துவது என்று அம்மாவின் சடலத்தை வைத்து கொண்டே பேசிய பேச்சுக்கள்.. அதை நினைத்தாளே,. இறுக்கமாக கண்ணை மூடிக் கொண்டாள்…
நேற்று சர்வா நினைத்தது போல் அவள் நூலகம் வரை எல்லாம் போகவில்லை.. கார் அடுத்த தெருவில் போன பின் தான், தான் ஒரு புத்தகம் வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு வந்தது அவளின் நியாபகத்தில் வந்தது…
காரை ரிவர்ஸ் எடுக்க ஓட்டுனர் கஷ்ட்டப்படுவதை பார்த்து..
‘ பரவாயில்ல அண்ணா நீங்க இங்கேயே இருங்க நான் போய் புக் எடுத்துட்டு வந்து விடுகிறேன்..” என்று சொல்லி வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு தன் கணவன் சர்வேஷ்வரன் பேசியது அனைத்தும் கேட்க நேரிட்டது..
இந்த சமயத்தில் தான் வீட்டுக்குள் போனால் வேண்டும் என்று இங்கேயே நின்று ஒட்டு கேட்டேன் என்று சொல்வார்கள் என்று, புக்கை எடுக்காது காரில் ஏறியவளுக்கு, ஏனோ என்றும் இல்லாது அன்று மனது கொஞ்சம் லேசாக உணர்ந்தாள்..
கடவுளுக்கு அது பொறுக்காது போல, உடனே நவீனிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வர..
“ நேரத்தை பார்த்த வாறு.. இவன் இந்த நேரம் ஸ்கூலில் தானே இருக்கனும்.. என்ன வீட்டு எண்ணில் இருந்து அழைக்கிறான் என்று எண்ணிக் கொண்டு தான் தம்பியின் அழைப்பை அவள் ஏற்றாள்…
அவள் அந்த அழைப்பை ஏற்க்கும் போது கூட, அந்த அழைப்பு தன் மீது குண்டு தூக்கி போடும் என்று நினைத்து பார்க்க வில்லை..
“ அக்கா அக்கா..” என்று அழுது கொண்டே நவீன் பேசிய பேச்சில் அவனுக்கு தான் என்னவோ என்று பதறி போய்..
“ ஏய் நவீன் என்னடா என்னடா..?” என்று இவள் பதட்டமான குரலுக்கு ஓட்டுனர் கூட காரை ஒரமாக நிறுத்தி விட்டார்…
“ அக்கா அம்மா அம்மா..” என்று அவன் அம்மாவை பற்றி சொல்லும் போது கூட அவர்களுக்கு உடம்பு சரியில்லை என்று தான் நினைத்தாள்..
அதனால்.. “ அவங்களுக்கு என்ன..?” என்று எப்போதும் போல் மெத்தனமாக தான் கேட்டாள்..
“அக்கா அம்மா இறந்துட்டாங்க ..” என்ற அவன் பேச்சை கூட முடிக்க விடாது மான்சி..
“ பைத்தியம் மாதிரி உலறாதே.. நீ டாக்டருக்கு படிக்க தான் ஆசைப்படுற இன்னும் டாக்டர் ஆகவில்லை… உடம்பு சரியில்லேன்னா ஹாஸ்ப்பிட்டலுக்கு அழைத்து கொண்டு போகலாம்.. இதோ நான் அங்கு வர்றேன்..” என்று நவீனிடம் சொன்ன மான்சி பேசியை அணைக்காது.. கார் ஒட்டுனரிடம்…
“ அண்ணா..” என்று அழைத்து இவளை ஏதோ சொல்ல வர பேசிக்கு அந்த பக்கம் இருந்த நவீன்..
“அக்கா.. அக்கா..” என்று இவளை அழைத்து பேச விடாது செய்யவும்..
“ என்ன நவீன் நான் வர்றேன் என்று தானே சொல்லிட்டு இருக்கேன்..” என்ற பேச்சுக்கு அந்த பக்கத்தில் பேசியில் அந்த பக்கம் இருந்த நவீன் கதறிக் கொண்டு..
“ அக்கா அக்கா அம்மா போயிட்டாங்க அக்கா.. போயிட்டாங்க நான் டாக்டர் தான் சொன்னாரு அக்கா..” என்ற தம்பியின் அந்த கதறறில் மான்சி திக் பிரம்மை பிடித்தது போல் அப்படியே அமைதியாகி விட்டாள்..
அதுவும் நவீன் சொன்ன அம்மா அந்த அழைப்பில், அந்த நேரத்திலும் எத்தனை ஆண்டுகள் ஆகி விட்டது தம்பியின் வாயில் இருந்து அம்மா என்ற அந்த வார்த்தை கேட்டு…
அம்மா.. மான்சியின் மனது ஊமையாக கதறி கொண்டு இருந்தது… அனைத்து உறவும் பொய்த்து போக கூடும்.. ஆனால் அம்மா… எங்களுக்கு அந்த உறவும் பொய்த்து விட்டு, இப்போது மொத்தமாக இல்லை என்றாகி விட்டதே.. என்று கண்களில் இருந்து கண்ணிர் வடிய அமர்ந்திருந்த அவளின் அந்த தோற்றம் அந்த ஒட்டுனருக்கு கூட நெஞ்சத்தை பிசைந்து விட்டது..
“ மேடம் மேடம் சாருக்கு போன் போடுங்க.. பாவம் தம்பி சின்ன பைய்யன் பயந்து இருப்பான்..” என்று அவர் சொல்லவும் தான் மான்சிக்கு சுரனை வந்தது..
ஆம் நவீன் சின்ன பைய்யன்.. அவன் அங்கு தனியா எப்படி பதறி கொண்டு இருப்பான் என்று தன் கணவன் சர்வேஷ்வரனனின் உதவியை தான் அப்போது மான்சிக்கு நாட தோன்றியது..
சர்வேஷ்வரன் வந்த பின் அனைத்தும் விரைவாக தான் நடந்து முடிந்தது.. ஆம் முடிந்து விட்டது தான்..
துளசி இருந்த வீட்டின் அதே தெருவில் ஒரு மருத்துவர் இருக்க.. காலை எப்போதும் போல் பள்ளிக்கு கிளம்பி கீழே வந்த நவீன்.. சமையல் செய்து முடியாது இருக்கவும்..
அங்கு மேல் வேலை பார்ப்பவரை கேள்வியாக பார்த்தான்… அவனின் பார்வையில் ..
“ அம்மா அவங்க ரூமை விட்டு இன்னும் வரல தம்பி.. வேலையாள் இரண்டு முறை போய் பார்த்து விட்டாங்க.. படுத்தது படுத்த படி அப்படியே தான் இருக்காங்க..” என்ற பேச்சை கேட்டு சரி என்று தலையாட்டியவன்.
குளிர்சாதன பெட்டியில் இருந்து பிரட்டையும் ஜாமையும் எடுத்து அதை தடவி சாப்பிட வாயில் வைக்கும் தருணம், மனது கேளாது அன்னையின் அறையின் பக்கம் பார்வையை செலுத்தினான்..
அந்த அறைக்கு சென்று வருடங்கள் ஆகின்றது… அதனால் சிறிது தயக்கத்தோடு.. வேலையாளிடம்..
“ கொஞ்ச பாருங்க..” என்று சொல்லி விட்டு அந்த ப்ரட்டை சாப்பிடாது கையிலேயே வைத்து இருந்தான்..
அந்த அறைக்குள் சென்ற வேலையாள் .. “ மேடம் மேடம்..” என்ற பதட்டமான அழைப்பில் நவீன் கையில் இருந்த ப்ரட்டை கீழே போட்டு விட்டு துளசியின் அறைக்கு முன் நின்றவன், அந்த நேரத்திலும் உள்ளே போகாது தயங்கி தான் நின்றான்..
ஆனால் உள்ளே சென்ற அந்த வேலையாள்.. “ அய்யோ உடம்பு எல்லாம் சில்லிட்டு போய் இருக்கே…” என்று பதட்டமான குரலில் தயக்கத்தை விட்டு விட்டு உள்ளே போனவன் தன் தாயின் அருகில் சென்று முதலில் அவர் உடலை தான் அசைந்து..
“ எழுந்துடுங்க எழுந்துடுங்க..” என்று உலுக்கினான்.. பின் தாயின் உடலை தொட்டு எழுப்பும் போது அவன் என்ன உணர்ந்தானோ..
துளசியில் மூக்கின் துவராத்தில் தன் ஒரு விரலை விரல் நடுங்க கொண்டு சென்றவனுக்கு ஒன்றும் சரியாக புரியவில்லை.. உணரும் அந்த மனநிலை முற்றிலும் இழந்து..
“ அம்மா அம்மா…” என்று பதட்டத்துடன் துளசியில் உடலை அசைத்தவனுக்கு ..
“இத்தனை நாட்கள் தன் குழந்தைகள் தன்னை அம்மா என்று அழைக்கவில்லையே என்று ஏங்கி கொண்டு இருந்த அந்த தாயின் சேவியில் அந்த வார்த்தை விழாது போனது தான் அங்கு விதியின் விளையாட்டாக போய் விட்டது..
நவீனின் குரலில் வேலையாள் தான் அதே தெருவில் இருந்த மருத்துவரை அழைத்து வர….
அவர் சொன்ன..” உயிர் விட்டு பல மணி நேரம் சென்று இருக்கும்..” அதோடு விடாது..” இவங்க எங்க ஹாஸ்பிட்டலில் தான் ட்ரீட் மெண்ட் எடுத்து கொண்டு இருக்காங்க என்ற விவரம் நவீன் காதில் விழவே இல்லை…
பின் மான்சியின் அழைப்பில் மான்சி சர்வா ஒருங்கே தான் அங்கு சென்றனர்.. இருவரும் முதலில் துளசியின் உடலை எல்லாம் பார்க்கவில்லை..
பரிதவித்து போய் நின்று கொண்டு இருந்த நவீன் இரு பக்கமும் இருவரும் அரணாக நின்று கொண்டனர்..
சகோதரியை பார்த்து இவ்வளவு நேரமும் அடைத்து வைத்திருந்து துக்கம் வெடிக்க..
“ அக்கா..” என்று கதறியவாறு அவளை அணைத்து கொண்டு அழுது விட்டான்.. சூர்ய நாரயணனின் நிலை அந்த வீட்டில் ஒரு ஒரம் என்பது போல் கை கட்டிக் கொண்டு துளசியின் உடல் அருகில் நின்றவர் நின்ற படியே விட்டார்…
ஏன் அவள் உடல் நிலையை பற்றி தன்னிடம் சொல்லவில்லை… சொல்லி இருந்து இருக்கலாமே..
ஆம் இரண்டு வருடமாகவே துளசிக்கு மார்பு வலி அவ்வப்போது வந்து கொண்டு தான் இருந்து இருக்கிறது..
மருத்துவர்கள் உங்கள் உடலுக்கு ஒன்றும் கிடையாது… மனது அழுத்தம் தான்… நீங்க உங்கள் மனதை கொஞ்சம் ரிலாக்ஸா வைத்து கொள்ள வேண்டும்.. என்று ஒரு சில மாத்திரிகைகள் யோகாக்ககள் பரிந்துரை செய்து இருக்கிறார்கள்..
ஆனால் போக போக துளசியின் பிரச்சனை அதிகமானதே ஒழிய குறையவில்லை… குறைந்த மாத்திரைகள் அதிகமானது தான் மிச்சம்…
ஆனால் இதை சூர்ய நாரயணனிடம் துளசி சொல்லவில்லை… துளசியின் அனைத்து காரியத்தையும் சர்வேஷ்வரன் தான் முன் நின்று நடத்தி முடித்தான்..
கூடவே நவீனையும் தன்னோட அழைத்து கொண்டு வந்தவன் மான்சியிடம்… “ நாளை தேர்வை நீ எழுதுற.. “ என்று நீ எழுதி தான் ஆக வேண்டும் என்று கட்டளையாக சொல்லி விட்டான்..
நவீனிடமும்.. “ நீ இங்கு இருந்து உன் ஸ்கூல் போவதற்க்குண்டான ஏற்பாடு செய்து விட்டேன்.. போனதை மறந்து நீயும் உன் படிப்பில் கவனத்தை செலுத்து” என்று சொன்னவன் பின் அவன் வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டான்..
அவனின் இந்த செயலை வீட்டு ஆட்கள் யாருக்கும் விருப்பம் இல்லாது போனாலும், இப்போது பேச வேண்டாம் என்று துளசியின் காரியம் முடியும் வரை அமைதி காத்தனர்…
அந்த காரியமும் இதோ முடிந்து விட்ட நிலையில் சர்வாவிடம் கேள்விகள் வந்து விழுந்தன…
“ அந்த பைய்யனை எந்த ஹாஸ்ட்டல் சேர்க்க போகிற..? அதுக்கு நான் ஏதாவது உதவி செய்யனுமா..?” என்று அவனின் தந்தை கேட்டதற்க்கு..
“ வேண்டாம் எல்லாம் நானே பார்த்து கொள்கிறேன்..” என்ற சர்வாவின் பதிலில் மான்சி பரிதவிப்போடு தான் மான்சி அவன் முகத்தை பார்த்து கொண்டு இருந்தவளுக்கு இன்னொன்றும் உரைத்தது தான்..
அது தான் அடுத்த மாதம் ட்ரையினிங்காக வேறு மாநிலம் போகும் போது தம்பி இங்கு எப்படி தனித்து இருப்பான்.. இப்போதே தம்பி ஏதோ அசவுகரியமான நிலையில் தான் இருக்கிறான் என்றும் அவள் உணர்ந்தே தான் இருந்தாள்..
ஒரு வகையில் அவன் விடுதியில் சேர்ப்பது தான் நல்லதோ என்று நினைக்கும் போதே அவள் கண்கள் கலங்கி விட்டது… மனைவியின் கலங்கிய முகத்தை சர்வாவும் கவனித்து தான் கொண்டு இருந்தான்..
இதை மட்டும் அல்லாது துளசி இறந்த அன்று என்பதை விட, அந்த நேரம் என்று சொன்னால் சரியாக இருக்கும்.. தன்னை அழைத்து சொன்னது..
அதன் பின் தன்னிடம் அவள் துக்கத்தை கூட பகிராது.. ஏன் அவள் முகத்தில் கூட அதை காட்டாது தன் தம்பியின் பிடித்த கை விடாது அவனிடமே இருந்தவளின் முகத்தை பார்த்தே, சர்வாவுக்கு தெரிந்து விட்டது..
அவள் எவ்வளவு துக்கத்தை மனதில் அடக்கி வைக்கிறாள் என்று… அவனும் அவளை தேற்றுக்கிறேன் என்ற பெயரில் அவள் அருகில் செல்லாது, துளசிக்கு செய்ய வேண்டிய அனைத்து காரியத்தையும் நவீனை வைத்து செய்து முடித்து விட்டான்..
தெரியும் வீட்டில் நவீனை வைத்து பிரச்சனைகள் எழும் என்றும்
.அதற்க்கு உண்டான வேலையையும் இந்த பதினைந்து நாட்களில் முடித்து வைத்து இருந்தான்.. அவனுக்கு நேரமும் இந்த பதினைந்து நாட்களே… அதுவும் அவன் தெரிந்தே வைத்து இருந்தான்…
இதோ அதற்க்கு உண்டான நேரமும் வந்து விட்டதற்க்கு பட்டும் படாது பதில் சொல்லி விட்டான்..
ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை… மான்சி ஏன் எதற்க்கும் தன்னை தேட மாட்டேங்கிறாள்… ஆனால் நான்…?
அதற்க்கு உண்டான பதில் அவனிடம் இல்லை… ஒரே நாள் உறவு… அந்த உறவில் உரிமை வந்து விடுமா…? இல்லை அன்பு.. இல்லை.. கா..தல்… சர்வாவுக்கு தெரியவில்லை..
ஆனால் மான்சியை நோக்கி ஏதோ.. ஒரு ஈர்ப்பு அவனுக்கு இருக்கிறது அது மட்டும் அவன் உணர்ந்து இருந்தான்..
இந்த திருமணம் சூழ்நிலையில் தான் நடந்தது.. ஆனால் இந்த திருமணத்தை விளையாட்டாக எல்லாம் அவன் நினைக்கவில்லை..
அதனால் தான் அந்த இரவே.. தங்கள் உறவை பலப்படுத்த நினைத்தான்.. பின்… ஏனோ ஒரு வித தயக்கம் அவனுக்கு.. அது ஏன் என்று நேற்று வரை புரியாது இருந்தது.. ஆனால் இன்று..
அவன் உணர்ந்ததை அவள் உணர்வாளா…? பார்க்கலாம்…