அத்தியாயம்…6..
“ நீ நாம பெண் அழைக்க அந்த வீட்டுக்கு வருவோம் என்று ஒத்துக் கொண்ட சர்வா..? உன்னிடம் நான் இதை எதிர் பார்க்கவில்லை…” என்று சர்வேஷ்வரனின் தந்தை வெங்கட பூபதி கோபத்துடன் கேட்டார்..
அதற்க்கு சர்வேஷ்வரன். “ பெண் அழைக்க போகலேன்னா அந்த பெண் கல்யாணத்திற்க்கு ஒத்துக் கொள்ளாது என்பது போல் மாமா சொல்லும் போது நாம ஒத்துக் கொண்டு தானே ஆக வேண்டும்..” என்ற மகனின் பதிலில்..
சங்கர பூபதி.. “ ஒரு காத்துக்கு குப்பை கோபுரத்தில் போய் அமர்ந்து விட்டது போல ஆயிடுச்சி…” என்ற அவரின் பேச்சில் நிதானமாக அவர் அருகில் சென்ற சர்வேஷ்வரன்..
“ எப்போ உங்க மச்சான் அங்கு போனாரோ அப்போவே குப்பை கோபுரத்தில் அமர்ந்தாச்சி பெரியப்பா.. நான் அவங்களை உட்கார வைக்க வில்லை..” என்று தம்பி மகனின் பதில் அடுத்து பேசாது வாய் மூடிக் கொண்டார்..
என்ன தான் அந்த வீட்டில் சர்வேஷ்வரன் திறமை ஆளுமை மிக்கவன்.. இவனால் தான் தங்கள் நிலை இன்னும் உயர்ந்தது என்றாலுமே,
வயதில் சிறியவன் தன் அப்பாவை இப்படி எதிர்த்து பேசுவதை பொருத்து கொள்ள முடியாது, இவ்வளவு நேரமும் தன் மனைவி வனிதாவுக்காக வாய் மூடிக் கொண்டு நடக்கும் பிரச்சனைகளை வாயையும் , கண்ணையும் மூடி பார்த்துக் கொண்டு இருந்தவன் வாய் திறந்து..
“ எனக்கு ஒண்ணு மட்டும் புரியல சர்வா…?” என்று கேட்டவன்.. தன் தம்பி என்ன ..? என்று தன்னை கேட்பான் என்று அவன் முகத்தை பார்த்தான்..
ஆனால் சர்வேஷ்வரன் அண்ணனின் பேச்சுக்கு அவன் பக்கம் திரும்பி பார்த்தானே ஒழிய எதுவும் பேசாது எது என்றாலும், நீயே பேசு என்பது போல் அமைதி காத்தான்..
அதனால் மகேஷ்வரனே.. “ அந்த பெண்ணை கட்டினா தான் உன் மானம் காத்தில் பறக்காதது போல் பேசும் உன் லாஜிக் தான் எனக்கு புரியல சர்வா..?” என்று கேட்டவன்.
பின் கொஞ்சம் தயங்கி.. “ அந்த பெண்ணை நீ பார்த்து இருக்கியா…? ” என்ற கேள்வியில் அவனை கூர்ந்து பார்த்தவன்..
சிரித்துக் கொண்டே.. “ எனக்கு அந்த பெண் பிடித்து இருந்தால், அதாவது உன் பேச்சு படி நான் அந்த பெண்ணை முதலில் பார்த்து பிடித்து இருந்தால், இது போல் முகத்தை சுத்தி எல்லாம் மூக்கை தொட மாட்டேன்..புரியுதா..?
ம் அப்புறம் என்ன கேட்ட.. அந்த பெண்ணை கட்டினால் மட்டும் , என் மானம் காத்தில் பறக்காது என்று கேட்டலே.. அதுக்கு உண்டான பதில் இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லோருக்கும் தெரிந்து விடும்..” என்று சொன்னவன்.
தன் அன்னையை பார்த்து.. “ அம்மா அந்த வீட்டுக்கு போகும் பொறுப்பை உங்களை நம்பி தான் விடுகிறேன்.. என் நம்பிக்கையை காப்பத்துவீங்க என்று நம்புறேன்.. எல்லாம் சரியா நடக்க வேண்டும்..” என்று சொல்லி விட்டு தன் பி.ஏ தீபக்கை பேசியில் அழைத்து கொண்டே..
“ம் எல்லோரும் வந்துட்டாங்களா..? “ என்று சொல்லி கொண்டே வெளியில் நடந்து செல்பவனை கோபத்துடம் முறைத்து பார்த்த வனிதா..
அதே கோப முகத்தோடு அனைவரையும் பார்த்து.. “ அவர் வயதுக்கு கூட மரியாதை தராது பேசிட்டு போகிறார்.. நீங்க பாட்டுக்கு அவரை எதிர்த்து பேசாது இருக்கிங்க..?
எப்படி அந்த பெண் இங்கு வர முடியும்…? அதுவும் நான் இங்கு இருக்கும் போது..? எங்க அம்மாவுக்கு இது தான் தாய் வீடு..
அப்பாவால் தான் அம்மாவுக்கு பிரச்சனை.. அவங்க மனது ஆறுதலுக்கு வந்து போவது அம்மா வீடான இங்கு தான்... இங்கும் அந்த பெண் இருந்தால், அம்மாவுக்கு வேதனை ஆகாதா..?” என்று வனிதா கேட்ட அனைத்தும் கேள்விகளும் நியாயமான கேள்விகள் தான்..
ஆனால் கேட்கும் நபரிடம் அந்த நியாயம் இல்லையே.. அதையே தான் வைதேகியும் கேட்டார்…
“ எங்களுக்கு மட்டும் அந்த வீட்டில் இருந்து பெண் எடுக்க ஆசையா என்ன…? எங்களை இந்த நிலைக்கு நிறுத்தி வைத்து இருப்பது யார்..? .
நியாயப்படி பார்த்தா நான் தான் உங்க மீது எல்லாம் கோபபடனும்..? சொந்தம் எல்லா வகையிலும் நெருங்கிய சொந்தம் ஆனதால் வாயை மூடிட்டு அமைதியா போகும் படி ஆகி விட்டது…” என்று இத்தனை நேரம். இத்தனை நேரம் என்ன..?
எப்போது அனிதா தான் தன் மருமகள் என்று இந்த வீட்டில் பேச்சு ஆரம்பமானதோ அன்றில் இருந்து மனதில் வைத்து புழுங்கி கொண்டு இருந்த கோபத்தை வார்த்தைகளாக்கி கொட்டி விட்டார்…
வனிதா அப்போதும் விடாது.. “ ஓ அப்போ அந்த வீட்டு பெண் இங்கு வருவதற்க்கு நாங்க தான் காரணம் என்று சொல்ல வர்றிங்களா…?” என்ற தன் தங்கை மகள் கேள்வியில் இப்போது வெங்கட பூபதிக்கே கோபம் வந்து விட்டது…
“ ஏன் அதை இல்லேன்னு கூட நீ சொல்லுவியா..? உன் தங்கை செய்த காரியம் வெளியில் சொல்லும் படியா இருக்கு..? அதை வெளியில் சொன்னா அக்காவானா உன்னையும் தான் தப்பா பேசுவாங்க..? எல்லாம் பார்த்துட்டு தான் நான் அமைதியா போக வேண்டியதா ஆகிடுச்சி..
இதே வெளியில் பெண் நிச்சயம் செய்து இது போல் ஒரு காரியம் செய்து இருந்தா, அவங்க வீட்டையே சந்தி சிரிக்க வைத்து இருப்பேன்” என்று கோபத்துடன் பேசினார்..
அவர் இவ்வளவு பேசியும் வனிதா நான் அடங்குவேனா என்பது போல் தான் அவளின் அடுத்த பேச்சும் இருந்தது..
“அனிதா செய்தது தப்பு தான்.. நான் ஒன்னும் இல்லேன்னு சொல்லலேயே.. நாளை திருமணம் நடக்க வேண்டும் இல்லேன்னா நம் குடும்பம் மானம் வெளியில் போகும்.. சரி அதுவும் ஒரு வகையில் சரி தான்..
ஆனால் பெண்ணை கட்ட வேறு பெண்ணா சர்வாவுக்கு கிடைக்கல.. ஏன் பெரிய மாமா கூட எதோ பெண் இருக்கிறதா..? சொன்னார்.. என்னவோ ஊரிலேயே அந்த பெண் மட்டும் தான் இருப்பது போல பேசிட்டு போறார்.. எனக்கு என்னவோ மகி கேட்டது போல அந்த பெண்ணை அவர் முதல்லேயே பார்த்து இருப்பார் என்று தான் தோன்றுக்கிறது..” என்ற வனிதாவின் பேச்சு எது சரியோ இல்லையோ.. கடைசியாக சொன்ன உலகத்தில் அந்த பெண் தான் இருப்பது போல் சர்வா ஏன் இந்த முடிவை எடுத்தான் என்று நினைத்த வெங்கட பூபதி…
“ அது தான் இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்து விடும் என்று சொல்கிறான் இல்ல.. பார்ப்போம்..” என்று அவர் சொல்லி முடிக்கவும், மகேஷ்வரன் யோசனையுடன் தன் பேசியில் வந்த மெசஜை பார்த்த வாறு..
“ சர்வா பி ஏ.. நியூஸ் சேனல் போட சொல்றான்..” என்று சொல்லிக் கொண்டே அங்கு இருக்கும் டி.வியை இயக்கினான்..
டி.வி திரையில் நேரடி ஒலிப்பரப்பாக சர்வேஷ்வரன் பேசுவதை புகழ்பெற்ற ஒரு சேனல் ஒலிப்பரப்பு செய்து கொண்டு இருந்ததை, சர்வாவின் வீட்டில் இருப்போர் மட்டும் அல்லாது..
பாதி அலங்காரத்தில் இருந்த மான்சியின் அறைக்கு ஓடி வந்த நவீன், அவள் அறையில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியை இயக்கியவனை குழப்பத்துடன் பார்த்த மான்சிக்கு விடை அந்த தொலைக்காட்சியில் பேசிய சர்வேஷ்வரன் கொடுத்தான்..
“ எதுக்கு திடிர் என்று எங்களை அழைத்திங்க ..? புது மருந்து ஏதாவது மார்க்கெட்டில் இறக்க போறிங்களா..?” என்று அந்த ***** தொலைக்காட்சியின் நிரூபர் கேட்டார்..
“ முதலில் நான் அழைத்த இரண்டு மணி நேரத்தில் என்னை சந்திக்க ஒத்துக் கொண்டு என் இடத்திற்க்கே நீங்க வந்ததிற்க்கு என் நன்றியை முதலில் நான் தெரிவித்து கொள்கிறேன்..” என்று சொல்லி தன் இரு கை கூப்பி வணங்கியவனை மான்சி அப்போது தான் உற்று நோக்கினாள்..
பின் சர்வேஷ்வரன் .. “ இந்த சந்திப்பு என் தொழில் பற்றியது கிடையாது.. இது என் தனிப்பட்ட சந்திப்பு.. நாளை என் திருமணம்..
இதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய தேவை இல்லை.. ஏன் என்றால் உங்களுக்கும் அழைப்பு வந்து இருக்கும்..” என்று சரளமாக பேசிக் கொண்டு வந்த சர்வேஷ்வரன் கொஞ்சம் தயங்கி மீடியா ஆட்களை பார்த்தான்..
அவனின் அந்த பார்வையில் வந்து இருந்தோர்க்கு பர பரப்பு கூட. “ என்ன சார் என்ன பிரச்சனை..” என்று ஆவளாக கேட்டவர்களை சர்வேஷ்வரன் புரியாத ஒரு பார்வை பார்த்தவன், பின் தன் பார்வையை மாற்றிக் கொண்டவனாக..
“ இது பிரச்சனை ஆக கூடாது என்று தான் நான் உங்களை இங்கு அழைத்து பேசிக் கொண்டு இருப்பது.. நாளை என் தாய் மாமன் மகளோடு திருமணம்.. அது உங்க எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான்..
ஆனால் என் மாமன் மகளின் எந்த மகளோடு திருமணம்..? அதில் தான் கொஞ்சம் என் வீட்டு ஆட்கள் குழம்பி போய் விட்டார்கள்.. இல்லை நான் தெளிவாக சொல்லவில்லையா..? தெரியவில்லை..
இதுவும் தெரியும்.. நான் மூன்று மாதம் கழித்து இன்று தான் இந்தியாவுக்கு வந்தேன் என்பது… போகும் போது என் வீட்டில் மாமா பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டு, என் தாய் மாமாவிடம்..
உங்கள் சின்ன பெண்ணை எனக்கு கொடுங்க…என்று அவரிடமும் சொல்லி விட்டு, ஜெர்மனி சென்று விட்டேன்.. என் பழக்கம் எப்போதும் தொழில் என்று இறங்கி விட்டால் வீட்டை மறந்து விடுவது..
இனி அது போல் இருக்க கூடாது என்பதை இன்றைய நிகழ்வு எனக்கு சொல்லி கொடுத்த பாடம்…” என்று சர்வேஷ்வரன் பேச பேச மீடியா அவன் முகத்தை மட்டும் அருகில் காட்டி அடுத்து என்ன சொல்ல போகிறான் என்று தொலைக்காட்சியை பார்ப்பவர்களுக்கு மட்டும் அல்லாது, அதை நேரிடையாக உள்வாங்கி கொண்டு இருந்த மீடியா ஆட்களுமே, ஒரு வித ஆர்வத்துடன் அவன் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தனர்..
“ நான் சொன்ன மாமன் மகளை அனிதா என்று புரிந்து கொண்டதால் இதோ என்னை இங்கு உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது..” என்றதில் அங்கு இருந்த அனைவரும் குழம்பி போய் விட்டனர்..
அங்கு இருந்த ஒருவர்.. “ சார் நீங்க உங்க வீட்டில் இருப்பவர்களை குழப்பினீர்களா என்று எனக்கு தெரியல.. ஆனா எங்க எல்லோரையும் நல்லா குழப்பி விடுறிங்க..
உங்கள் தாய் மாமாவுக்கு இரண்டு பெண்கள்.. பூபதி குடும்பத்தை எப்படி அனைவருக்கும் தெரியுமோ, அதே போல் தான் சூர்ய நாராணனை சாரையும் தெரியும்.. இரண்டு பெண்ணில் முதல் பெண்ணை உங்க பெரிய தந்தை மகனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்ட பின், இருப்பது ஒரு பெண் தான்.. இதில் என்ன குழப்பம் வந்து விட்டது..??” என்று அந்த நிருபர் கேட்டதற்க்கு..
“ நான் அவருடைய சின்ன மகள் மான்சியை திருமணம் செய்ய கேட்டேன்..” என்ற அவனின் பதிலில்..
அங்கு இருந்தவர்கள் அனைவரும் மான்சியா யார்…? என்று ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டதை ஒரு திருப்தியோடு பார்த்த சர்வேஷ்வரன், தன் பேச்சை தொடர்ந்தான்…
“ ஆம் என் மாமா சூர்ய நாரயணனை பத்தி தெரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.. அவருக்கு இன்னொரு குடும்பம் இருப்பது.. அவர் பெண் தான் மான்சி..” என்றதில் அங்கு இருந்தவர்கள் இன்னும் அதிர்ந்து போய் விட்டனர்..
“ எப்படி..? எப்படி..இது சாத்தியம்..?” என்பது போல் கேட்டவர்களை பார்த்து..
“ காதல் அனைத்தையும் சாத்தியம் ஆக்கும்…” என்ற அவனின் பதிலில் அங்கு இருந்தவர்களோடு தொலைக்காட்சியில் அவன் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்த மான்சிக்கு தான் அதிகம் அதிர்ச்சியானது..
“ காதலா..?” என்று நெஞ்சில் மீது கை வைத்து கொண்டு அதிர்ந்து போய் விட்டாள்..
அவளை அலங்கரித்துக் கொண்டு இருந்த அழகு நிலைய பெண்கள்.. “ உங்கள் அழகுக்கு பார்த்த உடன் அனைவருக்கும் உங்களை பிடித்து விடும் மேடம்..” என்றவர்களிடம் அவள் என்ன என்று சொல்லுவாள்..
“ பார்த்தால் தானே பிடிக்க..” என்று..
சர்வேஷ்வரனின் பேச்சில் இங்கு அவன் வீட்டு ஆட்களும் அதிர்ந்து தான் போயினர்.. வனிதா..
“ நான் சொல்லலே.. பார்த்திங்களா காதலாம்..” என்று முகத்தை தோளில் இடித்துக் கொண்டு பேசியவளுக்கு, யாரும் பதில் அளிக்காது தொலை காட்சியையே பார்த்திருந்தனர்..
நிருபர்கள்.. “ அது எப்படி அந்த பெண்ணை..?” என்றவர்களின் கேள்விக்கு,..
“எனக்கு நீங்க கேட்டது புரியல..” என்று புரிந்தும் புரியாதது போல் அவர்களை பார்த்து கேள்வி எழுப்பினான்…
அதற்க்கு “ இல்ல அவர் உங்க அத்தைக்கு துரோகம் செய்து விட்டு, அவர் இன்னொரு குடும்பம் அமைத்து கொண்டதற்க்கு, உண்மையா உங்களுக்கு கோபம் வரனும்…
ஆனால் நீங்கள் என்ன என்றால், அந்த வீட்டு பெண்ணை கல்யாணம் செய்துக்க போறிங்க என்று சொல்வது நம்பும் படியா இல்லையே..” என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு சர்வேஷ்வரன்..
“ கண்டிப்பா நீங்க சொல்வது சரி தான்.. நான் கோபப்பட்டு இருக்கனும் தான்… நானும் ஒத்து கொள்கிறேன்.. ஆனால் யார் மீது கோபப்படனும்.. என் மாமா மீது.. இல்லேன்னா அவருக்கு ஒரு குடும்பம் இருக்கு என்று தெரிந்தே அவரோட வாழ்க்கையை பகிர்ந்து கொண்ட மான்சியின் அம்மா மீது..
என் மாமா மீது கோபம் என்றால், அவரின் மூத்த மகளே எங்க வீட்டுக்கு மருமகளா வந்து இருக்க முடியாதே… அவரை மன்னித்து அவங்க வீட்டில் பெண் எடுத்தோம்.. அதே போல் தான் துளசி அவங்க மகள் மான்சியை பார்த்ததும் பிடித்து விட்டது…” என்றவனை மேலும் பேச விடாது ஒருவர்..
“ நீங்க அவங்களை எங்கு முதலில் பார்த்திங்க என்று சொல்ல முடியுமா..?” என்ற கேள்விக்கு ஒற்றை கண்ணை மூடியவன் பின்..
“ அது பர்சனல்.. இதோ இப்போ நான் உங்களை எல்லோரையும் அழைத்து பேசியதற்க்கு காரணம், பெண் மாறும் போது நீங்க பாட்டுக்கு கண்ட படி மத்தவங்க முன் என்னை நிறுத்திட கூடாது இல்ல அதுக்காக தான்.
இதோ ஜெனியூனா நான் உங்க எல்லோரையும் கூப்பிட்டு பேசும் போதே, உங்களுக்கு ஆயிரெத்தெட்டு சந்தேகம்.. அது எப்படி..? இது எப்படி..? என்று..” என்று சொல்லி முடித்தவன் மீண்டும் அனைவரையும் பார்த்து கை கூப்பியவன்..
“ இதோடு முடித்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.. உங்களுக்கே தெரியும்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் என் வரவேற்ப்பு.. அதற்க்கு நான் கொஞ்சமாவது ரெடியாகி நின்றால் தான் மேடத்துக்கு கொஞ்சமாவது நான் மேட்ச் ஆவேன்…
ஏன்னா மேடம் சாதரணமாவே அழகா இருப்பாங்க ….. இப்போ கல்யாண விசேஷ அலங்காரத்தில் இன்னும் ஜொலிப்பாங்க.. போய் நானும் முகத்துக்கு பட்டி டிங்கிரி எல்லாம் போட்டா தான் நான் அவங்க பக்கத்துல சும்மா பார்க்கும் படியாவது இருப்பேன்..” என்றதில் அங்கு இருந்த பெண் நிருபர் ஒருவர்..
“ என்ன சார் இப்படி சொல்றிங்க… உங்க பேட்டின்னா எங்க பத்திரிக்கையில் பெண்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு வர ஆசைப்படுவோம்.. உங்க அழகை அருகில் இருந்து பார்க்க வேண்டி… என்று வழிந்தவளிடம்..
“ நன்றி..” என்று சொல்லி விட்டு அனைவரிடம் இருந்தும் மீண்டும் ஒரு முறை விடைப்பெறுவது போலான அந்த காட்சியோடு அவனின் நேரடி ஒலிப்பரப்பு ஒரு முடிவுக்கு வந்தது…
அவனின் அந்த நேரடி ஒலிப்பரப்பை பார்த்த வனிதா ..
“ பார்த்துங்களா பார்த்துங்களா.. “ என்று கத்த அவள் கத்தலில் யாருமே காதில் வாங்காது சர்வா ஏன் அந்த பெண்ணை மணக்க வேண்டும் என்று சொன்னான் என்பது அனைவருக்கும் புரிந்து போனது..
யாருக்கும் பாதிப்பு இல்லாது… யாரை பற்றியும் தவறாக பேச்சு வராது முடித்துக் கொள்ள பார்த்து இருக்கிறான்… என்று..
இங்கு மான்சி அவனின் பேச்சை கேட்டதில் முதலில் அதிர்ந்து போனவள் பின் தன் அன்னை பற்றிய பேசிய பேச்சில் குன்றி போனாள்.. இந்த குன்றல் இதோடு நின்று விடாது.. இது தொடரும் என்பது தெரிந்தே பெண் அழைப்புக்கு தயாராகினாள்…
இங்கு சர்வேஷ்வரன் சொன்னதற்க்கு ஏற்ப உறவு முறை பெண்களை அழைத்து கொண்டு முன்னவே அனிதாவுக்கு பெண் அழைக்க என்று வரிசை தட்டு அனைத்திற்க்கும் ஏற்பாடு செய்து விட்டதால், காலம் தாழ்த்தாது வைதேகி மான்சி வீட்டுக்கு செல்ல தான் தயாராவதற்க்கு முன் தன் ஒரகத்தி ரேவதியை பார்த்து..
“ நீங்களும் வர்றிங்களா அக்கா..?” என்ற வைதேகியின் கேள்விக்கு, ரேவதி அனுமதி வேண்டி தன் கணவன் முகத்தை பார்த்தார்..
அங்கு கிடைத்த ஒப்புதலில்.. “ வர்றேன்..” என்று சொல்லி முறையாக தங்கள் வீட்டின் அடுத்த மருமகளை அழைக்க துளசி வீட்டுக்கு சென்றனர்..
இங்கு வனிதா இந்த திருமணத்திற்க்கும் எனக்கும் சம்மந்தமே இல்லாதது போல் தன் அறையில் போய் அடங்கி கொண்டாள்..
அவளை யாரும் வா என்றும் அழைக்காது அனைத்தும் சரியாகவே நடந்து கொண்டு இருந்தன.. சூர்ய நாரயணன் இந்த இடைப்பட்ட நேரத்தில் தங்கள் மருத்துவமனைக்கு சென்று தன் மனைவி தன் மகளை பார்த்தார்..
மனைவிக்கு அனைத்தையும் சொன்னவர் சர்வேஷ்வர் தொலைக்காட்சியில் பேசியதையும் சேர்த்து சொன்னதால், சூழ்நிலை உணர்ந்தார் தான்.
எனினும் அனைத்தும் தன்னை விட்டு போவது போல்.. அவர் உணர்ந்தார்.. அதில் தவறும் கிடையாது.. முதலில் தன் கணவனை துளசிக்கு மொத்தமாக வாரி கொடுத்து விட்டார்..
ஆம் மொத்தமாக என்று தான் சொல்ல வேண்டும்.. இதோ அடுத்து தன் தாய் வீட்டை அவள் மகளுக்கு கொடுக்கிறாள்.. முன்னதும் சூழ்நிலை.. பின்னதும் சூழ்நிலை.. என்ன காசு பணம் இருந்தும் என்ன பயன்…?
தன் கணவன்.. தன் தாய் வீடு என்று இல்லாது போன பின் என்று ஒரு விரக்த்தி புன்னகை சிந்தியவள் கண் மூடியவளின் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே…
சூர்ய நாரயணன்.. “ எனக்கு வேறு வழி தெரியல பத்து..” என்ற அவரின் பேச்சில் கண் முழித்து அவரை பார்த்தவள்..
“ ஆமாம்.. ஆமாம் நடந்து முடிந்த எல்லாத்துக்கும் வேறு வழி இல்லாது தான் நடந்து முடிந்தது.. இதோ நடப்பதும், வேறு வழி இல்லாது தான் நடக்க போகிறது…” என்று மனைவியின் பேச்சில்..
“ பத்து நீ சொல்லி தான்..” என்று ஏதோ பேச்சை ஆரம்பித்தவரின் பேச்சை கை கொண்டு தடுத்து விட்டவள்..
“ எல்லாத்துக்கும் ஒரு சாக்கு… இதே என் நிலையில் நீங்கள் இருந்து, உங்க நிலையில் நான் இருந்து நான் அப்படி நடந்துக் கொன்டு இருந்து இருந்தால், எனக்கு இந்த சமூகம் வேறு பெயர் வைத்து இருக்கும்..
ஆனால் நீங்க இன்னும் பெரிய மனித தோரணையில் தான் இன்னை வரைக்கும் சமூகத்துக்கு முன்னாடி சுத்திட்டு இருக்கிங்க.. இதோ தொடுப்பில் மகளையும் எங்க வீட்டுக்குள் அழைத்து வந்து விட்டிங்க..” என்ற பத்மாவதியின் பேச்சை அமைதியாக குற்ற உணர்வோடு கேட்டுக் கொண்டு இருந்த சூர்ய நாரயணன்..
பத்மாவதி கடைசியாக உபயோகித்த தொடுப்பு என்ற வார்த்தையில்..
“ பத்து என்ன பேச்சு இது அசிங்கமா..தொடுப்புன்னு.. உடம்பு சரியில்லேன்னு கம்முன்னு இருக்கேன்..” என்ற சூர்ய நாரயணன் பேச்சில்..
பத்மாவதி.. “ அதே உடம்பு சரியில்லாததால் தான் நானும் கம்முன்னு இருக்க வேண்டியதாக ஆகிடுச்சி.. சரி சரி இன்னும் கொஞ்ச நேரத்தில் பெண் அழைப்பு ஆரம்பித்து விடுவாங்க.. சொந்த குடும்பத்தை தான் அம்போன்னு விட்டு விட்டிங்க.. அந்த குடும்பத்து பெண்ணையாவது கரையேத்துங்க..” என்ற பத்மாவதியின் பேச்சில்..
“ ஏன் பத்து இப்படி சொல்ற.. நான் நம்ப குடும்பத்தை பார்த்து கொள்ளவில்லையா..?” என்ற கேள்வியில்..
“ நான் இல்லேன்னு சொல்லவில்லை.. ஆனால் இன்னும் ஒரு குடும்பத்தையும் நீங்க பார்த்து கொண்டதால், நம்ம பெண்களிடம் எதற்க்கும் வாய் திறவாது போய் விட்டது.. முதலில் உங்க கணவனை பாருங்க.. பின் என்னை பாருங்க என்று அவங்க சொல்லும் போது நான் என்ன சொல்ல.. .
சொல்லட்டா.. எல்லாம் சொல்லட்டா பெத்த பெண்களிடம் சொல்ல கூடியதா..? சொல்லுங்க..” என்ற மனைவியின் பேச்சில், சூர்ய நாரயணனால் வாய் அடைத்து போய் விட்டார்..
பின் இவ்வளவு பேசிய பேச்சுக்கு பத்மாவதிக்கு கொஞ்சம் மூச்சு வாங்கவும் கலைப்பில் கண் மூடிக் கொண்டாள்.. இனி பேசி என்ன பிரயோசனம்..? என்றதாலும் இருக்கலாம்..
அப்போது சூர்ய நாரயணனின் கை பேசிக்கு அழைப்பு வர அவர் கை பேசிக்கு வைதேகி தான் அழைத்தது…
“ நான் அங்கு போறேன் அண்ணா.. நாங்க போகும் போது நீங்க அங்கே இருந்தா நல்லா இருக்கும்..” என்றதில் தயங்கிய வாறு தன் மனைவியின் முகத்தை பார்த்த வாறே..
“ நான் இப்போ ஆஸ்பிட்டலில் தான் இருக்கேன்மா. நீங்க போறதுக்குள் அங்கு போயிடுவேன்.. நீ கவலை படாதே..” என்று சொன்னவர்..
பின்.. “ யார்..? யார்..? போவது..?” என்ற சூர்ய நாரயணன் கேள்விக்கு,
“ நான் ரேவதி அக்கா.. அப்புறம் பெரியம்மா..” என்று இன்னும் நிறைய பெயரை அவர் தங்கை வைதேகி சொல்லிக் கொண்டு போனாலும், நானும் ரேவதி அக்காவும் என்றதில் சூர்ய நாரயணனுக்கு கொஞ்சம் நிம்மதி ஆயிற்று..
“ சரிம்மா சந்தோஷம்.. “ என்று சொல்லி பேசியை அணைத்து விட்டவர் தன் மனைவியின் முகம் பார்த்தார்..
அவள் கண் முழிக்காது இருக்கவும்.. சோர்வில் தூங்குகிறாள் என்று நினைத்து கிளம்பி போனவரின் முதுகை கண் திறந்து பார்த்த பத்மாவதியின் முகம் அப்போது அவ்வளவு சோகத்தை பூசிக் கொண்டு இருந்தது…
பத்மாவதியால் கண்ணை தான் மூட முடியும்.. காதை.. அது பாட்டுக்கு கணவன் பேசுவது காதில் விழுந்த வண்ணம் தானே இருந்தது…
அதுவும் தன் சின்ன அண்ணியோடு பெரிய அண்ணியும் பெண் அழைக்க போகிறார்கள் என்று தெரிந்ததில், இதே அவர்கள் கூட பிறந்தவர்களுக்கு என் நிலை வந்து இருந்தால், அந்த வீட்டுக்கு அவர்கள் போவார்களா..? என்ன தான் இருந்தாலும் நான் நாத்தனார் தானே…
யாருக்கும் மன நிறைவு இல்லாது ஒரு வித சங்கடத்தோடு தான் பெண் அழைப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றுக் கொண்டு இருந்தது…
வைதேகி சொன்னது போல் அவர்கள் எல்லாம் துளசியின் வீட்டுக்கு செல்லும் முன்பாக சூர்ய நாரயணன் அங்கு வந்து விட்டார்..
வந்தவர் பெரியவர் என்ற முறையில் சபையில் நிற்க வேண்டிய வேலை மட்டும் தான் அவர் செய்யும் படி இருந்தது..
ஏன் என்றால் மற்ற அனைத்தையுமே நவீன் செய்து முடித்து விட்டு இருந்தான். எப்போதும் அந்த வயதிற்க்கு உரிய துடுக்கு தனத்தோடு இல்லாது ஒரு இறுக்கத்தோடு இருப்பவன் இன்று தன் சகோதரியின் திருமணத்திற்க்கு மனது நிறைது இருந்ததால், அவன் முகம் தன்னால் பொலிவு பெற்று வந்தவர்களை வா என்று அழைத்த அந்த பாங்கில் பூபதி குடும்பத்தினர் கொஞ்சம் குளிர்ந்து தான் போய் விட்டனர்…