அத்தியாயம் 9
சூர்ய நாரயணன் அவர்கள் அருகில் சென்றதும் , இவ்வளவு நேரமும் ஆவேசத்துடன் பேசிக் கொண்டு இருந்த மான்சியின் உதடுகள் தன்னால் மூடிக் கொண்டது…
அருகில் வந்த சூர்ய நாரயணன் தான் இருவரின் முகத்தையும் மாறி மாறி பார்த்தவர்… பதட்டத்துடன் சர்வேஷ்வரனிடம்..
“ என்ன சர்வா..? என்ன..? என்று பதறியவாறு கேட்டார்..
ஏன் என்றால் தூரம் இருந்து பார்த்தவருக்கு, மான்சியின் கோபமான முகத்தையும், சர்வேஷ்வரனின் அதிர்ந்த முகம் தான் அவர் கண்ணுக்கு தெரிந்தது..
இதில் மான்சி வேறு தன்னை கை காட்டி பேசவும், துளசியையும், தன்னையும், வைத்து தான் பேச்சு நடை பெறுகிறதோ என்ற பயத்தில் தான் விரைந்து வந்தது..
அவர் கணிப்பும் ஒருவகையில் சரி தானே.. அவள் பிறப்பை வைத்து தவறாக பேச்சு வருகிறது என்றால், அது இவரோடான உறவால் தானே..
சூர்ய நாரயணன் கேள்விக்கு மான்சி பதில் அளிக்க வில்லை.. பதில் என்ன அவரை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.. சூர்ய நாரயணனின் பதறின முகத்தை பார்த்து சர்வேஷ்வரனுக்கு தான் என்னவோ போல் ஆனது..
“ ஒன்றும் இல்லே மாமா. சும்மா தான் பேசிட்டு இருந்தேன்.. ஏன் என் மனைவியிடம் நான் பேச கூடாதா..?” என்று சர்வேஷ்வரன் கேட்டான்..
“ அய்யோ நான் அதை பத்தி எல்லாம் கேட்கல சர்வா..” என்று ஏதோ சொல்லி சமாளித்தார்.. பின் அவர் எதற்க்கு பயந்து விரைந்து வந்தேன் என்று சர்வேஷ்வரனிடம் சொல்லவா முடியும்..?
பின் பால் பழம் எடுத்துக் கொண்டு பெண்கள் வரவும் அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாலும், தன் கண் பார்வையில் அவர்கள் படும் தூரத்தில் நின்றுக் கொண்டு தான் மற்றவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தார் சூர்ய நாரயணன்..
என்ன தான் மான்சியை இனி துளசியின் மகள் என்று நினைக்க கூடாது.. அது தன் வாழ்க்கையை தான் பாதிக்கும்.. இந்த திருமணத்தை அவன் நாடக திருமணமாக எல்லாம் நடத்தவில்லை…
இந்த ஜென்மத்திற்க்கு இவள் தான் தன் மனைவி என்ற முடிவோடு தான் சர்வேஷ்வரன் அனைத்து திட்டத்தையும் தீட்டியது… அதனால் தான் மான்சியோடு திருமணம் செய்யலாம் என்ற முடிவு எடுத்த உடன் தான் எப்போதும் நாடும் டிடெக்டீவிடம் மான்சியை பற்றய தகவல்களை திரட்ட கேட்டது..
அதுவும் குறிப்பாக அவளுக்கு காதல். அது போலானது ஏதாவது இருக்கிறதா…? என்பதை முக்கியமாக கேட்டான்.. ஏன் என்றால் தன் கல்யாண வாழ்க்கையை வெற்றியாக்க தான் அவன் முயன்றான்…
மான்சியை பற்றி அது போல் ஒன்றும் இல்லை என்று தெரிந்த பின் தான் மற்ற ஏற்பாட்டை செய்தான்.. செய்யும் போதே மான்சிய இனி தன் மனைவியாக மட்டும் தான் பார்க்க வேண்டும்.. துளசியோடு மகளாக இருக்க கூடாது என்று..
இருந்தும் இதோ இப்போது தன் மாமா தங்களையே கவனித்துக் கொண்டு இருப்பதை பார்த்து, அவர் தனக்காக இங்கு பார்க்கவில்லை..
இதே நான் இவர் பெண் அனிதாவை திருமணம் செய்து இருந்து இருந்தால் கூட.. இங்கு வந்து இருந்து இருப்பாரா..? என்பது கூட சந்தேகம் தான்.. அப்படி வந்து இருந்தாலும், தங்களையே கவனித்துக் கொண்டு இருந்து இருக்க மாட்டார் என்பது அவனுக்கு நிச்சயமே..
அப்போ இப்போது மட்டும் ஏன் அவர் பார்வை இங்கேயே இருக்கிறது என்று புரியாது போகுமா என்ன…? எல்லாம் மான்சிக்காக தான்..
அதை உணர்ந்த நொடி, தன்னால் இவர் துளசியின் மகள் மீது காட்டிய அக்கறையில், பாதி அளவு தான் பெற்ற பெண்கள் மீதி காட்டி இருந்தால், நன்றாக இருந்து இருக்கும் என்று தான் நினைத்தான்…
.இவர்கள் சடங்கு அனைத்தும் முடிவடையும் தருவாயில் தான், கீதாஞ்சலி, விக்ரம் தம்பதியரும் பூபதியின் வீட்டுக்கு வந்தனர்..
வந்தவர்களை சர்வா மான்சி அமர்ந்து இருந்த இருக்கையின் எதிரில் அமர வைத்து, தாய் வீட்டில் செய்யும் சம்பிரதாயங்கள் செய்ய ஆரம்பித்தனர்..
அதை அந்த தம்பதியர்கள் ஆத்மார்த்தமாக உணர்ந்து ரசித்து செய்து கொண்டு இருந்தனர்…
ஆம் ரசித்து தான்.. விகரம் பால் குடித்த க்ளாஸை கீதாஞ்சலியிடம் கொடுக்க,, அவள் அவன் எந்த பகுதியில் வாய் வைத்து அருந்தினானோ அதே பகுதியை வாய் வைத்து அருந்தி டீப்பா மீது வைத்தாள்…
அதை கவனித்த விக்ரம் அவள் குடித்து முடித்த க்ளாஸை கையில் எடுத்து, அவளின் லிப்ஸ்ட்டிக் கரை படிந்த இடத்தில் தான் வாய் வைக்க.. என்று இருந்தவர்களை சொந்தத்தில் இருந்த பெரியம்மா..
“ என்ன மாப்பிள்ளைக்கு பசி போல… நம்ம பெண் குடித்த பாலை சொட்டு விடாது திரும்ப எடுத்து குடிக்கிறார்… அந்த சமையல் கட்டிலேயே இன்னும் வூட்டு பெண்கள் என்ன செய்யிறிங்க..
இங்கு மாப்பிள்ளையை கவனிக்கிறதை விட்டு விட்டு.. நாங்க எல்லாம்..” என்று சொல்லிய அந்த பெரியம்மாவின் பேச்சு இன்னும் நீண்டுக் கொண்டே போனது என்பது வேறு விசயம்..
ஆனால் இங்கு விக்ரம் அந்த பெரியம்மா பேச்சில் வெட்கத்துடன் தலை குனிந்துக் கொள்ள… மகேஷ்வரன்..
“ என்ன மச்சான் டவல் எடுத்து வரட்டா…?” என்ற கேள்விக்கு..
விக்ரம்.. “ அது எதுக்கு..?” என்று சொல்லிக் கொண்டே கீதாஞ்சலியின் முந்தியை கொண்டு தன் முகத்தை துடைத்துக் கொண்டான்…
அதை பார்த்த மகேஷ்வரன் வெடி சிரிப்பு சிரித்தான் என்றால், சர்வேஷ்வரன் ஒரு சின்ன இதழ் விரிப்பு அவ்வளவே..ஆனால் மான்சி அது கூட செய்யாது குனிந்த தலை குனிந்த வாறே இருந்தாள்..
அவளையே யோசனையுடன் பார்த்துக் கொண்டே தான் மகி விக்ரம் தன் தங்கையுடன் பேசிக் கொண்டு இருந்தான் சர்வேஷ்வரன்..
இவள் இங்கு தான் இப்படி இருக்கிறாளா..? இல்லை எப்போதும் இவள் இப்படி தானா..? என்று.. அவன் நினைத்ததில் இரண்டாமாவது தான் சரி…
அவளின் பதின் மூன்றாவது வயது வரை அவளும் மற்ற குழந்தைகள் போல் தான் தன்னை சுற்றி இருந்தவர்களிடம் பேசுவாள்.. பழகுவாள்..
ஆனால் அதன் பின் பள்ளியில் தன்னோடு பேசிக் கொண்டு இருந்த தோழிகள் தான் பேசினாலும் பேசாது ஒதுங்கி ஒதுங்கி போவதை கவனித்து…
“ நான் என்ன தப்பு செய்தேன்பா…?” என்று அவள் தான் ஏதோ தவறு செய்து விட்டால் போல் என்று கேட்டதற்க்கு அவள் தோழி சொன்ன..
“ நான் இப்போ பெரிய பெண்ணா ஆகிட்டு வர்றேன்னா.. நான் உன் கூட பேசினா என்னையும் மத்தவங்க தப்பா தான் நினைப்பாங்கலாம்.. அதனால உன் கிட்ட பேச வேண்டாம் என்று என் மம்மி சொன்னாங்க…” என்ற சொன்னவள் கூடவே..
“ மேக்ஸ் மட்டும் டவுட் வந்தா யாரும் பார்க்காத போது சொல்லி கொடுக்கிறயா மான்சி..” என்று கேட்டாள்..
அதற்க்கு மான்சி.. “ உன் மம்மி கிட்ட சொன்னா வீட்டிலேயே வந்து ட்யூஷன் எடுக்க ஆள் ஏற்பாடு செய்வாங்க.. “ என்று பேசியது தான் அவளிடம் பேசிய கடைசி பேச்சாக இருந்தது மான்சிக்கு..
அதன் பின் யாரிடமும் சேராது அவள் ஒரு தனித்தீவு போல் தான் அந்த பள்ளி படிப்பில் மட்டும் அல்லாது கல்லூரியின் கடைசி வரை அதை கடைப்பிடித்தாள்…
இதில் அவளுக்கு கிடைத்த நன்மை.. நன்றாக படிக்கும் பெண்ணாக இருந்தவள்.. மிக மிக மிக நன்றாக படிக்கும் பெண்ணாக மாறினாள்..
கணக்கு எப்போதும் அவளுக்கு கை வந்து விடும்.. எப்போது நூற்றுக்கு நூறு தான் எடுப்பாள்.. மற்ற சப்ஜெக்ட்டிலும் நல்ல மதிப்பெண் தான் எடுப்பாள்.. ஆனால் சென்டம் எல்லாம் கிடையாது.. எண்பது.. இல்லை.. தொன்னுற்று சார்ந்து தான் எடுப்பாள்..
அப்படி இருந்தவள் அனைத்திலும் நூறுக்கு நூறு.. ஒரு சிலதில் மட்டும் ஒன்றோ இரண்டோ குறையும்.. எந்த வகுப்பில் மான்சி இருக்கிறாளோ.. முதல் ரேங் அவளாக மட்டும் தான் இருக்க முடியும்..
அந்த அளவுக்கு அவள் தன் தனிமையை படிப்பதற்க்கு செலவிட்டாள்.. வீட்டிலும் அன்னையோடு பேச்சு கிடையாது.. தம்பிக்கு சொல்லி கொடுப்பது.. தான் படிப்பது என்று இருந்ததால், அவள் எப்போதும் மற்றவர்களோடு மிங்கிள் ஆகவே மாட்டாள்…
குறிப்பாக மற்றவர்கள் பேசுவதை உற்று கவனிக்கவே மாட்டாள்.. எங்கு கவனித்தால் தன்னை தவறாக பேசுவது தன் காதில் விழுந்து விடுமோ என்ற பயமும் அதற்க்கு ஒரு காரணம்..
அதே பழக்கத்தில் தான் மகி பேசுவதை கவனிக்காது. இங்கு இருந்து அண்ணா நூலகத்திற்க்கு எப்படி போவது…? பஸ் ரூட் எப்படி…? இல்லை என்றால் ஸ்கூட்டியில் போக எவ்வளவு நேரம் ஆகும் என்று யோசித்துக் கொண்டு இருந்தவளை தான் சர்வஷ்வரன் யோசனையுடன் பார்த்தது…
பகல் சடங்கு முடிந்த பின்… அடுத்து செய்ய இருப்பது இரவு சடங்கு தானே… இரு ஜோடிகளையும் ஒன்றாக அமர வைத்து தான் உணவு பரி மாறினார்கள்..
ஒரு ஜோடி எப்போதும் போல் கல கலத்துக் கொண்டும், காதல் பார்வை வீசிக் கொண்டும்… மற்றவர்கள் பார்க்கவில்லை என்று நினைத்து ஒருவர் இலையில் இருந்து மற்றவர்கள் எடுத்து உண்பதுமாக இருந்தனர் என்றால்,
இந்த ஜோடி எப்போதும் போல் தான் அமைதியாக உணவு உண்டு கொண்டு இருந்தனர்.. அந்த இரு ஜோடிகளையும் ஒருங்கே பார்க்கும் போது சர்வேஷ்வரனின் அன்னை வைதேகிக்கு ஒரு மாதிரி கவலை பிடித்துக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்..
கீதாஞ்சலியும் தன் மகள் தான்.. அவள் இது போல் சந்தோஷமாக இருப்பது ஒரு அன்னையாக அதை பார்த்து வைதேகி மகிழ்ச்சி அடைந்தால் தான்..
ஆனால் தன் மகனும், மருமகளும் ஏதோ கடமையே என்று அனைத்தும் செய்வதை பார்த்து அவர் மனதில் பயம் பற்றிக் கொண்டது..
இவன் ஊருக்கு திருமணம் செய்துக் கொண்டானோ என்று… இன்று இரவுக்கான சடங்கு இருவர் அறையிலும் நடத்த, பூவை கொண்டு அதற்க்கு என்று இருக்கும் ஆட்களை வைத்து அலங்கரித்து கொண்டு இருக்கின்றனர்..
இந்த சடங்கும் இவர்கள் கடமையே என்று தான் கடந்து செல்வார்களோ என்று ஒரு அன்னையாக நினைத்த வைதேகி.. ஒரு மகனிடம் இதை பற்றி எப்படி பேசுவது என்று தயங்கி தயங்கி தான் அனைவருக்கும் உணவை பரி மாறிக் கொண்டு இருந்தார் வைதேகி…
அன்னையின் கவலை தோய்ந்த முகத்தை பார்த்த வாறு உணவை உட்கொண்டு முடித்த சர்வேஷ்வரன்.. கை கழுவியதும்.. தன் அன்னையை தனியே தோட்டத்துக்கு அழைத்து வந்து..
“ என்ன மாம்.. ஒரு மாதிரி இருக்கிங்க..? நம்ம ரிலேட்டீவ் ஏதாவது சொன்னாங்களா..?” என்று கோபத்துடன் கேட்டான்..
“ இல்லடா அது எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை… உறவு முறையை எப்படி சமாளிப்பது என்று எனக்கு தெரியாதா என்ன..? அது ஒன்றும் பிரச்சனை இல்லை…” என்ற அன்னையின் பதிலில்..
“ அப்போ என்ன பிரச்சனை..? எதுவும் இல்லேன்னு சொல்லாதிங்க மாம்… உங்க முகமே சொல்லுது ஏதோ உங்க மனசுல இருந்து உறுத்துவது.. என்ன என்று … சொல்லுங்க..” என்று மகன் அழுத்தமாக கேட்கவும்..
வைதேகி தயங்கி கொண்டே.. “ இல்ல உன் கல்யாணம்..” என்று பேச்சை வைதேகி ஆரம்பிக்கவும்..
சர்வேஷ்வரன்.. “ என்ன மாம் நான் மான்சியை மேரஜ் செய்தது உங்க மனதுக்கு ஒப்பவில்லையா…?” என்று கேட்டான்…
வைதேகி பதட்டத்துடன்.. “ என்ன வார்த்தை இது சர்வா ஒப்பவில்லை… என்று.. அதுவும் அந்த பெண்ணை கல்யாணம் செய்த பின் இது போல் எல்லாம் பேச கூடாது…
என் கவலை… நீங்க இரண்டு பேரும் எல்லாம் கடமைக்கு என்று செய்வது போல் இருக்கு சர்வா…கல்யாணமும் நம்ம குடும்ப மானம் போக கூடாது என்று கடமைக்கு தான் செய்திக்கிட்டியோ…? என்று தான் பயமா இருக்கு சர்வா… “ என்று அன்னை பேச பேச வைதேகியை அணைத்துக் கொண்டவன்..
“ மாம்.. மாம்.. உங்க சன் தொழிலிலேயே தோற்க்க கூடாது என்று நினைப்பவன்… வாழ்க்கையில் தோத்து போயிடுவேன்னா… கவலையே படாதிங்க..
இப்போ இருந்து பத்து மாசத்தில் நான் உங்களை பாட்டியா பதவி உயர்வு கொடுத்துடுறேன்.. இப்போ ஹாப்பியா..?” என்று சொல்லிக் கொண்டே அன்னையின் தோளை பற்றிக் கொண்டு கார்டனில் பேசிக் கொண்டு இருந்தவர்கள் வீட்டை நோக்கி சென்றனர்..
அவர்கள் செல்லவும் தான் அங்கு மறைவில் இருந்த மான்சியால் சுதந்திரமாக மூச்சை இழுத்து விட முடிந்தது…
“ வைதேகி எங்கேன்னு பார்… நேரம் வேறு ஆகுது..” என்று சொன்ன ரேவதி.. அதாவது மான்சியின் பெரிய மாமியார் இவளிடம் சொன்னதால், சர்வா தன் அன்னையோடு முன் பக்கம் சென்றதை பார்த்த மான்சி.. அவர்களை அழைக்க வரும் போது தான்.. சர்வேஷ்வரன்..
வைதேகியிடம்.. “ நான் மான்சியை திருமணம் செய்து கொண்டது உங்க மனதுக்கு ஒப்பவில்லையா…?” என்று கேட்டது…
எப்போதும் மற்றவர்கள் பேசுவதை ஒட்டு கேட்கும் பழக்கம் மான்சிக்கு கிடையாது.. இன்னும் கேட்டால் மற்றவர்கள் பேசுவதை காதில் வாங்காது போவது தான் அவளின் வழக்கம்..
ஆனால் இந்த வார்த்தை தவிர்க்க முடியாது மான்சி கேட்க வேண்டியதாயிற்று…
இப்போது அவர்கள் அருகிலும் செல்ல முடியாது.. திரும்ப போகும் போது பார்த்து விட்டால்.. நான் என்னவோ ஒட்டு கேட்க இவர்கள் பின் வந்தது போல் ஆகி விடுமே என்று அசையாது அப்படியே நின்று விட்டாள்.. .
அவள் நின்றுக் கொண்டு இருந்த இடம் இருட்டாக இருந்ததாலும், அடந்த மரம் பின் அவள் சரியாக வந்த போது தான், சர்வாவின் அந்த பேச்சை கேட்க நேர்ந்ததாலும், அவள் அப்படியே நின்று விட்டாள்..
அவர்கள் அருகில்.. அவர்கள் பேசுவது காதில் விழும் தூரத்தில் நின்ற போது கூட அவர்கள் பார்வைக்கு, மான்சி படாது போனாள்..
அவர்கள் பேச பேச மூச்சு கூட விடாது என்று இழுத்து பிடித்துக் கொண்டு இருந்தவள் அவர்கள் சென்ற பின் தான் விட்டாள்..
சர்வேஷ்வரன் பேசிய ஒப்பவில்லை என்ற வார்த்தையே அவள் காதில் திரும்ப திரும்ப எதிரொலித்தது…
இப்போது முழுமையாக அவள் தன் வேதனையை கூட அனுபவிக்க முடியாது.. இப்போதே செல்வதா..? இல்லை சிறிது நேரம் கழித்து செல்லலாமா…? என்னை தேடுவாங்களா..? என்று அவள் யோசிக்கும் போதே மகேஷ்வரன்..
“ இந்த பக்கம் தான் போனா..” என்ற பேச்சும்..
“ இந்த இருட்டில் எங்கு போனா..?” என்ற வைதேகியின் பேச்சும் காதில் விழுந்தன…
அவர்கள் தன் அருகில் வருவதற்க்கு முன் இவள் அவர்களை நோக்கி விரைந்து போய் அவர்கள் முன் நிற்கவும்..
மகேஷ்வரன் மான்சியை ஆராய்ச்சி பார்வை பார்த்தான் என்றால், வைதேகி.. “ என்னம்மா எங்க என்னை தேடிட்டு இருந்தே… அக்கா சொன்னாங்க நான் தான் உன்னை கூப்பிட அனுப்பினேன் என்று… நான் இந்த பக்கம் சர்வாவுடன் பேசிட்டு இருந்தேன் மான்சி.. “ என்று சொல்லவும் மான்சி பதில் அளிக்காது அமைதியாக இருப்பதை பார்த்து வைதேகி என்ன நினைத்தாரோ ..
“ சரிம்மா வா நேரம் ஆகுது..” என்று சொல்லி மருமகளை அழைத்துக் கொண்டு சென்ற வைதேகியின் பின் சென்ற மகேஷ்வரனின் பார்வை முழுவதும் மான்சியின் மீதே நிலை பெற்று இருந்தன..
வீட்டுக்குள் வந்தவளை இப்போது சர்வேஷ்வரன் அவள் முகத்தையே கூர்ந்து பார்க்க, மான்சிக்கு அவள் அவளாகவே இருக்க முடியவில்லை..
மகேஷ்வரனை மான்சி பார்க்கவில்லை என்றாலுமே, அவன் தன்னையே கவனித்துக் கொண்டு இருப்பதை அவளாள் உணர முடிந்தது…
இதோ இப்போது இவன் தன்னை நேர்க் கொண்டு தன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருப்பதால், தன் முகத்தையே கவனத்துடன் வைத்துக் கொண்டு இருப்பதே அவளுக்கு,ஒரு அயர்வை தந்தது…
என்ன இது..? இதே போல் இருந்தால் எப்படி நான் நானாக இருக்க முடியும்.. என்பது போல் யோசிக்கும் போதே, திரும்பவும் அவளை வைதேகி கீழ் தளத்தில் இருக்கும் ஒரு அறைக்கு அழைத்து சென்றார்…
அது வரையும் கூடவே சர்வா.. மகியின் பார்வை மான்சியை தொடர்ந்ததால், வைதேகி அழைத்து போகும் போது அப்பாடா என்று இருந்த அவளின் மனம்.. அந்த அறைக்குள் போனதும் ஒரு புடவையை கொடுத்து விட்டு, அங்கு இருக்கும் குளியல் அறையை காட்டியவர்…
“ குளித்து விட்டு, இந்த புடவையை கட்டிக்க மான்சி… புடவை கட்ட தெரியும் தானே…?” என்று கேட்ட வைதேகிக்கு..
“ தெரியும்…” என்று மான்சி தலையாட்டவும்..
“ சரி குளித்து விட்டு புடவை கட்டிட்டி இரு…நான் கொஞ்ச நேரத்தில் வந்துடுறேன்.. அங்கு கீதா வேறு.. மாம் மாம் என்று என்னை ஏலம் விட்டுட்டு இருக்கா…. அவளுக்கு எதுக்கு என்றாலும் நான் வேண்டும்..” என்று சலிப்போடு வைதேகி பேசுவது போல் இருந்தாலும், முகத்தில் மகிழ்ச்சி அப்பட்டமாக தெரிந்தது..
பின் இருக்காதா…? மகள் வாழ்க்கையை பற்றி அவருக்கு கவலை கிடையாது.. நேற்றில் இருந்து அனிதாவை பற்றி தெரிந்ததில் இருந்து மகன் வாழ்க்கை பற்றி கவலை பட்டுக் கொண்டு இருந்தவர்…
சர்வேஷ்வரன் மான்சியை திருமணம் செய்ய முடிவு செய்த போதும் கூட.. அவன் வாழ்க்கை என்ன ஆகுமோ..? என்ற கவலை தான்…
அதுவும், இருவரும் இரு வேறு துருவங்களாக இருக்க.. இவன் குடும்ப கவுரவதுக்காக இவன் மகிழ்ச்சியை தொலைத்து விட்டானோ என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்தவரிடம்..
சர்வேஷ்வரன் சொன்ன.. “ பத்து மாதத்தில் நீங்க பாட்டியா ஆகிடுவிங்க..” என்ற வார்த்தையில் அந்த தாயின் மனது ஒரு தெளிவுக்கு வந்து விட்டது… தன் மகன் வாழ்க்கையிலும் ஜெயித்து விடுவான் என்று..
ஆனால் அவருக்குமே தெரியவில்லை பாரேன்.. குடும்ப வாழ்க்கை வெற்றியடைய இருவரும் நினைக்க வேண்டும் என்பதும்.. அதுவும் தாம்பத்தியத்துக்கு மனைவியின் சம்மதமும் வேண்டும் என்பதையும் தான்..
வைதேகி மனதில் இருந்த மகிழ்ச்சியில் மான்சியின் முகம் பாராது வேலை பளூவில் அவளிடம் புடவையை கொடுத்து விட்டு, பக்கத்து அறையில் தயாராகி கொண்டு இருந்த தன் மகளை கவனிக்க சென்று விட்டார்..
ஆனால் கையில் புடவையை வைத்துக் கொண்டு இருந்த மான்சியின் முகத்தில் தான் கலவரம் பூசிக் கொண்டது.. இப்போது எது நடப்பதற்க்கு உண்டான சடங்கு இது என்று தெரியாத அளவுக்கு மான்சி பேதை கிடையாது…
திருமணம் செய்து கொண்ட பின், இதற்க்கு தயங்குவது முறையும் கிடையாது தான்.. ஆனால் அவ்வளவு பழக்கம் இல்லாத ஒருவனிடம்.. அதுவும் சந்தர்ப்ப சூழ்நிலையில் தன் மீது நல்ல அபிப்பிராயம் இல்லாதவனோடு எப்படி…?
டைம் கேட்கலாம் தான்.. ஆனால் ஒத்துக் கொள்வானா..? அது தான் தன் தாயிடம் வாக்கு கொடுத்து இருக்கிறானே… பத்து மாதத்தில் குழந்தை என்று.. இது என்ன மேனி பேக்சரிங்கா.. தயாரித்து கொடுக்க..என்று மனமானது அது பாட்டுக்கு நினைத்துக் கொண்டு இருந்தாலும்,
வைதேகி சொன்னது போல் குளித்து முடித்து அவர்கள் கொடுத்த வெண்பட்டு சேலையை அணிந்து கொண்டு, அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு..
மேலும், தன் மனது யோசிக்கும் பாதையில் அவள் கவனம் சென்று கொண்டு இருந்த போது தான் மீண்டும் வைதேகி மான்சியில் இருந்த அறைக்கு வந்தார்..
வந்தவர் அழகோடு புடவையை கச்சிதமாக அணிந்துக் கொண்டு இருந்த மருமகளின் கன்னத்தை தொட்டு திருஷ்ட்டி கழித்தவர்..
“ அழகா இருக்கே மான்சி… புடவையும் அழகா கட்டி இருக்க.. என் மகள் இருக்காளே.. அவளுக்கு எதுவும் ஒழுங்காவே செய்ய தெரியாது… எல்லாத்துக்கும் நான் வேண்டும்..
நான் செய்தாலும், இது இப்படி இருக்கு .. அது அப்படி இருக்கு.. என்று ஏதாவது குறை சொல்லுவா…” என்று மருமகளிடம் பேசிக் கொண்டே இருந்தவரின் பேச்சை தடை செய்வது போல் ரேவதி அங்கு வந்தவர்..
“ வைதேகி நேரமாகிடுச்சி பார்… ஐய்யர் குறித்த நேரம் போயிட போகுது.. சர்வா அவன் ரூமுக்கு போய் விட்டான் என்று.