Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Minnalin Kathire - 4

  • Thread Author
மின்னலின் கதிரே – 4

கைப்பேசியை வைத்ததும் கொடிமலர் நேராக சென்றது தன் தந்தையிடமே. கதிரவனிடம் மேலும் பேசுவது என முடிவெடுத்தவுடன், இதை மேலும் தன் பெற்றவர்களிடம் மறைப்பது சரியாகப் படவில்லை மலருக்கு. அன்னையிடம் சொல்வதை விட தன் மனதிற்கு நெருங்கிய தந்தையிடம் சொல்ல விழைந்தாள்.

அனைவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவள், பின் தாத்தாவும், அன்னையும் தங்கள் பகல் ஓய்வுக்காக படுக்கச் செல்ல, தன் தந்தையும் செல்லும் முன் அவரிடம் பேச வேண்டும் என உரைத்தாள்.

மகள் இப்படி அழைப்பது வெகு சில சந்தர்ப்பங்கள் தான். முக்கியமாக எதுவோ ஒன்று என அவளின் முகத்தை ஆராய்ந்த ராஜனோ, “என்னம்மா சொல்லு?” என சோபாவில் உட்கார்ந்தபடியே கேட்டார்.

“அப்பா, நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்கப்பா. ஓகே வா?”

மகளின் முன்னறிவிப்பை கண்டு வியந்து, “நீ முதல்ல என்னன்னு சொல்லுடா. ரொம்ப முக்கியமான விஷயமோ?” என்று ஆவலாக வினவினார்.

ஆமோதிப்பாக தலையசைத்து, “அப்பா…. எனக்கு ஒருத்தர…. இல்லப்பா அவருக்கு என்னை பிடிச்சிருக்கு.” என உலரிக் கொட்ட, ராஜனுக்கு தூக்கிவாரிப் போட்டது. அவர் காதலுக்கு நேர் எதிரி இல்லை. ஆனால், மகளிடம் காதலை எதிர்பார்க்கவில்லை! அதுவும் தற்போது எதிர்பார்க்கவில்லை…

தந்தையின் அதிர்ச்சியடைந்த முகத்தை பார்த்து தன் இதயத்தில் எதுவோ இறங்கியது போல உணர்ந்தாள் மலர்.

“அப்பா, நீங்க நினைக்குற மாதிரி இல்லப்பா. இப்போ தான் கொஞ்ச நாளா. இல்லனா நீங்க இத்தனை நாளா எனக்கு மாப்பிள்ளை பார்க்குற வரைக்கும் சும்மா இருந்துருக்க மாட்டேன்பா. முன்னாடியே சொல்லிருப்பேன். இந்த அப்பார்ட்மெண்ட் வைஸ் பெரிசிடண்ட் நேத்து நைட் நீங்க பேசுனீங்கள?”

மலர் பேசப்பேச அதிர்ச்சியை உள்வாங்கிக் கொண்டு, தன் மகள் சொல்வதை காதில் வாங்கி மூளையில் ஏற்ற முயன்றார் ராஜன். ‘வைஸ் பெரிசிடண்ட்’ என்றதும் தன்னையும் அறியாமல் வாய் திறந்தார்.

“யாரு சுகுமாரன்னா?”

“ஆமாம்பா, அவரோட பையன் கதிரவன் தான். இங்க வந்ததிலிருந்து அவரு ஜிம் போகும் போது பார்த்து, பழக்கமாச்சுப்பா. அவருகிட்ட நேத்து தான் பேசுனேன். அதுக்கு முன்னாடி பேசுனது இல்லப்பா. அவரோட தங்கச்சிகிட்ட தான் நிறைய பேசிருக்கேன். பட், எனக்கு பேசுன வரைக்கும் அவர பிடிச்சிருக்குப்பா.

நேத்து அவருகிட்ட அதையும் இன்டேர்க்ட்டா சொல்லிட்டேன்பா. ஈவ்னிங் அவருகிட்ட விலாவரியா பேச வரேன்னு சொல்லிருக்கேன். அது தான்… உங்ககிட்ட முன்னாடியே சொல்ல கூடாதுன்னு இல்லப்பா. எனக்கே சரியா தெரியல நேத்து அவருகிட்ட பேசுற வரைக்கும். அப்பாபாபா… ஏதாவது சொல்லுங்க ப்ளீஸ்…”

ஒரு பெருமூச்சை இழுத்துவிட்ட ராஜன், என்ன சொல்லுவது என தெரியாமல் தடுமாறினார். கொடிமலரோ அவர்கள் சந்தித்துக் கொண்டது முதல் மேலோட்டமாக தன் தந்தையிடம் விளக்கினாள். கூடவே தன் மனதில் உள்ள குழப்பங்களையும் அவள் கூற மறக்கவில்லை!

பல உணர்ச்சிகள் அலைமோத அமர்ந்திருந்த தந்தையின் கைகளை பிடித்து, “அப்பா நான் சொல்றது எல்லாமே உண்மை தான்பா, எதையும் மறைக்கல…” என்று முகத்தை பாவமாக மகள் கூறியதும் தந்தை உடனே மறுத்தார்.

“நீ பொய் சொல்றேன்னு நான் எப்போவுமே நினைக்க மாட்டேன்மா. எனக்கு எல்லாம் டக்னு சொல்லவும், கொஞ்சம் ஷாக்கா இருக்கு அதான்.”

“தாங்க்ஸ்பா. நானே இன்னும் அவர பத்தி முழுசா கேட்டுக்கல. அதெல்லாம் பேசத் தான் ஈவ்னிங் அவர பார்க்க வரேன்னு சொல்லிருக்கேன். நீங்களும் வரீங்களாப்பா என்னோட?”

மலரின் கேள்வியை கேட்டு குழம்பிய ராஜன், “இப்போ எதுக்கு என்னை கூப்பிடுற? நீங்க மட்டும் பார்க்குறதா தான இருந்தீங்க?” என்று கேட்டார்.

“ஆமாம்பா, ஆனா உங்களுக்கும் அவர பார்க்கனும், எல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கனும்னு இருக்கும்லபா. அதான்…”

“எனக்கு எல்லாம் இருக்குமா, ஆனா நீயே இன்னும் முடிவா இல்லாதப்போ நான் என்ன கேட்க? நாளைக்கே எனக்கு ஒத்துவராதுப்பான்னு சொன்னினா நான் என்ன பண்றது? முதல்ல நீ போயிட்டு அவருகிட்ட உனக்கு பேச வேண்டியது எல்லாம் பேசிடு. அவருக்கும் உனக்கும் ஒத்துப் போகுமா பாரு. அப்புறமா, நாங்க எல்லாம் பேசுறது பார்த்துக்கலாம். என்ன முழிக்குற? உங்கம்மா கிட்ட நான் எதையும் மறைக்கிறதா இல்லை. அவகிட்ட கண்டிப்பா நீ திரும்ப வந்ததும் பேசனும், சொல்லிட்டேன்!

அதுக்கு முன்னாடி, எனக்கு நெருடலா இருக்குற விஷயம், நேத்து அவங்கப்பாகிட்ட பேசுறப்போ அந்த பையனை பார்த்தேன். கொஞ்சம் குண்டா இருக்கானேம்மா. உனக்கு ஓகே வா?”

தந்தை கண்டிப்பாக ஒரு முற்போக்குவாதி தான், அவரே இப்படி சொன்னதும் மலரின் முகம் வாடியது. “ஏன்பா குண்டா இருந்தா தப்பா? அவரும் வெயிட் கம்மிப் பண்ணத் தான் பாக்குறாரு. எனக்கு கேரக்டர் தான்பா முக்கியம். இப்போ எல்லாம் கல்யாணம் பண்ணாலும் ரெண்டு பூருக்கும் செட் ஆகுமான்னு தெரியல, அதனால எனக்கு மனசு ஒத்து போனா போதும்னு இருக்குப்பா. உங்களுக்கு பிடிக்கலயாப்பா?”

கொடிமலரின் வாடிய முகத்தை பார்த்ததும், சட்டென்று தன் விளக்கத்தை கூறினார் ராஜன். “இல்லம்மா அப்படியில்ல, குண்டா இருந்தா பிராப்ளம்ஸ் நிறைய வரும்மேன்னு தான் யோசிச்சேன். வேற எதுவுமில்ல.”

மலர் அமைதியாக உட்கார்ந்திருப்பதை பார்த்து, “மினு, நீ முதல்ல அவருகிட்ட பேசிட்டு வா. உங்களுக்கு ஒத்துப் போகும்னா பாரு. உங்க ஃப்யூசர் பிளான்ஸ் பத்தியெல்லாம் பேசுங்க. எல்லாம் ஓகேன்னா சொல்லு, மேல பேசலாம். அதுக்கு முன்னாடி, நானும் அவங்க குடும்பம், பையன் பத்தியெல்லாம் கொஞ்சம் விசாரிக்கிறேன். சரியா?” என்று ராஜன் முடித்து வைக்க, “சரிப்பா” என்று மலரும் எழுந்தாள்.

மாலை ஐந்து மணிக்கு சிறிது தூரத்தில் இருக்கும் ஒரு கஃபேயில் சந்திக்கலாம் என கதிருக்கும் குறுஞ்செய்தி அனுப்பினாள்.

******************************************************************************************

கொடிமலரிடம் பேசி முடித்ததும் கதிரவன் நேராக சென்றது தன் தங்கை வென்னிலாவிடம் தான். “ஹே ஈவ்னிங் வெளிய போலாமா?” அண்ணனின் திடீர் பாசத்தை கண்டு வியந்து, “என்ன திடீர்னு? உன்னோட ஃபிரெண்ட்ஸ் வரலையா?” என்று யோசனையாக வென்னிலா வினவ, “சும்மா தான்.” என்று சமாளித்தான் கதிர்.

“சரி எங்க போலாம்?” என்ற கேள்விக்கு திருதிருவென முழித்தான் கதிர். என்ன சொல்லி சமாளிக்கலாம் என இருந்தவனிடம், “எத்தன மணிக்கு போலாம்?” என மேலும் கேள்வியாய் அடுக்க, “எல்லா அப்புறம் சொல்றேன்.” என்று கூறிவிட்டு இடத்தை காலி செய்தான் தமையன். அங்கேயே நின்றிருந்தால் இன்னும் எவ்வளவு கேள்வியை சமாளிக்க வேண்டுமோ?

தங்கையுடன் செல்வதே அன்னையின் மிகையான கேள்விகளில் இருந்து தப்பிக்கத் தான். திடீரென்று வெளியே நண்பர்களுடன் செல்வது என கூறினால், வீட்டில் கண்டிப்பாக நம்புவது கடினம். அதற்காக தான் தங்கையுடன் செல்வது. ஏற்கனவே இவர்கள் இப்படி செல்பவர்கள் தாம். அன்னையின் கேள்விகளில் இருந்து தப்பிக்க நினைத்தவன், தங்கையின் கேள்விகளில் மாட்டிக் கொண்டான்.

மலர் நேரம், இடம் முடிவு செய்து அனுப்பியதும் தங்கையிடம் சொல்லி, தானும் நாலரை மணிக்கே ரெடியாக இருந்தான் கதிரவன். வென்னிலாவும் தயாராக இருந்ததால் சரியான நேரத்தில் கிளம்பி, அந்த கஃபேயின் பைக் பார்க்கிங் இடத்தில் பைக்கை நிறுத்தினான்.

கண்ணாடி தடுப்புகளின் வழியே, கஃபேயின் உள்ளே அமர்ந்திருந்த கொடிமலரை தேடினான் கதிரவன். மலரும் அப்போது தான் இவர்களை பார்த்தாள். கதிர் கையசைக்க அவளும் மறுப்புறம் கையசைக்க, வென்னிலாவின் தலை சுற்றியது.

“ஹே அது மலர் அக்கா தான? அவங்களுக்கு நீ எதுக்கு கை காமிக்குற?”

வென்னிலாவின் கேள்விக்கு பதில் அளிக்காமல், முகத்தில் ஒரு பெரிய முறுவலுடன் தங்கையை பார்த்த கதிரவன், எதுவும் பேசாமல் இருந்தான். “ஹே பதில் சொல்லு, அவங்க யாருக்கோ வெயிட் பண்ற மாதிரி இருக்கு. நமக்கா வெயிட் பண்றாங்க?” என்று வென்னிலா படபடவென பொரியத்துவங்க, கதிரவன் அவளை அமைதியாக இருக்கச் சொன்னான்.

“கொஞ்சம் அமைதியா இரு சொல்றேன். ஆமா, அவங்கள தான் பார்க்க வந்திருக்கோம். ஷாக்க குற! எதுக்குன்னா, பொண்ணு பார்க்குறப்போ பையனும் பொண்ணும் பேசிப்பாங்கல. அந்த மாதிரின்னு வச்சிக்கோ.”

வென்னிலாவிற்கு இப்போழுது தலை மட்டுமல்ல, உலகமே சுற்றியது கண் முன்னால்!

“பொண்ணு பார்க்குறதா? என்னடா சொல்ற? அம்மா, அப்பா பேசுனாங்களா? என்கிட்ட எதுவுமே சொல்லலையே?”

“அம்மா, அப்பா பார்க்கல. நானே பார்த்துட்டேன். இப்போ பேசப் போறேன். எல்லாம் ஓகே ஆச்சுனா, அம்மா அப்பா கிட்ட சொல்லனும்.”

“நீயே பார்த்துட்டியா? என்ன விளையாடுறியா?”

வென்னிலாவால் தன் அண்ணன் சொல்வதை நம்பவே முடியவில்லை. அப்படியே நம்பினாலும், அதை ஜீரணீக்க தான் இயலவில்லை! இவன் பொண்ணு பார்த்தால், இவன் அன்னை சம்மதிப்பார்களா என்ன?

வென்னிலாவின் முகத்தை பார்த்து, கொடிமலரை பார்த்தது முதல் நேற்றிரவு நடந்தவற்றை சுருக்கமாக கூறி முடித்தான் கதிரவன். “ஹே ரொம்ப நேரமா வெளிய நின்னு பேசிட்டிருக்கோம். மலர் இங்கயே பார்த்துட்டு இருக்காங்க. வா, உள்ள போலாம்.”

கதிரவன் சொன்னதும் சரியாக பட, நிலாவும் கதிரும் உள்ளே சென்றனர். கொடிமலரும் இவர்கள் அருகே வந்ததும் எழுந்து முறுவலுடன் ஆவலுடன் பார்க்க, வென்னிலா “ஹாய்க்கா” என்று கூறிப் பின் மலரின் கையைப் பற்றினாள். அவ்வளவு தான், மூவருக்கும் என்ன பேசுவது என தெரியாமல் போக, வென்னிலா தான் அந்த அமைதியை உடைத்தாள்.

“நீங்க ரெண்டு பேரும் பேசுங்க, நான் அந்த சைட் டேபிள்ல உட்கார்ந்துருக்கேன். இருண்ணா உடனே எதுவும் சொல்லாத. எனக்கு இப்போ தான சொன்ன, கொஞ்சம் டைம் ஆகும் நானும் எல்லா யோசிச்சு பேச…. நீங்களும் பேசனும்னு தான வந்தீங்க, அதனால ஃப்ரியா பேசுங்க. நான் அப்புறமா ஜாயின் பன்னிக்கறேன். எனக்கு இது இருக்கும் சோ போர் அடிக்காது.”

வென்னிலா தன் கைப்பேசியை உடுக்கை ஆட்டுவது போல் ஆட்டி கூறிவிட்டு, மேலும் தாமதிக்காமல் தள்ளி ஒரு மேசையில் அமர்ந்தாள். மலருக்கும் கதிரை தங்கையுடன் பார்த்தவுடன், ‘என்னடா எப்படி பேசுவது?’ என நினைத்தாள். இப்போழுது ஒரு பெருமூச்சு விட்டு அமர, கதிரும் அவளின் எதிரே அமர்ந்தான்.

இருவரும் தங்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்து எப்படி பேச்சை ஆரம்பிப்பது என தயங்கிய மௌனத்தில் தத்தளிக்க, கதிரவன் முதலில் அதை உடைத்தான்.

“உங்க வீட்டுல உங்கல ‘மினு’ன்னு தான் கூப்பிடுறாங்க. ஏன்? உங்க ஃபுல் நேம் கொடிமலர் தான?”

கதிரவனின் கேள்விக்கு மலரின் முகத்தில் ஒரு தர்மசங்கடமான புன்னகை தவழ்ந்தது. பின் மெதுவாக விளக்கம் கொடுத்தாள். “என்னோட அம்மாவோட அம்மா பேரு கொடிமின்னல். நான் பொறந்தப்போ அதே பேர தான் வைக்கலாம் இருந்தாங்கலாம் அம்மா. அப்புறம் மின்னல்னு பேர் வைச்சா கிண்டல் பண்ணுவாங்கன்னு, ‘கொடிமலர்’ன்னு பேர் வைச்சாங்க. பட், சின்ன வயசுல தாத்தா பாட்டி கூட வளர்ந்ததுனால, அவங்க எப்போவுமே ‘மின்னு’னு கூப்பிட்டு அதுவே இப்போ வரைக்கும் கூப்பிடுறாங்க.”

கதிரவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. “எது ‘வாம்மா மின்னல்னு’ கூப்பிடுவாங்கலே, அந்த மின்னலா?” கேலியான தோனியில் அவன் கேட்டவுடன் மலர் முறைத்து, “இப்படி தான் என்னோட ஸ்கூல் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் கலாய்ப்பாங்க. அதனால, யாருக்கும் சொல்றது இல்ல” என முறைப்புடன் கூற, கதிரவனும் மேலே அதை பற்றி தொடராமல் விட்டான். மலர் மெதுவாக அவனை பற்றி கேள்விகள் தொடுக்க ஆரம்பித்தாள்.

“உங்க சொந்த ஊர் சென்னை தானா?”

கதிரும் அவள் ஆரம்பித்தவுடன் உற்சாகமாக பேசத் துவங்கினான். “அப்பாக்கு இங்க தான், அம்மாக்கு சொந்த ஊர் திருச்சி.”

“ஹோ, எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருக்குமே இது தான் சொந்த ஊரு. நான் படிச்சது எல்லாம் இங்க தான், நீங்க?”

பேச்சு பள்ளிக்கூட காலங்களில் தவழ்ந்து, கல்லூரிக் காலங்களில் துடிப்பாக குதித்து, வேலை செல்லும் இடத்தில் நடக்கும் விஷயங்களில் முதிர்ச்சிப் பெற்று நின்றது.

மேலோட்டமாக மட்டுமே இதுவரை பேசியதை உணர்ந்த கதிரவன் மெதுவாக தன் மனதில் இருந்த கவலைகளை இறக்கத் துவங்கினான்.

“உங்க வீட்டுல தாத்தா, அப்பா, அம்மா எல்லாம் நம்ம கல்யாணம்னு சொன்னா ஒத்துப்பாங்களா?”

மலரிடம் இருந்து சட்டென்று பதில் வரவில்லை. ஏன்னென்றால் அவளுக்கே சரியாக தெரியவில்லை!

“தெரியலங்க, ஒத்துப்பாங்கன்னு தான் நினைக்கிறேன். நான் மத்தியானம் எங்கப்பா கிட்ட நம்மல பத்தி எல்லாம் சொல்லிட்டு தான் வந்தேன். அவரு ஃபெர்ஸ்ட் நீ பேசிட்டு எல்லாம் ஓகேன்னா சொல்லுமா. மேல பார்க்கலாம்னு சொன்னாரு. அப்பா ஒத்துப்பாரு, அப்புறம் அவர் பேசுனா அம்மா, தாத்தா கூட ஒத்துப்பாங்கன்னு நினைக்கிறேன். ஆனா…..”

“வேற யாராச்சும் இருக்காங்களா உங்க வீட்டுல?”

“இல்ல மாமா இருக்காரு, எங்கம்மாவோட அண்ணன். கொஞ்சம் ரஃப் ஆண்ட் டப்ஃ கேரக்டர். எங்கப்பாவோட தம்பியும் இருக்காரு, அவரும் கொஞ்சம் பிரச்சனை பண்ணுவாருன்னு தோணுது.”

“ஹோ தாய்மாமா சித்தப்பா ரெண்டு பேருமா? அப்போ கொஞ்சம் கஷ்டம் தான்.”

கதிரின் கவலை தொய்ந்த குரலில், மலரும் சமாதானப்படுத்த துவங்கினாள். “இல்ல எங்கப்பா பேசி எல்லாம் சரி பண்ணுவாரு. எனக்கு நம்பிக்கை இருக்கு!”

“ஹ்ம்ம்ம்ம்….”

கதிரவன் அமைதியாக உட்கார்ந்திருக்க, அவன் வீட்டு நிலைமையை கேட்டாள் கொடிமலர்.

“உங்க வீட்டுல எப்படி? அப்பா, அம்மா எல்லாம் ஒத்துப்பாங்களா? நிலா கூட ரொம்ப யோசனையா இருக்கா….”

சிறிது தூரத்தில் அமர்ந்திருந்தவளை பார்த்தபடி மலர் கூற, கதிரும் தங்கையின் மேல் கண்ணை வைத்து பதிலளித்தான். “நிலா எதுவும் பிரச்சனை பண்ண மாட்டா. இன்னும் சொல்ல போனா, எனக்கு பிடிச்சிருக்கு அதுவே போதும், அவ எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவா. பட், அவ யோசிக்கறது வீட்டுல எப்படி சமாளிக்க போறோம்னு தான்.”

தக்கையின் எண்ணவோட்டம் அவனுக்கு தெரியாதா என்ன? நிலாவை பற்றி அவனின் கவலைகள் இல்லை என்று தோன்றியது மலருக்கு. “அப்பா, அம்மா ஒத்துப்பாங்களா?”

மலரின் கேள்விக்கு கதிரவனிடம் உடனடியாக பதில் வந்தது. “கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க. அப்பா சான்ஸ் இருக்கு, நானும் நிலாவும் பேசுனா புரிஞ்சுப்பாரு. அம்மா ரொம்ப கஷ்டம் தான். ஆனா, எனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னா கொஞ்சம் யோசிப்பாங்கன்னு நினைக்கிறேன்.”

இருவரிடமும் சிறிது மௌனம் நிலவியது. கதிரவனே அதை உடைத்தான். “அப்பா, அம்மா தாண்டி உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா? நிஜமா நான் குண்டா இருக்கிறது பிரச்சனை இல்லையா?”

கதிரின் குரலில் இருந்த ஆர்வமும், தயக்கமும் கண்களில் பிரதிபலிக்க, மலருக்கோ சட்டென்று அவன் இப்படி கேட்டவுடன், முகம் ஆச்சரியத்திலும், கொஞ்சம் வெட்கத்திலும் மூழ்கியது.

“ஏன் இந்த கேள்வியை திரும்பவும் கேட்டறீங்க? முதல்ல நீங்க சொல்லுங்க உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?”

மலரின் தயக்கமற்ற இந்த பேச்சு தான் இவனை அவளிடம் வெகுவாக இழுத்தது. ஒரு புன்னகை தன்னையறியாமல் கதிரவனிடம் பூக்க, “இப்படி நீங்க டெரக்டா பேசுறது தான் ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களை ரொம்பவே பிடிச்சிருக்கு, போதுமா? இப்போ நீங்க சொல்லுங்க….” என்று வினவினான்.

“என்ன சொல்லனும்?”

ஒன்றும் தெரியாதது போல் ஒரு நமிட்டு சிரிப்புடன் மலர் கேட்க, கதிரவனுக்கு சிறிது கோபம் எட்டி பார்க்க, ஒரு பெருமூச்சு மட்டுமே விட்டான். அவன் கடுப்பாவதை உணர்ந்த மலர் அவசரமாக, “சரி சரி டென்ஷன் ஆகாதீங்க. எனக்கு நிஜமாவே உங்களை பிடிச்சிருக்கு. நீங்க பேசுற பேச்சுல இருந்தே தெரியுது, குடும்பத்தை பத்தி நிறைய யோசிக்கிக்கறீங்கன்னு. என்னையும் நல்லா பார்த்துப்பீங்கன்னு நம்புறேன். அப்புறம், நீங்க அவ்ளோ ஒன்னும் குண்டாவுமில்ல. அப்படியே இருந்தாலும், நீங்க வெயிட் குறைக்கலனாலும் எனக்கு பிராப்ளம் இல்லை. போதுமா?” என்று பதிலளித்தாள்.

மலரின் பதிலை கேட்டு கதிரவனின் முகம் சற்றே தெளிய மலரும் சிறிது பேச்சை மாற்றினாள். “உங்களுக்கு எதிர்காலத்துல இப்படி இருக்கனும்னு ஏதாவது ஆசையிருக்கா?”

“ஆசைன்னா புரியல என்ன கேக்கறீங்கன்னு?”

“இல்ல வெளிநாடு போனோம், இது எல்லாம் செய்யனும்னு ஏதாவது பிளான்ஸ் இருக்கான்னு. எனக்கு வெளிநாடு போறதுல பெருசா இஷ்டமில்லை. அதான், கேக்கறேன்.”

“எனக்கு போக கூடாதுன்னு இல்லை. பட், நான் அதுக்கு எதுவும் ட்ரை பண்ணல. எனக்கு எந்த ஊருல இருந்தாலும் நிம்மதியா தூங்கி, எழுந்துக்கனும். சொந்தமா ஒரு வீடு, பெருசா கடன் எல்லாம் இல்லாம, பொண்டாட்டி, பசங்களோட நிம்மதியா ஒரு வாழ்க்கை….. அவ்வளோ தான் நம்ம எதிர்க்கால் கோல்.”

“அவ்வளோ தானா இத பண்ணறதே பெரிய விஷயம்! நிம்மதி இல்லாம தான் நிறைய பேர் கோவில், கோவில்லா போயிட்டு இருக்காங்க. அது மட்டும் இருந்தா போதும்னு சொல்றீங்க?”

மலரின் கேள்வியில் ஒரு நிமிடம் தயங்கி அவளின் முகத்தையே பார்த்துப்படி இருந்தான் கதிர். பின் தன் மனதில் இருந்தவற்றை அவளின் மனதில் பாரமாக ஏற்றினான தன்னை அறியாமல்….

“எது இல்லையோ அதை தான வேணும்னு நினைப்பாங்க? எனக்கும் நிம்மதி இல்லை. அதான் ஃப்யூச்சர்லயாவது அது வேணும்னு நினைச்சேன். இவனுக்கு என்ன பிரச்சனைன்னு நீங்க நினைக்கலாம். ஆனா, என்னோட வீட்டுல இருந்து பார்த்தா தான் தெரியும். என்னோட அப்பாக்கும், அம்மாக்கும் செட்டே ஆகாம இவ்வளோ வருஷம் குடும்பம் நடத்துறாங்க. சின்ன சின்ன விஷயம் கூட பிரச்சனை ஆகுறதை நான் பார்த்துருக்கேன்.

ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனதுல இருந்தே சண்டை தான்…. என்னோட அம்மாக்கு, அப்பா நல்லா பேசுவாரு எல்லார்கிட்டயும் லேடீஸ் உட்பட. நிறைய ஹெல்ப் பண்ணுவாரு எல்லாருக்கும். அது பிடிக்காது. அப்பாக்கு அம்மா பேச்சை கேட்டு நடக்குறது பிடிக்காது… அம்மாக்கு ஒரு இன்செக்யூரிட்டி, அப்பா அதை பத்தி கவலை படவேயில்லை. அதுவே பிரச்சனையா போச்சு அவருக்கு. அதே மாதிரி அப்பாவோட சைட் ஃபாமிலி கல்யாணம் ஆன புதுசுல பண்ண விஷயம் எல்லாம் அம்மா மனசுல வைச்சுட்டு, கொஞ்சம் கொஞ்சமா ஒதுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அது அப்பாக்கு சுத்தமா பிடிக்காம போச்சு அம்மாவை.

எனக்காவும், நிலாக்காகவும் தான் ரெண்டு பேரும் ஒன்னா இருக்காங்க தோணும் அப்பப்போ. நிலாவும், நானும் இதனால நிறைய மனசு கஷ்டப்பட்டுருக்கோம். இப்போவும் படறோம்!

உங்கள இந்த வீட்டுல வாழ்க்கை முழுக்க அட்ஜெஸ்ட் பண்ணிட்டு இருக்கனும்னு நான் சொல்ல மாட்டேன். கல்யாணம் பன்னிட்டு உங்களுக்கு வீட்டுல இருக்க முடியல, நம்ம தனியா போனோம்னு நீங்க சொன்னாலும் எனக்கு ஓகே தான். பட், நான் யோசிக்கறது ஒன்னே ஒன்னு தான் என்னோட தங்கச்சி பத்தி! அவளுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் நான் அப்பா, அம்மா கூட இருக்கனும்னு யோசிக்கறேன்.

அதுக்கப்புறம் நம்ம அப்பார்ட்மெண்டல கூட வேற வீடு பார்த்துட்டு போலாம். எங்க அம்மாவையும் அப்படியே விட முடியாது. அவங்களையும் மனசுல வைச்சு தான் இந்த முடிவை சொல்றேன். அவங்களுக்கு நான் தான் எல்லாமே. நம்ம தனியா போனாலும், அம்மாவையும், அப்பாவையும் கொஞ்சம் பக்கத்தில இருந்து பார்த்துக்கனும்னு எனக்கு ஆசை. பட், எல்லாமே உங்களையும் கேட்காம எதுவும் டிசைட் பண்ண மாட்டேன். சோ, நீங்க வொரி பண்ணாதீங்க…. ரொம்ப பயமுறுத்துறனா?”

மலரின் முகத்தில் பயம் கலந்த திகைப்பு அப்பட்டமாக தெரிய, அவளின் மனதில் கதிரவனின் ஆதங்கம், பயம், பாசம், கனிவு எல்லாம் தன் தங்கியது. அவனின் மனதில் இருந்து தன் மனதில் மாறியது போல் உணர்ந்தாள். இப்போது அவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது? கண்டிப்பாக கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது. தொண்டையை செருமிக் கொண்டு, “ஹ்ம்ம்ம், கொஞ்சம் பயமா தான் இருக்கு. ஆனா, நீங்க என்னையும் யோசிச்சிப் பேசுறீங்க சந்தோஷமா இருக்கு. இதே மாதிரி கல்யாணத்துக்கு அப்புறமும் பேசுவீங்களான்னும் தோணுது….” என்று வெளிப்படையாக கூறினாள்.

“எனக்கு உங்க கன்செர்ன் புரியுது. உங்களுக்கு என்மேல நம்பிக்கை வர கொஞ்ச நாள் ஆகும். பட், இப்போதைக்கு என்னால நான் உங்கள, உங்க குடும்பத்தையும் என்னால முடிஞ்ச அளவுக்கு நல்லபடியா பார்த்துப்பேன்னு சொல்ல தான் முடியும், கண்டிப்பா சொல்றதுக்கு ஏத்த மாதிரி நடத்துக்கவும் செய்வேன்.”

“ஹ்ம்ம்ம் இன்னோன்னு கேப்பேன் தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?”

கதிருக்கு மலரின் தயக்கம் சிறிது கலக்கத்தை கொடுக்க, ‘என்ன கேக்க போறாளோ?’ என எண்ணி, “அதெல்லாம் இல்லை, கேளுங்க…” என்று வெளியே சாதாரணமாக சொன்னான்.

“உங்க அம்மா, அப்பா சண்டையெல்லாம் பார்த்து தான் நமக்குள்ள பிடிச்சிருக்கனும்னு என்னை கேட்டுட்டே இருந்தீங்களா?”

சரியாக யூகித்தவளை நினைத்து ஆச்சரியப்பட்டுக் கொண்டே, “ஆமா, என்னோட கூட எப்போவும் இருக்க போறீங்க, வாழ்க்கை முழுக்க இருக்கனும்னா கண்டிப்பா பிடிச்சிருக்கனும்! இல்லனா, வாழ்க்கை கஷ்டமா போயிடும். அதனால தான் கேட்டுட்டே இருந்தேன்.” என்று பதிலுரைத்தான் கதிரவன்.

அவனின் பதிலை கேட்டு ஆமோதிப்பாக தலையசைத்து மலரும் ஒத்துக் கொண்டாள். “ஆமா, கரக்ட் தான். இப்போ நீங்க உங்க ஃபாமிலி பத்தி சொன்ன மாதிரி நானும் என்னோட குடும்பத்தை பத்தி சொல்லனும்.”

மலரின் கூற்றில் போதிருந்த கவலையை கண்டு கதிர் புருவம் சுருக்க, மலர் மேலும் அவளின் குடும்பம் பற்றி சொன்னதை கேட்டு அவனின் முகமே யோசனையில் சுருங்கியது அப்பேச்சின் முடிவில்!
 
Active member
Joined
May 24, 2024
Messages
194
Lovely update
Ellame oru margama tan irukainga
Epo sari panni hoom
 
Top