Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Moganaththin Moganam...23...2

  • Thread Author
அத்தியாயம்…23…2

இது வரை கை நீட்டாத, ஏன் கடிந்து கூட பேசாத தன் கணவன் தன்னை அடித்ததுலேயே தன் நிலை மறந்து போன சரஸ்வதி… தன் தலை முடியை பிடித்து இழுத்து சென்றதில், மொத்தமாக தான் மடிந்து போனார்..

அதுவும் மகன்கள் மருமகள்கள் பார்க்க அப்படி ஒரு அவமானமாக இருந்தது.. தான் ஒன்று நினைக்க வேறு ஒன்று நடந்ததை உணரும் முன் கணவன் தன்னை வெளியில் தள்ள பார்க்க..அதில் சரஸ்வதியின் இது தான் என்று நிலை சொல்வது போல இல்லை எனும் போது தான்..

தன் பேத்தியோடு அந்த ஆட்டோ ஓட்டுனர்.. அந்த தெருவில் வசிப்பவர்கள் அனைவரும் திரண்டு வருவதை சரஸ்வதி மட்டும் அல்லாது தட்சணா மூர்த்தி… மகேந்திரன் ஸ்வேதா என்று பார்த்தது..

வீட்டின் உள்ளே வர்ஷினி சட்டமாக அமர்ந்து விட்டாள், தீக்க்ஷயன் நிலை சொல்வது போலவே இல்லை.. தன் அம்மாவா.? அம்மாவா…? இப்படி செய்ய பார்த்தது அதிலேயே அதிர்ந்து நின்று விட்டவன் தன்னை சுற்றமும் மறந்தும் தான் போய் நின்று விட்டான்..

ஆனால் மகேந்திரனுக்கு சரஸ்வதி தாய் தானே இந்த வயதில் அப்பா அடித்ததே அதிர்ச்சி என்றால், இப்படி வெளியில் தள்ள நினைத்ததில்.

“ப்பா ப்பா. விடுங்க எது என்றாலும் பேசிக்கலாம் அப்பா..” என்று அழைத்து கொண்டே இவர்கள் பின் அவன் வர கணவனுக்கு பின் வந்த ஸ்வேதா என்று இவர்கள் கண்ணுக்கு தான் இந்த காட்சி தெரிந்தது..

தன் பேத்தியின் அழுகையின் கோலமும், ஆட்டோ ஓட்டுனரின் நிலையும் தெரு மக்கள் முகத்தில் தெரிந்த கோபத்தின் சாயலிலுமே தட்சணா மூர்த்திக்கு புரிந்து விட்டது.. என்ன நடந்து இருக்கும் என்பது..

அதில் தன் இயல்பாக மனைவியின் தலையில் இருந்த கை தன்னால் நழுவியது.. சரஸ்வதிக்குமே புரிந்து விட்டது என்ன நடந்து இருக்கும்.. அதில் தன் இப்போதைய நிலை மறந்தவளாக பேத்தியின் பக்கம் ஓட.

இவர்களே இப்படி என்றால், மகேந்திரன் ஸ்வேதா. ஓடி விட்டனர்.. வெளியில் சத்தத்தில் வீட்டில் அமர்ந்திருந்த வர்ஷினி தீக்க்ஷயன்.. ஏன் அறையில் உறங்கி கொண்டு இருந்த தீரா கூட எழுந்து வெளியில் வந்து அம்மா அப்பாவின் நடுவில் பயத்தோடு கை பற்றி நின்று கொண்டு விட்டாள்..

தீக்க்ஷயனுக்கும் வர்ஷினிக்குமே.. ஏதோ நடந்து இருப்பது புரிந்தது தான்.. ஆனால் ஸ்ருதியின் அருகில் ஓடி என்ன என்று கேட்கும் நிலையில் அவர்கள் இருவரும் இல்லை..

சத்தத்தில் வெளியில் வந்து நின்று விட்டாலும்.. சற்று முன் நடந்த நிகழ்வின் தாக்கத்தில் இருந்து இருவரும் வெளி வர முடியவில்லை என்பது தான் உண்மை..

அதில் தெரிந்தாலுமே செயலாற்ற அவர்களின் நிலை செயல் படுத்தவிடவில்லை..

அதில் நிலை வாசல்ப்படியின் அருகிலேயே நின்று கொண்டு விட்டனர்..

மகேந்திரன் தான் ஓடி போய் மகளின் அருகில் சென்றவள் தூக்க முயன்றான்.. ஆனால் தந்தை தன்னை தூக்கவுமே.. “ நோ நோ… என்னை கீழே விடு.. நீ என்னை கீழே விடு.. நீ பேட் நி பேட்..” என்று சத்தம் போட.

தட்சணா மூர்த்தியோ. “ கண்ணா என்ன டா ஆச்சு…” என்று கன்னத்தை பற்றி கேட்டவரின் கையையுமே ஸ்ருதி தட்டி விட்டு..

“நோ நோ தொட கூடாது தொட கூடாது.. .. ..” என்று தன்னை மறந்து கத்தியவளின் செயல்களில் அத்தனை வித்தியாசங்கள் தெரிந்தது..

சரஸ்வதியின் கண்களோ பேத்தியின் உடைகளை வலம் வந்தது.. ஏதும் அசம்பாவிதம் நடக்கவில்லையே என்று ஆராய்ந்து.. பாவம் அவருக்கு தெரியவில்லை.. அசம்பாவிதம் எல்லாம் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது என்பதும்.. அதன் தொட்டு தான் தன் பேத்தி பேச்சு மறந்து சிரிப்பு மறந்து விளையாட மறந்து என்று தன்னை முடக்கிக் கொண்டு தன் அறையிலேயே முடங்கிக் கொண்டாள் என்பதுமே… அது தெரியாது புதியதாக சரஸ்வதி ஆராய.. ஸ்வேதா மகளின் ஓடி போனதுமே.. ஸ்ருதி தாயின் வயிற்றை கட்டிக் பிடித்து கொண்டவள்..

‘ம்மா ம்மா..” என்று அழுகையுடன் ஏதோ சொல்ல முற்படும் போது..

“ஒன்னும் இல்ல ஸ்ருதி ஒன்னும் இல்ல. “ என்று சொன்னவள் கூடவே உஷ்…” என்று தன் வாயின் மீது கை வைத்து பேசாதே என்பது போல சைகை காட்டினாள்…

வர்ஷினியும் தீக்ஷயனுமே நிலை வாசல்ப்படி நின்ற போது தான் அதிர்ச்சி பின் என்ன என்று பார்த்தவர்களின் கண்ணுக்கு மகேந்திரன் தொடும் போதும்.. தட்சணா மூர்த்தி தொடும் போதும் கத்தியவள் சத்தம் போட்டவள்.. தன் தாய் அருகில் நின்றது ஏதோ பேச முற்ப்பட்டது..

தங்களுக்கு ஏன் தெரு மக்களுக்கு வந்த கோபம் கூட ஸ்வேதா முகத்தில் தெரியாதது.. அதோடு ஏதோ ஸ்ருதி காதில் கேட்க.

ஸ்ருதி ஏதோ சொல்ல வர,, அதை சொல்ல விடாது ஸ்வேதா தடுத்து கொண்டு இருப்பதை பார்த்த தீக்க்ஷயன் தன் கை பிடித்து நின்று கொண்டு இருந்த தன் மகள் தீராவை தான் பார்த்தான்.. பின் தன் மனைவியையுமே…

ஸ்ருதிக்கு என்ன பிரச்சனை என்று சரி வர தெரியவில்லை.. ஆனால் வசிக்கு நடந்த பிரச்சனை என்ன என்று தெரியும்.. அதுவும் தங்கள் குழந்தையை அழிக்க நினைத்த வீட்டில் பிரச்சனை… அதற்க்கு நான் சென்றால், மனைவியின் நிலை அறிய தீனா அவனின் வசியை பார்க்க..

வசியின் பார்வையும் முதலில், தீராவை பார்த்து பின் தன் வயிற்றின் மீது கை வைத்தவள் கணவன் அவளை பார்க்கும் போது அவளுமே அவனை தான் பார்த்தது..

என்ன நினைத்தார்களோ இருவருமே ஸ்ருதி அருகில் சென்றனர்.. தீக்க்ஷயன் நினைத்தது போல் தான அவன் அவளை தொட போகும் போது அவனின் கையை தட்டி விட்டு விட்டாள் ஸ்ருதி..

தன்னை விட்டு தூர விலக வர்ஷினியின் அருகில் நின்று கொள்ள. ஸ்வேதாவோ மீண்டும் குழந்தையை தன் கை பிடிக்குள் கொண்டு வந்து விட..

தீக்ஷயன் மட்டும் அல்லாது வர்ஷினியுமே இதை கவனித்தார்கள் தான்..

அதற்க்குள் தெரு வாசி ஒருவர்.. “ யாராவது ஒருத்தர் போலீஸ்க்கு போன போடுப்பா…”” என்ற நொடி…

“அது எல்லாம் போட்டாச்சி.. இன்னும் கொஞ்ச நேரத்தில் போலீஸ் வந்து விடும்.” என்று சொன்னது வேறு யாரும் இல்லை.. அந்த ஆட்டோ ஒட்டுனர் பார்த்திபன் தான்…

முதலில் தெரு வாசி சொன்ன போலீசை கூப்பிடு என்றதுமே ஸ்வேதா அது எல்லாம் வேண்டாம் என்று இவள் சொல்ல ஆட்டோ ஒட்டுனர் . நான் கூப்பிட்டு விட்டேன் என்று ஒருவரும் ஒரே நேரத்தில் சொன்னதினால், தெரு வாசிகள் ஸ்வேதா சொன்னது கவனிக்கவில்லை.. ஆனால் அவளின் வீட்டாட்கள் ஸ்வேதா சொன்னதையும் கேட்டார்கள் அந்த ஆட்டோ ஒட்டுனர் சொன்னதையுமே கேட்டார்கள்..

தெரு வாசி அவர்களுக்கோ அந்த ஒட்டுனர் பார்த்திபன் இப்படி சொன்னதுமே என்ன என்று குழம்பி போனவர்கல்..

ஸ்வேதா பார்த்திபன் அருகில் சென்றவள்.. “ நீ எப்படி கூப்பிடுவ. இது என் மகள் சம்மந்தப்பட்டது.. நீ எப்படி கூப்பிடுவ..?”

ஏற்கனவே என்ன நடந்தது . ஏது நடந்தது.? என்று தெரியாது அந்த ஒட்டுனரை அடித்து விட்டதில் பாதியாக தொங்கி கொண்டு இருந்த அவனின் சட்டையை பிடித்து கேட்டுக் கொண்டு இருக்க.

அதை பார்த்த ஸ்வேதாவின் வீட்டவர்களோடு அந்த தெரு வாசிகளுமே என்ன ஏது என்று அதிர்ந்து தான் பார்த்து கொண்டு இருந்தனர் என்றால்,

தீக்க்ஷயம் சென்ற மாதம் எல்லாம் வசி தன்னிடம் சொல்லிக் கொண்டு இருந்த.

“ஸ்ருதி வரது இல்ல பேசுறது இல்ல. அதோடு முன் போல அவள் இல்லை என்பது நியாபகத்தில் வர.. தன் மனைவியை பார்த்தான்.வசியுமே ஏதோ யோசனையில் தான் இருந்தாள்.. குழப்பத்தோடு ஸ்வாதியைய் பார்த்த வாறு…

யாரும் பேசவில்லை பேச முடியவில்லை… தட்சணா மூர்த்தி தான் என்ன டா இது என்று தன் பெரிய மகனை தான் பார்த்தார்..

மகேந்திரன்.. “ ஏய் உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிடுச்சி… ?” என்று மனைவியை அடக்கியவன்..

ஸ்ருதியின் அருகில் சென்று தோளை பற்றி ஏதோ கேட்க முயலும் முன் மீண்டும் தந்தையின் கையை தட்டி விட்டவள்..

“நோ டச் செய்யாதிங்க…” என்று சொன்ன ஸ்ருதியின் குரலில் அப்படி ஒரு கோபம்.. பேச்சு கூட அவ்வளவு சத்தமாக வெளி வந்தன..

பின் ஸ்ருதி தந்தையை விட்டு விலகியவள் கெட்டியாக வசியின் கையை பற்றிக் கொண்டாள்..

அப்போது தான் அந்த வீட்டின் ஆண்கள் ஒன்று போல நினைத்தது ஸ்ருதி கொஞ்ச நாட்களாக தன் அறையை விட்டு வெளி வராதது… அப்படி வெளி வந்தாலுமே தங்கள் அருகில் வராததுமே..

தட்சணா மூர்த்தி தீக்க்ஷயனோடு மகேந்திரன் கொஞ்ச நாட்களாக தான் இன்னொரு அறையில் படுத்து கொண்டது.. தன் மனைவி குழந்தைக்கு உடம்பு சரியில்லை. என்று முன் சொன்னது பின் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி தங்கள் அறையில் மனைவியும் மகளும் மட்டும் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தது நியாபகத்தில் வந்தது.

என் வீட்டில் என்ன தான் நடக்கிறது …? என்ன தான் நடந்தது என்று யோசிக்கும் போது தான் அந்த ஆட்டோ ஒட்டுனர் சொன்னான்..

தன்னை அடித்த தெருவாசியர்களை பார்த்து கேட்டான்..

“தோ பார்த்திங்க தானே.. பெத்த அப்பன் கிட்ட போனா.. தள்ளி போகுது தொடாதே என்று சொல்லுது குழந்தை.. இதே தான் யா நான் செய்தேன்..” என்று சொன்னவன்..

தட்சணா மூர்த்தியின் மூன்றாவது வீட்டில் பத்தாவது படித்து கொண்டு இருக்கும் பெண் இதே ஆட்டோவில் தான் பள்ளிக்கு செல்வதும்… ஸ்ருதி படிக்கும் அதே பள்ளியில் தான் அந்த பெண்ணும் படிக்கிறாள்..

அந்த ஆட்டோ ஒட்டுனர் பார்த்திபன்.. இங்கு நடந்து கொண்டு இருப்பதை பள்ளி பையை கூட கழட்டாது பள்ளி சீர் உடை அணிந்து நின்று கொண்டு இருந்த அந்த பெண்ணை அழைத்தார் அந்த ஆட்டோ ஒட்டுனர்…

அந்த பெண்ணுமே பயந்து கொண்டு தான் வந்தாள்..

“நீ சொல்லு பாப்பா. என்ன நடந்தது..?
சொன்னாள் அனைத்துமே சொன்னாள். எப்போதுமே அந்த பெண்ணை இறக்கி விடும் அந்த வீட்டிலேயே தான் ஸ்ருதியுமே பார்த்திபன் தன் ஆட்டோவில் இருந்து இறக்கி விடுவார்..

காரணம். அந்த பெண் வீடு மூன்றாவது வீடு… மூன்று வீட்டிற்க்கு என்ன.? என்று.. அதே போல் இறங்கும் போது தான் ஸ்ருதி பள்ளி பையை பின் பக்கம் மாட்டிக் கொண்டு ஆட்டோவில் இருந்து இறங்கிய போது.. அந்த பை தூக்கி மாட்டும் போது ஸ்ருதியின் பள்ளி சீருடையான அந்த ப்ராக் முழுவதுமே பின் பக்கம் தூக்கி கொண்டு விட்டது..

இரண்டு அடி கூட ஸ்ருதி எடுத்து வைத்து இருக்க மாட்டாள்.. அதே போல் பத்தாவது படிக்கும் அந்த பெண்ணுமே ஆட்டோவில் இருந்து இறங்கியவள் தன் வீட்டு கேட்டை தான் திறக்க அதில் கை வைத்தாள்..

ஒட்டுனர் இருக்கையில் இருந்த பார்த்திபன் தான்… ஸ்ருதியின் பள்ளி சீருடை தூக்கி இருப்பதை கவனித்து விட்டு..

“பாப்பா இரு..” என்று சொன்னவர்.. மேல ஏறி இருந்த அந்த பள்ளி சீருடையை கீழே இழுத்து விட்டு சரி செய்தார் அவ்வளவு தான்..

“நோ டச்.. நோ டச்.” என்று அந்த ஒட்டுனரை பிடித்து தள்ள பார்த்ததோடு..

“என்ன பேட் டச் பண்ணிறியா…?” என்றும் ஸ்ருதி கத்தி கேட்டவள்.. அழவும் ஆரம்பித்து விட்டாள்…

சரியாக அப்போது தான் எதிர் வீட்டு ஆண் தன் இரு சக்கர வாகனத்தை வெளியில் கொண்டு வர பார்த்தது.

அவரின் காதில் இந்த வார்த்தை விழுந்து விட… அவ்வளவு தான் . கிடைத்தான் ஒருத்தன் என்று.. தன் வீரத்தையும் தைரியத்தையும் … தான் நியாயவான் என்று நிரூப்பிக்கவும்.. தனியாக அந்த ஆட்டோ ஒட்டுனரை அடிக்க முடியாது என்று..

ஒரு குரல் கொடுக்க.. உண்மையில் அநியாயம் நடக்கும் இடத்தில் பொங்காதவர்கள்.. இதற்க்கு பொங்கி விட்டார்கள்.. அதன் பலன் தான் அவனின் சட்டை கிழிந்து தொங்கி கொண்டு இருப்பதும்.. அவனின் முகத்தின் காயமும்..

அந்த பெண் சொல்லி முடிக்க. அடித்தவர்களோ கப் சிப் ஆனதோடு இரண்டு அடி பேக்கும் எடுக்க பார்த்தனர்..

ஆனால் நம் ஆட்டோ ஒட்டுனர் விடவில்லை.. “யாரும் இங்கு இருந்து நகர கூடாது… சொல்லிட்டேன்.. நான் இறக்கி விட்ட இந்த பாப்பா வீட்டின் முன் கேமிரா இருக்கு… செக் பண்ணுங்க.. அதோட இத்தனை நேரம் எனக்கு பொங்கினிங்கலே..”

ஸ்ருதியை காட்டி.. “ பெத்த அப்பனை தொட விட மாட்டேங்குது..”

ஸ்வேதா அதிர்ந்து போய் விட்டாள்.. என்ன பிரச்சனை வேறு போல போகுது என்று.. வர்ஷினிக்கோ அந்த ஓட்டுனர் பேச்சில் நியாயம் இருப்பது போல தான் தெரியுது.

அதே தான் அந்த ஆட்டோ ஒட்டுனரும் சொன்னார்.. ஸ்வேதாவை காட்டி..

“இந்த பொம்பளை கிட்ட நான் முன்னவே சொன்னேன்.. பாப்பா சரி இல்ல என்ன என்று பாருங்க என்று.. சொன்னதுக்கு நீ உன் வேலையை மட்டும் பாரு என்று சொல்லுச்சி.. இப்போ தானே தெரியுது தன் புருஷனை காப்பத்த தானோ என்னவோ.. என்னை திட்டி இருக்கு என்று சொன்ன நொடி.. மகேந்திரன் வெல வெலத்து போனதோடு.. அந்த தெரு வாசிகள் அவனை பார்த்த அந்த பார்வையில் கூனி குறுகி நின்று விட்டான்..

வர்ஷினியுமே ஸ்ருதி ஏன் இப்படி இருக்கா.? எப்போ இருந்து. இப்படி ஆனாள்.. யோசித்தவளுக்கு ஸ்வேதா அவள் அம்மா வீட்டிற்க்கு சென்று வந்ததில் இருந்து…

அந்த பத்தாவது படிக்கும் பெண் மட்டும் அல்லாது. ஆட்டோவில் இருந்த மற்ற பள்ளிக்கு சென்று வீடு திரும்ப அந்த ஆட்டோவில் அமர்ந்து இருந்த மாணவிகளுமே தான் பார்த்து கொண்டு இருந்தனர்..

அனைவருமே ஒன்று போல…” பார்த்திபன் அங்கிள் ட்ரஸ் தான் சரி பண்ணார்.. ஏன் அப்படி ஸ்ருதி கத்தினா என்று தெரியல. புரிந்தும் புரியாது குழந்தைகள் பார்த்ததை கூறினார்..

மற்றவர்களின் பேச்சுக்கள் கேட்பார்களா இல்லையா என்று தெரியாது.. ஒன்று போல சின்ன பிள்ளைகள் கூற.

அதிலும் ஐந்தாவது படிக்கும் ஒரு சின்ன பெண் கூடுதலாக. ஸ்ருதியை ஆட்டோவில் ஏற்றிய பின் தான் அந்த ஆட்டோ ஓட்டுனர் அந்த சின்ன பெண்ணை ஆட்டோவில் ஏறும் போல.

அப்போது ஒரு முறை ஆட்டோவில் ஏறும் முன் அந்த குழந்தையின் தந்தை தன் மகளின் நெற்றியில் முத்தம் இட்டு ஆட்டோவில் ஏற்றி இருக்கிறார்.

அதை பார்த்த ஸ்ருதி.. அந்த பெண்ணிடம்.. “ பாய்ஸ் எல்லாம் பேட்.. நம்மை டச் பண்ண விட கூடாது.. அப்படி விட்டா இங்கு இங்கு எல்லாம் தொடுவாங்க.” என்று சில அந்தரங்க பாகத்தை காட்டி சொன்னாள்..

பத்து வயதான அந்த பெண்.. ஒன்றும் புரியாது அவளின் அன்னையிடம் சொல்ல. அந்த அன்னையோ.. என்னவோ ஏதோ என்று ஸ்வேதாவிடமும் சொல்லி இருக்கிறாள்.. அதையுமே அந்த பெண் சொல்லிய போது அந்த தெரு வாசியின் ஒட்டு மொத்த பார்வையும் ஸ்வேதாவின் மீது மட்டும் விழுந்து இருந்தால், பரவாயில்லை.. ஆனால் மகேந்திரன் மீதும் தான் விழுந்தது..

ஒரு பெண் வீட்டு ஆணை காப்பாற்றுகிறாள் என்றால், அதுவும் தன் மகளையும் மீறி காப்பாற்றுக்கிறாள் என்றால், அது தன் கணவனாக மட்டும் தான் இருக்கும் என்பது தான் அந்த தெரு வாசிகளின் எண்ணமாக இருந்தது..

புகுந்த வீட்டில் இருக்கும் மற்ற ஆண்களை.. அதுவும் தன் மகளை இப்படி செய்பவர்களை எந்த பெண் காப்பாற்றுவாள்.. அதனால் தான் அந்த தெருவாசிகள் தீக்ஷயனையும் தட்சணா மூர்த்தியையும் சந்தேகம் படாது. பெற்ற தகப்பனாம மகேந்திரனை சந்தேகம் பட்டது..

அனைத்தும் கேட்டு கொண்டு இருந்த அந்த தெருவாசிகள் ஸ்தம்பித்து நின்ற நொடி அந்த வீட்டின் முன் காவல் துறை வாகனம் வந்து நின்றது.. அந்த தெரு வாசிகள் நினைத்தது ஒரு வகையில் சரி தான்.

அதாவது ஒரு பெண்.,.. தன் மகளுக்கு புகுந்த வீட்டினரால் இது போல நடந்தால், அவள் சும்மா இருக்க மாட்டாள்.. கணவன் என்றாலுமே விட கூடாது தான்.. ஆனால் ஸ்வேதா எப்படி என்று தெரியாது தானே..

அதுவும் அந்த ஆட்டோ ஒட்டுனர் ஸ்வேதாவிடம் பாப்பாவை பாருங்க என்று சொன்ன பின்னும்.. ஸ்ருதியுடன் ஆட்டோவில் பயணிக்கும் ஒரு பெண்ணின் அம்மா ஸ்வேதாவிடம் சொன்ன பிறகும்.. ஏன் இதோ இப்போது கூட தாங்கள் ஆவேசப்பட்ட போது கூட அமைதியாக இருந்த ஸ்வேதா ஒட்டுனர் போலீசை அழைத்து விட்டார் என்றதில் பொங்கி விட்டாளே.. அப்போ கணவனை காப்பற்ற தானே நினைத்தனர்..

அவர்கள் நினைத்தது ஒரு வகையில் சரி தான். தன் சம்மந்தப்பட்ட ஒரு ஆண்மகனை காப்பற்ற தான் ஸ்வேதா பார்த்தது..

ஆனால் புகுந்த வீட்டில் இருப்பவர்களை கிடையாது.. பிறந்த வீட்டில் இருக்கும் அவளின் சொந்த தம்பியை காப்பற்ற..

காவல் துறை வாகனத்தில் இருந்து இறங்கிய அதிகாரி ஒருவர் என்ன என்று விசாரித்தவர்.. மொத்த பேரையுமே தன் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விட்டார்..

அதில் முதியவரான தட்சணா மூர்த்தியும்.. இளையவனான சித்தப்பாவான தீக்ஷயனுமே..

தீக்ஷயன் தான் இங்கு இரு என்று வசியை இருக்க சொன்னவன். பின் தன் அன்னையை பார்த்து.. “

கொஞ்சம் . இரு வசி.. நான் வந்துடுறேன்.. நான் வரல என்று சொன்னா விசயம் வேறு மாதிரி போகும்.. அதுவும் இல்லாம ஸ்ருதியுமே என் குழந்தை போல தான்.. என் அண்ணனை பத்தியுமே எனக்கு நல்லா தெரியும்.. இதுல வேறு ஏதோ இருக்கு வசி.. நான் ஸ்ருதியையுமே பார்க்கனும். ப்ளீஸ்.. கொஞ்சம் எனக்காக பொருத்துக்க.. இல்ல என்றால் குழந்தைகளோடு ஓட்டலில் தங்கிக்கிறியா. ஆனா அங்கு எல்லாம் சேப்பா என்று எனக்கு தெரியல… என் பிரண்ட் வீட்டில் இருக்க சொல்லலாம் ஆனால் என்ன என்று தெரியாது என்ன சொல்லி நான் அங்கு தங்க சொல்வது எனக்கு புரியல வசி…” என்ற கணவனிடம் வர்ஷி ..

“நான் இங்கு பார்த்துக்குறேன்.. நீ போய் அங்கு என்ன என்று பாருங்க.. எது என்றாலுமே எனக்கு போன் செய்யுங்க. என்று அவனை அனுப்பி விட்ட பின்..

இது வரை தன் குழந்தை என்று பதறிக் கொண்டு இருந்தவள் இப்போது கணவன்.. இத்தனையுமே பொருத்து கொண்டு போனது அவனுக்காகவும் தீராவுக்காவும் தானே…

ஸ்ருதியை மருத்துவமனைக்கு தான் அனுப்ப நினைத்தது காவல் துறை அதற்க்கு உண்டான ஏற்பாட்டை செய்யும் போது தான் ஸ்வேதா..

“ அய்யோ அந்த அளவுக்கு எல்லாம் ஒன்னும் நடக்கல..” என்று சொல்லி வாயை விட்டு விட்டதில், அவளை தான் காவல் துறைக முதலில் அழைத்து சென்றது..

குழந்தையிடம் கேள்வி கேட்க அவசியம் இருந்தால், இல்லை மருத்துவ பரிசோதனை செய்யும் அவசியம் இருந்தால் மட்டும் ஸ்ருதி தேவை என்பதினால் ஸ்ருதி வர்ஷினியுடம் தான் விட்டனர்..

இப்போது வீட்டில் பெண்களான சரஸ்வதி வர்ஷினியும்.. குழந்தைகள் தீரா ஸ்ருதியுமே தான் இருந்தது..

அனைவரும் சென்ற பிறகு அந்த வீட்டிற்க்குள் கூட வர்ஷினி நுழைய வில்லை.. இவர்கள் வீட்டு பக்கத்து வீடு பழைய காலத்து வீடு அங்கு ஒரு திண்ணை இருக்க. அதில் தான் குழந்தைகளோடு வர்ஷினி அமர்ந்து கொண்டது..

அந்த தெருவாசி முழுவதுமே சரஸ்வதியை தான் ஒரு மாதிரியாக என்ன டா இது கூத்து என்பது போல பார்த்து கொண்டு இருந்தனர்..

அந்த சமயம் சரியாக ஒரு ஆட்டோ சரஸ்வதி வீட்டு வாசல் முன் வந்து நின்றது.. அதில் இருந்து அந்த வீட்டின் மகளான சுப்ரியா வீட்டில் அணியும் இரவு உடையுடன் வந்து இறங்கினாள் அழுத முகத்தோடு...

தங்கள் வேலைகளை பார்க்க செல்ல பார்த்தவ அந்த தெருவாசிகள் கூட. இது என்ன டா என்று தெரிந்து கொள்ளும் பொருட்டு போகாது நின்று விட்டனர்…

இன்றும் அவசரமாக வெளியில் போகிறேன் வாசகர்களே... இது வரை தான் அடிக்க முடிந்தது.. மன்னியும்..









 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
914
Mam, Varuma, varatha nu sollunga. Refresh pannitae irukom
இன்று மதியம் கொடுக்கிறேன் பா.. ப்ளீஸ் நேற்று முழுவங வீட இல்லாட சூழல் ... இரவு தான் வீட்டிற்கு வந்தேன்..
 
New member
Joined
Jul 2, 2024
Messages
2
oh supriya purusar velaya kattitar pola
inum nalla venum intha ammavuku
 
Top