Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam....11

  • Thread Author
அத்தியாயம்…11

எப்போதுமே தான் அழைத்தால் மட்டுமே பேசும் மகன்.. அதுவும் பேச்சு கூட ஒன்னு இரண்டு வார்த்தைகள் மட்டுமே வார்த்தைகளாக வெளிவரும்..

பின்.. “பேபி கிட்ட கொடுக்குறேன் ம்மா .. எனக்கு ஆபிசுக்கு நேரம் ஆகுது..” என்று சொல்லி விட்டு பேத்தி தீராவிடம் கொடுத்து விடும் சின்ன மகன் இன்று அவனே தன்னை அழைப்பதை பார்த்து சரஸ்வதியின் கண்கள் கலங்கி விட்டது..

பின் இருக்காதா… தனித்து அதுவும் சின்ன குழந்தையோடு சென்று இருக்கும் சின்ன மகனை நினைத்து அழாத நாள் இல்லை… அதுவும் அவன் வாழ்க்கை இப்படி ஆனதில் பெரும் பங்கு தங்களுடையது என்றதில், அதுவும் அவன் வாழ்க்கைக்காக ஒன்றுமே செய்ய முடியாத தங்களின் நிலையை நினைத்து அவரால் இரவில் தூக்கம் கூட இல்லை என்றான நிலை தான்..

இதை பற்றி கணவனிடம் ஒரு முறை சொன்ன போது.. “அவன் நிலையில் இருந்து யோசித்து பாரு சரசு… அவன் இருக்க தொட்டு இன்று வரை நம் முன் இதை பற்றி சத்தம் போட்டோ இல்லை மரியாதை குறைவாகவோ பேசியது இல்லை..” என்ற கணவரின் பேச்சு நியாயமானது என்பதினால், மகன் தன்னிடம் சரியாக பேசவில்லை என்றாலுமே, தினம் அழைத்து பேசி விடுவார் சரஸ்வதி.

இன்று மகனே அழைக்கவும் அப்படி ஒரு சந்தோஷம்.. அந்த சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை..

அதனால் தான் அழைப்பை ஏற்றும் பேசாது மகனின்.. “ம்மா ம்மா.” என்ற பேச்சுக்கு பதில் கொடுக்க முடியாது பேசியை காதில் வைத்து கொண்டு இருக்க.

இதை பார்த்த தட்சணா மூர்த்தி தான் மனைவியிடம் இருந்து பேசியை வாங்கியவர்.

“என்ன தீக்க்ஷா நல்லா இருக்கியா…? ஒன்னும் பிரச்சனை இல்லையே… பேத்தி நல்லா இருக்காலே.?” என்று எப்போதும் அழைக்காத மகன் அழைத்ததில், பேத்திக்கு ஏதாவது சுக கேடோ என்று கேட்டவரின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த சரஸ்வதிக்கு கணவரின் பேச்சில்..

அப்படி இருக்குமோ குழந்தைக்கு உடம்பு ஏதோ சரியில்லையோ…. அதனால் தான் அழைக்காத மகன் அழைத்தானோ.. என்ற பயத்தில் கணவனிடம் இருந்து கை பேசியை பரித்து கொண்டவர்..

“ஏய்யா தீக்க்ஷா பேத்திக்கு ஒன்னும் இல்லலே.. அவள் நல்லா தானே இருக்கா..? அந்த வர்ஷி பொண்ணு வந்ததில் இருந்து குழந்தைக்கு சாப்பாட்டில் கூட குறை இல்லையேப்பா..?” என்று மகனை பேச விடாது கட கட என்று அவர் பாட்டுக்கு தானே ஒரு காரணத்தை கண்டு பிடித்து கொண்டு பேசிக் கொண்டு இருக்க.

“ம்மா ம்மா.. பேபிக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.. அவள் அம்மா கிட்ட தான் விளையாடிட்டு இருக்கா..” என்றதும் தான் அழைப்பின் இந்த பக்கம் இருந்த சரஸ்வதிக்கு ஒரு ஆசுவாச பெரும் மூச்சு ஒன்று வந்தது…

“போன போடாதவன் போடவும்.. முதல்ல சந்தோஷத்தில் பேச்சு வரல தீக்ஷா ஆனா உங்க அப்பா பேச்சில் நான் பயந்துட்டேன்…” என்று சொன்னவர் பின்..

“என்ன விசயம் தீக்க்ஷா…?” இத்தனை நாள் அழைக்காதவன் இன்று அழைத்து இருக்கிறான் என்றால், காரணம் இல்லாது மகன் அழைக்க மாட்டான் என்றதினால் சரஸ்வதி கேட்டார்..

இப்போது தீக்க்ஷயனிடம் இருந்து பேச்சு வராது போக. சரஸ்வதி.. “தீக்க்ஷா என்னப்பா என்ன பிரச்சனை..? உனக்கு உடம்பு சரியில்லையாப்பா…?” என்று கேட்டவரிடம் சொல்லி தான் ஆக வேண்டும் என்று நினைத்த தீக்ஷயன்..

“ம்மா அப்பா பக்கத்தில் தானே இருக்கார்.” என்று கேட்க..

சரஸ்வதி.. “ஆமாப்பா பக்கத்தில் தான் இருக்கார்.. என்னப்பா என்ன விசயம்..?” என்று மீண்டும் கேட்டவரிடம் தீக்க்ஷயன்..

“ம்மா போனை ஸ்பீக்கரில் போடுங்கம்மா. அப்பா கிட்டேயும் இந்த விசயம்.. சொல்லனும்..” என்றதும் சரஸ்வதிக்கு ஒரு வித பதட்டம் தொற்றிக் கொண்டது..

கை நடுக்கத்துடன் தான் தன் போனை சரஸ்வதி ஸ்பீக்கரில் போட்டது…

தீக்க்ஷயன் தொண்டையை கணைத்து கொண்டவன் பின் ஒரு வழியாக. “ம்மா நான் மேரஜ் செய்துக்கலாம் என்று இருக்கேன்.. பெண்ணுமே..” என்றதும் சரஸ்வதி உடனே.

“என்ன தீக்க்ஷா பொண்ணு அந்த நாட்டுக்காரியா. என்ன தீக்க்ஷா நாங்க உனக்கு செய்தது தப்பு தான்.. ஆனாலுமே இது போல வெளிநாட்டுக்காரிய மருமகளா கொண்டு வந்தா ஊரு உறவு..” என்று இன்னுமே சரஸ்வதி என்ன சொல்லி இருப்பாரோ..

தீக்க்ஷயன் ஒரே வார்த்தையில் .. “இனி நான் ஊரையும் உறவையும் பார்ப்பதா இல்ல.. அவங்க அவங்க வாழ்க்கையை அவங்க அவங்க தான் வாழனும்..” என்று சொன்னவன்..

பின்.. “ நீங்க பயப்படுவது போல வெளிநாட்டு பெண் எல்லாம் இல்ல. நம்ம நாட்டு பெண் தாம்.. அதுவும் உங்களுக்கு தெரிந்த பெண்ணுமே..” என்று தீக்க்ஷயன் சொன்னதுமே..

தட்சணா மூர்த்தி.. “வர்ஷினியாப்பா.” சரியாக கணித்து கேட்டார்.

“ஆமாம் பா. வசி தான்.. நாங்க இரண்டு பேரும் பேசி முடிவு செய்து இருக்கோம்.. அடுத்த மாதம் நான் இந்தியாவுக்கு வந்து விடுவேன்.. அவளுமே மெயில் செய்து இருக்கா இந்தியாவுக்கு ரிட்டன் ஆவது பற்றி.. இன்னும் ஒன் வீக்ல அவள் எப்போ இந்தியா வரா என்ற விசயம் தெரிந்து விடும்.. அதை வைத்து மேரஜ் டேட் பிக்ஸ் பண்ணுங்க…”

தீக்க்ஷயன் அனுமதி எல்லாம் கேட்கவில்லை.. முதலில் பேச தான் தீக்ஷயனுக்கு தயக்கமாக இருந்தது.. ஆனால் தொடங்கிய பின்.. இது தான் என்று விசயத்தை சொல்லி விட்டான்..

தட்சணா மூர்த்திக்கு மகிழ்ச்சி தான்.. பேசியில் வர்ஷினி தான் குழந்தையை பார்த்து கொள்கிறாள்.. சாப்பாடு கொடுக்கிறாள்.. குழந்தையுமே வர்ஷினி மீது பாசமாக இருக்கிறாள் என்று இந்த சில மாதங்களில் பேத்தியிடம் பேசியில் பேசும் போது பேத்தி பேசியதை வைத்து தெரிந்து கொண்ட விசயம் தான்..

அதோடு வர்ஷினி மிக நல்ல பெண்ணும் கூட.. விசாரிக்க வேண்டிய அவசியம் கிடையாது.. இன்னும் கேட்டால் ஒரு குழந்தைக்கு அம்மாவாக வர எப்படி ஒத்து கொண்டாள் என்று தான் யோசிக்க வேண்டும்..

தன் மைத்துனி உடனே எல்லாம் சம்மந்தம் பேச மாட்டார்.. நல்ல குடும்பம்… நல்ல பெண் என்று இருந்தால் தான் கை நனைத்து இருப்பார்.

வர்ஷினி பெற்றோர்கள் மட்டும் இறக்காது இருந்து இருந்தால், இந்த நேரம் வாசுவின் மனைவியாக ஆகி இருப்பாள்..

இதோ இந்த விசயம் தான் தட்சணா மூர்த்திக்கும் ஏன் சரஸ்வதிக்குமே இடித்தது..

தீக்க்ஷயன் விசயத்தை சொல்லி விட்டு பேசியை வைத்து விட்டான்..

ஆனால் சரஸ்வதி தான்.. “என்னங்க .. இவன் வர்ஷினியை கல்யாணம் செய்துக்குறேன் என்று சொல்லுறான்..” என்று ஒரு மாதிரியாக கேட்க..

தட்சணா மூர்த்திக்குமே இதனால் உறவுகளிடம் நாளை சந்திக்கும் பிரச்சனைகள் மனதில் எழுந்தாலுமே, மகன் வாழ்வு இனிமேலாவது நல்லப்படியாக இருக்க வேண்டும் என்று அவர் ஒரு முடிவு எடுத்தவராக..

“ஏன் வர்ஷினிக்கு என்ன குறை… உன் தங்கை சாந்தி கூட நீயும் தானே பெண் பார்க்க போன. பெண் பார்த்துட்டு வந்து என் தங்கை கொடுத்து வைத்தவ என்று அப்படி அந்த பெண்ணை பத்தி புகழ்ந்த.. இப்போ அந்த பெண்ணை உன் மகன் கட்டிக்கிறான் என்றதும் இப்படி தயங்குற.. ஏன் உனக்குமே உன் தங்கை யோசித்தது போல தான் நீயும் யோசிக்கிறியா.. நாளை பின்ன. நல்லது கெட்டது.. எல்லாம் நாம பார்க்கனும்..

குழந்தை உண்டாகினாலுமே நாம தான் பிரசவம் பார்க்கனும் என்ற யோசனையா..?” என்று இனி தன் மகன் விருப்பம் தான் முக்கியம்.. அவன் ஆசைப்பட்ட வாழ்க்கையை மகனுக்கு அமைத்து கொடுத்து விட வேண்டும் என்ர முடிவோடு தன் மனைவியிடம் ஆவேசமாக பேசினார்..

“இல்லங்க நான் அந்த பெண்ணை பத்தி ஒரு குறையும் சொல்லலேயே.. என் தங்கச்சி..” என்று சரஸ்வதி இழுக்கும் போதே..

“உன் தங்கச்சி மகனுக்கு வேறு பெண்ணை பார்த்து திருமணமும் செய்தாச்சு.. இன்னுமே நீ அதை பத்தி பேசாதே நினைக்காதே..” என்று விட்டார்..

இனி வர்ஷினி என் மகனுக்கு மனைவியாக போகிறவள்.. அந்த நினைப்பு மட்டும் தான் இருக்க வேண்டும்.. என்பது போல் தான் தட்சணா மூர்த்தியின் பேச்சு இருந்தது.

“இல்லேங்க போன வாரம் கூட என் தங்கை சாந்தி.. இப்போ வாசுவுக்கு கட்டின பெண்.. அப்படி ஒன்னும் நல்ல குணம் இல்லையாம்.. அந்த பெண்ணையே கட்டி..” என்றதிலேயே தட்சணா மூர்த்தி..

“என்ன சரசு.. என்ன பேச்சு இது.” என்று கண்டித்தவர்..

“இனி வர்ஷினி நம்ம மகன் விரும்பும் பெண்.. இதை மட்டும் மனதில் வைத்து யோசி… நம்ம மகனுக்கு நாம செய்தது போதும்.. இனியாவது அவன் சுகப்படட்டும்.” என்று விட்டார்..

ஆனால் இவர் எளிதில் சொல்லி விடுவார்.. இனி வர்ஷினி தீக்க்ஷயனுக்கு மனைவியாக போகிறவள் இப்படி தான் யோசிக்க வேண்டும் என்று.

ஆனால் அனைவரும் அப்படி யோசிப்பார்களா. என்ன..? இதோ மூத்த மகன் மகேந்திரன் கடையை மூடி விட்டு இரவு பத்து மணிக்கு தான் சாப்பிட வருவான்..

அவன் மனைவி இந்த வீட்டின் மூத்த மருமகள் ஸ்வேதா அவள் எட்டு மணிக்கு சாப்பிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்..

கணவன் வீடு வரவும் தான் மீண்டும் தன் அறையை விட்டு வெளி வருவது.. அன்றும் கணவன் வந்ததும் கணவன் முன் தட்டை எடுத்து வைக்க.

எப்போதுமே இந்த நேரத்தில் மாமியாரும் மாமனாரும் சாப்பிட்டு மாத்திரை போட்டு தங்கள் அறைக்கு சென்று விடுபவர்கள் இன்று செல்லாது ஹாலில் அமர்ந்து கொண்டு இருப்பதை பார்த்துக் கொண்டே தான் ஸ்வேதா கணவனுக்கு பரி மாறியது என்ன விசயமா இருக்கும் என்று உள்ளுக்குள் யோசித்து கொண்டே.

மனைவியின் குணம் நன்கு அறிந்த மகேந்திரன்.. “நினைப்பை இங்கு வைத்து கொண்டு சாப்பாடு போடு டி..” என்று கணவன் சொன்ன பின்னும் கூட ஸ்வேதாவுக்கு என்னவாக இருக்கும் என்னவாக இருக்கும் என்று இதே யோசனை தான்.

பெரிய மகன் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்த தட்சணா மூர்த்தி சரஸ்வதியுமே மகேந்திரன் கை கழுவி விட்டு வரவும்.

“மகேந்திரா உன் கிட்ட கொஞ்சம் பேசனும்.” என்று தட்சணா மூர்த்தி சொன்ன நொடி..

ஸ்வேதா.. “அப்போ நான் இங்கு இருக்கட்டுமா..? இல்ல ரூமுக்கு போகட்டுமா.?” என்று கொஞ்சம் இடக்காக தான் கேள்வி வந்து விழுந்தன அவளிடம் இருந்து.

அதற்க்கு தட்சணா மூர்த்தியிடம் இருந்து. “இந்த வீட்டின் மூத்த மருமகள் மட்டும் இல்லாம நீ என் தங்கச்சி மகளும் கூட.. உன்னை விட்டு எந்த ரகசியம் இது வரை இந்த வீட்டில் பேசி இருக்கோம்.. நீயும் தான் பேச விட்டு விடுவியா..?” அவளை விடவும் இடக்காக பதில் அளித்தாற் தட்சணா மூர்த்தி..

எப்போதும் போல தன் தாய் மாமன் பேச்சுக்கு எந்த பதிலும் சொல்லாது போனாலுமே ஸ்வேதா உள்ளுக்குள் அப்படி ஒரு திட்டு தன் தாய் மாமனுக்கு.

இவர் தங்கை மகள் தானே நான்.. அதை வைத்து எந்த சலுகையும் இந்த வீட்டில் எனக்கு இவர் கொடுத்து இருக்காரா..?. இவருக்கு அத்தையே தேவலாம் போல ஒரு முறைக்கு நான்கு முறை சொன்னா என் பேச்சை கவனிக்கவாவது செய்யிறார் என்று வாய்க்குள் முனு முனுத்து கொண்டு உம் என்று முகத்தை வைத்தவாறு தன் கணவன் பக்கத்தில் அமர்ந்தவளிடம்..

மகேந்திரன்.. “குழந்தைக்கு பால் குடித்துட்டியா..?” என்று கேட்டவனை முறைத்து கொண்டே.

“ம் ம் கொடுத்துட்டேன் கொடுத்துட்டேன்.. “ என்று ஒரு மாதிரியாக சொல்ல.

மகேந்திரன்.. “ என்ன டி பேச்சும் குரலும் ஒரு தினுசா இருக்கு..” என்று கேட்டதற்க்கு..

ஸ்வேதா.. “ கேள்வி ஒரு தினுசா இருந்தா பதிலுமே ஒரு தினுசா தான் இருக்கும்ம்ம்.” இதுவுமே ஒரு மாதிரியான டோனில் தான் ஸ்வேதா சொன்னது..

“அப்படி என்ன டி நான் கேட்டுட்டேன்.. குழந்தைக்கு பால் குடுத்திட்டுயா என்று தானே…” என்று மகேந்திரன் கேட்டதற்க்கு..

“நம்ம பெண்ணுக்கு ஏழு வயது ஆகுது.. என்னவோ என் பாலை குடிப்பது போல கேட்கிறிங்க…” என்று கழுத்தை ஒரு தினுசாக திருப்பிக் கொண்டு கேட்க..

“ஓ..” என்று இழுத்தவன் அதோடு விட்டு இருக்கலாம்..

ஆனால் அடுத்து… “ தூங்கிட்டாளா..?” என்று மனைவியிடம் கேட்க..

இப்போது சரஸ்வதி.. “ எங்களுக்கு நேரம் போகல. அதனால எங்க முன் சண்டை போடுங்க என்று நாங்க இங்கு நிற்க வைக்கல.. உங்க அப்பா முக்கியமான விசயம் பேசனும் என்று சொன்னாரே.. அது என்ன ஏது என்று கேட்காம இது என்ன ..?” என்று திட்ட. மகேந்திரன் அமைதியாகி விட்டான்..

ஆனால் மருமகள்.. “ நாங்க என்ன நீங்க சொல்ல வேண்டாம் என்று உங்க வாயை அடைத்தா இருக்கோம்..” என்று பதில் பேச.

தட்சணா மூர்த்தி.. “ என் தங்கை உன்னை வாயை அடக்கி வளர்த்து இருக்கலாம்..” என்ற பேச்சில் எப்போதும் போல தன் தாய் மாமனை மனதிற்க்குள் திட்ட தொடங்கி விட..

தட்சணா மூர்த்தி சொன்ன. “ உன் தம்பிக்கு ஒரு பெண்ணை பிடித்து இருக்காம்.. “ என்று சொன்ன நொடியில்.. தன் மாமனை திட்டுவதை மறந்து விட்டவள்..

மாமனின் பேச்சை உன்னிப்பாக கவனிக்க தொடங்கினாள்..

அதுவும் அவர் சொன்ன ஒரு பெண்ணை விரும்புகிறான் என்றதும் மனது யாரை யாரை..? என்று அறிய துடித்த நொடியோ…

அந்த நாட்டில் வேலை செய்யும் பெண்ணோ… நிறைய சம்பாதிக்கும் பெண்ணோ.. இப்போவே மச்சினர் நாங்க தொட முடியாத தூரத்தில் போயிட்டார்.. இதுல அந்த பெண்ணும் லட்ச கணக்கில் சம்பாதித்தால்..

இவர் சம்பளம் அவளுடையது.. வீடு தொழில் பங்கு அய்யோ அய்யோ என்று நெஞ்சில் அடித்து கொள்ள தான் இல்லை ஸ்வேதா. தனியாக இருந்தால் அதையும் செய்து இருந்து இருப்பாள் தான்.. ஆனால் அதை ஈடுக்கட்டும் வகையாக மனதில் அப்படி ஆத்து ஆத்து போய் விட்டாள்..

அவளை இன்னும் யோசிக்க வைக்காது தட்சாணா மூர்த்தி பெண் யார் என்பதை எந்த மேல் பூச்சும் இல்லாது..

“வர்ஷினி. தான் பெண்..” என்று கூறி விட்டார்..

அந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்குமே வர்ஷினி யார் என்பதும் அவள் இப்போது ஜார்டனில் இருப்பதும்.. தீராவை அவள் தான் பார்த்து கொள்கிறாள் என்பதுமே அந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்குமே தீராவின் பேசியில் உரையாடலின் மூலம் அனைவருக்குமே தெரியும்..

மகேந்திரன்.. “ அந்த பெண்ணா…? எப்படிப்பா.. ஒரே குடும்பத்தில் ஒருவனுக்கு..” என்று ஆரம்பிக்கும் போதே.

கட கட என்று மனக்கணக்கு போட்ட ஸ்வேதா கணவனின் இந்த பேச்சில். “என்ன ஒரே குடும்பம். தாயும் பிள்ளையா இருந்தாலுமே வாயும் வயிறும் வேறு தான்.. இதுல சிவா உங்க சித்தி பையன் தான்.. அதுவும் இல்லாம அது முடிந்து போன ஒரு விசயம்.. சிவாக்கு கூட கல்யாணம் முடிஞ்சு அவர் குடும்பமா இருக்கார்.. இனி அந்த பெண்ணை இது போல ஏற்கனவே வேறு ஒருவனுக்கு நிச்சயம் செய்த பெண் என்று சொல்லாதிங்க.. அது அந்த பெண்ணுக்கும் நல்லது கிடையாது.. நம்ம வீட்டிற்க்கு தான் அந்த பெண் வருவதால் நம்ம குடும்பத்திற்க்கும் நல்லது கிடையாது..”

ஸ்வேதாவின் அந்த பேச்சில் அவளையே நீ ஒன்றும் அவ்வளவு நல்லவள் கிடையாதே என்று தந்தையும் மகனும் பார்த்தனர் என்றால், சரஸ்வதியோ எப்போதும் போல எடுப்பார் கை பிள்ளை போல..

“பாருங்க நம்ம மருமகள் கூட சொல்றதை… ஸ்வேதா சொல்வது போல் இனி வர்ஷினியை வேறு ஒருவனுக்கு நிச்சயம் செய்தவள் என்று பேச கூடாது.. “ என்று சொன்னவர் தான் பிற்காலத்தில் அதையே சொல்ல போகிறார் என்று அவருக்கே தெரியாது சொன்னார்..

ஆம் சரஸ்வதி நல்ல பெண்மணி தான். ஆனால் அவரிடம் இருக்கும் ஒரு குணம். யார் என்ன சொன்னாலுமே நம்பி விடுவார். அதாவது எடுப்பார் கை பிள்ளை.. இந்த இவரின் குணத்தால், யார் பாதிக்கப்பட்டார்களோ இல்லையோ.. ஆனால் முன் தன் மகனின் வாழ்க்கை இவரின் இந்த குணத்தினால் தான் பாதிக்கப்பட்டது..

அதாவது தன் அண்ணன் மகளின் உடல் நிலை கருதி தான் தன் மகனுக்கு அந்த பெண் வேண்டாம் என்று சொன்னது.

ஆனால் பின் அண்ணன் அண்ணியின் பேச்சில் அப்படியே நம்பி விட்டு.. அதே பெண்ணையும் எடுத்து கொண்டது.

இப்படி முன் தான் இவரின் இந்த குணத்தால் மகனின் வாழ்க்கை வாழாது பாழாகி போய் விட்டது என்று பார்த்தால், மறுபடியுமே இவரின் இந்த குணமே மீண்டும் தீக்க்ஷயனின் வாழ்க்கையில் அடித்தளத்தை ஆட்ட காண வைக்கும் என்பது தெரியாது..

பின் குடும்பமாக உறவு முறை அனைவருக்கும் சொல்லி விட்டனர். வர்ஷினி தான் தெரியுமே.. அதனால் ஒரு சிலர் இதில் என்ன இருக்கு என்று சொன்னாலுமே, ஒரு சிலர் எப்படி இது சரிப்பட்டு வரும் என்றும் பேச்சுக்கள் எழ தான் செய்தனர்.

ஆனால் சரஸ்வதியின் தங்கை சாந்தாவோ.. “ரொம்ப நல்ல பெண் தான் அக்கா அந்த பெண்… எனக்கு தான் கொடுத்து வைக்கல… அந்த பெண்ணையே நம்ம தீக்க்ஷயனுக்கு கட்டி வெச்சிடுங்க அக்கா… இனியாவது தீக்க்ஷயன் வாழ்க்கை நல்லா இருக்கட்டும்..” என்று கூறினார்…

தீக்க்ஷயனின் முதல் மனைவி சரஸ்வதிக்கு அண்ணன் மகள் என்றால், சாந்தாவுக்குமே அண்ணன் மகள் தானே… தன் அண்ணன் மகளினால் தான் தீக்ஷயனின் முதல் வாழ்க்கை இப்படி ஆகி விட்டது.. இனியாவது சுகப்படட்டும் என்ற எண்ணமும் கூடவே..

வர்ஷினியை மருமகளாக எடுத்தால், அனைத்துமே அவளுக்கு தானே செய்ய வேண்டி இருக்கும் என்று நினைத்து தான் அவர் அந்த பெண்ணை எடுக்கவில்லை..

ஆனால் இப்போது வந்த மருமகளுக்கு அவர் எதிர் பார்த்தது போல் தான் ஏகப்பட்ட உறவுகள். பெண்ணுக்கு ஒன்று என்றால் போதும் ஏகப்பட்ட உறவுகள் வந்து நிற்கும்..

இப்போது அந்த பெண்ணை எடுத்ததினால், அதுவே தான் பெரும் பிரச்சனையாகி நிற்கிறது.. உள்ளூரில் தான் பெண் எடுத்தது..

அந்த பெண்ணுக்கு ஒரு தலை வலி என்று இவள் பேசியில் சொல்லி விட்டாள் போதும்..

முதலில் அப்பா அம்மா. பின் அண்ணன் அண்ணி.. பின் அக்கா மாமா. அடுத்த நாள் தாய் மாமன் மாமி அத்தை மாமா.. சித்தப்பா சித்தி என்று ஒரு தலை வலிக்கு மூன்று நாட்கள் உறவுகள் படை எடுத்து வீட்டிற்க்கு வந்து விடுவார்கள்..

இவர்கள் அனைவருக்குமே பாவம் இவர் தான் பார்த்து உபசரித்து சமைத்து கொடுத்து என்று தமிழர்களின் பண்பாட்டை காப்பாற்றி சாந்தா அனுப்பி வைப்பார்..

பெரிய மருமகள் அவள் அறையை விட்டு வெளி வருவது கிடையாது.. அவள் சொந்தத்திற்க்கு நான் பார்க்க வேண்டுமா என்ற எண்ணம் போல அவளுக்கு.

ஆனால் சாந்தாவினால், சம்மந்தியானவர்களை அப்படி விட்டு விட முடியுமா…? அனைத்துமே செய்வார்.. பாவம் அவரே மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்..

இது ஒரு பிரச்சனை என்றால், ஒரு முறை அவர்கள் வீட்டு உறவுகள் வந்த அன்று… காபி கொடுத்து விட்டார்.. ஒருவர் சர்க்கரை இன்னும் வேண்டும் என்று கேட்க…

மருமகள் கவிதாவிடம்.. “மாமா கிட்ட காபி கப்பை வாங்கிட்டு போய் கொஞ்சம் சர்க்கரை போட்டு எடுத்துட்டு வா…” என்று சொன்னது தான்..

அவர்கள் வீட்டு பெண்ணை தாங்கள் கொடுமை படுத்துவதாகவும்.. அதுவும் உடம்பு சரியில்லாத பெண்ணை… அந்த உடம்பு சரியில்லை என்றால் பெரிய பிரச்சனை எல்லாம் கிடையாது.. நேத்து என்ன தெரியல தூக்கமே வரல.. காலையில் இருந்து கண் எரிச்சலா இருக்கு என்று எப்போதும் போல பேசியில் பேசும் போது தன் அம்மாவிடம் சொன்னது தான்.. எப்போதும் போல ஒரு படையே திரண்டு வீடு வந்து விட்டது அவர்கள் வீட்டு பெண்ணை பார்க்க..

இதோ வந்த இடத்தில் புது பஞ்சாயத்து வந்து விட இன்னும் இருக்கும் உறவையும் அழைத்து விட்டவர்கள் அப்படி ஒரு பேச்சு அவர்கள் வீட்டு பெண்ணை அதுவும் உடம்பு சரியில்லாத போதும் பெண்ணை கொடுமை படுத்தியதாக…

அது ஆரம்பம் தான்.. இது போல இதோ இன்று வரை தொடர்கிறது..

இப்போது சாந்தாவுக்கு வர்ஷினிக்கு கண்டு கொள்ள யாரும் இல்லை என்று தான் எடுக்கவில்லை.. அந்த பாவம் தான் உறவினாலேயே தன்னை கடவுள் அடித்தார் போல என்று.. வர்ஷினி நன்றாக இருக்க வேண்டும்.. என்று வேண்ட..

இதோ அந்த பெண்ணை தன் அக்கா மகனே திருமணம் செய்து கொண்டால், நல்லது என்று சொன்னது.

இப்படி ஒரு வழியாக தீக்க்ஷயனின் பக்கம் வர்ஷினியை மருமகளாக ஏற்றுக் கொள்ள சம்மதித்து விட.

அடுத்து வர்ஷினி தன் வீட்டவர்களின் சம்மதம் கேட்க வேண்டும்.. அவ்வளவே.. இதோ வர்ஷினி தங்கள் திருமணத்திற்க்கு சம்மதம் கேட்க முதலில் தன் அண்ணனை தான் அழைத்தாள்..

பார்க்கலாம் அவள் பக்கத்தில் இருந்து என்ன வருகிறது என்று..














 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
🤩🤩எங்க ஹீரோவுக்கு ஸ்டார்ட் பண்றது மட்டும் தான் டிரபிள் போல 😉 😉 😉 ஆரம்பிச்சுட்டா ஜெட் வேகம் தான் 🤗 🤣 🤣

முதல்ல காதலை சொல்ல தயங்குனான் 🙂🙂🙂சொன்ன உடனே இங்கிலீஷ் கிஸ் தான் 😘😘😘😘😘😘

அம்மா கிட்டயும் ஆரம்பிக்க தான் பயம் 🤣 🤣 🤣 இப்போ உறுதியா சொல்லியாச்சு 🤩 🤩 🤩

ஸ்வேதா ஏதோ திட்டம் போடுறா போலயே🤧🤧🤧 பெத்தவங்க இல்லாதவ நம்ம அடக்கி வச்சிடலாம் என்று நினைக்கிறாளோ 🤔🤔🤔 ஏன்னா வர்ஷினி உடன் பிறப்புகள் பத்தி எல்லோருக்கும் தெரியுமே இவளுக்கு சப்போர்ட்டா வர மாட்டாங்க நம்ம ராஜ்ஜியம் தான் என்று நினைக்கிறாளோ 🤔 🤔 🤔


வர்ஷினி பிறந்த வீட்டு லட்சணம் என்னவோ 🧐 🧐 🧐 🧐
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
வர்ஷினிக்கு யாரும் இல்லை நம்ம இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம்ன்னு நினைக்கிறாளா ஸ்வேதா 🤔🤔🤔
இரண்டாவது கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்காம இருந்துட்டு இப்போ இவ்வளவு யோசிக்குறாங்க... 😒😒😒
 
Member
Joined
May 11, 2024
Messages
61
Varshini kku முன்னாடி பார்த்த பையன் பேர் வாசுனு இருக்கு ஒரு இடத்தில் ஓர் இடத்தில் சிவானு இருக்கு...

ஸ்வேதா ஏதோ மாஸ்டர் பிளான் போட்டுட்டா... இதில் varshini அண்ணா அக்கா என்ன சொல்லுவாங்களே
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
914
Varshini kku முன்னாடி பார்த்த பையன் பேர் வாசுனு இருக்கு ஒரு இடத்தில் ஓர் இடத்தில் சிவானு இருக்கு...

ஸ்வேதா ஏதோ மாஸ்டர் பிளான் போட்டுட்டா... இதில் varshini அண்ணா அக்கா என்ன சொல்லுவாங்களே
மாற்றம் செய்து விடுகிறேன் பா.. நன்றி பா
 
Top