Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam....12

  • Thread Author
அத்தியாயம்…12

வர்ஷினி இங்கு வந்ததில் இருந்து இந்த ஆறுமாதத்தில் தன் அக்கா அண்ணாவுக்கு அழைத்து பேசியது ஏழு முறையோ எட்டு முறையோ தான்.. பேசிய நிமிடங்கள் கூட ஒரு சில மணித்துளிகள் தான்..

பேச்சுமே… நீ எப்படி இருக்க…? சாப்பாடு எல்லாம் எப்படி ..? உடம்பை கவனித்து கொள்.. பாதுகாப்பா இரு,.. என்ற பேச்சுக்கள் எல்லாம் கிடையாது..

புத்தியோடு பணத்தை சேர்த்து வைத்து கொள்… பார்த்து செலவு செய்… முன் போல அப்பா அம்மா இல்லை.. புத்தியோடு பிழை என்ற பேச்சுக்கள் மட்டுமே தான் அவர்களிடம் இருந்து வரும்..

வர்ஷினியுமே முன் போல் எல்லாம் பாசமாக பேசவும் இல்லை.. அதனால் பதிலுக்கு அவர்களிடம் இருந்து பாசம் கிடைக்கவில்லையே என்று ஏங்கவும் இல்லை. இவர்கள் இப்படி இப்படி என்று தெரியும் வரை தான் அவர்கள் சொல்வது போல புத்தி இல்லாது இருந்து விட்டாள்..

தெரிந்த பின்.. இவர்கள் இப்படி தான் என்று தெரிந்து விட்டதில் நிதர்சனத்தை ஏற்க பழகி கொண்டு அதோடு ஒன்றி வாழவும் பழகி கொண்டு விட்டாள் என்பதினால், இப்போது எல்லாம் அவர்களின் பேச்சு அவளை காயம் படுத்தவில்லை..

இன்று தீக்க்ஷயன் .. “என் வீட்டில் ஒகே ஆகிடுச்சி வசி.. இனி நீ தான் உன் வீட்டிலே பேசனும்.. நீ பேசுடுவே தானே..” என்று ஒரு வித தவிப்போடு தான் கேட்டது..

என்ன தான் இருந்தாலுமே இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொடுக்க அவர்கள் தயங்குவார்கள் என்பது அவனின் பயம்..

ஆனால் அந்த பயம் நம் வர்ஷினிக்கு இல்லை என்பதினால், சிரித்து கொண்டே “நீங்க டென்ஷன் ஆகாதிங்க தீனா.. . நான் பேசிக்கிறேன்…” என்று சொன்னவள் சொன்னது போல. முதலில் தன் அண்ணனை அழைத்தவள்..

எப்போதும் போல அண்ணன் பேச்சு இருக்க. அது முடியும் வரை காத்திருந்தவள் பின் இது போல தீக்க்ஷயன் தீக்ஷக்யன் யார்.. தீரா என்று அனைத்தையும் பாடம் படிப்பது போல் தான் சொன்னது..

பின் தன் முடிவுமாக.. “நான் அவரை மேரஜ் செய்துக்க நினைக்கிறேன்…” என்றும் கூறி விட்டாள்..

ஒரு நிமிடம் ஸ்ரீவச்சனிடம் இருந்து எந்த பேச்சும் இல்லை… அவனின் மெளனம் வர்ஷினிக்கு பதட்டத்தை எல்லாம் கொடுக்கவில்லை..

ஆனால் பக்கத்தில் அமர்ந்திருந்த தீக்க்ஷயனுக்கு ஸ்ரீவச்சனின் அந்த மெளனம் பதட்டத்தை ஏற்படுத்தியது.. கூடவே என்ன இது இப்படி ஏதோ செய்தி வாசிப்பது போல வாசிக்கிறாள் என்று அவன் வசியிடம் கோபமும் சேர்ந்தே தோன்றியது..

ஆனால் தீக்க்ஷயனின் இந்த பதட்டம் கோபம் எல்லாம் தேவையே இல்லை என்பது போல் தான் அவளின் அண்ணன் ஸ்ரீவச்சனின் பேச்சு இருந்தது.

“நீ இந்த மேரஜில் தெளிவா தானே இருக்க..?” என்ற கேள்விக்கு வர்ஷினியிடம் இருந்து..

ஒரு.. “ம்..” என்று மட்டும் தான் வெளிப்பட்டது..

தொடர்ந்து. “ஏற்கனவே மேரஜ் ஆனவர் ஒரு பேபி இருக்கு.. இந்த விசயம் எல்லாம் உனக்கு பெருசா தெரியலேன்னா… மேரஜ் செய்துக்கோ.. ஆனால் அது தான் உன் வாழ்வு.. இடையில் நான் அவசரப்பட்டுட்டேன் என்று சொல்லி என் கிட்ட வர கூடாது..” என்று சொல்லி விட்டான்..

இது போலான சம்மதம் தீக்ஷயனுக்கே அதிர்ச்சியை தந்தது. அதிர்ந்தவன் வர்ஷினியை பார்த்தான்..

அவளுக்கு இவன் போன்று அதிர்ச்சி எல்லாம் இல்லை போல.. அதனால் அவள் முகமும் சாதாரணமாக இருந்தது.. அதே போன்று .. பேச்சு குரலுமே.

“எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. எனக்கு ஒகே தான். இந்த மேரஜிக்கு பின் எனக்கு ஏதாவது பிரச்சனை வந்தாலுமே, நானே பார்த்து கொள்கிறேன்..” என்று விட்டாள்..

இந்த பேச்சிலேயே தீக்க்ஷயன் அதிர்ந்து விட்டான் என்றால், அடுத்து அவளின் அக்கா கீர்த்தனா பேசும் லட்சணத்தில் தீக்க்ஷயன் சிலையாகி விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்…

ஸ்ரீவச்சனை அழைத்து பேசிய பின்னே.. கீர்த்தனாவுக்கு அழைத்தாள்..

அழைப்பை ஏற்ற கீர்த்தனா எப்போதும் போல… “என்ன டி பணத்தை பார்த்து தானே செலவு செய்யிற.. பார்த்து டி… அப்புறம் பத்தல என்று பேங்கில் இருக்கும் பணத்தில் கைய் வைத்து விடாதே.. அதை வைத்து தான் உனக்கு கல்யாணம் செய்யனும்.. அதை நியாபகத்தில் வைத்து கொள்… இன்னொன்னு இப்போ அப்பா அம்மா இல்ல.. உன் செலவை பார்த்து கொள்ள.. புரியுதா புத்தியோட பிழை..” என்று ஒரு பாட்டு பாடிய பின் தான் கீர்த்தனா.

வர்ஷினியிடம் என்ன விசயம் என்றே கேட்டது… சொன்னால் ஸ்ரீவச்சனிடம் எந்த மாடிலேஷனில் சொன்னாளோ அதே மாடுலேஷனில் தான் வர்ஷினி தன் அக்கா கீர்த்தனாவிடமும் சொன்னது.

ஸ்ரீவச்சனிடம் இருந்தாவது ஒரு நொடி மெளனம்.. ஆனால் கீர்த்தனா வர்ஷினி விசயத்தை சொன்ன அடுத்த நொடி.

“ம் பரவாயில்லை இரண்டாம் தாரம் எல்லாம் யோசிக்காது தெளிவா தான் முடிவு எடுத்து இருக்க.. இந்த காலத்தில் வயசு. முதல் கல்யாணமா இரண்டாம் தாரமா எல்லாம் பார்த்துட்டு இருந்தா வாழ்க்கையில் செட்டில் ஆக முடியாது..”

அதோட உனக்கு இடம் பார்த்து கல்யாணம் செய்து வைக்க அம்மா அப்பாவா இருக்காங்க.. பார்த்து விசாரித்து நடத்தி வைக்க. நீ எடுத்த முடிவு ரொம்ப நல்ல முடிவு தான்.. அந்த பையனை பத்தி நல்ல மாதிரி தான் உறவு முறையில் பேசிக்கிட்டாங்க..” என்று தன் ஒப்புதலை இது போன்று சொன்ன கீர்த்தனா கூடவே…

“செலவு எல்லாம் இழுத்து வைத்து கொள்ளாதே டி.. பேங்கில் இருக்கும் மொத்த பணத்தையும் செலவு செய்துடாதே… ஆத்திரம் அவசரத்திற்க்கு கையில் கொஞ்சம் மிச்சம் வைத்து கொள்..” என்று கீர்த்தனா இவ்வாறாக தன் பேச்சை முடித்து கொண்டாள்.

இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த தீக்ஷயனுக்குமே ஆரம்ப அதிர்ச்சி இப்போது கிடையாது.. பெண்ணவளின் பாவனை செயலை பார்த்த பின்..

இருவரிடமும் பேசி விட்டு வர்ஷினி தீக்க்ஷயனின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்..

அவள் எப்போது அமர்வாள் என்று காத்து கொண்டு இருந்தது போன்று.. இத்தனை நேரம் தந்தையின் மடியில் அமர்ந்து கொண்டு கையில் இருந்த பொம்மையோடு விளையாடி கொண்டு இருந்த தீரா வர்ஷினியின் மடிக்கு இடம் மாறி அமர்ந்து கொண்டவள்.. மீண்டும் தன் கையில் வைத்து இருந்த அந்த பொம்மையோடு விளையாட்டை தொடர…

சிறிது நேரம் இருவருமே குழந்தையின் விளையாட்டை பார்த்து கொண்டு இருந்தனர்.. எத்தனை நேரம் தான் ஒருவருக்கு ஒருவர் பேசாது இருப்பது.. பேசி தானே ஆக வேண்டும்.. அதை வர்ஷினி தான் தொடங்கி வைத்தாள்.. இருவருக்கும் இடைய நேர்ந்த அந்த மெளன நாடகத்தை வர்ஷினி தான் முடித்து வைத்தாள்..

“என்ன தீனா…என் வீட்டவங்க பேச்சில் அதிர்ச்சியாகி பேச்சு நின்னுடுச்சா..?” என்று கேட்டவளையே இப்போது தீக்க்ஷயன் பார்த்திருக்க…

தீக்க்ஷயனின் அந்த பார்வையில் பெண்ணவளுக்கு கண்கள் கலங்குவது போல் தான் ஆனது.. ஆனால் கலங்கவில்லை… தன் பெற்றோர் இறந்த புதியதில் கலங்கியும் பரிதவித்தும் போய் தான் நின்றாள்..

பின் தன்னை தானே தேற்றிக் கொண்டவளின் மனதில் ஒரு உறுதி.. இனி எதற்க்காகவும் கலங்க கூடாது என்று… அதன் தாக்கத்தில் தன் கலங்கிய கண்ணீர் இருந்து நீர் வெளியே வராது பார்த்து கொண்டவள்..

தன் தீனாவை பார்த்து ஒரு சின்ன புன்னகை புரிந்தாள்..

அந்த புன்னகையை பார்த்த அவளின் தீனாவுக்கு தான் இவள் இந்த சிரிப்புக்கு தன் எதிரில் அழுதே இருந்து இருக்கலாம் என்பது போல் இருந்தது அவளின் அந்த வலி மிகுந்த சிரிப்பு…

தீக்க்ஷயனுக்கு அவளின் அந்த பாவனையை பார்க்க முடியவில்லை… ஆனாலுமே அதை பற்றி பேசாது..

“ம் “ என்று அவனுமே சிரித்தவன் போல நடித்தவன்..

பின் தங்களின் திருமணத்தை பற்றி இருவருமே பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்..

தீக்க்ஷயன் தான் முதலில்.. “உனக்கு கிராண்டா மேரஜ் செய்யனும் என்பது போன்று ஆசை இருக்கா..?” என்று வர்ஷினியின் விருப்பம் அறிய கேட்டான்..

அவனுக்கு விமர்சனையாக திருமணம் செய்வதில் விருப்பம் கிடையாது… முதல் திருமணத்தை அப்படி கொண்டாட்டமாக தான் செய்தனர்..

அதோடு இரண்டாவது திருமணத்தில் எந்த ஒரு செயலும் தன் முதல் திருமணத்தை நியாபகம் படுத்த கூடாது என்ற எண்ணமும்.. இதை விட முக்கியமான காரணம்..

இப்போது தீராவுக்கு கொஞ்சம் கொஞ்சம் தன்னை சுற்றி நடப்பதை கவனிக்க தொடங்கி விட்டாள்..

இன்னுமே பள்ளி சேர்க்கவில்லை என்றாலும் நான்காவது வயதில் இருப்பவள் ஆயிற்றே… தங்கள் ஆடம்பர திருமணம் பெண்ணின் மனதில் படிந்து விட கூடாதும் என்பது அவன் எண்ணம்..

ஆனால் தன் எண்ணத்தை வர்ஷினியிடம் திணிக்கவில்லை.. காரணம் அனைத்துமே தனக்கு தான் இரண்டாவது.. ஆனால் வர்ஷினிக்கு முதல் தானே.. அவளுக்குமே தனிப்பட்ட ஆசைகள் விருப்பம் என்று இருக்க செய்யுமே என்று அவள் விருப்பம் அறிய கேட்டான்..

ஆனால் வர்ஷினிக்குமே ஆடம்பரமாக திருமணம் செய்து கொள்ளவதில் விருப்பம் இல்லை.. அதற்க்கு அவளுக்குமே ஒரு சில காரணங்கள் இருக்க தான் செய்தது..

அதில் முதன்மையான காரணம் ஆடம்பரம் என்றால் நகை புடவை.. புடவைக்கு ஏற்ற பூ அலங்காலம் செய்ய என்று இவளுமே அனைத்திற்க்கும் செல்வது போன்று இருக்கும்..

அது அவளின் நின்று போன திருமணத்தை அவளுக்கு நியாபகம் செய்யும்.. நியாபகம் படுத்தும் என்றால், மாப்பிள்ளையை கிடையாது.. அவளின் பெற்றோர்களை தான்.. எத்தனை ஆசை ஆசையாக தன் திருமண வேலைகளை பார்த்தார்கள்.. அதனால் அவளுமே எளிமையான திருமணத்தை தான் விரும்பினாள்..

இன்னுமே காரணங்களாக ஆடம்பரம் என்றால் இரண்டு பக்கமும் எடுத்து கட்டி செய்ய வேண்டும்.. இவளுக்கு யார் செய்வர்.. அதோடு எதற்க்கு வீண் செலவு என்பதும் அவள் எண்ணம்.

ஆனால் இதை எல்லாம் சொல்லாது வர்ஷினியுமே.. “மேரஜ் கோயிலில் தாலி கட்டி சிம்பிளாவே முடித்து கொள்ளலாம் தீனா. பின் மேரஜை ரிஜிஸ்ட்டர் செய்து விட்டு, ஈவினிங் ஒரு சின்ன பார்ட்டி ஒரு கெட்டு கெதர் போல வைத்து விடலாம். லட்டூக்கு எதுவும் வித்தியாசமாக தெரிந்து விட கூடாது.” என்று அவள் சொன்னதில் தீக்க்ஷயன் தன்னை மறந்து அவனின் வசி தோள் மீது கை போட்டு கொண்டதோடு நெருங்கியும் அமர்ந்தவனின் பார்வை வசியின் மீது மைய்யலாக படிந்த பார்வையோடு அவளை நெருங்கும் சமயம் சரியாக கீழே குனிந்து விளையாடிக் கொண்டு இருந்த தீரா தன் தலையை நிமிர்ந்து பார்த்ததில் தீக்க்ஷயன் மறுமடியும் கொஞ்சம் அவனின் வசியை விட்டு விலகும் படி ஆனது.. பாவம் இது தொடக்கம் என்று தெரியாது வர்ஷினி தீக்ஷயனின் பதட்டத்தை பார்த்து சிரித்தாள்.. தீராவுமே என்ன ஏது என்று தெரியாது கூட சேர்ந்து சிரித்தாள்.. கூடவே விதியும் சிரித்ததோ…

கெளதம் தீக்க்ஷயனிடம்.. “என்னடா மாப்பிள்ளை எந்த அளவுக்கு போகுது கல்யாண வேலை.” என்று கேட்டவனிடம்..

அனைத்தையுமே ஒன்று விடாது தான் தீக்ஷயம் கெளதமிடம் சொன்னது..

அதாவது தன் வீட்டவர்களிடம் சொன்னதை விட வர்ஷினி தன் அக்கா அண்ணாவை அழைத்து சொன்னது.. அதற்க்கு அவர்கள் சம்மதம் சொன்ன விதம் என்று அனைத்துமே சொல்லி முடித்தவன் இறுதியாக.

“உண்மையில் என்னைவிட கூட பிறந்தவர்களால் அவள் ரொம்ப காயம் பட்டு இருக்கா கெளதம்.. அதுவும் அவள் அண்ணன் மேரஜ் பின்னே பிரச்சனை என்று வந்தால் நாங்க வர மாட்டோம் என்று சொல்றான் டா… அந்த ஒரு நிலையை அவளுக்கு நான் ஒரு நாளும் கொடுத்து விட கூடாது டா… நான் அவளை ரொம்ப நல்லா பார்த்துக்கனும்..” என்று தீக்க்ஷயன் இதை உணர்ந்து ஆத்மார்த்தமாக மனைவியாக வரும் வர்ஷினியை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைத்து தான் சொன்னது..

தீக்க்ஷயன் சொன்னதில் ஒன்று மட்டும் தான் அவர்கள் திருமணத்திற்க்கு பின் நடக்கும்.. அதாவது வர்ஷினி எவ்வளவு பிரச்சனை வந்த போதும், அவள் அண்ணன் அக்காவிடம் சென்று நிற்கவில்லை.. அவளின் மனது கஷ்டத்தை கூறவில்லை.. மாறாக அவர்கள் தான் இவளை தேடி வந்தார்கள்..

ஆம் வர்ஷினி இது வரை பட்ட காயத்தை விட மிக பெரிய காயம் பட போகிறாள். அதுவும் தினம் தினம் மூச்சு முட்டும் அளவுக்கு அவளுக்கு திருமண வாழ்க்கை பிரச்சனையை கொடுக்க காத்து கொண்டு இருக்கிறது என்று தெரியாது…

இருவருமே இந்தியா செல்வதால், முடிக்க வேண்டிய வேலைகள் அவ்வளவு இருந்தன.. அதனால் நாட்கள் அத்தனை வேகமாக ஓடியது…

நாளை தீக்க்ஷயன் தீராவோடு இந்தியா செல்லும் நாள்.. தீரா அப்படி ஒரு அடம்.. “ நாம இங்கேயே இருக்கலாம்.. “ என்று..

பின் தீக்க்ஷயன் ஒரு வழியாக.. “இல்லேடா நாம போய் தான் ஆக வேண்டும்.. ப்பாக்கு இங்கு வேலை முடிந்து விட்டது.. இனி இங்கு இருக்க முடியாது.” என்று குழந்தைக்கு புரியும் விதமாக தான் கூறியது.

தீக்ஷயனுக்கு இன்னுமே இங்கு இருக்க விசா இருக்கிறது தான். அதோடு இவன் விருப்பப்பட்டால், இங்கே வேலை செய்ய. அதை நீடிக்கவும் வைக்கலாம்.. ஆனால் இங்கு இருந்து ரிலீவ் செய்ய சொல்லி இவன் தான் கேட்டது.. அதே போல் தான் வர்ஷினியும் செய்தது.. காரணம் இன்னும் இரண்டு வாரத்தில் இவர்கள் திருமணம் செய்து கொள்வதால்..

இதை குழந்தையிடம் சொல்லவா முடியும்.. ? அதனால் தீக்க்ஷயன் குழந்தைக்கு புரியும் படியாக சொல்ல.

குழந்தையும் சமத்தாக தலையாட்டியவள் பின். “ப்பா ம்மாவையும் கூட்டிட்டு போகலாம்..” என்று அடுத்த அடமாக அம்மாவும் நம்மோடு வர வேண்டும் என்று சொன்னவளிடம்..

மீண்டும் தன்மையாக. “நாம நாளைக்கு பிளைட்டில் போகிறோமா .. பேபிக்கு தான் ப்ளைட்டில் போக பிடிக்குமே.. “ இங்கு வரும் போது குழந்தை அந்த விமான பயணத்தை ரசித்தாள்.. அதை வைத்து பேசியவன்..

பின்… “ நெக்ஸ்ட் வீக்… ம்மா அங்கு வந்துடுவாங்க..” என்று கூற..

இத்தனை சொன்ன பிறகும் கூட தீரா.. “ அப்போ நாமுமே ம்மா கூடவே போகலாம்..” நான் உங்களோடு தனியாக வர மாட்டேன்.. இங்கோ அங்கோ எங்கோ.. எனக்கு அம்மா உடன் இருக்க வேண்டும்.. அது போலாக அவள் பேச்சு இருக்க.

இவர்களின் பேச்சை ரசித்து கேட்டு கொண்டு இருந்த வர்ஷினி சிரித்து விட.

சிரிப்பவளை பார்த்து முறைத்த தீக்க்ஷயன்.. “ என்ன சிரிப்பு வேண்டி இருக்கு…?” என்று கேட்டவனிடம்..

“இல்ல ஒரு சின்ன குழந்தையையே உங்களால் சமாதானம் படுத்த முடியலையே நாளை நான் கோச்சிக்கிட்டா எப்படி சமாதானம் படுத்துவீங்க என்று நினைத்தேன் சிரித்தேன்..” என்று சொன்ன விதத்தில் தீக்க்ஷயனுன் முக பாவனை வேறு விதமாக மாறி போக.

கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்தவன் வர்ஷினியின் அருகில் வந்தவன் அவள் காதில் ஏதோ சொல்ல சொல்ல… வர்ஷினியின் முகம் செந்தணலாக மாறி போயின. அது கோபத்தினாலா…? வெட்கத்தினாலா…? என்று கேட்டால், அது அவர்கள் இருவருக்கும் மட்டுமே வெளிச்சம்…

பின் வர்ஷினி தான் தீராவிடாம்.. “லட்டூ நாளை ப்பா கூட போவீங்கலா. ம்மா நெக்ஸ்ட் வீக் வந்துடுவேணா..” என்று சொன்னவள் பின் தன் ஏழு விரலை காட்டி…

“ஜஸ்ட் செவன் டேஸ்.. செவன் டேஸ் அப்புறம் லட்டூ கூட தான் ம்மா எப்போவும் இருப்பேனா..” என்ற இந்த வார்த்தை குழந்தை இந்தியாவிற்க்கு அவள் அப்பாவோடு செல்ல ஒப்புக்கொள்ள வைத்தது.

சொன்னப்படி தான் தான். அவர்கள் திட்டப்படி தான் அனைத்துமே எண்ணைய் விட்ட சக்கரம் போல எந்த தடையும் இல்லாது நடந்தது.

அடுத்த நாள் தீராவுடன் தன் வீட்டிற்க்கு சென்றான்.. அம்மா அப்பா அண்ணன் அண்ணி ஏன் இவன் வந்த விசயம் தெரிந்து தன்னை பார்க்க வந்த தங்கை அவள் கணவன் தன் மாமாவின் மனைவியும் முன்னால் மனைவியுமான அத்தையும் வர.. அனைவரிடமும் சிரித்து பேசவில்லை என்றாலுமே முகத்தை காட்டாது..

அவர்கள் கேட்ட கேள்விக்கு நல்ல விதமாகவே பதில் சொன்னான்..

குழந்தையும் கொஞ்சினார்கள்.. அனைவருமே ஒன்றை ஒத்து கொண்ட விசயம். குழந்தை முன்பை விட இப்போது நன்றாக இருக்கிறாள்.. சமத்தாக பேசுகிறாள் என்பது தான்.. அதற்க்கு வர்ஷினி தான் காரணம் என்பதை குழந்தையின் பேச்சின் மூலம் அனைவருக்கும் தெரிந்தது தான்..

அதை தட்சாணா மூர்த்தி. ஏன் மகேந்திரன் கூட சொன்னான்.. ஆனால் மற்றவர்கள் தெரிந்தும் அதை பற்றி மட்டும் வாய் திறக்கவில்லை..

ஆனால் அதை விடுத்து திருமணம் எப்படி எங்கே செய்ய போகிறார்கள் என்று அது தான் முக்கியம் என்பது போல் தான் அந்த வீட்டின் மூத்த மருமகள் ஸ்வேதா மற்றும் தீக்க்ஷயனின் முன் நாள் மாமியார் வசந்தி அறிய காத்து கொண்டு இருக்க.

தீக்க்ஷயன் வர்ஷினி திட்டம் இட்டப்படி கோயிலில் திருமணம் மாலை சின்ன அளவில் பார்ட்டி என்று சொல்ல..

அப்போது தான் கேட்ட அந்த இரு பெண்களுக்குமே கொஞ்சம் நிம்மதி.. பரவாயில்லை சிம்பிளாக தான் முடித்து விடுகிறார்கள் என்று வசந்தி நினைத்து கொண்டார்.

இனி முன் போல இங்கு வராது எல்லாம் இருக்க கூடாது.. தன் பேத்தி இங்கு இருக்கு என்று இங்கு வரும் போதே தன் கணவன் கணபதியிடம் சொல்லிக் கொண்டே தான் இங்கு வந்தார் வசந்தி.

கணபதி கூட. “நம்ம பெண் இறந்து அவள் பெத்த குழந்தையை வளர்க்க அங்கு கஷ்டப்படுறாங்க.. நாம நல்லா தானே இருக்கோம் நாம வளர்க்கலாம் என்று நான் சொன்ன போது..”

“அது எல்லாம் சரிப்பட்டு வராது.. நாம எத்தனை நாளுக்கு இருப்போம்.. அப்புறம் அந்த குழந்தையை யார் பார்த்துப்பா.. நம்ம மருமகளும் குழந்தை உண்டாகி இருக்கா. நாளை பின்னே மகனும் அவன் மனைவி அவன் குழந்தை என்று தான் போயிடுவா…”

“உன் தங்கை வீட்லேயும் பேத்தியை இங்கு விட்டுட்டு உங்க தங்கை மகனுக்கு ஒரு பெண்ணை பார்த்து கட்டி வைத்து விடுவாங்க.. உங்க தங்கை மகனும் அவள் கூட குடும்பம் நடத்திட்டு குழந்தை பெத்துக்கிட்டு குடும்பமா ஆன பின்னே… நம்ம பேத்தியை அங்கும் மறந்து போய் விடுவாங்க.. அப்புறம் நம்ம பேத்தி அங்கேயும் நிக்காம இங்கேயும் நிக்காம தனித்து நின்னு விடுவா என்று சொன்ன.. எனக்குமே நீ சொன்னது சரி என்று தான் தோனுச்சி..”

“ஆனா அப்போ அப்போ போய் பேத்தியயாவது பார்த்துட்டு வரலாம் என்று சொன்னா அப்போ அது எல்லாம் வேண்டாம்.. என்னை பார்த்தாலே உங்க தங்கை அத்தனை பேச்சு பேசுறா.. நோயாளி பெண்ணை என் பையன் தலையில் கட்டி வைத்து விட்டு என் மகன் வாழ்க்கையை பாழாக்கிட்டிங்க என்று. சொல்றா சொன்ன.. அது உண்மை தானே என்று நான் சொன்னா முறைப்ப. ஆனா இப்போ என்ன புதுசா என் தங்கை வீட்டிற்க்கு போற. ஏன் இப்போ என் தங்கை உன்னை திட்ட மாட்டாளா.?” என்று கேட்ட போது ஒன்றும் வசந்தியிடம் பதில் இல்லை.

ஆனால் வசந்தி மனதில் புதியதாக ஒரு திட்டம். அதுவும் சின்ன பெண் வர்ஷினி எனும் போது.. மாப்பிள்ளை தன் பெண்ணோடு வாழ்ந்த லட்சணம் என்ன என்பது தான் அவருக்கே தெரியுமே..

தன் சின்ன நாத்தனார் பையனுக்கு தானே அந்த பெண்ணை பார்த்து நிச்சயம் செய்தது.. அந்த பெண் அழகு என்பது தான் தெரியுமே.. மாப்பிள்ளை அந்த பெண் பக்கம் மொத்தமா சாய்ந்துட்டா..

அந்த பெண் அதை தனக்கு சாதகமா பயன் படுத்தி தன் பேத்தியை கொடுமை படுத்தினா…” அவர் கண் முன் தான் பார்த்த படங்களான சித்தி கொடுமைகள் செய்த விதம் எல்லாம் கண் முன் வலம் வர..

இதோ இனி வசந்தி தீக்க்ஷயன் வீட்டிற்க்கு வலம் வருவது நிச்சயமான ஒன்று..


 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
வர்ஷினி 😣😣😣😣 இந்த தெளிவு வர எவ்வளவு இழப்பு 🤭🤭🤭
தீஷன் உறுதிமொழி எடுக்கிறது எல்லாம் சரி தான் 🤩 🥰 🥰 அதை காப்பாத்துறதிலும் உறுதி இருக்கணும் 😉😉😉

இன்னைக்கு எபி முழுக்க இவங்க எதிர் காலத்தை பத்தின அணுகுண்டா இருக்கு 😕😕😕😕😕😔😔


வசந்தி வந்து பார்க்கிறதோட நிறுத்திக்கோ 🤧🤧🤧 குழந்தை மனசுல நஞ்சை கலக்காமல் இருந்தால் சரி 🤫🤫🤫🤫🤫
 
Last edited:
Active member
Joined
May 11, 2024
Messages
123
அருமை 👌👌👌👌👌, வர்ஷினி திருமணம் முடிந்த பின்னும் அவளக்கு புகுந்த வீடினர்களால் பிரச்சனை வருமா ஒருபக்கம் வசந்தி தீனா அண்ணி இவர்கள் மட்டும் தானா வேற யார் எல்லாம் வர்ஷினி பக்குவபட்ட பெண்தான் இருந்தாலும் இனி என்ன 🤔🤔🤔🌺🌺🌺
 
New member
Joined
May 11, 2024
Messages
2
ஏன் விஜி ம்மா இந்த எபி யே பக்கு பக்குனு இருக்கே... இன்னும் அடுத்த அடுத்த எபி கொஞ்சம் பார்த்து பதமா செஞ்சக விடுங்க பாவம் வசி தீனா...
 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
வர்ஷா இந்த வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே ஆளாளுக்கு ஒரு திட்டம் போடுறாங்க வந்ததுக்கு அப்பறம் என்ன பாடு படுத்தப் போறாங்களோ..... 🥵🥵🥵🥵🥵🥵
 
Member
Joined
May 11, 2024
Messages
61
வசந்தி அம்மா நீங்களும் பிள்ளையை வளர்க்க மாட்டீங்க ஆனா வேவு பாக்க மட்டும் முடியும் என்ன ஒரு மட்டமான புத்தி...
 
Active member
Joined
Aug 16, 2024
Messages
267
இந்த வசந்திம்மா என்ன செய்ய காத்திருக்கிறாரோ.
 
Top