Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam...13

  • Thread Author
அத்தியாயம்…13

வர்ஷினி தீக்ஷயனின் திருமணத்திற்க்கு சம்மதம் தந்தவர்களின் ஒவ்வொருவரின் மனநிலையும் வெவ்வேறு வகையில் இருந்தது… ஆனால் நம் தீரா மட்டும் அனைவரிடமும்..

“என் அம்மா வர போறாங்க.. வரப்போறாங்க..” என்று சொல்லி சொல்லி மாய்ந்து போனாள்..

தீக்க்ஷயன் கேட்டபவர்களிடம் பட்டும் படாமலும் அனைத்தும் சொன்னவன்.. இந்தியா வந்த அன்றே தங்கள் திருமண வேலையில் இறங்கி விட்டான்..

முதலில் செங்கல்பட்டில் இருக்கும் தங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று இரண்டு வாரம் கழித்து வரும் ஒரு முகூர்த்த நாளில் தங்களின் திருமணம் செய்யும் ஏற்பாட்டை செய்து விட்டவன்..

மறு நாளே வர்ஷினி இல்லாமலேயே தீக்க்ஷயன் அவளுக்கு உண்டான திருமண புடவை நகைகளை தன் வீட்டு பெண்களை வைத்து வாங்கி விட்டான்..

வர்ஷினி இல்லாது வாங்கினானே தவிர.. அவள் விருப்பமானதை தான் வாங்கினான்.. இந்தியா வரும் முன் நாள் இதை பற்றிய பேச்சாக தீக்க்ஷயன்..

“இரண்டு வாரத்திலேயே மேரஜ் வசி. ஆனால் நீ நெக்ஸ்ட் வீக் தான் இந்தியா வர. அதுக்கு அப்புறம் புடவை நகை.. அதுவும் இப்போது எல்லாம் ப்ளவுஸ்க்கு ஆரி ஒர்க் செய்யவே ஒன் மந்த் ஆகுது என்று கெளதம் கூட சொல்றான்.. எப்படி…?” என்று கேட்ட போது…

வர்ஷினி திட்ட வட்டமாக சொன்னது.. நான் என் ப்ளவுஸ்க்கு ஆரி ஒர்க் எல்லாம் பண்ணிக்க மாட்டேன்..” என்பது தான்..

அடுத்ததாக பட்டுப்புடவை அதிகம் விலை கொடுத்து எல்லாம் வாங்க வேண்டாம் என்பதும்.. தான்..

“ஏன் என்று கேட்ட போது… அதிகம் விலை கொடுத்து பட்டுப்புடவை வாங்கி வைத்து அதை என்ன அடிக்கடியா கட்ட போறோம்.. காஸ்லி காஸ்லி என்று அது பீரோவில் தான் இருக்கும்.. அப்புறம் அது கட்டாமலேயே புடவை இழை விட்டு விடும்..

இதே கம்மி விலை என்றால் அடிக்கடி கட்டலாம்..” என்று விட்டாள். ஆரி ஒர்க்குமே அதையே தான் சொன்னது.

நகைகள் மட்டும் கொஞ்சம் நிறையவே வாங்குங்க என்று சொன்னவளின் பேச்சில்.. தீக்க்ஷயன் இவள் சொல்வதில் ஏதாவது விசயம் இருக்கும் என்று நினைத்தான்..

நினைத்தது போல் தான்.. “கோல்டில் பணம் போட்டால் கண்டிப்பா மதிப்பு ஏற தான் செய்யும் இறங்காது என்று.. இதுவும் ஒரு இன்வெஸ்மெண்ட் தான் என்றும் சொன்னவள் கூடவே..

“இன்னைய தேதியில் என் கிட்ட ஒரு பொட்டு தங்கம் இல்லை தீனா…” என்று வர்ஷினி சொல்லவும் தான் தீக்க்ஷயன் அவளின் காது கழுத்து கை என்று பார்த்தது..ஒன்றிலுமே தங்கம் இல்லாது விற்கும் ஆபரணங்களை தான் அணிந்து இருந்தாள்..

இதை எப்படி கவனியாது விட்டேன் என்று தன்னை தானே திட்டிக் கொண்டான் தீக்க்ஷயன்.. அதுவும் அவள் விரலில் கூட தங்கத்தினால் ஆன ஒரு மோதிரம் இல்லை..

உடனே அந்த நேரமே.. “வா வசி இங்கேயே கொஞ்சம் வாங்கிடலாம்.. கெளதம் இங்கு இருக்கும் ஒரு நகை கடையில் தான் லட்சுமிக்கு அவங்க பிறந்த நாளுக்கு பிரேஸ்லேட் வாங்கினான்.. வா வா எங்கு வாங்கினான் என்று கேட்டுட்டு போய் வாங்கி வந்து விடலாம்..” என்று பட படத்தவனை..

அடக்கி உட்கார வைப்பதற்க்குள் வர்ஷினிக்கு தான் போதும் போதும் என்று ஆகி விட்டது.

“தீனா கூல் கூல். ஆக்சுவலா எனக்கு கோல்ட் பிடிக்காது.. அதனால தான் என் கிட்ட அத்தனை நகை இருந்தும் நான் போட மாட்டேன்..” என்று சொன்னவள் அதற்க்கு தன் அம்மா..

“தன்னை குருவிக்காரி என்று கிண்டல் செய்வதை..” சொன்ன போதே அவள் குரல் கரகரத்து விட்டது தான்.. ஆனால் அழவில்லை..

தீக்க்ஷயன்..” வசி ..” எனும் போது…தலையாட்டி நான் நன்றாக இருக்கிறேன் என்பது போல சைகை செய்தவள் .. பேச்சும் தொடர்ந்தாள்..

“அது எரிந்து போனது.. இப்போ என் கிட்ட ஒன்னும் இல்ல தீனா.. ஆனா மேரஜ் அப்போ இதை போட்டுட்டு இருக்க முடியாதுலே.. அது தான் வாங்குங்க. என்று சொன்னேன்.. ஆனால் அதுக்கு நான் தான் பே பண்ணுவேன் என்று சொன்னவள் கூடவே..

“கல் வைத்த நகை ஆன்டிக்சுல்லரி சேதாரம் அதிகமா இருப்பது எல்லாம் வாங்க வேண்டாம் தீனா…” என்று இன்ஸ்செக்ஷனுமும் கொடுத்தாள்..

தீக்ஷயனுக்கு வர்ஷினி ஏன் இப்படியான நகைகளை தவிர்க்கிறாள் என்பதை புரிந்து கொண்டு விட்டான்.

அதனால்.. “ மதல்ல சொன்ன கல் ஆன்டிக்சிக் சுவல்லரி வாங்கல.. ஆனா பிடிச்ச டிசைனா இருந்தா நான் சேதாரம் பார்க்க மாட்டேன்..” என்று விட்டான்..

வர்ஷினியுமே கொஞ்சம் யோசித்தவள்.. “சரி..” என்று விட்டாள்..

தீக்க்ஷயன் தான்.. “எல்லாத்துக்குமே பணக்கணக்கு பார்க்க கூடாது வசி.” என்று சொன்னவனை பார்த்து சின்னதாக ஒரு சிரிப்பு சிரித்து வைத்தாள்.. அவ்வளவே. தீக்க்ஷயனுமே அவள் பட்ட வலி அவ்வளவு என்று அதை பற்றிய பேச்சு அடுத்து அவன் பேசவில்லை..

இதோ தன் அம்மாவை மட்டும் தான் அழைத்து வருவதாக இருந்தது.. ஆனால் “நான் தானே இந்த வீட்டு மூத்த மருமகள் என்னை விட்டு விட்டு கல்யாணத்திற்க்கு புடவையும் நகையும் எடுப்பிங்கலா …?” என்று ஸ்வேதா சொல்ல. இதோ அவளும் கூடவே வந்து விட்டாள்..

முதலில் புடவை கடைக்கு தான் சென்றது.. தீக்க்ஷயன் வர்ஷினி சொன்னது போலவே ஒரு பன்னிரெண்டு ஆயிரத்துக்கு ஒரு இளச்சிவப்பு புடவையும்.. எட்டு ஆயிரத்திற்க்கு ஆகாய வண்ணத்தில் மற்றோரு பட்டுப்படவையும் எடுத்தவன் .. அதை பில்லிங் செக்ஷனுக்கு அனுப்பி விட.. அதற்க்கு பணம் கொடுத்து விட்டு குஞ்சலம் கட்டவும் கொடுத்து விட்டான்..

சரஸ்வதி தான்.. “தீக்க்ஷா கல்யாணத்திற்க்கு புடவை எடுக்கலையா…?” என்று கேட்டது..

“இதோ உங்க முன் தானேம்மா எடுத்தேன்..” என்றதும் சரஸ்வதி என்ன இது என்று நினைப்பதற்க்குள்.

ஸ்வேதா. “என்ன இதுவா.. தீக்ஷா…?” ஸ்வேதாவும் தீக்க்ஷனும் ஒரே வயது உடையவர்கள். அதோடு தீக்க்ஷயனுக்குமே ஸ்வேதா அத்தை பெண் தானே… சின்ன வயதில் இருந்து ஸ்வேதா தீக்க்ஷயனை பெயர் சொல்லி அழைப்பது இன்று வரை அது தொடர்கிறது.

“ஏன் இந்த புடவைக்கு என்ன..?” என்று கேட்டதற்க்கு.

ஸ்வேதாவோ தீக்க்ஷயன் கேட்டதற்க்கு பதில் அளிக்காது..

“நீ செய்யிறது கொஞ்சம் கூட நல்லா இல்ல தீக்க்ஷா.. பொண்ணு வெரும் கைய்யோடு வரா என்று நீ இப்படி செய்ய கூடாது.. தெரியும் அந்த பெண் கிட்ட ஒரு நகையும் இல்ல எரிஞ்சி போயிடுச்சி… பணமும் இல்ல. அக்கா அண்ணன் கூட அவளை கண்டுக்கல இப்போ அவள் சம்பாதித்து தான் அவளை பார்த்துக்குறா என்று எனக்கும் தெரியும் தீக்க்ஷா.

ஆனால் நம்ம குடும்பத்திற்க்கு என்று ஒரு கெளரவம் இருக்கு… மூத்த மருமகள் எனக்கு ஒரு லட்சத்து கிட்ட புடவை எடுத்துட்டு..ஏன் செத்து போன உன் முதல் மனைவி.. பவித்ராவுக்குமே என்னை ஒட்டினது போல தானே ஒரு லட்சம் கிட்ட புடவை எடுத்தது… என்ன தான் அவள் ஒன்னும் இல்லாது வந்தாலுமே நம்ம மருமகளுக்கு செய்வதை செய்யனும் தீக்க்ஷா… என்ன அத்தை நீங்க சும்மா இருக்கிங்க.. சொல்லுங்க உங்க சின்ன மகன் கிட்ட.” என்று தன் பேச்சில் தன் மாமியாரையும் இழுத்தாள்..

சரஸ்வதிக்கோ வாயில் விரல் வைக்காத குரல் தான்.. என்ன இது ஒன்னும் இல்லாதவள் என்பது போலான பேச்சு என்று நினைத்து.

தீக்ஷயனுக்கு ஸ்வேதா பேச பேச. அவள் எண்ணம் என்ன என்பது தெளிவாக புரிந்து விட்டது..

கூடவே தான் இங்கு வரும் முன் வர்ஷினி தான் இந்தியா வந்த பின் செய்ய இருக்கும் முதலீட்டை பற்றி சொன்னதை வைத்தே அவளிடம் என்ன சேமிப்பு இருக்கு என்று தெரிந்து விட்டது..

அதோடு ஜார்டனில் கிடைத்த சம்பளம் என்ன என்பதும் அவனுக்கு தெரியும்.. அதே சமயம் அவள் பிடித்த சிக்கனத்தில் அதையுமே சேமிப்பாக தான் போட்டு இருப்பாள் என்பதுமே தீக்ஷயனுக்கு தெரியும்.

ஆனாலுமே ஸ்வேதாவின் பேச்சை எதிர்த்தோ.. இல்லை வர்ஷினியின் கை இருப்பை பற்றியோ சொல்லவில்லை.. சொன்னால் என்ன நடக்கும் என்பதும் அவனுக்கு தெரியுமே.. தன் திருமணத்தை ஸ்வேதா இப்படி மகிழ்ச்சியாக வர வேற்ப்பது எதற்க்கு எதற்க்கு என்று நேற்று இந்தியா வந்த நேரத்தில் இருந்து யோசித்து கொண்டு இருந்தான்..

வர்ஷினி தன்னை விட அனைத்திலுமே கீழாக இருப்பதினால் தான் என்பதை புரிந்து கொண்டவன் சிரித்து கொண்டான்.

தன் அண்ணனை தன்னை விட உயர்த்தி விட நினைத்தது…நடக்கவில்லை என்று.. தன் மனைவி தன்னை விட வசதியில் கீழாக வருவது அவ்வளவு மகிழ்ச்சி போல..

நகை எரிந்தது அண்ணன் அக்கா வர்ஷினியின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற அளவில் மட்டும் தான் இவர்கள் பக்கம் தெரியும்..

அது கூட இவனின் சித்தி தன் மகனின் திருமணம் வர்ஷினியோடு நடைப்பெறாத காரணத்தை சொல்ல வேண்டி தான் சொன்னது.. கூடவே பெண் கொஞ்சம் சேர்த்து வைத்து பார்க்க மாட்டா போல. கொஞ்சம் பொறுப்பும் கம்மி தான் போல…

அவனின் சித்தி சாந்தா சொன்னது.. அது ஒரு வகையில் சரி தான்.. ஆனால் அது முந்தைய வர்ஷினி.. ஆனால் இப்போது.

வர்ஷினியின் மாற்றமும் சரி அதன் பின் வர்ஷினி வீட்டில் நடந்ததும். சரி இவனின் சித்தி சாந்தாவுக்கே தெரியாத போது மற்றவர்களுக்கு எப்படி தெரியும்…? அது தான் ஸ்வேதாவின் பேச்சு இப்படி போகுது என்று புரிந்து கொண்ட தீக்க்ஷயன் ஒன்றும் சொல்லவில்லை..

அடுத்து நகைக்கடை எனும் போது ஸ்வேதா அதற்க்குமே..” ஆமா ஆமா வெறும் கழுத்துமா கையில் காதில் ஒன்னும் இல்லாது நிற்க முடியும்.. மெலிசா இருப்பது போல மொத்தமே பத்துக்குள் வருவது போல வாங்கிடலாம் தீக்க்ஷா..” என்று சொன்ன ஸ்வேதாவின் பேச்சை காதில் வாங்காதது போலவே.

நகைக்கடைக்கு சென்றவன். பத்து சவரனுக்கு மேல் இருக்கும் கழுத்து ஆரம் பகுதிக்கு போய் நின்று விட.

ஸ்வேதா. “தீக்க்ஷா அங்கு இருக்கும் நகையை எல்லாம் பாரு.. குறைந்தது பத்து சவரனாவது இருக்கும்.. “ என்று சொன்னவள்..

ஒரு பகுதியை சுட்டி காட்டி.. “அங்கு தான் மெல்லிசா இருக்கு..” என்று சொன்னவளின் பேச்சு காதில் விழாதது போலவே…

கழுத்துக்கு கைக்கு காதுக்கு விரலுக்கு என்று மொத்தம் அறுபது பவுனில் நகைகளை தனக்கு பிடித்தது போலவும். அவனின் வசி சொன்னது போலவும் எடுத்து வைத்தான்..

மொத்தம் நாற்பது லட்சத்திற்க்கு பில் வர… ஸ்வேதா வாய் அடைத்து பார்த்து கொண்டு இருந்தாள்..

சரஸ்வதியே என்ன இது ஏன் ஒரே சமயத்தில் இவ்வளவு,,.. அனைத்துமே அவன் பணம் தான்.. நகை புடவை வாங்க என்று தன்னை அழைத்த போதே… கணவன் கேட்ட..

“நாங்க தானேப்பா செய்யனும்.. உன் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பி விடவா…?” என்று தட்சணா மூர்த்தி கேட்ட போது..

“இல்ல வேண்டாம்ப்பா..” என்று அந்த ஒரே மறுப்பே.. தன்னிடம் பணம் வாங்க மாட்டான் என்று தட்சணா மூர்த்திக்கு தெரிந்து விட்டது..

அவரை பொறுத்த வரை பணம் எல்லாம் ஒரு பிரச்சனை கிடையாது.. மருமகளுக்கு தன் பணத்தில் வாங்கினால் என்ன. அவன் பணத்தில் வாங்கினால் என்ன.. மொத்தத்தில் என் மகன் இனியாவது சுகப்பட வேண்டும். .. இது தான் அவர் எண்ணம்..

அதனால் சரஸ்வதி மகன் வாங்கிய நகைகளை பார்த்தவர் ஒன்றும் சொல்லாது இருந்து விட்டார்.. ஆனாலுமே பயம் பக்கத்தில் நின்று கொண்டு இருக்கும் மூத்த மருமகள் என்ன சொல்லுவாளோ என்று நினைத்து,,

அவர் நினைத்தது போல தான்.. “ என்ன அத்த உங்க மகன் கணக்கு இல்லாம நகை வாங்குறார்.. நீங்களுமே ஒன்னும் சொல்லாம அமைதியா நின்னுட்டு இருக்கிங்க..

எனக்கும் பவித்ராவுக்கும் இருபத்தி ஐந்து சவரன் தானே போட்டிங்க. இது என்ன அறுபது சவரன்.. அதுவும் ஒன்னும் இல்லாத வரும் பெண்ணுக்கு ..” என்று ஸ்வேதா சொன்ன நொடி..

தன் பேசியை கையில் எடுத்தான்.. வர்ஷினி தன் வங்கி கணக்கில் அனுப்பிய முப்பத்தி ஐந்து லட்சத்தை காட்டியவன்..

“உனக்கு பேங்க் ட்ரான்செக்க்ஷன் பார்க்கும் அளவுக்காவது தெரியும் தானே..” என்று இதை ஒரு வித நக்கலோடு தான் தீக்க்ஷயன் ஸ்வேதாவிடம் கேட்டது.. காரணம் அம்மணியனின் கல்வி தகுதி என்று சொல்வதை விட பொது அறிவு அந்த அளவில் தான் இருக்கும்.

ரோஷத்துடன்.. “நான் டிகிரி முடித்து இருக்கேன்..” ஒரு மாதிரி வீரமாக சொன்னாள்..

“சரி நல்லது உன் டிகிரி இது பார்க்கவாவது யூஸ் ஆகட்டும் என்று தன் பேசியை அவளிடம் காட்டி யாரிடம் இருந்து எனக்கு பணம் வந்து இருக்கு எவ்வளவு வந்து இருக்கு என்று பார்த்து உன் மாமியார் கிட்ட சொல்லு பார்ப்போம். ஏன்னா அவங்களுமே என் கிட்ட எப்படி இவ்வளவு நகைகளை வாங்காதே என்று சொல்வது என்று தயங்கி தான் நின்று கொண்டு இருக்காங்க..” என்று தீக்க்ஷயன் இத்தனை பேசுவதற்க்குள்..

ஸ்வேதா வங்கியின் விவரங்களை பார்த்து முடித்து விட்டாள்.. ஆனால் அத்தனை பணம் அவளிடம் எப்படி…

அதை கேட்டும் விட்டாள்…

தீக்க்ஷயன்.. “ஏன் அவள் வீட்டில் சும்மாவா உட்கார்ந்துட்டு இருக்கா.. ஷீ இஸ் வெரி பிர்லியண்ட்.. “ என்று சொன்னதோடு அந்த நாட்டில் அவள் வாங்கிய சம்பளத்தையும் சேர்த்து சொல்ல.

ஸ்வேதாவுக்கு அம்மாடியோ என்று ஆகி விட்டது.. தீக்க்ஷயன் இது சொன்னது தான் நாளை அவன் வாழ்வு ஆட்டம் காணும் அஸ்த்திவாரமாக ஆக போகிறது என்று தெரியாது தான் சொல்லி விட்டான்..

சொன்னதற்க்கு காரணம் கூட வர்ஷினியை இரண்டு மூன்று முறை மிகவும் தாழ்வாக பேசியது தான் காரணம்.. கூடவே.. இவர்களுக்கு இணையான நகையாக இருபத்தி ஐந்து சவரனில் எடுப்பது போல ஸ்வேதாவின் பேச்சு இருந்து இருந்தால் கூட அவன் மனது ஆறி இருக்குமோ என்னவோ…




 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
அனுபவ பாடம் வர்ஷினிய நல்லா பக்குவம் ஆக்கியிருக்கு 🥺🥺🥺 எவ்வளவு விவரமா திட்டமிடுறா 🧐🧐🧐 அண்ணன் அக்கா என்று பாசத்தில் செஞ்சது எல்லாம் ஊதாரிதனத்தில் வந்திடுச்சு 😕😕😕😕

ஸ்வேதா நீ பெரிய மகாராஜா குடும்பத்தில் இருந்து வந்தியோ 🤭🤭🤭🤭🤭🤭

வர்ஷியோட பணம் பத்தி ஸ்வேதா கிட்ட சொன்னதை வச்சு என்ன கலகத்தை செய்ய போறாளோ 🧐 🧐 🧐 🧐 🧐 🧐 🧐
 
Last edited:
Active member
Joined
May 11, 2024
Messages
167
ஸ்வேதா பற்றி தெரிஞ்சும் அவ கிட்ட பெருமையா அவ சம்பளத்தை சொல்றானே
 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
வர்ஷினியை மட்டம் தட்டியே சந்தோசப் பட்டுக்க நினைச்சுருக்கா... swetha திட்டமெல்லாம் பாழா போச்சு.... இனி பொறாமையில வயிறு எரிஞ்சுட்டு இருப்பா.... 🤓🤓🤓🤓🤓
 
Member
Joined
Jul 9, 2024
Messages
14
Viji Mam. நீங்க சைட் ஆரம்பித்தவிவரம் தெரிந்தவுடன் வந்து இரு கதைகளையும் படித்து விட்டேன். Waiting for this episode
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
914
Viji Mam. நீங்க சைட் ஆரம்பித்தவிவரம் தெரிந்தவுடன் வந்து இரு கதைகளையும் படித்து விட்டேன். Waiting for this episode
நன்றி பா.. இன்னும் கொஞ்ச நேரத்தில் கொடுத்து விடுவேன் பா
 
Member
Joined
May 11, 2024
Messages
61
தீசன் உனக்கு மனுசங்களை handle பண்ண தெரியல... வேற என்ன சொல்ல...
 
Top