Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam... 14

  • Thread Author
அத்தியாயம்…14

திருமணத்திற்க்கு உண்டான அனைத்தும் வாங்கிய பின் வீடு வந்து சேர்ந்தவர்கள்.. தான் வாங்கிய பொருட்களை அனைத்தையும் எடுத்து கொண்டு தன் அறைக்கு செல்ல பார்த்த தன் மகன் தீக்ஷயனிடம்…

“வாங்கியதை பூஜை அறையில் வைக்கனும் தீக்க்ஷா…” என்று சொன்னவரிடம்..

தீக்க்ஷயன்.. “ நானே ஒரு பத்து நிமிஷத்திலே பூஜை அறையில் வைத்து விடுறேன் ம்மா…” என்று சொல்லி விட்டு சென்ற தன் மகனையே சிறிது மகிழ்வுடன் தான் சரஸ்வதி பார்த்து நின்றது..

காரணம்.. இது போன்று தன் முகம் பார்த்து சாதரணமாக தன்னிடம் மகன் பேசி வருடங்கள் ஆகின்றது.. மகனுக்கு இந்த பெண்ணை ரொம்ப பிடித்து இருக்கு போல என்று அவர் நினைத்து கொண்டு இருக்க..

அவரின் மூத்த மருமகள் ஸ்வேதாவோ.. “ என்ன அத்த உங்க சின்ன மகனையே அதிர்ந்து போய் பார்த்துட்டு இருக்கிங்க…” என்று கேட்ட மருமகளை தான் இப்போது சரஸ்வதி அதிர்ந்து பார்த்தது..

நான் சந்தோஷமா பார்த்துட்டு இருப்பது இவளுக்கு அதிர்ச்சியா பார்ப்பது போலா இருக்கு என்று நினைத்து கொண்டு இருந்தவரிடம் ஸ்வேதா தொடர்ந்து..

“நீங்க சாமி ரூமில் வைக்கனும் என்று சொல்லி கூட உங்க சின்ன மகனை பார்த்திங்க தானே அத்த… அவர் ரூமுக்கு எல்லாத்தையும் எடுத்துட்டு போறதை.. அவருக்கு சாமீயோடு.. அவர் வசி தான் பெருசா தெரியுது போல… ம் இப்போவே இப்படின்னா. நாளைய பின்ன அந்த பெண்ணை கல்யாணம் செய்து குடும்பம் நடத்திய பின்னே… நம்மை எல்லாம் யாரு என்று கேட்பார் போல சொல்றதுக்கு இல்ல அத்த..” என்று சொல்லி விட்டு தன் மாமியாரை பார்த்தாள் ஸ்வேதா..

தன் பேச்சுக்கு மாமியாரிடம் ஏதாவது எதிரொலி இருக்கிறதா என்று..’ஆனால் அவரோ அவள் பேச்சை காதில் வாங்காது சமையல் கட்டை நோக்கி சென்று விட்டார்.. இது வேலைக்கு ஆகாது என்பது போல ஸ்வேதாவும் தன் அறைக்கு சென்று விட்டாள்..

இந்த சரஸ்வதி அம்மா இன்று செய்ததை போல வருங்காலத்தில் இருந்து இருக்கலாம்.. அது தானுங்க ஸ்வேதா பேச்சை காதில் வாங்காதது தான்..

இன்று மகனின் மகிழ்ச்சியை பார்த்து விட்டு சந்தோஷப்படும் இதே சரஸ்வதி தான் நாளைய பின்… இதே மருமகளான ஸ்வேதாவின் பேச்சை கேட்டு அவர் செய்யும் சில செயல்கள் மகனின் வாழ்க்கையில் பிரச்சனையை உண்டாக்க கூடும் என்று தெரியாது இன்று தன் சின்ன மகனின் முகத்தில் தெரிந்த அந்த மகிழ்ச்சியில் திருப்தி பட்டுக் கொண்டார்.

ஸ்வேதா சொன்னது போல் தான் தன் அறைக்கு வந்ததும் தன் அறையில் கதவை அடைத்த தீக்க்ஷயன்… வர்ஷினிக்கு வீடியோ கால் போட்டு தான் வாங்கிய அனைத்தையும் காட்டினான்..

அனைத்தும் பார்த்து வர்ஷினியுமே… “ரொம்ப நல்லா இருக்கு தீனா… ஆனா ஒரு நகையை சுட்டி காட்டி அது தான் சேதாரம் அதிகமா இருக்கு..” என்று சொன்னவளை முறைத்து பார்த்தவள்.

“ஒரு சிலதுக்கு பணக்கணக்கு பார்க்க கூடாது வசி.” என்று கோபமாக சொல்லவும் தான் பின் அதை பற்றி பேசாது பின் அலுவலகம்.. அங்கு வேலை செய்பவர்கள் என்று தொடர்ந்து பேசியவளிடம் தீக்க்ஷயன் திருமணம் பற்றி என்று தொடர்ந்து பேசியவன் பின் தூங்கி கொண்டு இருந்த தீராவையும் வீடியோ காலில் காட்டினான்.

“எனக்கு லட்டூம்மா நியாபகமாவே இருக்கு தீனா.. நான் லட்டூவை ரொம்ப மிஸ் பண்றேன். இன்னும் ஒன் வீக் எப்போ போகும் என்று இருக்கு.” என்று பேசிய வர்ஷினியை தீக்க்ஷயன் மீண்டும் முறைத்தான்..

வர்ஷினிக்கோ இப்போது என்ன தப்பா பேசிட்டோம்.. பணம் காசு பத்தி எல்லாம் பேசலையே.. குழந்தையை பற்றி தானே பேசினேன்.. என்று அவள் நினைக்கும் போதே..

அவள் என்ன தவறாக பேசினாள் என்று தீக்க்ஷயன் சொன்னான்..

“நியாயமா இன்னும் டூ வீக்ஸ்ல மேரஜ் செய்ய இருக்கும் என்னைய தான் நீ ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணி இருக்கனும்.. “ என்று சொன்னவனின் பாவனையில் வர்ஷினி சிரித்து விட்டாள்..

“உங்க மகளிடமே பொறாமையா…?” என்று வர்ஷினி சிரித்தப்படி தான் கேட்டாள்.. அவளுமே அதை ஒரு ஜாலியாக தான் கேட்டது..

ஆனால் தீக்ஷயனுக்கு வர்ஷினியின் அந்த வார்த்தை பொட்டில் அரைந்தது போல் இருந்தது. காரணம் நான் ஒரு பெண்ணின் தந்தை அது போலவா என் நடவடிக்கை இருக்கு,,, என்ன இது…? வர்ஷினி சின்ன பெண் அவளே நிதர்சனத்தை புரிந்து கொண்டு நடந்து கொள்கிறாள்… என்று நினைத்த நொடி அவன் முக பாவனை மாறி விட்டது.

தீக்ஷயனின் மாற்றத்தை கவனித்த வர்ஷினியும் .. “என்ன தீனா என்ன.? என்று கேட்டும் எதுவும் சொல்லாது..

“ஓன்றும் இல்லை.. ஒன்றும் இல்லை..” என்று தான் சொன்னது…

வர்ஷினி.. “நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா தீனா…” என்று கேட்ட பெண்ணவளின் குரலில் அவளை ஆழ்ந்து பார்த்த அவளின் தீனா…

“நீ எல்லாம் சரியா தான் இருக்க வசி.. உன் கிட்ட எந்த பிரச்சனையும் இல்ல… நீ ஏதாவது நினச்சி ஒரி பண்ணிக்காதே…” என்று சொல்லி வைத்தன் பின் தன்னை நிதானித்து கொண்டான்..

அன்னை சொன்னது போன்று வாங்கிய பொருட்களை பூஜை அறையில் வைத்த பின் மீண்டும் தன் அறைக்கு வந்து படுத்து கொண்ட தீக்ஷயனின் மனம் முழுவதுமே கடந்த கால கசடுகள் தான்..

ஆம் அதை கசடு என்று தான் சொல்ல வேண்டும்..பவித்ராவை திருமணம் செய்யும் போது இருத்தியெழு வயது உடைய அனைத்து தகுதிகளும் உடைய எலிஜிபல் பேச்சிலர் தான் தீக்க்ஷயன்.

பொதுவாக அந்த வயதில் இருக்கும் ஆண்மகனுக்கு இருக்கும் அனைத்து ஆசைகளும் தன்னுள் வைத்து இருந்த இளைஞன் தான் அப்போது அவன்..

பவித்ராவை தனக்கு திருமணம் செய்ய வைக்கும் பேச்சு நடந்த போதே… வேண்டாம் அவன் மனது அடித்து சொல்லி விட்டது… அந்த வயதில் அப்போது தான் இறுக்கி கட்டி பிடித்தாள் அவள் தாங்குவாளா என்று தான் விளையாட்டாக நினைத்தது..

பின் தங்கை தற்கொலை நாடகம். என்று போய் பின் அவளையே திருமணம் செய்து கொள்ளும் படி ஆன பின்.. நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டான் தான்.

ஆனால் முன் விளையாட்டாக நினைத்தது போல் தான் அவன் இல்லரவாழ்க்கை சென்றது…

முதல் முறை தீக்ஷக்யன் தன் மனைவியை இறுக்கி அணைத்த போது பவித்ராவின் முகத்தில் வலி தெரிய.. சட்டென்று விலகி விட்டான்..

தீக்ஷயனுமே பதறி போய் விட்டான்.. “பவி என்ன என்ன ஆச்சு..” என்று முதல் இரவு நாளில் கேட்ட போது..

“இல்ல மாமா வலி அது தான்…” என்ற போது அவனின் முதல் ஏமாற்றம் அன்று தொடங்கியது..

“ம் சரி தூங்கு பவி.. “ என்று தள்ளி படுத்து கொண்டான்… ஒவ்வொரு நாள் ஒவ்வொரு உடல் நிலை உபாதைகள்.

“இன்னை நாள் முழுவதுமே தலி வலி அத்தான்.. “ என்று சொன்ன போது..

“சரி வா ஆஸ்பிட்டலுக்கு போகலாம்..” என்று அழைத்தாள் மட்டும் உடனே பதட்டத்துடன்..

“இல்ல அத்தான் வேண்டாம்.. அம்மா வரேன் என்று சொல்லி இருக்காங்க. அம்மா வீட்டில் போய் பார்த்துக்குறேன்..”

தான் மருத்துவமனைக்கு அழைத்தாள் மட்டும் தன்னோடு வர மறுத்து விடுவாள். எப்போதுமே அவளின் மருத்துவமனை விஜயம் அவள் அம்மா வீட்டில் இருக்கும் போது அவளின் அம்மாவோடு தான் செல்வது.

இதன் நடுவில் மூன்று முறை. ஏதோ அவர்கள் கணவன் மனைவியாக இருந்தனர்.. அவ்வளவே… உண்மையில் மனைவியின் உடல் நிலை இப்படி என்று தெரிந்து இருந்தால், கண்டிப்பாக அந்த மூன்று முறை கூட அவன் மனைவியை நாடி இருக்க மாட்டான்..

ஆனால் அதற்க்கு அவன் ஏற்ற பழி சொற்கள்.. எதோ தன்னை காம பிசாசு என்பது போல கேட்ட வார்த்தைகள்.. மனைவியின் உடல் நிலை தெரிந்து நிகழ்ந்து இருந்தால் தப்பு தான்..

ஆனால் எனக்கு தான் அவள் உடல் நிலையை பற்றி தெரிவிக்கவே இல்லையே… அந்த திருமணத்தை ஏதோ திருமணம் நடக்கிறது.. குடும்பம் நடத்த வேண்டும் என்று இப்படி தான் நடந்து முடிந்தது..

ஆனால் வர்ஷினியோட இந்த திருமணம் தன் மனது ஆவளோடு எதிர் பார்ப்பதை என் மனதை பிடித்து என்னால் நிறுத்த முடியவில்லையே..

இதோ இன்று வர்ஷினியின் விருப்பத்திற்க்கு ஏற்பவும்.. அதுவும் தனக்கும் பிடித்தது போலவும்.. அவளுக்கு எந்த நிறம் நன்றாக இருக்கும்.. எந்த நகைகள் போட்டால் தன் வசி கல்யாணத்தில் ஜொலிப்பாள் என்று பார்த்து பார்த்து வாங்கியது போல் எல்லாம் அன்று அவன் வாங்கவில்லை,..

ஏன் இரண்டு திருமணமும் ஒரே நாளில் போது திருமணத்திற்க்கு என்று வாங்கும் புடவை நகைகளும் ஒரே நல்ல நாளில் தானே வாங்குவார்கள் .. அதுவும் இரு குடும்பமும் நெருங்கிய உறவு எனும் போது..

ஆம் தீக்க்ஷயனுக்கும் அவன் தங்கை சுப்ரியாவுக்கும், ஒரே நாளில் இரு மேடை அமைத்து ஒரு சில மணி துளிகள் இடைவெளியில் தான் தீக்க்ஷயனின் வீட்டவர்கள் நடத்தியது..

காரணம் சுப்ரியா மாமியார் வீட்டவர்கள் சொன்னது இதையே தான்.. அதுவும் சுப்ரியா மாமியார்.. சுப்ரியா தற்கொலை முயற்சி செய்த அன்று வசந்தி..

“என் மகனுக்கு உங்க வீட்டு பெண்ணை எடுக்க மாட்டேன்னா சொன்னேன்… என் மகள் உங்க வீட்டுக்கு மருமகளா அழைச்சிக்கிட்டா நடத்திடலாம் என்று நிபந்தனை போல சொன்னவர்.

எங்கு அதை தாங்கள் மீறி விட போகிறோம் என்ற பயத்தில் முதலில் தீக்க்ஷயன் தன் மகளின் கழுத்தில் தாலி கட்டிய பின் தான் தன் மகன் சுப்ரியா கழுத்தில் தாலி கட்டுவது போல முகூர்த்த தேதியை குறித்தது.

ஒரே நாளில் திருமணம் எனும் போது புடவை நகைகளும் ஒரே நாளில் தான் வாங்கியது… அன்று அதற்க்கு செல்லவே தீக்க்ஷயனுக்கு விருப்பம் கிடையாது..

ஆனால் அதற்க்கும் சுப்ரியா தான்.. “ண்ணா என்ன ண்ணா. நீங்க இது போல மேரஜ் வேலையில் இன்ரெஸ்ட் இல்லாம இருந்தா அவர் என்ன நினச்சிப்பாரு ண்ணா…” என்று அழுது தான் அவன் சென்றது.

ஆனால் சென்றதே வீண் என்பது போல் தான் அன்றைய நாள் முடிவடைந்தது… பவித்ராவுக்கு அன்றுமே உடம்பு சரியில்லை போல.

அவளுமே ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு விட்டாள்.. அவனுமே தான் அப்படி அமர்ந்தது.. ஆனால் பவித்ரா ஒரு மாதிரி அமர்ந்து இருப்பதை பார்த்தவன்..

“என்ன பவி நீ போய் செலக்ட் செய்யல…?” என்று இவன் கேட்க.. புடவையை புரட்டி பார்த்து கொண்டு இருந்த அவளின் அம்மா வசந்தி ஒடி வந்து…

“நேத்து ஷாப்பிங் என்று லேட் நையிட் தான் வீட்டுக்கு வந்தா தீக்க்ஷா. நையிட்லேயும் எங்கு நேரத்துக்கு தூங்குறா… அந்த செல்லில் பார்த்துட்டு லேட்டா தான் தூங்குனா…? அது தான் மாப்பிள்ளை…” என்று சொன்னது அன்று உண்மை என்று நினைத்தான்.. இன்று புரிகிறது சமாளித்து இருக்கிறார்கள் என்பது..

அதனால் தான் தீக்க்ஷயன் தன் முதல் திருமணத்தில் ஈடுபாடோடு இல்லாது இருந்தான்.. அவன் திருமண வாழ்வுமே.. அதற்க்கு மேல் தான் முடிந்தது..

அதனால் தானோ என்னவோ ஒரு குழந்தைக்கு தந்தையான பின்னுமே. தான் மனைவியை இழந்தவன் என்பது அவனுக்கு மறந்து போய் விடுகிறதோ என்னவோ.. அவன் அளவில் தான் அது.. ஆனால் வெளி பார்வைக்கு.. அதுவும் கையில் ஒரு குழந்தையை வைத்து கொண்டு இருந்து கொண்டு…

தான் மிகவும் அலைகிறோமோ.. அவள் சாதரணமாக தான் இருக்கிறாள்.. இனி பார்த்து தான் நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தவனுக்கு.. அதை செயலாற்ற தான் முடியவில்லை.

ஐந்து நாட்களிலேயே திருமண வேலைகளை முடித்து விட்டான்..மிகவும் எளிமையாக கோயிலில் திருமணம் தானே. வர வேற்ப்பு என்று இல்லாது ஒரு சின்ன பார்ட்டி போல.. அதற்க்கு ஒரு ஓட்டலில் புக் செய்து விட்டான்..

அதோடு ஜாக்கெட் எந்த வேலைபாடும் இல்லாது என்பதினால் வர்ஷினி இங்கு வரும் போதே தீக்க்ஷயனிடம் தன் அளவு ஜாக்கெட்டை கொடுத்து அனுப்பி விட்டாள்..

ஆனால் அதை அவனிடம் கொடுக்கும் போது தான் வர்ஷினிக்கு என்னவோ போல் இருந்தது.. திருமணம் முடிந்து குடும்பம் நடத்திய பின் இது போலான வேலைகள் கொடுப்பது பரவாயில்லை..

ஆனால் ஆரம்ப கட்டத்தில், அதுவுமே தங்கள் இருவருக்குமே பிடித்தம்.. அது மட்டுமே இருவரும் பரிமாறிக் கொண்ட பின் வேறு பேச்சாக திருமணம் செய்வது தீராவை பற்றி என்று தான் அவர்களுக்குள் பேச்சுக்கள் அதிகம் அளவில் இருந்தன. ஏன் சில சமயம் இன்வெஸ்மெண்ட் எதில் எதில் போட்டால் நல்ல ரிட்டன் கிடைக்கும் என்று சில ஐடியாக்களை தீக்க்ஷயன் வர்ஷினிக்கு சொல்வான்..

ஒரு சில பேச்சுக்கள் கெளதம் முன் நிலையில் கூட நடக்கும்.. இவர்களின் இந்த பேச்சில் அவன் தான் தலையில் அடித்து கொள்வான்.. அப்படி இருவருக்கும் அந்த அளவுக்கு தனிப்பட்ட நெருக்கம் இல்லாத போது.. இது போலான ஜாக்கெட் அளவு கொடுப்பது..

அதுவும் அதில் ஒரு சில மாற்றங்களாக முதலில் கொஞ்சம் சதைப்பற்றோடு தான் வர்ஷினி இருப்பாள்.. அதாவது அவள் அம்மா சமைத்து இவள் உட்கார்ந்து சாப்பிட்ட சமயத்தில், எந்த பொறுப்பும் இல்லாது எல்லாத்துக்கும் நம்ம அப்பா இருக்கிறார் என்ற தைரியத்தில் இருக்கும் சமயத்தில்.

ஆனால் இந்த ஒரு வருடத்தில் பெண்ணவள் கொஞ்சம் இளைத்து தான் இருந்தாள்.. இந்த ஜாக்கெட் கூட எட்டு மாதம் முன் அவள் வேலை செய்யும் இடத்தில் ஒரு பார்ட்டி ட்ரஸ் கோர்ட் வேர்ட். கண்டிப்பாக பெண்கள் சேலை கட்டியாக வேண்டும் என்றதில் எடுத்தது…

இப்போது அந்த அளவு சரியாக இல்லாததினால், ஒரு அளவுக்கு பிடித்தம் எல்லாம் சொல்லி கொடுத்து விட்டாள்.. இதோ இந்தியாவில் அதன் படி தைத்தும் வாங்கியும் வந்து விட்டான்..

வர்ஷினி இந்தியாவுக்கு வர இன்னும் இரண்டு நாட்கள் தான் இருந்தன.. குழந்தையுமே. “ப்பா ம்மா எப்போ வருவாங்க வருவாங்க..” என்று கேட்டு கொண்டு இருக்க.

ஏதோ ஒரு முடிவோடு ஹான்லைனில் விமான டிக்கெட்டை பார்க்க அவன் நல்ல நேரம் அன்று இரவே இருந்தது.

ஆனால் விலை தான் கொஞ்சம் கூடுதல் பரவாயில்லை.. அதை எல்லாம் பார்க்காது தனக்கும் தன் குழந்தைக்கும் ரிட்டன் போட்டு விட்டான்..

அதுவும் வர்ஷினி இந்தியா வரும் விமானத்திலேயே… இதை வர்ஷினியிடம் தெரியப்படுத்த வில்லை ஒரு சர்பிரைஸ்ஸாக இருக்கட்டும் என்று சொல்லாது விட்டான்.

வர்ஷினிக்கு சர்பிரைஸ் கொடுக்க சொல்லாது விட்டான்.. அது பரவாயில்லை..

ஆனால் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி இருந்து இருக்கலாம்.. ஆனால் இன்று இப்போது கிடையாது தீக்ஷயனின் சின்ன வயது முதலான பழக்கமே.. அனுமதியோ.. சொல்லி விட்டு செய்வதோ.. இல்லை இது தான் என்று தன் தாய் தந்தையரிடம் அவன் சொன்னது கிடையாது.

படிக்கும் காலம் தொட்டெ.. இந்த க்ரூப் இந்த பள்ளி.. இந்த காலேஜ் மேல் படிப்பு இது படிக்க இருக்கேன்.. இங்கு வேலை கிடைத்து இருக்கு.. என்று அனைத்துமே தன் முடிவாக எடுத்து விட்டு தான் சொல்வது..

அவன் வீட்டின் விருப்பத்திற்க்கு விட்ட ஒரே விசயம் அவனின் முதல் திருமணம் மட்டுமே… அதுவும் தங்கையின் அந்த தற்கொலை. வீட்டில் சென்டிமெண்ட் பேச்சில்.. மற்றது எல்லாம் அவன் முடிவு தான்.. வீட்டில் சொல்ல மாட்டான் அந்த பழக்கமும் கிடையாது..

அதை போலவே விமானத்திற்க்கு சரியாக இந்த நேரம் சென்றால் சரியாக இருக்கும் என்ற சமயத்தில் தன் அறையில் இருந்து குழந்தையோடு வெளியில் வந்த தீக்க்ஷயன்…

எங்கு வெளியில் போவது போல இந்த நேரத்தில், அதுவும் குழந்தையோடு கிளம்பி விட்டான் என்று பார்த்த சரஸ்வதியிடம்..

“ம்மா ஜார்டன் போய் வசியை கூட்டிட்டு வரேன்…” என்று சொன்னவனை சரஸ்வதி அதிர்ச்சியோடு பார்த்திருந்தார்.

என்ன இது சினிமா போகிறேன்.. என்பது போல சொல்றான் என்று பார்த்தவரை தீக்க்ஷயன் கவனிக்கவில்லை..

அவனின் கவனம் எல்லாம் விமானத்தை விட்டு விட கூடாது.. மற்றும் வர்ஷினி.. இதுவே தான் ..அதனால் சொல்லி விட்டோம்..

கூடுதலாக..

“ப்பா கிட்ட சொல்லிடுங்க..” அவ்வளவே தீக்க்ஷயன் தன் வீட்டவர்களிடம் விடைப்பெற்று விமான நிலையத்திற்க்கு வந்து விட்டான்.. இரண்டு நாட்கள் என்பதினால் லக்கேஜும் அதிகம் இல்லை.. குழந்தையுமே அம்மாவை கூட்டிட்டு வர போகிறோம் என்ற இந்த வார்த்தையே.. அவள் அடம் பிடிக்காது சமத்தாக இருக்க போதுமானதாக இருந்தது..

சரியான நேரத்தில் விமானமும் ஏறி விட்டான்..

ஆனால் இங்கு அவன் வீட்டில் அந்த வீட்டின் மூத்த மருமகள் ஸ்வேதாவும் தன் மாமியாரை ஏற்றி விட வேலையையும் தொடங்கி விட்டான்..

தீக்ஷக்யன் சரஸ்வதியிடம் பேசிக் கொண்டு இருப்பதை தன் அறையின் கதவின் மீது சாய்ந்து கொண்டு தீக்ஷயம் விடைப்பெற்ற அழகையும் கேட்டவள் சரஸ்வதியின் அதிர்ச்சியையும் பார்த்து கொண்டு தான் இருந்தாள்..

அதன் தொட்டு தீக்க்ஷயன் வெளியில் சென்ற நொடி தன் மாமியார் பக்கத்தில் அமர்ந்து கொண்டவள்..

“ எனக்கு என்னவோ.. தீக்க்ஷயன் போக்கு எனக்கு சரியா படல.. அத்த.” என்று தன் ஆரம்ப பேச்சாக சொன்னவள்.. அதற்க்கு என்ன எதிர்வினை என்று தன் மாமியாரை ஸ்வேதா பார்த்தாள்..

சரஸ்வதி அன்று போல் ஸ்வேதாவின் பேச்சை கேட்காதவாறு எழுந்து எல்லாம் போகவில்லை.. மாறாக மருமகளின் முகத்தை இவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது போல் பார்க்க.

ஸ்வேதாவுக்கு இது போதுமே.. அடுத்து அடுத்து கொம்பூ சீவும் பேச்சை தொடர்ந்தாள்..

“ இப்போ குழந்தை மீது பாசமா இருப்பது போல் தான் இருப்பா அத்த.. ஆனா கல்யாணம் ஆனதும் பாருங்க. அம்மா சித்தியா எப்படி அவதாரம் எடுக்க போறா என்று…” சொல்லி விட்டு ஸ்வேதா தன் பேச்சை நிறுத்தினாள்..

“என்ன சொல்ற ஸ்வேதா… தீக்க்ஷயன் அதுக்கு எல்லாம் விட்டு விட மாட்டான்..” என்று மறுத்து சொன்னவரின் குரல் தழைந்து தான் ஒலித்தது..

“ம் உங்க மகன் விட்டு விட மாட்டாரு.. பார்த்திங்கலே… ஜார்டனுக்கு போய் கூட்டிட்டு வர போறாரு.. என்னவோ பக்கத்து தெருவுக்கு போவது போல சொல்லி விட்டு போகிறார்… இப்போவே இப்படின்னா… இது என்ன அவருக்கு முதல் கல்யாணமா என்ன..?

முதல் கல்யாணத்தில் கூட இவர் இப்படி இல்லையே. எனக்கு என்ன என்பது போல தானே ஏனோ தானோ என்று இருந்தார்.” என்று ஸ்வேதாவின் இந்த பேச்சுக்கு மட்டும்

சரஸ்வதியிடம் இருந்து சட்டென்று.. “அவனுக்கு பவித்ராவை பிடித்து எல்லாம் கல்யாணம் செய்துக்கல ஸ்வேதா.. நம்ம கட்டாயத்தினால் தானே கல்யாணமே செய்து கொண்டான்..” என்று சொன்ன சரஸ்வதியின் இந்த வார்த்தையை கொண்டே..

ஸ்வேதா.. “ அதை தான் நான் சொல்ல வரேன் அத்தை.. பவியை பிடிக்கல இந்த பெண்ணை பிடித்து இருக்கு.. எந்த அளவுக்கு என்றால் குழந்தையை இங்கும் அங்குமா அல்லாட வைக்கும் அளவுக்கு புரியுதா அத்தை..” என்று சொன்னவள் இன்றைக்கு இது போதும் என்று நினைத்து விட்டாளோ என்னவோ… சொன்ன வரை அத்தை யோசிக்கட்டும் என்று ஸ்வேதா மீண்டும் தன் அறைக்கு சென்று விட்டாள்..










 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
அடேய் தீஷன் அவ சாதாரணமா சொல்றதை கூட நீயா வேற மாதிரி கற்பனை செஞ்சா நிம்மதியா இருக்க முடியாது 😕😕😕😕😕😕😕😕😕😕

இவனே தேவை இல்லாத கற்பனை பண்றான் 😨 😨 இதுல ஸ்வேதா வேற எல்லாத்தையும் திரிச்சு வேற மாதிரி பேசுறா 😈 😈 👿 😈 👿

சரஸ்வதி சாத்தான் வேதம் ஓதுறதை எப்போ புரிஞ்சுக்க போறீங்க 🤔🤔🤔🤔🥺
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
இத்தனை நாள் இல்லாம குழந்தை மேல திடீர்னு அக்கறை வந்துடுச்சு மாமியார் மருமகளுக்கு.... 😤😤😤😤😤 அவ தான் பேசுறானா இவங்களும் இனியாவது மகன் சந்தோசமா வாழட்டும்ன்னு நினைக்காம அவ சொல்றதை கேட்டுட்டு இருக்காங்க....🥶🥶🥶🥶🥶🥶
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Swetha ku oru paayasathai podanum next… avale podhum Saraswathy ya villi ah change panna… Magan manaivi kooda samthoshama iruntha happy ah irukkira mamiyar ah than parthirukken… ivanga ennada na 😏😏😏
 
Active member
Joined
May 24, 2024
Messages
194
Nice update
Inda swethaki ethavathu pannunga
Theera ini yavathu happy ah irukanum
 
Top