Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam-16

  • Thread Author
அத்தியாயம்…16

கார் தன் அலுவலகம் செல்லும் பகுதியை நோக்கி செல்வதை பார்த்து… “ தீனா என்ன இந்த சைட்ல போறிங்க … ஆபிஸ் மூலம் ஏதாவது ரூம் அரெஞ்ச் செய்து இருக்கிங்கலா..?” என்ற கேள்விக்கு பதில் அளிக்காது அவளை திரும்பி பார்த்து சிரித்தவன் பின் ஒன்றும் சொல்லாது மீண்டும் வாகனத்தை செலுத்த..

“போங்க சொல்லாட்டி.. எப்படி இருந்தாலும் இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிய தானே போகுது..” என்று சொன்னவள் கோபம் போல் கழுத்தையும் திருப்பிக் கொண்டாள்..

இந்த கோபம் கூட அவனுக்கு புது வித அனுபவத்தை தான் கொடுத்தது.. பிடித்தும் இருந்தது… மீண்டும் அவளை பார்த்து சிரித்தவன்.. பேசாது வாய் அசைவில் ஒரு பாட்டை ஹம் செய்து கொண்டே காரை செலுத்தியவன் வந்து நின்ற இடம் தான் ஐந்து வருடங்களுக்கு முன் வாங்கி போட்ட அவனின் லக்ஸ்சூரி அப்பார்ட்மெண்ட்…

அந்த இடத்தை பார்த்ததுமே தன் கோபம் எல்லாம் மறந்து போய் சுற்றும் முற்றும் பார்த்தாள்..

கேட் வெளியில் இருந்து அந்த அப்பார்மெண்ட்டை பார்த்து இருக்கிறாள்.. கேட்டின் உள் நுழைவது இதுவே முதல் முறை என்பதினால், ஆசையோடும் ஆராய்ச்சியோடும்.. அவள் கண்கள் அந்த அப்பார்ட்மெண்டை எடைப்போட்டது..

இங்கு தான் தங்க வைக்க போகிறான் என்பதை புரிந்து கொண்டவள்.. யாருடையது என்று கேட்கவில்லை.. இன்னும் கொஞ்ச நேரத்தில் அதுவுமே தெரிந்து விட போகிறது என்று நினைக்க..

கார் இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் தன் காரை நிறுத்தியதுமே ஒரு வாட்ச் மேன் தீக்க்ஷயன் அருகில் ஓடி வந்து நின்றார்.. காரில் இருந்து இறங்கியதுமே தன்னையும் இறங்க சொல்ல.

தீரா தூங்கி விட்டதால் தூங்கிக் கொண்டு இருந்த குழந்தையை வைத்து கொண்டு வர்ஷினி இறங்க கஷ்டப்பட.. சட்டென்று குனிந்து வர்ஷினியின் மடியில் இருந்து குழந்தையை தூக்கி கொண்ட தீக்க்ஷயன் இப்போது இறங்கு என்பது போல் பார்க்க..

இப்போது முன் கோபம் எல்லாம் மறைந்து தாங்கள் ஒரு குடும்பம் என்பது போன்று மனதில் ஆழ பதிந்தது போல இருந்தது இந்த நிகழ்வு..

நீண்ட ஒரு வருடத்திற்க்கு பின்.. தான் தனித்து என்பது மறைந்து தனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை உணர வைத்தான் வசியின் தீனா…

பெண்ணவளின் முக பாவனையை பார்த்தவன் “கோபம் எல்லாம் போயிடுச்சி போல..” என்று சொன்னவன் வர்ஷினி இறங்கியது சாவியை அந்த வாட்ச்மேனிடம் கொடுத்து கூடவே இரண்டு ஐநூறு ரூபாயை கொடுத்தவன்..

“டிக்கியில் இருக்கும் பொருட்களை எடுத்து வந்து வைத்து விடுங்க.” என்று சொல்லி விட்டு

மின் தூக்கியில் குழந்தையோடு தீக்க்ஷயன் முன் நுழைய பின்னே வர்ஷினி சென்றாள்.. இப்போது யாருடையது என்று அறியும் ஆவல் அவளிடம் இல்லை..

தான் தீனா தங்கள் குழந்தை குடும்பமாக தங்கள் வீட்டுக்கு போவது போல ஒரு கற்பனை.. இந்த கற்பனை அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது..

அதற்க்கு தடை செய்வது போன்று எதுவும் பேசவும் இல்லை.. நினைக்கவும் இல்லை. அதனால் அந்த மின் தூக்கி இயங்கும் சத்தத்தை தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை..குழந்தை முழித்து இருந்திருந்தாவது ஏதாவது பேசிக் கொண்டு வந்து இருப்பாள்..

மெளனமும் ஒரு வித ஏகாந்த சுகம் தான் போல. அதை இருவரும் அனுபவித்தனர்.

நான்காம் தளம் வந்து ஒரு வீட்டின் முன் வந்து நின்று தீக்க்ஷயனிடம் இருக்கும் சாவியை கொண்டு திறந்து உள் நுழைந்தவன்..

அடி பணிவது போல குனிந்து. “வெல்கம்..” என்று சொல்லி வரவேற்றான்..

அப்போது கூட நண்பனுடையது போல் என்று தான் நினைத்து கொண்டாள் பெண்ணவள்..

குழந்தையை அங்கு இருந்த மூன்று படுக்கை அறையில் இருந்த ஒரு அறைக்கு சென்ற தீக்க்ஷயன் படுக்கையில் படுக்க வைத்து விட்ட பின் ஹாலுக்கு வந்தவன்..

அங்கு அமராது நின்று கொண்டு இருந்த வர்ஷினியிடம்.. “என்ன வசி நின்னுட்டே இருக்க உட்கார்..” என்று சொன்னவன் அவள் அமர்ந்ததும் தானுமே அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்..

இது தான் அவர்கள் இருவரும் தனித்து இருக்கும் பொழுது என்று நினைக்கிறேன்.. எப்போதுமே தீரா இல்லாது இவர்கள் சந்திப்பு என்பது இல்லை தானே..

அதை தான் தீக்க்ஷயன் சொன்னான்.. “ தீரா இல்லாது பஸ்ட் டைம் பக்கம் பக்கம் இது தான் பஸ்ட் இப்படி உட்கார்ந்துட்டு இருப்பது.” என்றவனுக்கு..

“ம்..” என்று மட்டும் தான் பதில் அளித்தாள்..

ஆனால் தீக்க்ஷயன் அதற்க்கு.. “மேரஜூக்கு பின் கூட இது போல நமக்கான நேரம் கிடைப்பது அறியதா தான் இருக்கும் வசி..” என்றவனின் பேச்சில் தீக்க்ஷயனை கூர்ந்து பார்த்தவள்..

“அதுக்கு.?” என்று ஒரு மாதிரியான குரலில் வர்ஷினி கேட்கவும்..

சட்டென்று.. “ஒன்றும் இல்லை..” என்று விட்டான்..

அவனுமே இந்த பொழுதை ரசித்தான்.. இந்த பொழுதை என்பதை விட இந்த நாளையே அவன் ரசித்துக் கொண்டு இருக்கிறான்..

இதை தன் எதிர்கால பயத்தை பேசி கெடுத்து கொள்ள விரும்பாதவன் சட்டென்று தன் பேச்சை..

“இந்த வீடு யாருடையது என்று கேட்கலையே…?” என்று கேட்டான்.. தீக்க்ஷயன் தன் பிரச்சனைகளை தான்.. அதுவும் ஒரு சிலதை மட்டும் தான் வர்ஷினியிடம் சொல்லி இருக்கிறான்.. பலதை சொல்லவில்லை..

அதில் அவன் வாங்கி போட்ட இரண்டு லக்சூரி பிளாட்டும் அடங்கும்.. அவளிடம் சொன்னது கிடையாது..

அதனால் இது அவனுடையதாக இருக்கும் என்று தோனாது.. தீக்க்ஷயன் கேட்டதற்க்கு…

வர்ஷினி.. “இந்த வீட்டிற்க்கு நீங்க அடிக்கடி வந்து போவீங்க என்ற அளவில் லட்டூவை நீங்க பெட் ரூமை தேடாது போனதில் இருந்து தெரிகிறது..” என்று சொன்னவள்..

பின்.. “உங்க பிரண்ட்டோட ப்ளாட்டா..?” என்று கேட்டவளிடம்..

“ஏன் நம்முடையாதா இது இருக்க கூடாதா..?” என்று கேட்டவன் தன் புருவத்தை ஏற்றி இறக்க.

“ஓ.. உங்களுடையதா…?” என்று கேட்டவள் ஆச்சரியமாக அவனை பார்த்தாள்.. காரணம் இதன் விலை அத்தனை கோடி வைத்தால் தான் வாங்க முடியும்..

அவள் பெற்றோர் இருக்கும் போது அவள் அப்பாவிடம் சொல்லுவாள்..

“ப்பா பேசாம இந்த வீட்டை விற்று எங்க ஆபிஸ் பக்கத்தில் ஒரு லக்சூரி அப்பார்ட்மெண்ட் இருக்குப்பா சூப்பரா.. இருக்கும்.” என்று..

அதற்க்கு அவளின் தந்தை தனித்து வீட்டிற்க்கும் இது போல அடுக்குமாடி குடியிருப்புக்கும் இருக்கும் வித்தியாசத்தை சொன்னதோடு.. அதன் மதிப்பின் வேறுப்பாட்டையுமே சேர்த்து தான் கூறினார்..

அப்போது அதை ஏனோ தானோ என்று தான் கேட்டு இருந்தாள்.. ஆனால் இப்போது அதை நினைத்து தான் தான் வாங்கும் முதல் சொத்தை இது போன்று அடுக்குமாடி குடியிருப்பாய் இல்லாது இடம் வாங்கி கட்ட நினைத்து கொண்டு இருப்பது..

ஆனால் இதில் வாடகை நிறைய கிடைக்கும் என்பது அவளுக்கு தெரியும்..

அதையே தான் தீக்க்ஷயனுமே வர்ஷினியிடம் சொன்னது,.

அதோடு “வேலை ப்ரஷர். இடம் பார்த்து தேடி பில்டரை பிடித்து கட்டி முடிக்க எனக்கு நேரம் இல்லை.. அதோடு இந்த அப்பார்ட்மெண்ட் வாங்கும் போது எனக்கு இருபத்தி ஏழு வயது தான்.. அட்ராக்ஷனா இருக்கும் இதை தான் வாங்க ஆசைபட்டேன்.. ஆனா நீ சொல்வது போல மதிப்பு என்பது நிலத்துக்கு தான்.. நம்ம அடுத்த இன்வெஸ்மெண்ட் உன் விருப்பப்படி தான் இருக்கும்..” என்று சொன்னவனிடம் ஒன்றும் சொல்லவில்லை.. அவள் கணக்கு வேறு ஒன்றாக இருந்தது..

பின் நடக்க இருக்கும் திருமணம் செய்தது செய்ய வேண்டியதை என்பதை பற்றி பேசிய பின் வாட்ச் மேன் கொண்டு வைத்த லக்கேஜை இன்னொரு பெரிய அறையில் வைத்தவனிடம்..

“இந்த வீட்டை வாடகைக்கு விடலையா தீனா..?ஆபிஸ் பக்கம்… கண்டிப்பாக வாடகைக்கு கேட்டு வந்து இருப்பாங்களே..” என்று கேட்டதற்க்கு.

“இல்ல மூன்று பேச்சிலர் தான் தங்கி இருந்தாங்க.. அதில் ஒருத்தவங்களுக்கு மேரஜ் பிக்ஸ் ஆகிடுச்சி என்று வேறு இடம் பார்த்து போயிட்டாங்க இன்னொருத்தருக்கு வேறு பிரான்ச்.. மூன்றாதவருக்கு என் ஒருத்தனுக்கு இவ்வளவு வாடகை கொடுக்க முடியாது என்று சொல்லி லாஸ்ட் வீக் தான் வெக்கட் செய்தாங்க…

அது தான் இந்த ஒன் வீக்குக்கு நீ தங்கனும் என்று அப்படியே விட்டு வைத்து இருக்கேன்.” என்றவனிடம் வர்ஷினி அடுத்து ஒன்றும் கேட்கவில்லை..

அவளுக்குமே உடல் மிகவும் அசதியாக இருந்தது.. அது அவள் முகமே காட்டி கொடுத்து விட.

“இரு புட் ஆர்டர் செய்யிறேன். தீராவுக்கு ஊட்டி விட்டுடலாம்.. நான் பேபியோட நம்ம வீட்டுக்கு போயிடுறேன்.. இங்கு சேப் தான்.. நீ நிம்மதியா தூங்கி ரெண்ட் எடு. நான் நளைக்கு வரேன்.” என்று சொன்னது போல உணவை ஆர்டர் செய்தவன் வந்ததும் குழந்தையை எழப்பலாம் என்று தீராவை தொடும் போது தான்..

காச்சல் போல அவனின் கை சூடு உணர்ந்தது… அதற்க்கு பயப்பட எல்லாம் இல்லை. குழந்தை என்றால், இது போல வர தானே செய்யும்.. நான்கு வயது வரை வளர்த்த அனுபவம் அவனுக்கை கை கொடுத்தது..

இட்லி மட்டுமே ஊட்டி விட சொல்லி வசியிடம் சொன்னவன்.. அந்த அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிக்குள் இருக்கும் மருந்தகத்தில் எப்போதுமே காச்சல் என்றால் ஊற்றும் சிரிப்பை வாங்கி கொண்டு வந்தான்..

வர்ஷினிக்கு தான் காச்சல் என்றதும் பதறி போய் விட்டாள்..

“குழந்தைக்கு அலச்சல் ஒத்து கொள்ளவில்லை போல. நீங்க ஜார்டனுக்கு வந்து இருக்க கூடாது.. அதுவும் போன வாரம் தான் அங்கு இருந்து இந்தியாவுக்கு வந்தது.. திரும்பவும் ஒரே வாரத்தில் இங்கு இருந்து அங்கு அங்கு இருந்து இங்கு குழந்தை உடம்பு தாங்குமா…” என்று புலம்பிக் கொண்டே இருந்தாள்..

தீக்க்ஷயன் தான்.. “அது எல்லாம் ஒன்றும் இல்ல வசி.. இரண்டு இட்லி ஊட்டு இந்த சிரப்பு கொடுத்தால் காலையில் சரியா போயிடும்.. “ என்று சொல்ல.

சரி என்று வர்ஷினியும் அடுத்து எதுவும் புலம்பாது ஒரு இட்லியை தீராவுக்கு ஊட்டி முடித்து விட்டாள்..

அதை வாங்கவே தீரா.. “ம்மா வேணாம் வேணாம்..” என்று சொல்ல..

எப்போதும் தான் ஊட்டினால் சமத்தாக அடம் பிடிக்காது சாப்பிட்டு முடிக்கும் குழந்தை இன்று வேண்டாம் என்று சொல்வது காய்ச்சலினால் என்று புரிந்து கொண்டவள்.

ஆனால் மருந்து கொடுக்க வேண்டுமே.. அதோடு இரவில் குழந்தைக்கு பசித்தால் தூக்கம் கெடும் என்று நினைத்து..

“இன்னும் ஒன்னு தான் லட்டூ குட்டி..” என்று சொல்லி சொல்லியே பாதி இட்லியை குழந்தைக்கு ஊட்டி முடித்து விட்டாள்..

சரி இதோடு போதும் என்று நினைத்து வெந்நீரை எடுக்க திரும்பிய சமயம் குழந்தை சாப்பிட்ட அனைத்துமே கொட கொட என்று வாந்தி எடுத்து விட்டாள்..

தீக்க்ஷயனுக்குமே குழந்தை வாந்தி எடுத்து சோர்ந்து போய் அவன் தோள் சாய்ந்ததில் முதல் முறையாக குழந்தையை மிகவும் அலை கழித்து விட்டோமோ என்று நினைக்க.

வர்ஷினி பயந்து போய் விட்டாள்.. “ குழந்தை ஒரு இட்லியோடு பொதும் என்று தான் சொன்னா நான் தான் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று சொல்லி ஊட்டி விட்டேன்.. ஒரே இட்லியோடு நிறுத்தி இருந்தால், அதுவாவது இருந்து இருக்கும்..” என்று பதற.

தீக்க்ஷயன் தான்.. “வசி விடு.. “ என்று சொல்லியும் கேட்காது.

“வா தீனா குழந்தையை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போயிடலாம்..” என்று சொன்னதுமே தீக்க்ஷயனுக்குமே அது தான் சரி என்று பட.

இதே அடுக்கு மாடி குடியிருப்புக்கு உள்ளேயே ஒரு சின்ன க்ளீக் உள்ளது.. அந்த மருத்துவர் குழந்தை நல மருத்துவர் தான்..

அதனால் அங்கேயே அழைத்து செல்ல.. மருத்துவர் ஒரு இஞ்செக்ஷன் போட்டு விட்டார்..

“குழந்தைக்கு அலச்சலால் கூட இப்படி வந்து இருக்கும் மாறி மாறி தண்ணீர் மாறியதில் கூட இருக்கும் ஒரு இரண்டு நாளில் சரியாகி விடும் பிரச்சனை ஒன்றும் இல்லை… “ என்று தான் அந்த டாக்டர் சொன்னது..

இப்போது அது பிரச்சனை கிடையாது.. இங்கு இருந்து மீண்டும் தீக்க்ஷயன் வீடு மிகவும் தூரம்.. இன்னுமே குழந்தைக்கு அலச்சல் ஏற்படுத்த வேண்டுமா… என்றும் ஒரு பக்கம் தீக்க்ஷயனுக்கு இருந்தது..

இன்னொரு பக்கம் இன்னுமே திருமணம் முடியாது இப்படி தனித்து இரவில் தங்குவது சரியில்லை என்பதும் அவன் எண்ணமாக இருந்தது.

வர்ஷினிக்குமே இதோ யோசனை தான்..

“இங்கேயே தங்கி விடுங்கள் என்றும் அவளாள் சொல்ல முடியவில்லை.. உடல் நிலை சரியில்லாத குழந்தையை அவ்வளவு தூரம் அலைக்கழிக்கவும் அவள் மனது ஒத்து கொள்ளவில்லை..

குழந்தை இங்கு இருக்கட்டும்.. நீங்கள் மட்டும் உங்கள் வீட்டிற்க்கு போங்கள் என்றும் வர்ஷினியால் சொல்ல முடியவில்லை…

காரணம் உடல் நிலை சரியில்லாத குழந்தைக்கு மீண்டும் ஏதாவது இது போல வாந்தி வந்தால் தனித்து எங்கு இருந்து இவள் ஆஸ்பிட்டலுக்கு அழைத்து போவது.. கூட நடியிரவில் முழித்து கொண்டு அப்பாவை கேட்டால் இவள் தான் அங்கு கொண்டு போய் விட முடியுமா..? என்று பல யோசனைகள்..

முடிவு தீக்க்ஷயனே எடுக்கட்டும் என்று அவனை பார்க்க.. தீக்ஷயனுமே முடிவு எடுத்தவனாக..

“இந்த நேரம் இங்கு நான் தங்குவது சரி படாது வசி.. கார் தானே போய் விடுறேன்.. நீ லாக் பண்ணிட்டு இரு.. இங்கு சேப் தான்..” என்று சொன்னவனிடம்..

“தீனா என்னைய விடுங்க.. நீங்க பேபியை பாருங்க.. வீட்டிற்க்கு போயிட்ட பிறகு எனக்கு ஒரு மெசஜ் பண்ணுங்க..” என்று திரும்ப திரும்ப இதையே சொன்னவள்..

குழந்தையின் உடம்பில் காத்து படாத வாறு தன் லக்கேஜில் இருந்து ஒரு கம்பிளியை எடுத்து கவர் செய்த பின் தான் மனதே இல்லாது அனுப்பி வைத்தது..

சொன்னது போல வீடும் வந்து விட்டான்.. ஆனால் வீட்டினுள் நுழைய வில்லை.. அதற்க்குள் வர்ஷினியிடம் இருந்து போன்..

“லட்டூ திரும்ப வாமிட் பண்ணலையே என்று கேட்டு.

“வசி பேபி தூங்குறா. நீ சும்மா பேபியை நினைத்தே ஒரி பண்ணிக்காதே.. நீயுமே ட்ராவலிங்கில் அலச்சல் தான்.. நாளை வேறு ட்யூட்டி ஜாயின் பண்ணனும்.. தூங்கு..” என்று சொல்லி வைத்தவன்..

வர்ஷினி கொடுத்த அந்த கம்பளியை போர்த்தி தான் குழந்தையை தூக்கி கொண்டு வீட்டிற்க்குள் சென்றது.. அப்போது மணி பத்தை தொட்டு இருந்தது..

ஜவுளிக்கடை என்பதினால் கடை மூடிய பின் தான் பெரும்பாலும் மகேந்திரனும் தட்சணா மூர்த்தியும் வீடு வருவது.. அதனால் இரவு நேரம் கடந்து தான் சாப்பிடுவதும் தூங்குவதுமே..

அதனால் தீக்க்ஷயன் குழந்தையை தூக்கி கொண்டு வீட்டின் உள்ளே சென்ற போது தீக்க்ஷயனின் அண்ணனும் அப்பாவும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்..

எப்போதுமே இந்த நேரம் ஸ்வேதா உறங்கி இருப்பாள்… தீக்க்ஷயனின் அம்மா சரஸ்வதி தான் கணவன் மகன் இருவருக்கும் உணவு பரிமாறுவது..

அன்று அதிசயமாக ஸ்வேதா முழித்து கொண்டு இருந்தவளின் கண்ணில் குழந்தையை சுற்றி இருந்த அந்த கம்புளி பளிச் என்று அவள் கண்ணில் பட்டு விட்டது..

ஸ்வேதா அதை கவனித்தாள் என்றால் சரஸ்வதி.. குழந்தையை தூக்கி கொண்டே ஒரு பக்கம் மாத்திரை பை பிடித்து கொண்டு வந்தது பட்டது.

குழந்தையை தங்கள் அறையில் படுக்க வைத்து விட்ட பின்.. காச்சல் இருக்கிறதா என்று தொட்டு பார்க்க.. இப்போது சுத்தமாக விட்டது போல் இருந்தது.. மனதில் ஒரு நிம்மதி..

அனைவரும் வெளியில் இருக்க அப்படியே படுக்காது.. இன்னும் திருமணத்திற்க்கு குடும்பத்தினருக்கு ஒன்றும் எடுக்கவில்லையே என்பது நியாபகத்தில் வர. அதை பற்றி பேச மீண்டும் ஹாலுக்கு வந்தான்..

ஆனால் வந்தவன் இதை பற்றி பேசும் முன் ஸ்வேதாவிடம் இருந்து வந்த கேள்வி.. “அந்த கம்புளி யாருடையது தீக்க்ஷயன்.?” என்பதே..




 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
ஸ்வேதா 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 இந்த சனியனை தூக்கி போட்டு மிதிச்சா தான் குடும்பத்துக்கு நல்லது 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

குழந்தைக்கு என்ன ஆச்சு என்று கேட்க தோணல 😣 😣 😣

குழந்தைய கொடுமை படுத்துறாங்க என்று மாமியார் வேற வருவாளே 🤭🤭🤭
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
வந்ததும் வராததுமா விசாரணையை ஆரம்பிச்சுட்டா..... யாரோடதா இருந்தா இவளுக்கு என்ன... 😬😬😬😬😬
 
Top