Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam...22...2

  • Thread Author
அத்தியாயம்….22…2

மனைவி தன் தலை கோதிக் கொண்டு இருந்தாலுமே, அவளின் கவனம் தன்னிடம் இல்லை.. அதோடு எதையோ யோசித்து கொண்டு இருப்பது போல அவளின் முக பாவனை காட்டியதை புரிந்து கொண்ட தீக்க்ஷயன்…

படுத்து கொண்டு இருந்தவன் சட்டென்று எழுந்து அமர்ந்தவன் வசியை பார்த்தான்.. கணவன் எழுந்ததில் வர்ஷினியுமே தன் யோசனையில் இருந்து வெளி வந்தவள் தன் கணவனை பார்க்க.. இருவரின் பார்வையுமே சந்திக் கொண்டது..

வர்ஷினிக்கு கணவனின் முகத்தில் நிம்மதி மகிழ்ச்சி என்று கலந்து பார்த்தாள் என்றால், தீக்க்ஷயன் குழம்பி போனவளான முகத்தை தான் பார்த்தது..

“ என்ன வசி.. என்ன பிரச்சனை…?” என்று பதட்டமாக தான் தீக்க்ஷயன் வர்ஷினியிடம் கேட்டான்..

முன் எல்லாம் தீக்க்ஷயன் தான் மனைவியை நாம் சரியாக வைத்து கொள்ள வில்லையோ என்ற யோசனையில் அவன் முகம் குழப்பத்தை காட்டும்..

ஆனால் வர்ஷினி முகத்தில் அப்படி ஒரு தெளிவை தான் அவன் பார்த்து இருக்கிறான்.. அப்படி குழம்பி ஏதோ யோசனையாக இருந்தாலுமே தன்னிடம் சொல்லி விடுபவள்.. இப்போது ஏன் தூங்காது என்று நினைத்தவனுக்கு அத்தனை பதட்டம்..

உடம்பு சரியில்லையோ என்று நினைத்து..

“ஒன்னும் இல்ல,..” என்று வர்ஷினி சொல்லியுமே… தீக்க்ஷயன்…

“ இல்ல சொல்.. ஏதோ இருக்கு… ஏதோ இருக்கு…” என்று விடாது கேட்டுக் கொண்டு இருந்தான்..

கணவனிடம் அவள் என்ன என்று சொல்லுவாள்.. இல்ல உங்க அம்மா நான் கன்சீவா இருப்பதில் அவங்களுக்கு சந்தோஷம் கிடையாது.. உங்க கிட்ட சந்தோஷமா இருப்பது போல நடிக்கிறாங்க என்று சொல்லவா முடியும்..

ஆம் இத்தனை யோசித்ததில் வர்ஷினிக்கு இது தான் தோன்றியது.. ஆனாலுமே இது தான் என்று உறுதியாக மாமியார் வார்த்தையாக சொல்லாத போது அவள் என்ன என்று சொல்லுவாள்..

கணவனுக்கு தன்னை பிடிக்கும் தான்.. ஆனாலுமே சரஸ்வதி அம்மா. ஒரு மகன் அம்மாவையும் நம்ப தானே செய்வார்கள்.

அதுவும் இது வரை தன்னை பிடிக்கவில்லை என்பதை அனைத்தையும் நேரிடையாக காட்டி தான் பழக்கம். இது போல மறைத்து எல்லாம் பழக்கம் இல்லாத போது தீக்க்ஷயன் நம்புவானா…?

வர்ஷினிக்குமே சரஸ்வதி தன்னை திட்டி பேசும் போதும் கரித்து கொட்டும் போதும் கூட அவளின் மனது பயப்படவில்லை.. ஆனால் மாமியாரின் இந்த நடிப்பில் கொஞ்சம் பயம்.. ஏதோ பெரியதாக வரப்போகிறதோ என்று நினைத்து.

எது என்று தெரியாத போது என்ன என்று சொல்லுவாள்..

அதனால்… “ இல்ல தீரா இல்லாது ஒரு மாதிரி இருக்கு.. அதுவும் இங்கு வந்ததில் இருந்து மேல இருக்கும் நம்ம ரூமில் தூங்கியதில் இந்த ரூமில் தூக்கம் வரவில்லை..”

வர்ஷினி சொன்னது இதுவும் ஒரு வகையில் உண்மை தான்.. இந்த அறையும் அவளுக்கு பிடிக்கவில்லை.. அதோடு திருமணம் ஆனதில் இருந்தே தீரா இருந்த பழக்கத்தில் இன்று இல்லாது இருக்கும் இந்த படுக்கையும் அவளுக்கு ஒரு மாதிரி வெறிச்சோடி இருப்பது போல் தான் தெரிந்தது..

“இதுக்கா முகத்தை இப்படி வைத்து இருப்ப.. கவலை படாதே இன்னும் கொஞ்சம் நாள் தான்…இன்னும் ஒரு குட்டி பேபி வந்து விடும்.. அப்போ இன்னுமே பெரிய பெட்டா வாங்கி மேல் ரூமில் போட்டுக்கலாம்..” என்று சொன்னவன்.

“இந்த நேரத்தில் ரொம்ப எல்லாம் யோசிக்கவும் கூடாது . கவலையும் பட கூடாது வசி… தூங்கு.. “ என்று சொன்னவனிடம்..

சரி என்றவள் தூங்கியும் போனாள்.. இன்று மாலையில் இருந்து அவளுக்கு கொஞ்சம் வாந்தி அதிகமாக தான் வர ஆரம்பித்து விட்டது.. அதோடு உணவை வாய் அருகில் கொண்டு சென்றாலே குமட்டிக் கொண்டு வர. சரி வர இரவில் சாப்பிடாது வேறு அவளுக்கு மிக சோர்வை கொடுத்ததில் உறங்கி விட்டாள்..

அடுத்த நாளுமே அவளாள் எழுந்து கொள்ள கூட முடியவில்லை.. எழுந்து அமர்ந்தாளே தலை சுற்றி போவது போலான நிலையில் இருந்தவளை பார்த்த தீக்க்ஷயன்..

“வேலைக்கு ஒன் வீக் லீவ் போடு வசி.. எப்படி வண்டி ஒட்டிட்டு போவ.. அதோட இந்த சமயத்தில் டூவீலர் ஓட்டுவது அவ்வளவு சேப் இல்ல என்று தான் நினைக்கிறேன்.. அதோடு டாக்டரை பார்த்துட்டு வந்த பின். வேலைக்கு போகலாம்… இது போல வாமிட் செய்துட்டே இருந்தா வேலைக்கு போனாலுமே வேலை பார்க்க முடியுமா.?” என்று சொன்னவனின் பேச்சில்..

வர்ஷினியுமே… “ சரி..” என்று விட்டாள்..

தீராவை குளிக்க வைத்து சாப்பிட கொடுத்து கட்டி கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைத்தது கூட அன்று சரஸ்வதி அம்மா தான்..

சரஸ்வதியம்மா தீராவை கிளப்பி விட.. அன்று தீக்க்ஷயன் தான் தீராவை பள்ளியில் விட்டு அவனின் வேலைக்கு செல்லலாம் என்று தான் நினைத்து இருந்தான்..

மதியத்திற்க்கு மேல் அந்த பெண் ஆட்டோ ஓட்டுனரே வீட்டில் கொண்டு வந்து விட்டு விடுவதால், தீராவை பற்றி பிரச்சனை இல்லை..

தீக்க்ஷயன் குழந்தையை பள்ளியில் விட்ட பின் தன் வேலைக்கு செல்ல மனது இல்லாது திரும்பவும் வீடு வர. அப்போது தான் பாதி இட்லி சாப்பிட்டுக் கொண்டு இருந்த வர்ஷினி குடல் வெளியில் வந்து விழும் அளவுக்கு வாந்தி எடுத்து கொண்டு இருப்பதை பார்த்தவன் ஓடி சென்று இதமாக அவளின் தலையை பிடித்து கொண்டான்..

பின் வெந்நீரை வாய் கொப்பளிக்க வைத்த பின் சிறிது குடிக்கும் வைத்தவன்.. இது போல வெறும் வயிற்றில் இருந்தால் எப்படி ஏதாவது சாப்பிடு என்று ஒரு அரை மணி நேரம் சென்ற பின் மனைவியிடம் கேட்டான்..

வர்ஷினிக்குமே ஏதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் போல் தான் இருந்தது.. ஆனாலுமே எந்த உணவை வாயின் அருகில் கொண்டு சென்றாலுமே குமட்டிக் கொண்டு வருவது போல் இருக்க

எந்த சுவையும் இல்லாது அரிசி கஞ்சி குடிக்க வேண்டும் போல இருக்க… அதை தீக்க்ஷயனிடமும் கூறினாள்..

அதை கேட்டுக் கொண்டு இருந்த சரஸ்வதியம்மா… உடனே சமையல் அறைக்கு சென்று வர்ஷினி சொன்னது போல நொய் கஞ்சி காய்த்து கொண்டு வந்து வைத்தார்..

‘கூடவே ஜீரணம் ஆக அதில் மிளகு சீரகம் கொஞ்சம் பொடி செய்து கஞ்சி காச்சிய சரஸ்வதியம்மா அதற்க்கு தொட்டு கொள்ள வாய்க்கு தோதாக புதினா சட்னியையும் கொண்டு வந்து கொடுக்க.

அது வர்ஷினியின் வாய்க்கு தோதாகவும் இருந்தது.. வாந்தியும் வரவில்லை.. அதனால் இரண்டு க்ளாஸ் புதினா சட்னியை வைத்து குடித்தும் முடித்தவளுக்கு, இப்போது பரவாயில்லை போல் இருக்க..

அம்மாடி என்பது போல் ஷோபாவில் அமர்ந்து கொண்டாள்.. கூட தீக்ஷயனுமே அமர்ந்து கொள்ள சரஸ்வதியம்மா அவர்களுக்கு இடையூறு கொடுக்காது தன் அறைக்கு சென்று விட்டாள்..

அப்போது தான் தீக்க்ஷயனுக்கு விடாது ஆபிசில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்த வண்ணம் இருந்தது,. ஒரு அவசர வேலை.. இவர்கள் முடித்த வேலையை சப்மிட் செய்யும் நாள் இன்று… மாலை தான்.. இருந்துமே இது போலான நேரத்தில் ஒரு ஐந்து நாள் முன்பு இருந்தே.. அந்த டீம் ஒரு பர பரப்புடன் தான் காணப்படும்…

அப்படி இருக்க இன்று மாலை சப்மிட் செய்ய வேண்டும் என்றால் கேட்கவும் வேண்டுமோ… அதனால் தான் தீக்க்ஷயனுக்கு இந்த தொடர் கை பேசி அழைப்பு..

இது வர்ஷினிக்கும் தெரியும் என்பதினால்.

“தீனா இப்போ நான் ஒகே தான்.. நீங்க ஆபிஸ் போயிட்டு வாங்க..” என்று சொல்ல.

தீக்க்ஷயனுக்குமே ஆபிஸ் போயே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினால் மனதே இல்லாமல் தான் சென்றான்..

ஆனாலும் செல்லும் போது.. மனைவியிடம். “ சும்மா ரூமிலே இருக்காதே முன் பக்கம் இருக்கும் தோட்டத்தில் உட்கார்ந்துட்டு இரு வசி… காத்தோட்டமா இருந்தா நல்லா இருக்கும்..” என்று சொல்ல..

வர்ஷினிக்குமே ஒரே அறையில் அடைந்து கொண்டு இருப்பது ஒரு மாதிரியாக இருந்ததினால், மெல்ல கணவன் கூடவே முன் பக்கம் தோட்டத்திற்க்கு சென்றவள்.. கணவனை வழி அனுப்பி வைத்து விட்டு ஒரு மரம் கீழ் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்…

தன் கையில் கை பேசி இருந்தாலுமே அதை அவள் பார்க்கவில்லை..காரணம் கை பேசி திறந்தாளே இது போலான நேரத்தில் என்ன என்ன செய்யலாம் சாப்பிடலாம் செய்ய கூடாது சாப்பிட கூடாது என்று பார்க்க தான் அவள் மனது தூண்டியது.. ஆனால் ஏனோ மனது அது எல்லாம் படிக்க வேண்டாம் என்றும் மனது சொல்ல.. இரண்டுக்கும் நடுவில் கை பேசியை எடுத்து பார்ப்பது பின் வைப்பதுமாக இருந்தவளின் அருகில் ஒரு குரல்.

“நீ மாசமா இருக்கியா பாப்பா..?” என்று ..

யார் என்று நிமிர்ந்து பார்க்க. அங்கு மீனை விற்க்கும் வயதான அந்த பெண்மணி நின்று கொண்டு இருந்தார்..

அவரின் வயதை தொட்டு சட்டென்று எழுந்து கொள்ள பார்த்த வர்ஷினியிடம்.. அந்த பெண்மணி…

“வேண்டாம் பாப்பா எழுந்துக்காதே..” என்று சொன்ன அந்த மூத்த பெண் மணியின் பேச்சில் எழாது அமர்ந்து கொண்டவள்.. சிறிது தள்ளி அமர்ந்த வர்ஷினி..

“நீங்களும் உட்காருங்க பாட்டி…” என்று அவருக்கு இடம் கொடுக்க… வர்ஷினியின் கன்னம் தொட்டு வழித்து முத்தம் இட்ட அந்த பெண்மணி..

“ராசாத்தி நீ நல்லா இருப்படா. உன் இந்த மனசுக்கு யார் என்ன சூழ்ச்சி செய்தாலுமே நீ ரொம்ப ரொம்ப நல்லா இருப்ப..” என்று வாழ்த்திய அந்த மூத்த பெண்மணியின் கண்கள் கலங்க உதட்டில் புன்னகை பூக்க சொன்னவரையே என்ன இது என்பது போல் தான் வர்ஷினி புரியாது பார்த்தாள்..

“நான் எல்லாம் கிட்ட போனாலே எட்ட போவாங்கம்மா.. ஆனா நீ.. “ என்று மீண்டுமே அந்த வயதான பெண்மணியின் கண்கள் கலங்கி விட்டது…

பின் மீண்டுமே வர்ஷினி அமர சொல்ல. அமர்ந்து விட்டார்.. கொஞ்சம் இடை வெளி விட்டு தான்..

பின் மீண்டுமே… “இந்த மாசம் நீ தீட்டு ஆகலையா பாப்பா..” என்று கேட்ட கேள்வி சட்டென்று புரியவில்லை.. பின் புரிந்து போய் விட்டது..

ஆனாலுமே உடனே பதில் அளிக்கவில்லை. இவர்களுக்கு எப்படி தெரியும் என்று ஒரு பக்கம் அவள் மனது யோசித்தாலுமே இன்னொரு பக்கம் இன்று காலை கூட அவள் மாமியார் சொன்ன.

“மூன்று மாசம் வரை யாருக்கும் சொல்ல கூடாது..” என்று மகனிடம் சொன்னவர்.. இவளிடமே…

“உங்க அக்கா அண்ணன் கிட்ட கூட சொல்லாதே..” என்று வார்த்தை நியாபகத்திற்க்கு வர.. சொல்ல கொஞ்சம் தயங்கினாள் தான்.. ஆனாலுமே அந்த மூதாட்டி சொன்ன உடனேயே அவளின் கை தன்னால் அவள் வயிற்றின் மீது படிந்தது..

அதிலேயே அனுபவம் வாய்ந்த அந்த பெண்மணிக்கு புரிந்து விட்டது…

“ஓ சொல்ல கூடாதுன்னு சொன்னாங்கலா..?” என்று சொன்னவர் பின்…

பின்.. “ ஆமாம்.. சொல்ல கூடாது தான்.. ஒருவர் கண் போல இருக்காது.. வீட்டில் பெரியவங்க சொல்ல கூடாது என்று தான் சொல்வாங்க..

ஆனா அது குழந்தை நல்லா இருக்கனும்.. நல்லப்படியா பெத்து கொடுக்கனும் என்று நினைக்கும் வீட்டில் சொன்னால் பரவாயில்லை.. ஆனால் இந்த வீட்டில்…” என்று தங்கள் வீட்டை கை காட்டி பேசிய அந்த மூதாட்டியின் பேச்சை வர்ஷினியால் தப்பாகவும் நினைக்க முடியவில்லை..

காரணம் அந்த மூதாட்டி சொல்லும் போதே அப்படி ஒரு உணர்ச்சி அவர் குரலில்.. தன்னை பார்க்கும் அந்த பார்வை சொன்னது.. நீ நல்லா இருக்கனும் ராசாத்தி என்பது போல..

கூடுதலாக அவளின் உள்ளுணர்வு சொன்னது… கோபப்படாதே அவங்க என்ன தான் சொல்ல வர்றாங்க என்பதை கேள்.

அவளின் தந்தை அவளை சில சமயம் அழைக்கும்.. “ராசாத்தி ..” என்று அழைத்து பேசிய அவரின் பேச்சு இந்த மூதாட்டியின் உருவத்தில் அவளின் தந்தையே அவளுக்கு சொல்வது போல ஒரு எண்ணம்..

அதனால். “ பாட்டி நீங்க என்ன சொல்ல வர்றிங்க பாட்டி எனக்கு புரியல…?” என்று புரியாத குரலிலும் குழப்பமான முக பாவனையுடனும் கேட்டவளின் மோவாயை பிடித்து கொண்ட அந்த பெண்மணி..

மீண்டுமே தன் தந்தையின் அழைப்பான. “ ராசாத்தி என்னை உன் மாமியாக்காரி நாளைக்கு நண்டு கொண்டா என்று போன் செய்தா…”

இது போல அந்த வீட்டில் நடப்பது தான்.. இந்த வீட்டிற்க்கு இந்த மீன் விற்க்கும் பெண்மணியிடம் தான் புதன் கிழமை ஆனால் ஏதாவது ஒன்று வாங்குவார்கள்..

ஞாயிறு வீட்டின் ஆண்கள் கடைக்கு சென்று கறி மார்க்கெட் சென்று கறி எலும்பு ஈரல் மூளை என்று வாங்குவார்கள்..
புதன் இந்த பெண்மணியிடம் தான் வாங்குவது… அதுவும் இந்த பெண்மணியின் கை பேசி எண் சரஸ்வதியம்மாவிடம் இருக்கும் அளவுக்கு அத்தனை வருடமாக இங்கு மீன் கொடுக்கும் வாடிக்கை.

சில சமயம் ஸ்ருதி. “எனக்கு இறால் வேண்டும்.. சுரா வேண்டும்..” என்று கேட்கும் போது…

சரஸ்வதியம்மா போன் செய்து.. “ என் பேத்தி சுரா கேட்டா… நல்லதா நாளைக்கு எடுத்துட்டு வா…” என்று முந்தைய நாள் செவ்வாய் கிழமையே சொல்லும் அளவுக்கு வாடிக்கை..

அது போல் தன் அத்தை சொல்லி இருப்பாங்க.. இதுல என்ன இருக்கு…?” என்பது போல் தான் வர்ஷினி அந்த மூத்த பெண்மணியை பார்த்தது..

வர்ஷினியின் முகத்தை வைத்தே அந்த பெண்மணிக்கு புரிந்து விட்டது போல..

அதனால் மிக விளக்கமாகவே “நாளைக்கு என்னை நண்டு கொண்டா என்று உன் மாமியார் காரி என் கிட்ட சொல்லி இருக்கா…” என்று சொன்ன போது கூட பாவம் வர்ஷினிக்கு புரியவில்லை.

இதில் என்ன இருக்கு என்பது போல் தான் வர்ஷினி அந்த பாட்டியை பார்த்து இருந்தாள்..

அந்த பாட்டிக்கு புரிந்து விட்டது.. இந்த பெண்ணுக்கு இப்படி சொன்னா எல்லாம் புரியாது என்பது..

அதனால் பொட்டில் அடித்தது போலவே.. “தோம்மா இது போல சமயத்தில் நண்டு எல்லாம் சாப்பிட கூடாது… குழந்தை உண்டாகி நாட்களே தள்ளி இருக்கும் கர்பிணி பெண்கள் இதை சாப்பிட்டா கரு உடனே கலைந்து விடும்..” என்று அந்த பாட்டி சொல்ல சொல்ல தான் வர்ஷினியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டே போனது..

இருந்துமே சமாளிப்பாக.. “எப்போவுமே உங்க கிட்ட இது வேண்டும்.. அது வேண்டும் என்று முன்னவே சொல்வாங்க தானே.. அது போல கூட இருக்கலாம் தானே…”

அப்படி தான் இருக்க வேண்டும் இருந்து ஆக வேண்டும்.. பெண்ணவள் நினைத்தாள்.. காரணம் சரஸ்வதியம்மா அவளுக்கு இது வரை எத்தனையோ வகையில் எத்தனையோ பிரச்சனைகளை அவளுக்கு கொடுத்து இருக்கிறாள் தான்.. சில சமயம் அவளின் பொறுமையும் எல்லையை கடந்து விடுமோ என்று எல்லாம் யோசிக்கும் அளவுக்கு கொடுத்து இருக்கிறார் தான்.. ஆனால் தன் கணவன் மற்றும் தீராவை நினைத்து தன்னை தானே அடக்கியும் கொண்டு அதை எல்லாம் கடந்தும் வந்து கொண்டு இருக்கிறாள்..

ஆனால் இது.. இது மட்டும் அப்படியாக இருந்தால், கண்டிப்பாக அவள் யாரையுமே பார்க்க மாட்டாள்.. அது கணவனாக இருந்தாலும் சரி.. ஏன் தீராவாக இருந்தாலுமே சரி.. ஒரு கற்பத்தில் கை வைக்க துணிந்தவர்கள் வீட்டில் அவளாள் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது..

ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது ஒருவர் மீது அபாண்டமாக பழி போடவும் முடியாது… அதுவும் மூன்று குழந்தை பெற்ற பெண்மணி இது போல செய்ய மனது வருமா.? என்று அவளே யோசிக்கும் போது மற்றவர்கள்… இது உண்மை இல்லாத சமயத்தில் தன் கணவனின் பார்வையில் நாம் எவ்வளவு கீழாக இறங்கி விட கூடும்… என்று இப்போதுமே நிதானமாக தான் நினைத்தாள்..

ஆனாலும் அந்த மீன் விற்க்கும் பெண்மணி சொன்னதை ஒதுக்கவும் இல்லை.. காரணம். இத்தனை நாள் தன்னை விரோதி போல் பார்த்த மாமியார் ஒரே நாளில் மாறி விட்டார் என்றால், மகன் நம்புவான்.. மருமகள் நம்புவாளா என்ன.?

அடுத்து அந்த மூதாட்டி சொன்னது யாவுமே.. இல்லை இல்லை சரஸ்வதியம்மாவை நம்பவே கூடாது என்பது போல் தான் இருந்தது.. அதில் அவளுக்கு பயமும் கொடுத்தது..

“ஓரு குடும்பத்தை பிரிக்க நான் எப்போவுமே நினைக்க மாட்டேன் மா… உன் அத்தைக்காரியும் உன் ஒரவத்தியுமே நான் இறால் மீன் ஆஞ்சிட்டு இருக்கும் போது உன்னை பத்தி தான் எப்போவுமே பேச்சா இருக்கும்.. அதுல என் காதில் விழுந்ததை வைத்து நான் சொல்லுறேன் ராசாத்தி…”

சரஸ்வதியம்மா மீன் இறால் வாங்கினால் அதை ஆய்ந்தும் கொடுத்து விடு என்று தான் சொல்வார்கள்..

கூடவே அமர்ந்தும் இருப்பார்கள் என்பது வேறு விசயம்..

அப்படி சரஸ்வதியம்மா அமரும் சமயம் ஸ்வேதாவுமே மாமியார் கூட வந்து அமர்ந்து கொள்வாள்.. அது கூட வர்ஷினி இந்த வீட்டிற்க்கு மருமகளாக வந்த பின் தான்..

அதை தான் அந்த மீன் விற்க்கும் மூதாட்டி விளக்கமாக கூறியவர் பின் அவர்கள் இருவரும் பேசுவதையுமே சேர்த்தும் கூறினார்…

உங்க மாமியார் கிட்ட உன் ஒரகத்தி தான் எப்போ பாரு.. “ உனக்கு குழந்தை மீது இருக்கும் இந்த பாசம் எல்லாம் உனக்கு என்று ஒரு குழந்தை வர வரைக்கும் தான். வந்துட்டா உன் சித்தி குணத்தை தான் நீ காட்டுவே.. நீங்க இருக்கும் வரை சரி.. உங்க காலத்துக்கு அப்புறம்… தீராவின் நிலை என்ன.?” இது போலான பேச்சுக்கள் தான் இருக்கும்//

இதற்க்கு கடைசியா உங்க மாமியார் சொன்னதை நினைத்தே எனக்கே என் அடி வயிறு கலங்கி போயிடுச்சிம்மா.” என்று அந்த மூதாட்டி சொல்ல சொல்ல.

வர்ஷினிக்குமே அவர் என்ன என்று சொல்லாமலேயே மனதில் ஒரு பட படப்பு ஏற்பட்டது..

அவர் அடுத்து சொன்ன.. உன் மாமியார் சொல்றா ராசாத்தி… குழந்தை வந்தா தானே… தீக்ஷயனுக்கு ஒரே குழந்தை தான் அது என் பேத்தி தீரா மட்டுமே தான் இருப்பா..” என்று சொல்லிறப்பா என் ஈர கொலையே நடுங்கி விட்டது ராசாத்தி..

அதே நிலையில் தான் வர்ஷினியுமே இருந்தாள்.. தீரா மட்டும் தான் குழந்தை என்றால், என்றால்.. அந்த வார்த்தையிலேயே வர்ஷினியும் மனது நின்று விட்டது..

பிரம்மை பிடித்த நிலை என்பார்களே… அந்த நிலையில் தான் வர்ஷினி அமர்ந்து இருந்தாள்.. அந்த மூதாட்டி தான்..

“உன் மாமியார் போனை போட்டு நல்லா சதைப்பற்று நண்டா நாளைக்கு கொண்டா என்று சொன்ன போதே எனக்கு விசயம் புரிஞ்சிடுச்சி ராசாத்தி.. ஏன்னா இத்தனை வருஷத்தில் உங்க வீட்டாளுங்க என் கிட்ட நண்டு வாங்கினதே கிடையாது.. ஒரு தபா. நல்ல நண்டு வாங்கிக்கோங்க. நீங்க பேசும் போது கூட சளி பிடிச்சாப்பல தானே பேசுறிங்க. இப்போ வெளியில் போன உங்க வூட்டுக்காரர் கூட தும்மிட்டு போறாரு.. இதுல சூப்பு வைத்து குடித்தால் சட்டுன்னு சளி போயிடும் என்று சொன்னதுக்கு உன் மாமியார்க்காரி நண்டு வாசனை கூட என் வீட்டில் இருக்கிற யாருக்கும் பிடிக்காது என்று சொன்னவங்க.. இன்னைக்கு அவங்களே கொண்டா என்றால் என்ன ராசாத்தி அர்த்தம். படிச்ச பெண்.. வேலைக்கு எல்லாம் போறே பார்த்து புத்தியோடு நடந்துக்க ராசாத்தி…”

“இது தான் விசயம் என்று தெரிந்த பின் எனக்கு என்ன..? என்று போக முடியல ராசாத்தி..” என்று சொன்ன அந்த மூதாட்டி தன் வயிற்றின் மீது கை வைத்து..

“ நான் எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ. இங்கு ஒரு புள்ள பூச்சி கூட நிக்கல. நீ மலடி என்று என் வூட்டுக்காரரும் வேறு ஒரு கண்ணாலம் கட்டிட்டு போயிட்டாரு.. இதோ இந்த வயசுலேயும்.. தெரு தெருவா.. போனா தான் எனக்கு சோறு… இதுல எனக்கு இதுன்னு தெரிஞ்சி விட்டா ஏழு ஏழு ஜென்மதுக்குமே என் வாழ்க்கை இப்படியே தான் போகும்.. ராசாத்தி..

நான் உன் மாமியார்க்காரி கேட்டதை கொடுக்காது போயிடலாம். ஆனா உங்க மாமியார்க்காரி என்ன செய்வா. யாருக்கிடையாவது வாங்கி உனக்கு கொடுப்பா.. உனக்கு அப்பா அம்மா இல்ல என்ற விசயமும்.. அதுங்க பேசுறதை வைத்து தெரிஞ்சிக்கிட்டேன்… இது சாப்பிடனும் இது சாப்பிட கூடாது என்று சொல்ல கூட ஆள் கிடையாது என்று அதுக்கு என்று தான் ராசாத்தி நான் ஓடி வந்தேன்.. நாளைக்கு நண்டு கொண்டாந்து கொடுப்பேன்.. நீ அதை சாப்பிட கூடாது ராசாத்தி. நான் போறேன்ம்மா உன் மாமியார்க்காரி பார்த்துட்டா எனக்கு பிரச்சனையா ஆகிடும்… இது தான் என் பிழைப்பே… மகன் மகளா இருக்கா எனக்கு கஞ்சி ஊத்த…” என்று தன் கையில் இருந்த கூடையை காட்டி சொன்னவர் இரண்டு அடி எடுத்து வைத்தவர் பின் என்ன நினைத்தாரோ..’மீண்டுமேர் வர்ஷினியின் அருகில் வந்து.

“நான் உன்னை பயம் முறுத்த என்று சொல்லலே.. எதுக்கும் இந்த வீட்டில் எது சாப்பிட்டாலுமே பார்த்து சாப்பிடு…” என்று சொன்னவரின் பேச்சே மீண்டும் மீண்டும் காதில் விழுந்த நொடி… சற்று முன் அவள் குடித்த அந்த கஞ்சி நியாபகத்தில் வர.

வந்த நொடி பதறி போய் விட்டாள்.. இந்த இரண்டு நாட்களாக சாப்பிட்ட உடனே வாந்தி எடுத்து விடுபவள்.. இது வராது போனதில் எழுந்தவள் ஒரு மரத்திற்க்கு கீழ் நின்று கொண்டு அவளே ஒரு விரலை உள் நாக்கை தொடும் படி செய்து அனைத்துமே வாந்தி எடுத்து விட்டாள்..

தன் கை பேசியை எடுத்தவள் கணவனை அழைக்கலாமா என்று எடுத்தவள் பின் என்ன நினைத்தாளோ மீண்டும் வைத்து விட்டாள்..

மீண்டும் வீட்டிற்க்குள் நுழைந்தவளுக்கு அந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை.. ஏதோ ஒரு நரகத்தில் மாட்டிக் கொண்டது போல ஒரு உணர்வு..

கீழ் அறையில் தங்க பிடிக்கவில்லை… மாமியார் தன்னிடம். “ இது வேண்டுமா அது வேண்டுமா. என்று கேட்டு வரும் அவரின் நடிப்பை பார்க்கவும்.. அவளுக்கு துளியும் விருப்பம் இல்லை..

அதனால் மெல்ல தங்கள் மாடி அறைக்கு நடந்து வந்து விட்டாள்.. என்ன தான் வாந்தி எடுத்து விட்டாலுமே ஒரு பயம்..

மீண்டும் மீண்டும் குளியல் அறைக்கு சென்று.. வந்து விட்டதா என்று சரிப்பார்த்து கொண்டு விட்டாள்..

வாந்தி எடுத்ததில் வயிறு வேறு கப கப என்று இருந்தது.. அவளின் கணக்குப்படி குழந்தை ஐம்பது நாட்களை தொட்டு இருக்கும்… தான் சாப்பிடாதது குழந்தைக்கும் பசிக்குமோ என்று நினைத்த நொடி கண்களில் விடாது கண்ணீர். துடைக்க துடைக்க வந்து கொண்டே இருந்தது..

என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள்.. இனி இங்கு இருக்க மாட்டேன்.. இருக்கவே மாட்டேன்.. இவர்களுக்கு இடையில் நான் பிள்ளையையும் பெற்றுக் கொள்ள மாட்டேன்.. அதே போல தீராவையும் நான் இவர்களிடம் விட மாட்டேன்..

என் திருமண வாழ்க்கையில் அவ்வளவு குடச்சல் கொடுத்தார்கள்… ஆனால் நான் அனைத்துமே அமைதியாக கடந்தேன்.. மோகம்.. ஒவ்வொரு ஆணுக்கு மட்டும் என்ன பெண்ணுக்குமே அந்த மோகம் இருக்க தானே செய்யும்.. ஆனால் மோகத்திலும் நான் மோனமாக தானே இருந்தேன்.. ( மோனம் என்றால் மனதிலும் பேசாது இருப்பது.. மெளனம் வாய் மொழியில் பேசாது இருப்பது.. மோனம் மனதிலும் பேசாது.. அதாவது நினையாது இருப்பது…) காரணம் நான் தீராவை விட்டு விடுவேன் என்று பயப்படுகிறார்கள் என்று..

ஆனால் இவர்கள் இப்போது செய்ய நினைத்தது… யாருமே செய்ய கூட நினைக்காத ஒன்று..

தான் இழந்த பெற்றோர்களை நினைத்து அழுதாள்.. இருக்கும் கூட பிறந்தவர்கள் இருந்துமே இல்லாத தன் நிலையை நினைத்து அழுதாள்..

ஒரு நிலைக்கு மேல் இது போலான நேரத்தில் அழுவது கூட நல்லது கிடையாது என்று உணர்ந்தவள் கண்ணை துடைத்து கொண்டவள்..…

திடிர் என்று ஏதோ நினைத்தவள் கை பேசியில் இது போலான நேரத்தில் என்ன என்ன சாப்பிடலாம் சாப்பிட கூடாது என்பதை பார்த்த வரிசையில் நண்டு சாப்பிடவே கூடாது.. அவ்வளவு சூடு… சாதாரணமாகவே குழந்தை உண்டாகிய மூன்று மாதத்தில் சூடான பொருள்களை சாப்பிடுவது தவிர்ப்பது நல்லது.. கோழி கறி கூட சூடு தான்.. அது கூட எடுத்து கொள்ளலாம். ஆனால் நண்டு கூடவே கூடாது என்று இருந்ததில்..

மீண்டுமே அவளுக்கு அவ்வளவு ஆத்திரம் கோபம்.. கீழே சென்று தன் மாமியாரின் தலை முடியை பிடித்து இழுத்து கன்னத்திலேயே நாளு அரைய வேண்டும் என்பது போல ஒரு ஆத்திரம் வந்தது.

இருந்துமே நிதானித்தாள்.. அவசரப்பட கூடாது… தன் இந்த அவசரம் தனக்கே வினையாக கூடும்.. இப்போது இது என்று சொன்னால் இல்லை என்று தான் சாதிப்பார்கள்… தீனாவே ஒரு மீன்க்காரி சொன்னது நம்புவானா…? இல்லை அம்மா சொன்னதையா…? அதனால் நிதானித்தாள்.. தன் நிதானம் தனக்குள் வர.. இதுவும் இது போலான நேரத்தில் இது போல டென்ஷனாக இருக்க கூடாது என்றதில் தனக்கு பிடித்த பாடல்… கந்தசஷ்ட்டி கவசம் என்று கேட்டவள்.. அந்த வீட்டில் ஒரு வாய் தண்ணீர் குடிக்க மட்டும் பயந்தாள்..

அப்போது தான் தீராவை அந்த பெண் ஆட்டோ ஓட்டுனர் அழைத்து வந்து விட. சரஸ்வதியம்மா போன் வீட்டாவை குழந்தைக்கு கொடுக்க.

தீராவோ நான் அம்மாவுடன் சாப்பிடுறேன் என்று மேல ஏறி வந்து விட கூட சரஸ்வதியம்மாவும் கையில் உணவு தட்டுடன் வந்தார்.

அவர் முகத்தை பார்க்க கூட வர்ஷினிக்கு விருப்பம் இல்லை.. மேலும் தான் பார்த்தால் தன் நிதானத்தை இழந்து கத்தி விடவும் வாய்ப்பு அதிகம் இருப்பதினால், குழந்தையிடம் பேசுவது போல வர்ஷினி குனிந்து கொண்டாள்..

சரஸ்வதியம்மாவோ தன் ரீல் அறுந்து விழுந்தது தெரியாது தேன் ஒழுகும் குரலில்.

“வர்ஷி வெறும் ரசம் சாதம் தான் போட்டு கொண்டாந்து இருக்கான். வாந்தி வருவது போல இருந்தாலும் நாளு வாய் சாப்பிடு.” என்று சொன்னவரிடம்.

குனிந்த வாக்கிலேயே தான் வர்ஷினி.. ஒரு..” ம் “ என்று போட்டது,

அவர் சென்ற பின்.. அந்த ரசம் சாதத்தை தீரா பார்க்காத போது டஸ்ப்பின்னில் போட்டு விட்டாள்..

சாதத்தை வீண் செய்ய கூடாது தான்.. ஆனால் தன் குழந்தையோடு அவளுக்கு எதுவும் பெரிது இல்லை என்று தான் அவளுக்கு தோன்றியது.. அதனால் கொட்டியவள்.. ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும் போல தோன..

என்ன செய்வது என்று நினைக்கும் போது தான் கணவன் வீடு வந்தது…






 
Top